புதன், 3 மே, 2017

கம்பு காரக் கொழுக்கட்டை



கம்பு காரக் கொழுக்கட்டை
*******************************

தேவையான பொருட்கள்;-

கம்பு - ஒரு டம்ளர்
தேங்காய்ப்பூ - அரை டம்ளர்
மிளகாய் வற்றல் -.5
சிறிது காயப் பொடி
நல்லெண்ணெய்,கடுகு, உளுத்தம்பருப்பு , கறிவேப்பிலை தாளிக்க.

செய்முறை;-
கம்பைக் கழுவி அரை மணி நேரம் ஊற விடவும். பின் தேங்காய்ப்பூ, உப்பு, காயப்பொடி சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெயில் ஊற்றி, மிளகாய் வற்றலை காம்பு நுனி வெட்டி விதைகளைக் கொட்டி விட்டு பொடியாக வெட்டிக் காய்ந்த எண்ணெயில் போடவும்.மிளகாய் சிவந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த கம்பு மாவைச் சேர்த்துக் கிளறவும். நன்றாக வெந்து வதங்கி இறுகி வருகையில். அடுப்பை அணைத்து வாணலியைக் கீழே இறக்கி ஆற விடவும்.
லேசாக ஆறியதும் கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வேக வைக்கவும். நன்கு வந்ததும் எடுத்து ஹாட்பாக்சில் வைக்கவும்.
இந்த கம்புக் கொழுக்கட்டையோடு, காலை பிரேக்ஃபாஸ்ட்டுக்கு , மூங்கில் அரிசி சேர்த்தரைத்த உளுந்தங்களியும் , ஒரு ஆப்பிள் கலந்த கேரட் ஜூசும் தேனோடு சேர்த்து எடுத்துக் கொண்டால், நல்ல சத்தான கோடைக்கால உணவாகும்!
குழந்தைகளும் வித்தாயாசமாய்ச் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர்!
சிறு தானியங்களை குழந்தைதைகளுக்குப் அறிமுகப்படுத்துவது அவர்களது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
களிக்கு உளுந்தோடு, மூங்கில் அரிசியும் சேர்த்து அரைத்து மாவாக்கி கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து களி செய்வது உடல் ஆரோக்கியம் வலுப்பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக