புதன், 29 மார்ச், 2017

கடலைப்பருப்பு பணியாரம்



கடலைப்பருப்பு பணியாரம்.


*தேவையானவை :*

புளிப்பில்லாத மாவு – ஒரு கப்
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
வெங்காயம் – ஒன்று
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப

*செய்முறை :*

•• வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

•• கடலைப்பருப்பை 10 நிமிடம் ஊற வைக்கவும்..
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலையை வதக்கி இறக்கவும்.

•• அதில் சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும்.

•• மாவில் ஊற வைத்த கடலை பருப்பு, வதக்கிய வெங்காயம் சேர்த்து உப்பு சரிபார்த்து கலக்கி கொள்ளவும்.

•• பணியார சட்டியை அடுப்பில் வைத்து மாவை ஒரு டம்ளரில் ஊற்றி கொள்ளவும்.
சட்டியில் எண்ணெய் விட்டு டம்ளரில் இருக்கும் மாவை பணயாரங்களாக குழியில் முக்கால் குழி வரை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு மூடி வேக விடவும்.

•• பாதி வெந்ததும் திருப்பி போட்டு சிறிது சிவக்க வேக விட்டு எடுக்கவும்..

சுவையான கடலைப்பருப்பு பணியாரம் தயார்.
தேங்காய் சட்னி ,கார சட்னியுடன் பரிமாறலாம்.

செவ்வாய், 28 மார்ச், 2017

ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு..



ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் இன்ஸ்டன்ட்

இட்லி மாவு..


காலை உணவுக்கு சிறந்த, ஆரோக்கிய உணவு இட்லி. இதற்கு காரணம் இதில் எண்ணெய் கலப்பு இல்லை மற்றும் நீராவி மூலம் சமைக்கும் முறை தான். இதனால் செரிமான கோளாறோ, கொலஸ்ட்ரால் பிரச்சனையோ ஏற்படாது என்பதால் தான் இட்லி சிறந்த காலை உணவு என கூறப்படுகிறது.

ஆனால், இன்று நேரமின்மை மற்றும் சோம்பேறித்தனம் போன்ற காரணத்தால் நாம் இட்லி, தோசைக்கு பயன்படுத்தும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு நமது ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கிறது என்பதை அறியாமலேயே நாம் அதை தினந்தோறும் பயன்படுத்தி வருகிறோம்...

முன்பெல்லாம் ஆட்டாங்கல்லில் தான் மாவு ஆட்டும் பழக்கம் இருந்து வந்தது. கிரைண்டர் வந்த பின் ஆட்டாங்கல் வீட்டில் காட்சி பொருளாகி போனது. பல வீடுகளில் அது வீட்டின் பின்புறத்தில் குப்பையாக தான் கிடைக்கிறது.

ஆட்டாங்கல்லில் மாவாட்டும் முன்னரும், மாவாட்டிய பிறகும் சுத்தமாக கழுவும் பழக்கம் இருந்தது. ஆனால், கடைகளில் விற்க அவர்கள் பயன்படுத்தும் பெரிய கிரைண்டர்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பது யாருக்கு தெரியும்?

மாவு ஆட்டும் போது, அதன் பிறகு கிரைண்டரை கழுவும் போதும் சுத்தமான நீரை பயன்படுத்த வேண்டும். இல்லையேல் ஈகோலி எனும் பாக்டீரியா தாக்கம் அதிகளவில் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இது மாவாட்டும் போது இட்லி, தோசை மாவில் அடைக்கலம் புகுந்துவிடுகிறது.

இந்த ஈகோலி பாக்டீரியா தாக்கத்தால் நாள்ப்பட்ட வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, உடல் வறட்சி, வாந்தி, மயக்கம், இரைப்பை நோய், தலைசுற்றல் போன்ற உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

நீங்கள் எண்ணலாம், தினமும் இட்லி, தோசை தான் சாப்பிடுகிறோம்? பிறகு எப்படி உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று... இதற்கு எல்லாம் காரணம் நீங்கள் வெளி கடைகளில் வாங்கும் இட்லி மாவு தான். ஈகோலி எனும் பாக்டீரியா நீங்கள் மாவை வேக வைத்தாலும் கூட முழுமையாக அழிவதில்லை என்பது தான் சோகமே.

கடைகளில் வாங்கும் மாவினால் தான் இந்த பிரச்சனைகள் என்றால், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு நாம் வாங்கும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு அதுக்கும் மேல ராகம்.

கடைகளில் நாம் வாங்குகிற மாவு பாக்கெட்டுகள் பல விதங்களிலும் சந்தேகத்துக்குரியவையே.முதலாவதாக, அரிசியின் தரத்திலேயே கடைக்காரர்கள் காம்ப்ரமைஸ் செய்துகொள்ள வாய்ப்பு உண்டு. அரிசியில் கல் இருந்தாலோ, புழு இருந்தாலோ நீக்கிவிட வேண்டும்... அரிசியை சுத்தமாகக் கழுவ வேண்டும். கிலோ கணக்கில் அரிசியைக் கொண்டு மாவு அரைக்கிறவர்கள் இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருக்க நிறைய வாய்ப்புண்டு. இதேபோல, உளுத்தம்பருப்பிலும் தரம் குறைந்ததைப் பயன்படுத்தலாம்.

முக்கியமாக எந்த அளவு சுகாதாரமான தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள், எந்த மாதிரியான இடங்களில் தயாரிக்கிறார்கள், மாவு அரைக்கிற பாத்திரங்களின் சுத்தத்தைத் தொடர்ந்து பராமரிக்கிறார்களா என்பதும் கேள்விக்கு உரியதுதான். வீட்டில் மாவு அரைத்த பிறகு கிரைண்டரை கழுவி காய வைத்த பிறகுதான், அடுத்த முறை பயன்படுத்துவோம். ஆனால், அவர்கள் தினமும் பயன்படுத்துவதால் முறைப்படி காய வைத்த பிறகு மாவு அரைப்பதற்கும் வாய்ப்பு குறைவு.

இன்ஸ்டன்ட் இட்லி மாவு சீக்கிரம் கேட்டுவிடக் கூடாது என கால்சியம் சிலிகேட் சேர்க்கின்றனர். இதனால் மாவு சீக்கிரம் கெடாது, புளித்து போகாது. ஆனால், இதன் காரணத்தால் உங்கள் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். இதை தொடர்ந்து அஜீரண கோளாறுகள், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்றவை ஏற்படும்.

காசுக் கொடுத்து உடல்நலக் கோளாறுகள், ஆரோக்கியமின்மை போன்றவற்றை விலைக்கு வாங்க வேண்டுமா? அரை மணிநேரம் செலவிட்டால் இட்லி மாவு வீட்டிலேயே அரைக்கலாம். நீங்கள் பாக்கெட்டில் வாங்கும் அனைத்துமே உடல் நலத்திற்கு கேடு தான் விளைவிக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் சுரைக்காய் ஜூஸ்...



உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் சுரைக்காய் ஜூஸ்...


தேவையான பொருட்கள் :

சுரைக்காய் - 1

மோர் - 1 கப்

எலுமிச்சை பழம் - 1

மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :

* சுரைக்காய் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கியோ அல்லது துருவிக் கொள்ளவும்.

* எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

* அடுப்பில் ஒரு கடாயை வைத்து சுரைக்காயைப் போட்டு லேசாக வதக்கி ஆற வைத்து கொள்ளவும். ( எண்ணெய் ஊற்றக் கூடாது)

* வதக்கிய சுரைக்காயை மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

* வடிகட்டிய ஜூஸில் மோர், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு, ஐஸ்கட்டி சேர்த்து நன்றாக கலந்து பருகலாம்.

* சுரைக்காய் ஜூஸ் ரெடி!

* உடலில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைக்கும் சக்தி கொண்டது சுரைக்காய் ஜூஸ்.

கோடையில் வெயில், வெக்கை, வியர்வை... விரட்ட துணைநிற்கும் உணவுகள்...




கோடையில் வெயில், வெக்கை, வியர்வை... விரட்ட துணைநிற்கும் உணவுகள்...

*நம் முன்னோர்கள், ஒரு வருடத்தை உத்ராயணக் காலம் (தை முதல் ஆனி வரை) தட்சணாயன காலம் (ஆடி முதல் தை வரை) என இரண்டு பிரிவுகளாகப் பிரித்து வைத்துள்ளனர். தை மாதத்தில் சூரியன் தனது பாதையின் தெற்குப் பகுதியில் இருந்து வடக்குப் பகுதியில் நுழையும் காலத்தை உத்ராயணக் காலம் என்று அழைப்பார்கள். சூரிய வெப்பத்தின் தாக்கம் கொஞ்சம்கொஞ்சமாக அதிகமாகி, பங்குனி, சித்திரை மாதங்களில் மிகவும் அதிகமாக இருக்கும்.*

*சூரியன் தன் கதிர்க்கரங்களை நேரடியாக நீட்டும் காலம் வெயில் காலம். கோடையில் கொளுத்தும் அக்னி நட்சத்திர வெயிலின் வெப்பம் நம் தோல் மற்றும் உடல் உள்ளுறுப்புகளில் கூடப் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.*

*உடல் வெப்பத்தைக் குறைக்க, தோலின் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றது. உடல் வெப்பம் என்பது ஒரு நோயல்ல. ஆனால், இதைக் கவனிக்காமல் போனால், தலைவலி, வாந்தி, தசைப்பிடிப்பு, அதீத வியர்வை போன்றவற்றால் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, வெயில் காலத்துக்கு ஏற்ற உணவுகளை நாம் தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.*

*உடலின் வெப்பம் அதிகரிக்கும்போது, உடலில் உள்ள நீர்த்தன்மைதான் முதலில் வற்றுகிறது. இதுதான் எல்லா அசௌகரியங்களுக்கும் நம்மை இட்டுச்செல்கின்றது. நமது உடலின் வெப்பத்தன்மையை நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் மூலம் சரிசெய்யலாம்.


*உடல் வெப்பத்தைக் குறைக்கும் உணவுகள்... *

*மண் பானை குடிநீர் :*

*இதை அருந்தினால், உடல் வேகமாக நீரேற்றம் கொள்ளும். இதனால் ரத்தம் தடையின்றி ரத்தக்குழாய்களில் பாயும். நமக்குச் சோர்வு நீங்கி சுறுசுறுப்புப் பெருகும்.*

*இளநீர் :*

*இளநீரைப் போன்று சிறந்த எலக்ட்ரோலைட் வேறேதுவுமில்லை. இதில் இருக்கும் குளுக்கோஸ் நமக்கு உடனடி எனர்ஜியை அளிக்கின்றது.*

*லெமன் ஜூஸ் :*

*தினமும் லெமன் ஜூஸ் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. வெப்பம் தொடர்பான அசௌகரியங்களைப் போக்கி நம் உடலைக் குளிர்வித்து உற்சாகமடையச் செய்கிறது. கூடவே சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகின்றது. ஒருநாளைக்கு இரண்டு கிளாஸ் வரை அருந்தலாம்.*

*புதினா :*

*சுத்தம் செய்த புதினாவை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் 15 முதல் 20 நிமிடம் கொதிக்கவைத்து குடித்தால், உடல் வெப்பம் நீங்குவதுடன் வாந்தி, மயக்கத்தையும் போக்கும்.*

*தர்பூசணி :*

*அதிக நீர்த்தன்மை கொண்ட இந்தப் பழம் உடலின் நீர்ச்சத்தை அதிகரித்து, உடலின் நச்சத்தன்மையைப் போக்குகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்தது. இதை ஜூஸாகவோ சாலடாகவோ சாப்பிடலாம்.*

*சோற்றுக்கற்றாழை :*

*அதிகக் குளிர்ச்சியான இந்தக் கற்றாழையின் சதைப் பகுதியை வீட்டிலேயே ஜூஸாக்கி அருந்தலாம். ஒரு நாளைக்கு 2 டேபிள் ஸ்பூன் வரை எடுத்துக்கொள்ளலாம். இந்த ஜெல்லை 20 நிமிடம் முகத்தில் பூசி, பின் குளிர்ந்த நீரீல் குளித்தால் உஷ்ணத்திலிருந்து தப்பிக்கலாம். முகத்தில், கழுத்துப்பகுதியில் தோன்றும் பரு, வியர்க்குரு ஆகியவற்றிலிருந்து தப்பிக்கலாம்.*



*நெல்லி :*

*வைட்டமின் 'சி' நிறைந்துள்ள இதன் ஜூஸடன் 4 பங்கு நீர் சேர்த்து, உப்பு அல்லது தேன் சேர்த்து அருந்தலாம். வெறும் வயிற்றில் அருந்துவது இன்னும் சிறப்பு.*

*நீர்மோர் :*

*தயிரைக் கடைந்து நீர் சேர்த்து, சிறிதளவு லெமன் ஜூஸ் சேர்த்து அருந்தலாம்.*

*காய்கறிகள் :*

*வெள்ளரி, தக்காளி, நுங்கு, பதனீர், ஆரஞ்சு, திராட்சைப் பழங்கள் போன்றவையும் வெப்பத்தைத் தடுக்கவல்லன. நீர்க்காய்கறிகளான பூசணி, பீர்க்கன், சுரைக்காய் , முள்ளங்கி, கேரட் ஆகியவற்றில் தயிர் பச்சடி தயாரித்துச் சாப்பிடலாம்.*

*சருமத்துக்கான ஸ்பெஷல் பேக்*

*பாலில் குழைத்த சந்தனம் அல்லது கற்றாழை ஜெல் இவற்றை முகத்தில் பூசி, 10 முதல் 15 நிமிடம் வரை வைத்திருந்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.*

*விரல்களில் மருதாணி வைத்துக்கொள்வதால் உடல் வெப்பத்தைக் குறைக்கும்.*

*வெள்ளரி, தக்காளியை அரைத்து முகம், கை, கால்களில் பூசி இருபது நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.*

*தர்பூசணி*

 *பழத்துண்டுகளோடு புதினா இலைகளைச் சேர்த்து அரைக்கவேண்டும். இந்தக் கலவையை முகம், கை, கால்களில் பூசி வர வெயிலால் பாதித்த சருமம் புத்துயிர் பெறும்.*

*சிம்பிள் ரெசிப்பிகள்... *


*தக்காளி - வெள்ளரி சாலட் *

*தேவையானவை:*

*தக்காளி - 4,*
*வெள்ளரி - 2,*
*ஆலிவ் ஆயில் - சிறிதளவு,*
*லெமன் ஜூஸ் - ஒரு டீஸ்பூன்,*
*உப்பு - தேவையான அளவு.*

*செய்முறை:*

*தக்காளியையும் வெள்ளரியையும் கழுவி சுத்தப்படுத்தியபின் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற பொருட்களை இதனுடன் கலந்துப் பரிமாறவும். இதைச் சாலடாகவும், சாண்ட்விச் ஸ்டஃபிங்காகவும் பயன்படுத்தலாம்.*




*ஆரஞ்சு – வாழை ஸ்மூத்தி*

*தேவையானவை:*

*வாழைப்பழம் - 2,*
*ஆரஞ்சு ஜூஸ் - ஒரு கப்,*
*தோலுரித்த பாதாம் பருப்பு - 15,*
*துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்.*

*செய்முறை:*

 *பாதாமை முதலில் அரைத்துக்கொண்டு, பின் மற்ற எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். உடனே சாப்பிட ரெடி!*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை*
*திருப்தியை விட மேலான இன்பமுமில்லை*
*இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை*
*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்*

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!*

ஞாயிறு, 26 மார்ச், 2017

கோலி பஜ்ஜி



கோலி பஜ்ஜி

மைதா மாவு  - ஒரு கப்
புளித்தத் தயிர் - முக்கால் கப்
சமையல் சோடா - சிட்டிகை
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் மைதா, புளித்தத் தயிர், சமையல் சோடா உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரைக்கவும். இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு வெட்டி வைத்த பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழைச் சேர்த்து மாவைக் கையால் நன்றாகக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு மாவைச் சிறிய போண்டாகளாக போடவும். பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

ரத்தசோகை நீங்க, உடல் எடை அதிகரிக்க உதவும் உலர் திராட்சை!




ரத்தசோகை நீங்க, உடல் எடை அதிகரிக்க உதவும் உலர் திராட்சை!


குழந்தைகளோ, பெரியவர்களோ... கிஸ்மிஸ் பழத்தைப் பார்த்துவிட்டால், இரண்டு மூன்றையாவது எடுத்து வாயில் போடாமல் நகர மாட்டார்கள். பார்த்தவுடனேயே சாப்பிடத் தூண்டும் ஈர்ப்பு அதற்கு உண்டு. உலர் திராட்சையைத்தான் `கிஸ்மிஸ் பழம்’ என்கிறோம். அபாரமான பல சத்துக்களைக்கொண்டிருக்கும் உலர்திராட்சை, நம் ஆரோக்கியத்துக்கு வழங்கும் பலன்கள் எக்கச்சக்கம். அவற்றைப் பற்றி விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் வாலந்தீனா குரைசி...

* ஃபிரெஷ்ஷான திராட்சைப் பழங்களை நன்கு காயவைத்து, உலர்திராட்சை ஆக்குகிறார்கள். நான்கு டன் திராட்சைப் பழங்களை உலரவைத்தால், ஒரு டன் உலர்திராட்சைகள் கிடைக்கும். தண்ணீர் எல்லாம் வற்றிவிடும் இப்படி உலரவைப்பதன் மூலமாக, இதில் இருந்து நமக்கு ஏராளமான நார்ச்சத்துக்கள் கிடைக்கும்.

* திராட்சையுடன் ஒப்பிடும்போது உலர் திராட்சையில் அதைவிட ஏராளமான சத்துக்களும் பலன்களும் இருக்கின்றன. உதாரணமாக, 100 கிராம் உலர்திராட்சையில் 299 கலோரிகள் உள்ளன. நாம் ஒரு வேளை சாப்பிடும் உணவின் அளவில் இருக்கும் கலோரிகளை, 100 கிராம் உலர் திராட்சையைச் சாப்பிட்டாலே பெற முடியும்.

* இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் அளவு திராட்சையைவிட அதிகம். இது, புற்றுநோய் மற்றும் இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கும். 100 கிராம் உலர்திராட்சையில் 23 சதவிகிதம் இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், முடி உதிர்வு பிரச்னை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக, பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். பெண்கள் உலர்திராட்சையை தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக்கொண்டால், மாதவிடாய்க் கால வலி நீங்கும்; ஆரோக்கியம் கூடும்; ரத்தசோகை போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.



* இரும்புச்சத்து இதில் அதிகம் உள்ளதால், உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தாராளமாக இதைச் சாப்பிடலாம். .தினமும் உலர்திராட்சையை சிறிதளவு சாப்பிடுபவர்களின் உடல் எடை வெகு விரைவில் அதிகரிக்கும்.

* வெயில் காலம் தொடங்கிவிட்டால், சிலருக்கு முகத்தில் கொப்புளங்கள் வரும். அவர்கள் இதைச் சாப்பிட்டால், கொப்பளங்கள், கட்டிகள் நீங்கும்; தோல் நோய்களில் இருந்தும் நம்மை காத்துக்கொள்ள முடியும்; முகமும் பொலிவு பெறும்.

* இதில் வைட்டமின் ஏ சத்து இருப்பதால், கண்களுக்கு நல்ல பலன்களைத் தரும். கண்ணாடி அணிந்திருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், பார்வைக்குறைபாடு நீங்கும்; பார்வைத்திறன் மேம்படும்.

* உலர்திராட்சையில் பொட்டாசியம் சத்தும் அதிகமாக இருக்கிறது. உடலில் இருக்கும் தசைகள் சுருங்கி விரிந்து, நரம்புகள் தூண்டப்படுவதற்கும் இதயத் துடிப்பை சீராக வைத்திருப்பதற்கும் பொட்டாசியம் சத்து தேவை. உலர்திராட்சையை சாப்பிடுவதால், நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் பொட்டாசியம் சத்து பரவும்; நல்ல பலன் தரும்.

* சர்க்கரை நோயாளிகளும் உலர்திராட்சையை தாராளமாகச் சாப்பிடலாம். இதில் நார்ச்சத்தும் இருப்பதால், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவக்கூடியது.

ஏராளமான பலன்களை அள்ளித்தரும் உலர் திராட்சை எல்லோரும் சாப்பிட ஏற்றது.


வெங்காயத்தாள் கூட்டு + கறிவேப்பிலை சட்னி




வெங்காயத்தாள் கூட்டு  + கறிவேப்பிலை சட்னி 


வெங்காயத்தாள் கூட்டு

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
வெங்காயத்தாள் 1 கட்டு (நறுக்கியது)
பாசிப்பருப்பு 50 கிராம்
துவரம்பருப்பு 100 கிராம்
சாம்பார் பொடி அரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள்பொடி அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் 3
வெங்காயம் கால் கப்
உப்பு தேவைக்கேற்ப
பால் அரை கப்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :

  துவரம்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் மஞ்சள்பொடி சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

  கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

  பின் அதில் வேகவைத்த பருப்பை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

  அதில் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கொதிக்கவிடவும். வெங்காயத்தாள் வெந்தவுடன் பால் சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். இப்போது சூடான வெங்காயத்தாள் கூட்டு ரெடி.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து கூட்டுடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.




வெங்காயத்தாள் முட்டை பொரியல்

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
வெங்காயத்தாள் 1 கட்டு
சின்ன வெங்காயம் 10
வரமிளகாய் 4
கடுகு அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்
முட்டை 1
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :

  கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

  பிறகு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, உப்பு, நறுக்கிய வெங்காயத்தாளைச் சேர்க்கவும்.

  வெங்காயத்தாள் சில நிமிடங்களிலேயே வதங்கிவிடும். பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறிவிடவும். முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் :  சுடுசாதத்தில் அப்படியே பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். சப்பாத்திக்குத் தொட்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.






கறிவேப்பிலை சாதம்

தேவையான பொருட்கள்:

பொருள் - அளவு
கறிவேப்பிலை அரை கட்டு
சாதம்2 கப்
நெய்2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம்10 (நறுக்கியது)
பூண்டு பல் 10
வரமிளகாய்4
உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
சீரகம்கால் டீஸ்பூன்
கடுகுஅரை டீஸ்பூன்
உப்புதேவைக்கேற்ப
முந்திரி10
பெருங்காயத்தூள்ஒரு சிட்டிகை
எண்ணெய்தேவைக்கேற்ப
செய்முறை :

  கடாயில் நெய் விட்டு முந்திரி வறுத்துக்கொள்ளவும்.

  அதே நெய்யில் பூண்டு, வரமிளகாய், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இவை ஆறியதும் கொரகொரப்பாக அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

  அதன்பின், கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கடுகு, பெருங்காயதூள் சேர்த்து தாளிக்கவும். பின் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

  பின் சாதத்தை கொட்டி கிளறி, அதில் அரைத்து வைத்துள்ள பொடியை தூவி ஒரு சேர கிளறவும். பின் அதில் முந்திரி சேர்த்து இறக்கவும்.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த சாதத்தை தொக்கு வகைகளுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.




‬ கறிவேப்பிலை சட்னி


தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
கறிவேப்பிலை 1 கட்டு
சின்ன வெங்காயம் 15
தக்காளி 1
பச்சை மிளகாய் 2
கடலைப்பருப்பு அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
தேங்காய் துருவல் கால் கப்
பூண்டு பல் 4
இஞ்சி 1 டீஸ்பூன் (நறுக்கியது)
உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை :

  முதலில் வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு கறிவேப்பிலையை நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

  வாணலியில் சிறிது எண்ணெயைவிட்டு கடலைபருப்பையும் உளுத்தம் பருப்பையும் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

  பிறகு அதில் வெங்காயத்தைக் கொட்டி சிவக்க வதக்கவும். அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் புளியைச் சேர்க்கவும்.

  பின்னர் இறக்கிவைத்து தேங்காய் துருவலைச் சேர்த்து ஆறியதும் கெட்டியாக அரைக்கவும்.

  பின், தாளிக்கும் பொருள்களைக் கொண்டு தாளிக்கவும். இப்போது சுவையான கறிவேப்பிலை சட்னி தயார்.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை இட்லி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மீன் பொரிக்கும் போது கவனிக்க வேண்டியவை...





மீன் பொரிக்கும் போது கவனிக்க வேண்டியவை...

சுவையான டிப்ஸ் !!!
🐟 மீனுக்கு மசாலா போடும் போது அதில் புளி தண்ணீர் அல்லது தக்காளி இரண்டை நறுக்கி, அதன் சாறு மட்டும் பிழிந்து, அதில் மசாலாவை சேர்த்து கலக்கி, பொரித்து எடுத்தால் மீன் சுவையாக இருக்கும்.

🐟 மீன் பொரிக்கும் போது தவாவில் ஒட்டி கொள்ளாமல் இருக்க, மீன் மசாலாவுடன் சிறிது அரிசிமாவு சேர்த்து பிசைந்து கொள்ளலாம் அல்லது தவாவில் அரிசி மாவை போட்டு லேசாக வருத்து விட்டு எண்ணை ஊற்றி பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.

🐟 மீனை தூளாக்கி கீமா கட்லெட் செய்ய, மீனை முட்டையில் நனைத்து, ஊறவைத்து பிறகு பொரித்து எடுத்தால் சுவையான கீமா கட்லெட் தயார்.

🐟 வஞ்சிர மீனுக்கு மசாலா தடவும் போது, கறி பிசைவது போல் பிசைந்து தூளாக்கி விடாமல், ஒரு கிண்ணத்தில் மசாலாவை கெட்டியாக கலக்கி கொண்டு, பின்னர் அந்த மசாலாவை தடவி அடுக்கி வைத்து பொரித்து எடுத்தால் ருசியாக இருக்கும்.

🐟 மீன் பொரிக்கும் போது, எண்ணெயுடன் சிறிது வெண்ணெய் சேர்த்து பொரித்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

🐟 மீனுக்கு ஒரே மாதிரி மசாலா போடாமல் ஒரு முறை மிளகாய் தூள், அடுத்த முறை சிக்கன் மசாலா, கீரீன் மசாலா, மிளகு மசாலாக்களை போட்டு பொரித்து எடுத்தால் வித்தியாசமான சுவையாக இருக்கும்.

🐟 மீனுக்கு மசாலா கலக்கும் போது, அதில் இரண்டு தேக்கரண்டி ஓட்ஸ் மற்றும் கார்ன் பிளேக்ஸ் சேர்த்தால் மீன் நல்ல சுவையாகவும், மிருதுவாகவும் வரும்.

🐟 சாளை மீன் குழம்பிற்கு தேங்காய் சேர்க்காமல் புளி, மீன் மசாலா மட்டும் சேர்த்துக் கொண்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

🐟 மீன் பிரியாணி செய்வதற்கு முன் மீனை தயிர், இஞ்சி, பு ண்டு, மஞ்சள் பொடி போட்டு பத்து நிமிடம் ஊறவைத்து பின் பிரியாணி செய்தால் பிரியாணியின் சுவை அதிகரிக்கும்.

🐟 சுறாமீன் கட்லெட் செய்ய மீனை எடுத்து அதில் உப்பு, சிறிது இஞ்சி பு ண்டு விழுது, சீரக தூள் சேர்த்து வேக வைத்து எடுத்து, அதில் கட்லெட் அல்லது வடை செய்தால் ருசியாக இருக்கும்.

செட்டிநாடு மீன் குழம்பு


செட்டிநாடு மீன் குழம்பு

செட்டிநாடு ஸ்டைல் உணவுகளுக்கு தனி பிரியர்களே உள்ளார்கள். ஏனெனில் செட்டிநாடு ஸ்டைல் உணவானது அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும். அதிலும் செட்டிநாடு ஸ்டைல் மீன் குழம்பு என்று சொன்னாலே பலரது நாஊறும். அந்த அளவில் மீன் குழம்பானது சுவையாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு மீன் குழம்பு செய்ய தெரியாதா? அப்படியானால் தொடர்ந்து படித்து வாருங்கள். ஏனென்றால் இங்கு செட்டிநாடு மீன் குழம்பின் செய்முறையை உங்களுக்காக தெளிவாக கொடுத்துள்ளோம்.

சுவையான வேறு: மண மணக்கும் செட்டிநாடு ரெசிபிக்கள்!!!

தேவையான பொருட்கள்:
வஞ்சிர மீன் - 8 துண்டுகள்
புளி - 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
துருவிய தேங்காய் - 1/4 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 6
தாளிப்பதற்கு...
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5 பல்
தக்காளி - 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, அதில் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வதக்கி அரைக்க கொடுத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு, அத்துடன் வதக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு வெதுவெதுப்பான நீரில் புளியை 1/2 மணிநேரம் ஊற வைத்து, 1/4 கப் சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பின் அதில் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து அதில் தக்காளியைப் போட்டு, பச்சை வாசனை போக நன்கு வதக்கி விட வேண்டும்.
பின் அத்துடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 20 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, பின் புளிச்சாறு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
எப்போது குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரிகிறதோ, அப்போது மீன் துண்டுகளை சேர்த்து மீன் நன்கு வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவி 1 மணிநேரம் கழித்து பரிமாறினால், செட்டிநாடு மீன் குழம்பு ரெடி!!!

சனி, 25 மார்ச், 2017

கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத்



கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத்


தேவையான பொருட்கள் :

சப்ஜா விதை - 2 டீஸ்பூன்

எலுமிச்சை - 2

இஞ்சி ஜூஸ் - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

சோடா - 2 கப்

தேன் - தேவையான அளவு

ஐஸ் கட்டிகள் - சிறிது

செய்முறை :

* எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து கொள்ளவும்.

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சப்ஜா விதையை சிறிது நீரில் 20 நிமிடம் ஊற வைத்து, நீரை வடிகட்டி விட்டு சப்ஜா விதைகளை தனியாக வைத்துக் கொள்ளவும்.

* ஒரு ஷேக்கரில் ஊற வைத்த சப்ஜா விதைகள், எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, பச்சை மிளகாய், சோடா, தேன் சேர்த்து 30 நொடிகள் நன்கு குலுக்கி, பின் அதில் ஐஸ் கட்டிகளை சேர்த்து பரிமாறவும்.

* கோடை வெயிலுக்கு இதம் தரும் குலுக்கி சர்பத் ரெடி.

குறிப்பு :

தேன் பிடிக்காதவர்கள் சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.

தேனில் ஊற வைத்து நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்



தேனில் ஊற வைத்து நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் அறிந்திருப்போம். ஆனால் அந்த நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? தேனுடன் சேர்த்து தினமும் ஒன்று சாப்பிட்டால், அதனால் கிடைக்கும் நன்மைகளோ அலாதி. சரி, இப்போது நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம், இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

கண் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.

பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் சரிசெய்யலாம்.

சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அதுமட்டுமின்றி தொண்டையில் புண்ணும் வரும். அத்தகையவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கிய சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு, தொண்டைப்புண்ணும் குணமாகும்.

சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகம் இருக்கும். அத்தகைய பெண்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம், வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம்.

முக்கியமாக தேனில் நெல்லிக்காயை ஊற வைத்து சாப்பிட்டால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, அப்பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடும்.

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், தேனில் ஊறிய நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால், முகத்தின் பொலிவு அதிகரித்து, சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்.

நெல்லிக்காய் மற்றும் தேனில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களால், இதுவரை அதிகமாக இருந்த முடி கொட்டும் பிரச்சனை தடுக்கப்பட்டு, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடியின் வளர்ச்சி அதிகமாகும்.

தக்காளி – ஆரஞ்சு சாலட்




தக்காளி – ஆரஞ்சு சாலட்

தேவையான பொருட்கள்:

ஆரஞ்சு சுளைகள் – 10
பொடியாக நறுக்கிய தக்காளி – ஒரு கப்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன்.


செய்முறை:

• ஆரஞ்சு சுளைகள் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.• ஒரு பாத்திரத்தில் மேலே சொன்ன அனைத்துப் பொருட்களையும் போட்டு கொத்தமல்லி துவி பரிமாறவும்.
குறிப்பு

கோடைக்காலத்திற்கு ஏற்ற இந்த சாலட் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.

வெந்தய தோசை


வெந்தய தோசை

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி – 1  1 /2  கப்
வெந்தயம்  – 1 / 4  கப்
உளுந்து  – 1 /2  கப்


செய்முறை:

இட்லி அரிசி, வெந்தயம், உளுந்து  ஆகியவற்றை 3  மணி நேரம் ஊற வைக்கவும்.
தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
தோசை மாவை குறைந்தது 8   மணி நேரம் புளிக்க வைக்கவும்.

குறிப்பு
இந்த தோசைக்கு  தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

கத்திரிக்காய் காரக் குழம்பு



கத்திரிக்காய் காரக் குழம்பு


*தேவையான பொருட்கள் :*

கத்திரிக்காய் - ஆறு
சின்ன வெங்காயம்- 100 கிராம்
தக்காளி- இரண்டு
பூண்டு - பத்து பற்கள்
புளி- எலுமிச்சையளவு
மிளகாய்த்தூள்- 4 டீ ஸ்பூன்
தனியாத்தூள்- 2 டீ ஸ்பூன்
மஞ்சத்தூள்- ½ டீ ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/2 கப்
நல்லெண்ணெய்- 50 மில்லி
வெந்தயம் – ½ டீ ஸ்பூன்
பெருங்காயம்- 1/2 டீ ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை- ஒரு கொத்து
கடுகு தாளிக்க சிறிதளவு

*செய்முறை :*

•• புளியை ஊறவைத்து கெட்டியாக கரைத்து வைக்கவும். தேங்காயை நைசாக அரைத்து வைக்கவும். கத்திரிக்காயை காம்பு பகுதியை வெட்டி விட்டு மொத்தமாக வெட்டவும். முட்டை போல இருக்கும்.

•• சின்னவெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

•• அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தையம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

•• அதோடு நறுக்கி வைத்த வெங்காயம், உறித்து வைத்துள்ள வெள்ளைப்பூண்டு போட்டு வதக்கவும், தக்காளியை போட்டு நன்றாக குழைய வதங்கிய உடன் கத்தரிக்காயை போட்டு நன்றாக வதக்கவும்.

•• அப்போது உப்பு, மஞ்சள் தூள் தூவி லேசாக பிறட்டவும். இப்படி செய்தால் கத்தரிக்காய் எளிதில் வெந்து விடும்.

•• இதன் பின்னர் மிளகாய்தூள், மல்லித்தூள் போட்டு வதக்கவும், எண்ணெய் பிரிந்து வரும். அப்போது கரைத்து வைத்த புளியை ஊற்றி கொதிக்க விடவும்.

•• பத்து நிமிடம் நன்றாக வேகவிட்ட பின்னர் அரைத்து வைத்த தேங்காயை குழம்பில் ஊற்றி அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமாக வைக்கவும்.

•• குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் மினுமினுப்போடு வரும் போது பெருங்காயத்தூள் தூவி அடுப்பை நிறுத்தி விடவும்.

கத்தரிக்காய் காரக் குழம்பு தயார். சூடான சாப்பாட்டிற்கு சாப்பிட சுவையாக இருக்கும்.

வெள்ளி, 24 மார்ச், 2017

வெண்டைக்காய் காரகுழம்பு




வெண்டைக்காய் காரகுழம்பு


*தேவையானவை :*

வெண்டைக்காய் -250 கிராம்
பூண்டு -5 பற்கள்      
சாம்பார் பொடி -- 2 ஸ்பூன்
புளி -- 1 உருண்டை
வெங்காயம் -- 10
தக்காளி -- 1
நல்லெண்ணைய் -- 3 ஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு -- 1 டீஸ்பூன்
வெந்தயம்  -- 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் -- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை --
அரைத்த தேங்காய் -- 3 ஸ்பூன்
சீரகம்,மிளகு -- 1 1/2 டீஸ்பூன்

*செய்முறை :*

•• தக்காளியை அடுப்பில் சுட்டு அரைத்துக்கொள்ளவும்
தேங்காய், சீரகம், மிளகை நைசாக அரைக்கவும்

•• வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து வெந்தயம்,  பெருங்காயம், கறிவேப்பிலை , போட்டு தாளிக்கவும்

•• வெங்காயம் போட்டு  வதக்கி பின் அரைத்த தக்காளி போடவும். நன்கு வதக்கியதும்  சாம்பார் பொடி, உப்பு வெண்டைக்காய்போட்டுநன்குகிளரவும் நன்கு கொதிக்கும் போது கரைத்த புளி  ஊற்றவும்.

•• பின் அரைத்த விழுதை போட்டு மீதி உள்ள எண்ணையை ஊற்றி குழம்பை சிம்மில்  வைக்கவும்.

•• பாதி வற்றி கெட்டியானதும் இறக்கி பரிமாறவும் சுவையான  வெண்டைக்காய் காரகுழம்புரெடி

*குறிப்பு :*

வெண்டைக்காய் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து குடல் அழற்சி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

முட்டைகோஸ் சாதம்.



முட்டைகோஸ் சாதம்.


*தேவையானவை :*

துருவிய முட்டைகோஸ் – ஒரு கப்,
வடித்த சாதம் – ஒரு கப்,
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் (ஊறவைக்கவும்),
மிளகு – சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்,
இஞ்சி (மிகவும் பொடியாக நறுக்கியது) – ஒரு டேபிள்ஸ்பூன்,
பட்டை – சிறிய துண்டு,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

*தாளிக்க :*

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 2,
எண்ணெய் – சிறிதளவு.

*செய்முறை :*

•• வடித்த சாதம், சூடாக இருக்கும்போதே ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்தால் பொலபொலவென்று உதிர்ந்துவிடும்.

•• கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து… பட்டை, மிளகு – சீரகத்தூள், கடலைப்பருப்பு, உப்பு, வேர்க்கடலை போட்டுக் கிளறி, ஊறவைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய இஞ்சி சேர்த்து மேலும் கிளறவும்.

•• இதில் துருவிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கி, சிறிது நீர் தெளித்துப் புரட்டி வேகவிட்டு இறக்கவும்.

•• இந்த முட்டைகோஸ் மசாலாவை வெந்த சாதத்தில் போட்டுப் புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

செவ்வாய், 21 மார்ச், 2017

கிரீன் டீ யாருக்கு ஏற்றது?



கிரீன் டீ யாருக்கு ஏற்றது?


மல்ட்டிபிள் ஸ்கெலரோசிஸ், டைப் 1 சர்க்கரை நோய், சொரியாசிஸ், ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ், பெப்டிக் அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடலாம்.

அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ், வைரஸ் காய்ச்சல், அல்சர், வைரஸ் தொற்று நோய்கள் உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடக் கூடாது.

கிரீன் டீயை எப்படிக் குடிக்க வேண்டும்?

பவுடராக வாங்காமல் பச்சை இலையாக இருக்கும் கிரீன் டீயாக வாங்கவும்.

கிரீன் டீ இலைகளை நீருடன் சேர்த்து, கொதிக்கவைத்து வடிகட்டி, வெதுவெதுப்பான சூட்டில் அருந்துவது உடலுக்கு நல்லது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை, வெல்லம் அல்லது தேன் போன்றவற்றைச் சேர்க்காமல் குடிக்க வேண்டும்.

தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் அளவுக்கு மேல் கிரீன் டீ குடிக்கக் கூடாது.

கிரீன் டீ சாப்பிடுவதால் உடலில் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுவது போல தோன்றினால், உடனே கிரீன் டீ சாப்பிடுவதை நிறுத்திவிடுவது நல்லது.

உடலுக்கு ஆரோக்கியம்

கிரீன் டீயில் ஃப்ளேவோனாய்டு (Flavonoid), கேட்டச்சின் (Catechin) முதலான பாலிபீனால்கள் (Polyphenol) அதிகம் உள்ளன. இவை சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களாகச் செயல்பட்டு, உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றன. இளமையிலேயே வயதான தோற்றம் வராமலிருக்க, தினமும் ஒரு கப் கிரீன் டீ அருந்தலாம்.

கிரீன் டீயில் சிறிதளவு காஃபின் (Caffeine) இருக்கிறது. இது மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மீட்டர்களைத் தூண்டி, நரம்பு இயக்கங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. இதனால் சுறுசுறுப்பான உணர்வு கிடைக்கும். மூளை நன்றாக இயங்கும்.

கிரீன் டீ தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, மறதி நோயான அல்சைமர், மூளையில் டோபோமைன் சரியாகச் சுரக்காததால் வரும் பார்கின்சன் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 25 சதவிகிதம் குறைகிறது.

பற்களில் ஸ்ட்ரெப்டோகோக்கஸ் மியூட்டன்ஸ் (Streptococcos mutans) என்ற பாக்டீரியா வளர்ந்தால், பற்கள் பாதிக்கப்பட்டு, சொத்தையாக மாறும் அபாயம் உண்டு. கிரீன் டீ குடித்தால், அதில் இருக்கும் கேட்டசின், இந்த வகை பாக்டீரியாக்களை அழித்து, பற்களைக் காக்கும்.

கிரீன் டீ இன்சுலின் செயல்பாட்டை சிறிதளவு அதிகரிக்கும். எனவே, சர்க்கரை சேர்க்காமல் கிரீன் டீ குடிப்பது, சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. கிரீன் டீயைத் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு, டைப்-2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறைகிறது. சர்க்கரை சேர்க்காமல் கிரீன் டீ அருந்தினால், உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் கரையும். எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது.

இதயத்துக்குச் செல்லும் வால்வுகளில் கொழுப்புக் கட்டிகள் சேர்வதைத் தடுக்கும் வல்லமை பெற்றது கிரீன் டீ. இதய நோய்கள் அண்டாமல் இருப்பதற்கும், பக்கவாதம் வராமல் இருக்கவும் கிரீன் டீ அருந்தலாம். கிரீன் டீயில் அமினோ அமிலங்கள் உள்ளன. இது உடல் மற்றும் மனச் சோர்வைப் போக்கக்கூடியது. எனவே, மன அழுத்தம் உள்ள சமயங்களில் கிரீன் டீ அருந்தலாம்.

கிரீன் டீ ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது என்பதால், உடலில் தேவையற்ற கட்டிகளை வளரவிடாது. பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளை கிரீன் டீ குறைக்கிறது.



பல்வேறு உடல் நல பயன்களைக் கொண்டுள்ள 10 வகையான சுவைமிக்க கிரீன் டீ!!!


கிரீன் டீயில் பல வித உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். கிரீன் டீயில் பல வகைகள் உள்ளது. அவைகளில் பல சுவை மணங்களும் பல வீதத்தில் காப்ஃபைனும் அடங்கியுள்ளது. எந்த கிரீன் டீ அதிக சுவையுடன் இருக்கும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொருத்ததாகும்.
இருப்பினும் மூலிகைகள் மற்றும் இஞ்சி, ஏலக்காய், கருப்பு மிளகு மற்றும் இலவங்கப்பட்டை போன்ற மசாலாக்கள் சேர்க்கப்பட்ட கிரீன் டீக்களை தேர்ந்தெடுத்தால் அதிக உடல்நல பயன்கள் கிடைக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய சிறந்த 10 வகையான கிரீன் டீக்களை பற்றி இப்போது பார்க்கலாமா? இந்த அனைத்து சுவைமணங்களையும் இணையளத்தில் மூலமாக சுலபமாக பெற்றுக் கொள்ளலாம்.

ஜாஸ்மின் கிரீன் டீ (Jasmine green tea)
ஜாஸ்மின் என்பது கலோரிகள் அல்லாத மிதமான சுவையை கொண்ட பானமாகும். இதில் ஊட்டச்சத்துக்களும் வளமையாக உள்ளது. இதிலுள்ள EGCG என்ற கூட்டுப்பொருள் புற்றுநோயை தடுப்பதில் உபயோகமாக உள்ளது. DNA-வை பாதித்து புற்றுநோயை உருவாக்கும் ஆற்றலை படைத்துள்ள இயக்க உறுப்புகளை சமநிலைப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கேட்சின். டைப்-2 சர்க்கரை நோய் இடர்பாடும் இதனால் குறைவாகவே இருக்கும். இதுப்போக, நறுமணம் வீசும் அதன் சுவைமணத்தால் ஜாஸ்மின் கிரீன் டீ உங்கள் புலன்களை தணிக்கவும் செய்யும்.
மொராக்கோன் மின்ட் கிரீன் டீ (Moroccan mint green tea)
மொராக்கோன் மின்ட் கிரீன் டீ என்பது மொராக்கோ மக்களால் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வரும் மிகவும் சுவை மிகுந்த டீயாகும். இயற்கையாகவே இதில் கலோரிகள் குறைவாக உள்ளது. நற்பதமான அல்லது உலர்ந்த தேயிலைகளில் இருந்து இது தயாரிக்கப்படுகிறது. கிரீன் டீயுடன் புதினா இலைகள் சேர்க்கப்பட்டு இந்த டீ தயாரிக்கப்படுகிறது. அமைதிப்படுத்தும் மருந்தாக செயல்படும் இந்த டீ உங்களை அமைதிப்படுத்தும் குணங்களை கொண்டுள்ளது. செரிமாமின்மை மற்றும் இதய எரிச்சல் போன்ற அறிகுறிகளை நீக்க புதினா உதவிடும். இந்த டீயை பருகினால் மலச்சிக்கல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் உயிரியலுக்குரிய பல செயல்பாடுகளை பராமரிக்க தேவையான அதிமுக்கிய வைட்டமின்களால் நிறைந்துள்ளது இந்த டீ. ஆரோக்கியமான 6 வழிகளில் எப்படி கிரீன் டீ போடுவது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
டிராகன்வெல் கிரீன் டீ (Dragonwell green tea)
டிராகன்வெல் கிரீன் டீ என்பது புகழ்பெற்ற, மிகவும் சிறந்த சீன கிரீன் டீயாகும். மென்மையான மற்றும் மிகவும் புத்துணர்ச்சி அளிக்க கூடிய சுவையை கொண்டிருக்கும் இது. இந்த டீ மெட்டபாலிசத்தை மேம்படுத்தும். மேலும் கொழுப்பை எரிக்க உதவுவதால் உடல் எடை குறைப்பிற்கு உதவியாக இருக்கும். இந்த டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்களால் கொலஸ்ட்ரால் அளவுகளும் இரத்த கொதிப்பும் குறையும். மேலும் ஃப்ளூ மற்றும் இதர பாக்டீரியல் மற்றும் வைரல் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கும். நீங்கள் ஃப்ளூ மற்றும் சளியால் பாதிக்கப்பட்டிருந்தால், கிரீன் டீயுடன் தேன் சேர்த்துக் கொண்டு குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
க்யூகுரோ கிரீன் டீ (Gyokuro green tea)
இந்த வகை கிரீன் டீ, ஜப்பானில் பாரம்பரியப்படி வளர்க்கப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. க்யூகுரோவில் தேயிலைகள் பச்சை நிறத்தில், மிகவும் சிறியதாக இருக்கும். மிகவும் ஆரோக்கியமான இந்த டீயை பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம். புற்று நோயை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ள பாலிஃபெனால் இதில் உள்ளதால், இந்த டீயினால் கிடைக்கும் மிக முக்கியமான உடல் நல பயன்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இதய நோய்களின் இடர்பாட்டை குறைக்க இது உதவும். மேலும் இரத்த க்ளுகோஸ் அளவை ஆரோக்கியமான வீதத்தில் வைத்திருக்க உதவுவதன் மூளலாம் சர்க்கரை நோய்க்கான வாய்ப்புகளையும் குறைவாகவே வைத்திருக்கும். உலர்ந்த இலையின் வடிவத்தில் க்யூகுரோவை கடைகளில் வாங்கலாம். க்யூகுரோ கிரீன் டீயில் கொஞ்சம் காப்ஃபைன் உள்ளது. அதனால் நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போதும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் இதனை தவிர்த்திடுங்கள். மேலும் கிரீன் டீயை பற்றிய 6 பக்க விளைவுகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.
கென்மைச்சா கிரீன் டீ (Genmaicha green tea)
இனிமையான சுவைமணத்தை கொண்ட ஜப்பானிய கென்மைச்சா கிரீன் டீ பழுப்பு அரிசி உமியுடன் கலக்கப்பட்டிருக்கும். டீயில் உள்ள கேட்சின்ஸ் மற்றும் கால்லிக் அமிலம் போன்ற பல பாலிஃபீனால்களாலும், கரோடினாய்டுகள் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாலும், இதனை தொடர்ச்சியாக குடித்து வந்தால் பல நோய்கள் தடுக்கப்படும். இரத்தக் கொதிப்பை குறைக்கவும் இது உதவுகிறது. இதயகுழலிய நோய்கள் உருவாகும் இடர்பாட்டை குறைக்கவும் கூட இது உதவிடும். இதய நோய்கள் வராமல் இருக்க கிரீன் டீ எப்படியெல்லாம் உதவுகிறது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஆர்கானிக் கென்மைச்சா டீயை சுலபமாக மளிகை கடைகளில் வாங்கலாம்.
குகிச்சா கிரீன் டீ (Kukicha green tea)
தேயிலை செடியின் கிளைகள் மற்றும் தண்டுகளில் இருந்து தயாரிக்கப்படும் ஜப்பானிய டீ தான் இந்த குகிச்சா கிரீன் டீ. இதில் காப்ஃபைன் அளவு குறைவாகவே உள்ளது. அதே போல் அல்கலைஸ் குணங்களும் அதிகமாக இருக்கும். குறைவான அளவில் காப்ஃபைன் இருக்கும் பானத்தை குடித்து வந்தால் அசிடிட்டி, பதற்றம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் இல்லாமல் இருக்கலாம். இந்த டீயில் வைட்டமின்களும், கனிமங்களும் கூட வளமையாக உள்ளது. மேலும் ஒரு கிளாஸ் பாலில் உள்ள கால்சியத்தின் அளவை விட இதில் அதிகமாக உள்ளது. இதனை சூடாகவோ அல்லது குளிராகவோ பருகலாம். ஆற்றல் திறன் மற்றும் உற்சாகத்தை இது மேம்படுத்துவதால், இதனை காலை உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
சென்ச்சா கிரீன் டீ (Sencha green tea)
சென்ச்சா கிரீன் டீ என்பது அதிக தரம் வாய்ந்த சுவைமணம் கொண்ட ஜப்பானிய டீயாகும். இதற்கான தயாரிப்பு செயல்முறையும் மிகவும் குறைவாக இருக்கும். உங்கள் உடலில் உள்ள அணுக்கள் மற்றும் திசுக்களை இயக்க உறுப்பு பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க இதில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் இதய நோய்களுக்கு எதிராக போராடவும் இந்த டீ இதவுகிறது. சென்ச்சாவின் புத்துணர்ச்சி சுவைமணத்தால் உங்கள் வாயில் துர்நாற்றமும் இருக்காது. வாயில் அடிக்கும் துர்நாற்றத்தை போக்குவதற்கு ஏலக்காய் கலந்த க்ரீன் டீயையும் பயன்படுத்தலாம். இயற்கையான 9 முறையில் வாயில் வீசும் துர்நாற்றத்தை எப்படி போக்குவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
மாட்சா கிரீன் டீ (Matcha green tea)
தேயிலையை நைசான தூளாக அரைத்து உருவாக்கப்படுவது தான் மாட்சா கிரீன் டீ. தேயிலைகளை சூடாக்கி எடுக்கும் பிற கிரீன் டீக்களை விட மாட்சா கிரீன் டீ தான் ஆரோக்கியமாக விளங்குகிறது. இதில் பல ஆண்டி-ஆக்சிடன்ட்கள் அடங்கியுள்ளதால் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதிலுள்ள எல்-தியனைன் என்ற அமினோ அமிலம் உங்கள் புலன்களையும் மனதையும் அமைதியுற செய்யும். இந்த டீயில் க்லோரோஃபில் வளமையாக உள்ளதால் இதில் நச்ச் பண்பை நீக்கும் குணங்களும் உள்ளது. இந்த டீ தூளில் ஏலக்காய் சேர்த்து குடித்தால் குடலில் உள்ள புழு பூச்சிகள் எல்லாம் நீங்கும்.
ஹௌஜிச்சா கிரீன் டீ (Hojicha green tea)
ஹௌஜிச்சா தேயிலைகள் பழுப்பு நிறத்தில், செதில் வகையான தோற்றத்தில் காணப்படும். குறைந்த அளவிலான காப்ஃபைன் உள்ள பானத்தை நீங்கள் விரும்பினால் உங்களுக்கானது தான் இந்த டீ. அமைதியான மற்றும் ஆழத்தை தூக்கத்தை பெறுவதற்கு மற்ற டீக்கள் அல்லது காபியை குடிப்பதற்கு பதிலாக இரவு நேரத்தில் ஹௌஜிச்சா கிரீன் டீயை குடியுங்கள். இது போக இதில் பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நுண்ணுயிர்கள் எதிர்ப்பி குணங்கள் அடங்கியிருக்கிறது. மேலும் இதயகுழலிய நோய்களில் இருந்து பாதுகாப்பை அளிக்கும். அமேசான் தளத்தில் இருந்து ஆர்கானிக் ஹௌஜிச்சா டீயை வாங்கலாம்.
பஞ்ச்சா கிரீன் டீ (Bancha green tea)
பஞ்ச்சா கிரீன் டீயில் தனித்துவமான சுவைமணம் இருக்கும். மேலும் அதனை தயாரிப்பதும் சுலபம். இதிலும் கூட காப்ஃபைன் மிகுந்த குறைந்த அளவிலேயே இருக்கிறது. மேலும் கேட்சின்ஸ் போன்ற பாலிஃபினால்களும் வளமையாக உள்ளது. இதிலுள்ள காப்ஃபைன் மன உஷார் நிலையை மேம்படுத்த உதவிடும். துவாரங்கள் போன்ற பொதுவான வாய் தொற்றுக்களை கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது. இந்த டீயுடன் கருப்பு மிளகாய் சேர்த்து குடித்தால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு மேம்பட்டு, அதனால் தொற்றுக்கள் அண்டாமல் இருக்கும்.
மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய டிப்ஸ்:
* பாட்டிலில் உள்ள கிரீன் டீயை விட காய்ச்சிய கிரீன் டீயில் தான் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால், அதையே தேர்ந்தெடுங்கள்.
* வணிக ரீதியான டீக்களில் பூச்சி மருந்துகளின் எச்சங்கள் இருக்கலாம். அதனால் ஆர்கானிக் வகைகளையே தேர்ந்தெடுங்கள்.
* காப்ஃபைன் நீக்கப்பட்டுள்ள டீயில் பயனுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் குறைந்த அளவிலேயே இருக்கும். உங்களுக்கு கூடுதல் காப்ஃபைன் வேண்டாம் என்றால் ஹௌஜிச்சா மற்றும் பஞ்ச்சா போன்ற டீக்களை பயன்படுத்துங்கள்.


இவ்வளவு பயன் தரும் கிரீன் டீயை நாமும் அருந்துவோம். பயன் பெறுவோம்

பீட்ரூட்டின் நன்மைகள்



பீட்ரூட்டின் நன்மைகள்...
* பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
* பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
* பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல், அரிப்பு மாறும்.
* தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறை தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் குணமாகும்.
* பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.
* பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். ரத்த சோகையை குணப்படுத்தும்.
* பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை கூட்டும்.

திங்கள், 20 மார்ச், 2017

வேலூர் வாத்துக்கறி குழம்பு



வேலூர் வாத்துக்கறி குழம்பு


  வேலு}ர் மாவட்டம் என்றாலே பழங்கால நகரங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. பழங்கால நகரமான வேலு}ர் மாவட்டத்தின் பிரபலமான உணவாக வாத்துக்கறி திகழ்கிறது. இத்தகையச் சிறப்புப் பெற்ற உணவான வாத்துக்கறி குழம்பை வீட்டிலேயே சுலபமாகச் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

வாத்துக்கறி குழம்பு :

தேவையானப் பொருட்கள் :

வாத்துக்கறி - 1 கிலோ

சின்ன வெங்காயம் - 1ஃ2 கிலோ

தக்காளி - 4

தேங்காய் துருவல் - 1 கப்

பு ண்டு - 8 பல்

இஞ்சி - பு ண்டு விழுது - 2 ஸ்பு ன்

பட்டை - 2

கிராம்பு - 4

மிளகாய் தூள் - 2 ஸ்பு ன்

மஞ்சள் தூள் - 1 ஸ்பு ன்

மல்லி தூள் - 2 ஸ்பு ன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :

🍗 வேலு}ர் வாத்துக்கறி செய்வதற்கு முதலில் வாத்துக்கறியை நன்றாகச் சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு தவாவில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி பட்டை, கிராம்பு, வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். பின்பு வதக்கிய பட்டை, கிராம்பு, வெங்காயம் ஆகியவற்றைப் ஆற வைத்து, பிறகு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு துருவிய தேங்காயை அரைத்து வைத்துக் கொள்ளவும். அதேபோல் தக்காளியையும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

🍖 பிறகு கேஸ் ஸ்டவ்வை ஆன் செய்து அதன்மேல் குக்கரை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு, இஞ்சி பு ண்டு விழுது, சுத்தம் செய்த வாத்துக்கறி ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும். பிறகு அதில் மஞ்சள் தூளைச் சேர்க்கவும். பிறகு வாத்துக்கறியிலிருந்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்கவும். பிறகு அதனுடன் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பிறகு வாத்துக்கறி நன்றாக வதங்கிய பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் ஏற்கனவே மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள வெங்காயக் கரைசலை ஊற்றி, அதனுடன் தேவையான அளவு நீரை ஊற்றிக் கொதிக்க விடவும். பிறகு அதில் தேவையான அளவு மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து எட்டு முதல் பத்து விசில் வரை விட்டு இறக்கினால் சு டான, டேஸ்டான வேலு}ர் வாத்துக்கறி குழம்பு ரெடி.

ஞாயிறு, 19 மார்ச், 2017

ஏலக்காய் நன்மைகள்


ஏலக்காய் – மருத்துவ பயன்கள்
ஏலக்காய் கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. சிறுநீரைப் பெருக்கும். தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, வறட்சி, கபம் முதலியவற்றைக் கட்டுப் படுத்தும்.
மணம், சுவை கூட்டும் தன்மை ஏலத்திற்கு மிகுதியாக உண்டு. கேக்குகள், மிட்டாய்கள், இனிப்புகள் ஆகியவற்றிலும், உணவு சமைப்பதிலும் ஏலக்காய் பெருமளவு சேர்க்கின்றது.
ஏலக்காய் விந்துவைப் பெருக்கும்; காமத்தைத் தூண்டும். வயிற்று உப்புசத்தை நீக்கி செரிமானத்தை எளிதாக்குகின்றது.
மலமிளக்கும் மருந்துகளுடன் ஏலக்காய் சேர்க்கப்படுகின்றது. ஆண்மை விருத்தி லேகியங்களிலும் சேர்க்கப்படுகின்றது.
ஏலக்காய் விதையின் எண்ணெய் பல மருந்துப் பொருட்களிலும் சேர்க்கப்படுகின்றது மற்றும் பானங்களை வாசனை உள்ளதாக மாற்றுகின்றது.
ஏலக்காய் அடர்த்தியான சதைப்பற்றுடைய மட்ட நிலத் தண்டுக் கிழங்குகளைக் கொண்ட தாவரம். 3 மீட்டர் வரை உயரமான நிமிர்ந்த தண்டுகளைக் கொண்டது.
ஏலக்காய் இலைகள் 3 அடி வரை நீளமானவை. அகலத்தில் குறுகியவை. இலையின் நடு நரம்பு மிகவும் வலிமையானது.
இரண்டரை அடி வரை உயரமான மலர்க் கொத்துக்கள் தண்டின் அடியிலிருந்து உருவாகின்றது.
ஏலக்காய் மலர்கள் 4 செமீ வரை நீளமானவை. வெள்ளை அல்லது வெளிர் பச்சை நிறமானவை.
பழங்கள் 15செமீ நீளத்தில் வெளிறிய பசுமை நிறம் அல்லது மஞ்சள் நிறத்தில், நீள் வட்ட வடிவில் 3 பிரிவுகளுடன், பல விதைகளுடன் காணப்படும்.
ஏலக்காய் மலைப் பகுதிகளில் இயற்கையாக விளைகின்றது. ஏலம், ஆஞ்சி, துடி, சிற்றேலம் ஆகிய மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு.
மழைக் காடுகள், மைசூர், மற்றும் கேரளத்தில் அதிகமாக விளைகின்றது. முதிர்ந்த ஏலக்காய்கள், உள்ளிருக்கும் விதைகள் மருத்துவப் பயன் கொண்டவை.
ஏலக்காய், ஏலரிசி போன்றவை நாட்டு மருந்துக் கடைகளிலும், ஏலக்காய் மளிகைக் கடைகளிலும் கிடைக்கும்.
ஏலக்காய் வெவ்வேறு நிலப் பகுதிகள், மற்றும் அதன் சூழ்நிலை தகவமைப்பிற்கு ஏற்ப சிறு மாறுபாடுகளுடன் காணப்படுகின்றது.
ஏலக்காய் கடைகளில் விற்பனைக்கு வருவதற்கு முன்னர் கந்தகப் புகை அடிக்கப்பட்டு வெள்ளை நிறமாக்கப்படுகின்றது.
கெட்டியான ஏலக்காய்களில் விதை கருப்பாக, அதிகமான எண்ணிக்கையில் இருக்கும்.
ஏலக்காய், ஓமம், சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து கொண்டு, அதில் ஒரு தேக்கரண்டி அளவு உட்கொள்ள செரியாமை தீரும்.
ஏலக்காய், சீரகம், சுக்கு, கிராம்பு சம அளவாகப் பொடித்து, 2 கிராம் தேனில் தினமும் 3 வேளைகள் சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரணம், குமட்டல், வாந்தி தீர ஏலக்காயின் மேல் தோலை உரித்து, உள்ளிருக்கும் ஏலரிசியை நன்கு காய வைத்து, தூள் செய்து கொள்ள வேண்டும்.
2 கிராம் அளவு தூளை தேவையான அளவு எலுமிச்சம் பழச் சாற்றில் குழைத்து ஒவ்வொரு வேளை உணவிற்குப் பின்னரும், தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.





ஏலக்காய் நன்மைகள்..

ஏலக்காய் (Cardamom )..!

பல‌ர் சூ‌யி‌ங்க‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல்

அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலா‌ம்.

ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌

தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண

உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.

நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல்

இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட

ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே,

கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம்.

வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை

தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று

சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது

ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.

ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாபபிட்டால் நரம்பின் பலம் கூடும்,

கண் பார்வை அதிகரிக்கும். ஏலக்காயை பொடியாக்கி துளசிச் சாற்றுடன்

கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு

ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால்

வறட்டு இருமல் தொண்டை வலி தீரும். 4 ஏலக்காய், ஒரு கைப்பிடி நாவல்

இலை சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட்டால் செரியாமை,

சீதக்காதி தீரும். ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு ஆகியவை பால்

விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி

விலகும்.

வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய்.

சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு

கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான

போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென்,

கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின்

காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை…

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி,

அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை

தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும்

குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து

ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள்

சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், `ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு

நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும்

சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை

நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை

அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால்

ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக்

கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு

மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக,

அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு

நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு,

கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால்

தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன்

நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு

காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே

போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய

வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர்

தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக,

இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே
நீங்கிவிடும்.




ஏலக்காயின் மருத்துவ குணங்கள்
1. ஈரப்பதம், புரதம், மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன.
2. . மருத்துவத்தில் பல் மற்றும் அதனை சார்ந்த நோய்களுக்கு மருந்தாக பயன் படுகிறது.
3. செரிமானத்தை தூண்டுவதாக, குரல் வளை மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு.
4. மலட்டு தன்மை மற்றும் அரைகுறை விந்து வெளிபடுதலை தீர்ப்பதற்கும். ஏலக்காய், ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பாக்கியமும் உண்டாக்க வல்லது பலர் அறியாத செய்தி. இது தாம்பத்திய வாழ்வில் இனிமை சேர்க்கவல்லது.
5. ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப் பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும், ஜீரணம் அதிகரிக்கும்.
6. ஏலத்தை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும்.
7. ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூளை அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்தி ஏலக்காயும், இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
8. ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும். நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும். ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும்.
9. ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விலகும்.
10. அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டி உள்ளே போடவும். பிறகு புதினாக் கீரையில் 5 6 இலைகள் மட்டும் இதில் போட்டுக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி அருந்தினால் விக்கல் எடுப்பது குறையும்.
***
புகைப்பதை நிறுத்த உதவும் ஏலக்காய்:
1. ஏலக்காய் மணத்திற்கு மட்டுமல்ல மருந்துக்கும் உதவுகிறது. சிகரெட் எரியும்போது கசியும் “நிக்கோட்டின்” நஞ்சு, தொண்டை, ஈறு, நாக்குகளில் படியும்போது கறை உண்டாவதுடன், அங்கிருக்கும் பூந்தசைகளை அரித்துப் புண்களை உண்டாக்கும்.
2. “ஏலக்காய்” இந்தப் புண்களை ஆற்றுவிப்பதுடன், நிக்கோட்டின் கறைகளையும் படியாமல் அப்புறப்படுத்துகிறது.
3. இன்னொரு அரிய பயனும் உள்ளது. சிகரெட் பிடிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம், ஒரு ஏலக்காயினை வாயிலிட்டுச் சுவைக்க, புகைக்கும் எண்ணம் விலகும்.

சத்து நிறைந்த முருங்கைப்பூ உணவு: உசிலி



சத்து நிறைந்த முருங்கைப்பூ உணவு: உசிலி


பாசிப் பருப்பு - 100 கிராம்

முருங்கைப்பூ - 1 கப்

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

கடுகு – அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?
பாசிப் பருப்பையும் முருங்கைப் பூவையும் தனித்தனியாக வேகவைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். அதனுடன் வேகவைத்த முருங்கைப்பூ, பாசிப்பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். இறக்குவதற்கு முன் தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கிளறினால் முருங்கைப்பூ உசிலி தயார். தயிர்சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். பாசிப்பருப்புக்குப் பதிலாக இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றினால் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொள்ளலாம்.

சனி, 18 மார்ச், 2017

குழந்தைகளுக்கான காலிபிளவர் மசாலா தோசை...



குழந்தைகளுக்கான காலிபிளவர் மசாலா தோசை...


தேவையான பொருட்கள் :

தோசை மாவு - 2 கப்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

நறுக்கிய காலிபிளவர் - 100 கிராம்

மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தேவையான அளவு

பெரிய வெங்காயம் - 100 கிராம்

பெங்களூரு தக்காளி - ஒன்று

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* காலிபிளவரை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் காலிபிளவரையும் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும். இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கிளறி மிதமான தீயில் நன்கு வேகவைத்து இறக்கவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு... தயார் செய்து வைத்த காலிபிளவர் மசாலாவை அதில் வைத்து பரவலாகத் தேய்த்து தோசையை மூடி வேகவிட்டு எடுக்கவும்.

* சூடான காலிபிளவர் மசாலா தோசை ரெடி!

வியாழன், 16 மார்ச், 2017

சத்தான சிற்றுண்டி: சிறுதானிய சாலட்



சத்தான சிற்றுண்டி: சிறுதானிய சாலட்


தேவையான பொருட்கள் :

வேகவைத்த வரகு - 2 தேக்கரண்டி

வேகவைத்த பனி வரகு - 2 தேக்கரண்டி

வேகவைத்த தினை - 2 தேக்கரண்டி

முளைகட்டிய பாசிப்பயறு - 3 தேக்கரண்டி

முளைகட்டிய ராகி - 2 தேக்கரண்டி

முளைகட்டிய வேர்க்கடலை - 1 தேக்கரண்டி

துருவிய கேரட் - 2 தேக்கரண்டி

இந்து உப்பு - 1சிட்டிகை,

எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

மிளகு சீரகப் பொடி - 1/4 தேக்கரண்டி

செய்முறை :

* பாசிப்பயறு, ராகி மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை முதல் நாள் காலையில் ஊறவைத்து, இரவு, வலை போல் இருக்கும் துணியில் கட்டி வைத்தால் அவை மறுநாள் காலையில் முளைத்து விடும். இவ்வாறு ராகியையும், பயிரையும் முளைகட்டிக்கொள்ள வேண்டும்.

* வரகு, பனி வரகு மற்றும் தினையை சற்று ஊறவைத்து தண்ணீருடன் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்தால் நன்கு வெந்துவிடும். அவற்றையும் உதிரியாக வடித்துக்கொண்டு தயாராக எடுத்துக் கொள்ளவேண்டும்.

* மேலே கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிக்கொள்ள வேண்டும்.

* சுவையான சிறுதானிய சாலட் தயார்.

திங்கள், 13 மார்ச், 2017

சத்து நிறைந்த பிரண்டை சிறுதானிய தோசை!



சத்து நிறைந்த பிரண்டை சிறுதானிய தோசை!


*தேவையான பொருட்கள் :*

குதிரைவாலி அரிசி – 1/4 கப்
வரகு அரிசி – 1/4 கப்
சாமை அரிசி – 1/4 கப்
தினை அரிசி – 1/4 கப்
உளுந்து – 1/4 கப்
வெந்தயம்  – சிறிது
நுனி கொழுந்து பிரண்டை துண்டுகள் – 13
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப

*செய்முறை :*

•• வரகு, சாமை, தினை, குதிரைவாலி அரிசிகளை ஒன்றாகவும், வெந்தயம், உளுந்தையும் ஒன்றாகவும் 3 மணி நேரம் ஊற வைத்து நன்றாக ஊறியதும் நைசாக அரைத்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

•• கணு நீக்கிய பிரண்டையைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

•• கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரண்டையை போட்டு நன்றாக வதக்கி ஆற விடவும்.

•• நன்றாக ஆறியவுடன் நன்றாக அரைத்து  வரகு அரிசி மாவுடன் கலந்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.

•• தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை தோசையாக ஊற்றி மூடி, இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.

சத்து நிறைந்த பிரண்டை சிறுதானிய தோசை ரெடி.

*குறிப்பு :*

பிரண்டை பசி உணர்வை தூண்டும், சிறுதானியங்கள் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கும்.

பேபி கார்ன் மசாலா



பேபி கார்ன் மசாலா.


*என்னென்ன தேவை?*

பேபி கார்ன் - 1 கப்
ப்ரஷ் கிரீம் - 1.5 தேக்கரண்டி
பால் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - 2 தேக்கரண்டி (நறுக்கியது)
கசூரி மேதி - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான

*அரைக்க...*

பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 4 பல்
எண்ணெய் - 1 தேக்கரண்டி

*எப்படிச் செய்வது?*

•• பேபி கார்னை எடுத்து ஓரங்களை வெட்டி, குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். 1 விசில் வந்த பின் அடுப்பை அணைக்கவும்.

•• கடாயில் எண்ணெய் விட்டு வெட்டி வைத்த பெரிய வெங்காயம், தக்காளி, பூண்டு, சேர்த்து பச்சை வாசம் போகும் வரை சமைக்கவும். பின் அவற்றை ஜாரில் எடுத்து மசித்து வைக்கவும்.

•• கடாயில் எண்ணெய், வெண்ணெய் 1 தேக்கரண்டி விட்டு சீரகம், இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

•• பின் அரைத்து வைத்த விழுது, காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி ப்ரஷ் கிரீம் சேர்த்து கலந்து, பாலை கிரேவி பதம் வரும் வரை சிறிது சிறிதாக ஊற்றவும்.

•• பின்னர் அடுப்பை சிம்மில் 1 நிமிடம் வைக்கவும். இப்போது வேக வைத்த பேபி கார்னை சேர்த்து 3 நிமிடங்கள் கழித்து கசூரி மேதி, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

ஞாயிறு, 12 மார்ச், 2017

வித விதமான சூப் வகைகள்

வித விதமான சூப் வகைகள்


முருங்கைகீரை சூப்

 தேவையான பொருள்கள்:

முருங்கைகீரை - 2 கப்
வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு


செய்முறை

முதலில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்ணீரில் இறங்கியிருக்கும்.

அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.

(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டடும்



மணத்தக்காளி சூப்

 தேவையான பொருட்கள் :

மணத்தக்காளி - ஒரு கட்டு
வெங்காயம் - 1
தக்காளி  - 1
உப்பு  - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
மிளகு தூள் - சிறிது
தண்ணீர் - 2 டம்பளர்
எலுமிச்சை - அரை மூடி
நல்லெண்ணெய் - தேவையான அளவு
பெருங்காய தூள் - தேவையான அளவு
உளுந்து - தாளிக்க

செய்முறை :

மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து இலையை மட்டும் நறுக்கி வைக்கவும்.  

கடாயில்  நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து, மிளகாய், பெருங்காய தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு போட்டு 2 நிமிடம் வதக்கவும்.   அடுத்து அதில் மணத்தக்காளி கீரையை போட்டு வதக்கவும்.

அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.   2 கப் தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து அதை அரைத்த கீரை கலவையில் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலக்கி இறக்கவும்.   இறக்கியவுடன் எலுமிச்சை சாறு 5 சொட்டு விட்டு கலக்கி பரிமாறவும்.  சுவையான சத்தான மணத்தக்காளி சூப் தயார்.


தூதுவளை இலை சூப்.

 தேவையான பொருட்கள்:

தூதுவளை இலை - 1 கப்
புளி - சிறிய எலுமிச்சைப்பழ அளவு
சீரகம் - 1  ஸ்பூன்
மிளகு -  2 ஸ்பூன்
கொத்தமல்லி -  அரை ஸ்பூன்
பூண்டு - 5 பல்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 ஸ்பூன்
மல்லி இலை , கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய்  -  1 ஸ்பூன்


செய்முறை:

முதலில், ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து   தண்ணியை வடிகட்டி வைக்க வேண்டும்.

பின்னர், மிக்ஸியில் சீரகம், மிளகு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை அரைத்து  அதனுடன்  புளிதண்ணீர் சேர்த்து    தேவையான அளவு உப்பு  சேர்த்து   மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர், அதில் தூதுவளை கீரை மற்றும் பூண்டை அரைத்து கலந்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியாக, ஒரு கடாயில் எண்ணெய் அதில் கடுகை போட்டு தாளித்து, சூப்பில் கொட்டவும்

இதை சூப்பாகவும் குடிக்கலாம் அல்லது ரசமாக சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.

தேவைப்பட்டால்  1 தக்காளியை  மசித்து விட்டுகொள்ளவும். ்

கோதுமை பிரெட் – பனீர் சாண்ட்விச்



கோதுமை பிரெட் – பனீர் சாண்ட்விச்.


*தேவையானவை :*

கோதுமை பிரெட் – 6,
பனீர் துருவல் – கால் கப்,
தக்காளி – 2 (வட்டமாக வெட்டியது),
வெங்காயத் தாள் (நறுக்கியது), கேரட் துருவல் – தலா 2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி-பூண்டு பேஸ்ட்,
நெய், எண்ணெய், உப்பு, வெண்ணெய் – சிறிதளவு,
மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்.

*செய்முறை :*

•• கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், இஞ்சி-பூண்டு பேஸ்ட்டை வதக்கி, வெங்காயத் தாள், கேரட், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, பனீர் துருவல் போட்டுக் கிளறி இறக்க வேண்டும்.

•• தவாவில் சிறிது நெய் விட்டு, பிரெட்டை இருபுறமும் டோஸ்ட் செய்ய வேண்டும்.

•• பிரெட் நடுவில் வெண்ணெயைத் தடவி, பனீர் மசாலா, தக்காளி வைத்து, பரிமாறவும்.

•• (பிரெட் டோஸ்டர் இருந்தால், அதிலேயே சாண்ட்விச் செய்துகொள்ளலாம்).

*குறிப்பு :*

சரிவிகித ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. எளிதில் தயாரிக்க ஏற்றது. அனைவரும் சாப்பிடலாம். பனீர், வெண்ணெய் சேர்ப்பதால், உடலுக்கு நல்ல கொழுப்பு அதிகம் கிடைக்கும்.

கோதுமை ரவை தேப்லா.



கோதுமை ரவை தேப்லா.


*தேவையானவை :*

கோதுமை ரவை – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், ஓட்ஸ் – ஒரு டேபிள்ஸ்பூன் (வேண்டுமெனில்), ஓமம் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு- தேவையான அளவு, வெள்ளை மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – அரை சிட்டிகை.

*செய்முறை :*

அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, கோதுமை ரவை, ஓட்ஸ், ஓமம், உப்பு, மஞ்சள் தூள், வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து, மிருதுவாகப் பிசைந்து, 15 நிமிடங்கள் ஊறவிடவும்.

மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி, மெலிதான முக்கோணமாகச் செய்யவும்.

தவாவில் எண்ணெய் விட்டு, சூடானதும் தேப்லாவைப் போட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு, வெந்ததும் தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்.

*குறிப்பு :*

கோதுமையில் உள்ள பலன்கள் முழுமையாக கிடைக்கும். நார்ச்சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனானவர்களும் சாப்பிடலாம்.
ஓட்ஸ் சேர்த்துச் சாப்பிடுவதால், மதியம் வரை பசிக்காது. ஓமம் செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். மலச்சிக்கல் நீங்கும்.

கொள்ளு – பார்லி கஞ்சி



கொள்ளு – பார்லி கஞ்சி.

*தேவையானவை :*

பார்லி, கொள்ளு – கால் கப்,
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
பனங்கற்கண்டு – 2 டேபிள்ஸ்பூன்,
பூண்டு – 3 பற்கள்,
பாதாம் பருப்பு – 6,
பால் – ஒன்றரை கப்.

*செய்முறை :*

•• கொள்ளு, பார்லியைத் தனித்தனியே ஒரு மணி நேரம் ஊறவிட வேண்டும்.

•• பார்லி, வெந்தயம், கொள்ளு, பூண்டு, பால் சேர்த்து குக்கரில் குழைய வேகவிட வேண்டும்.

•• பாதாமை ஊறவைத்துத் தோல் உரித்து, மைய அரைக்க வேண்டும்.

•• பிறகு, தவாவில் வெந்த கஞ்சி, பாதாம் விழுது, பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு கொதிவிட்டு இறக்க வேண்டும்.

*குறிப்பு :*

எளிதில் செரிமானமாகும் உணவு இது. இதைத் தொடர்ந்துப் பருகிவந்தால், உடல் உறுதி பெறும். தேவையற்ற கொழுப்பு கரையும். உடனடி ஆற்றல் கிடைக்கும். குழந்தைகள், முதியவர்களுக்கு ஏற்றது. வாரத்துக்கு ஒரு நாள் சாப்பிடலாம்.

வெஜிடபிள் போண்டா.



சத்துக்கள் மிகுந்த வெஜிடபிள் போண்டா.


*தேவையான பொருள்கள்:*

கடலை மாவு - 1கப்
அரிசி மாவு - 5 கப்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்ப்பொடி - 3/4 டீஸ்பூன்
சமையல் சோடா - 2 சிட்டிகை

*காய்கறி மசாலா செய்ய:*

பொடியாக நறுக்கிய வெங்காயம் -1/2 கப்
பொடியாக அரிந்த காய்கறித் துண்டுகள் - 3கப்
(காலிப்ளவர், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட்)
உரித்த பட்டாணி - 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 கப்
நசுக்கிய பச்சை மிளகாய் - 11/2டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லித்தழை - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
லெமன் - 1

 *செய்முறை :*

•• நறுக்கிய காய்கறிகளில் தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் பிரஷர் குக்கரில் வேக வைக்கவும்.

•• கடாயில் சிறிது எண்ணெய் விட்டுச்  சூடாக்கி இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

•• அதில் மிளகாய் விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வெந்த காய்கறிகளைச் சேர்க்கவும். பெரிய அடுப்பில் சிறிது நேரம் நன்கு  வதக்கவும். ஈரம் நன்கு வற்றி காய்கறிக் கலவை ஒன்றுசேர்ந்து வரும்போது உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து  அடுப்பிலிருந்து இறக்கவும்.

•• மசாலா நன்கு ஆறியதும் எலுமிச்சை அளவு உருண்டைகள் செய்யவும். சலித்த கடலை மாவு, அரிசி மாவு, உப்பு சோடா,  மிளகாய்த்தூள் தண்ணீர் சேர்த்து கலந்து கொஞ்சம் சொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து கட்டிதட்டாமல் மாவைத் தயாரிக்கவும்.

•• செய்து வைத்துள்ள மசாலா உருண்டைகளை ஒவ்வொன்றாக அதில் தேய்த்து எடுத்து சூடான எண்ணெயில் போட்டு  பொரிக்கவும்.

சூடான வெஜிடபிள் போண்டா தயார்.தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

ஸ்பெஷல் வடை.



ஸ்பெஷல் வடை.


*தேவையானவை :*

துவரம்பருப்பு – அரை கப், கடலைப்பருப்பு – கால் கப், பச்சரிசி – 25 கிராம், முழு உளுத்தம்பருப்பு –  2 டேபிள்ஸ்பூன்,
முந்திரிப்பருப்பு – 10,
காய்ந்த மிளகாய் – 5, தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை – சிறிதளவு,
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு (தோல் சீவவும்),
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

*செய்முறை :*

•• துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு, அரிசி, முழு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை அலசி, ஒன்றுசேர்த்து நீரில் 2 மணி நேரம்  ஊறவைக்கவும்.

•• பிறகு நீரை வடித்து, தோல் சீவிய இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

•• இதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிசைந்து, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

சனி, 11 மார்ச், 2017

வித விதமான சமையல்கள்


 மட்டன் கோலா

விடுமுறை நாளன்று குடும்பத்தினர் அனைவரையும் கவர இந்த மாறுபட்ட சிற்றுண்டியை செய்து பாருங்கள்.
தேவையானவை :
கொத்துக்கற
ி - 1/2
கிலோ, சின்ன வெங்காயம
் - 10,
பூண்ட
ு - 5,
கறிவேப்பில
ை -
சிறித
ு ,
மிளகாய் பொட
ி - 1/2
ஸ்பூன், தனியா பொட
ி- 1/2
ஸ்பூன் , மஞ்சள் தூள
் - 1/4
ஸ்பூன், உப்ப
ு -
தேவைகேற்ப, வறுத்த உடைத்த கடலை - 2 ஸ்பூன், பட்டை ௦- சிறிது, கிராம்பு - சிறிது, சோம்பு - சிறித
ு,எ
ண்ணெய் - தேவைகேற்ப
செய்முற
ை :
வறுத்த உடைத்த கடலை, பட்டை, கிராம்பு, சோம்பு மற்றும் கொத்துக்கறியை தனித்தனியே நன்கு அரைத்துக்கொள்ளவும். இரண்டு கலவையையும் சேர்த்து அதனோடு வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா பொடி, உப்பு சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

 #ஈஸியா
#கொழுக்கட்டை_செய்ய_சில_டிப்ஸ்.

1.  கொழுக்கட்டை க்கு மாவு கிளரும் போது சிலருக்கு மாவு கட்டி தட்டி விடும், இதனால் சரியாக சொப்பு செய்ய வராது, இதற்கு மாவினை தண்ணீரில் கெட்டியாக கரைத்து  கொண்டு வானிலியில்  1 கரண்டி நீரில் சிட்டிக்கை உப்பு, பால் 1 ஸ்பூன், நல்லண்ணெய் 1 ஸ்பூன் சேர்த்து அது கொதித்ததும் கரைத்த மாவினை ஊற்றி கைவிடாமல் கிளறி ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி அதில் ஒரு பாத்திரத்தை போட்டு மூடிவிட்டு 1/2 மணி நேரம் கழித்து மாவினை எடுத்து நன்கு பிசைந்து கொழுக்கட்டை சொப்பு செய்தால் விள்ளாமல் விரியாமல் கொழுக்கட்டை செய்ய வரும்.

2. கையால் சொப்பு செய்ய வராவிட்டால் கரண்டி குழியின் வெளிப்புறம் எண்ணெய் தடவி மாவு வைத்து எடுத்து அதில் பூரணம் வைத்து கொழுக்கட்டை செய்யலாம்.

3.மேல் மாவு பிசையும் போது அதில் பால் (அ) வெண்ணெய் சேர்த்து பிசைய, கொழுக்கட்டை விரியாமல் பளபளப்பாக, சாப்டாக (soft) வரும்.


 அதிரசம்

தேவையான பொருட்கள் -
பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 3/4 கப்
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு  தேவையான அளவு
செய்முறை -
பச்சரிசியை கழுவி தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் தண்ணீரை நன்கு வடித்து விட்டு ஒரு துணியில் 20 நிமிடம் நிழலில் காய விடவும்.

பிறகு அந்த அரிசி லேசாக ஈர பதமாக இருக்கும் போதே மிக்சியில் நன்றாக பொடித்துக் கொள்ளவும். கொஞ்சம் கொஞ்சமாக அரைத்தால் நன்றாக பொடியாகும்.

பொடித்த மாவை சல்லடையில் வைத்து சலித்துக் கொள்ளவும். அதோடு ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து பொடித்த வெல்லத்தை போடவும். அதனுடன் சிறதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும். மீண்டும் வடிகட்டிய பாகை காய்ச்சவும். தீயை மிதமாக வைத்துக் கொள்ளவும்.

உருட்டு பதம் வர வரைக்கும் பாகை காய்ச்ச வேண்டும். பாகு பதம் தான் அதிரசம் செய்வதற்கு முக்கியமான ஒன்று. பதம் சரியாக வரவில்லை என்றால் எண்ணெயில் பொரிக்கும் பொது மாவு பிரிந்து போய் விடும் அல்லது அதிரசம் மிகவும் கடினமாக ஆகிவிடும்.
பதத்தை தெரிந்து கொள்வதற்கு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். வெல்லம் நன்றாக கொதித்ததும் சிறிது எடுத்து பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். பாகு எப்போது தண்ணீரில் கரையாமல் மெதுவான பந்து போல உருட்ட முடிகிறதோ அது தான் உருட்டு பதம். அந்த பதம் வரும்வரை பாகை தண்ணீரில் ஊற்றி அவ்வபோது பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
உருட்டு பதம் வருவதற்கே முன்னரே அடுப்பை அணைத்து விட்டால் அதிரசம் பிரிந்து போய் விடும். அல்லது அந்த பதத்தை தாண்டி விட்டால் அதிரசம் கடினமாகி விடும்.
உருட்டு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு பாகை அரிசி மாவின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டி வைத்து நன்கு கிளறவும். இரண்டும் நன்றாக சேரும் வரை கிளறவும்.

அந்த மாவை மூடி வைத்து ஒரு நாள் முழுதும் ஊற வைக்கவும். அடுத்த நாள் மாவு கொஞ்சம் கெட்டியாக அதிரசம் போடுவதற்கு ஏற்றது போல் இருக்கும்.

ஒரு வாழை இழை அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளவும். ஒரு எலுமிச்சை அளவு மாவை எடுத்து உருட்டி கவரில் வைத்து வட்டமாக தட்டி நடுவே ஒரு ஓட்டை போடவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை சூடாக்கவும். நன்றாக சூடானது தீயை மிதமாக வைத்து தட்டி வைத்துள்ள மாவை எடுத்து போடவும். ஒரு புறம் சிவந்ததும் திருப்பி போடவும். மறு புறம் சிவந்ததும் எடுத்து டிஸ்யு பேப்பரில் போடவும். அதிரசம் சீக்கிரமாக வெந்து விடும் அதனால் ஒரு ஒரு அதிரசமாக பொரித்து எடுக்கவும்.
குறிப்புகள் -
ஒரு நாள் கழித்து மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
250 கிராம் மாவுக்கு 10-13 அதிரசம் வரும். அதிரசதுக்கு நடுவே ஓட்டை போடாமலும் செய்யலாம்.
எண்ணெயில் பொரித்தவுடன் அதிரசம் நன்றாக உப்பி வந்தால் டிஸ்யு பேப்பர் வைத்து நன்றாக அமுக்கி எண்ணெயை எடுக்கவும்.


வாயுத்தொல்லையா? பூண்டு சூப் குடிங்க!

பூண்டை குழம்பில் சேர்த்தாலோ வேறு பதார்த்தங்களில் சேர்த்து சாப்பிட்டாலோ வாயுத்தொல்லையில் இருந்து விடுபடலாம்.

பூண்டில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, தாமிரசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களும் நிரம்பி உள்ளன.

கர்ப்பிணி பெண்கள் பூண்டு சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தைகளின் எடை அதிகரிக்கும்.

இதில் சூப் வைத்தால், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி குடிப்பார்கள்.

இதோ பூண்டு சூப்,

தேவையான பொருட்கள்

பூண்டுப் பற்கள் - 6

அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1 சிறியது

இஞ்சி - ஒரு சிறு துண்டு

பச்சை மிளகாய் - 1

கொத்தமல்லி இலை - சிறிது

புதினா - சிறிது

எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 1 டீஸ்பூன்

உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்றவாறு

செய்முறை

• வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.

• பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.

• ஒருகம்பியில் (வடை கம்பி அல்லது கூரான ஏதாவது கம்பி) பூண்டு பற்களை வரிசையாகக் குத்தி (தோல் நீக்கத் தேவையில்லை), அடுப்பு தீயில் காட்டி நன்றாக சுட்டெடுக்கவும். சற்று ஆறியவுடன், தோலை நீக்கி விட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.

• ஒரு சுத்தமான மெல்லிய துணியில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை வைத்து, ஒரு சிறு மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும்.

• ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தைப் போட்டு சற்று வதக்கவும்.

• பின்னர் அதில் சுட்ட பூண்டு, 2 கப் தண்ணீர் சேர்த்து, கட்டி வைத்துள்ள துணி முடிச்சை அதன் நடுவில் வைத்து, மூடி போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

• பின்னர், துணி மூட்டையை வெளியே எடுத்து, சூப்பிலேயே பிழிந்து விடவும்.

• அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து சூப்பில் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.

• தேவையான அளவிற்கு சூப் திக்கானதும், இறக்கி வைத்து, எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.

• கடைசியாக உப்பு, மிளகுத்தூள், சிறிது புதினா இலையை சூப்பின் மீது தூவி பருகவும்.


"மஷ்ரூம் பிரியாணி  செய்யும் முறை

தேவையான பொருள்கள்:

பாசுமதி அரிசி- 150 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 10 பல்
மஷ்ரூம் - 150 கிராம்
சோயா சன்ங்ஸ்(chunks) - 50 கிராம்
கொத்தமல்லி - கால் கட்டு
புதினா - கால் கட்டு
பச்சை மிளகாய் - 1
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - சிறிதளவு

செய்முறை :

இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். சோயா சன்ங்ஸை கொதிக்கும் நீரில் போட்டு பிழிந்து வைத்துக் கொள்ளவும். மஷ்ரூமை 4 ஆக அறிந்து கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் அறிந்து கொள்ளவும். சிறிது கொத்தமல்லி, புதினாவை தாளிக்க எடுத்து வைத்து கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு பொரிய விடவும்.

அதில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா, மஷ்ரூம், சோயா சன்ங்ஸை போட்டு நன்கு வதக்கவும்.

அதனுடன் அரைத்த விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும்.

பிறகு அரிசிக்கு தகுந்தவாறு தண்ணீர் ஊற்றவும். (1 டம்ளர் அரிசிக்கு 1 1 /2 டம்ளர் தண்ணீர்). அரிசியை முன்பே அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் ஊற வைத்திருக்கும் அரிசியை போட்டு நன்றாக கிளறி விட்டு குக்கரை மூடவும்.

சிம்மில் வைத்து நன்கு வெந்ததும் அடுப்பை நிறுத்தவும். சுவையான மஷ்ரூம் சோயா பிரியாணி தயார்.


புளிக் காய்ச்சல்!!!

தேவையானவை: புளி - பெரிய எலுமிச்சம்பழ அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வெல்லம் - சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை (அ) முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா - அரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, எள் - ஒரு டீஸ்பூன் (விருப்பப்பட்டால்) இவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும்.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, சிவந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து  வறுக்கவும். வேர்க்கடலை (அ) முந்திரி,  கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, கெட்டியான புளிக் கரைசலை விடவும். இதில் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் போட்டு, நன்றாக கொதித்ததும் வறுத்துப் பொடித்த பொடியை சேர்க்கவும்.  மேலாக எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

வெளியூர் பயணத்தின்போது இதை கையோடு எடுத்து சென்றால்,  தேவையானபோது உதிரான சாதத்தில் கலந்து கொள்ளலாம்.
குறிப்பு: வறுத்துப் பொடிக்கும்போது, சிறிது ஜாதிக்காயை உடைத்து, வறுத்துப் பொடித்து சேர்க்கலாம். ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. ஒரு மாதம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

தோசை நாம் அன்றாட உண்ணும் தோசையும் அதன் பின்னால் இருக்கும் ஆன்மிகமும்,ஜோதிடமும்
அக்னி -சூரியன்
அரிசி-சந்திரன்
உளுந்து -ராகு-கேது
வெந்தயம் -புதன்
தோசை கல் (இரும்பு)-சனி
தோசையின் நிறம்-செவ்வாய்
அதை உண்பவர்கள் குரு(ஆண்) ,சுக்கிரன்(பெண்)
இதன் உருவம் (Galaxy) பிரபஞ்சமே
தோசையை Clock vice சுட்டால் தான் வரும்,பிரபஞ்சம் சுற்றுவதும்
அப்படித்தானே
இந்த தோசையை ஒரு ஜோதிட பரிகாரமாக இருந்திருக்க வேண்டும் ஏன் நிச்சயம் இருந்திருக்க வேண்டும்
ஆரம்பத்தில் விஷேச நாட்களில் தோசையை தெய்வத்திற்கு படையலாக படைத்தது பின் உண்டுவந்தர்கள்
ஏன் இன்றும் பெருமாளுக்கு தோசையை படையலாக படைத்தது பிரசாதமாக கோவில்
வழங்குகிறார்
அப்போது இருந்த நம் முன்னோர்களுக்கு தோசை பலகார வகையாகத்தான் இருந்தது.
பின் நாளில் மக்களுக்கு வசதி வந்த பிறகு அன்றாட உணவு வகையாக மாறிவிட்டது.
தோசை இந்தச் சொல் எப்படி வந்தது என்பதற்கு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்,
( கல்லில் ) தோய்த்துச் செய்வது என்னும் பொருளில் தோய் + செய் என்னும் சொற்கள் இணைந்து உருவான இச்சொல், மக்கள் வழக்கில் தோசை என்று ஆனது என்ற குறிப்பு உண்டு

கடலைப்பருப்பு இனிப்புப் பணியாரம்


 வீட்டில் எப்போதும் இட்லி சுட்டு போர் அடித்திருந்தால், அப்போது மைதா மாவைக் கொண்டு சு+ப்பரான முறையில் பணியாரம் செய்து சாப்பிடலாம். அதிலும் இதனை மாலை உணவாக செய்து சாப்பிடுவது மிகவும் எளிது. குறிப்பாக பணியாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவும் கூட. இப்போது இந்த ஆரோக்கியமான கடலைப்பருப்பு இனிப்புப் பணியாரத்தை வீட்டில் இருந்தபடியே எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் :

கடலைப்பருப்பு - 2 கப்

மைதா மாவு - 2 கப்

தேங்காய் துருவல் - 1கப்

வெல்லம் - 2 கப் (பொடித்தது)

ஏலக்காய் - 6

நெய் - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :

🌺 முதலில் கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னா; அதனை நன்றாகக் கழுவி வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சு+டானதும், தேங்காய் துருவலுடன் தேவையான அளவு நெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

🌺 பிறகு வேகவைத்த கடலைப்பருப்பு, வறுத்த தேங்காய் துருவல், ஏலக்காய், பொடித்த வெல்லம் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்தக் கலவையை சிறிய எலுமிச்சைப்பழ அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

🌺 பின்னர் மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ள வேண்டும். தயாராக வைத்துள்ள உருண்டைகளை மைதா மாவுக் கலவையில் முக்கி எடுத்து, பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் நெய் விட்டுக் கொள்ளவும், உருண்டைகளை கல்லில் போட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்தால், கடலைப்பருப்பு பணியாரம் தயார்!!