கேரளா வாழைக்காய் பருப்பு கூட்டு
தேவையான பொருள்கள்
வாழைக்காய் -1
பாசி பருப்பு - அரை கப்
உப்பு - தேவைகேற்ப்ப
அரைக்க
சீரகம் - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் -கால் கப்
அரிசி - அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
தாளிக்க
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - கொஞ்சம்
செய்முறை
வாழைக்காயை தோல் சீவி சிறிதாக நறுக்கி கொள்ளவும்
அரைக்க கொடுத்தவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
பாசி பருப்பை எண்ணெய் ஊற்றாமல் கடாயில் போட்டு வறுத்து குக்கரில் போட்டு அதனுடன் வாழைக்காயும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரை வேக வைக்கவும்.
அதனுடன் அரைத்த மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி அதனுடன் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கொட்டவும்.
சுவையான வாழைக்காய் பருப்பு கூட்டு ரெடி தேவையானால் தக்காளி சேர்த்து கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக