வித விதமான சூப் வகைகள்
முருங்கைகீரை சூப்
தேவையான பொருள்கள்:
முருங்கைகீரை - 2 கப்
வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு
செய்முறை
முதலில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்ணீரில் இறங்கியிருக்கும்.
அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.
(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டடும்
மணத்தக்காளி சூப்
தேவையான பொருட்கள் :
மணத்தக்காளி - ஒரு கட்டு
வெங்காயம் - 1
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
மிளகு தூள் - சிறிது
தண்ணீர் - 2 டம்பளர்
எலுமிச்சை - அரை மூடி
நல்லெண்ணெய் - தேவையான அளவு
பெருங்காய தூள் - தேவையான அளவு
உளுந்து - தாளிக்க
செய்முறை :
மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து இலையை மட்டும் நறுக்கி வைக்கவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து, மிளகாய், பெருங்காய தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு போட்டு 2 நிமிடம் வதக்கவும். அடுத்து அதில் மணத்தக்காளி கீரையை போட்டு வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். 2 கப் தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து அதை அரைத்த கீரை கலவையில் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலக்கி இறக்கவும். இறக்கியவுடன் எலுமிச்சை சாறு 5 சொட்டு விட்டு கலக்கி பரிமாறவும். சுவையான சத்தான மணத்தக்காளி சூப் தயார்.
தூதுவளை இலை சூப்.
தேவையான பொருட்கள்:
தூதுவளை இலை - 1 கப்
புளி - சிறிய எலுமிச்சைப்பழ அளவு
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
கொத்தமல்லி - அரை ஸ்பூன்
பூண்டு - 5 பல்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 ஸ்பூன்
மல்லி இலை , கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில், ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து தண்ணியை வடிகட்டி வைக்க வேண்டும்.
பின்னர், மிக்ஸியில் சீரகம், மிளகு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை அரைத்து அதனுடன் புளிதண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர், அதில் தூதுவளை கீரை மற்றும் பூண்டை அரைத்து கலந்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இறுதியாக, ஒரு கடாயில் எண்ணெய் அதில் கடுகை போட்டு தாளித்து, சூப்பில் கொட்டவும்
இதை சூப்பாகவும் குடிக்கலாம் அல்லது ரசமாக சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.
தேவைப்பட்டால் 1 தக்காளியை மசித்து விட்டுகொள்ளவும். ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக