ஞாயிறு, 28 மே, 2017

ஸ்நிக்கர் டூடுல்



ஸ்நிக்கர் டூடுல்

*🌿என்னென்ன தேவை? *🌿

கோதுமை மாவு - 3/4 கப்,
சர்க்கரை - 1/2 கப்,
வெண்ணெய் - 1/2 கப்,
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,
டேபிள் சால்ட் - 1/2 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்,
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்.

*🌿அலங்கரிக்க... *🌿

சர்க்கரை - 1/4 கப்,
பட்டைத்தூள் - 2 டீஸ்பூன்.

*🌿எப்படிச் செய்வது? *🌿

கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து இரண்டு முறை சலித்து வைக்கவும். வெண்ணெயை பீட்டர் அல்லது விஸ்க் கொண்டு நன்கு நுரைக்க அடித்து, அதனுடன் சர்க்கரை, வெனிலா எசென்ஸ் மற்றும் சால்ட் சேர்த்து நன்கு நுரைத்து வரும் வரை அடிக்கவும்.

இப்பொழுது சலித்து வைத்துள்ள மாவுக்கலவை சேர்த்து நன்கு கலந்து, மென்மையாக பிசையவும். சிறிது சிறிதாக பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டுவரவும். ஃபிரிட்ஜில் பிளாஸ்டிக் கவரில் சுற்றி 30 நிமிடங்கள் வைக்கவும். பின்னர், பிசைந்த மாவில் இருந்து நெல்லிக்காய் அளவு எடுத்து மாவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

அலங்கரிக்க வைத்துள்ள சர்க்கரை மற்றும் பட்டைத்தூளை ஒன்றாக கலக்கி அகலமான தட்டில் பரப்பி வைக்கவும். பின்பு உருண்டைகளை பட்டைத்தூள் கலவையில் நன்கு பிரட்டி எடுத்து வைக்கவும்.

பேக்கிங் டிரேயில் 1 ½ இன்ச் இடைவெளி விட்டு பிஸ்கெட்டுகளை அடுக்கி வைத்து, 200 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில், 12 நிமிடங்கள் 160 டிகிரி செல்சியஸில் பேக் செய்யவும். டிரேயை வெளியில் எடுத்து ஆற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக