ஞாயிறு, 23 ஜூலை, 2017

இயற்கை மருத்துவம்



இயற்கை மருத்துவம்..

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

கேரட் சாறும் சிறிது தேனும்  கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில்  போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச்  செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும்.  புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர்  சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும். இருமல், தொண்டை கரகரப்பு பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு  போகும்.

பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம்  குணமாகும்.

வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன்  சாப்பிட்டால் டான்சில் கரையும்.


வேர் முதல் இலை வரை அனைத்திலும் மருத்துவத் தன்மை கொண்டது நன்னாரி…


வேர் முதல் இலை வரை அனைத்திலும் மருத்துவத் தன்மை கொண்டது நன்னாரி…


நன்னாரிகொடி வகையைச் சேர்ந்தது. எதிரடுக்கில் அமைந்த குறுகி நீண்ட இலைகளையுடைய கம்பி போன்ற கொடியினம். இந்த வேரின் மேற்புரம் கருமை நிறமாகும். உள்ளே வெண்மை நிறமாகவும், நல்ல மணமுடைய தாகவும், வாயிலிட்டுச் சுவைக்க சிறிது கசப்பாகவும் இருக்கும். விதை நாற்றுக்கள் மூலம் இனப்பெருக்க செய்யப்படுகிறது.

முக்கிய வேதியப் பொருள்கள் – இலைகளிலிருந்து ரூட்டின், வேர்களிலிருந்து ஹெக்ஸாட்ரை அக்கோன்டேன், லூபியால், ஆல்பா அமரின், பீட்டா அமரின், இட்டோஸ்டிரால் ஆகியவற்றில் எண்ணெய் எடுக்கப்படுகிறது.

பயன் தரும் பாகங்கள்:

வேர், பட்டை, மற்றும் இலைகள்.

மருத்துவ பயன்கள்

1.. சித்த மருத்துவத்தில் இதன் வேர்கள் பயன்படுத்தப்படுகிறது. சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஸ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நல்ல மருந்து.

2.. பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.

3.. பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம்.

4.. வேர் 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாக்கி 100 மி.லி. வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம், பாரிசவாதம். தொல்நோய்கள்,

5.. செரியாமை, பித்த குன்மம் தீரும்.

6.. ஆண்மை பெருக நன்னாரி வேர் குடிநீரை இழஞ்சூடாக அருந்தி வரவேண்டும்.

7.. வியர்வை நாற்றம் நீங்க மிளகு. உப்பு. புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய்சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.

8.. நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.

9.. நன்னாரி வேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்ப லாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிருநீரக நோய்கள் அனைத்தும் விலகும்.

10.. நன்னாரி வேர் பொடியுடன் சமளவு கொத்துமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்த மான கோளாருகள் நீங்கும். தவிர வயிறு, குடல், இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.

11.. நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.

12.. வேர் சூரணம் அரைகிராம் காலை மாலை வெண்ணையில் கொள்ள ஆரம்ப குஷ்டம் தீரும்.


வெள்ளி, 21 ஜூலை, 2017

சுவையான செட்டிநாடு மட்டன் பிரியாணி


சுவையான செட்டிநாடு மட்டன் பிரியாணி      

மட்டன் -1/2kg
மிளகாய் தூள்- 1tbsp
மஞ்சள் தூள்- 1tbsp
இஞ்சி பூண்டு பேஸ்ட்
கருவேப்பிலை
பாஸ்மதி அரிசி-3
கப் கெட்டி தயிர்-1கப்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது)-2
தக்காளி(பொடியாக நறுக்கியது)-3
பெருஞ்சீரகம் -1tsp
பிரியாணி இலைகள்
கிராம்பு
பட்டை
ஏலக்காய்
புதினா
கொத்தமல்லி இலைகள்
அரைக்க தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய்-3
பச்சை மிளகாய்-4
வெங்காயம்-1/4 கப்
பெருஞ்சீரகம் -1tsp
கிராம்பு-4
ஏலக்காய்-6
பட்டை -2
இஞ்சி துண்டுகள்
பூண்டு-15
புதினா இலைகள்-1/2 கப்
செய்முறை:
குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி ,பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.அதனுடன் மட்டன் துண்டகள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதக்கியதும் அதனுடன் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும்.
பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து கடாயில் நெய் ஊற்றி அதில் அரிசியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.இப்பொழுது வேக வைத்த மட்டன் தனியாகவும்.வேக வைத்த மட்டன் தண்ணீர் தனியாகவும் எடுத்து வைத்து கொள்ளவும்.
ஒரு பெரிய பிரஷர் குக்கரில் நெய்/எண்ணெய் ஊற்றி அதில் பிரியாணி இலை பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பெருஞ்சீரகம் சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதனுடன் அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .வதக்கியதும் வேக வைத்த மட்டன் ,புதினா,
கொத்தமல்லிதழை சேர்த்து நன்றாக குறைந்த தீயில் வதக்கவும்.
வதக்கியதும் அதனுடன் வேக வைத்த மட்டன் தண்ணீர் மற்றும் கெட்டி தயிர் சேர்த்து 4+1/2 கப் ஊற்றி அரிசி சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் மூடி போட்டு ஆவி வெளியே வந்தவுடன் வெயிட் போட்டு குறைந்த தீயில் 10 நிமிடம் வைத்து இறக்கவும்.(விசில் வர வெயிட் பண்ண தேவையில்லை )
குக்கர் மூடியை திறந்து லேசாக கிளறி விட்டு கொத்தமல்லிதழை தூவி தயிர் பச்சடியுடன் அல்லது ரைத்தவுடன் பரிமாறலாம் .
சுவையான செட்டிநாடு மட்டன் பிரியாணி ரெடி..........

ருசியான கதம்ப சாதம்!!



ருசியான கதம்ப சாதம்!!

 குழந்தைகளுக்கு வித்தியாசமாக சாப்பாடு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த கதம்ப சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

சாதம் - 3 கப்

புளி - எலுமிச்சம்பழ அளவு

தனியா - 3 டீஸ்பு+ன்

கடலைப்பருப்பு - 3 டீஸ்பு+ன்

தேங்காய் துருவல் - 3 டீஸ்பு+ன்

வெங்காயம் - 3

மிக்ஸ்டு காய்கறி துண்டுகள் - 3 கப்(வேக வைத்தது)

மிளகாய் வற்றல் - 6

கறிவேப்பிலை - சிறிதளவு

துவரம்பருப்பு (வேக வைத்தது) - 1 கப்

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பு+ன்

நெய் - சிறிதளவு

கடுகு - ஒரு டீஸ்பு+ன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

🍪 முதலில் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து வறுத்து, அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் புளியுடன் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

🍪 பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். அதனுடன் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். பின் அதில் புளிக்கரைசலை விட்டு கொதிக்கவிடவும். பின்னர் நன்கு பச்சை வாசனைப் போக கொதித்ததும் அரைத்த விழுது, வேக வைத்த காய்கறி துண்டுகள் சேர்த்து கொதிக்கவிட்டு, வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.

🍪 கடைசியாக கலவை நன்கு கலந்து வந்ததும் கறிவேப்பிலையைக் கிள்ளி போட வேண்டு. பின்பு சாதத்தில் நெய்விட்டு மசித்து பரிமாறினால். சத்தான கதம்ப சாதம் தயார்!!!

வாழைப்பூ மசாலா



வாழைப்பூ மசாலா

தேவையான பொருட்கள் :

வாழைப்பூ சிறியது 1 பெ.வெங்காயம் 2, தக்காளி 2, இஞ்சி சிறிய துண்டு,பூண்டு 4 பல்,மிளகாய் தூள் 2 டீஸ்பூன், தனியாத்தூள் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு. கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிது.
எண்ணெய் 8 டீஸ்பூன்.
(தாளிக்க  சீரகம் பிரியாணி இலை)

செய் முறை :

வாழைப்பூ வை நரம்பு நீக்கி நைசாக நறுக்கி தண்ணீர்ல சிறிது மோர் விட்டு ஊரவைக்கவும் .

வெங்காயம்( இஞ்சி பூண்டு ) தக்காளிய தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும்.

இப்ப கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த உடன் சீரகம்,பிரியாணி இலை போட்டு முதலில் வெங்காயம் பேஸ்ட் போட்டு வதங்கவும் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் வதங்கவும்   வாழைப்பூ வை தண்ணீர் இல்லாமல் பிழிந்து போட்டு வதக்கவும். இப்ப உப்பு மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் போட்டு கிளறவும் பிறகு  தக்காளி விழுது சேர்த்து கிளறி கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்ந்து சிறிது தண்ணீர் விட்டு ஒரு கொதி வரவும் அடுப்பை சிம்ல வைத்து மூடி போடவும் அப்ப அப்ப கிளறி விடவும் சுருங்கி எண்ணெய் வெளியே வரவும் இறக்கவும்.

சுவையான வாழைப்பூ மசாலா ரெடி.

(இத தோசை, சப்பாத்தி,சாதத்துடன் சாப்பிடலாம். சாதத்தில் கிளறினால் வெரைட்டி ரைஸ் மாதிரி அருமையா இருக்கும்.)

( குறிப்பு: வாழைப்பூல சுத்தமா துவர்ப்பு தன்மை இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறவங்க வாழைப்பூவை நைசாக நறுக்கி தண்ணீரில் போட்டு மூடி முதல் நாளே பிரிட்ஜ் ல வைத்து விட்டு அடுத்த நாள் செய்யலாம் உங்கள் விருப்பம் )

பச்சை பயறு தோசை....(Besarat)



பச்சை பயறு தோசை....(Besarat)

தேவையான பொருட்கள்:-

பச்சை பயறு ---------------- 1 கப்
பச்சரிசி மாவு --------------- 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் ------ 1
பச்சை மிளகாய் ----------- காரத்திர்க்கேற்ப
இஞ்சி --------------------------- சிறிய துண்டு  
சீரகம் --------------------------- 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு.
தேவையான அளவு எண்ணெய்.

செய்முறை:-

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

பச்சை பயறை முதல் நாள் இரவே நன்கு  கழுவி நீரில் ஊறவைத்து மறுநாள் காலை ஊறிய பருப்புடன் பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நைசாக அரைதெடுத்து பச்சரிசி மாவையும் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.

தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி அரைத்த மாவை தோசை வார்த்து சுற்றிலும் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை தூவி மூடி போட்டு ஒரு புறம் நன்றாக வேகவைத்து எடுத்து சுட சுட பரிமாறவும்.

நல்ல சத்தான இந்த தோசையுடன் இஞ்சி தொக்கு வைத்து சாப்பிட மிக மிக சுவையாக இருக்கும். விரைவில் ஜீரணமும் ஆகி விடும்.

தேங்காய் சட்னியும் இந்த தோசையுடன் வைத்து சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

குறிப்பு:- குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் போது  வெங்காயத்துடன் பொடியாக நறுக்கிய, விரைவில் வேகக்கூடிய  கேரட் , குடை மிளகாய் கொத்தமல்லி தழை இவற்றை தூவியும்  கொடுக்கலாம்.

பச்சரிசி மாவு சிறிது சேர்ப்பதால் தோசை நல்ல மொரு மொருப்பாக இருக்கும்.

பச்சை மிளகாய் அவரவர் காரதான்மைக்கேற்ப பார்த்து சேர்த்து கொள்ளவும்.

பச்சை மிளகாய் விரும்பாதவர்கள் காய்ந்தமிளகாயையும் சேர்த்து கொள்ளலாம்.

திருப்பத்தூர் நாட்டுக்கோழி சிக்கன் 65



திருப்பத்தூர் நாட்டுக்கோழி சிக்கன் 65

நீங்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் , கிருஷ்ணகிரி சாலையில் ஜோய் ஆலுக்காஸ் எதிரில் ஒரு சிறிய நான்கு சக்கர தள்ளுவண்டியில் இந்த ஸ்பெஷல் நாட்டுக்கோழி சிக்கன் 65 தினமும் கிடைக்கும்.

இந்த நாட்டுகோழி சிக்கன் 65 ஒரு பிளேட் ரூ. 50 தான். இதன் சுவையை அனுபவித்தால் தான் தெரியும். சுவையில் நாவு சுவை நரம்புகள் அனைத்தும் நர்த்தனம் ஆடும்.

தேவையான பொருட்கள்

ஊறவைக்க
நாட்டுகோழி எலும்புடன் 1 கிலோ ( சிறிய சிறிய  துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்)
உப்புத்தூள் தேவையான அளவு
வரமிளகாய் தூள் 2மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
குருமிளகு தூள் 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 14 ( விழுதாக நைசாக அம்மிகல்லில் அரைத்தது )
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி
கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
அரிசி மாவு 2 மேஜைக்கரண்டி
மைதா மாவு 2 மேஜைக்கரண்டி
தக்காளி விழுது 2 மேஜைகரண்டி
நாட்டுகோழி முட்டை 4
மரசெக்கு கடலெண்ணய் பொறிப்பதற்கு தேவையான அளவு

ஃட்ரை செய்ய

பொறித்த மரசெக்கு கடலெண்ணய் 4 மேஜைக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் 7 ( பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் 1 ( பொடியாக நறுக்கியது)

கறிவேப்பில்ல 2 கொத்து
தயிர் 200 மில்லி
காஷ்மீரி வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு

செய்முறை

1. நாட்டுகோழியை துண்டுகளை சுத்தமாக கழுவி எடுத்து வைக்கவும்.

2. ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களிள் மரசெக்கு கடலெண்ணய்  தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்துகோங்க நன்றாக பிசிறி கொள்ள வேண்டும். குறைந்தபட்சமாக 3 மணிநேரம் ஊற வைத்து கொள்ளவும். இதில் துளிகூட தண்ணீர் சேர்க்க கூடாது. தேவைக்கேற்ப நாட்டுகோழி முட்டையை சேர்த்து கொள்ளலாம்.

3. இப்பொழுது இரும்பு வடச்சட்டியில் மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க நன்றாக காய்ந்ததும் நன்றாக பிசிறி ஊறவைத்தள்ள நாட்டுகோழி துண்டுகளை போட்டு நன்றாக முறுகலாக பொன்னிறமாக சிறுதீயில் வைத்து வேக வைத்து எடுத்துக் எண்ணெய் வடிய விடவும்.

5. இப்பொழுது இரும்பு வடச்சட்டியை அடுப்புல வைத்து அதில் பொறித்த மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க நன்றாக காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக வதக்க வேண்டும்.

6. அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும்  வரை வதக்கவும்.

7. பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சைமிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பில்ல சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

8. அதில் தயிரை சேர்த்துகோங்க நன்றாக சிறுதீயில் கொதிக்க விட்டு வதக்கவும் , அதில் காஷ்மீரி வரமிளகாய் தூள் , கொத்தமல்லி தூள் சேர்த்துகோங்க நன்றாக கிளறவும்.

9. இப்பொழுது அதில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் அதில் முறுகலாக வறுத்து வைத்துள்ள நாட்டுகோழி துண்டுகளை சேர்த்துகோங்க நன்றாக மசாலாவில் கிளறவும்.

10. இதில் மசாலா அனைத்து துண்டுகளில் பட்டு நன்றாக கிளறி சிறிது நேரம் வேகவிட்டு கறி உடைந்து விடாமல் கிளறி , பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

11. எலுமிச்சம்பழம் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்துடன் பரிமாறவும்.

30 வகை தால் - கிரேவி - சப்ஜி


30 வகை தால் - கிரேவி - சப்ஜி

சப்பாத்தி என்றால் குருமா, பூரி என்றால் உருளைக்கிழங்கு மசாலா என்றே அறிந்திருப்பவர் களுக்கு, பெரிய ஹோட்டலுக்கு செல்லும்போது, மெனு கார்டில் இருக்கும் டிஷ்களின் பெயர்களைப் பார்த்து, 'இத்தனை அயிட்டங்களில் எதைத் தேர்ந்தெடுப்பது?’, 'இத்தனையும் எப்படி செய்வார்கள்?’ என்ற மலைப்பும் ஆச்சர்யமும் ஏற்படும். ஆனால், ''இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. உங்கள் வீட்டிலும் இவற்றை செய்து பரிமாறலாம். நான் சொல்லித் தருகிறேன் வாருங்கள்'' அன்புடன் என்று அழைப்புவிடுக்கிறார் சமையல்கலை நிபுணர் ஜெயஷ்ரி சுரேஷ். இவர், 'ஜெயஷ்ரிஸ் கிச்சன்’ என்ற பெயரில் ஒரு வலைதளம் வைத்திருப்பவர். இந்த இணைப்பிதழில் இவர், சப்பாத்தி, நாண், பரோட்டா, பூரிக்கு தொட்டுக்கொள்ள 30 வகை தால், கிரேவி, சப்ஜி வகைகளை உங்களுக்காக தயாரித்து வழங்குகிறார்.
''கொஞ்சம் ஆர்வமும், கவனமும் இருந்தால் போதும்... இந்த டிஷ்களை எல்லாம் சிறப்பாக செய்து பரிமாறி... வீட்டிலும், உறவு, நட்பு வட்டத்திலும் கிச்சன் குயினாக வலம் வரலாம்'' என்று உற்சாகப்படுத்துகிறார் ஜெயஷ்ரி.
பட்டாணி க்ரீன் மசாலா
தேவையானவை: பச்சைப் பட்டாணி - ஒரு கப், வெங்காயம் - 2, தக்காளி - ஒன்று, கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு, பச்சை மிளகாய் - 3, முந்திரிப் பருப்பு - 5, தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - 2 சிட்டிகை, பூண்டு - 2 பல், பால் - அரை கப், கரம்மசாலாத்தூள் - 2 சிட்டிகை, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சைப் பட்டாணியை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி அரைத்துக்கொள்ளவும். முந்திரிப் பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து தயிருடன் சேர்த்து அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் விட்டு, அரைத்த விழுதுகளை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து, கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கி, பால் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீரும் சேர்க்கவும். இதில் வெந்த பட்டாணி, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கஸ¨ரி மேத்தி சேர்த்து, சூடாகப் பரி மாறவும்.
நவரத்ன குருமா
தேவையானவை: மிக்ஸ்ட் காய்கறிகள் (நறுக்கிய காலிஃப்ளவர், கேரட், பீன்ஸ் மற்றும் பச்சைப் பட்டாணி) - ஒன்றரை கப், முந்திரிப் பருப்பு - 15, உலர் திராட்சை - 7, தக்காளி, வெங்காயம் - தலா 2, குடமிளகாய் - ஒன்று, பூண்டு - 3 பல், பனீர் க்யூப்ஸ் - 7, தனியாத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - 3 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ - 2 சிட்டிகை, அன்னாசிப்பழத் துண்டுகள் (விரும்பினால்) - ஒரு டேபிள்ஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்கறிகளை (அன்னாசி பழத் தையும் சேர்க்கலாம்) சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண் ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் பாதியளவு முந்திரியை வதக்கி, தக்காளியுடன் சேர்த்து அரைக்கவும். மீதம் உள்ள முந்திரியையும், உலர் திராட்சையையும் எண்ணெயில் வறுத்து, நறுக்கிய குடமிளகாய் மற்றும் பனீர் சேர்த்து சிறிது நேரம் வதக்க வும். இதனுடன் வெந்த காய்கறிகளை சேர்த்து வதக்கி, அரைத்து வைத்த மசாலாவை சேர்க்கவும். பிறகு மிளகாய்த்தூள், தனியாத் தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிதளவு தண்ணீரும் சேர்க்கவும். இதில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்கு கிளறி, கஸ¨ரி மேத்தி, குங்குமப்பூ சேர்த்து, 2 நிமிடத்துக்குப் பிறகு அடுப்பை அணைக்கவும். நவரத்ன குருமா ரெடி!
பேபி கார்ன் மசாலா
தேவையானவை: பேபி கார்ன் - 15, வெங்காயம் - 2, குடமிளகாய் - ஒன்று, தக்காளி - 2 (பெரியது), முந்திரிப் பருப்பு - 5, மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - கால் டீஸ்பூன், தக்காளி சாஸ் - கால் டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு சிட்டிகை, பால் - அரை கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பேபி கார்னை பெரிய துண்டுகளாக நறுக்கி, மஞ்சள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, மற்றும் பாதி குடமிளகாயை எண்ணெயில் வதக்கி... மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத் தூள், கஸ¨ரி மேத்தி, தக்காளி சாஸ், கரம்மசாலாத்தூள், உப்பு, முந்திரிப் பருப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, அரைத்த மசாலாவை சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, பால் சேர்த்து, வெந்த பேபி கார்னை சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்கவிடவும். மீதம் உள்ள பாதி குடமிளகாயை துண்டுகளாக நறுக்கிச் சேர்த்துக் கிளறவும். சூடாகப் பரிமாறவும்.
பனீர் கோலாபுரி
தேவையானவை: பனீர் க்யூப்ஸ் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2 (விழுதாக அரைக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், கொப்பரைத் துண்டுகள் - 4 டீஸ்பூன், மிளகு - 5, சோம்பு - அரை டீஸ்பூன், வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய் - ஒன்று, கிராம்பு - 2, முந்திரிப் பருப்பு - 4, மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் (தேவைபட்டால்) - சிறிதளவு, தனியா - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் வெள்ளை எள், கொப்பரை, சோம்பு, மிளகு, தனியா, ஏலக்காய், கிராம்பு, முந்திரிப் பருப்பு சேர்த்து வறுத்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அரைத்து வைத்த மசாலா மற்றும் அரைத்த தக்காளியை இதில் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும். பிறகு, மிளகாய்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து, பனீர் துண்டுகளையும் சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, (தேவைப்பட்டால்) கரம்மசாலாத்தூள் சேர்த்து, 5 நிமிடம் கொதித்தவுடன் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சோலே மசாலா
தேவையானவை: வெள்ளைக் கொண்டைக்கடலை - அரை கப், டீ பேக் (tமீணீ தீணீரீ) - ஒன்று, ஏலக்காய் - 2, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, சீரகம் - கால் டீஸ்பூன், உலர்ந்த மாதுளை விதைப் பொடி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - கால் டீஸ்பூன், ஏலக்காய் - ஒன்று, தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, டீ பேக் மற்றும் ஏலக்காய் சேர்த்து குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். டீ பேக் மற்றும் ஏலக்காயை தூக்கி போட்டுவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி... உப்பு, தனியாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மற்றும் கரம்மசாலாத்தூள் சேர்க்கவும். தக்காளியை அரைத்து சேர்த்து, உலர்ந்த மாதுளை பொடியை சேர்க்கவும். பிறகு, வெந்த கொண்டைக்கடலையை சேர்க்கவும். கொஞ்சமாக தண்ணீர் விட்டு, 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும்.
பப்பட் சப்ஜி
தேவையானவை: மிளகு அப்பளம் - 2, தயிர் - அரை கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள், தனியாத்தூள் - தலா கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் - சிறிதளவு, கரம்மசாலாத்தூள் - 2 சிட்டிகை, மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிரைச் சேர்த்து... மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, தயிர் கலவையை சேர்க்கவும். அடுப்பை மெல்லிய தீயில் வைத்து 5 நிமிடம் கிளறவும். நான்காக நறுக்கிய மிளகு அப்பளத்தை சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, 3 நிமிடம் மெல்லிய தீயில் வைத்து அடுப்பை அணைக் கவும். கொத்தமல்லி தூவி பரிமாற வும்.
வெள்ளரிக்காய் மசாலா
தேவையானவை: வெள்ளரிக்காய் - ஒன்று, சின்ன வெங்காயம் - 5, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், தனியா - அரை டீஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - ஒன்று, பூண்டு - 3 பல், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெள்ளரிக்காயைத் தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் பட்டை சேர்த்து நன்கு வதக்கி, விழுதாக அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயைக் கடாயில் விட்டு... கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்து வைத்த விழுதை சேர்த்து மேலும் வதக்கி, நறுக்கிய வெள்ளரிக்காயைச் சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.
முட்டைகோஸ் கோஃப்தா கிரேவி
தேவையானவை: முட்டைகோஸ் (பொடியாக நறுக்கியது) - 2 கப், பனீர் துருவல் - ஒரு கப், கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன், தக்காளி - 2 (விழுதாக அரைக்கவும்), மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் (கோஃப்தாவுக்கு), கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், வெங்கா யம் - 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் (கிரேவிக்கு), தக்காளி கெச்சப் - ஒரு டீஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - 2 சிட்டிகை, பூண்டு - 3 பல், பால் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: முட்டைகோஸை நறுக்கி, உப்பு சேர்த்து 10 நிமிடம் வைத்திருந்து, நன்கு பிழிந்து தண்ணீரை எடுக்கவும். பனீர், மிளகாய்த்தூள், கடலை மாவு மற்றும் அரை டீஸ்பூன் கரம்மசாலாத்தூள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, முட்டைகோஸ்உடன் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதுதான் கோஃப்தா.
கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து... நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளி கெச்சப், மிளகாய்த்தூள், கஸ¨ரி மேத்தி சேர்த்து நன்கு அரைக்கவும். கடாயில் தக்காளி விழுது, அரைத்து வைத்த வெங்காயம் - பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பால் சேர்க்கவும். அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிவிடவும். இதுதான் கிரேவி. பொரித்த கோஃப்தா நன்கு ஆறியதும், கிரேவியில் சேர்த்து பரிமாறவும்.
சன்னா பாலக்
தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை - அரை கப், பாலக்கீரை - ஒரு சிறிய கட்டு, வெங்காயம் - 2, தக்காளி - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - ஒரு சிட்டிகை, சர்க்கரை, சீரகம் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கொண்டைக் கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, குக்கரில் 5 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். பாலக்கீரையை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு எடுக்கவும். பச்சை மிளகாயுடன் கீரையைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளியை விழுதாக அரைத்து சேர்த்து... உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் மற்றும் கரம்மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, அரைத்த கீரை விழுதை சேர்க்கவும். இதனுடன் வெந்த கொண்டைக்கடலையை சேர்க்கவும் (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம்). இதனை 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கஸ¨ரி மேத்தி சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.
காலிஃப்ளவர் மகானி
தேவையானவை: காலிஃப்ளவர் - ஒரு சிறிய பூ, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, முந்திரிப் பருப்பு - 5, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காலிஃப்ளவரை வெந்நீரில் 2 நிமிடம் போட்டு தண்ணீரை வடித்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி மற்றும் முந்திரிப் பருப்பை பச்சையாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். பிறகு, வெந்த காலிஃப்ளவரை சேர்க்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.
முள்ளங்கி மசாலா
தேவையானவை: முள்ளங்கி - 2 (சிறியது), வெங்காயம் - ஒன்று, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம் - சிறிதளவு, பட்டை - ஒரு சிறிய துண்டு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பட்டை தாளித்து, நறுக்கிய வெங்கா யத்தை சேர்த்து வதக்கவும். நறுக்கிய முள்ளங்கியையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, கொஞ்சம் தண் ணீர் விட்டு வேகவைக்கவும். தேங் காய்த் துருவல், இஞ்சி, கொத்த மல்லி, பொட்டுக்கடலை மற்றும் பச்சை மிளகாயை அரைத்து, இந்த விழுதை முள்ளங்கியுடன் சேர்த்து வதக்கவும் (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்). பிறகு, உப்பு சேர்த்து, 2 நிமிடம் கொதித்த வுடன் அடுப்பை அணைக்கவும். முள்ளங்கி மசாலா தயார்!
ஷாஹி பொட்டேட்டோ குருமா
தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, காய்ந்த மிளகாய் - ஒன்று, முந்திரிப் பருப்பு - 5, ஏலக்காய் - ஒன்று, பட்டை - ஒரு சிறிய துண்டு, சோம்பு - கால் டீஸ்பூன், கல்பாசி (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - 3, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 2 பல், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, கெட்டித் தயிர் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு, நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கவும். தேங்காய், சோம்பு, பட்டை, இஞ்சி, பூண்டு, ஏலக்காய், கல்பாசி, காய்ந்த மிளகாய், முந்திரிப்பருப்பு சேர்த்து நன்கு அரைத்து குக்கரில் சேர்த்து, உப்பு சேர்த்து வதக்கி... தயிர் சேர்க்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். தேவையான தண்ணீர் விட்டு, குக்கரை மூடி, 3 விசில் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
கேரட் - காளான் சப்ஜி
தேவையானவை: நறுக்கிய கேரட், குடமிளகாய், காளான், பேபி கார்ன் மற்றும் பச்சைப் பட்டாணி, (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், தனியா - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, ஏலக்காய் - 2, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, தக்காளி ப்யூரி (ஜிஷீணீனீணீtஷீ ஜீuக்ஷீமீமீ - டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - கால் கப், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத் தூள், கரம்மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - கால் டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - கால் கப், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்கறிகளை அரை வேக்காடு பதத்தில் வேக வைத்துக் கொள்ளவும். தனியா, மிளகாய் மற்றும் ஏலக்காயை வெறும் கடாயில் வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்த்து வதக்கி... தக்காளி ப்யூரியை சேர்க்கவும். இதனுடன் அரைத்து வைத்த பொடி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, காய்கறிகளைச் சேர்த்துக் கிளறி, சிறிதளவு தண்ணீர் விட்டு, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, ஒரு கொதி விட்டு, கஸ¨ரி மேத்தி சேர்த்து இறக்கவும்.
தக்காளி ப்யூரிக்குப் பதில், ஒரு பெரிய தக்காளியை விழுதாக அரைத்துச் சேர்த்தும் தயாரிக்கலாம்.
மசூர் - கேரட் தால்
தேவையானவை: மசூர் தால் - கால் கப், கேரட், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பூண்டு - 2 பல், கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் அல்லது நெய் - அரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மசூர் தாலுடன் நறுக்கிய வெங்காயம், கேரட் தக்காளி, மற்றும் பூண்டு சேர்த்து... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு குக்கரில் வைத்து 3 அல்லது 4 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கி, பிறகு நன்கு மசித்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் (அ) நெய் சேர்த்து கடுகு, கறிவேப்பில்லை, நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து, வெந்த பருப்பை சேர்த்து, கொதி வந்தவுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கிவிடவும். பரிமாறும் முன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்ளலாம்.
பேபி கார்ன் - மேத்தி கிரேவி
தேவையானவை: பேபி கார்ன் - 10, வெந்தயக்கீரை - கால் கப், முந்திரிப் பருப்பு - 5, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, சர்க்கரை அல்லது தேன் - ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், ஏலக்காய் - ஒன்று, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பேபி கார்னை பெரிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் 3 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி மற்றும் முந்திரிப் பருப்பை சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, ஆறியவுடன் அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு ஏலக்காய் சேர்த்து, அரைத்த விழுதைப் போட்டு நன்கு வதக்கிக்கொள்ளவும். இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, கரம்மசாலாத்தூள் சேர்க்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெந்தயகீரை சேர்த்து வதக்கவும். இதில் வெந்த பேபி கார்ன், சர்க்கரை (அ) தேன் சேர்க்கவும். பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.
புதினா - பனீர் கிரேவி
தேவையானவை: பனீர் - அரை கப், புதினா இலை - ஒரு கைப்பிடியளவு, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - சிறிதளவு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று, சர்க்கரை - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பனீரை சிறிதளவு எண்ணெயில் பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளியுடன் சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் விட்டு, அரைத்த மசாலா மற்றும் உப்பு போட்டு வதக்கி, பின்னர் பனீர் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
தக்காளி - உருளைக்கிழங்கு கிரேவி
தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, தக்காளி - 2, சீரகம் - கால் டீஸ்பூன், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரை மூடி, 3 அல்லது 4 விசில் வந்ததும் இறக்கவும். கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
சோயா சங்க்ஸ் வின்டலோ
தேவையானவை: சோயா சங்க்ஸ் - அரை கப், வெங்காயம் - ஒன்று, தக்காளி ப்யூரி (Toamato puree- டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 2 டேபிள்ஸ்பூன், தனியா - கால் டீஸ்பூன், மிளகு - 5, காய்ந்த மிள காய் - ஒன்று, பட்டை - ஒரு சிறிய துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று, பூண்டு - 2 பல், சீரகம் - கால் டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - சிறிதளவு, பால் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - சிறி தளவு.
செய்முறை: தண்ணீரில் பால், சோயா சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு, தண்ணீரைப் பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விடாமல் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், பூண்டு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்கா யத்தை வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து மேலும் வதக்கி, உப்பு மற்றும் தக்காளி ப்யூரி சேர்க்கவும். இத னுடன் சோயா சங்க்ஸ் சேர்க்கவும். சிறிது தண்ணீர் விட்டு கரம்மசாலா, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக் கவும்.
குறிப்பு: தக்காளி ப்யூரிக்குப் பதில் ஒரு தக்காளியை விழுதாக அரைத்துச் சேர்த்தும் தயாரிக்கலாம்.
தால் பஞ்சரத்தன்
தேவையானவை: துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு மற்றும் மசூர் தால் - தலா 3 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - கால் கப், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - அரை டீஸ்பூன், நெய், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எல்லா பருப்புகளையும் ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு, மஞ்சள்தூள் சேர்த்து, குக்கரில் வைத்து, 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். கடாயில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி... தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, வெந்த பருப்பை சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து... இதனுடன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, கொதி வந்தவுடன் கஸ¨ரி மேத்தி சேர்த்து, ஒரு நிமிடத்துக்குப் பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும். தால் பஞ்சரத்தன் ரெடி!
பஞ்சாபி தால் ஃப்ரை
தேவையானவை: பாசிப்பருப்பு - அரை கப், சீரகம் - கால் டீஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து மேலும் வதக்கி... சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். இதனுடன் பாசிப்பருப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி, 4 விசில் வந்ததும் இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்

அமிர்த கேசரி



அமிர்த கேசரி

இந்த உணவு ஒரு திருமண விழாவில் பரிமாறபட்டது.

தேவையான பொருட்கள் :

ரவை - 500 கிராம்
நெய் -250 மில்லி
கன்டன்ஸ்டு மில்க் ஒரு டின் (100 மில்லி)
பால் - 2 லிட்டர்
சர்க்கரை - 150 கிராம்
முந்திரி, திராட்சை (கிஸ்மிஸ்) - 50 கிராம்
ஏலக்காய் - 4
கிராம்பு - 3
டூட்டி ஃப்ரூட்டி - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

1.அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்து வைக்கவும்.

2.மிக்ஸியில் ஏலக்காய், கிராம்பு, சிறிது சர்க்கரை சேர்த்துப் பொடியாக்கிக் கொள்ளவும்.

3.கடாயில் சிறிது நெய் விட்டு ரவையைப் பொன்னிறமாக (பாதி வெள்ளை பாதி பொன்னிறமாக) வறுத்துத் தனியாக வைக்கவும்

 4.அடுப்பில் வாணலியை வைத்துப் பாலை ஊற்றி அது கொதித்து வரும் போது ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும்.

 5.ரவை வெந்து கொதி வரும்போது
 சர்க்கரையைச் சேர்த்து, தீயைக் குறைத்து வைத்துக் கிளறவும்.

6. சர்க்கரை சேர்த்ததும் உருகி நீராகும். அப்போது ஏலக்காய்கிராம்புப் பொடி, ஆகியவற்றைச் சேர்த்து கிளறி, இறுதியாக நெய் ஊற்றி கிளறி இறக்கவும்.

7.பரிமாறும்போது ஒரு ஸ்கூஃப் கேசரி, அதன் மேல் டூட்டி ஃப்ரூட்டி, கன்டன்ஸ்டு மில்க், நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை (கிஸ்மிஸ்) சேர்த்துப் பரிமாறவும்.

பல நோய்களுக்கான ஒரு மருந்து...


பல நோய்களுக்கான ஒரு மருந்து...

*  வெந்தயம்.    -  250gm
*  ஓமம்               -  100gm
*  கருஞ்சீரகம்  -  50gm

* மேலே உள்ள 3 பொருட்களையும்  சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து,  தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு   இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.

இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும்  மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

👉 தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு  நீக்கப்படுகிறது.

👉 இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை  ஏற்படுத்துகிறது.

👉 இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.

👉 இருதயம் சீராக       இயங்குகிறது.

👉 சருமத்தில் உள்ள சுருக்கங்கள்  நீக்கப்படுகிறது.

👉 உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும்,  சுறுசுறுப்பும் உண்டாகிறது.

👉 எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.

👉 ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள்  வலுவடைகிறது.

👉 கண் பார்வை
தெளிவடைகிறது.

👉 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.

👉மலச்சிக்கல்  நீங்குகிறது.

👉 நினைவாற்றல் மேம்படுகிறது.
கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

👉 பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.

👉 மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.

👉 ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.

👉  நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.

👍  இந்த கலவையை  2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது. படித்ததில் பிடித்தது நன்றி.

கொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள்..


கொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள்..

⚜ அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன.

⚜ ஒவ்வொருவரின் வீட்டிலும் உள்ள ஃப்ரிட்ஜ்களில் கொத்தமல்லி இலைகளுக்கு என்று தனி இடம் உண்டு.

⚜ இந்த கொத்தமல்லி இலைகள் பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகையுமாகும்.

⚜ கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

⚜ மேலும், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது.

⚜ கொத்தமல்லி இலைகளில் மிளகில் இருப்பது போன்ற சிறிது காரமான சுவை இருப்பதால், இது பல உணவு வகைகளுக்கும் வித்தியாசமான வாசனையைக் கொடுத்து, உணவின் சுவையைக் கூட்டுகிறது. குறிப்பாக இதன் விலை மிக மிகக் குறைவு.

⚜ ஆனால் இதன் மருத்துவப் பயன்களைப் பார்க்கும் போது, விலை மதிப்பில்லாததாகக் கருதப்படுகிறது.

⚜ இது உணவிற்கு சுவையை கூட்டுவதோடு மட்டுமின்றி, நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் நீக்குகிறது.

⚜ இப்போது அந்த கொத்தமல்லி இலைகளின் மருத்துவப் பயன்களைப் பார்ப்போம்.
.
⚜ *கண்_நோய்கள்*: நல்ல புதிய கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை மாகுலர் டிஜெனெரேசன் (macular degeneration) எனப்படும் கண் நோய், விழி வெண்படல அழற்சி (conjunctivitis) எனப்படும் மெட்ராஸ் ஐ, கண் முதுமையடைதல் ஆகியவற்றைக் குணப்படுத்துதலிலும், கண்களில் ஏற்படும் அழுத்தத்தை இதப்படுத்தவும் உதவுகின்றன.

⚜ அதற்கு சிறிது கொத்தமல்லி இலைகளை நன்கு அரைத்து, தண்ணீரில் கொதிக்கவிட்டு, அதனை மெல்லிய சுத்தமான துணியினால் வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்த நீரின் சில சொட்டுக்களை கண்களில் விடுவதால், கண் எரிச்சல், கண் உறுத்தல், கண் வலி ஆகியவை குணப்படுவதோடு, கண்களில் நீர் வடிதலும் நிற்கும்.

⚜ *மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்:* மூக்கிலிருந்து ரத்தம் வடிகிறதா? அப்படியெனில் 20 கிராம் புதிய கொத்தமல்லி இலைகளை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது கற்பூரம் சேர்த்து கசக்கிப் பிழிந்து சாறு எடுங்கள்.

⚜ இந்த சாற்றினை இரத்தம் வரும் நாசித்துவாரத்தில் சொட்டு சொட்டாக விடுங்கள்.

⚜ வடிகின்ற இரத்தம் உடனே நின்றுவிடும். கொத்தமல்லி இலைகளையும் கற்பூரத்தையும் சேர்த்த அரைத்துக் கொண்டு இக்கலவையை நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொண்டாலும், மூக்கிலிருந்து இரத்தம் வடிவது நின்றுவிடும். சிலசமயங்களில் இக்கலவையை முகர்ந்து பார்த்தாலே இரத்தம் வடிவது நிற்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
.
⚜ *சரும_நோய்கள்*: கொத்தமல்லி இலைகளுக்கு பூஞ்சைகளை நீக்கும் சக்தியும், நச்சுக்களை நீக்கும் ஆற்றலும், தொற்றுக்களை நீக்கும் ஆற்றலும், ஆன்டி-செப்டிக் தன்மையும் உண்டு.

⚜ சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.

⚜ இதன் காரணமாக சில சரும நோய்களை நீக்குவதில் இது மிகவும் உதவிகரமாக உள்ளது. படை நோய் இருந்தால், கொத்தமல்லி இலைகளை அரைத்து ஜூஸாக்கிக் குடிக்கவோ அல்லது அரைத்து சருமத்தின் மீதோ தடவலாம்.

⚜ தோல் தடிப்பிற்கும், அரிப்பிற்கும், புதிய கொத்தமல்லி இலைகளை அரைத்துத் தேனுடன் கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் நன்றாக அலசிவிட்டால், சரும பிரச்சனைகள் குணமாகும்.
-
⚜ கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் தலைச்சுற்றல், வாந்தி
கர்ப்பத்தின் தொடக்க காலங்களில் பெரும்பாலான பெண்களுக்கு தலைசுற்றலும், வாந்தியும் இருக்கும். இது மாதிரி நேரங்களில் தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, குளிர வைத்துக் குடித்து வர வேண்டும்.

⚜ இதனால் தலைச்சுற்றலும், வாந்தியும் குறையும்.

⚜ *அம்மை:* கொத்தமல்லி இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நுண்கிருமி எதிர்ப்புத் தன்மை, கிருமி நாசினித் தன்மை மற்றும் அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன.

⚜ இரும்புச்சத்தும், வைட்டமின் சி-யும் இதன் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி, அம்மை நோயின் தீவிரத்தை குறைக்கின்றன.

⚜ இதனால் அம்மை நோயினால் ஏற்படும் வலி குறையும்.

⚜ *வாய்ப்புண்:* கொத்தமல்லி இலையில் நிறைந்துள்ள வாசனை எண்ணெயான சிட்ரோநெல்லோல், சிறப்பான கிருமிநாசினித் தன்மை கொண்டுள்ளது.

⚜ எனவே இது வாயிலுள்ள புண்களை ஆற்றுவதோடு, அது வராமலும் தடுக்கும்.

⚜ மேலும் சுவாசத்தை ஃப்ரெஷ் ஆக்குவதோடு, வாய்ப் புண்களை நன்கு குணப்படுத்தும் தன்மை கொண்டது.

⚜ கொழுப்புக்களை குறைக்கும்
கொத்தமல்லி இலையில் ஒலீயிக் அமிலம், லினோலிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், பாமிற்றிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுவதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது.

⚜ மேலும் இரத்த நாளங்களின் சுவர்களில் படியும் கொழுப்பை நன்கு குறைப்பதால், மாரடைப்பு வருவதை பெருமளவு குறைக்கிறது.

⚜ செரிமானத்தை அதிகரிக்கும்
கொத்தமல்லியில் மணம் நிறைந்த நறுமண எண்ணெய் இருப்பதால், பசியுண்டாக்கியாகச் செயல்பட்டு, வயிற்றில் செரிமானத்திற்குப் பயன்படும் நொதிகளையும், சுரப்புக்களையும் அதிகமாக சுரக்க உதவுகிறது.

⚜ எனவே உடலின் செரிமான சக்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு நன்கு உதவுகிறது.

⚜ மேலும் பசியின்மையைப் போக்குவதிலும் பயன்படுகிறது.
         
              

புதன், 19 ஜூலை, 2017

காரைக்குடி சிக்கன் கறி



காரைக்குடி சிக்கன் கறி செய்ய தேவையானவை

சிக்கன் - அரை கிலோவெங்காயம் - ஒன்று (பெரியது)தக்காளி - 2கறிவேப்பிலை - 2 கொத்துசோம்பு - கால் தேக்கரண்டி (தாளிக்க)உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்பசாம்பார் பொடி / மிளகாய் தனியா தூள் கலவை - 2 தேக்கரண்டிபச்சை மிளகாய் - 2 (அ) மிளகு - 2 தேக்கரண்டி (விரும்பினால்)இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டிமஞ்சள் தூள் - சிறிதுஅரைக்க:மிளகு - ஒரு தேக்கரண்டிசீரகம் - ஒரு தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் - 6தனியா - 4 தேக்கரண்டிபட்டை - ஒரு துண்டுகிராம்பு - 5ஏலக்காய் - 4மராத்தி மொக்கு - சிறிதுஜாதிக்காய் - கால் பாகம்கறிவேப்பிலை - 8 கொத்துதேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி

காரைக்குடி சிக்கன் கறி செய்வது எப்படி :

சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பிரட்டி வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ளவற்றில் தேங்காய் துருவல், கறிவேப்பிலை தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும். அதன் பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வதக்கி எடுத்து ஆறவிடவும். ஆறியதும் முதலில் பொடியாக அரைத்து பின்பு தேவைக்கேற்ப நீர் விட்டு நைசாக அரைத்துக் எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, சிறிது கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். (பச்சை மிளகாய் சேர்க்க விரும்பினால் சேர்க்கலாம்). அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி குழைய வதங்கியதும் சாம்பார் பொடி அல்லது மிளகாய் மற்றும் தனியா தூள் சேர்த்து பிரட்டி எண்ணெய் பிரிய வதக்கவும். தூள் வாசம் போனதும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும். (நீர் சேர்க்கத் தேவையில்லை. சிக்கனிலிருந்து வரும் நீர் மசாலாவோடு கலந்து மீண்டும் சிக்கன் அதை முழுவதுமாக இழுத்துவிடும். இவ்வாறு செய்வதால் சிக்கனுடன் மசாலா சேர்ந்து நன்றாக ஊறி இருக்கும்). சிக்கன் நன்றாக வெந்ததும் அரைத்த மசாலா கலவையை ஊற்றி கலந்து கொதிக்கவிடவும். பச்சை வாசம் போகக் கொதித்து எண்ணெய் பிரியும் போது சிறிது கறிவேப்பிலை மற்றும் மிளகு தூள் (விரும்பினால்) சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும். சுவையான காரைக்குடி சிக்கன் கறி தயார்

சுவாச கோளாறுகளை போக்க பாகற்காயை பொரியல் செய்து சாப்பிட்டாலே போதும்…



சுவாச கோளாறுகளை போக்க பாகற்காயை பொரியல் செய்து சாப்பிட்டாலே போதும்…

1.. இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்றவற்றிற்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும். இரண்டு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். இரத்த கொதிப்பு இரத்த கோளாறுகள், போன்றவைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

2.. ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் காலரா மற்றும் வாந்தி பேதியை போக்க இரண்டு டீஸ்பூன் பாகற்காய் இலையின் சாறு, இரண்டு டீஸ்பூன் டீத்தூள், வெங்காயச்சாறு இரண்டு டீஸ்பூன், எலுமிச்ச சாறு இரண்டு டீஸ்பூன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காலராவினால் ஏற்பட்ட வாந்தி பேதி குணமாகும். காலரா குணமாகும் வரை சாப்பிடவேண்டும்.

3.. பழுத்த பாகற்காய் இரத்தம் மற்றும் சிறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. ஏனெனில் பாகற்காய் செடியில் இன்சுலின் கொண்டுள்ளது. குறிப்பிட்ட அளவு பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டால் ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பது மட்டுமின்றி குளுக்கோஸ் சகிப்பு தன்மையை அதிகரிக்கிறது.

4.. தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தவும் பாகற்காய் சிறந்ததாகும்.

5.. பாகற்காயில் அதிக பீட்டா கரோட்டின் மற்றும் பிற பண்புகள் அடங்கியுள்ளன. இது கண்ணில் ஏற்படும் சிக்கல்களை போக்க சிறந்த மருந்தாகும். பாகற்காய் பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும்.

6.. பாகற்காற் பழத்தின் சாறு மது போதை மற்றும் நச்சுத் தன்மை நிறைந்த சிகிச்சைகளுக்கு சிறந்ததாகும். இது குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

7.. ஒரு டம்ளர் மோரில் மூன்று டீஸ்பூன் பாகற்காய் சாறு சேர்த்து மாதத்திற்கு மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலம் நோய் குணமாகும். மேலும் பாகற்காய் செடியின் வேர்களை பேஸ்ட் போல அரைத்து மூலம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வர மூலநோய் குணமாகும்.

8.. கைகளில் ஏற்படும் அரிப்பு, கால்களில் ஏற்படும் பூஞ்சை, தோல் தடிப்பு, சொரியாஸிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிடவேண்டும்.

9.. பாகற்காய் நச்சுத் தன்மையை அகற்றி இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

10.. சுவாச கோளாறு மற்றும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால் பாகற்காயை பொரியல் செய்தோ அல்லது ஜீஸ் செய்தோ சாப்பிட சுவாச கோளாறுகளில் ஏற்பட்ட பிரச்சனை தீரும்.

தேங்காய் பாலுக்கு இவ்வளவு மகத்துவங்கள் இருக்கா?..



தேங்காய் பாலுக்கு இவ்வளவு மகத்துவங்கள் இருக்கா?..


புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாதுபொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன.

தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும்.

தேங்காய் எண்ணெயை தீக்காயம் பட்ட இடத்தில் தடவி வந்தால் தீப்புண்கள் குணமாகும்.

கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக்.

தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்குடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஒடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளை குணப்படுத்துகிறது.

தேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்கு தேங்காய்பால் நஞ்சு முறிவு சிறந்தது.

தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால் தேன், கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும்.

பெருவயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தல் சரியாகும். தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும்.

தேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுபுண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

வாய்ப்புண் ஆற்றும், மூட்டு வாதம் போக்கும், அம்மை நோய் தீர்க்கும்... காளான் தரும் கணக்கில்லா பலன்கள்!..


வாய்ப்புண் ஆற்றும், மூட்டு வாதம் போக்கும், அம்மை நோய் தீர்க்கும்... காளான் தரும் கணக்கில்லா பலன்கள்!..

மழைக்காலங்களில் வளரும் ஒருவகை பூஞ்சைத் தாவர உயிரினம் காளான். இது மண்ணில் வளரும் ஒரு தாவரம். ஆனாலும், பெரும்பாலும் மக்கிப்போன பொருள்களின் மீது வளரக்கூடியது. இயற்கையாக வளரக்கூடிய காளான்களில், சில விஷமற்றவை, சில விஷமுள்ளவை. பொதுவாக, விஷக்காளான்கள் பல வண்ணங்களில் காணப்படும். துர்நாற்றம் வீசக்கூடியவையாகவையும் இருக்கும். உண்ணத் தகுந்த விஷமற்ற காளான்கள், சுவையுள்ளவை. அதிகச் சத்துகள் நிறைந்த. அதோடு, நிறைய மருத்துவப் பயன்கள் கொண்டவை. பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் இவை பலதரப்பட்ட சூழல்களில் வளருபவை. முற்காலங்களில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் ஏழைகளின் உணவாக இருந்தது காளான். இப்போது பல நாடுகளில் முறையாகப் பயிர் செய்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

நாட்டுக் காளான் தொடங்கி, பால், அரிசி, முட்டை, மொக்கு, சிப்பி, பூஞ்சை, நாய்க்குடை காளான் உள்ளிட்ட மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 2,000 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கிழக்கு இமயமலைப் பகுதியான சிக்கிம் மாநிலத்தில் காளான்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

இதில், பச்சையம் இல்லாததால், ஒளிச்சேர்க்கை இல்லாமலேயே தனக்குவேண்டிய உணவைப் பெறக்கூடியது. எனவேதான், காளான்கள் உணவுக்காகப் பிற உயிர்களைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. ஒட்டுண்ணியாகவும் சாறுண்ணியாகவும் இருப்பதால் இவை தம் உணவுத்தேவையை பூர்த்தி செய்துகொள்கின்றன. உதாரணமாக, நச்சுக்காளான்கள் மரங்களில் ஒட்டிக்கொண்டு அவற்றின் சத்துகளை உறிஞ்சி அவற்றைப் பட்டுப்போகச் செய்துவிடுகின்றன. காய்கறிகள் அழுகிப்போகவும் இவை காரணமாக இருக்கின்றன.

 பேக்கரிப் பொருள்கள் தயாரிக்கவும், பீர் தயாரிக்கவும் ஈஸ்ட் காளான் மிகவும் அவசியம். அதே நேரத்தில் தொண்டை மற்றும் வாயில் கொப்பளங்களை ஏற்படுத்தித் தொல்லை தருவதும் அந்த ஈஸ்ட் காளான்தான்.

காளானில் எண்ணிலடங்கா சத்துகள் நிறைந்திருப்பதால், இறைச்சிகளுக்கு இணையான ஓர் உணவுப்பொருள் இது எனலாம். 100 கிராம் காளானில் 35 சதவிகிதம் புரதச்சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது புரதச்சத்து. இறைச்சி மற்றும் முட்டையில் புரதமும் கொழுப்பும் இருக்கின்றன. ஆனால் அவை ரத்தக்குழாயில் கொலஸ்ட்ராலைச் சேமித்து, அபாயத்தை ஏற்படுத்திவிடும். மாறாக, காளானில் கொழுப்புச்சத்து இல்லாததால், அந்தப் பிரச்னை எதுவும் இல்லை. ஆகவேதான் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், இதய நோய், மலச்சிக்கல் மற்றும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி போன்றவற்றுக்கு காளான் உணவு சிபாரிசு செய்யப்படுகிறது.


காரட் சாதம்



காரட் சாதம்

*தேவையான பொருட்கள்:*


காரட் -5பாஸ்மதி அரிசி-1 கப் பட்டை-1கிராம்பு-3கரம் மசாலா - 1/2 ஸ்பூன்மிளகாய் தூள்-3/4 ஸ்பூன்மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் வெங்காயம் -1உப்பு-1/2 ஸ்பூன்எண்ணெய் - 3 ஸ்பூன்

*செய்முறை:*

பாஸ்மதி அரிசியை நன்கு ஒட்டாத படி சாதமாக வடித்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,கிராம்பு சேர்த்து வதக்கவும்.

 பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் துருவிய காரட் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் அதில் உப்பு , கரம் மசாலா, மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
(அடுப்பை மிதமான தீயில் வைத்துகொள்ளவும்)

பின் அதில் வடித்த சாதத்தை சேர்த்து கிளறினால் காரட் சாதம் ரெடி.

தலைக்கறி கிரேவி..



தலைக்கறி கிரேவி..


ஆட்டு தலை- 1 (சுத்தம் செய்தது)

வெங்காயம்-3

தக்காளி-4

கறிவேப்பிலை-ஒரு கொத்து

பச்சை மிளகாய்-4

இஞ்சிபூண்டு விழுது-4 ஸ்பூன்

சீரகத்தூள்-அரை ஸ்பூன்

மிளகாய் தூள்-1 ஸ்பூன்

மஞ்சள் தூள்- கால்ஸ்பூன்

எண்ணெய்-2 மேசைகரண்டி

பட்டை-1

ஏலக்காய்-2

கிராம்பு-3

உப்பு-தேவைக்கு


நாக்கு பகுதி மட்டும் எடுத்து தீயில் (தீயில் காட்டினால் தோல் உரிக்க ஏதுவாக இருக்கும்) காட்டி பின் மேலாக உள்ள தோலை உரிக்கவும்

கறியை சுத்தம் செய்யவும். மூளையை மட்டும் தனியே எடுத்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை,ஏலக்காய்,கிராம்பு,கறிவேப்பிலை,பச்சை மிளகாய் சேர்க்கவும்.

பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்

இப்போது தூள் வகைகளை சேர்த்து நன்கு கிளறவும்

பின் தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.

பின் கறியை சேர்த்து கொஞ்சமாக நீர் தெளித்து குக்கரில் 2 விசிலுக்கு வைக்கவும்.

பின்னர் மூளையை சேர்த்து சிம்மில் வைத்து குக்கரை மூடாமல் வேகவிடவும்

தலைக்கறி கிரேவி தயார்

முதலிலேயே மூளையை சேர்ப்பதால் கரைந்து விடும்.

குக்கரில் செய்யாமலும் செய்யலாம்.அதில் இன்னும் சுவை கூடும்.

முடிந்த வரை பெரிய துண்டுகளாக வெட்ட சொல்லவும்.

அப்போது தான் எலும்பு நொறுங்காமல் இருக்கும்.

அஜீரணம் குணமாக



அஜீரணம் குணமாக..

அஜீரணம் என்பது அனைத்து வயதினருக்கும் வரும் ஓர் வயிற்றுத் தொல்லை.

நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் போகும் போது அஜீரணம் உண்டாகும்.

நாம் உண்ணும் உணவை செரிக்க செரிமான நீர் சுரப்பதில் பிரச்சனை ஏற்பட்டாலும் இந்த வயிற்று கோளறு ஏற்படும்.

 பொதுவாகவே வயது ஏற ஏற செரிமான நீர் சுரப்பது குறைந்து கொண்டே வரும்.

 சில சமயங்களில் உண்ணும் உணவை சரியாக வாயில் அரைத்து மென்று சாப்பிடாவிட்டாலும் அஜீரணம் வரும்.

 செரிமான நீரின் வேலையை குறைக்க உண்ணும் போதே உணவை நன்றாக அரைத்து சாப்பிட வேண்டும்.

அதிகமான காரம், அதிகமான புளிப்பு மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுகளை உண்ணும் போது இயல்பாக சுரக்கும் செரிமான நீர் சுரப்பதில் பிரச்சனை ஏற்படுவதால் அஜீரணம் வர வாய்ப்புண்டு.

இந்த வகையான உணவுகளை உண்ணும் போது உடலுக்குள் உணவு செல்லும் பாதையில் உள்ள உறுப்புகள் எரிச்சலுக்கு ஆளாகும்.

அப்போது உணவு பாதை உறுப்புகளால் செரிமான நீரை சரிவர சுரக்க இயலாது.

வீட்டு சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு அஜீரண பிரச்சனை அவ்வளவாக வராது.

 அதிக உணவு உண்ணும் போதோ கடைகளில் உணவு வாங்கி உண்ணும் போதோ அஜீரணம் ஏற்படும்.

பொதுவாக சுற்றுலா தளங்கள் சென்றாலே அஜீரண பிரச்சனை கண்டிப்பாக வரும்.

 அங்கே கண்ட கண்ட உணவுகளை உண்பதால் அனைத்து வயதினருக்கும் அஜீரணம் ஆக வாய்ப்புண்டு.

*கீழே பலவகையான அஜீரண மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன, உங்கள் வீட்டில் உள்ள பொருட்களுக்கு ஏற்றவாறான மருந்தை எடுத்து கொள்ளுங்கள்.*


*அஜீரணம் குணமாக கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மருந்து*

சுற்றுலா மற்றும் விழாகால சமயங்களில் வீட்டில் இருக்க கூடிய கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் கையில் வைத்துக் கொள்வது சாலசிறந்த முன்எச்சரிக்கை நடவடிக்கை ஆகும்.

மிக எளிய மருத்துவமாக ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

சுற்றுலா செல்லும் போது எளிதில் எடுத்து செல்ல கூடிய இந்த வீட்டு பொருட்களை மறக்காமல் எடுத்து செல்லுங்கள்.

*அஜீரணம் குணமாக ஓமம், கருப்பட்டி மருந்து*

அஜீரணம் குணமாக ஓமம் மற்றும் கருப்பட்டி கலந்து நம் வீட்டிலேயே கஷாயம் செய்து குடிக்கலாம்.

ஓர் சிறிய பாத்திரத்தில் நீர் ஊற்றி சுட வைக்க வேண்டும். அதில் கருப்பட்டி போட்டு கருப்பட்டி கரையும் வரை கலக்க வேண்டும். கருப்பட்டி கரைந்ததும் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். அதில் ஓமம் கலந்து குடித்தால் வயிற்று கோளாறு மட்டுப்படும். குடிக்க இதமாகவும் இருக்கும்.


*அஜீரணம் குணமாக கருப்பட்டி, சுக்கு, மிளகு மருந்து*

கருப்பட்டியுடன் சிறிது சுக்கு  சேர்த்து அவற்றுடன் 4 மிளகும் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும். இந்த மருந்தை தயார் செய்து காற்று போகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளலாம். அஜீரணம் ஏற்படும் சமயங்களில் இரண்டு வேளை சாப்பிட்டால் அஜீரணம் குணமாகி நல்ல பசி ஏற்படும்.


*அஜீரணம் குணமாக சீரகம் மருந்து*

அஜீரணத்திற்க்கு வெறும் சீரகத்தை மட்டும் நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த சீரக நீரை குடித்து வர நன்கு ஜீரணம் ஆவதோடு, உடலும் குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணத்தினால் அஜீரணம் ஏற்பட்டிருந்தால் உடனே சரியாகிவிடும்.


*அஜீரணம் குணமாக கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் மருந்து*

அஜீரணத்திற்காக நாம் உண்ணும் உணவில் ஒரு பாகமாக சேர்த்து கொள்ள கூடிய மருந்து இது. அஜீரணம் குணமாக கறிவேப்பிலை, சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் போல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அஜீரணம் ஏற்படும் சமயங்களில் சாப்பிட தோணாது. எளிதில் ஜீரணம் ஆக கூடிய இட்லியுடன் இந்த துவையல் சேர்த்து சாப்பிடலாம்.

*அஜீரணம் குணமாக வெற்றிலை, மிளகு மருந்து*

விருந்து நிகழ்சிகளில் வெற்றிலை வைப்பதின் நோக்கமே ஜீரணத்திற்காகத் தான். தடபுடலான விருந்து உணவுகளில் உள்ள மசாலா அவ்வளவு சீக்கிரம் ஜீரணம் ஆகாது. அசைவ விருந்தானால் சொல்ல தேவையே இல்லை. இதை கருத்தில் கொண்டுதான் நம் முன்னோர்கள் வெற்றிலையை விருந்து நிகழ்சிகளின் ஓர் அங்கமாக வைத்திருந்தனர். வெற்றிலை அஜீரண கோளாறை குறைத்து ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

அஜீரண கோளாறு ஏற்பட்டால் வெற்றிலையுடன் (பாக்கு சுண்ணாம்பு இல்லாமல்) நான்கு மிளகு சேர்த்து மென்று தின்றால் அஜீரணக்கோளாறு சரியாகும். மிளகு அதிகம் சேர்த்தல் காரம் அதிகமாக இருக்கும்.


*அஜீரணம் குணமாக இஞ்சி, தேன் மருந்து*

அஜீரண கோளாறுக்கு மட்டுமின்றி பொதுவாகவே ஜீரண சக்தியை அதிகரிக்க கொடுக்கும் மருந்து இது. குழந்தைகளின் ஜீரணசக்திக்காக மாதமொரு முறை கண்டிப்பாக கொடுக்க வேண்டிய அருமருந்து இது. இஞ்சியை தோல் நீக்கி  தட்டி(அரைத்து) சாறு எடுத்து அதை நன்றாக தெளிய வைத்து இறுத்து சுத்தமான இஞ்சி சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும். இஞ்சியை தெளிய வைத்து இறுத்தாமல் அதன் சாறு எடுக்க கூடாது. தேனின் மருத்துவ குணத்துடன் இஞ்சியின் காட்டமான சுவையை குறைக்கவும் தேன் சேர்க்கப்படுகின்றது. நம் சுவைக்கேற்றவாறு தேனின் அளவை கூட்டி கொள்ளலாம். குழந்தைகளுக்கு தேன் அதிகம் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.


*அஜீரணம் குணமாக சாதம் வடித்த நீர், மஞ்சள் பொடி மருந்து*

அஜீரணம் குணமாக வேறு எந்த ஒரு பொருளையும் தேடி போக தேவையில்லை. வீட்டில் கண்டிப்பாய் இருக்கக்கூடிய மஞ்சள்தூள் கொண்டே குணபடுத்தக் கூடிய எளிமையான ஒரு மருத்துவம் இது. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் குணமாகும். ஆனால் இந்த குக்கர் காலத்தில் சாதம் வடித்த நீர் கிடைப்பது தான் சற்று சிரமம். ஓரிரு நாட்களுக்கு குக்கரை தவிர்த்து இந்த மருத்துவத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.

 *அஜீரணப் பிரச்சினைக்கு ஒரு எளிய தீர்வு.*

50 கிராம் சீரகத்தை பொன்னிறமாக வறுத்து,  பொடித்து வைத்துக் கொள்ளவும்.
                         
இதில் ஒரு மேசைக் கரண்டி அளவு எடுத்துக் கொள்ளவும். இதற்குச் சமமாக ஒரு மேசைக் கரண்டி அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்.  இவ்விரண்டையும் கலந்து, வாயில் போட்டு  மென்று  நீர் அருந்த, அஜீரணப் பிரச்சினை போயே போச்சு.


 அஜீரணம் குணமாக 7 வழிகள் !!

1) ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
2) கறிவேப்பிலை, சுக்கு, சீரகம், ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜீரணம் சரியாகும்.
3) வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜீரணக்கோளாறு சரியாகும்.
4) சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜீரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.
5) ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.
6) சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜீரணம் குணமாகி பசி ஏற்படும்.
7) ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினாலும் அஜீரணம் சரியாகும். அஜீரணம் சரியானாலும், 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து தொடர்ந்து பருகினால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

வயிற்றைச் சுத்தமாக்கும் உணவுகள்

அஜீரணப் பிரச்சினை என்பது இன்று அதிகமான பேரை அவதிக்குள்ளாக்குகிறது. உண்ணும் உணவு ஒழுங்காக செரிக்காவிட்டால் உடல்நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும். வயிற்று வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு சிரமத்தைத் தரும்.
எனவே வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்போது தான் செரிமான மண்டலத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும். பச்சைக் காய்கறிகள் வயிற்றைச் சுத்தமாக்கும். கீரைகள், செலரி, புராக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும்.
அதேபோல கேரட், வெங் காயம், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைட்ரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை. புளிப்புச் சுவையுள்ள சிட்ரஸ் பழங்கள், செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு ஏற்றது.
எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை செரிமான மண்டலத்துக்கு ஏற்ற உணவுகள். அதே போல் தினசரி இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். தானிய உணவுகள், கோதுமை ரொட்டி போன்றவை எளிதில் ஜீரணமாகும்.
தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும். அதே போல, தினசரி உண்ணும் உணவுகள் எளிதில் செரிப்பதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். பால், பழரசங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூலம் செரிமான மண்டல கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
சத்தான உணவு சாப்பிடுவதன் மூலம் உடம்பில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். தொப்பை ஏற்படாது. வயிறு தட்டையாக இருக்கும். வாயில் வைக்கும் உணவில் நாம் கவனமாக இருந்தால், வயிற்றில் பிரச்சினை ஏற்படாது!

செவ்வாய், 18 ஜூலை, 2017

பூண்டு பிரட் சீஸ் ரெசிபி / GARLIC BREAD CHEESE



பூண்டு பிரட் சீஸ் ரெசிபி / GARLIC BREAD CHEESE

*லஞ்ச் பாக்ஸ் recipes*

*தேவையான பொருட்கள்:*

பிரட்                     -       4 துண்டுகள்

பூண்டு                  -       6-7 பற்கள்

வெண்ணெய்         -       3 டேபிள் ஸ்பூன்

துருவிய சீஸ்         -       1 டேபிள் ஸ்பூன்

சில்லி ப்ளேக்ஸ்    -       1/2 டீஸ்பூன்

  மல்லித் தளை    -       1 டீஸ்பூன் (நறுக்கியது)

நெய்                    -       தேவையான அளவு

உப்பு                    -       தேவையான அளவு

*செய்முறை:*

முதலில் பூண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் வெண்ணெய், பூண்டு பேஸ்ட், சில்லி ப்ளேக்ஸ், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி, சீஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு பிரட் துண்டுகளை எடுத்து, அதனை சுற்றியுள்ளதை நீக்கிவிட்டு, அதன் மேல் கலந்து வைத்துள்ள கலவையை முன்னும், பின்னும் தடவிக் கொள்ள வேண்டும்.

பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் நெய் தடவி பிரட் துண்டுகளை போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக டோஸ்ட் செய்தால், கார்லிக் பிரட் ரெடி


செம்பருத்தி பூக்கள் கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்தும்...



செம்பருத்தி பூக்கள் கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்தும்...

செம்பருத்தி - பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடியாகும்.  சிவப்புநிறப் பூக்களையுடைய பருத்திச் செடியே செம்பருத்தி என்று அழைக்கப்படுகிறது.  காசிபியம் ஆர்போரியம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகளின் பூக்களே மருத்துவத்தில் பெருமளவு பயன்படுகின்றன.  இந்தியா, இலங்கை போன்ற வரள்வலய இடங்களில் வளரும் தாவர இனத்தைச் சேர்ந்தது.  இது கிழக்கு ஆசியாவில் தோன்றியது.  இதை சீன ரோஜா எனவும் அழைக்கின்றனர்.

இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது.  ஆயுர்வேதத்தில் இது ஜபா புஸ்பா, ருத்ர புஷ்ப, ரக்த கார்பாச என்றும் அழைக்கப்படுகிறது.  செம்பருத்திப் பூக்கள் இரண்டு விதமாக இருப்பதுண்டு.  ஒன்று தாமரை மலர் போன்று அடுக்கு அடுக்காகவும், தனித்தனியான இதழ்களுடனும் இருக்கும்.  இந்தப்பூக்களில் தங்கச்சத்து இருப்பதால், தங்க பஸ்பம் சாப்பிடும்போது இந்தப் பூ கஷாயத்தைத் துணை மருந்தாகச் சாப்பிடுவார்கள். இந்தச்செடியின் நுனி முதல் வேர் வரை அனைத்தும் பயன்தரக்கூடியது.

இதே குடும்பத்தைச் சார்ந்த செம்பரத்தை செடிகளை நாம் வீட்டில் அழகுக்காக வளர்க்கும் செடிகளாகும்.  செம்பரத்தை செடிகளும், செம்பருத்திச் செடிகளும் வேறு, வேறு செடிகளாகும்.

செம்பருத்தியில் ஸ்டெர்குலிக் அமிலம், மால்வாலிக் அமிலம், அஸ்கோர்பிக் அமிலம், குளுக்கோசைடுகள், சயனின், சயனிடின், தயமின், நியசின், கரோட்டின் ஆகிய வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.

சில குழந்தைகள் உடல் பலகீனத்துடன் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருப்பார்கள்.  இந்தக் குறையை போக்கிட, ஐந்து செம்பருத்திப்பூக்களை ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு கால் லிட்டர் ஆகும்வரை நன்கு காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்து தொடர்ந்து கொடுத்து வர, சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் கிடைக்கும்.