எலும்பு சூப்
*தேவையான பொருள்கள*்
எலும்புத் துண்டுகள் - கால் கிலோ
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
வெங்காயம் - 2
வெண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சய்தூள் - அரை ஸ்பூன்
*செய்முறை*
முதலில் எலும்பு துண்டுகளை நன்கு கழுவி அதனுடன் இஞ்சி,பூண்டு விழுது., மஞ்சள் தூள்,உப்பு ,மிளகு, சீரகத்தை பொடி செய்து தேவையான அளவு தண்ணீர் வைத்து வேக வைக்கவும். .
பாத்திரத்தில் வெண்ணெயை உருக்கி, அதில் சோம்பை போடவும். சோம்பு சிவந்ததும் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கி அதில் எலும்புச் சாற்றை ஊற்றவும்.
எலும்புச் சாறு நன்கு கொதித்து மணமாக வரும்போது கொத்துமல்லி, கறிவேப்பிலை தழைகளைத் தூவி இறக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக