திங்கள், 13 மார்ச், 2017

பேபி கார்ன் மசாலா



பேபி கார்ன் மசாலா.


*என்னென்ன தேவை?*

பேபி கார்ன் - 1 கப்
ப்ரஷ் கிரீம் - 1.5 தேக்கரண்டி
பால் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - 2 தேக்கரண்டி (நறுக்கியது)
கசூரி மேதி - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான

*அரைக்க...*

பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 4 பல்
எண்ணெய் - 1 தேக்கரண்டி

*எப்படிச் செய்வது?*

•• பேபி கார்னை எடுத்து ஓரங்களை வெட்டி, குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். 1 விசில் வந்த பின் அடுப்பை அணைக்கவும்.

•• கடாயில் எண்ணெய் விட்டு வெட்டி வைத்த பெரிய வெங்காயம், தக்காளி, பூண்டு, சேர்த்து பச்சை வாசம் போகும் வரை சமைக்கவும். பின் அவற்றை ஜாரில் எடுத்து மசித்து வைக்கவும்.

•• கடாயில் எண்ணெய், வெண்ணெய் 1 தேக்கரண்டி விட்டு சீரகம், இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

•• பின் அரைத்து வைத்த விழுது, காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி ப்ரஷ் கிரீம் சேர்த்து கலந்து, பாலை கிரேவி பதம் வரும் வரை சிறிது சிறிதாக ஊற்றவும்.

•• பின்னர் அடுப்பை சிம்மில் 1 நிமிடம் வைக்கவும். இப்போது வேக வைத்த பேபி கார்னை சேர்த்து 3 நிமிடங்கள் கழித்து கசூரி மேதி, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக