வெள்ளி, 26 மே, 2017

இறால் வறுவல்



இறால் வறுவல்...

தேவையானவைகள்..
இறால் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 2
இஞ்சிப் பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு உளுந்து, கறிவேப்பிலை – தாளிக்க
கொத்தமல்லி தழை – சிறிதளவு

*செய்முறை*

• முதலில் சின்ன வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்சியில் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
• வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப் பிலை போட்டு தாளிக்கவும்.
• இதனுடன் அரைத்து வைத்த வெங்காயம், பச்சை மிள காய் சேர்த்து வதக்கவும்.
• பின்னர் இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
•இதனுடன், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சுத்தம் செய்த இறால் சேர்த்து வதக் கவும்.
•உப்புசேர்த்துலேசாக தண்ணீர் தெளித்து தீயை குறைந்த அளவில் வைத்து சிவக்கும் வரை வறுக்கவும்.
• கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும.
• நாவில் நீர் ஊறச்செய்யும் இறால் வறுவல் ரெடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக