பேலியோ அவியல்
என்னென்ன தேவை? *
சுரைக்காய் - 200 கிராம்,
கோவைக்காய் - 100 கிராம்,
நீர்ப்பூசணிக்காய் - 100 கிராம்,
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
முருங்கைக்காய் - 100 கிராம் (நறுக்கியது),
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
சேனைக்கிழங்கு - 50 கிராம்,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவைக்கு,
புளிக்காத தயிர் - 200 மி.லி,
சீரகம் - 1 டீஸ்பூன்.
மசாலா அரைக்க...
தேங்காய் - 200 கிராம்,
பச்சைமிளகாய் - 3,
சீரகம் - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மசாலா அரைக்க கொடுத்தவற்றை அரைத்து கொள்ளவும். கடாயில் 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயை விட்டு நறுக்கிய சுரைக்காய், முருங்கைக்காய், கோவைக்காய், சேனைக்கிழங்கை போட்டு வதக்கி, தேவையான தண்ணீர், மஞ்சள் தூள், உப்புச் சேர்த்து கலந்து, குக்கருக்கு மாற்றி 1 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும்.
அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த விழுது, வேகவைத்த காய்களைச் சேர்த்து கிளறவும்.
மற்றொரு கடாயில் மீதியுள்ள தேங்காய் எண்ணெயை விட்டு கறிவேப்பிலை, சீரகத்தைத் தாளித்து, காய்கறி கலவையில் கொட்டி கிளறி இறக்கவும்.
ஆறியதும் தயிரை நன்கு அடித்து சேர்க்கவும். தேவையானால் உப்பு சேர்த்து, சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, காலிஃப்ளவர் சாதத்துடன் பரிமாறவும். ஃப்ரிட்ஜில் வைக்காமலும் பரிமாறலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக