செவ்வாய், 23 மே, 2017

பூசனி கூட்டு


பூசனி கூட்டு

*🔖தேவையான பொருள்கள்:-*

பூசணிக்கீத்து - 1
புளி - சிறிதளவு
மிளகாய் வத்தல் - 2
தனியா - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
மிளகு - 3

*எப்படி செய்வது?*

🥙வெள்ளைப்பூசணியை சிறு துண்டுகளாக்கி மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.

🥙வாணலியில் தேவையான எண்ணெய் விட்டு மிளகு, தனியா, மிளகாய் வத்தல், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.

🥙ஆறிய பின் பொடியாக்கி கொள்ளவும். இப்போது வெந்த பூசணிக்காயுடன் புளிக்கரைசல், உப்பு, அரைத்த பொடி சேர்த்து வேகவிடவும்.

🥙மற்றொரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, சீரகம் போட்டு தாளித்து, பூசணி கலவையில் இட்டு பரிமாறவும்.

🥙உடலுக்கும் குளிர்ச்சி. சுவையாகவும் இருக்கும். பூசணிக்கு பதிலாக பீர்க்கங்காய், வெள்ளரியையும் பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக