பாதாம் சர்பத்.
*தேவையானவை :*
பாதாம் - 150 கிராம்
கசகசா - 60 கிராம்
சீனி - 1/2 கிலோ
சிட்ரிக் ஆஸிட் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 20
கேவ்ரா எசன்ஸ் - 5 துளிகள்
k.m.s - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 11/2 லிட்டர்
*செய்முறை :*
•• ஏலக்காய்களை தோலை உரித்து விதைகளை மட்டும் தனியே எடுத்து பொடி செய்து கொள்ளவும்.
•• கசகசாவை 2 நாட்கள் ஊற வைக்கவும்.
ஒரு நாள் கசகசா ஊறியதும் அந்த தண்ணீரை எடுத்து விட்டு புதிய தண்ணீர் ஊற்றவும்.
•• இரண்டு நாள் நன்கு ஊறியதும் கசகசாவை நன்கு நைசாக அரைக்கவும்.
•• பாதாமை 12 மணி நேரம் ஊற வைத்து அதையும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
•• சீனியையும் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விட்டு அதில் சிட்ரிக் ஆஸிட் சேர்த்து எல்லாம் கரைந்ததும் இறக்கி வடிகட்டவும்.
•• வடிகட்டிய சிரப்பில் கசகசா விழுது, ஏலக்காய்ப்பொடி சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
இந்த சிரப்பை ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டவும். பின் பாதாம் விழுது, எசன்ஸ் சேர்க்கவும்.
•• கடைசியாக k.m.s பவுடரை 1 டீஸ்பூன் வெந்நீரில் கரைத்து சர்பத்தில் ஊற்றி நன்கு கலக்கவும்.
•• கடைசியாக ஸ்டெரிலைஸ் செய்த பாட்டில்களில் ஊற்றி மூடவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக