வியாழன், 3 ஆகஸ்ட், 2017

கோதுமை பக்கோடா



கோதுமை பக்கோடா

*தேவையானவை:*

கோதுமை மாவு - 200 கிராம்
ராகி மாவு - 100 கிராம்
கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
(பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லித்தழை - 4 டீஸ்பூன் நறுக்கியது
கறிவேப்பிலை - 4 டீஸ்பூன் நறுக்கியது
பச்சைமிளகாய் - 2
(பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

*செய்முறை:*

எண்ணெய் தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக ஒரு பவுலில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், பிசைந்து வைத்த மாவை எண்ணெயில் பிய்த்துப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

புதன், 2 ஆகஸ்ட், 2017

பச்சை மிளகாயின் மருத்துவப் பயன்கள்


பச்சை மிளகாயின் மருத்துவப் பயன்கள்


ஆக பச்சை மிளகாய் என்றால் கொஞ்சம் பயம் உண்டு நம் வீட்டு ஆட்களுக்கும் சரி பிள்ளைகளும்
சரி ஏன் என்றால் அதில் இருக்கும் காரம், ஆனால்
வட மாநிலங்களில் பச்சை மிளகாய்ப் உணவில் சரிபதியாக சேர்த்து கொள்வதால் என்னவெ வலிமையும் நிறைந்து இருக்கிறார்கள், சரி அதில் இருக்கும் பயன்களை பார்ப்போம்.

🌾 நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் கேப்சைசின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

🌾 உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் பச்சை மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மைக் கொண்டது. ஏனெனில் பச்சை மிளகாயில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைக்க உதவும்.

🌾 பச்சை மிளகாயில் அதிகமான ஆன்டி-ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. நம் உடலின் இயக்க உறுப்புகளின் பாதிப்பிலிருந்து நம் உடலை பச்சை மிளகாய் காக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோயிலிருந்து காக்க உதவுகிறது.

🌾 பச்சை மிளகாயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், உணவு செரிமானம் வேகமாக நடைபெறும். மிளகாய்கள் மூளைக்குள் என்டோர்ஃபின்ஸை உற்பத்தி செய்யும். இது நம் மனநிலையை நன்றாக வைத்திருக்கும்.

🌾 பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோயினால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கலாம். பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கிறது.

🌾 பச்சை மிளகாயில் இயற்கையாகவே இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே பெண்கள் அடிக்கடி உணவில் இதைச் சேர்த்துக் கொள்வது மிகவும் உடலுக்கு நல்லது.

🌾 பச்சை மிளகாயில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவுகிறது. அதனால் காரசாரமான உணவை சாப்பிட்டால் நல்ல சருமத்தை நம்மால் பெற முடியும்.

🌾 பச்சை மிளகாயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. பச்சை மிளகாயை பயன்படுத்துவதால் மூக்கடைப்பு சரியாகும்

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள் . . .


கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள் . . .

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன.

இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக் களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்து விடுகிறது.

இவை அனைத்திற்கும் காரணம், இளம் வயதில் இருந்தே கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது தான். இவ்வாறு இளம் வயதில் சாப்பிட்ட கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கி, அதனால் உடல் பருமன் அடைவதோடு, இதய நோய்க்கும் ஆளாகின்றனர்.

ஏனெனில் அவ்வாறு தங்கும் கெட்ட கொழுப்புக்கள் ரத்தக் குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன.

அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும். இப்போது அப்படி, உடலில் கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து, ஆரோக்கியமாக வாழுங்கள்.

பார்லி :

தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.

கத்திரிக்காய் :

கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.

மீன் :

மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.

ஆப்பிள் :

ஆப்பிள்களில் வைட்டமின் `சி' மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.

நட்ஸ் :

நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

டீ :

அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

வெங்காயம் :

வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஓட்ஸ் :

ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.

முழு தானியங்கள் :

முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

சிட்ரஸ் பழங்கள் :

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

பசலைக் கீரை :

பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

சோயா பொருட்கள் :

சோயா பொருட்களிலும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளது.

பூண்டு :

பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.

வெண்டைக்காய் :

கத்திரிக்காயைப் போன்றே வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

ரெட் ஒயின் :

ரெட் ஒயினானது அதிகப்படியாக நார்ச்சத்து நிறைந்த திராட்சைகளால் செய்யப்படுவதால், இதனை உட்கொண்டால், இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதனால் தான் ரெட் ஒயினை அளவாக சாப்பிட்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.

சாக்லெட் :

சாக்லெட் அல்லது கொக்கோ கலந்து உணவுப் பொருட்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை கரைத்து, தமனிகளில் ஏற்படும் அடைப்புக்களை தடுக்கிறது.

பீன்ஸ் :

அனைத்து காய்கறிகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இருப்பினும் பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிவிட்டு சாப்பிட்டால் நல்லது. இல்லா விட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.

மிளகாய் :

மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டவை. சொல்லப்போனால், மிளகாயும் பூண்டு குடும்பத்தைச் சேர்ந்தது. மேலும் மிளகாயிலும் அல்லியம் என்னும் பொருள் உள்ளது.

மார்கரைன் :

இது வெண்ணைக்கு நல்ல மாற்றாக இருந்தாலும், இதில் ஸ்டெரால்ஸ் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பொருள் அதிகம் உள்ளது.

அவகேடோ :

இதுவரை அவகேடோவில் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால், இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தான உணவுப் பொருள் என்று தான் நினைத் திருக்கிறோம்.

ஆனால் உண்மையில், அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.

மைசூர் பாகு


மைசூர் பாகு

செய்ய தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 1 கப்
நெய் – 1 1/4 கப்
எண்ணெய் – 3/4 கப்
சர்க்கரை – 2 கப்
பால் – 1/4 கப்
தண்ணீர் – 1 /4 கப்
சமையல் சோடா – 1சிட்டிகை
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு சூடு செய்துகொள்ள வேண்டும். பிறகு, கடாயை சூடுபடுத்தி, அதில் கடலை மாவைச் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை தீயவிடாமல் சிவக்க வறுக்க வேண்டும். பச்சை வாசனை சென்ற உடன் அடுப்பை நிறுத்தி விட்டு, அதில் நெய் மற்றும் எண்ணைய்யை சேர்த்து கலந்து இறக்கி வைக்கவும்.
மீண்டும் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து நன்றாக சூடு செய்யவும். சர்க்கரை நன்கு கரைந்ததும் பாகு பதத்துக்கு வரும் வரை நன்றாக காய்ச்சி கலக்கவும். பாகு பதம் வந்ததும் இதோடு நாம் தயாரித்து வைத்த மாவைச் சேர்த்து கலக்க வேண்டும். நன்றாக மாவு கலந்ததும், சூடாக வைத்துள்ள எண்ணெய் நெய் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்க வேண்டும். கலவை கெட்டியானதும் ஒரு தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி தேவையான அளவுகளில் துண்டுகளாக செய்து ருசிக்கவும்

சுவையான சத்தான வெங்காயத்தாள் பொரியல்...



சுவையான சத்தான வெங்காயத்தாள் பொரியல்...

தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் – கால் கப்
வெங்காய தாள் – அரை கப்
தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்
கறிவேப்பலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
உப்பு – தேவைகேற்ப

செய்முறை :

* சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி தழை, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.


* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, ப.மிளகாய், கறிவேப்பலை போட்டு தாளித்த பின் சின்ன வெங்காயம் போட்டு சிறிது வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் வெங்காய தாள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயத்ததாள் விரைவில் வெந்து விடும்.

* ஐந்து நிமிடங்களுக்கு, பிறகு தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.

* சுவையான சத்தான வெங்காயத்தாள் பொரியல் ரெடி.

* இதை சூடு சாதம், சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

பாசிப்பருப்பு கடையல்


பாசிப்பருப்பு கடையல்

தேவையான பொருட்கள்:

பாசிப் பருப்பு – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

நெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்


செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை நன்கு நீரில் கழுவி, பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயை மிதமான நிலையில் வைத்து 15-20 நிமிடம் நன்கு பருப்பை வேக வைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும்.

பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, அத்துடன் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி இறக்கினால், பாசிப்பருப்பு கடையல் ரெடி!!!

ஆண்களுக்கு கேரட் முக்கியமா??


ஆண்களுக்கு கேரட் முக்கியமா??

ஆண்கள் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!!! ஆண்கள் தினமும் ஆப்பிளை சாப்பிடுகிறார்களோ இல்லையோ, கேரட்டை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் கேரட்டை ஆண்கள் உணவில் அதிகம் சேர்த்து வந்தால்,
அவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். மேலும் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட, கேரட் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும். அதுமட்டுமின்றி, இது ஒரு குளிர்கால காய்கறி என்பதால், இது விலை மலிவில் கிடைக்கும். மேலும் நிபுணர்களும், சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளை அந்தந்த சீசனில் அதிகம் சாப்பிட்டு வந்தால், அந்த பருவக் காலத்தில் ஏற்படும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று கூறுகின்றனர். இந்த கூற்று ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் தான். சரி, இங்கு கேரட்டை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்தால், நிச்சயம் இனிமேல் கேரட்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வீர்கள். இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆண்கள் அவ்வப்போது இரத்தத்தைத் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். அதற்கு வாரத்திற்கு 2 முறை கேரட்டை ஜூஸ் போட்டு குடிக்கலாம். இல்லாவிட்டால், தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வரலாம். விந்தணுக்களை அதிகரிக்கும்ஆண்கள் கேரட் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவு அதிகரிப்பதோடு, அதன் தரமும் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்போர் தினமும் கேரட்டை தவறாமல் சேர்த்து வருவது நல்லது. செரிமானம் கேரட் செரிமானத்திற்கும் உதவும். ஆகவே செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு கேரட்டை சாப்பிட்டு வந்தால், விரைவில் செரிமான பிரச்சனை நீங்கும். வயிற்று கோளாறு கேரட்டை ஆண்களும் சரி, பெண்களும் சரி தினமும் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகும். அதிலும் வாயுத் தொல்லை இருக்கும் போது, கேரட் சாப்பிட நீங்கும். கொலஸ்ட்ரால் ஆண்கள் எப்போதுமே தங்களது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தினமும் இரவில் உணவு உண்ட பின்னர் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வர, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவானது கட்டுப்பாட்டுன் இருக்கும். ஆரோக்கியமான கண்கள் கேரட் சாப்பிட்டால், கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் கேரட் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவானது குறைந்து, இதயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். பல் பராமரிப்பு கேரட்டை சாப்பிட்டு வந்தால், பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தடுக்கலாம். அதிலும் குறிப்பாக ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வலியுடைய மூட்டு வீக்கம் ஆண்களும் சரி, பெண்களும் சரி, இருவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வலியுடைய மூட்டு வீக்கம். இத்தகைய மூட்டு வீக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால், தினமும் கேரட்டை தவறால் சாப்பிட்டு வர வேண்டும். இதானல் அதில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும். புற்றுநோயை தடுக்கும் கேரட்டில் உள்ள நன்மைகளில் சிறப்பான ஒன்று தான் புற்றுநோயை தடுக்கும் என்பது. ஆகவே தினமும் கேரட் சாப்பிட்டு புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விலகியிருங்கள். நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தான் எளிதில் நோய்களானது தொற்றிக் கொள்ளும். ஆகவே எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கேரட்டை சாப்பிடுங்கள். இது நோயெதிர்ப்பு சக்தியை வலுவானதாக மாற்றும். நீரிழிவு நீரிழிவு இருக்கும் போது கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால், இன்சுலினை சீராக வைத்துக் கொள்ள உதவும். மலச்சிக்கல் குடலியக்கம் சீராக செயல்பட்டு, மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு சேரட் சாப்பிட்டு வாருங்கள். ஆண்கள் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!!! இரத்த அழுத்தம் கேரட்டில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

திங்கள், 31 ஜூலை, 2017

உடலுக்கு ஆற்றலைத் தரும் சப்போட்டா பழம்



உடலுக்கு ஆற்றலைத் தரும் சப்போட்டா பழம்

கண்களுக்கு நல்லது: சப்போட்டா பழம் வைட்டமின் ஏ வை அதிகளவு கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி படி வைட்டமின் ஏ வை கொண்டுள்ளதால் பார்வையை பலப்படுத்துவதோடு முதுமையை தள்ளிபோடும் ஆற்றலை வழங்குகிறது. ஆதலால் தினமும் ஒரு சப்போட்டா பழம் எடுத்துக்கொள்ளலாம்..

இதய பாதுகாப்பு: இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்றபடி பாதுகாக்கும் தன்மையை சப்போட்டா பழம் கொண்டுள்ளது என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான தூக்கம் வரும்.

ஆற்றலை வழங்கக்கூடியது: நாம் சுறுசுறுப்பாக நடந்து செல்ல நமக்கு மிகவும் அவசியமாக இருப்பது ஆற்றல். அந்த ஆற்றலை அதிகளவு கொண்டுள்ளது சப்போட்டா பழம் . ஏனெனில் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் குளுக்கோஸ்சை கொண்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு ஆற்றல் அதிகம் தேவைப்படும் அதனால் அவர்களுக்கு சப்போட்டா பழம் பரிந்துரைக்கப்படுகிறது.

புற்றுநோய் தடுப்பு: வைட்டமின் ஏ மற்றும் பி யை கொண்டுள்ளதால் உடலில் ஏற்படக்கூடிய சளி, தோளின் அமைப்பு முறை, போன்றவற்றை ஆரோக்கியமாக பராமரிக்கிறது. சப்போட்டாவில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்கள், நார்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. அதாவது வாய் குழி புற்றுநோய், பெருங்குடல் சளி சவ்வை நச்சுகளிடமிருந்து பாதுகாக்க வைட்டமின் ஏ வை கொண்டு பாதுகாப்பு வழங்குகிறது.

எலும்பை உறுதிப்படுத்தும்: எலும்பை பலப்படுத்த தேவையான கால்சியம், பாஸ்பரஸ், இருப்பு சத்துகளை அதிகளவு கொண்டுள்ள சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் எலும்பை பலப்படுத்தலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் எலும்பின் வளர்ச்சியை மேம்படுத்தி எலும்புக்கு வலு சேர்க்கிறது.

மலச்சிக்கலுக்கு நிவாரணம்: சப்போட்டா சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. சப்போட்டா மூலமாக நார்ச்சத்துகளை நமது உடலுக்கு 5.6/100g அளவு வழங்குகிறது. இதனால் மலச்சிக்கள் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் சப்போட்டா பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.

பித்தம் நீக்க: சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து. சப்போட்டா பழத்தை கூழாக்கி, சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்து போட்டு சாப்பிடலாம். இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்.

கறிவேப்பிலை குழம்பு



கறிவேப்பிலை குழம்பு
.
#தேவையானப்_பொருட்கள்:
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
மிளகு - 2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
புளி - எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
.
#செய்முறை:
உப்பு, புளி இரண்டையும் ஊற வைத்து, கரைத்து, 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.
.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும். -
அதே வாணலியில் கறிவேப்பிலையைப் போட்டு சிறிது வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின்னர் அத்துடன் வறுத்து வைத்துள்ள பருப்புகள், மிளகாய், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
.
தேங்காய்த்துருவலை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் மீதமுள்ள எண்ணையை விட்டு, சூடானதும் அதில் கடுகு போட்டு, வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம், வெந்தயம் போட்டு, வெந்தயம் சற்று சிவந்ததும் (கருக விடக்கூடாது) அதில் புளித்தண்ணீரை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் பொடித்து வைத்துள்ள கறிவேப்பிலைப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கி விடவும்.
-
மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து, தேவையானால் சிறிது நீரையும் சேர்த்துக் கிளறி சிறு தீயில் மீண்டும் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.
.
#குறிப்பு: விருப்பமானால் ஓரிரண்டு பூண்டுப்பற்கள், மற்றும் சாம்பார் வெங்காயத்தையும் தாளிப்பில் சேர்க்கலாம்.
.
நல்ல காரசாரமான இந்தக்குழம்பு குளிர் காலத்துக்கு ஏற்றது.

சிறப்பான சிறுதானியம் குதிரைவாலி



சிறப்பான சிறுதானியம் குதிரைவாலி

ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது. உடலில் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பு அளவை குறைப்பதிலும் செரித்தலின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது. உடலில் கபத்தினுடைய ஆதிக்கம் அதிகரித்து அதனால் அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுவார்கள்.

குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும். நூறு கிராம் குதிரைவாலியில் புரத சத்து  6.2கிராம், கொழுப்பு சத்து  2.2 கிராம், தாது உப்புகள் 4.4 கிராம், நார்ச்சத்து 9.8 கிராம், மாவுச்சத்து 65.5 கிராம், கால்சியம் 11 மில்லிகிராம், பாஸ்பரஸ் 280 மில்லிகிராம் என அடங்கியிருப்பதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மருத்துவ பயன்கள் - உடலைச் சீராக வைக்க உதவுகிறது, சர்க்கரை அளவினை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்டாக வேலை செய்கிறது, இரும்புச்சத்து ரத்தசோகை வராமல் தடுக்கவும், அதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது.

குதிரைவாலியில் ஒரு சத்தான ரெசிபி -

குதிரைவாலி இடியாப்பம்

தேவையானவை:

குதிரைவாலி அரிசி - 1/2 கிலோ
தேங்காய்த் துருவல் - 1/4 கப்,
வெல்லம் - 3 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப, ,

செய்முறை:

குதிரைவாலி அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். நீரை நன்றாக வடித்து விட்டு ஈரம் காய்ந்ததும், மிக்ஸியில் நைசாக அரைத்துக்கொள்ளவும். மிக்ஸியில் அரைக்க முடியவில்லையெனில் மாவு மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு மாவு எடுத்து, வெதுவெதுப்பான நீரில் நல்லெண்ணெய், உப்பு சேர்த்து சிறிது சிறிதாக ஊற்றிப் பிசைந்து கொள்ளவும். இடியாப்ப அச்சில் மாவைப் போட்டுப் பிழிந்து, ஆவியில் வேகவிட்டு எடுத்தால், இடியாப்பம் தயார். பொடித்த வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் தூவிப் பரிமாறவும்.

கோதுமை வெஜ் கொழுக்கட்டை



கோதுமை வெஜ் கொழுக்கட்டை  தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு       : ஒரு கப்
அரிசிமாவு : ஒரு மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் : பொடியாக நறுக்கியது ஒன்று
பீன்ஸ் : பொடியாக நறுக்கியது
கேரட் : சிறிது துருவியது
உருளைக்கிழங்கு : துருவியது ஒன்று
கோஸ் துருவல் : ஒரு கப்
மிளகாய் தூள் : ஒரு டீஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
நல்லெண்ணெய் : 2 தேக்கரண்டி
ஆயில் : 2 தேக்கரண்டி                                                                                            செய்முறை:

வெறும் வாணலியில் கோதுமை மாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இத்துடன் அரிசி மாவு மற்றும் உப்புச் சேர்க்கவும். அதனுடன் கொதிக்கும் நீரை சிறிது சிறிதாக ஊற்றி, கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசையவும். நல்லெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, பீன்ஸ், கேரட், கோஸ், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு ட்ரையாகும் வரை வதக்க வேண்டாம். லேசான சதசதப்புடன் இருக்கும் அளவிற்கு வதக்கினால் போதும்.

பிசைந்து வைத்துள்ள மாவை எலுமிச்சை பழ அளவு உருண்டையாக எடுத்து, லேசாக எண்ணெய் தொட்டுக் கொண்டு கிண்ணம் போல் செய்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு வதக்கிய காய்கறி கலவையை வைத்து, மூடி ஓரத்தை ஒட்டவும். மீதமுள்ள மாவிலும் இதே போல் தயார் செய்து, அவற்றை இடர் பானையில் வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்தெடுக்கவும்.

மாலை நேர டிபனுக்கு சுவையான கோதுமை வெஜ் கொழுக்கட்டை தயார். தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை. குழந்தைகளும், சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடுவதற்கு சிறந்த சத்தயன உணவு இது

பாவ் பாஜி / Pav bhaji



பாவ் பாஜி / Pav bhaji

பாவ் பாஜி மும்பையில் மிகவும் பிரபலமானதாகும்.

தேவையான பொருள்கள் -

உருளைக்கிழங்கு - 3
பிரஷ் பட்டாணி - 100 கிராம்
காலிபிளவர் - 100 கிராம்
கேரட் - 1 சிறியது
குடமிளகாய் - 1
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
பாவ் பாஜி மசாலா - 1 மேஜைக்கரண்டி
வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
மல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி

செய்முறை -

உருளைக்கிழங்கு, கேரட் இரண்டையும் தோல் சீவி வெட்டி வைக்கவும். காலி பிளவரையும் நறுக்கி வைக்கவும்.
குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், காலிபிளவர்,  மற்றும் பட்டாணி, சிறிது உப்பு  சேர்த்து 3 விசில் வரும் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
 
நீராவி அடங்கியதும் மூடியை திறந்து வெந்த காய்கறிகளை ஒரு மத்து கொண்டு நன்கு மசித்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, குடமிளகாய்,  மல்லித்தழை எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பச்சை வாடை போனதும் நறுக்கி வைத்துள்ள குடமிளகாய் சேர்த்து வதக்கவும். குடமிளகாய் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் காஷ்மீரி மிளகாய் தூள், பாவ் பாஜி மசாலா தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து  ஒரு நிமிடம் கிளறவும்.
பிறகு மசித்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி 100 மில்லி தண்ணீரை ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். உப்பு சரி பார்த்து தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். மூடி போட்டு கொதிக்க விடவும்.
மசாலா கெட்டியானதும் வெண்ணெய் சேர்த்து கிளறி பிறகு மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். பாவ் பாஜி மசாலா ரெடி.

பாவ் பன் செய்முறை -

தேவையான அளவுக்கு பாவ் பன் எடுத்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து லேசாக சூடானதும் ஒரு மேஜைக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும். பன்னை அதில் சேர்த்து இருபுறமும் லேசாக சூடு படுத்தி எடுத்துக் கொள்ளவும்.

சூடு படுத்திய பாவ் பன்னோடு இந்த மசாலாவை சேர்த்து அதன் மேல் சிறிது வெண்ணெய் வைத்து பரிமாறவும்.

சாம்பார் சாதம்


சாம்பார் சாதம்

 *தேவையானபொருட்கள்*

புழுங்கல்அரிசி                             – 1 கப்
துவரம்பருப்பு                               – 1/4 கப்
மஞ்சள்பொடி                               – 1/4 டீஸ்பூன்
கத்தரிக்காய்                                 – 2
முருங்கைக்காய்                        – 1
பரங்கிக்காய்                                 – 1/2 கப்
தக்காளி                                          – 1
சின்னவெங்காயம்                     – 15
புளி                                                   – சிறிய எலுமிச்சையளவு
எண்ணெய்                                    – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு                                               – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு                         – 1/2 டீஸ்பூன்
உப்பு                                                 – தேவையான அளவு

*அரைக்க*

சிவப்புமிளகாய்                         – 5
மல்லி                                            – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு                        – 1/2 டீஸ்பூன்
வெந்தயம்                                   – 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல்               – 1 டீஸ்பூன்
பெருங்காயம்                            – சிறிது

*சாம்பார் சாதம் செய்முறை*

துவரம்பருப்பை மஞ்சள்பொடி போட்டு வேக வைத்துக் கொள்ளவும். அரிசியைக் கழுவி குழைய வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

காய்கறிகளை சதுரத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை

 போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி,காய்கறிகள் சேர்த்து வதக்கி தண்ணீர்,உப்பு சேர்த்து வேக விடவும்.

காய்கறிகள் வெந்தவுடன் புளித்தண்ணீர்,அரைத்து வைத்துள்ள பொடி, வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

 நன்கு கொதிக்கும் பொழுது வேக வைத்த சாதத்தை அதில் கலந்து நன்கு கிளறி சூடாகப் பரிமாறவும்.


சிக்கன் பாப்கார்ன் ஃப்ரை / CHICKEN POPCORN FRY..



சிக்கன் பாப்கார்ன் ஃப்ரை / CHICKEN POPCORN FRY...



*தேவையான பொருட்கள்*

சிக்கன் துண்டுகள்      –        2(எலும்பில்லாதது, சிறிதாக நறுக்கியது)

வெங்காயம்            -       1

பூண்டு                 –        4 பற்கள்

உப்பு                      –        தேவையான அளவு

நல்ல மிளகு தூள்      –        தேவையான அளவு

*மாவுக் கலவைக்கு*

மைதா                 –        1 கப்

ஆர்கனோ              –        2 தேக்கரண்டி

உப்பு                      –        தேவையான அளவு

நல்ல மிளகு            –        தேவையான அளவு

*முட்டை கலவைக்கு*

முட்டை                 –        1

பால்                     –        1 மேஜைக்கரண்டி

பாப் கார்ன் கலவைக்கு

பிரட் தூள்கள்           –        1 கப்

சோளம்(Corn Flakes)           -           1 கப்

உப்பு                   –        தேவையான அளவு

நல்ல மிளகு           –        தேவையான அளவு

*செய்முறை*


தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

சிக்கனை நறுக்கிக் கொள்ளவும்

வெங்காயம் மற்றும் பூண்டினை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்

லேசாக அரைத்துக் கொள்ளவும்

பின்பு அரைத்த விழுதுடன் சிக்கன், உப்பு மற்றும் நல்ல மிளகு தூள் சேர்க்கவும்

நன்கு கலக்கி தனியே வைக்கவும்

சோளத்தை ஒரு பிளாஸ்டிக் கவரில் எடுத்துக் கொள்ளவும்

அதன் மீது சப்பாத்திக் கட்டை வைத்து உருட்டவும். அப்போது சோளம் உடைந்து சிறிய துண்டுகளாகும்

பின்பு பிரட் தூள்கள், சோளம், உப்பு மற்றும் நல்ல மிளகை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

அவற்றை நன்கு கலக்கவும்

அதன் பின் மாவு, ஆர்கனோ, உப்பு மற்றும் நல்ல மிளகை மற்றொரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

அவற்றையும் நன்கு கலக்கி தனியே வைக்கவும்

பின்பு முட்டை மற்றும் பாலை வேறொரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

முட்டையை நன்கு அடித்து கலக்கவும்

அனைத்தையும் தயாராக வைக்கவும்

பின்பு ஊற வைத்த சிக்கனை எடுத்து மாவுக்கலவையில் போடவும்

மாவு அனைத்து பக்கங்களிலும் படுமாறு நன்கு கிளறவும்

பின்பு சிக்கன் துண்டுகளை முட்டையில் முக்கி எடுக்கவும்

அதன் பின் அதனை பிரட் கலவையில் போடவும்

பின்பு மீண்டும் முட்டையில் முக்கி எடுக்கவும்

அதன்பின் மீண்டும் பிரட் கலவையில் போட்டு எடுக்கவும்

அனைத்து துண்டுகளையும் இதே போல் செய்யவும்

பின்பு அவற்றை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்

பின்பு ஒரு மூடியால் மூடி விடவும்

பொன்னிறமாக பொரிக்கவும்

சிக்கன் ஃப்ரை ரெடி!!!!

குழம்பு மிளகாய் மசால் பொடி..



குழம்பு மிளகாய் மசால் பொடி..


*தேவையான பொருட்கள்:*

கொத்தமல்லி – 500 கிராம்

மிளகாய் வத்தல் – 500 கிராம்

சீரகம் – 250 கிராம்

சோம்பு – 50 கிராம்

மிளகு – 100 கிராம்

கடுகு –  25 கிராம்

வெந்தயம் – 25 கிராம்

அரிசி – 100 கிராம்

உளுந்து – 100 கிராம்

துவரம்பருப்பு – 200 கிராம்

கடலைப்பருப்பு – 200 கிராம்

பெருங்காயத்தூள் – 25 கிராம்

மஞ்சள்தூள் – 100 கிராம்

கறிவேப்பிலை – 50 கிராம்

எண்ணெய் – சிறிது

*செய்முறை:*

கொத்தமல்லியை சிறிது எண்ணெய் விட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.

 மிளகாய் வத்தலை காம்பு கிள்ளி காயவைத்து எண்ணையின்றி லேசாக வறுத்துக் கொள்ளவும்.

சீரகம், சோம்பு, மிளகை ஒன்றாகச் சேர்த்து எண்ணெய் விடாமல் லேசாக வறுத்துக் கொள்ளவும்.

 (லேசாக பொரிந்தபின் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்).

பின்பு கடுகையும், வெந்தயத்தையும் போட்டு அதே போல் எண்ணெய் விடாமல் வறுக்கவும்.

 (வெந்தயமும், கடுகும் லேசாக பொரியும் வரை வறுத்தால் போதுமானது).

 அரிசியை எண்ணெய் விடாமல் லேசாக பொரியும் வரை வறுக்கவும்.

 உளுந்தையும் எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

 துவரம்பருப்பையும், கடலைப்பருப்பையும் லேசாக எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

 பெருங்காயத்தையும், கறிவேப்பிலையையும் ஒன்றாகச் சேர்த்து எண்ணெய் விடாமல் வறுக்கவும்.

 (கறிவேப்பிலை மொறு மொறுவென ஒடிக்க வரும் அளவுக்கு வறுத்துக் கொள்ளவும்).

கடைசியாக மஞ்சள்தூளையும் எண்ணெய் விடாமல் லேசாக வறுத்துக் கொள்ளவும்.

 இதுவரை வறுத்த எல்லாவற்றையும் ஒரு பேப்பரில் பரப்பி ஆற விடவும்.

 ஆறியபின் மிஷினில் கொடுத்து திரித்து வாங்கவும்.

 இந்த மசால் பொடியை ஆறவைத்து காற்றுப்  புகாத டப்பாக்களில் வைத்திருந்து பயன்படுத்திக் கொள்ளவும்.

*இது*

*புளிக்குழம்பு,*
*மீன் குழம்பு,*
*மட்டன் குழம்பு,*
*காரக் குழம்பு*

*என எல்லாவற்றுக்கும் ஏற்ற குழம்பு மசால் பொடி.*

 நல்ல வாசனையுடன், ருசியாக இருக்கும்.

அரிசி – பொன்னி புழுங்கல் அரிசி அல்லது பச்சரிசி பயன்படுத்திச் செய்ய சுவையாக இருக்கும்.

வறுப்பதற்கு முன் கல் பார்த்துக் கொள்ளவும்.

வறுக்கும் போது குறைவான எண்ணெய் சேர்க்க மசால் பொடி வருடக் கணக்கில் கெடாமல் இருக்கும்.

வறுக்கும் போது வறுபடும் பொருட்கள் கருகி விடாமல் மிதமான தணலில் வறுப்பது அவசியம்.

 அப்பொழுதுதான் மசால் பொடியின் நிறமும், சுவைவும் குறையாமல் இருக்கும்.


க்ரீன் சில்லி சிக்கன் / GREEN CHILLI CHICKEN...



க்ரீன் சில்லி சிக்கன் / GREEN CHILLI CHICKEN...


*தேவையான பொருட்கள்*

*சிக்கனை ஊற வைக்க*

சிக்கன்                     –        300 கிராம்

நெய்                       –        1 தேக்கரண்டி

வெங்காயம்                –        2

எலுமிச்சை சாறு           –        1 மேஜைக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது       –        1 தேக்கரண்டி

மிளகாய் தூள்             –        1/4 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்          –        1/2  தேக்கரண்டி

மஞ்சள் தூள்              –        சிறிது

உப்பு                      –        தேவையான அளவு

*அரைக்க*

மல்லி தளை              –        1/2 கப்

பச்சை மிளகாய்           –        2

தாளிக்க

எண்ணெய்                –        1 மேஜைக்கரண்டி

கறி வேப்பிலை           –        1 கொத்து

ஜீரகம்                    –        1/4 தேக்கரண்டி

பச்சை மிளகாய்           –        2 - 3

*செய்முறை*

சிக்கனை மோரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். அல்லது 2 மணி நேரமாவது ஊற வைக்கவும்.

பச்சை மிளகாய், மல்லித்தளையை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் சிக்கனை எடுத்து அதனுடன் ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்க்கவும்.

நன்கு கலக்கவும். சிக்கன் வேகும் வரை வேக வைக்கவும்.

ஒரு பானில் எண்ணெய் விட்டு சூடானதும் ஜீரகத்தை தாளிக்கவும். பின்பு கறி வேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.

பின்பு அதனுடன் சிக்கன் மற்றும் அரைத்த விழுது சேர்க்கவும். நன்கு கிளறி 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.

க்ரீன் சில்லி சிக்கன் ரெடி!!!!!!!!!

பப்பாளி பழத்தின் மகத்துவம்



பப்பாளி பழத்தின் மகத்துவம்
***********************************

1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
5. பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
6. பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
7. பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
8. பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
9. பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
10. பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
11. பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
12. பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

வாழைப்பழ இனிப்பு அடை..


வாழைப்பழ இனிப்பு அடை..

 குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் உகந்தது இந்த கோதுமை வாழைப்பழ அடை. இன்று இந்த அடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  சத்தான கோதுமை வாழைப்பழ இனிப்பு அடை தேவையான பொருட்கள் :  

கோதுமை மாவு - 350 கிராம், வாழைப்பழம் - 2, கருப்பட்டி - 200 கிராம், ஏலக்காய் - 5 கிராம் (பொடிக்கவும்), முந்திரிப்பருப்பு - 100 கிராம் (நறுக்கவும்), நெய் - 20 மி.லி., பல் பல்லாக நறுக்கிய தேங்காய் - 100 கிராம், தண்ணீர் - 1/2 லிட்டர்.

செய்முறை :  

கருப்பட்டியை சிறிது தண்ணீரில் கரைத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.    வாழைப்பழத்தை நன்கு மசித்து, இத்துடன் கோதுமை மாவு, ஏலக்காய்த்தூள், கரைத்த கருப்பட்டியை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.  

தோசைக்கல்லை காயவைத்து சிறிது நெய் விட்டு அடையாக ஊற்றி மேலே முந்திரிப்பருப்பு, தேங்காயை தூவி மிதமான சூட்டில் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.   சூப்பரான கோதுமை வாழைப்பழ அடை ரெடி.


இப்படித்தான் கிரீன் டீ தயாரிக்கணும்...



இப்படித்தான் கிரீன் டீ தயாரிக்கணும்...

கிரீன் டீயை தூளாக வாங்கி பயன்படுத்த கூடாது. உலர்த்திய கிரீன் டீ இலைகளை வாங்கி, வெந்நீரில் போட்டு, மூடிவைக்க வேண்டும்.

ஒரு சில நிமிடங்களில் கிரீன் டீயின் ஃபிளேவர் வெந்நீரில் கலக்கும்.

 இதில், சர்க்கரை சேர்க்காமல், தேவைப்பட்டால் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடித்தால் முழு பலன்களும் கிடைக்கும்.

க்ரீன் டீயில் பால் சேர்க்கக்கூடாது.

1.கிரீன் டீயில் ஃப்ளவனாய்டு (Flavonoid), கேட்டச்சின் (Catechin) முதலான பாலிபீனால்கள் (Polyphenol) அதிகம் உள்ளன. இவை சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்பட்டு, உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றன. இளமையிலேயே வயதான தோற்றம் வராமலிருக்க, தினமும் ஒரு கப் கிரீன் டீ அருந்தலாம்.

2. கிரீன் டீயில் சிறிதளவு காஃபின் (Caffeine) இருக்கிறது. இது மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மீட்டர்களைத் தூண்டி, நரம்பு இயக்கங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.இதனால் சுறுசுறுப்பான உணர்வு கிடைக்கும். மூளை நன்றாக இயங்கும்.

3.கிரீன் டீ தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, மறதி நோயான அல்சைமர், மூளையில் டோபோமைன் சரியாகச் சுரக்காததால் வரும் பார்கின்சன் வருவதற்கான வாய்ப்பு 25 சதவிகிதம் குறைகிறது.

4.கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது என்பதால், உடலில் தேவையற்ற கட்டிகளை வளரவிடாது. பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளை கிரீன் டீ குறைக்கிறது.

5. கிரீன் டீயில் அமினோ அமிலங்கள் உள்ளன. இது உடல் மற்றும் மனச் சோர்வைப் போக்கக்கூடியது. எனவே, மன அழுத்தம் உள்ள சமயங்களில் கிரீன் டீ அருந்தலாம்.

6. வெயிட்லாஸ் செய்ய விரும்புகிறவர்கள் தினமும் ஒரு கிளாஸ் கிரீன் டீ அருந்தலாம். இது கொழுப்பைக் கரைத்து ஸ்லிம் ஆக உதவும்

சிக்கன் பொடிமாஸ்



 சிக்கன் பொடிமாஸ்...


*தேவையானவை :*

எண்ணெய் - தே.அளவு
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
சோம்பு
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 1 ( நறுக்கவும்)
மஞ்சள்தூள் - 1/ 4டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கரம்மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
முட்டை -2

*சிக்கனை வேக வைக்க :*

சிக்கன் - 300 கிராம்
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

*செய்முறை :*

🍲கோழியை நன்கு சுத்தபடுத்தி பெரிய துண்டுகளாக நறுக்கி அதில் நிறைய நீர் விட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வேக வைத்து சிக்கனை உதிரி உதிரியாக பொடிமாஸாக செய்து கொள்ளவும்.

🍲அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

🍲வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, மஞ்சளுதூள். மிளகாய்த்தூள், உப்பு, 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள், சிக்கன் ஸ்டாக் சேர்த்து நன்றாக வதக்கவும்.

🍲சிக்கன் பொடிமாஸை சேர்த்து 5 அல்லது 7 நிமிடங்கள் டிரையாக வதக்கவும்.

🍲அதில் 2 முட்டையை உடைத்து ஊற்றி சிக்கனுடன் நன்றாக கலந்து கிளறி விடவும்.

🍲சிக்கன் பொடிமாஸ் தயாரானதும் அடுப்பை அணைக்கவும்.