விதவிதமான சமையல்கள்
பன்னீர் ரசகுல்லா
தேவையான பொருட்கள்:-
பால் - 1 லிட்டர்
சீனி - 200 கிராம்
மைதா - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 6
ரோஸ் வாட்டர் - 3 மில்லி
எலுமிச்சை - 1
செய்முறை :
1. ஏலக்காயை மிக்சியில் அரைத்து வைக்கவும்.
2. எலுமிச்சை சாறு பிழிந்து எடுக்கவும்.
3. பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சி கொதிக்க ஆரம்பித்ததும்
எலுமிச்சை சாறு விட்டு கலக்கவும்.
4. பால் திரிந்ததும் இறக்கி ஒரு துணியில் தண்ணீர் முழுவதும் வடிகட்டவும்.
5. அந்த பனீரை(பாலை) தனியாக எடுத்து மைதா ஏலக்காய்தூள் சேர்த்து நன்கு பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
6. சீனியில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். பாகு கொதிக்க ஆரம்பித்ததும் உருண்டைகளை போட்டு 15 நிமிடங்கள்
வேக விடவும்.
7. பின் கீழே இறக்கி ரோஸ் வாட்டர் கலந்து ஆற வைத்து ப்ரிட்ஜில் வைத்து பின் பரிமாறவும். ......
கடுகுக்கீரை தக்காளி தொக்கு
தேவையானவை: நாட்டு தக்காளி - 5, கடுகு - ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பெருங்காயம் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கடுகைக் கழுவி, கல் நீக்கிவிட்டு, 6 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்துவிட்டு, ஒரு சுத்தமான துணியில் கட்டி முடிந்துவிடவும். இரு நாட்களில் நன்கு முளைத்து, சிறிய கீரை வெளியே வரும். இதுதான் கடுகுக் கீரை. அதன் பிறகு, தக்காளியைக் கழுவி, பொடியாக நறுக்கவும். எண்ணெயைக் காயவைத்து, தக்காளியைப் போட்டு, நன்கு வதக்கவும். தக்காளி பச்சை வாசனை போக வதங்கியதும் உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்த்து, நன்கு வெந்தபிறகு, முளைத்திருக்கும் கடுகுக் கீரையையும் போட்டுக் கிளறவும். சேர்ந்தாற்போல வந்ததும் இறக்கவும். மிகவும் சுவையாக இருக்கும் இந்தத் தொக்கு, வித்தியாசமான சைட் டிஷ். சாதத்தில் பிசைந்து சாப்பிட ஏற்றது. இட்லி, தோசை, பிரெட், சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஈடு கொடுக்கும் தொக்கு.
பயன்: பாதங்களில் ஏற்படும் வெடிப்பைப் போக்கவல்லது கடுகுக்கீரை தொக்கு. அடிக்கடி செய்து சாப்பிட வேண்டும். (கடுகுக் கீரையை அரைத்து, அப்படியே பாதத்தில் பற்றுப் போட்டாலும் வெடிப்பு மறையும்).
பாகற்காய் இன்ஸ்டன்ட் ஊறுகாய்
தேவையானவை: பாகற்காய் - 2, எலுமிச்சம்பழம் - 4, உப்பு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 10.
செய்முறை: பாகற்காயை நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் இரண்டாகக் கீறிக்கொள்ளவும். வாணலியில் ஒரு கப் தண்ணீர் வைத்து, அது கொதிக்கும்போது பாகற்காய் துண்டுகளை அதில் போடவும். பாதி வெந்துகொண்டிருக்கும்போது, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, பச்சை மிளகாயையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றியதும், இறக்கி ஆறவிடவும். எலுமிச்சம்பழங்களைப் பிழிந்து, அந்தச் சாற்றை பாகற்காயில் சேர்த்துக் கிளறவும். பாகற்காய் அந்தச் சாற்றில் ஊறியதும், சாதத்துக்கு தொட்டுக்கொள்ள அருமையான இன்ஸ்டன்ட் ஊறுகாய் கிடைக்கும்.
பயன்: வயிற்றில் பூச்சிகள் இருந்தால், முகம், கை, முதுகு போன்ற இடங்களில் தேமல் வரும். கண்ணிமையில் உள்ள முடி, சரியாக வளராமல் ஒட்டிக்கொள்ளும். இந்த ஊறுகாய் சாப்பிட்டால், பூச்சிகள் அழியும். தேமல் மறைவதோடு, இமை முடி நன்கு வளரும்.
சோயா பக்கோடா
சோயா பக்கோடா சரியாக இருக்கும். இதை செய்வது மிகவும் எளிது. இப்போது இந்த சோயா பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
சோயா பீன்ஸ் – 100 கிராம்
வெங்காயம் – 2 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு–3(வேக வைத் து மசித்தது)
பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
கடலைப்பருப்பு – 2 கப்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
ஓமம் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
எள்ளு – 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் சோயா பீன்ஸை சுடு தண்ணீரில் 8-10 நிமிடம் ஊற வைக்கவும். இதனால் அவை சற்று மென் மையாகிவிடும். கடலைப்பருப்பை ஒரு அரைமணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்னர் மிக்ஸியில் கழுவிய கட லைப்பருப்பை போட்டு, அத்துடன் ஓமம், மிளகாய் தூள், உப்பு, எள்ளு , பேக்கிங் சோடா, மல்லித் தூள் சேர்த்து நன்கு ஒரு முறை அரைத் துக் கொள்ளவும்.
பின் அதனை ஒரு பௌலில் போட்டு, அதோடு சோயா பீன்ஸ், வெங் காயம், மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக நன்கு பிசைந்து கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்திருக் கும் கலவையை சிறு உருண்டைக ளாக உருட்டி, எண்ணெயில் போட் டு பொன்னிறமாக பொரித்து எடு க்கவும். இதேப்போல் அனைத்து கலவையையும் செய்ய வேண்டும்.
இப்போது சுவையான மொறுமொறு சோயா பக்கோடா ரெடி!!! இத னை தக்காளி சாஸ் அல்லது ஏதேனும் சட்னியுடன் தொட்டு சாப்பிட் டால் அருமையாக இருக்கும்.
ரவை போளி
தேவையானவை: ரவை - ஒரு கப், வெல்லம் - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், முந்திரி துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - கால் கப் , ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், மைதாமாவு டீஸ்பூ- ஒரு கப், கோதுமைமாவு - கால் கப், உப்பு - கால் டீஸ்பூன்.
செய்முறை: மைதாமாவு, கோதுமைமாவு, உப்பு மூன்றையும் சிறிது தண்ணீர் ஊற்றி, கெட்டியாக பிசைந்து நெய் தடவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி, காய்ந்ததும் முந்திரி துண்டுகளை போடவும். உடனே, ரவையைப் போட்டு, சிவக்க வறுத்து தேங்காய் துருவலை சேர்க்கவும். வெல்லத்தை ஒரு கரண்டி தண்ணீரில் போட்டு, அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். இந்த வெல்ல கரைசலை ரவையில் கொட்டி, கெட்டியாகக் கிளறி இறக்கி ஏலக்காய்த்தூளை சேர்க்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் ரவை பூரணத்தை வைத்து மூடி போளி போல் தட்டி, தோசைக் கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும்.
குறிப்பு: மாவு பிசையும்போது முதலில் தண்ணீரை விட்டு கலந்த பிறகே எண்ணெய் (அ) நெய் சேர்க்க வேண்டும். இல்லையென்றால், மாவு சேர்ந்தாற்போல் வராமல் பிரிந்துவிடும்.
பால் போளி
தேவையானவை: பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை சேர்க்காத கோவா - கால் கப், சர்க்கரை - கால் கப் + ஒரு டேபிள்ஸ்பூன், மைதா மாவு - முக்கால் கப், கார்ன்ஃப்ளார் - கால் கப், உப்பு - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, பால் - 7 கப், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை.
செய்முறை: கார்ன்ஃப்ளார், மைதாமாவு, உப்பு மூன்றையும் தண்ணீர் ஊற்றிப் பிசைந்து, நெய் விட்டு கலந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். பாலை அடுப்பில் வைத்து பாதியாக சுண்ட காய்ச்சவும். அதில், ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை, குங்குமப்பூவை கலந்து இறக்கி தனியாக வைக்கவும். கோவா, முந்திரி, பாதாம், பிஸ்தா, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். மைதாமாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் ஒரு டீஸ்பூன் இந்த பருப்பு கலவையை வைத்து நன்றாக அழுத்தி மூடவும். (எண்ணெயில் பொரிக்கும்போது வெளியில் வராத அளவுக்கு) எண்ணெய் காய்ந்ததும், மிதமான தீயில் எல்லா போளிகளையும் பொரித்து எடுக்கவும். பிறகு சுண்ட காய்ச்சிய பால் கலவையில் போடவும்.
குறிப்பு: பாலில் ஊறி சாப்பிட சுவையாக இருக்கும். சூடாகவும் சாப்பிடலாம். ஜில்லென்றும் பரி மாறலாம்.
வீட்டிலேயே கொத்து பரோட்டா செய்யலாம்...*
*தேவையான பொருட்கள் :*
பரோட்டா – 5
முட்டை – 2
கேரட் – 1
பச்சைமிளகாய் – 2
வெங்காயம் – 3
தக்காளி – 1
கறிவேப்பிலை – தேவையான அளவு
சோம்பு – 1/2 டீஸ்பூன்,
லெமன் சாறு – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு ஏற்ப
*செய்முறை :*
👁🗨 பரோட்டாவை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
👁🗨 முட்டையில் சிறிது மிளகு, பொடியாய் அறிந்த பச்சை மிளகாய், கேரட், உப்பு போட்டு கலந்து தோசை போல் ஊற்றி சின்ன துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
👁🗨 பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, சோம்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
👁🗨 நன்கு வதங்கியதும் வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், உப்பு தூவி வதக்கவும்.
👁🗨 ஓரலவு வெந்ததும் வெட்டி வைத்துள்ள புரோட்டா, முட்டை சேர்த்து நன்றாக கரண்டியால் கொத்தியவாரு கிளறி, சிறிது லெமன் சாறு பிழிந்து இறக்கவும்.
*இவ்வாறு செய்தால் கொத்து பரோட்டா ரெடி.*
முருங்கைக்காய் தொக்கு /Drumstick Thokku
தே.பொருட்கள்
முருங்கைக்காய் - 3
புளி - 1 எலுமிச்சை பழளவு
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் - 1 கப்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
வறுத்து பொடித்த வெந்தயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை
*முருங்கைக்காய்களை துண்டுகளாகி ஒரு பாத்திரத்தில் போட்டு,குக்கரில் வைத்து 2 விசில் வரை வேகவைக்கவும்.
*ஆறியதும் சதைப்பகுதியை வழித்தெடுத்து சின்ன வெங்காயத்துடன் கலந்து வைக்கவும்.
*புளியை சிறிது தண்ணீரில் கெட்டியாக கரைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காய முருங்கைகலவையை போட்டு பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும்.
*வதங்கியதும் புளிகரைசல்+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து சிறுதீயில் கொதிக்கவிடவும்.
*பின் வெந்தயத்தூள்+பெருங்காயத்தூள் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
ஹோட்டல் சரவணபவன் கார சட்னி / HOTEL SARAVANABHAVAN KARA CHUTNEY | SIDE DISH FOR IDLI & DOSA
தே.பொருட்கள்
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
நறுக்கிய தக்காளி -1/4 கப்
காய்ந்த மிளகாய் -5 அல்லது 6
புளி -ப்ளுபெர்ரி பழளவு
உளுத்தம் பருப்பு- 1டீஸ்பூன்
கடலைப்பருப்பு- 1 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
தாளிக்க
எண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம் பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
செய்முறை
*வெறும் கடாயில் உளுத்தம்பருப்பு+கடலைப்பருப்பு இவற்றை தனித்தனியாக வறுக்கவும்.
*பின் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்கயம்+தக்காளி+காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
*மிக்ஸியில் முதலில் பருப்புகளை பொடிக்கவும்,பின் வதக்கிய வெங்காய கலவை மற்றும் புளி+உப்பு சேர்த்து நீர் விடாமல் அரைக்கவும்.
*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
பி.கு
*அரைக்கும் போது நீர் சேர்க்க தேவையில்லை தேவையெனில் 2 டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து அரைக்கவும்.
மிளகு ரசம்
தேவையான பொருட்கள் :
மஞ்சள் தூள் – தேவையான அளவு
வேகவைத்த துவரம் பருப்பு – 2 தேக்கரண்டி
தக்காளி – 2
ஊறவைத்த புளி – சிறிதளவு
பச்சைமிளகாய் கீறியது – 2
கொதமல்லி தழை – தேவைகேற்ப
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைக்க :
மிளகு – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4 (அ ) காரத்திற்கேற்ப
தனியா – 1 தேக்கரண்டி
பூண்டு பல் – 2
நெய் – 1 ஸ்பூன்
தாளிக்க :
கடுகு- சிறிதளவு
வெந்தயம் – 1/4 ஸ்பூன்
பெருங்காய தூள் – தேவையான அளவு
கருவேப்பில்லை – 2 கொத்து
செய்முறை :
முதலில் ஊறவைத்த புளியை இரண்டு டம்ளர் நீருடன் நன்கு கரைத்து கொண்டு ,அதனுடன் தக்காளியும்
பிசைந்து கொண்டு ,பின்பு அதில் மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
அடுத்து வறுத்து அரைக்க கொடுத்தவற்றை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும் . புளி கரைத்து வைத்துள்ள கரைசல் அரைத்து வைத்துள்ள பொடி கலவை கலந்து கொதிக்க விடவும்,
பச்சை வாசனை போனவுடன், வேகவைத்த பருப்பு தண்ணீர் கலந்து ஒரு கொதி வந்தவுடன் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கொட்டவும் . இறக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் .
குறிப்பு :
இந்த ரசத்தில் சிறிது வெல்லம்,(அ ) தேன் விட்டாலும் மிகுந்த சுவையோடும் ,குழந்தைகளும் விரும்பி உண்பர் . குளிர் காலத்தில் சளியால் அவதிபடுவோற்கு, அருமருந்தாகும். இது உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்கும் இந்த மிளகு ரசம் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் ,வறட்டு இருமல் ,சளி தொந்தரவுகளுக்கு மிகவும் நல்லது மிளகு ரசம்
சத்தான வெரைட்டி கீரை சட்னி செய்வது எப்படி?
இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்ற சத்தானது இந்த வெரைட்டி கீரை சட்னி. இன்று இந்த சட்னியை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புதினா, பாலக்கீரை - தலா ஒரு கைப்பிடி அளவு,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
சாம்பார் வெங்காயம் - நான்கு,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
உளுந்தம்பருப்பு - 4 டீஸ்பூன்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* புதினா, பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.
* சாம்பார் வெங்காயதை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் புதினா, பாலக்கீரையை போட்டு வதக்கி தனியாக வைக்கவும்.
* அடுத்து உளுந்தம் பருப்பு, சின்ன வெங்காயம், இஞ்சி, காய்ந்த மிளகாயை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
* வறுத்த பொருட்களை நன்றாக ஆறவைத்து எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
* கடாயில் எண்ணெயில் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.
* இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்ற சத்தான சட்னி இது. .
வேலூர் மட்டன் ‘தம்’ பிரியாணி செய்வது எப்படி?
வேலுர் மட்டன் தம் பிரியாணி மிகவும் பிரபலம். இன்று வீட்டிலேயே எளிய முறையில் வேலூர் மட்டன் ‘தம்’ பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் - ஒரு கிலோ
வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 200 கிராம்
இஞ்சி விழுது - 50 கிராம்
பூண்டு விழுது - 50 கிராம்
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி
தயிர் - 200 மி.லி
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
புதினா - 4 சிறிதளவு.
எலுமிச்சை - ஒரு பழத்தின் ஜூஸ்
ரீஃபைண்டு கடலை எண்ணெய் - 1/4 லிட்டர்
அரிசி (ஜீரகச் சம்பா அல்லது பாஸ்மதி) - ஒரு கிலோ
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசியை ஒரு முறை அலசி விட்டு, அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
* ப்ரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணெய் சூடானவுடன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து வெடித்தவுடன், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை உடன் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் இறைச்சியை அதில் சேர்த்து, 5 நிமிடத்திற்கு நிறம் மாறும் வரை கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.
* இத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில், நறுமணம் வரும்வரை தொடர்ந்து கிளற வேண்டும்.
* அடுத்து மிளகாய் தூள் சேர்த்து சிம் தீயில், 5 நிமிடம் கலக்க வேண்டும்.
* தயிர், பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா, தேவையான அளவு உப்பு இவைகளைக் கலந்து, நீர் 1/2 டம்ளர் விட்டு, குக்கரை மூடி 4 விசில் வரும் வரை, மிதமான தீயில் வேக விட வேண்டும்.
* பெரிய பாத்திரத்தில் 5 லிட்டர் நீர் விட்டு, உப்பு போட்டு கொதிக்கவைக்க வேண்டும். அதில் ஊற வைத்த அரிசியை சேர்த்து, கூடவே 1/2 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு விட்டு, 80 சதவிகிதம் வேக்காடு வரும் வரை வேக விட்டு தண்ணீரை வடித்து விட வேண்டும். எலுமிச்சைச் சாறு விடுவதால் அரிசி உடையாது.
* இப்போது குக்கரைத் திறந்து, ருசி சரிபார்த்து, எலுமிச்சைச் சாறு கலந்து, மிதமான தீயில், எண்ணெய் மேலே வரும்வரை வதக்கி, நன்கு வடித்த சாதத்தை சேர்த்து, அரிசி உடையாமல் மெதுவாக கிளற வேண்டும்.
* அடுப்பில் தோசைக்கல் வைத்து, அதில் சிறிது நீர் ஊற்றி, குறைவான தீயில், மேலே கலந்த சாதம் உள்ள பாத்திரத்தின் விளிம்பில்(ஓரத்தில்) ஈரத்துணியை தலைப்பாகை போல் சுற்றி, காற்றுப் புகாமல் மூடி, மூடி மேல் ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை 'வெய்ட்' போல் வைத்து சுமார் 20 நிமிடம் 'தம்' போட வேண்டும்.
தலைப்பாகை துணி இல்லாமலும் மூடி வைக்கலாம்.
* 'தம்' முடிந்த பிறகு, திறந்து பார்த்தால் 'கம கம' வேலூர் பிரியாணி சுண்டி இழுக்கும்.
: முருங்கையை சேர்ப்போம் முன்னூறு நோய்களை விரட்டுவோம் !!
முருங்கைக்கீரை:
முருங்கை முன்னூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது. அளவில் சிறிய குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக
நிரூபிக்கப்பட்டுள்ளது.
மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும். ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமைக்கலாம்.
வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்கள் சேர்த்து வந்தாலே குடும்ப ஆரேக்கியம் மேம்படும்.
மருத்துவக் குணங்கள்
முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம்.
நீரிழிவுக்காரர்களுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இல்லை என்கிறார்கள். குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது முருங்கை.
சைவ உணவுக்காரர்களுக்கு சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவுத் துறை நிபுணர்கள், இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முருங்கையின் மூலம் கிடைக்கிற புரதமானது முட்டை, பால் மற்றும் இறைச்சியில் கிடைக்கக்கூடிய
புரதத்துக்கு இணையானது.
மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத 8 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இறைச்சியில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.
ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு எகிறும்.
குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுவதுண்டு. முருங்கைப்பூவை பொடிமாஸ் மாதிரி செய்து சாப்பிடலாம். அரைவேக்காடு வேக வைத்த பாசிப்பருப்புடன், முருங்கைப்பூவையும் பொடியாக நறுக்கிய வெங்காயமும் சேர்த்து சமைத்து சாப்பிடுவது குழந்தையின்மைப் பிரச்னை தீர உதவும். கர்ப்பப்பைகோளாறுகளை சரி செய்யும்.
ஒரே ஒரு கைப்பிடி பருப்பு சேர்த்து வைக்கிற தண்ணி சாம்பாரில், கொதிக்கும் போது நான்கைந்து கொத்து முருங்கைக்கீரையை அப்படியே கொத்தாகச் சேர்த்து ஒரு கொதி விடவும். பிறகு அந்தக் கொத்தை அப்படியே எடுத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, நுரையீரலில் கட்டிக் கொண்ட கபத்தை வெளியேற்றும். அடிக்கடி சளி, இருமல், அலர்ஜியால் அவதிப் படுவோருக்கும் இது அருமையான மருந்து.
தினமும் சாப்பிட வேண்டிய அளவு
பெண்கள் 100 கிராம்
ஆண்கள் 40 கிராம்
10 வயதுக்கு மேலான குழந்தைகள் 50 கிராம்
முருங்கைச் சத்து முழுமையானது!
முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் சியும், வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில் உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம். மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.
முருங்கைக்கீரை சூப்
என்னென்ன தேவை?
முருங்கைக்கீரை (இளம் காம்புடன் சேர்த்து) - 2 கப், பூண்டு- 5பல், சாம்பார் வெங்காயம் - 6, மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, மிளகு - 1 டீஸ்பூன், சீரகம்- அரை டீஸ்பூன், உப்பு- தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
உப்பு தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு, குக்கரில் 1 விசில் வைக்கவும். ஆறியதும் மிக்சியில் அரைத்து, கீரை வடிகட்டியில் வடிகட்டி உப்பு சேர்த்துப் பரிமாறவும்.
வாரத்துக்கு 3 முறை என 6 வாரங்கள் எடுத்துக் கொண்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் (காலை வேளை). இதில் பால் சேர்க்கக்கூடாது. அதில் கால்சியம் இருப்பதால் கீரையில் உள்ள இரும்பை முறித்து விடும்.
எப்படி சமைக்கக்கூடாது?
முருங்கைக்கீரையின் சத்துகள் முழுமையாகக் கிடைக்க கீரையை நீண்ட நேரம் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் சமைப்பதால் பார்வைத்திறனுக்கு உதவக்கூடிய கரோட்டின் சிதைந்து விடும். முருங்கைக்கீரையை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
முருங்கைக்கீரை கூட்டு
என்னென்ன தேவை?
பாசிப்பருப்பு- 1 கப், முருங்கைக்கீரை - 2 கப், பூண்டு - 5 பல், சீரகம் - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் (கீறியது) - 3, உப்பு, மஞ்சள் தூள்- சிறிதளவு.
தாளிக்க...
கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பு, பூண்டு, பச்சைமிளகாய், சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். முக்கால் பாகம் வெந்ததும் அலசி வைத்துள்ள கீரையை அதில் சேர்க்கவும். 10 நிமிடங்கள் வேக வைத்து, இறக்கி, உப்பு சேர்த்து தாளித்துக் கொட்டவும்.
பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
என்னென்ன தேவை?
பாசிப்பருப்பு - 2 கப், இஞ்சி- 1 துண்டு, பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 1 கப், முருங்கைக்கீரை - 1 கப், பச்சை மிளகாய் - 3, கடூகு, சீரகம், கடலைப்பருப்பு - தாளிக்க, எண்ணெய், உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பையும் பச்சை மிளகாயையும், இஞ்சி சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும். ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, வெங்காயம் தாளித்து, அலசி வைத்துள்ள முருங்கைக்கீரை சேர்த்து ஒரே ஒரு முறை வதக்கி, அரைத்த விழுதுடன் சேர்த்து, உப்பு சேர்த்து சின்ன அடைகளாக ஊற்றி சூடாக சாப்பிடவும். காலை மற்றும் மாலை உணவுக்கு ஏற்றது. இரவு உணவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம். செரிமானமாவதில் சிரமம் இருக்கும்.
என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)
ஆற்றல் 64 கிலோ
கலோரிகள்
கால்சியம் 185 மி.கி.
பாஸ்பரஸ் 112 மி.கி.
இரும்பு 4 மி.கி.
புரதம் 9.40 கிராம்
கொழுப்பு 1.40 கிராம்
நார்ச்சத்து 2 கிராம்
தண்ணீர் 78.66 கிராம்
முருங்கைக்கீரை கூட்டு / மிளகூட்டல்
தேவையான பொருட்கள்;-
முருங்கைக்கீரை - 3 கப்
பாசிப்பருப்பு - அரை கப்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க :
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - தலா அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
வறுத்து அரைக்க:
லேசாக வெதுப்பிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல் - 1
மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மணம் வர வறுக்கவும்.அத்துடன்
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
சேர்த்து அரைக்கவும்.
தேவைக்கு தண்ணீர் சிறிது சேர்த்து அரைத்து எடுக்கவும்.
செய்முறை:
கீரையை உருவி நன்கு அலசி தண்ணீர் வடித்து எடுக்கவும்.
ஊற வைத்த பாசிப்பருப்பை தேவைக்கு தண்ணீர் மஞ்சள் தூள் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் சூடு செய்யவும்.
கடுகு,உளுத்தம் பருப்பு,வற்றல் கிள்ளி போடவும்.
கீரை சேர்த்து வதக்கவும்.
அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
ஒன்று சேர்ந்து சிறிது வேக விடவும்.கீரையை திறந்தே சமைக்கவும்.நிறம் மாறாமல் இருக்கும்.
பின்பு வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
சுவையான கீரை கூட்டு அல்லது மிளகூட்டல் ரெடி.
வெறும் சோற்றில் பிரட்டியோ தொட்டுக் கொண்டு சாப்பிடவோ சூப்பராக இருக்கும்.நீங்களும் செய்து பாருங்க.
வாழைப்பூ---முருங்கைக்கீரை துவட்டல்
தேவையானவை:
பொடியாக நறுக்கிய வாழைப்பூ --ஒரு கப்
முருங்கைக்கீரை ---ஒரு கப்
தேங்காய்த்துருவல்---ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் --ஒரு டீஸ்பூன்
கடுகு -- கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு--தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் ---1
பெருங்காயத்தூள்---கால் டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
செய்முறை :
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காய்த்தூள், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, அதில் முருங்கைக்கீரை நன்றாக அலசி போடவும், வாழைப்பூ சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து வடியவிடவும், தண்ணீர் வடிந்தது, அதை வதங்கிக் கொண்டிருக்கும் முருங்கைக்கீரையுடன் போடவும், சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, கடைசியாக தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி இறக்கவும்.
இட்லி சாப்பிடுங்கள்!
நாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லிதான் அந்த இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன?
என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள்.
...
அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம்.
இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு
என்று சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளன.
அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள்,
நார்ச்சத்துக்கள்,இரும்பு,கால்சியம்,பரஸ்பரஸ் போன்ற
உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன.
அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன.
திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற
அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின்
செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற
அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன.
இதனால் இட்லி,தோசை முதலியவற்றில் இரவில் ஊற வைத்து சாப்பிடும் கொண்டை கடலையில் கிடைப்பது போல தாது உப்புக்களும், அமினோ
அமிலங்களும் கிடைக்கின்றன.
லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.
இட்லி, தோசை வகைகள் முதலியவற்றை சாப்பிடும்
போது வைட்டமின் சி உள்ள முருங்கைக்கீரை பச்சடி,
முருங்கைக்காய் சாம்பார் நல்லது. அல்லது ஏதேனும் ஒரு கீரைப் பச்சடியும் தேவை. இல்லையெனில் புதினா,
கொத்தமல்லி போன்ற துவையல்.காரணம் லைசின் அமிலம் உடலில் பாதுகாப்பாக இருக்க உதவுவது வைட்டமின் சி தான் அது கீரைகளில் தாராளமாக
இருக்கிறது.
அதற்க்காக அதிகமாக சாப்பிடக்கூடாது அளவாகத்தான் சாப்பிட வேண்டும் 3 இட்லிக்கு மேல் சாப்பிட்டால் அது நல்லதள்ள எனவே அளவாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத் திற்க்கு நல்லது.
எனவே இட்லி,தோசை,அரிசி,கோதுமை சாதத்தை விடத் தரமான உணவுகள் என்பதை உணர்வோம். மேலும் பார்க்க
மட்டன் சுக்கா ஃப்ரை
இந்த மட்டன் சுக்கா ஃப்ரை கொங்கு முதலியார் சமுகத்து மக்கள் வீட்டில் அதிகமாக சமைக்கும் முறையாக கருதப்படுகிறது.
நீங்களும் இதை சமைத்து சாப்பிட்டு விட்டு எனக்கு ஒரு சபாஷ் சொல்ல உங்கள் மனம் தோன்றும்.
தேவையான பொருட்கள்:
மட்டன் ஊறவைக்க:
மட்டன் 500 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
பிரஷர் குக்கரில் வேகவைக்க:
சின்ன வெங்காயம் 6 ( அம்மிகல்லில் நசுக்கியது)
பூண்டு 6 பற்கள் ( அம்மிகல்லில் நசுக்கியது)
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் 1 3/4 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 3 தேக்கரண்டி
உப்புதூள் தேவையான அளவு
தண்ணீர் 1 1/2 கப்
மசாலா அரைக்க:
சின்ன வெங்காயம் 16 ( பொடியாக நறுக்கியது)
பட்டை 1 இன்ச்
கிராம்பு 4
கசகசா 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு 16
அண்ணாச்சி மொக்கு 1
பிரிஞ்சி இலை 1
சோம்பு 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1 மேஜைக்கரண்டி
தாளிக்க:
மரசெக்கு கடலெண்ணய் 4 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் 16 ( பொடியாக நறுக்கியது)
தக்காளி 1 ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி
குரு மிளகு தூள் 1 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 1/4 தேக்கரண்டி
சோம்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
செய்முறை:
1. மட்டனை நன்றாக சுத்தமாக கழுவி , பின்பு அதை நன்றாக ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை கொண்டு நன்றாக பிசிறி குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
2. இப்பொழுது பிரஷர் குக்கரில் 1 மேஜைக்கரண்டி மரசெக்கு கடலெண்ணய் விட்டு நன்றாக காய்ந்ததும் அதில் ஊறவைத்தள்ள மட்டன் துண்டுகளை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
3. பிறகு அதில் பிரஷர் குக்கரின் கீழ் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து குறைந்தபட்சம் 2 விசில் விட்டுகோங்க. அதாவது குறைந்த பட்சம் 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். அதன் பிறகு இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
4. இப்பொழுது மிக்ஸியில் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக நைசாக விழுதாக அரைத்து கொள்ளவும்.
5. பிறகு அகன்ற கெனமான பாத்திரத்தில் 2 மேஜைக்கரண்டி மரசெக்கு கடலெண்ணய் விட்டு காய்ந்ததும் அதில் சோம்பு போட்டு வதக்கவும்.
6. பின்னர் அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.
7. பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.
8. பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
9. இப்பொழுது பிரஷர் குக்கரின் மூடியை திறந்து அதில் வேகவைத்துள்ள மட்டன் துண்டுகளை சேகரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
10. இப்பொழுது பிரஷர் குக்கரில் உள்ள மட்டன் சாறை வடச்சட்டியில் ஊற்றி கொள்ளவும், அதில் வரமிளகாய் தூள் , குரு மிளகு தூள் , கரம்மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்புத்தூள் சேர்த்துகோங்க நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
11. இப்பொழுது இந்த கலவையை நன்றாக கொதிக்க விட்டு கிரேவி நன்றாக திக்காக ஆனதும் வேகவைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து சிறுதீயில் கொதிக்க வைக்கவும்.
12. பிறகு அதில் இடை இடையே கொஞ்ச கொஞ்சமாக மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க நன்றாக கிளறவும். கவனம் தேவை கறி உடைந்தும் விட கூடாது அடியும் பிடிக்க கூடாது.
13. இப்பொழுது வடைச்சட்டியில் மட்டனின் நிறம் டார்க் பிரவுன் நிறத்தில் வந்ததும். இறக்கி வைக்கவும்.
ஈஸி ஐஸ்க்ரீம்
வீட்டிலேயே ஈஸியா ஹெல்த்தியா ஐஸ்க்ரீம்
தேவையான பொருட்கள்:
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - தேவைக்கேற்ப
சோள மாவு - 2 டீ ஸ்பூன்
வெண்ணெய் - 4 டீ ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - சிறிது
செய்முறை:
* அடுப்பின் தீயை குறைவாக வைத்து பாலை நன்கு காய்ச்சவும்.
* பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சவும்.
* சோள மாவை அரை கப் பாலில் கரைத்து அடுப்பில் இருக்கும் பாலுடன் சேர்க்கவும்.
* அதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.
* பிறகு வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு ஆற வைக்கவும். அந்த கலவையை எலக்ட்ரிக் பீட்டர் (electric beater) கொண்டு நன்கு கலக்கவும். பிறகு ஃப்ரீசரில் வைக்கவும்.
* 1 மணி நேரம் கழித்து மீண்டும் அதை வெளியில் எடுத்து பீட்டரில் நன்கு கலக்கி ஃப்ரீசரில் (freezer) மறுபடியும் வைத்து செட் ஆனதும் பரிமாறவும்.
குறிப்பு:
நாமே வெண்ணெய் செய்து சேர்த்தால் இன்னும் சுவையாகும். தயிரை பீட்டர் கொண்டு அடித்தால் வெண்ணெய் கிடைக்கும். இந்த ஐஸ்க்ரீமையே சாக்லேட், மேங்கோ என பல வகையில் மாற்றிக்கொள்ளலாம்.
பன்னீர் ரசகுல்லா
தேவையான பொருட்கள்:-
பால் - 1 லிட்டர்
சீனி - 200 கிராம்
மைதா - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 6
ரோஸ் வாட்டர் - 3 மில்லி
எலுமிச்சை - 1
செய்முறை :
1. ஏலக்காயை மிக்சியில் அரைத்து வைக்கவும்.
2. எலுமிச்சை சாறு பிழிந்து எடுக்கவும்.
3. பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சி கொதிக்க ஆரம்பித்ததும்
எலுமிச்சை சாறு விட்டு கலக்கவும்.
4. பால் திரிந்ததும் இறக்கி ஒரு துணியில் தண்ணீர் முழுவதும் வடிகட்டவும்.
5. அந்த பனீரை(பாலை) தனியாக எடுத்து மைதா ஏலக்காய்தூள் சேர்த்து நன்கு பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
6. சீனியில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். பாகு கொதிக்க ஆரம்பித்ததும் உருண்டைகளை போட்டு 15 நிமிடங்கள்
வேக விடவும்.
7. பின் கீழே இறக்கி ரோஸ் வாட்டர் கலந்து ஆற வைத்து ப்ரிட்ஜில் வைத்து பின் பரிமாறவும். ......
தேங்காய் பர்ஃபி
Coconut burfi
சிறுவயதில் நாம் அதிகம் விரும்பி வாங்கி சாப்பிட்ட தேங்காய் பர்ஃபியை இப்போது கடைகளுக்குச் சென்று கேட்டால் அவ்வளவு எளிதில் கிடைக்காது.
ஆனால் அந்த தேங்காய் பர்ஃபியை கடைக்கு எல்லாம் செல்லாமல் வீட்டிலேயே எளிமையாக செய்து சாப்பிடலாம்.
தேவையான_பொருட்கள்:
துருவிய தேங்காய் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
தண்ணீர் - 1/4 கப்
நறுக்கிய முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 4 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கித் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு தட்டில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி தடவி தனியாக வைத்துக் கொள்ளவும் பின்னர் ஒரு நான்-ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும். சர்க்கரை நன்கு கரைந்து, ஓரளவு கெட்டியாக வரும் போது, அதில் துருவிய தேங்காயை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
அப்படி கிளறிவிடும் போது, நுரைக்க ஆரம்பிக்கும் தருணத்தில் முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து 3-5 நிமிடம் கிளறி, ஓரளவு கெட்டியாகும் போது அடுப்பை அணைத்து, தட்டில் அக்கலவையைக் கொட்டி பரப்பி, கத்தியால் துண்டுகளாக்கினால், தேங்காய் பர்ஃபி ரெடி!!!
மட்டன் சுக்கா ஃப்ரை
இந்த மட்டன் சுக்கா ஃப்ரை கொங்கு முதலியார் சமுகத்து மக்கள் வீட்டில் அதிகமாக சமைக்கும் முறையாக கருதப்படுகிறது.
நீங்களும் இதை சமைத்து சாப்பிட்டு விட்டு எனக்கு ஒரு சபாஷ் சொல்ல உங்கள் மனம் தோன்றும்.
தேவையான பொருட்கள்:
மட்டன் ஊறவைக்க:
மட்டன் 500 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
பிரஷர் குக்கரில் வேகவைக்க:
சின்ன வெங்காயம் 6 ( அம்மிகல்லில் நசுக்கியது)
பூண்டு 6 பற்கள் ( அம்மிகல்லில் நசுக்கியது)
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் 1 3/4 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 3 தேக்கரண்டி
உப்புதூள் தேவையான அளவு
தண்ணீர் 1 1/2 கப்
மசாலா அரைக்க:
சின்ன வெங்காயம் 16 ( பொடியாக நறுக்கியது)
பட்டை 1 இன்ச்
கிராம்பு 4
கசகசா 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு 16
அண்ணாச்சி மொக்கு 1
பிரிஞ்சி இலை 1
சோம்பு 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1 மேஜைக்கரண்டி
தாளிக்க:
மரசெக்கு கடலெண்ணய் 4 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் 16 ( பொடியாக நறுக்கியது)
தக்காளி 1 ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி
குரு மிளகு தூள் 1 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 1/4 தேக்கரண்டி
சோம்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
செய்முறை:
1. மட்டனை நன்றாக சுத்தமாக கழுவி , பின்பு அதை நன்றாக ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை கொண்டு நன்றாக பிசிறி குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
2. இப்பொழுது பிரஷர் குக்கரில் 1 மேஜைக்கரண்டி மரசெக்கு கடலெண்ணய் விட்டு நன்றாக காய்ந்ததும் அதில் ஊறவைத்தள்ள மட்டன் துண்டுகளை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
3. பிறகு அதில் பிரஷர் குக்கரின் கீழ் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து குறைந்தபட்சம் 2 விசில் விட்டுகோங்க. அதாவது குறைந்த பட்சம் 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். அதன் பிறகு இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
4. இப்பொழுது மிக்ஸியில் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக நைசாக விழுதாக அரைத்து கொள்ளவும்.
5. பிறகு அகன்ற கெனமான பாத்திரத்தில் 2 மேஜைக்கரண்டி மரசெக்கு கடலெண்ணய் விட்டு காய்ந்ததும் அதில் சோம்பு போட்டு வதக்கவும்.
6. பின்னர் அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.
7. பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.
8. பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
9. இப்பொழுது பிரஷர் குக்கரின் மூடியை திறந்து அதில் வேகவைத்துள்ள மட்டன் துண்டுகளை சேகரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
10. இப்பொழுது பிரஷர் குக்கரில் உள்ள மட்டன் சாறை வடச்சட்டியில் ஊற்றி கொள்ளவும், அதில் வரமிளகாய் தூள் , குரு மிளகு தூள் , கரம்மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்புத்தூள் சேர்த்துகோங்க நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
11. இப்பொழுது இந்த கலவையை நன்றாக கொதிக்க விட்டு கிரேவி நன்றாக திக்காக ஆனதும் வேகவைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து சிறுதீயில் கொதிக்க வைக்கவும்.
12. பிறகு அதில் இடை இடையே கொஞ்ச கொஞ்சமாக மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க நன்றாக கிளறவும். கவனம் தேவை கறி உடைந்தும் விட கூடாது அடியும் பிடிக்க கூடாது.
13. இப்பொழுது வடைச்சட்டியில் மட்டனின் நிறம் டார்க் பிரவுன் நிறத்தில் வந்ததும். இறக்கி வைக்கவும்.
[
பேல் பூரி
பேல் பூரி செய்வதற்கான எளிய சமையல் குறிப்பு. இந்த குறிப்பு *திருமதி. மல்லிகா பத்ரிநாத்* அவர்களின் சமையல் குறிப்பை தழுவியது.
தேவையான பொருட்கள்
பூரி துண்டுகள் நொறுக்கியது – 1 கப்
சிப்ஸ் நொறுக்கியது – 1 /2 கப்
பொரி – 2 கப்
கேரட் துருவியது – 2 மேசைக்கரண்டி
வெங்காயம் பொடியாக நறுக்கியது – 1 1 /2 மேசைக்கரண்டி
மாங்காய், வெள்ளரிக்காய் துருவியது – 1 1 /2 மேசைக்கரண்டி
மல்லிதழை நறுக்கியது – 1 மேசைக்கரண்டி
தக்காளி பொடியாக நறுக்கியது – 1 மேசைக்கரண்டி
சேவ்( ஓமப்பொடி) – 1 /2 கப்
தூள் உப்பு – 1 /2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
வேக வைத்த பட்டாணி அல்லது வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு – 1 1 /2 மேசைக்கரண்டி
இனிப்பு சட்னி – 3 மேசைக்கரண்டி
புதினா – 3 மேசைக்கரண்டி
பூண்டு சட்னி – 2 மேசைக்கரண்டி
உலர் மாங்காய் தூள் – 1 /4 தேக்கரண்டி
பூண்டு சட்னி
பூண்டு – 15 பல்
புளி – சிறிது
சீரகம் – 1 /2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
சேவ்(ஓமப்பொடி) செய்வதற்கு
கடலை மாவுடன் உப்பு மற்றும் தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
சேவ்(ஓமப்பொடி) அச்சைப் பயன்படுத்தி மாவைப் பிழிந்து சூடான எண்ணெயில் போட்டு மொறு மொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும்.
செய்முறை
ஒரு அகலமான பாத்திரத்தில் நொறுக்கி வைத்துள்ள பூரி, சிப்ஸ், பொரி மற்றும் பாதி சேவ்(ஓமப்பொடி) ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும்.
தயாராக வைத்துள்ள காய்கறிகள், தூள்கள் மற்றும் சட்னி அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும்.
மீதமுள்ள சேவ்(ஓமப்பொடி), பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை தூவி உடனடியாகப் பரிமாறவும்.
செட்டிநாடு காளான் ரோஸ்ட்!!
காளான் அசைவ உணவுகளுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் ஒரு உணவுப் பொருளாகும். இப்போது இந்த காளானைக் கொண்டு அருமையான ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள் :
காளான் - 2 கப்
சோம்பு - 2 டீஸ்பு ன்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பு ன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 3
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
ஊற வைப்பதற்கு:
கெட்டியான தயிர் - 1 கப்
இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பு ன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பு ன்
மல்லித் தூள் - 1 டீஸ்பு ன்
கரம் மசாலா - 1 டீஸ்பு ன்
வறுத்த சீரகப் பொடி - 1 டீஸ்பு ன்
செய்முறை :
🍛 முதலில் கொத்தமல்லித்தழை, பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு காளானை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
🍛 பின்னர் ஒரு கிண்ணத்தில் நறுக்கி வைத்துள்ள காளானைப் போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள தயிர், மிளகாய் தூள், இஞ்சி - பூண்டு பேஸ்ட், மல்லித் தூள், கரம் மசாலா, வறுத்த சீரகப் பொடி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு பிரட்டி 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
🍛 பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு பொடி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
🍛 பின் வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் ஊற வைத்துள்ள காளானைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
🍛 கடைசியாக காளானில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி சுண்டி வரும் போது அதில் தேங்காயைச் சேர்த்து 5 நிமிடம் பிரட்டி கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், செட்டிநாடு காளான் ரோஸ்ட் தயார் !!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக