சிறுதானிய புரோட்டின் இடியாப்பம்
*🎋என்னென்ன தேவை? *
பதப்படுத்திய சிறுதானிய மாவு (சாமை, குதிரைவாலி) - தலா 1 கப்.
*🎋வறுத்து அரைக்க: *
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பொட்டுக்கடலை, துவரம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4-5,
கட்டி பெருங்காயம் - சிறிது,
பாதாம், முந்திரி - தலா 6.
*🎋தாளிக்க: *
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - சிறிது,
நெய், உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
மஞ்சள்தூள் - சிறிது.
*🎋எப்படிச் செய்வது? *
வறுத்து அரைக்க எடுத்து வைத்திருக்கும் பொருட்களை கரகரப்பாக அரைக்கவும்.
சாமை, குதிரைவாலி மாவை லேசாக வறுத்து, 1½ கப் வெந்நீர், உப்பு சேர்த்து கிளறி ஆவியில் இடியாப்பமாக பிழிந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்து தாளிக்க வைத்திருக்கும் பொருட்களை தாளித்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து இடியாப்பத்தை உதிர்த்து போட்டு நன்கு கலந்து, வறுத்து அரைத்த புரோட்டின் பொடிகளை தூவி கலந்து, சூடாக சிறிது நெய் விட்டு, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
குறிப்பு: மேலும் ருசியாக்க வறுத்த முழு முந்திரி, தேங்காய்த் துருவல், மல்லித்தழை, எலுமிச்சைச்சாறு பிழிந்து கலந்து பரிமாறலாம். இதேபோல் வறுத்த சேமியாவை ஆவியில் வேகவைத்து தாளித்தும் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக