திங்கள், 22 மே, 2017

பூண்டு சூப்



பூண்டு சூப்

வெள்ளைப்பூண்டு - 20 பல்

மஞ்சள் பொடி - 1 சிட்டிகை

பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை

நெய் - 2 தேக்கரண்டி

உப்பு - ருசிக்கேற்ப

மிளகுப்பொடி - அரை தேக்கரண்டி

ரசப்பொடி - அரை தேக்கரண்டி



முதலில் மேற்சொன்ன தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.


பூண்டுப் பற்களை மைக்ரோ ஓவனில் 30 வினாடிகள் வைத்து எடுக்கவும். சுலபமாக உரிக்க வரும்.


உரித்த பூண்டுப் பற்களை, குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும். அதில் ரசப் பொடியை போட்டு மேலும் ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.


வெந்த பூண்டுப் பற்களை, ஸ்பூனால் நன்கு மசித்துக் கொள்ளவும்.


அடுப்பில் கொதித்திருக்கும் கலவையில், மசித்து வைத்திருக்கும் பூண்டுகளை சேர்க்கவும். அதனுடன் நெய்யையும் சேர்க்கவும்.


சுவையான பூண்டு சூப் ரெடி. உப்பு, மிளகுத் தூள் சேர்த்து, அருந்தவும்.

காளான் மஞ்சூரியன்



காளான் மஞ்சூரியன் செய்வது எப்படி

சைனீஸ் உணவுகளிலேயே மஞ்சூரியன் மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

பட்டன் காளான் - 250 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சோள மாவு - 4-5 டேபிள் ஸ்பூன்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
எண்ணெய் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
தக்காளி கெட்சப் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

* காளானை நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு துணியில் மேல் நீர் உறிஞ்சுமாறு வைக்க வேண்டும்.

* ஒரு பௌலில் சோள மாவு, மைதா, இஞ்சி பூண்டு பேஸ்ட், சோயா சாஸ், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஓரளவு கெட்டியான பதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* கழுவி வைத்துள்ள காளானை, அந்த கலவையில் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த காளானைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுப்பில் வேறு வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்னர் அதில் சோயா சாஸ், தக்காளி கெட்சப், சில்லி சாஸ், உப்பு மற்றும் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு நன்கு 2 நிமிடம் கிளறி, இறக்கி விட வேண்டும்.

* இப்போது சுவையான காளான மஞ்சூரியன் ரெடி!!!

சேனைக்கிழங்கு மசியல்



சேனைக்கிழங்கு மசியல்

தேவையான  பொருள்கள்

சேனைக்கிழங்கு - 1 கப்
பச்சைமிளகாய் - 4
லெமன் ஜீஸ் - 1 ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் - 1  ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
பெருங்காயம் -கால்  ஸ்பூன்
உளுந்து -  ஸ்பூன்
மஞ்சள் தூள் -  கால் ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு

செய்முறை

சேனைக்கிழங்கை தோல் சீவி நல்ல சதுர துண்டுகளாக்கவும்.
உப்பு, மஞ்சள் தூள்  லெமன் ஜீஸ் சேர்த்து நன்றாக மசிய வேக வைக்கவும்.

வெந்தபின் தாளிக்க வேண்டியவையை தாளித்து அதில் சின்ன துண்டுகளாக்கிய பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்துநன்றாக வதக்கி வெந்த சேனைக்கிழங்கில் கொட்டவும்.

கேரளா வாழைக்காய் பருப்பு கூட்டு



கேரளா வாழைக்காய் பருப்பு கூட்டு

தேவையான பொருள்கள்

வாழைக்காய் -1
பாசி பருப்பு - அரை கப்
உப்பு - தேவைகேற்ப்ப

அரைக்க

சீரகம் - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் -கால் கப்
அரிசி  - அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
மஞ்சள்தூள்  - கால் ஸ்பூன்
தாளிக்க
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை

வாழைக்காயை தோல் சீவி சிறிதாக நறுக்கி கொள்ளவும்
அரைக்க கொடுத்தவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்

பாசி பருப்பை எண்ணெய் ஊற்றாமல் கடாயில் போட்டு வறுத்து  குக்கரில் போட்டு அதனுடன் வாழைக்காயும் சேர்த்து    தேவையான அளவு   தண்ணீர்  ஊற்றி  3 விசில் வரை வேக வைக்கவும்.

அதனுடன் அரைத்த மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி அதனுடன் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கொட்டவும்.

சுவையான  வாழைக்காய் பருப்பு கூட்டு ரெடி தேவையானால் தக்காளி சேர்த்து கொள்ளலாம்

வாழைக்காய் பொடிமாஸ்/vazhakkai podimas


வாழைக்காய் பொடிமாஸ்/vazhakkai podimas

தேவையானப்பொருட்கள்:

வாழைக்காய் - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
தேங்காய்த்துருவல் - 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்  - 2
தேங்காய்   எண்ணெய் - 2  ஸ்பூன்
கடுகு - 1/2   ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1  ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்றவாறு
செய்முறை:

வாழைக்காயை தோலுடன் இரண்டாக வெட்டி, கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

சற்று ஆறியதும் தோலை உரித்து விட்டு,   கேரட்  துருவலில்  துருவிக் கொள்ளவும்..வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,  காய்ந்த  மிளகாய்   உளுத்தம் பருப்பை போட்டு தாளித்த பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் துருவிய வாழைக்காய்,  உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விட்டு, மூடி போட்டு, குறைந்த தீயில் 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.

கடைசியில் தேங்காய்த்துருவலை போட்டு நன்றாகக் கிளறி  இறக்கவும்

சுவையான சத்தான வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்...


சுவையான சத்தான வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்...


*தேவையான பொருட்கள்*:

வாழைத்தண்டு - பெரிய துண்டு
வெங்காயம் - 1,
பிரிஞ்சி இலை - 1
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பாசிப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
நெய், உப்பு - தேவையான அளவு

*செய்முறை :*

* வாழைத்தண்டை பொடியாக நறுக்கி நாரை எடுத்து விடவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் நெய் விட்டு சீரகம், பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* 5 நிமிடங்கள் கழித்து நறுக்கிய வாழைத்தண்டை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

* குக்கரில் வதக்கிய வாழைத்தண்டு, அத்துடன் பாசிப் பருப்பும் போட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
* குக்கர் விசில் போடவுடன் பிரிஞ்சி இலையை எடுத்துவிட்டு ஆறவைத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

* அரைத்த விழுதை வடிகட்டி தண்ணீர் சேர்த்து உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

* சூடாகப் பரிமாறவும்.

* தேவைப்பட்டால் 1 டீஸ்பூன் கார்ன் ஃப்ளோரை கரைத்து விட்டு கொதிக்க விடவும்.

* சுவையான சத்தான வாழைத்தண்டு சூப் ரெடி.

சனி, 20 மே, 2017

வாயுத்தொல்லை நீங்க ஆரோக்கிய மருத்துவ குறிப்புகள் உள்ளன. இவற்றை பின்பற்றி பலன் பெறுங்கள்.



வாயுத்தொல்லை நீங்க ஆரோக்கிய மருத்துவ குறிப்புகள் உள்ளன. இவற்றை பின்பற்றி பலன் பெறுங்கள்.

வாயுத்தொல்லை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள்
* வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண்கள் ஆறும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

* சுக்கு மல்லி(தனியா) கசாயம் வாயுக்கு நல்லது.

* பசும்பாலில் 10 பூண்டு பற்களை சேர்த்து காய்ச்சி குடித்தால் வாயு சேராது.

* இஞ்சியை அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க அனைத்துவித வாயுக்கோளாறும் தீரும்.

* புதினாக்கீரையை நெய் விட்டு வதக்கி, இதனுடன் உப்பு, புளி, மிளகாய், தேங்காய் சேர்த்து துவையல் செய்து உணவுடன் சாப்பிட்டு வர வாயு அகலும்.

* வெந்தயக்கீரை, தூதுவளைக்கீரை, வள்ளக்கீரை, முடக்கத்தான்கீரை போன்ற கீரைகள் வாயுவைப் போக்கும்.

* சமைக்கும் போது இஞ்சி, பெருங்காயம் சேர்த்து சமைப்பது வாயுவைக் குறைக்கும்.

* முடக்கற்றான் கீரையை கைப்பிடி அளவு 1 கோப்பை தண்ணீரில் வேக வைத்து அந்த சாற்றுடன் சிறிது விளக்கெண்ணை விட்டுப் பருக வயிற்றில் உள்ள வாயு வெளியேறும்.

* தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் வராது. மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.

* இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

* ஓமம், கடுக்காய், வால்மிளகு, வெள்ளைப் பூண்டு, மிளகு, சுண்டைக்காய், சாதிப் பத்திரி, வெங்காயம் போன்றவைகளும் வாயுவைப் போக்கும்.

சீரகத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.



சீரகத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

 நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் சீரகத்தை வாயில் வைத்து மென்று சிறிது சிறிதாக சாறு இறக்கினால் அஜீரணக் கோளாறு நீங்கி மலச்சிக்கல் தீரும்.

சீரகம், ஏலம், பச்சைக் கற்பூரம் இவைகளைப் பொடித்து ஓரளவில் எடுத்து அதே அளவு சர்க்கரை சேர்த்து காலை, மதியம் இரவு என மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் வாயுவினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.

*வாயு தொல்லை:*

 வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

*அஜீரணம்*: ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

*வயிற்று வலி:*

 வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்

வியாழன், 18 மே, 2017

கேரட் அல்வா



கேரட் அல்வா

அல்வா என்றாலே திருநெல்வேலி அல்வா மட்டும் தான் அனைவரது நினைவுக்கும் வரும். ஏனெனில் அங்கு தான் அல்வா நன்கு சுவையோடு, சூப்பராக இருக்கும். ஆனால் அத்தகைய அல்வாவில் ஒன்றான கேரட் அல்வாவை எளிதாக வீட்டிலேயே செய்யலாம். அதிலும் 30 நிமிடங்களிலேயே அருமையான சுவையில் கேரட் அல்வா செய்யலாம்.

பொதுவாக நிறைய பேர் கேரட் அல்வாவை ட்ரை செய்திருப்பார்கள். ஆனால் அல்வாவை செய்ய போய், அல்வாவைத் தவிர பசையை செய்தவர்கள் தான் அதிகம். இங்கு கேரட் அல்வாவை எப்படி எளிதில் செய்வதென்று கொடுத்துள்ளோம். அதை ட்ரை செய்து பார்த்து, எப்படியிருந்தது என்று சொல்லுங்கள்.


*தேவையான பொருட்கள்:*

துருவிய கேரட் - 4 கப்
பால் - 2 கப்
தண்ணீர் - 1.5 கப்
கண்டென்ஸ்ட் மில்க் - 1/3 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 12
உலர் திராட்சை - 10
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

*செய்முறை:*

முதலில் பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கேரட், பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

அதே சமயம், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை நன்கு பொன்னிறமாக வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு பிரஷர் குக்கரை திறந்து, அதனை அப்படியே அடுப்பில் வைத்து, 10-15 நிமிடம் தீயை குறைவில் வைத்து கொதிக்க விட வேண்டும். (அதுவும் கலவையானது சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.)

அடுத்து அதில் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து நன்கு 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும். (சர்க்கரை சேர்க்காததால், தேவையான அளவு கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்துக் கொள்ளலாம்.)

பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கிளறி, அத்துடன் அந்த நெய்யையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

இறுதியில் அதன் மேல் ஏலக்காய் பொடியைத் தூவி, பிரட்டி விட வேண்டும். கலவையானது நன்கு அல்வா பதத்திற்கு வந்த பின்னரே, அதனை அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.

இப்போது சுவையான கேரட் அல்வா ரெடி!!!

*குறிப்பு:*

வேண்டுமெனில் கேரட் அல்வா செய்த பின்னர், பாதாம் மற்றும் பிஸ்தாவை துருவி, அதன் மேல் தூவி பரிமாறலாம்

பேலியோ அவியல்



பேலியோ அவியல்

என்னென்ன தேவை? *

சுரைக்காய் - 200 கிராம்,
கோவைக்காய் - 100 கிராம்,
நீர்ப்பூசணிக்காய் - 100 கிராம்,
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
முருங்கைக்காய் - 100 கிராம் (நறுக்கியது),
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
சேனைக்கிழங்கு - 50 கிராம்,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவைக்கு,
புளிக்காத தயிர் - 200 மி.லி,
சீரகம் - 1 டீஸ்பூன்.
மசாலா அரைக்க...
தேங்காய் - 200 கிராம்,
பச்சைமிளகாய் - 3,
சீரகம் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மசாலா அரைக்க கொடுத்தவற்றை அரைத்து கொள்ளவும். கடாயில் 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயை விட்டு நறுக்கிய சுரைக்காய், முருங்கைக்காய், கோவைக்காய், சேனைக்கிழங்கை போட்டு வதக்கி, தேவையான தண்ணீர், மஞ்சள் தூள், உப்புச் சேர்த்து கலந்து, குக்கருக்கு மாற்றி 1 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும்.

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த விழுது, வேகவைத்த காய்களைச் சேர்த்து கிளறவும்.

மற்றொரு கடாயில் மீதியுள்ள தேங்காய் எண்ணெயை விட்டு கறிவேப்பிலை, சீரகத்தைத் தாளித்து, காய்கறி கலவையில் கொட்டி கிளறி இறக்கவும்.

ஆறியதும் தயிரை நன்கு அடித்து சேர்க்கவும். தேவையானால் உப்பு சேர்த்து, சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, காலிஃப்ளவர் சாதத்துடன் பரிமாறவும். ஃப்ரிட்ஜில் வைக்காமலும் பரிமாறலாம்.


வீட்டிலேயே பஞ்சாமிர்தம் செய்வது எப்படி?





வீட்டிலேயே பஞ்சாமிர்தம் செய்வது எப்படி?

பழனி பஞ்சாமிர்தம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த பஞ்சாமிர்தத்தை அதே சுவையுடன் வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வாழைப்பழம் அல்லது மலை வாழைப்பழம் - 6,
பேரீச்சை - 20
காய்ந்த திராட்சை - கால் கப்
தேன் - 1/2 கப்,
நெய் - 2 டீஸ்பூன்
வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை - அரை கப்
பனங்கற்கண்டு - கால் கப்
ஏலக்காய் - 2


செய்முறை :

* பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

* வாழைப்பழத்தை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

* வாயகன்ற ஒரு பாத்திரத்தில் வாழைப்பழம், பேரீச்சை, காய்ந்த திராட்சை, தேன், நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, ஏலக்காய் பொடித்தது போட்டு பிசையவும்.

* கடைசியாக நெய் சேர்த்து கலக்கவும். பஞ்சாமிர்தமாக தயார் செய்து முருகனுக்குப் படைத்து, பரிமாறவும்.

* சுவையான சத்தான பழனி பஞ்சாமிர்தம் ரெடி.

* இதனை உடனே அல்லது 1 நாள் வரை வெளியில் வைத்து சாப்பிடலாம். விரும்பினால் 3 அல்லது 4 நாட்கள் பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.


குறிப்பு :

* கண்டிப்பாக நெய் சேர்க்க வேண்டும். அப்போது தான் அதன் சுவை வரும். இதில் கொடுக்கப்பட்டுள்ள அளவு நெய்யை மட்டும் சேர்த்தால் போதுமானது. அதிகமாக சேர்க்க வேண்டாம்.

* வட இந்தியர்கள் 2 வாழைப்பழம், 1 கப் காய்ச்சாத பால், கோதுமை மாவு, ஏலக்காய்த்தூள், காய்ந்த திராட்சை, முந்திரி, நெய், தேன், ஜாதிக்காய் தூள், சிறிது தேங்காய்த் துருவல் எனக் கலந்து தயாரிப்பார்கள்.

புதன், 17 மே, 2017

திருநெல்வேலி அல்வா



திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி?


திருநெல்வேலிக்கே அல்வாவா! இனி எல்லோருக்கும் கொடுக்கலாம் அல்வா... ஆன்லைனில்!!

   அல்வா (Halwa) என்பது கோதுமை மற்றும் சர்க்கரையிலிருந்து செய்யப்படும் ஒரு இனிப்பு உணவுப் பண்டமாகும். அல்வா என்றசொல், அரேபிய மொழியில் இருந்து வந்ததாகும். இப்படி பட்ட அல்வா தென் இந்தியாவில் உள்ள திருநெல்வேலி அல்வா மிகபிரபலம். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஜமீன்தார் ஒருவர் வட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்லும் பொழுது இந்த அல்வாவைமுதன் முதலாக ருசித்துள்ளார். அதன் சுவைக்கு அடிமை ஆன அவர் அந்த அல்வா தயாரித்தவரை தன்னுடனே அழைத்து வந்துவிட்டார். அவர் மூலம் திருநெல்வேலிக்கு அல்வா தயாரிப்பு அறிமுகம் ஆனது. ஆனால் அவர் அங்கு தயாரித்த அல்வாவை விட திருநெல்வேலியில் தயாரித்த அல்வா அதை விடவும் ருசி அதிகமாகஇருந்தது. இன்றளவும் இந்த அல்வாவின் ருசிக்கு தாமிரபரணி ஆற்று தண்ணி தான் காரணம் என்றும் பரவலாக பேசப்படுகிறது. நெல்லையில் நூறு வருடங்களுக்கு மேலாக இந்த அல்வாவிற்கு பெயர் பெற்ற ஒரே கடை திருநெல்வேலி இருட்டுக்கடை. இந்த கடையில் ஆரம்ப காலத்தில் இருந்து ஒரே ஒரு விளக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர், இதனால் இந்த கடைக்கு இருட்டுகடை என்று பெயர் வந்தது. இன்றளவும் இவர்கள் வெறும் சாதாரண 40 வாட்ஸ் பல்பு ஒன்றை மட்டுமே பயன்படுத்தி விற்பனைசெய்கிறார்கள். இருட்டுக்கடை அல்வா விற்பனை மற்ற கடைகளை போல முழு நேர விற்பனை கிடையாது. மாலை 6 மணிக்கு விற்பனைதொடங்கும் முன் 4 மணி முதலே மக்கள் வரிசையில் நிற்க தொடங்கி விடுவார்கள். அதிகபட்சம் 8 அல்லது 9 மணி வரைமட்டுமே விற்பனை நடைபெறும்.


திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி?


தேவையான பொருட்கள்:


 நெய் - 300 கிராம்,

 கோதுமை - 200 கிராம்,

 சீனி – 600

 கிராம் நெய் - தேவையான அளவு

நெய்யில் வருத்த முந்திரி - தேவையான அளவு ருசியான


*இருட்டு கடை அல்வா செய்முறை:*


இருட்டுக்கடை அல்வாவின் ருசி அவர்கள் அனைத்தும் கையிலே செய்வது தான், அந்த ருசி வேண்டும் என்றால் நீங்களும் இது போல் செய்யுங்கள். கோதுமையை முதல் நாளே தண்ணீரில் நன்கு ஊறவைக்க வேண்டும் குறைந்தது 8 மணி நேரம் அல்லது ஓர் இரவு. கோதுமை ஊறிய பின்பு ஆட்டுக்கல்லில் போட்டு அரைக்க வேண்டும். கோதுமையை அரைக்க அரைக்க பாலாக பொங்கும். அதை ஒரு வெண்மையான துணியை வைத்து வடிகட்டி பாலை தனியாக எடுக்க வேண்டும். இது போல் அதிக பட்சம் மூன்று முறை பால் எடுக்கலாம். இந்த பாலை அப்படியே வைத்து விட்டால் கெட்டியான பால் அடியில் தங்கி நீர் மேலே வந்துவிடும் அந்த நீரை நீக்கி விடுங்கள். அடுத்து அடுப்பில் ஒரு வாணலியை (பாத்திரம்) வைத்து, அதில் கோதுமைப் பாலை ஊற்ற வேண்டும். பால் கொதித்து வரும்போது சீனியைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கிளறுவதை சிறிது நேரம் கூட நிறுத்தக் கூடாது. பாலும், சீனியும் இறுகி கெட்டியான ஒரு பதத்திற்கு வரும்போது,நெய்யை சேர்த்து ஊற்றிக் கிளற வேண்டும். கிளறிக்கொண்டிருக்கும்போதே அல்வா குங்கும நிறத்திற்கு மாறிவரும். அப்படி வந்தவுடன் ஒரு பெரிய தட்டில் ஊற்றி ஆற வைக்க வேண்டும். நன்றாக ஆறியபின்பு எடுத்துச் சாப்பிட்டால் இருட்டுக்கடை அல்வாவின் ருசி அப்படியே இருக்கும். இந்த இருட்டுக்கடை திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் எதிர் புறம் உள்ளது. திருநெல்வேலிக்கு வரும் பலருக்கு இந்தகடை அல்வா கிடைப்பது இல்லை. இதனால் இதற்க்கு அடுத்த இடத்தில் உள்ள சாந்தி ஸ்வீட் அல்வா இங்கு மிக பிரபலம்.ஆனால் சுத்தமான சம்பாக் கோதுமையில் நெய், சர்க்கரை, பால் மட்டும் சேர்த்துச் செய்யப்படும் அல்வா மிகச் சுவையாகநெல்லையின் பல இடங்களில் கிடைக்கிறது. அதிலும் உங்கள் நேடிவ்கிருஷ்.காம் உங்கள் இல்லத்திற்கேகொண்டு வந்து சேர்க்கிறது. இதை கணக்கில் கொண்ட நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) சுத்தமான, சுவையான, சுகாதாரமான, இந்த இருட்டு கடை அல்வாவை நேர்த்தியான முறையில் தயார் செய்கிறார்கள். மண்மணம் மாறாத இந்த திருநெல்வேலி இருட்டு கடை அல்வாவை நீங்க நேடிவ்கிருஷ்.காம்' ல் (www.nativcrush.com) ஆர்டர் செய்தால், உங்கள் வீடு தேடி வரும் இந்த சுவையான இனிப்பு பண்டம் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான தின்பண்டம் உண்டு, இப்போது இருக்கும் இந்த அவசர உலகில் நாம் அதை ஊர் ஊராக சென்று சுவைக்க முடியாது. பலருக்கு அது ஒரு கனவாகவே இருக்கிறது. நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) இந்த கனவை நினைவாக்குகிறது

திங்கள், 15 மே, 2017

பேலன்ஸ் டயட் சுவையான டிபன் ரெடி!


பேலன்ஸ் டயட் சுவையான டிபன் ரெடி!

ஆரோக்கியமான வாழ்வுக்கு சரிவிகித உணவு அவசியம். ஆனால், ‘சரிவிகித உணவு’ என்றால் என்ன என்பதிலேயே பலருக்கும் குழப்பம் இருக்கிறது.
‘நம் உடலுக்குத் தேவையான உணவு தரமானதாகவும், அளவோடும் இருப்பது போல சாப்பிடும் முறையைத்தான் (குவாலிட்டி அன்ட் குவான்டிட்டி) சரிவிகித உணவு என்கிறோம்.
சரிவிகித உணவால், உடலுக்கு சகலவிதமான சத்துக்களும் சேர்வதுடன், சோர்வே இல்லாமல்புத்துணர்வோடு இருக்கலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் காலை உணவைத் தவிர்க்கவே கூடாது” என்கிற சீஃப் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி, ஒரு வாரத்தின் ஏழு நாட்களுக்கான காலை, மதியம், மாலை நேரச் சிற்றுண்டி, இரவு உணவு என்று ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார்.
இரவு உணவுக்குப் பிறகு, நீண்ட நேரம் சாப்பிடாமல் காலை வரை ஃபாஸ்ட்டிங் இருந்து, அதை ‘பிரேக்’ செய்வதால்தான், காலை உணவை ‘பிரேக்ஃபாஸ்ட்’ என்கிறோம். 9 மணிக்குள் சாப்பிட்டால்தான் அது, பிரேக்ஃபாஸ்ட். இல்லையெனில், நோய்கள் நம் உடலுக்குள் ஃபாஸ்ட்டாக நுழைந்துவிடும். கலோரி, மாவுச்சத்து, புரதம், கால்சியம், கொழுப்பு, இரும்புச் சத்து என அனைத்தும் கலந்த சமச்சீர் உணவைச் சாப்பிடுவதே நல்லது. ‘பேலன்ஸ்டு’ டயட்டில், ஏழு நாட்களுக்கான காலை பிரேக்ஃபாஸ்ட் ரெசிப்பிகளைச் சொல்ல, அவற்றைச் சமைத்துக்காட்டி, சப்புக் கொட்டவைக்கிறார் சமையல் கலை நிபுணர் பத்மா.
முதல் நாள்: வெந்தய தோசை பூண்டுப் பொடி




வெந்தய தோசை
தேவையானவை: இட்லி அரிசி – 200 கிராம், வெந்தயம் – 4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – – தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்து, வெந்தயத்தை ஒன்றாகச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைத்துக் களைந்து மையாக அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலந்து, காயும் தோசைக் கல்லில், மாவைப் பரவலாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டுப் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: வெந்தயம் உடலுக்குக் குளிர்ச்சி. வயிற்றுப் புண் வராமல் காக்கும். உளுந்தில் புரதச் சத்து உள்ளது.
பூண்டுப் பொடி
தேவையானவை: காய்ந்த மிளகாய் – 10, உளுந்து, கடலைப் பருப்பு – ஒரு சிறிய கிண்ணம், பூண்டுப் பல் – 20, எண்ணெய் ஒரு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: காய்ந்த மிளகாய், உளுந்து, கடலைப் பருப்பு இவற்றை வெறும் கடாயில் தனித்தனியே வறுத்துக்கொள்ளவும். தோல் உரித்த பூண்டை, சிறிது எண்ணெயில் வதக்கி பருப்பு, வற்றலுடன் சேர்த்து அரைக்கவும். இதில், தேவைக்கு ஏற்ப சிறிது உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இரண்டாம் நாள்: மினி இட்லி வெஜிடபிள் சாம்பார்.


மினி இட்லி
தேவையானவை: இட்லி அரிசி – 300 கிராம், உளுந்து – 100 கிராம், உப்பு தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்தை தனித்தனியே ஊறவைத்து அரைத்து உப்பு சேர்த்துக் கலக்கவும். மாவை மூன்று மணி நேரம் வெளியில் வைத்தால், நன்றாகப் பொங்கிவரும். மினி இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, ஒரு ஸ்பூனால் மாவை குழிகளில் நிரப்பி குக்கரில் வேகவிட்டு எடுக்கவும்.
வெஜிடபிள் சாம்பார் செய்ய: புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி – ஒரு ஸ்பூன், காரட், பீன்ஸ், குடமிளகாய், பச்சை மிளகாய் – தலா 1, பச்சைப் பட்டாணி, பாசிப்பருப்பு தலா – 100 கிராம், பச்சை கொத்தமல்லி சிறிதளவு. கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: காரட், பீன்ஸ், குடமிளகாயை பொடியாக நறுக்கவும். பட்டாணியை தோல் உரித்துக்கொள்ளவும். பாசிப் பருப்பை குழைய வேகவைக்கவும். புளியை தண்ணீர்விட்டுக் கரைத்து சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு கடாயில் எண்ணெய்விட்டு நறுக்கிய காய்களை வதக்கி, கொதிக்கும் சாம்பாரில் போடவும். காய்கள் வெந்ததும் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பச்சை மிளகாய் போட்டுத் தாளித்து, வேகவைத்த பருப்பையும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி நறுக்கிப்போட்டு இறக்கவும்.
குறிப்பு: இட்லிகளை ஓர் அகலமான கிண்ணத்தில் போட்டு, இந்த சாம்பாரை இட்லிகள் மூழ்கும் அளவுக்கு ஊற்றி சாப்பிடலாம்.


மூன்றாம் நாள்: வெஜிடபிள் ஊத்தப்பம் மசாலா மோர்
வெஜிடபிள் ஊத்தப்பம்
தேவையானவை: இட்லி அரிசி – 300 கிராம், உளுந்து – 100 கிராம், உப்பு தேவையான அளவு, கோஸ் துருவல், காரட் துருவல், பொடியாக நறுக்கிய குடமிளகாய் – வெங்காயம் – தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிது அளவு, பச்சை மிளகாய் 1, எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை: அரிசி, உளுந்தை தனித்தனியே ஊறவைத்து தோசைக்கு அரைப்பதுபோல் அரைத்து உப்பு சேர்த்து கலக்கவும். சிறிது எண்ணெயில் காய்கறிகளை லேசாக வதக்கி மாவுடன் சேர்த்துக் கலக்கவும். காய்ந்த தோசைக் கல்லில் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.
மசாலா மோர்
தேவையானவை: தயிர் – 500 மி.லி., சோம்பு, சீரகம் தலா – கால் ஸ்பூன், இஞ்சி ஒரு சிறிய துண்டு, சிறிய பச்சை மிளகாய் – 1, பெருங்காயத் தூள், உப்பு, கறிவேப்பிலை கொத்தமல்லி, புதினா – சிறிதளவு.
செய்முறை: தயிர், உப்பு, பெருங்காயத்தூளைத் தவிர எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். தயிரை மத்தினால் கடைந்து அரைத்த சாறுடன் கலந்து, உப்பு, பெருங்காயத் தூள், ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பருகலாம். ஊத்தப்பத்தை இந்த மோரில் தொட்டு சாப்பிடலாம். அல்லது ஊத்தப்பம் சாப்பிட்டதும் இந்த மோரை அருந்தலாம்.


நான்காம் நாள்: புரோட்டீன் அடை அவியல்
புரோட்டீன் அடை
தேவையானவை: இட்லி அரிசி – 200 கிராம், முளைகட்டிய பாசிப்பயிறு, கொண்டைக்கடலை, கொள்ளு, கோதுமை மற்றும் உளுந்து – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – 4, மிளகு – ஒரு டீஸ்பூன், தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு, உப்பு எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: இட்லி அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்துக் களைந்து, முளைகட்டி
ய பயறு வகைகள், காய்ந்த மிளகாய், மிளகு, இஞ்சி சேர்த்து அடைமாவுப் பதத்தில் கரகரப்பாக அரைத்து உப்பு சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து மாவைப் பரவலாக ஊற்றி மிதமான தீயில் வேகவிட்டு எடுக்கவும்.

அவியல்
தேவையானவை: தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன், பீன்ஸ் – அவரைக்காய் தலா 10, காரட், பூசணி பத்தை – தலா 1, கத்தரிக்காய் – 2, உருளைக் கிழங்கு 2, தேங்காய்த் துருவல் – ஒரு கப், பச்சை மிளகாய் – 4, தயிர் – ஒரு கப், உப்பு, கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை: எல்லாக் காய்கறிகளையும் பெரிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து தயிருடன் கலந்து வேகவைத்த காய்களுடன் சேர்த்து கலக்கவும். தேங்காய் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கலக்கவும்.
பொதுவாக மனிதனுக்கு 2000 முதல் 2200 கிலோ கலோரி, நாள் ஒன்றுக்குத் தேவை.
காலை 7 மணி 100 கலோரி (காபி, டீ, பூஸ்ட்)
காலை பிரேக்ஃபாஸ்ட் 350 முதல் 400 கலோரி (டிபன்)
மிட் மார்னிங் (11 மணிக்கு) – 100 முதல் 150 கலோரி (மோர், இளநீர்)
மதியம் 500 கலோரி – (சாப்பாடு)
மாலை 3 மணிக்கு 100 கலோரி (ஜூஸ், பழ சாலட்)
5 மணிக்கு ஸ்நாக்ஸ் + டீ (அல்லது) காபி 200 கலோரி
இரவு 8 மணிக்கு 400 கலோரி (மிதமான சப்பாத்தி போன்ற உணவு)
தூங்கப் போகும்போது – 100 கலோரி (பால்)

நீரிழிவு ஆரோக்கியமான டிபன் வகைகள் !!!




நீரிழிவு ஆரோக்கியமான டிபன் வகைகள்  !!!


பாசிப்பருப்பு இட்லி

தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு        – 1கப் தலைதட்டி
இட்லி அரிசி        – 2 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய்    – 4
கறிவேப்பிலை    – 1 டேபிள் ஸ்பூன்
தனியா        – 1 டீஸ்பூன்
சீரகம்            – 1/2 டீஸ்பூன்
சிறிய வெங்காயம்    – 1 கப்
உப்பு            – தேவைக்கேற்ப
செய்முறை
பாசிப்பருப்பு, இட்லி அரிசி இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஊற வைக்கவும். ஊறியதும் மிளகாய், தனியா, சீரகம், சிறிய வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும். பின்னர் இட்லி தட்டிலி இட்லீகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்து மிளகாய் சட்னியுடன் பரிமாறவும்.

கோதுமை ரவை இட்லி

தேவையான பொருட்கள்
கோதுமை ரவை    – 1 கப்
கடலைப்பருப்பு    – 2 டேபிள் ஸ்பூன்
புளித்த தயிர்        – 1 கப்
எண்ணெய்        – 1 டீஸ்பூன்
உப்பு            – தேவைக்கேற்ப
பச்சை மிளகாய்    – 1
கொத்தமல்லி        – சிறிது
மிளகு            – 1/4 டீஸ்பூன்
செய்முறை
பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கோதுமை ரவையையும், கடலைப்பருப்பையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியவுடன் இதனை மிக்ஸியில் போட்டு உப்பு, மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளித்த தயிர் எண்ணெய் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை புளிக்க வைக்கவும். இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு, இட்லி குக்கரில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்து கொத்தமல்லி சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

ராகி இட்லி

தேவையான பொருட்கள்
ராகி (கேழ்வரகு)        – 1 கப்
உளுத்தம் பருப்பு        – 1/4 கப்
கேரட் துருவியது        – 2 டேபிள் ஸ்பூன்
முட்டைக்கோஸ் துருவியது    – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி,கறிவேப்பிலை- சிறிது
உப்பு                – தேவைக்கேற்ப
சீரகம்                – சிறிது
செய்முறை
உளுத்தம்பருப்பையும், கேழ்வரகையும் தனித்தனியாக ஊற வைத்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து 10 மணி நேரம் புளிக்க வைக்கவும். புளித்தவுடன் மாவில் பொடியாக நறுக்கிய  கொத்தமல்லி, கறிவேப்பிலை, துருவிய கேரட், முட்டைக்கோஸ் மற்றும் சீரகத்தூள் சேர்த்துக் கலந்து இட்லித் தட்டுகளில் இட்லியாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். மிளகாய் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

ஜோவார் இட்லி

தேவையான அளவு
வெள்ளைச்சோளம்    – 1 கப்
உளுத்தம் பருப்பு    – 1/4 கப்
காய்கறித்துருவல்    – 1 கப்
உப்பு            – தேவைக்கேற்ப
செய்முறை
வெள்ளைச்சோளத்தையும், உளுந்தையும் 4 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து உப்பு சேர்த்து கலந்து இரவு முழுவதும் புளிக்க வைக்கவும். காலையில் காய்கறித்துருவல்களை இந்த மாவுடன் சேர்த்து கலந்து இட்லித்தட்டில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து சூடாகப் பரிமாறவும்.

கோதுமை ரவை பொங்கல்

தேவையான பொருட்கள்
கோதுமை ரவை    – 1 கப்
பாசிப்பருப்பு        – 1/4 கப்
மிளகு            – 1/2 டீஸ்பூன்
சீரகம்            – 1/2 டீஸ்பூன்
இஞ்சி விழுது    – 1/4 டீஸ்பூன்
முந்திரி        – 2
சன் ப்ளவர் ஆயில்    – 3 டீஸ்பூன்
தண்ணீர்        – 3 கப்
உப்பு            – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை    – சிறிது
செய்முறை
ஒரு குக்கரில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கோதுமை ரவையை போட்டு லேசாக வறுக்கவும். பின் பாசிப்பருப்பையும் போட்டு லேசாக வறுக்கவும். பின்னர் 3 கப் அளவு தண்ணீர் சேர்த்து, இஞ்சி விழுது, உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக விடவும். வெந்தவுடன் மூடியைத் திறந்து நன்கு கிளறவும். ஒரு வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி அதில் மிளகு, சீரகம் போட்டு தாளித்து, பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

கோதுமை ரவை கிச்சடி

தேவையான பொருட்கள்
கோதுமை ரவை    – 1 டம்ளர்
கேரட்            – பாதி
பீன்ஸ்            – 10
தக்காளி        – 1
பெரிய வெங்காயம்    – 1
பச்சை மிளகாய்    – 2
மஞ்சள்பொடி        – சிறிது
இஞ்சி            – சிறிது
பூண்டு        – 2 பல்
சோம்பு        – 1 டீஸ்பூன்
புதினா            – சிறிது
உப்பு, எண்ணெய்    – தேவைக்கேற்ப
செய்முறை
கேரட், பீன்ஸ், தக்காளி, பெரிய வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி , சோம்பு போட்டு தாளித்து, இஞ்சி பூண்டை நசுக்கிப் போட்டு நறுக்கிய பச்சைமிளகாய், காய்கறிகளை போட்டு வதக்கவும். பின் கோதுமை ரவையையும் சேர்த்து வதக்கி புதினா, மஞ்சள் பொடி, உப்பு போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் 2 சத்தம் வரும் வரை வதக்கவும். வெந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

சேமியா மசாலா பொங்கல்

தேவையான பொருட்கள்
சேமியா        – 2 கப்
சின்ன வெங்காயம்    – 10
பூண்டு        – 10 பல்
இஞ்சி            – 1 இன்ச்
வெந்தயக்கீரை    – 1 கப்
பாசிப்பருப்பு        – 1 கப்
தண்ணீர்        – 4 கப்
உப்பு, எண்ணெய்    – தேவைக்கேற்ப
வறுத்துப் பொடிக்க
மிளகாய்        – 4
மல்லி            – 1 டீஸ்பூன்
சீரகம்            – 1/2 டீஸ்பூன்
மிளகு            – 1/2 டீஸ்பூன்
பட்டை        – சிறிது
ஏலக்காய்        – 2
கிராம்பு        – 1
செய்முறை
பாசிப்பருப்பை சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய், மல்லி, சீரகம், மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு லேசாக வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சியை போட்டு வதக்கி பின் வெந்தயக்கீரையை போட்டு லேசாக வதக்கி வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து தண்ணீரையும் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும். (வறுத்த சேமியா என்றால் வறுக்க வேண்டாம். இல்லையென்றால் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்துக் கொள்ளவும்.) கடைசியாக சேமியாவை கொதிக்கும் நீரில் போட்டு நன்றாகக் கிளறவும். அரைத்து வைத்துள்ள மசாலாப்பொடியையும் சேர்த்து ஒரு மூடி போட்டு மூடி வேக விடவும். வெந்ததும் திறந்து கொத்தமல்லி தூவி பொட்டுக்கடலை சட்னியுடன் பரிமாறவும்.

ராகி இடியாப்பம்

தேவையான பொருட்கள்
ராகி இடியாப்பம்            – 1 பாக்கெட்
பெரிய வெங்காயம்            – 1
பச்சை மிளகாய்            – 2
கொழுப்பு நீக்கப்பட்ட மோர்        – 1 கப்
கறிவேப்பிலை            – சிறிது
உப்பு, எண்ணெய்            – தேவைக்கேற்ப
கடுகு                    – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு            – 1/2 டீஸ்பூன்
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். ராகி இடியாப்பத்தை சிறிது தண்ணீரில் ஊற வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி பின் மோரை ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும். சிறிது கொதி வந்தவுடன் ராகி இடியாப்பத்தை போட்டுக்கிளறி இறக்கிப் பரிமாறவும்.

ராகி புட்டு

தேவையான பொருட்கள்
ராகி மாவு        – 1 கப்
அரிசி மாவு        – 1 கப்
துருவிய தேங்காய்    – 1/2 கப்
உப்பு            – தேவைக்கேற்ப
தண்ணீர்        – 1 கப்
செய்முறை
அரிசி மாவு, ராகி மாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து பிசறிக் கொள்ளவும். பின் புட்டுக் குழாயில் புட்டு மாவு, பின்னர் தேங்காய் என்று ஒன்று மாற்றி ஒன்று வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். கொண்டைக் கடலை குழம்புடன் சூடாகப் பரிமாறவும்.

கோதுமை புட்டு

தேவையான பொருட்கள்
பஞ்சாப் கோதுமை    – 1/4 கிலோ
தேங்காய்        – தேவையான அளவு
பாசிப்பருப்பு        – 1/4 கப்
உப்பு, எண்ணெய்    – தேவைக்கேற்ப
பச்சைமிளகாய்    – 1
வெங்காயம்        – 1
கடுகு            – சிறிது
உளுத்தம்பருப்பு    – சிறிது
செய்முறை
கோதுமையை சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து, அடுப்பில் வெறும் சட்டியில் வறுத்துக் கொள்ளவும். அது பொரிந்து நல்ல வாசனை வரும் போது இறக்கி ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் சிறிது நீர் தெளித்து பிசறி சட்டையில் கட்டிகள் இல்லாமல் சலித்து இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை அரை பதமாக வேக வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து பச்சைமிளகாய், வெங்காயம் போட்டு வதக்கி வேக வைத்த பருப்பு மற்றும் கோதுமை புட்டை கொட்டி தேவையான அளவு உப்பு போட்டு கிளறி, கடைசியாக தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும்.

செவ்வாய், 9 மே, 2017

வெயில்_கால_உணவுகள்



வெயில்_கால_உணவுகள்

* வெந்தயப் பணியாரம்
* கேரட் கீர்
* எலுமிச்சை - புதினா இஞ்சி ஜூஸ்
* வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
* கம்மங்கூழ்
* வெள்ளரிக்காய்ப் பாயசம்
* நுங்குப் பால்
* இளநீர்ப் பாயசம்
* வெந்தய மசாலா சாதம்.

கொளுத்தும் கோடை வெயிலுக்கு உடலைக் குளிர்ச்சியாக்கும் சம்மர் கூல் ரெசிபி.

*வெந்தயப் பணியாரம்*

தேவையானவை:
பச்சரிசி - 200 கிராம்
உளுந்து - 6 டீஸ்பூன்
வெந்தயம் - ஒன்றரை டீஸ்பூன்
வெல்லம் - 200 கிராம்
ஏலக்காய் - 2
நெய் - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 10 டீஸ்பூன்
சோடா உப்பு - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும். அடுப்பில் கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இத்துடன் பொடித்த வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு கரைத்து வடிகட்டவும். ஊறிய அரிசி, உளுந்து, வெந்தயத்துடன் வெல்லம் கரைத்த தண்ணீர் ஊற்றி மையாக கிரைண்டரில் அரைக்கவும். மாவை வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து 8 மணிநேரம் புளிக்கவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி தேங்காய்த் துருவல் சேர்த்து லேசாக வதக்கவும். இதை புளிக்க வைத்துள்ள மாவில் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் பொடித்த ஏலக்காய், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து பணியாரம் ஊற்றும் பதத்துக்குக் கரைத்து, பணியாரக் குழியில் ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

*கேரட் கீர்*

தேவையானவை:
கேரட் - கால் கிலோ
பால் - அரை லிட்டர்
சர்க்கரை - 200 கிராம்
ரோஸ் எசன்ஸ் - கால் டீஸ்பூன்
முந்திரி - 15
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

பாலைக் காய்ச்சி ஆறவைத்துக்கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்துக்கொள்ளவும். கேரட்டை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வேகவைத்து அதன் தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும். கேரட் ஆறியதும் வடித்த தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். அடுப்பில் கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தை வைத்து அரைத்த கேரட் விழுது சேர்க்கவும். இத்துடன் சர்க்கரை சேர்த்து கரையும் வரை நன்றாகக் கிளறி விடவும். பிறகு காய்ச்சிய பால், ரோஸ் எசன்ஸ் சேர்த்துக் கலக்கி முந்திரி சேர்த்து இறக்கவும். இதை சூடாகவோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்றோ பரிமாறவும்

*எலுமிச்சை - புதினா இஞ்சி ஜூஸ்*

தேவையானவை:
எலுமிச்சை - ஒன்று
நாட்டுச் சர்க்கரை -
6 டீஸ்பூன்
புதினா - 2 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
(2 அங்குல அளவு)
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - 300 மில்லி

செய்முறை:

புதினாவை சுத்தம் செய்து கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும். எலுமிச்சைப்பழத்
தைப் பிழிந்து சாறு எடுத்து வைக்கவும். இஞ்சி, புதினாவை தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். இத்துடன் நாட்டுச்சர்க்கரை, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு எலுமிச்சைச்சாற்றையும் ஊற்றிக் கலக்கி வடிகட்டினால் லெமன் மின்ட் ஜூஸ் ரெடி.

*வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி*

தேவையானவை:
பச்சரிசி - 200 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி (சிறியது)
பொடியாக நறுக்கிய பெரிய
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 7 பல்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
பட்டை - 2 சிறியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
புதினா இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற விடவும். தேங்காயைத் துருவி பால் எடுத்து வைக்கவும். சோம்பு மற்றும் பூண்டுப்பபல்லை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சுடானதும், பட்டை சேர்த்துத் தாளித்து, பூண்டு, சோம்பு சேர்த்து வதக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழை, புதினா இலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு 6 பங்கு தண்ணீர் என்கிற அளவில் அரிசி மற்றும் தண்ணீரை குக்கரில் சேர்க்கவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, பருப்புக் கலவையும் சேர்த்துக் கலக்கி குக்கரை மூடி பத்து விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும். ஆறியதும் வெந்தய கஞ்சியை ஒரு கிண்ணத்தில் ஊற்றி தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கவும். பிறகு கொத்தமல்லித்தழை, புதினா இலைகள் தூவிப் பரிமாறவும்.
குறிப்பு:
தேங்காய்ப்பால் சேர்ப்பதற்கு முன்பு கஞ்சி கெட்டியாக இருந்தால், தேவைக்கேற்ப வெந்நீர் சேர்க்கவும். விருப்பப்பட்டால், மிளகுத்தூளும் சேர்த்துக்கொள்ள
லாம்.

*கம்மங் கூழ்*

தேவையானவை:
கம்பு - கால் கிலோ
மோர் - அரை லிட்டர்
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 20
தண்ணீர் - தேவையான அளவ

செய்முறை

முதலில் கம்பைக் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து அரை மணி நேரம் வெயிலில் காய விடவும். பிறகு மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக மையாக அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு அரைத்த கம்பை தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். கம்பு 10 நிமிடம் கொதித்ததும் உப்பு போட்டு கரண்டியால் கலக்கி இறக்கவும். கூழ் சிறிது கெட்டியாக இருப்பது போல் இருந்தால், தண்ணீர் ஊற்றிக் கலந்து கொள்ளலாம். பரிமாறும் போது மோர் ஊற்றிக் கலக்கி நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பருகுவதற்குக் கொடுக்கவும்.

*வெள்ளரிக்காய்ப் பாயசம்*

தேவையானவை:
வெள்ளரிக்காய் - ஒன்று (பெரியது)
பால் - 250 மில்லி
சர்க்கரை - தேவையான அளவு
அரிசி மாவு - 3 டீஸ்பூன்
பாதாம் மிக்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
ஏலக்காய் (தூளாக்கிக் கொள்ளவும்) - 2
முந்திரி - தேவையான அளவு

செய்முறை:

வெள்ளரிக்காயைத் துருவி வைத்துக்கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆறவைத்துக்கொள்ள
வும். அரிசி மாவு, பாதம் மிக்ஸை சிறிது தண்ணீரில் ஒன்றாகக் கலக்கி வைத்துக்கொள்ளவும். முந்திரியை ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, வெள்ளரிக்காயை மீதமிருக்கும் நெய்யில் வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக விடவும். இத்துடன் அரிசி மாவுக்கலவையைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி ஆறிய பால், முந்திரி சேர்த்துப் பரிமாறவும்.

*நுங்குப் பால்*

தேவையானவை:
நுங்கு - 10
பால் - 200 மில்லி
மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன்

செய்முறை:

நுங்கை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். காய்ச்சிய பாலில் மில்க் மெய்ட் மற்றும் அரைத்த நுங்குக் கலவையும் சேர்த்தால் சுவையான ‘நுங்குப்பால்’ ரெடி. பிரிட்ஜில் வைத்தும் பருகலாம். இனிப்பு அதிகம் வேண்டும் என்பவர்கள் சிறிது சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.

*இளநீர்ப் பாயசம்*

தேவையானவை:
இளநீர் - ஒன்று
பால் - அரை லிட்டர்
மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன

செய்முறை:

இளநீரைத் தனியாகவும், வழுக்கையைத் தனியாகவும் எடுத்து வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து அரை லிட்டர் பாலை 400 மில்லி ஆக குறையும் வரை சுண்ட காய்ச்சவும். மில்க்மெய்டையும் சுண்டிய பாலில் சேர்த்துக் கலக்கவும். இளநீரில் உள்ள வழுக்கையை மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி பால் கலவையில் சேர்த்து இளநீரையும் கலந்து கொள்ளவும். லேசாக சூடானதும் இறக்கிப் பரிமாறவும். இனிப்பு வேண்டுமென்பவர்கள் சிறிது சர்க்கரை சேர்த்துக் கரைத்துக்கொள்ளலாம். பாலை இறக்கிவிட்டு, இளநீரை ஊற்றிக் கலக்கிய பிறகும் கிளாஸில் ஊற்றிப் பரிமாறலாம்.

*வெந்தய மசாலா சாதம்*

தேவையானவை:
அரிசி - 300 கிராம்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
மீடியம் சைஸில் நறுக்கிய தக்காளி - 3
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 15
சோம்பு - ஒரு டீஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி
சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்

செய்முறை:

அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கி நிறம் மாறியதும், சின்ன வெங்காயம் சேர்த்து சுருள வரும் வரை வதக்கவும். இத்துடன் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீரை சமஅளவில் சேர்த்து ஊற்றவும். பிறகு ஊறவைத்த அரிசியைச் சேர்த்து வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

சனி, 6 மே, 2017

ரீஃபைண்ட் எண்ணெயைவிட செக்கு எண்ணெய் ஏன் பெஸ்ட்?



ரீஃபைண்ட் எண்ணெயைவிட செக்கு எண்ணெய் ஏன் பெஸ்ட்?

'வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு' என்பது பழமொழி. நல்ல பொருள்களை வியாபாரியிடம் இருந்து வாங்கிப் பயன்படுத்தாமல் நோய்களை வரவழைத்துவிட்டு அதன்பிறகு வைத்தியனிடம் போய் நோய்க்காக பணத்தைச் செலவழிக்க வேண்டாம் என்பதே அதன் பொருள். அந்த வரிசையில் அந்தக்காலத்தில் வாணியன் என்று சொல்லப்படுபவர்கள் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார்கள். அவர்கள் விற்கும் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் தரமானவையாக இருந்ததோடு ஆரோக்கியம் காக்கக்கூடியவையாக இருந்தன. சுத்தமான செக்கு எண்ணெய்களைப் பயன்படுத்துவதன்மூலம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். மேலும் எந்த ஒரு நோயும் நம்மை நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ளும். ஊட்டச்சத்துள்ள எண்ணெய்களைப் பயன்படுத்தியதால்தான், நம் முன்னோர் நோய் நொடி எதுவும் அண்டாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தனர்.

நம் வாழ்வில், எண்ணெயின் பங்கு இன்றியமையாததாகி விட்டது. நாம் உண்ணும் உணவுப் பொருள்கள் பெரும்பாலும் எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன. மொறுமொறு வடை, முறுகலான தோசை, போண்டா, பஜ்ஜி என நாவுக்கு ருசி தரும் உணவுகள் அனைத்துமே எண்ணெயில் தயாரிக்கப்படுபவையே. இதைக்கண்ணுற்ற நம்மில் பலர்... இதை எந்த எண்ணெயில் செய்தார்களோ, எத்தனை நாள் ஆனதோ என்று கருத்துச் சொல்லிகள் விளம்பினாலும் நாம் நம்முடைய வீடுகளில் பயன்படுத்தும் எண்ணெய்கள் மட்டும் ஆரோக்கியமானதா? என்று கேட்டால் அதுவும் கேள்விக்குறியே.

அன்றாடச் சமையலில் நாம் பயன்படுத்தும் ரீஃபைண்ட் ஆயில்களில் எந்தவொரு உயிர்ச்சத்துகளும் இல்லை. அதற்குக் காரணம் எண்ணெய் தயாரிக்கப்படும் முறையே. ஆம், கம்பெனிகளில் எந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் எண்ணெய்களில், எண்ணெயை மட்டும் பிரித்து எடுப்பதில்லை. அதில் உள்ள உயிர்ச்சத்துகளையும் சேர்த்தே பிரித்து எடுத்து விடுகிறார்கள். அதிகமான வெப்பத்தில் எந்திரங்கள் எண்ணெயை பிரித்தெடுப்பதால் அது முழுமையான ரசாயனத்தன்மை கொண்டதாக மாறி விடுகிறது. இதைப் பயன்படுத்துவதால் நமக்கு ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, உடல் பருமன், புற்றுநோய் போன்றவை வர வாய்ப்புள்ளது. ரீஃபைண்ட் மற்றும் டபுள் ரீஃபைண்ட் எனப்படுவது இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயில் உள்ள நிறத்தை, அதன் கொழகொழப்புத் தன்மையை, தேவையான கொழுப்புச்சத்தை நீக்குவதே. ஆகவே, இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு செக்கில் ஆட்டப்படும் எண்ணெயைப் பயன்படுத்துவதே.

செக்குகள் பெரும்பாலும் மரம் மற்றும் கல்லால் செய்யப்படக்கூடியவை. முற்காலங்களைப்போல மாடுகளைக்கொண்டு இயக்கப்பட்ட செக்குகள் இப்போது மின்மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன. குறைந்த திறன் கொண்ட மோட்டார்களே போதுமானது. இவை அதிகமான வெப்பத்தை வெளியிடுவதில்லை. இதன்மூலம் ஆட்டப்படும் எண்ணெயில் உயிர்ச்சத்துக்கள் அப்படியே இருக்கும். செக்குகளில் அரைத்துப் பெறப்படும் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் பல்வேறு வைட்டமின்கள் உள்ளன. மேலும் இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம், செம்பு, கால்சியம் ஆகிய சத்துகள் உள்ளன.

இந்தத் தாதுப்பொருட்கள் நம் கை, கால் மூட்டுகளுக்குச் சென்று எலும்புகளுக்கு நல்ல வலிமையைத் தரக்கூடியவை. எலும்பு தேய்மானத்தைத் தடுக்கக்கூடியவை. செக்கில் ஆட்டப்படும் எண்ணெய் அடர்த்தியாகவும், நல்ல நிறமாகவும், நல்ல மணமாகவும் இருக்கும். மேலும் கொழகொழப்பாகவும் காணப்படும். இதனால் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பைக் கொடுக்கக் கூடியது.

செக்கு மூலம் தயாரிக்கப்படும் கடலை எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்தினால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

தேங்காய் எண்ணெய் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.

விளக்கெண்ணெய் குடலை சுத்தப்படுத்தும்.

நல்லெண்ணெய் முதுமையைத் தாமதப்படுத்தும். மூலம், மாதவிலக்கு போன்ற பிரச்னைகளைப் போக்கக்கூடியது. உடலுக்கு உறுதியைத் தரக்கூடியது. பல்வேறு நற்குணங்களைக் கொண்டிருப்பதாலே எள் எண்ணெய் நல்லெண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது `குயின் ஆஃப் ஆயில்' என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் எள் ஆட்டப்படும் போது கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து ஆட்டப்படும். இது செக்கை அதிக வெப்பமாக்க விடாது, மேலும் இனிப்புச் சுவையையும் கொடுக்கும்.

செக்கு எண்ணெய் வாங்கும்போது நாம் சில விஷயங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். செக்குகளில் இரும்புச் செக்கும் உண்டு. இரும்புச் செக்கும் வெப்பமடையும் தன்மை கொண்டது. பெரும்பாலும் மரச்செக்குகளில் தயாரிக்கும் எண்ணெயை வாங்குவது நலம்.

தேங்காய் கொப்பரைகள் கெட்டுப் போகாமல் இருக்க சிலர் சல்ஃபரை பயன்படுத்துவதும் உண்டு. இதையும் விசாரித்து வாங்குதல் நலம். “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே“ என்பது திருமூலரின் பாடல். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன்மூலம் நாம் உயிரை வளர்க்க முடியும். நாம் உண்ணும் உணவே நம் உடலின் ஆரோக்கியத்தைத்  தீர்மானிக்கிறது. நாம் பயன்படுத்தும் எண்ணெய்களே நம்  உணவின் தரத்தைத் தீர்மானிக்கின்றன. நல்ல தரமான எண்ணெயைப் பயன்படுத்துவோம்! நீண்ட ஆயுளுடன் வாழ்வோம்

புதன், 3 மே, 2017

மிக்ஸட் ப்ரூட் கஸ்டர்ட்/Mixed Fruit Custard.



மிக்ஸட் ப்ரூட் கஸ்டர்ட்/Mixed Fruit Custard.


*தேவயானவை :*

பழத்துண்டுகள் - 2 கப்
பால் - 1+1/2 கப்
கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்(Vanilla Flavoured)
சர்க்கரை - 1/4 கப்

*செய்முறை :*

•• 1/2 கப் பாலில் கஸ்டர்ட் பவுடரை கட்டியில்லாமல் கலந்து வைக்கவும்.

•• 1கப் பாலில் சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து கஸ்டர் கலந்த பாலை ஊற்றி கட்டியில்லாமல் கலக்கிவிடவும்.

•• சிறிது கெட்டியானதும் இறக்கி ஆறவைத்து ப்ரிட்ஜில் குளிரவைக்கவும்.

•• பரிமாறும் போது பழத்துண்டுகளின் மீது குளிரவைத்த கஸ்டர்ட் பாலை ஊற்றி பரிமாறவும்.

*குறிப்பு :*

•• பழத்துண்டுகள் -
வாழைப்பழம், ஸ்ட்ராப்பெர்ரி, கிவி, அன்னாச்சிப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு.

•• அவரவர் விருப்பத்திற்கேற்ப சர்க்கரை சேர்க்கவும்.

•• இதனை செய்த உடனே சாப்பிடுவது சிறந்தது.

•• கஸ்டர்ட் பவுடர் இல்லையெனில்  2   டேபிள்ஸ்பூன் சோளமாவு, 1/2 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்க்கலாம்.

கம்பு காரக் கொழுக்கட்டை



கம்பு காரக் கொழுக்கட்டை
*******************************

தேவையான பொருட்கள்;-

கம்பு - ஒரு டம்ளர்
தேங்காய்ப்பூ - அரை டம்ளர்
மிளகாய் வற்றல் -.5
சிறிது காயப் பொடி
நல்லெண்ணெய்,கடுகு, உளுத்தம்பருப்பு , கறிவேப்பிலை தாளிக்க.

செய்முறை;-
கம்பைக் கழுவி அரை மணி நேரம் ஊற விடவும். பின் தேங்காய்ப்பூ, உப்பு, காயப்பொடி சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெயில் ஊற்றி, மிளகாய் வற்றலை காம்பு நுனி வெட்டி விதைகளைக் கொட்டி விட்டு பொடியாக வெட்டிக் காய்ந்த எண்ணெயில் போடவும்.மிளகாய் சிவந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த கம்பு மாவைச் சேர்த்துக் கிளறவும். நன்றாக வெந்து வதங்கி இறுகி வருகையில். அடுப்பை அணைத்து வாணலியைக் கீழே இறக்கி ஆற விடவும்.
லேசாக ஆறியதும் கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வேக வைக்கவும். நன்கு வந்ததும் எடுத்து ஹாட்பாக்சில் வைக்கவும்.
இந்த கம்புக் கொழுக்கட்டையோடு, காலை பிரேக்ஃபாஸ்ட்டுக்கு , மூங்கில் அரிசி சேர்த்தரைத்த உளுந்தங்களியும் , ஒரு ஆப்பிள் கலந்த கேரட் ஜூசும் தேனோடு சேர்த்து எடுத்துக் கொண்டால், நல்ல சத்தான கோடைக்கால உணவாகும்!
குழந்தைகளும் வித்தாயாசமாய்ச் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர்!
சிறு தானியங்களை குழந்தைதைகளுக்குப் அறிமுகப்படுத்துவது அவர்களது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
களிக்கு உளுந்தோடு, மூங்கில் அரிசியும் சேர்த்து அரைத்து மாவாக்கி கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து களி செய்வது உடல் ஆரோக்கியம் வலுப்பெறும்.

தேங்காய் பால்




தேங்காய் பால்


'உணவே மருந்து' என்பதை கடைப்பிடித்த தமிழர்களின் உணவில், தவறாமல் இடம் பிடித்திருந்த பானகம், தேங்காய்ப் பால்!

 சில ஆண்டுகளுக்கு முன் வரை, பல வீடுகளில், மாதம் ஒரு முறையாவது இதை தயாரித்து, பிள்ளைகளுக்கு கொடுக்கும் வழக்கம் இருந்தது.

நெஞ்சுச்சளி மற்றும் இருமலுக்கு நிவாரணமாகவும், மீண்டும் வராமல் தடுக்கவும் தேங்காய்ப் பால் தயாரித்து கொடுத்தனர் நம் முன்னோர்.

மேலும், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் விட்டமின்கள் சி, இ, பி1, பி3, பி5 மற்றும் பி6 ஆகிய சத்துக்கள் தேங்காயில் உள்ளன. எனவே தான், உணவில் எந்த வகையிலாவது, தேங்காய் இடம் பெறும்படி செய்தனர்.

இதன் முக்கியத்துவம் தெரிந்து, கோவை ஒண்டிப்புதூர் மற்றும் கணபதி பகுதிகளில் உள்ள டீக்கடைகளில், தேங்காய்ப்பால் விற்கின்றனர். எப்போது சென்றாலும், சுடச்சுட தேங்காய்ப் பால் பருகலாம்.

தேங்காய் துருவலில் இருந்து பால் எடுத்து, காய்ச்சி, வெல்லம், உளுத்தம் பருப்பு, சுக்கு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்தால், உடலுக்கு வலுவை கொடுக்கும் தேங்காய்ப் பால் தயார்!

இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள், டீ, காபிக்கு பதில், தேங்காய் பால் பருகிச் செல்கின்றனர். இது, வயிற்றை நிரப்புவதுடன், உடலுக்கும் பலத்தைக் கொடுப்பதால், தொழிலாளர்களுக்கு உற்ற பானமாக திகழ்கிறது.

கோவை பக்கம் போனால், தேங்காய்ப் பாலை தவறாமல் பருகி வாருங்கள்!'

எலும்பு சூப்


எலும்பு சூப்


*தேவையான பொருள்கள*்

எலும்புத் துண்டுகள் - கால் ‌கிலோ

மிளகு - 1 ஸ்பூன்
‌சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
வெங்காயம் - 2
வெண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சய்தூள் - அரை ஸ்பூன்


*செய்முறை*

முதலில் எலும்பு து‌ண்டுகளை ந‌ன்கு கழுவி அதனுடன் இஞ்சி,பூண்டு விழுது., மஞ்சள் தூள்,உப்பு ,மிளகு, ‌சீரகத்தை பொடி செய்து தேவையான அளவு த‌‌ண்‌ணீ‌ர் வை‌த்து வேக வைக்கவும். .

பாத்திரத்தில் வெண்ணெயை உருக்கி, அதில் சோம்பை போடவும். சோம்பு ‌சிவ‌ந்தது‌ம் அதில் வெங்காயத்தை போ‌ட்டு வத‌‌க்‌கி அ‌தி‌ல் எலு‌ம்பு‌ச் சா‌ற்றை ஊ‌ற்றவு‌ம்.

எலு‌ம்பு‌ச் சாறு ந‌ன்கு கொ‌தி‌த்து மணமாக வரு‌ம்போது கொ‌த்தும‌ல்‌லி, க‌றிவே‌‌ப்‌பிலை தழைகளை‌த் தூ‌வி இற‌க்கவு‌ம்.

கேரளா சிக்கன் வறுவல் | kerala chicken fry


கேரளா சிக்கன் வறுவல் | kerala chicken fry

*தேவையான பொருள்கள*்

சிக்கன் - அரை கிலோ
சோம்பு  -  1  ஸ்பூன்
காய்ந்த  மிளகாய் -  7
பூண்டு -  10 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 5 ஸ்பூன்

*செய்முறை*

முதலில் சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி  நன்கு கழுவி வைத்து கொள்ளவும்


பின்பு  மிக்ஸியில்  காய்நத  மிளகாய், சோம்பு , பூண்டு, உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.


கழுவி வைத்துள்ள சிக்கனுடன்   அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம்  ஊற வைக்க வேண்டும்.

பின்பு  கடாயை அடுப்பில் வைத்து,  தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து   நன்கு  பிரட்டி   1 டம்ளர்   தண்ணீர்   ஊற்றி   நன்கு   வேக  வைக்கவும்.

தண்ணீர்   முற்றிலும்   வற்றி   சிக்கன்   நன்கு  வெந்தவுடன்   இறக்கவும்.  கேரளா ஸ்டைல் சிக்கன்  வறுவல்   ரெடி

தக்காளி குழம்பு| thakkali kulambu





தக்காளி குழம்பு| thakkali kulambu


*தேவையானவை:*

நாட்டுத் தக்காளி- 4
  பச்சை மிளகாய் – 1
பூண்டு  - 4 பல்
 சீரகத்தூள் – ஒரு ஸ்பூ ன்
மிளகாய்த்தூள் –   2  ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால்  ஸ்பூன்
தனியாத்தூள் – 2  ஸ்பூன்
 தாளிக்க  - கடுகு, உளுத்தம்பருப்பு
பெரிய வெங்காயம் – 1
 கறிவேப்பிலை -  சிறிதளவு
 கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய்  -  3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

*செய்முறை:*

2 தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
2 தக்காளியை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
வெங்காயம் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை  தட்டி வைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத் தம் பருப்பு, கறிவேப்பிலை, பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.


அதனுடன்  மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.


 பச்சை வாசனை போனதும், சீரகத்தூள், அரை த்த தக்காளி விழுது  சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு,    நன்கு  கொதித்து  குழம்பு  கெட்டியாகி   எண் ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான தக்காளி குழம்பு ரெடி

செவ்வாய், 2 மே, 2017

கறி விருந்துக்கு செல்பவரகள் செம்ம கட்டு கட்ட சிறப்பான ஆலோசனைகள் !!*



கறி விருந்துக்கு செல்பவரகள் செம்ம கட்டு கட்ட சிறப்பான ஆலோசனைகள் !!*

கறிவிருந்துக்கு செல்லும் முதல்நாளே
 நம்மை தயார்படுத்தி கொள்ளவேன்டும்.

முதல் நாள் இரவு எளிதில் ஜீரனமாக கூடிய
இட்லி தோசை உணவுகளை உண்பது நல்லது. இல்லையெனில் அஜீரன கோளாறு ஏற்பட்டு காரியம் கெட்டுபோகும்.

விருந்துக்கு போகும்போது டைட்டான ஜீன்ஸ் பேன்டுகள், டைட்டான சர்டுகளை கட்டாயம் தவிர்க்கவேண்டும். தொள தொளவென இருக்கும் பேன்டுகள் காற்றோட்டமான சட்டைகளே சிறப்பு. ஃபுல் கட்டு கட்டிவிடுட்டு வரும்போது
லூசான சட்டைகள் முன்னோக்கி தள்ளிய தொப்பைகளை காட்டிகொடுக்காது ..

எந்த காரணத்தை கொண்டும்
முதல் பந்தியை
தவற விட்டு விடாதீர்கள்.
முதல் பந்தியில் மட்டுமே
அத்தனை ஐயிட்டங்கலும் கிடைக்கும்.

பந்தியில் அமரும் போது வயதான பெரியவர்கள் அல்லது சிறுவர்கள் இடையே அமர்வது சிறப்பு .
ஏனென்றால் அவர்கள்தான் மென்று சாப்பிட அதிக நேரம் எடுத்து கொள்வார்கள். இளைஞர்கள் சட்டென்று இடத்தை காலி செய்துவிடுவதால் தனியாக அமர்ந்து சாப்பிடும் சங்கடம் ஏற்படும்.

சப்ளையரை
தல , பாஸ். ஜீ என்று கெத்தான வார்த்தைகளால் அழைப்பது கூடுதல் லாபம்.

பறிமாறும் போது 'போதும் போதும்' என்ற வார்தையை கனீர் என்றும், 'சாப்பிட்டுட்டு வாங்கிகிறேன்' என்பதை சைலன்டாகவும் சொல்லவேன்டும் .

'ஏம்பா தாத்தவுக்கு கொஞ்சம் கறி வை' என்று சத்தமாக அழைத்து விட்டு, அருகில் வந்தவுடன் 'அப்டியே இங்கயும் கொஞ்சம் கவனிங்க பாஸ்னு' சைலன்டாக சொல்லவேண்டும்.

கறி வைத்தவுடன் ஆவேசமாக
லபக் லபக் என சாப்பிடகூடாது. திகட்ட கூடிய கொழுப்புகளையும், எலும்புகளையும் தனி தனியாக
நின்னு நிதானமாக பிரித்து மேயவேண்டும்.

சாப்பிட்ட பிறகு
வெதுவெதுப்பான சுடுநீரை குடித்தால் எளிதில் உணவு செரிமானமாகும்.

ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு:-



ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு:-

உணவே மருந்து..!

உணவு உண்ணும் முறை:

எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும்.

ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு:-

துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது.
இனிப்பு தசை வளர்க்கிறது.
புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது.
கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது.
கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது.
உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது.

உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.

சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பு. முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.



இனிப்பு:
மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும்.
பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.

புளிப்பு:
உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும்.
இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும்.

எலுமிச்சை, புளிச்ச கீரை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நாரத்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.

காரம்:
பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும்.
மிளகாய், மிளகு, வெங்காயம், பூண்டு, இஞ்சி, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.

கசப்பு:
பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.
பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.

உவர்ப்பு:
அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும்.
கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.

துவர்ப்பு:
உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும்.
வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.

இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசாயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.

ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும்.

உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது.

சனி, 29 ஏப்ரல், 2017

முலாம்பழ சர்பத் / MUSK MELON SARBATH.


முலாம்பழ சர்பத் / MUSK MELON SARBATH.


*தேவையான பொருட்கள் :*

முலாம்பழம்  –  1
சர்பத்  –  தேவைக்கு
எலுமிச்சை சாறு  –  1 மேஜைக்கரண்டி
கோல்டு வாட்டர்  –  தேவைக்கு

*செய்முறை :*

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

முலாம் பழத்தின் விதைகளை நீக்கிக் கொள்ளவும். அதன் சதைப் பகுதியை கரண்டியின் உதவியால் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்

அதனை நன்கு மசித்துக் கொள்ளவும்

அதனுடன் சர்பத் சேர்க்கவும்

எலுமிச்சை சாறு சேர்க்கவும்

கோல்டு வாட்டர் சேர்க்கவும்

நன்கு கலக்கவும் பின்பு பரிமாறவும்.

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

வெள்ளரிக்காய் தயிர் ஜுஸ்.


வெள்ளரிக்காய் தயிர் ஜுஸ்.


வெள்ளரிக்காய் – 50 கிராம் தயிர் – 100 மி.லி

மிக்ஸியில் அடித்து உப்பு, மிகப் பொடிதாக நறுக்கிய புதினா, குடமிளகாய் சேர்த்து ருசிக்கலாம்!

பாதாம் சர்பத்



பாதாம் சர்பத்.


*தேவையானவை :*

பாதாம்   - 150 கிராம்
கசகசா  - 60 கிராம்
சீனி        - 1/2 கிலோ
சிட்ரிக் ஆஸிட்  - 1 டீஸ்பூன்
ஏலக்காய்          - 20
கேவ்ரா எசன்ஸ்   - 5 துளிகள்
k.m.s    - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 11/2 லிட்டர்

*செய்முறை :*

•• ஏலக்காய்களை தோலை உரித்து விதைகளை மட்டும் தனியே எடுத்து பொடி செய்து கொள்ளவும்.

•• கசகசாவை 2 நாட்கள் ஊற வைக்கவும்.
ஒரு நாள் கசகசா ஊறியதும் அந்த தண்ணீரை எடுத்து விட்டு புதிய தண்ணீர் ஊற்றவும்.

•• இரண்டு நாள் நன்கு ஊறியதும் கசகசாவை நன்கு நைசாக அரைக்கவும்.

•• பாதாமை 12 மணி நேரம் ஊற வைத்து அதையும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

•• சீனியையும் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விட்டு அதில் சிட்ரிக் ஆஸிட் சேர்த்து எல்லாம் கரைந்ததும் இறக்கி வடிகட்டவும்.

•• வடிகட்டிய சிரப்பில் கசகசா விழுது, ஏலக்காய்ப்பொடி சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
இந்த சிரப்பை ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டவும். பின் பாதாம் விழுது, எசன்ஸ் சேர்க்கவும்.

•• கடைசியாக k.m.s பவுடரை 1 டீஸ்பூன் வெந்நீரில் கரைத்து சர்பத்தில் ஊற்றி நன்கு கலக்கவும்.

•• கடைசியாக ஸ்டெரிலைஸ் செய்த பாட்டில்களில் ஊற்றி மூடவும்.

தேங்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்



தேங்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்கள், காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ், பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றுகிறது.

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்குகிறது.

தேங்காய் தண்ணீரைக் தொடர்ந்து குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தி, உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.

தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக இருப்பதால், இதை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை மற்றும் வாய்வுத் தொல்லைகள் நீங்குவதை நன்கு உணரலாம்.

தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது. எனவே இதனை தினமும் குடித்தால், பசி கட்டுப்படுவதோடு, உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்கலாம்.

தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

கடுமையான தலைவலியை உணரும் போது, இந்த தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, உடலிற்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.

தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.

கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்


தேங்காய் தண்ணீரை 7 நாட்கள் குடித்தால் இப்படி ஒரு மாற்றம் நிகழுமா?
தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.
தேங்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்கள், காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ், பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றுகிறது.
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்குகிறது.
தேங்காய் தண்ணீரைக் தொடர்ந்து குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தி, உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.
தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக இருப்பதால், இதை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை மற்றும் வாய்வுத் தொல்லைகள் நீங்குவதை நன்கு உணரலாம்.
தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது. எனவே இதனை தினமும் குடித்தால், பசி கட்டுப்படுவதோடு, உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்கலாம்.
தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
கடுமையான தலைவலியை உணரும் போது, இந்த தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, உடலிற்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.
தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.
கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?


முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?

பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும்.

இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.

100 கிராம் முளை கட்டிய பயறில்,
30 கலோரிகள்
3 கிராம் புரதச்சத்து
6 கிராம் கார்போஹைட்ரேட்
2 கிராம் நார்ச்சத்து உள்ளது.

அதிக உடல் உழைப்பும், உடல் பலமும் தேவைப்படுபவர்கள் இந்த முளை கட்டியப் பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு குளுமையைக் கொடுப்பதால் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்.

வியாழன், 20 ஏப்ரல், 2017

பப்பாளி இலை ஜூஸ் குடிச்சிருக்கீங்களா?... இன்னைலேருந்து குடிங்க... என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?



பப்பாளி இலை ஜூஸ் குடிச்சிருக்கீங்களா?... இன்னைலேருந்து குடிங்க... என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?


அன்றாடம் நாம் சாப்பிடும் பழங்களில் இருக்கும் மருத்துவ நன்மைகளை விட அதன் இலை, பூ, பட்டை, வேர் இதுபோன்ற மற்ற பாகங்களிலும் அதிகமாக நிறைந்துள்ளது. அந்தவகையில் பப்பாளி இலையில் ஏராளமான விஷயங்கள் அடங்கியுள்ளன.

அந்த வகையில், பப்பாளி இலை முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்த இலையில் ஃபைட்டோ நியூண்ட்ரியண்டுகள், என்சைம் போன்ற நிறமிகளும், கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமச் சத்துக்களும் அதிகமாக உள்ளது.

எனவே பப்பாளி இலையில் ஜூஸ் செய்துக் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம். நமது உடம்பில் ஓடும் ரத்தத்தில், இரத்தத் தட்டுகள் குறைந்தால், அது பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். இதனால் பப்பாளி இலை ஜூஸ் குடித்து வந்தால், ரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலாம்.

பப்பாளி இலையின் சாறு நமது உடம்பில் உள்ள கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

நமது உடம்பில் உள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களிடம் எதிர்த்து போராடி, மலேரியா, டெங்குக் காய்ச்சல், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

அன்றாடம் நாம் பப்பாளி இலைச் சாற்றினைக் குடித்து வந்தால், அது நமது உடம்பின் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்து, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனை, ஒவ்வாமை, அலர்ஜி போன்ற சருமப் பிரச்சனை, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.

எப்பவுமில்லாம உங்க சருமம் புதுசா ஜொலிக்கனுமா?


எப்பவுமில்லாம உங்க சருமம் புதுசா ஜொலிக்கனுமா?

 இந்த ஒரு ரெசிபி ட்ரை பண்ணுங்க!! உங்கள் சருமம் சுருக்கமில்லாமல், மதழும்புகள், கரும்புள்ளி போன்ற சருமம் பிரச்சனைகள் இல்லாமல் இருக்க, இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயன்படுத்திப் பாருங்கள்.  சருமம் எப்போதும் பளிச்சென்று இருக்காதுதான். பருவ மாற்றம், வயது, உபயோகிக்கும் அழகு பொருட்கள் என ப்லவகைகளில் சருமம் பாதிக்கப்படும்.ஆனால் நீங்கள் உங்கள் இழந்த சருமத்தை மீட்டெடுக்க அற்புதமான இயற்கை வழிகள் உண்டு. அம்மாதிரியான ஒரு குறிப்புதான் இது. உபயோகித்துப் பாருங்கள்.

 *தேவையானவை :*
 எலுமிச்சை சாறு - அரை ஸ்பூன்

 முட்டையின் வெள்ளைக் கரு- 1

 தேங்காய் எண்ணெய் - 1 1/2
ஸ்பூன

தேன் - அரை ஸ்பூன்

*செய்முறை :* முதலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக பிரித்தெடுத்து நன்றாக நுரைக்கும்படி அடித்துக் கொள்ளுங்கள்.
 அதில் தேன், எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை மேலே குறிப்பிட்ட அளவு கலந்து கொண்டால் ஃபேஸ் மாஸ்க் ரெடி. செய்முறை : இந்த கலவையை உபயோகப்படுத்துவதற்கு முன் நீங்கள் முக்கியமாய் செய்ய வேண்டியது, முகத்தை கழுவுவது. முகத்தை கழுவி சுத்தமான துணியில் லேசாக ஒத்தி எடுக்க வேண்டும். செய்முறை : பின்னர் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி அரை மணி நேரம் காய வைக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். முகம் மிகவும் மிருதுவாகும். சுருக்கங்கள் மறையும். முகம் பளபளப்பாக ஜொலிப்பதை கண்கூட உணர்வீர்கள் 

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

சரியான பாத்திரத்தில் தான் சமைக்கிறீர்களா....?



சரியான பாத்திரத்தில் தான் சமைக்கிறீர்களா....?

● தினமும் சாப்பிடும் உணவு, சரிவிகிதத்தில் இருக்கிறதா, சத்தானதா என்று யோசிக்கும் நாம், அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள் சரியானவைதானா என்று யோசிப்பது இல்லை. அவசரகதியில் இதற்கெல்லாம் ஏது நேரம் என்று, சமைக்கவும் சாப்பிடவும் தொடங்குகிறோம். சமையலறையில் *குக்கரில் தொடங்கி, கடாய், தவா, பால் பாத்திரம்* எனச் நான் ஸ்டிக் பொருட்கள் நிறைந்துகிடக்கின்றன. *மண் பானை, இரும்பு, ஈயச்செம்பு, பித்தளை சாமான்களை* இனி அருங்காட்சியகத்தில்தான் பார்க்க முடியும் என்ற நிலை.

● சமையலுக்குப் பயன்படுத்தப்படும் நவீனமான பாத்திரங்களில் ஒளிந்து இருக்கும் ஆபத்துக்கள் என்ன, எந்த வகைப் பாத்திரங்கள் பாதுகாப்பான சமையலுக்குத் தேவை, அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம்?

🍵 *மண் பாத்திரம்:* 🍵
மண்பாத்திரங்களில் சமைக்கும்போது உணவின் மீது வெப்பம் மெதுவாக, ஒரே சீராகப் பரவுகிறது. மேலும், மண்பாத்திரங்களில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவியும், காற்றும் உணவில் ஊடுருவி, சரியான முறையில் சமைக்க உதவுகின்றன. இதனால், அதில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப்போன்ற தன்மையைப் பெறுகிறது. இதனால், சமைத்த உணவு பல மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். மண் பாத்திரத்தில் சமைக்கும்போது அதிக எண்ணெய் பயன்படுத்தத் தேவை இல்லை. உணவில் உள்ள  அமிலத்தன்மையைச் சமப்படுத்தும். உப்பு, புளிப்புச் சுவையுள்ள உணவுகளைச் சமைக்கும் போது, தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது.  மண் பாத்திரங்களை, அவ்வப்போது கழுவி வெயிலில் காயவைத்துப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

🍵 *இரும்புப் பாத்திரம்:* 🍵
பல காலமாக சமையல் பாத்திரங்கள் செய்யப் பயன்படுத்தப்பட்டு வரும் இரும்பு, சமையலுக்கு ஏற்றது. இதில், சமைக்கும்போது வெப்பம் சீராகப் பரவுவதோடு, நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும். கொஞ்சம் இரும்புச் சத்து உணவோடு கலந்து உடலில் சேரும். ரத்தசோகையைக் குணப்படுத்தும்.  ஆனால், துவர்ப்புச் சுவையுடைய பொருட்களை இரும்புக் கடாயில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். இரும்பு, துவர்ப்புச் சுவையுடன் வினை புரிந்து உணவுப்பொருள் கருப்பு நிறமாக மாறுவதுடன், சுவையும் வேறுபடும். விரைவில் கெட்டு விடவும் வாய்ப்புகள் அதிகம்.  இரும்புப் பாத்திரத்தில் சமைக்கலாமே தவிர, அதில் நீண்ட நேரம் உணவை வைக்கக் கூடாது. சமைத்து முடித்தவுடன் அதை வேறு பாத்திரத்துக்கு மாற்றிவிடுவது நல்லது.

🍵 *வெண்கலப் பாத்திரம்:* 🍵
வெண்கலப் பாத்திரத்தில் சமைத்து உண்டால், உடல் சோர்வு நீங்கி, நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருப்பதை உணரலாம். இதில் சமைத்த பொருட்கள் சீக்கிரத்தில் கெட்டுப்போகாது.  ஆனால் வெண்கலப் பாத்திரத்தை சரியாகக் கழுவி, வெயிலில் காய வைத்துதான் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் நாம் அடுத்த முறை சமைக்கும்போது களிம்புப் படலம் உண்டாகி உணவின் தன்மையே நச்சாக மாறிவிடும். இதனால்தான் வெண்கலப் பானையில் வைத்த பொங்கல், சில சமயங்களில் நிறம் மாறிவிடுவதைக் காணலாம்.

🍵 *செம்புப் பாத்திரம்:* 🍵
செம்புப் பாத்திரத்தில் சமைத்த உணவுக்குப் பித்த நோய், கண் நோய், சூதக நோய், சுவாசக் கோளாறுகள் போன்ற அனைத்தையும் குணமாக்கும் ஆற்றல் உண்டு. செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை வைத்திருந்தால் அதில் உள்ள நுண்ணுயிரிகள் எல்லாம் நீங்கிவிடும்.

🍵 *ஈயப் பாத்திரம்:* 🍵
ஈயம், நம் உடலுக்கு உகந்ததல்ல. ஈயப் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவை உட்கொண்டால் வயிறு தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உண்டு. சளி, இருமல் இருப்பவர்கள் ஈயப் பாத்திரத்தில் சமைத்ததைத் தொடர்ந்து சாப்பிட்டால், வயிறு உப்புசம் ஏற்படலாம். ஈயத்துக்குப் பதிலாக வெள்ளீயப் பாத்திரங்கள் பயன்படுத்தலாம். நாம் காலங்காலமாகப் பயன்படுத்தி வந்த‌ ஈயச்சொம்பு என்பது வெள்ளீயத்தினால் செய்யப்பட்டது. இந்தக் கலவைதான், ஈயச்சொம்பில் சமைக்கும் ரசம் நல்ல மணத்துடன் இருப்பதற்குக் காரணம்.

🍵 *பீங்கான் பாத்திரம்:* 🍵
பீங்கானும் காலங்காலமாகப் பயன்பாட்டில் இருப்பதுதான். பீங்கான் சமைப்பதற்கு ஏற்றது என்றாலும், பீங்கான் பாத்திரம் உயர்தரத்தில் ஆனதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காரணம், மலிவு விலை பீங்கான்கள், அவற்றைத் தயாரிக்கத் தேவைப்படும் உயர்ந்தபட்சக் கொதிநிலையில் உருவாக்கப்படுவது இல்லை. இத்தகைய மலிவு விலை பீங்கான்களை, அலங்காரப் பொருட்களாகப் பயன்படுத்தலாம். ஆனால் அதில் சமைத்தால் உணவில் நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் இருக்கிறது.

🍵 *அலுமினியப் பாத்திரம்:* 🍵
ஒவ்வொரு முறையும் அலுமினியப் பாத்திரத்தைக் கழுவும்போது, அதில் கருப்பாக ஒரு கலவை படியும். அலுமினியம்தான் அது.  இந்தக் கலவை உணவில் கலந்து, உடலிலும் சேர்ந்து மூளையில் உள்ள நியூரான்களை அழிக்கும் ஆபத்து ஏற்படலாம். மேலும், தொடர்ந்து பயன்படுத்தும்போது ஆஸ்துமா, காசநோய் போன்ற சுவாசக் கோறுகளும் அல்சர் பாதிப்பும் ஏற்படலாம். அலுமினியம் ஒரு கடின உலோகமாக ((Heavy metal) இருப்பதால்,  அமிலத்தன்மை கொண்ட தக்காளி போன்ற உணவுப் பொருட்களுடன் வினைபுரிந்து, உடலுக்குள் எளிதாகச் சென்று, தசை மற்றும் சிறுநீரகங்களில் படிய ஆரம்பிக்கும். அலுமினியத்தைத் தவிர்க்க முடியாதவர்கள் சமையல் வேலை முடிந்தவுடன் உணவை வேறு பாத்திரத்துக்கு மாற்றி விடுவது நல்லது.

🍵 *நான் ஸ்டிக் பாத்திரம்:* 🍵
சமைக்க எளிமையானதாக இருந்தாலும், இதைச் சூடுபடுத்தும்போது வெளிவரும் 'பர்ஃப்ளூரினேட்டட் காம்பவுண்ட்’ (Perfluorinated compounds) என்னும் நச்சுப் பொருள் பல்வேறு விதமான உடல் நலக் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பதைத் தவிர்க்க
முடியாது என்பவர்கள், அதனை மிதமான சூட்டில் சமைப்பது நல்லது.