புதன், 3 மே, 2017

மிக்ஸட் ப்ரூட் கஸ்டர்ட்/Mixed Fruit Custard.



மிக்ஸட் ப்ரூட் கஸ்டர்ட்/Mixed Fruit Custard.


*தேவயானவை :*

பழத்துண்டுகள் - 2 கப்
பால் - 1+1/2 கப்
கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்(Vanilla Flavoured)
சர்க்கரை - 1/4 கப்

*செய்முறை :*

•• 1/2 கப் பாலில் கஸ்டர்ட் பவுடரை கட்டியில்லாமல் கலந்து வைக்கவும்.

•• 1கப் பாலில் சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து கஸ்டர் கலந்த பாலை ஊற்றி கட்டியில்லாமல் கலக்கிவிடவும்.

•• சிறிது கெட்டியானதும் இறக்கி ஆறவைத்து ப்ரிட்ஜில் குளிரவைக்கவும்.

•• பரிமாறும் போது பழத்துண்டுகளின் மீது குளிரவைத்த கஸ்டர்ட் பாலை ஊற்றி பரிமாறவும்.

*குறிப்பு :*

•• பழத்துண்டுகள் -
வாழைப்பழம், ஸ்ட்ராப்பெர்ரி, கிவி, அன்னாச்சிப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு.

•• அவரவர் விருப்பத்திற்கேற்ப சர்க்கரை சேர்க்கவும்.

•• இதனை செய்த உடனே சாப்பிடுவது சிறந்தது.

•• கஸ்டர்ட் பவுடர் இல்லையெனில்  2   டேபிள்ஸ்பூன் சோளமாவு, 1/2 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக