ஸ்பெஷல் வடை.
*தேவையானவை :*
துவரம்பருப்பு – அரை கப், கடலைப்பருப்பு – கால் கப், பச்சரிசி – 25 கிராம், முழு உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
முந்திரிப்பருப்பு – 10,
காய்ந்த மிளகாய் – 5, தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை – சிறிதளவு,
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு (தோல் சீவவும்),
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
*செய்முறை :*
•• துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு, அரிசி, முழு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை அலசி, ஒன்றுசேர்த்து நீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
•• பிறகு நீரை வடித்து, தோல் சீவிய இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
•• இதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிசைந்து, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக