வியாழன், 2 ஏப்ரல், 2020

மாலை நேர உணவில் கீரை வகைகளை வித்தியாசமான சிற்றுண்டியாக செய்யலாம்

மாலை நேர உணவில் கீரை வகைகளை வித்தியாசமான சிற்றுண்டியாக செய்யலாம்


அரைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். கோதுமை மாவை சப்பாத்தி பதத்தில் பிசைந்து கொள்ளவும். கீரையில் நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, கரம் மசாலா உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து மாவை உருண்டையாக்கி அதனுள் சிறிதளவு வைத்து பொறித்து எடுக்கவும்.
தண்டங்கீரையை நன்றாக சுத்தம் செய்து வேக வைத்த உருளைக்கிழங்கு மிளகாய் தூள் , மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி உருண்டையாக்கி கைகளில் தட்டி பிரட் தூளில் பிறட்டி சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
முருங்கைக்கீரையை கேப்பை மாவு, பெரிய வெங்காயம், தக்காளி, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பிசைந்து சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக