வெங்காயத்தாள் கூட்டு
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
வெங்காயத்தாள் 1 கட்டு (நறுக்கியது)
பாசிப்பருப்பு 50 கிராம்
துவரம்பருப்பு 100 கிராம்
சாம்பார் பொடி அரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள்பொடி அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் 3
வெங்காயம் கால் கப்
உப்பு தேவைக்கேற்ப
பால் அரை கப்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :
துவரம்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் மஞ்சள்பொடி சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பின் அதில் வேகவைத்த பருப்பை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதில் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கொதிக்கவிடவும். வெங்காயத்தாள் வெந்தவுடன் பால் சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். இப்போது சூடான வெங்காயத்தாள் கூட்டு ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து கூட்டுடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
வெங்காயத்தாள் முட்டை பொரியல்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
வெங்காயத்தாள் 1 கட்டு
சின்ன வெங்காயம் 10
வரமிளகாய் 4
கடுகு அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்
முட்டை 1
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, உப்பு, நறுக்கிய வெங்காயத்தாளைச் சேர்க்கவும்.
வெங்காயத்தாள் சில நிமிடங்களிலேயே வதங்கிவிடும். பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறிவிடவும். முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சுடுசாதத்தில் அப்படியே பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். சப்பாத்திக்குத் தொட்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
கறிவேப்பிலை சாதம்
தேவையான பொருட்கள்:
பொருள் - அளவு
கறிவேப்பிலை அரை கட்டு
சாதம்2 கப்
நெய்2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம்10 (நறுக்கியது)
பூண்டு பல் 10
வரமிளகாய்4
உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
சீரகம்கால் டீஸ்பூன்
கடுகுஅரை டீஸ்பூன்
உப்புதேவைக்கேற்ப
முந்திரி10
பெருங்காயத்தூள்ஒரு சிட்டிகை
எண்ணெய்தேவைக்கேற்ப
செய்முறை :
கடாயில் நெய் விட்டு முந்திரி வறுத்துக்கொள்ளவும்.
அதே நெய்யில் பூண்டு, வரமிளகாய், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இவை ஆறியதும் கொரகொரப்பாக அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
அதன்பின், கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கடுகு, பெருங்காயதூள் சேர்த்து தாளிக்கவும். பின் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின் சாதத்தை கொட்டி கிளறி, அதில் அரைத்து வைத்துள்ள பொடியை தூவி ஒரு சேர கிளறவும். பின் அதில் முந்திரி சேர்த்து இறக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த சாதத்தை தொக்கு வகைகளுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
கறிவேப்பிலை சட்னி
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
கறிவேப்பிலை 1 கட்டு
சின்ன வெங்காயம் 15
தக்காளி 1
பச்சை மிளகாய் 2
கடலைப்பருப்பு அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
தேங்காய் துருவல் கால் கப்
பூண்டு பல் 4
இஞ்சி 1 டீஸ்பூன் (நறுக்கியது)
உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
முதலில் வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு கறிவேப்பிலையை நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெயைவிட்டு கடலைபருப்பையும் உளுத்தம் பருப்பையும் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
பிறகு அதில் வெங்காயத்தைக் கொட்டி சிவக்க வதக்கவும். அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் புளியைச் சேர்க்கவும்.
பின்னர் இறக்கிவைத்து தேங்காய் துருவலைச் சேர்த்து ஆறியதும் கெட்டியாக அரைக்கவும்.
பின், தாளிக்கும் பொருள்களைக் கொண்டு தாளிக்கவும். இப்போது சுவையான கறிவேப்பிலை சட்னி தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை இட்லி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக