வெள்ளி, 14 ஏப்ரல், 2017

உருளைக்கிழங்கு போண்டா.



உருளைக்கிழங்கு போண்டா.


*தேவையானவை :*

உருளைக்கிழங்கு – 1 கிலோ,
பச்சை மிளகாய் – 10, கறிவேப்பிலை,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
கடுகு – சிறிதளவு,
உளுந்து – 1 மேசைக்கரண்டி,
தேங்காய் எண்ணெய்- 3 மேசைக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயப் பவுடர் – 1/2 மேசைக்கரண்டி,
கடலை மாவு – 250 கிராம்,
மிளகாய்த் தூள் – 1 மேசைக்கரண்டி,
மஞ்சள் தூள் – 1/2 மேசைக்கரண்டி,
தேங்காய் எண்ணெய் – 250 கிராம் (வறுக்க).

*செய்முறை :*

•• உருளைக்கிழங்கை பிரஷர் குக்கரில் பத்து நிமிடங்கள் வேகவைத்துக் கொள்ளவும். ஆறியதும், தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

•• கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயப் பவுடர் சேர்த்து தாளிக்கவும்.

•• பிறகு அதில் வேகவைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு வதக்கவும்.

•• ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து பத்து நிமிடங்கள் வைக்கவும்.

•• கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், உருளைக் கிழங்கு கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி மாவில் முக்கி எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக