வாழைக்காய் பொடிமாஸ்/vazhakkai podimas
தேவையானப்பொருட்கள்:
வாழைக்காய் - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
தேங்காய்த்துருவல் - 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்றவாறு
செய்முறை:
வாழைக்காயை தோலுடன் இரண்டாக வெட்டி, கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
சற்று ஆறியதும் தோலை உரித்து விட்டு, கேரட் துருவலில் துருவிக் கொள்ளவும்..வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் உளுத்தம் பருப்பை போட்டு தாளித்த பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் துருவிய வாழைக்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விட்டு, மூடி போட்டு, குறைந்த தீயில் 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.
கடைசியில் தேங்காய்த்துருவலை போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக