சனி, 11 மார்ச், 2017

சத்தான கம்பு சேமியா புலாவ் தேவையான பொருட்கள்



சத்தான கம்பு சேமியா புலாவ் தேவையான பொருட்கள்

  கம்பு சேமியா - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1  இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கிராம்பு - 5
கறிவேப்பிலை - சிறிதளவு
பட்டை - 1 இன்ச் அளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கேரட் - 100 கிராம்
ஃப்ரஷ் பட்டாணி - 50 கிராம்
கொத்தமல்லி - சிறிதளவு

  செய்முறை :
  * தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  * சேமியாவை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.

  * கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயத் போட்டு வதக்கவும்.

  * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  * இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கறிவேப்பிலை, மிளகு சேர்த்து வதக்கவும்.

  * தக்காளி நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு இதனைத் தனியே எடுத்து வைக்கவும்.

  * கடாயில் மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்து, சுமார் 5 கப் தண்ணீர், அதனுடன் போதுமான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.   * தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சேமியாவைச் சேர்த்து வேக விடவும். வெந்த சேமியா ஒன்றோடு ஒன்றாக ஒட்டக்கூடாது, உடையவும் கூடாது. சேமியா வெந்தவுடன் உதிர்த்து வைக்கவும்.

  * வதக்கிய கலவையுடன் சேமியாவைச் சேர்த்து நன்கு பிரட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

  * சுவையான கம்பு சேமியா புலாவ் தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக