செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் 25 உணவுகள்!!!



உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் 25 உணவுகள்!!!

உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறைப்பதை பற்றி தான் பல பேரும் ஆலோசனை பெறுவார்கள். அதனை பற்றிய பல சிகிச்சை முறைகளை தான் அன்றாடம் பத்திரிக்கைகளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ பார்க்கிறோம். ஆனால் உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு எடையை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு பிரச்சனையும் இருக்கும் அல்லவா? ஆனால் அவர்களின் வீதம் குறைவாக இருப்பதால், பலர் அதை பற்றி அறிந்து கொள்வதில்லை. அதற்காக அவர்கள் பிரச்சனையை நாம் கண்டு கொள்ளாமல் இருக்க முடியுமா? ஜீரோ சைஸ் உடல் கட்டமைப்பை கொள்வதற்கு விரும்பும் இந்த காலத்தில், ஆரோக்கியமான உடல் கட்டமைப்பின் மீது கவனம் செலுத்துவதும் முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு உடல் எடை குறைவாக இருந்தால், அதனை ஒருசில உணவுகளின் மூலம் சரிசெய்யலாம். ஆகவே தமிழ் போல்டு ஸ்கை, உடல் எடையை அதிகரிக்க உதவும் 25 வகையான உணவுகளை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து உணவில் சேர்த்து, உடல் எடையை அதிகரித்து, அழகான உடலமைப்பைப் பெறுங்கள்.

சால்மன் மீன்

தினமும் ஒன்று அல்லது இரண்டு சால்மன் மீன்களை சாப்பிடுவதால், உடலுக்குத் தேவையான புரதச்சத்தானது உள்ளிறங்கி, உடல் எடை அதிகரிக்கச் செய்யும். மேலும் அதிலுள்ள இன்றியமையா எண்ணெய்கள் சோம்பலில் இருந்து காத்து, தேவையான நல்ல கொழுப்பை உள்ளிறங்கச் செய்யும்.

சூரை மீன்

சூரை மீன்களில் உள்ள அதிமுக்கியமான கொழுப்பமிலங்கள், உடல் எடையை மட்டும் அதிகரிக்கச் செய்யாமல், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் உதவி புரியும். அதிலும் மதிய உணவில், சீரான முறையில் சூரை மீன் சாலட்டை சேர்த்துக் கொண்டால், கொஞ்சம் வேகமாக உடல் எடையானது அதிகரிக்கும்.

இறால் கடல் உணவு பிரியர்களா? அப்படியானால் தினமும் இரண்டு முறை இறால்களை சாப்பிடலாம். அதிலுள்ள வளமான ஊட்டச்சத்தும், அத்தியாவசிய அமிலங்களும், உடலில் கலோரிகளை தங்க வைத்து, உடல் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும்.

கோழியின் நெஞ்சுக்கறி கோழியின் நெஞ்சுக்கறியை க்ரில் செய்து, மயோனைஸ் தடவி மதிய உணவோடு சாப்பிடலாம். இது சுவைமிக்க உணவாக மட்டுமல்லாமல், உடல் எடை கூடவும் உதவி புரியும்.

கொத்திய மாட்டிறைச்சி சத்துள்ள கொத்திய மாட்டிறைச்சியை சாண்ட்விச் உடன் சேர்த்து உண்டால், உடல் எடை அதிகரிக்கும். ஏனெனில் இதில் உள்ள கொழுப்பு சுலபமாக உள்ளிறங்குவதால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.

முட்டை உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால், வளமான புரதச்சத்து மற்றும் அமினோ அமிலம் கலந்துள்ள முட்டைகளை சாப்பிட வேண்டும். அதிலும் முட்டையில் உள்ள மஞ்சள் கருவில், அதிக அளவில் நல்ல கொழுப்பிணியும், ஆற்றல் மிக்க கலோரிகளும் நிறைந்துள்ளது. ஆகவே தினமும் இரண்டு முட்டைகள் உண்டால், உடல் எடையை வேகமாக அதிகரிக்கலாம்.

சீஸ்/பாலாடைக் கட்டி நுரைமிக்க பாலில் செய்யப்பட்ட பாலாடைக் கட்டிகளில், சைவ உணவு உண்ணுபவர்களுக்கு கரைகின்ற புரதச்சத்தானது அதிகம் உள்ளது. புரதம் அதிகம் உள்ளதால், உடம்பில் போதுமான கலோரிகளை கொடுக்கும். அதனால் வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.

சிவப்பு இறைச்சி போதுமான அளவில் சிவப்பு இறைச்சியை உண்டால், உடலில் புரதச்சத்து உள்ளிறங்கும். அதனை பல வகையில் சமைத்து சாப்பிடலாம். சாஸ் உடன் சேர்த்து அதனை உணவோடு சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதால் வயிறு நிறைவதோடு மட்டுமல்லாமல், உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும்.

ஓட்ஸ் ஒரு பௌல் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுவது, ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவாக அமையும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடலுக்குத் தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை உடனே இது கொடுத்து விடும். ஆகவே ஓட்ஸ் உடன் சேர்த்து க்ரீம், நட்ஸ் மற்றும் வாழைப்பழங்களை சேர்த்து சுவையை அதிகரித்து கொள்ளுங்கள்.

கைக்குத்தல் அரிசி கைக்குத்தல் அரிசியில் போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே சீரான முறையில் கைக்குத்தல் அரிசியை உண்டால், உடலில் கார்போஹைட்ரேட்டானது சேமித்து வைக்கப்பட்டு, வேகமாக உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

பாஸ்தா ஒரு கிண்ணத்தில் சுவைமிக்க பாஸ்தாவை போட்டு சாப்பிட்டால், அது திருப்தியான உணவாக அமையும். அதிலும் இது வயிற்றை மட்டும் நிரப்பாமல், அதிலுள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் உடலில் ஊட்டச்சத்தை ஏற்றி, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

கோதுமை சப்பாத்தி கோதுமையால் செய்யப்பட்ட ஒரு துண்டு சப்பாத்தியில் 13 கலோரிகள் அடங்கியுள்ளது. ஆகவே கோதுமை சப்பாத்தியில் பிடித்த ஜாம், வெண்ணெய் அல்லது மயோனைஸ் தடவி சாப்பிட்டால், சுவைமிக்க காலை உணவாக அது அமையும். இதனால் வயிறும் வேகமாக நிறையும். இது உடலால் மெதுவாக உட்கொள்ளப்படுவதால், சுலபமாக உடல் எடை அதிகரிக்கும்.

பீன்ஸ் விலங்கில் உள்ள புரதச்சத்துக்கு நிகராக விளங்குகிறது பீன்ஸ். அதனால் அதனை சைவ உணவு உண்ணுபவர்கள் தேர்ந்தெடுக்கலாம். நல்ல சாஸ் உடன் அதை சமைத்தல், அதில் 300 கலோரிகள் அடங்கியிருக்கும். வேண்டுமெனில் அதனுடன் சில பீட்டா ரொட்டிகளையும் சேர்த்துக் கொண்டால், சுவைமிக்க உணவாக அது அமையும். இது உடல் எடையையும் அதிகரிக்கும்

உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கில், போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலப்புச்சீனி உள்ளது. இதனை உணவில் அதிகமாக பயன்படுத்தினால், சத்தான கொழுப்பாக உடலில் படியும். அதிலும் அவித்த அல்லது வேக வைத்த உருளைக்கிழங்கை சாலட், சாண்ட்விச் மற்றும் இதர உணவுகளோடு சேர்த்து உண்ணும் போது, உடல் எடை அதிகரிக்கும்.

சேனைக்கிழங்கு அதிக அளவு ஸ்டார்ச் கொண்டுள்ள மற்றொரு உணவாக சேனைக்கிழங்கு உள்ளது. ஒரு முறை அதனை உண்ணும் போது, உடம்பில் 150 கலோரிகள் அதிகரிக்கும். அதனை அடிக்கடி சத்தான உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும்.

அவகேடோ (வெண்ணைப் பழம்) பட்டர் ப்ரூட் என்றழைக்கப்படும் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் அதிகம் நிறைந்துள்ளது. இதனை சூப், சாலட் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடலில் ஊட்டச்சத்தை ஏற்றி, தேவையான கொழுப்பையும் சேர்க்கும். இதனால் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கும்

வேர்க்கடலை வெண்ணெய் அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் நிறைந்துள்ள இயற்கையான வேர்க்கடலை வெண்ணெய், உடல் நல ஆரோக்கியத்துக்கு பெரிதும் துணை புரிகிறது. அதிலும் அதனை பிரட் அல்லது பிஸ்கட்களில் தடவி உண்டால், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

பாதாம் வெண்ணெய் ஆரோக்கியமான புரதம் நிறைந்த நட்ஸ் வகையாக விளங்குகிறது பாதாம் வெண்ணெய். மேலும் இதில் அதிமுக்கிய கொழுப்பமிலங்களும் நிறைந்துள்ளது. இதனை சாலட், பிரட் மற்றும் டெசர்ட்டுகளில் சேர்த்த சாப்பிட்டால், சருமம் பளபளப்பாகவும், முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். அதனுடன் சேர்த்து உடல் எடையும் அதிகரிக்கும்.

ஆலிவ் எண்ணெய் சாலட்களில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி சாப்பிடுவது ஆரோக்கியமான உணவாக விளங்கும். அதில் அதிக அளவு கலோரிகள் மட்டுமல்லாமல், லினோலெயிக் அமிலமும் அதிகமாக உள்ளது. ஆகவே இந்த ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்ப்பதால், உடல் எடையை அதிகரிப்பதோடு, இதய நோய்கள் வராமலும் காக்கும்.

பாதாம் பருப்பு பாதாம் என்பது நரம்பு வளர்ச்சிக்கு பயன்படும் உணவாகும். இதனை உடல் எடை கூடுவதற்கான ஆரோக்கியமான சில விஷயங்களுக்காகவும் பயன்படுத்தலாம். தினமும் ஒரு கை பாதாம் பருப்புகளை உண்ணுவதால், உடலின் செயல்பாடு பாதுகாக்கப்பட்டு, நரம்பு திடமாக செயல்படும்.

ஆளி விதை ஆளி விதையில் அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் அடங்கியுள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை காத்து, உடலை சீரான முறையில் செயல்பட உதவும். எனவே தினமும் போதுமான அளவை ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் பாதிக்காமல் உடல் எடையை அதிகரிக்க உதவி புரியும்.

முந்திரி நல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு கை முந்திரி பருப்பை சாப்பிடுங்கள். அதிலுள்ள முக்கிய எண்ணெய்கள், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். மேலும் அணுக்களின் அடுக்குகளில் உய்வூட்டி, சருமம் மென்மையானதாக வைத்துக் கொள்ள உதவும்.

வாழைப்பழம் வேகமாக உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால், தினமும் இரண்டு அல்லது கூடுதல் வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். வாழைப்பழங்களில் கலப்புச்சீனியும், பழவெல்லமும் சரியான கலவையில் உள்ளது. மேலும் கரையும் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளது. இது உடனடி சக்தியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடல் எடை அதிகரிக்கவும் உதவி புரியும்.

தேங்காய் பால் தேங்காய் பாலில் அதிக அளவு டயட் எண்ணெய்கள் நிறைந்துள்ளது. மேலும் இது பலவகையான உணவு வகைகளுக்கு சுவையை கூட்டவும் பயன்படுகிறது. தேங்காய் பாலில் செய்த உணவில் அதிக கலோரிகள் இருக்கும். எனவே இதனை சாப்பிட்டால், உடல் எடையை அதிகரிக்கும்.

உலர் திராட்சை உலர் திராட்சையில் 99 கலோரிகள் அடங்கியுள்ளது. ஒரு கை உலர் திராட்சையை சாப்பிட்டால், உடலில் ஆரோக்கியமான கலோரிகள் நிறையும். மேலும் நார்ச்சத்தும் தேங்கும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, ஆரோக்கியமான கலோரிகளை அதிகரிக்கும். இதனால் வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.

பல் வலி உடனடியா குணமாக சிறந்த 5 வைத்திய முறைகள்



பல் வலி உடனடியா குணமாக சிறந்த 5 வைத்திய முறைகள்

இளம் பருவத்தினர் அனைவரும் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பல் வலி ஆகும் . உணவு சாப்பிடுவதற்கு கூட சிரமமளிக்கும் அதில் இருந்து விடுபட சில யோசனைகள்

தவறான பிரஷ்ஷிங் முறை ,முறையாக பல் விளக்காமல் இருப்பது,எக்கச்சக்கமான சர்க்கரை பொருட்களை சாப்பிடுவது போன்றவை பல்லுக்கு பிரச்சனையை உண்டாக்கிடும்.

மிளகு :

இம்முறையை நேச்சுரல் தெரபி என்று கூட சொல்லலாம். இதனைச் செய்வதால் பற்கூச்சம், வீக்கம், வாய்ப்புண், சொத்தைப்பல் , போன்றவை நிவர்த்தியாகும். இது மதமதப்பு தன்மையை கொடுக்கும்.

ஐந்து மிளகு மற்றும் இரண்டு கிராம்பு எடுத்து அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது இரண்டு பொடியாக்கி, அந்த பொடியை நோய்த்தொற்று ஏற்பட்ட இடத்தில் தடவிக்கொள்ளலாம்.

உப்புத்தண்ணீர் :

ஈறு பகுதி வீங்கியிருந்தாலோ அல்லது வாயில் பாக்டீரியா தொற்று வந்திருந்தால் இதனை மேற்க்கொள்ளலாம். தண்ணீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு நன்றாக கலந்து விடுங்கள். பின்னர் அந்த தண்ணீரைக் கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும்.

இப்படிச் செய்தால் பாக்டீரியா தொற்று இருந்தால் சரியாகும்.

எலுமிச்சை :

ஒரு கிளாஸ் சூடான தண்ணீருடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனைக் கொண்டு நன்றாக வாயை கொப்பளிக்க வேண்டும். இப்படிச் செய்தால் பாக்டீரியா அழிவதோடு, பாக்டீரியாவால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்திட முடியும்.

ஆலிவ் வேரா ஜெல் :

இதில் ஆன்ட்டி செப்ட்டிக் ப்ராப்பர்டீஸ் நிறையவே இருக்கிறது. இவை பற்களில் தடவுவதால் பாக்டீரியா பரவாமல் தடுக்கப்படும். ஈறு வீங்கியிருந்தால் இந்த ஜெல்லைக் கொண்டு லேசான அழுத்தம் கொடுத்து வர வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இஞ்சி :

இஞ்சியை அரைத்து விழுதாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் இரண்டு பூண்டு பற்களை சேர்த்து நன்றாக நுணுக்கி பற்களில் தடவி ஐந்து நிமிடம் அப்படியே வைத்திருங்கள். இப்படி வைத்திருக்கும் போது இஞ்சி விழுதை முழுங்கிடாமல் கவனமாக இருக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து அதனை கழுவிவிடலாம்.

இது அதீத வலிக்கு ஒரு ப்ரேக் கொடுப்பது போல சில நாட்களுக்கு நிவாரணம் வழங்குமே தவிர முற்றிலும் தீர்வாக அமையாது. பற்கள் பாதிக்கப்படுவதற்கு முன்னதாக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

உடல் எடை குறைய......!!!



உடல் எடை குறைய......!!!

பூண்டு பால்
4-5 பூண்டை ஒரு டம்ளர் பாலில் போட்டு பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்கி, பாலுடன் பூண்டை சாப்பிட வேண்டும். இதனால் பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்.

 

மாட்டுப் பால்
தினமும் வெதுவெதுப்பான மாட்டுப் பாலில் தேன் கலந்து குடித்து வர, உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.
 

புடலங்காய்
புடலங்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால், அது உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும். அதிலும் புடலங்காய் பொரியல் செய்து, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

 

கேரட் மற்றும் மோர்
தினமும் மோரில் கேரட்டை அரைத்து கலந்து குடித்து வர, உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.
 

பப்பாளிக் காய்
பப்பாளிக் காயை பருப்புடன் சேர்த்து அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர, அதுவும் உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
 

மிளகுத் தூள்
உடல் எடையைக் குறைக்க நினைக்கும் போது காய்கறிகள் சேர்க்கப்பட்ட சூப் செய்து குடிப்பது நல்லது. அப்படி சூப் செய்து குடிக்கும் போது, அதில் மிளகுத் தூளை சேர்த்து குடித்து வர, அதனால் சூப்பின் மணமும், சுவையும் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களும் கரையும்.
 

சூப்
உடல் எடையை வேகமாக குறைக்க நினைத்தால், 2-3 மாதங்களுக்கு தினமும் இரவில் காய்கறி சூப் செய்து குடித்து வாருங்கள். இதனால் உங்கள் உடலில் கொழுப்புக்கள் சேர்வது கட்டுப்படுத்தப்படும்.
 

துளசி பானம்
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் துளசியை பேஸ்ட் செய்து சேர்த்து, அத்துடன் தேன் கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால், உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு வெளியேற்றப்படும்.
 

எலுமிச்சை மற்றும் தேன்
இது அனைவருக்கும் தெரிந்த ஓர் வழி தான். அது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
 

தக்காளி
3-4 மாதங்களுக்கு தினமும் காலையில் ஒரு தக்காளியை சாப்பிட்டு வர, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டுன் இருப்பதோடு, கொழுப்புக்கள் குறைந்து, உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும்.
 

கொள்ளு
உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று கொள்ளு. அத்தகைய கொள்ளுவை 1-2 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு, 1 டம்ளர் நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைதது, மறுநாள் காலையில் அந்த நீரைப் பருக வேண்டும். இப்படி தினமும் பின்பற்றி வர, உங்கள் உடல் எடை குறைந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
 

முட்டைக்கோஸ்
எடையைக் குறைக்க நினைத்தால், முட்டைக்கோஸை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். அதற்கு அந்த முட்டைக்கோஸை சாலட்டாகவோ அல்லது வேறுவிதமாக சமைத்தோ சாப்பிடலாம்.
 

கறிவேப்பிலை
3-4 மாதங்களுக்கு தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்ல் 10-12 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வர, நீங்கள் எதிர்பாராத அளவில் உங்களின் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.
 

இஞ்சி சாறு
இஞ்சி சாறு உடலின் மெட்டபாலிச அளவை அதிகரிக்கும். உடலில் மெட்டபாலிசத்தின் அளவு அதிகமானால், கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறையும். எனவே இஞ்சி சாற்றினை அன்றாடம் ஒரு டம்ளர் பருகி வர உடல் எடை குறையும் .

திருமணங்களில் பிரசித்தி பெற்ற காசி அல்வா



திருமணங்களில் பிரசித்தி பெற்ற காசி அல்வா

 தேவையான பொருட்கள்:

பூசணிக்காய் - 2 கிலோ
தண்ணீர் - 4 டம்ளர்
நெய் - 300 கிராம்
திராட்சை, முந்திரி, ஏலப்பொடி - தேவையான அளவு
ஜாதிக்காய் பொடி - சிறிதளவு
சர்க்கரை - 11/2 கிலோ

செய்முறை:

பூசணிக்காயைத் துருவி, 4 டம்ளர் நீர் சேர்த்து வேகவைத்து வெள்ளைத் துணியில் வடிகட்டி பிழிந்தெடுக்க வேண்டும்.

11/2 கிலோ சர்ககரை சேர்த்து அடுப்பில் ஏற்றி வேக வைக்க வேண்டும். சர்க்கரை பாகாக உருகி, மொத்தமாக இறுகி வரும் வேளையில் வாணலியில், நெய் வைத்து முந்திரி, திராட்சை, பாதாம் வறுத்து, அல்வாவில் போட்டு கிளறி கடைசியாக ஏலப்பொடி சேர்த்து, ஜாதிக்காய்ப் பொடி போட விரும்பினால் போட்டு கடைசியாக கேசரி பவுடர் சேர்க்கலாம். கலர் சேர்ககாவிட்டாலும் அது இயற்கையான தேன் நிறத்தோடு நன்றாக இருக்கும்.

செல்சிதைவை தடுப்பதோடு, புற்று நோய் வராமல் தடுக்கும் வெள்ளரிக்காய்!



செல்சிதைவை தடுப்பதோடு, புற்று நோய் வராமல் தடுக்கும்  வெள்ளரிக்காய்!

வெள்ளரிக்காயில் விட்டமின் சி, கே, பீட்டா கரோடின் பொட்டாசியம் என மிக முக்கிய சத்துக்கள் உள்ளன.    விட்டமின் சி நிறைந்துள்ள வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகரித்து செல்சிதைவை தடுக்கிறது. புற்று நோய்  வராமல் தடுக்கும்.

1. வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். சீரகத்தை வறுத்து 2 ஸ்பூன் அளவு பொடித்துக் கொள்ளுங்கள். ஒரு ஜாரில் இந்த கலவைகளை போட்டு இவற்றுடன் இளநீரை ஊற்றுங்கள். ஜாரை அப்படியே அரை  மணி நேரம் வைத்து அதன்பின் பருகவும்.

2. வெள்ளரிக்காயில் அதிக அளவில் சிலிகா உல்ளதால், தசை இணைப்புகளை திடமாக்கி மூட்டு ஆரோக்கியத்துக்கு துணையாக  நிற்கும். அதிலும் இதனை கேரட் சாறுடன் சேர்த்து பருகும்போது, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு குறைவதால் கீல்வாதத்திற்கும் நிவாரணம் கிடைக்கும்.

3. வெள்ளரிக்காய், பாதியளவு எலுமிச்சை, புதினா இலை ஒரு கையளவு, உப்பு சிறிதளவு, எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக் கொண்டு ஒரு ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சில மணி நேரம் கழித்து இந்த நீரை குடிக்கவும்.

4. வெள்ளரி, திராட்சை, எலுமிச்சையை பொடியாக நறுக்கி ஜாரில் போடுங்கள். ஜாரின் கழுத்துவரை நீர் நிரப்பி நன்றாக குலுக்கி  ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சில மணி நேரம் அந்த நீரை கழித்து குடிப்பதற்கு முன் மிளகுத் தூளை தூவி பருகுங்கள்.                                              

வெள்ளரிக்காயில் விட்டமின் சி, கே, பீட்டா கரோடின் பொட்டாசியம் என மிக முக்கிய சத்துக்கள் உள்ளன.    விட்டமின் சி நிறைந்துள்ள வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகரித்து செல்சிதைவை தடுக்கிறது. புற்று நோய்  வராமல் தடுக்கும்.

1. வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். சீரகத்தை வறுத்து 2 ஸ்பூன் அளவு பொடித்துக் கொள்ளுங்கள். ஒரு ஜாரில் இந்த கலவைகளை போட்டு இவற்றுடன் இளநீரை ஊற்றுங்கள். ஜாரை அப்படியே அரை  மணி நேரம் வைத்து அதன்பின் பருகவும்.

2. வெள்ளரிக்காயில் அதிக அளவில் சிலிகா உல்ளதால், தசை இணைப்புகளை திடமாக்கி மூட்டு ஆரோக்கியத்துக்கு துணையாக  நிற்கும். அதிலும் இதனை கேரட் சாறுடன் சேர்த்து பருகும்போது, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு குறைவதால் கீல்வாதத்திற்கும் நிவாரணம் கிடைக்கும்.

3. வெள்ளரிக்காய், பாதியளவு எலுமிச்சை, புதினா இலை ஒரு கையளவு, உப்பு சிறிதளவு, எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக் கொண்டு ஒரு ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சில மணி நேரம் கழித்து இந்த நீரை குடிக்கவும்.

4. வெள்ளரி, திராட்சை, எலுமிச்சையை பொடியாக நறுக்கி ஜாரில் போடுங்கள். ஜாரின் கழுத்துவரை நீர் நிரப்பி நன்றாக குலுக்கி  ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சில மணி நேரம் அந்த நீரை கழித்து குடிப்பதற்கு முன் மிளகுத் தூளை தூவி பருகுங்கள்.

ஆப்பிள் பேரிச்சம் பழ மில்க் ஷேக்


ஆப்பிள் பேரிச்சம் பழ மில்க் ஷேக்

மாலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஏதேனும் மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலுக்கு நீர்ச்சத்துடன், இதர சத்துக்களையும் பெறலாம் அல்லவா? அதிலும் ஆப்பிள் மற்றும் பேரிச்சம் பழத்தைக் கொண்டு மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலின் வலிமை இன்னும் அதிகரிக்கும்.
இங்கு அந்த ஆப்பிள் பேரிச்சம் பழ மில்க் ஷேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 1
பால் - 1 கப்
பேரிச்சம் பழம் - 4-5
சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பேரிச்சப்பழத்தில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, அதனைப் பாலில் போட்டு 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஆப்பிளை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டுக் கொள்ளவும். பின் அதில் பாலுடன் கூடிய பேரிச்சம் பழம் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், ஆப்பிள் பேரிச்சம் பழ மில்க் ஷேக் ரெடி!!!

மரவள்ளிக் கிழங்கு புட்டு



மரவள்ளிக் கிழங்கு புட்டு

இதுவரை எத்தனையோ வித்தியாசமான புட்டுகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மரவள்ளிக் கிழங்கைக் கொண்டு புட்டு செய்து சுவைத்ததுண்டா? உண்மையில் இது வித்தியாசமான ருசியில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

இது ஓர் ஆரோக்கியமான ஸ்நாக்ஸாகவும், காலை உணவாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக் கிழங்கு - 1 கிலோ
தேங்காய் - 1 1/2 கப் (துருவியது)
 உப்பு - தேவையான அளவு

 செய்முறை:

முதலில் மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை துருவிக் கொண்டு, அத்துடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.

பின் அதனை பிழிந்து, அதிலுள்ள பாலை வெளியேற்றி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.

அதற்குள் புட்டு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும். பின்பு புட்டு குழலை எடுத்துக் கொண்டு,

அதனுள் சிறிய ஓட்டையுள்ள தட்டை வைத்து, முதலில் சிறிது துருவிய தேங்காயைப் போட்டு, பின் சிறிது துருவிய மரவள்ளிக் கிழங்கை போட்டு, அதனைத் தொடர்ந்து மீண்டும் சிறிது தேங்காய், மரவள்ளிக் கிழங்கு என குழலை நிரப்ப வேண்டும்.

பிறகு அந்த குழலை புட்டு பாத்திரத்துடன் இணைத்து, வேக வைத்து இறக்கினால், சுவையான மரவள்ளிக் கிழங்கு புட்டு ரெடி!!!

சோயா கைமா தோசை


சோயா கைமா தோசை

என்னென்ன தேவை?

தோசை மாவு – 2 கப்,
எண்ணெய் – சிறிதளவு,
சோயா – 100 கிராம்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப),
கரம் மசாலாத்தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

அரைக்க…

வெங்காயம் – 1/2 (நறுக்கியது),
பூண்டு – 4 பல்,
கறிவேப்பிலை – 5 இலை,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
பச்சை மிளகாய் – 3.

எப்படிச் செய்வது?

சோயாவை கழுவி அதனை மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயத்துடன், பச்சைமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதினை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். அத்துடன் தூள் வகைகள் சேர்த்து கிளறிவிடவும். அதில் அரைத்த சோயா சேர்த்து கலந்து 4 நிமிடங்கள் நன்றாக வேகவிடவும். இது வெந்து முட்டை பொடிமாஸ் மாதிரி இருக்கும். சோயா கைமா ரெடி. அத்துடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளவும். அதனை சிறிது நேரம் ஆறவைத்துக் கொள்ளவும். இப்பொழுது தோசைக் கல்லினை காயவைத்து கல் சூடானதும், அதில் தோசை மாவினை ஊற்றி நன்கு வெந்தவுடன் அதில் கலந்து வைத்துள்ள கைமா கலவையினை மேலே 2 ஸ்பூன் அளவு ஊற்றி பரவி விடவும். தோசையின் மீது சிறிது எண்ணெயினை ஊற்றி 1 நிமிடம் வேகவிட்டுப் பரிமாறவும்.

குழந்தைகளுக்கான காலிபிளவர் மசாலா தோசை


குழந்தைகளுக்கான காலிபிளவர் மசாலா தோசை

தேவையான பொருட்கள் :

தோசை மாவு – 2 கப்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
நறுக்கிய காலிபிளவர் – 100 கிராம்
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 100 கிராம்
பெங்களூரு தக்காளி – ஒன்று
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* காலிபிளவரை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் காலிபிளவரையும் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும். இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கிளறி மிதமான தீயில் நன்கு வேகவைத்து இறக்கவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு… தயார் செய்து வைத்த காலிபிளவர் மசாலாவை அதில் வைத்து பரவலாகத் தேய்த்து தோசையை மூடி வேகவிட்டு எடுக்கவும்.

* சூடான காலிபிளவர் மசாலா தோசை ரெடி!

சுவையான வெங்காய பொடி தோசை



சுவையான வெங்காய பொடி தோசை

தேவையான பொருட்கள் :

தோசை மாவு – 1 கப்
இட்லி பொடி – தேவையான அளவு
வெங்காயம் – 1
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை ஊற்றி, மெல்லிய தோசையாக சுடவும்.

* பின்னர் அதன் மேல் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி மற்றும் இட்லி பொடி தூவி, மேலே எண்ணெய் ஊற்றி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.

* பின்பு தோசையை திருப்பி போட்டு, 1 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறினால், வெங்காய பொடி தோசை ரெடி!!!

* இதற்கு தொட்டு கொள்ள எதுவும் வேண்டாம். சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

பலாப்பழ தோசை



பலாப்பழ தோசை

தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி – 1 கப்

ஏலக்காய் பவுடர் – 1 தேக்கரண்டி

பலாப்பழ துண்டுகள் – 2 கப்

வெல்லத்தூள் – 1 கப்

நெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசியை ஆறு மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்த அரிசியை உரலில் போட்டு ரவை போன்று அரைத்து கொள்ளவும்.

பிறகு வெல்லத்தையும், பலா பழத்துண்டுகளையும் உரலில் மையாக அரைக்கவும். இவற்றை அரிசிமாவுடன் நன்றாக சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். அதில் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கொண்டு அசத்தலாம்.

அரை மணி நேரம் கழித்து, தோசை கல்லில், நெய் விட்டு தோசை போல் வார்த்து எடுத்துக் கொண்டு பரிமாறினால் ருசியான தோசை ரெடி.

அல்வா பூட்டு



அல்வா பூட்டு

பச்சரிசி - 1/4 கிலோ,
வெல்லம் - 150 கிராம்,
ஏலக்காய் - 3,
தேங்காய் - 1/2 மூடி,
முந்திரி - 5.

அரிசியை கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய பின், கிரைண்டரில் போட்டு, நைசாக அரைக்கவும்.
வெல்லத்தை தட்டி 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடி கட்டவும்.
தேங்காயை பல்லு பல்லாக நறுக்கி வைக்கவும்.
வடிகட்டிய வெல்லத்தை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
பாகு பதம் வரும் போது அரைத்த மாவை ஊற்றி கிளறவும்.
ஏலக்காயை பொடி செய்து தூவவும்.
முந்திரியை வறுத்து போடவும்.
பல்லாக நறுக்கிய தேங்காய் சேர்த்து அல்வா பதம் வந்ததும் இறக்கவும்.
தேவையானால் 50 கிராம் நெய் சேர்த்து கொள்ளலாம்.

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

கிரீக் சாலட். Green Salad.



கிரீக் சாலட். Green Salad.

*தேவையானவை :*

வெங்காயம், வெள்ளரிக்காய், பச்சை குடமிளகாய், மஞ்சள் குடமிளகாய், சிவப்பு குடமிளகாய் - தலா ஒன்று
தக்காளி (கெட்டியானது) - 2
லெட்யூஸ் (சாலட் இலைகள்) - 4
பனீர்  - 100  கிராம்
ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு - தலா 2 டேபிள்ஸ்பூன்
ஓரிகானோ - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
சில்லி ஃபிளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
பூண்டு பவுடர் - அரை டீஸ்பூன் (அல்லது பொடியாக நறுக்கிய பூண்டு - 2 பல்)
உப்பு - தேவைக்கேற்ப    

*செய்முறை :*

👁‍🗨 குடமிளகாய்கள், தக்காளி ஆகியவற்றை விதைகளை எடுத்துவிட்டு சதுரங்களாக வெட்டவும்.

👁‍🗨 வெங்காயம், வெள்ளரிக்காய், பனீர் ஆகியவற்றையும் சதுரமான துண்டுகளாக வெட்டவும்.

👁‍🗨 லெட்யூஸ் இலைகளைக் கைகளால் பெரிய துண்டுகளாகப் பிய்த்துப் போடவும். இவை எல்லாவற்றையும் ஒரு பெரிய பவுலில் சேர்க்கவும்.

👁‍🗨 அகலமான வாயுள்ள பாட்டிலில் ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள், சில்லி ஃபிளேக்ஸ், ஓரிகானோ, பூண்டுப் பொடி அல்லது நறுக்கிய பூண்டு எல்லாவற்றையும் போட்டு மூடியைக்கொண்டு மூடி, நன்றாகக் குலுக்கவும். இதுதான் சாலட் டிரெஸ்ஸிங்.

👁‍🗨 நறுக்கிய காய்கறி கலவையுடன் சாலட் டிரெஸ்ஸிங்கை நன்றாகக் கலந்து பரிமாறவும்.

*குறிப்பு :*

வெளிநாடுகளில் கிரீக் சாலடில் ஃபெட்டா சீஸ் என்னும் சீஸ் வகையைச் சேர்ப்பது வழக்கம். இதற்குப் பதில் நம் நாட்டில் பனீர் சேர்க்கலாம்).

புரதம் நிறைந்த சத்தான கேழ்வரகு லட்டு.



புரதம் நிறைந்த சத்தான கேழ்வரகு லட்டு.


கேழ்வரகில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.


*தேவையானவை :*

கேழ்வரகு மாவு – 1 கப்
வெல்லம் அல்லது கருப்பட்டி – 1 கப் (துருவியது)
நெய் – 2 மேசைக்கரண்டி
முந்திரி – 1 தேக்கரண்டி
கருப்பு எள் – தேக்கரண்டி
திராட்சை – 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
சுக்கு தூள் – 1 சிட்டிகை

*செய்முறை :*

👁‍🗨 வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். (வெல்லம் கரையும் வரை வைத்தால் போதுமானது)

👁‍🗨 எள்ளை வெறும் கடாயில் வறுத்து கொள்ளவும்.

👁‍🗨 நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும்.

👁‍🗨 கேழ்வரகு மாவை இளஞ்சூடாக வாசனை வரும் வரை வறுத்தெடுத்து, சூடாக இருக்கும் போதே வெல்லம், நெயில் வறுத்த முந்திரி, திராட்சை, எள், ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவற்றை அதில் நன்கு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.

*சுண்ணாம்பு, இரும்பு, புரதம் நிறைந்த  கேழ்வரகு லட்டு தயார்.*

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

சுக்கில் இருக்கு சூட்சுமம் !!!



சுக்கில் இருக்கு சூட்சுமம் !!!

பித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக்குணப்படுத்தும். மூட்டுவலியை மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.

மருத்துவப் பயன்கள்:

1.சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி,சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால்,அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால்,அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர,தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால்,மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம்மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்l

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; என்பது பெரியோர் வாக்கு

உளுந்து கஞ்சி


உளுந்து கஞ்சி

உளுத்தம் பருப்பு உடலின் வலிமையை அதிகரிக்கும். அத்தகைய உளுத்தம் பருப்பை இட்லி, தோசை போன்றவை செய்வதற்கு தான் பயன்படுத்துவோம். ஆனால் இதனைக் கொண்டு காலை வேளையில் கஞ்சி செய்தும் சாப்பிடலாம்.
இங்கு அந்த உளுந்து கஞ்சியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து கொஞ்சம் சமைத்து சுவைத்து தான் பாருங்களேன்...
Healthy Ulundu Kanji Recipe
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
பூண்டு - 10 பற்கள் (பொடியாக நறுக்கியது)
வெந்தயம் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 5 கப்
சுக்கு பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 1/2 கப்
பால் - 1/2 லிட்டர் (கொதிக்க வைத்தது)

செய்முறை:
முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் அரிசி, உளுத்தம் பருப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, அத்துடன் பூண்டு, வெந்தயம் சேர்த்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு, தீயை குறைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
பின்பு குக்கரை திறந்து, மத்து கொண்டு லேசாக கடைந்து, பின் சுக்கு பொடி, உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து கிளறி, கொதிக்க வைத்த பாலை ஊற்றி நன்கு கிளறி இறக்கினால், உளுந்து கஞ்சி ரெடி!!! இதனை ஏதேனும் துவையலுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

ப்ராங்கி ரோல்



ப்ராங்கி ரோல்

என்னென்ன தேவை?

வெங்காயம், தக்காளி – தலா ஒன்று

கேரட் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்

பச்சைப் பட்டாணி – 5 டேபில் ஸ்பூன்

நறுக்கிய குடைமிளகாய் – 2 டேபிள் ஸ்பூன்

முட்டைகோஸ் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்

சுரைக்காய்த் துருவல் – அரை கப்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

காஷ்மீரி மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்

கோதுமை மாவு – ஒரு கப்

மைதா மாவு – கால் கப்

சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்குங்கள். பிறகு முட்டைகோஸ், கேரட், சுரைக்காய், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்குங்கள். வதங்கியதும் வேகவைத்த பச்சைப் பட்டாணி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்குங்கள்.கோதுமை மாவு, மைதா மாவு, தேவையான அளவு உப்பு இவற்றுடன் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையுங்கள்.

பிசைந்த மாவை 20 நிமிடம் ஊறவையுங்கள். பிறகு சப்பாத்தியாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு எடுங்கள். சப்பாத்தியினுள் 4 டீஸ்பூன் மசாலாவை வைத்துச் சுருட்டுங்கள். சோள மாவைத் தண்ணீர் சேர்த்துக் குழைத்து, சப்பாத்தியின் ஓரங்களை மூடிவிடுங்கள். இதை மீண்டும் தோசைக்கல்லில் போட்டு இரு முனைகளிலும் எண்ணெய் விட்டு, வேகவைத்து எடுங்கள். சுரைக்காயைக் கண்டாலே ஓடிப் போகும் குழந்தைகளும் இந்த ரோல்ஸை விரும்பிச் சாப்பிடுவார்கள.

வெஜ் கட்லெட் லாலிபாப்



வெஜ் கட்லெட் லாலிபாப்

என்னென்ன தேவை?

சர்க்கரைவள்ளி கிழங்கு – 50 கிராம்,
உருளைக்கிழங்கு – 50 கிராம்,
கேரட் – 50 கிராம்,
காலி ஃ ப்ளவர் – 50 கிராம்,
பனீர் – 50 கிராம்,
முட்டைகோஸ் – 50 கிராம்,
பச்சைமிளகாய் – 2,
உப்பு – தேவைக்கு,
இஞ்சி, பூண்டு – சிறிதளவு,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலா – 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2,
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி,
சோளமாவு (Corn flour) – 2 டேபிள்ஸ்பூன்,
பிரெட்தூள் – தேவைக்கு,
பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கிழங்கு வகைகளை வேகவைத்து மசிக்கவும். மற்ற காய்கறிகளை பொடியாக நறுக்கவும். எண்ணெயை காயவைத்து அதில் வெங்காயம் சேர்த்து வதக்கி, பிறகு இஞ்சி, பூண்டு, கரம் மசாலா, மிளகாய் தூள், உப்பு, பனீர், காலி ஃப்ளவர், முட்டைகோஸ் போன்றவற்றை ஒவ்வொன்றாக வதக்கி ஆறவைத்து அதில் மசித்து வைத்துள்ள கிழங்கு வகைகள், கொத்தமல்லி, பச்சைமிளகாய் சேர்த்து பிசைந்து லாலிபாப் சைசில் பிடித்து, அதை பிடித்து சாப்பிட கேரட்டை 2 இன்ச் நீளம் நீளவாக்கில் கட் செய்து லாலிபாப்பில் சொருகவும். கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் லாலிபாப்பை தோய்த்து பிரெட் கிரம்ஸில் கோட்டிங் கொடுத்து வைக்கவும். எண்ணெயை காயவைத்து டீப் ஃப்ரை செய்து எடுக்கவும். வெஜ் கட்லெட் லாலிபாப் ரெடி.

மாலை நேர ஸ்நாக்ஸ் ரைஸ் கட்லெட்



மாலை நேர ஸ்நாக்ஸ் ரைஸ் கட்லெட்

மதியம் செய்த சாதம் மீந்து விட்டால் மாலையில் அதில் சூப்பரான கட்லெட் செய்யலாம்.

தேவையான பொருட்கள் :

வேகவைத்த சாதம் – 1 கப்,
சோள மாவு – 2 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
பெருங்காய தூள் – 1/2 டீஸ்பூன்,
வெங்காயம் – 1
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்,
சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்,
இஞ்சி – ஒரு துண்டு,
கொத்தமல்லி இலை – 2 டேபிள்ஸ்பூன்,
புதினா இலை – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

* கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் சாதத்தை போட்டு, நன்கு பிசைந்து கொள்ளவும்.

* அடுத்து அதில் சோள மாவு, சீரகம், பெருங்காயத்தூள், வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், கரம்மசாலா, சாட் மசாலா, இஞ்சி, கொத்தமல்லி, புதினா, உப்பு சேர்த்து நன்கு கொட்டியாக பிசைந்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவில் ஒரு எலுமிச்சை அளவு எடுத்து கட்லெட் போல் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

* சூப்பரான ரைஸ் கட்லெட் ரெடி.

* தக்காளி சாஸ் மற்றும் கிரீன் சட்னியுடன் பரிமாறவும்.

ரவா இனிப்பு பணியாரம்



ரவா இனிப்பு பணியாரம்

தேவையான பொருட்கள்:

ரவா – 1 கப்
மைதா – 1கப்
சர்க்கரை – 1.5 கப்
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு

செய்முறை:

ரவையை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதில் மைதாவையும், சர்க்கரையையும் கலந்து ஒரு திக்கான கலவையாக்கிக் கொள்ளவும். சர்க்கரை நன்கு கரையும்வரை கலக்க வேண்டும். கட்டி இல்லாமல் கலக்க வேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரவை மைதா கலந்து வைத்துள்ள கலவையை ஒரு குழியான ஸ்பூனால் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் ஊற்றி நன்கு சிவந்து ப்ரௌன் நிறம் வந்ததும் எடுத்து தட்டில் வைத்து பறிமாறவும்.

குழந்தைகள் இதை மிகவும் விரும்பி உண்பார்கள். மிக எளிதாகவும் செய்திடலாம்.

உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு கீமா கபாப்


உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு கீமா கபாப்

தேவையான பொருட்கள் :

மட்டன் கீமா – 300 கிராம்
உருளைக்கிழங்கு – 250 கிராம்
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பிரட் துண்டு – 2
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிது
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
முட்டை – 2
பிரட் தூள் – 1 கப்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

* மட்டன் கீமாவை நீரில் நன்கு கழுவி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

* முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.

* பிரட் துண்டை நீரில் ஒருமுறை முக்கி எடுத்து, பிழிந்து, சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அனைத்தும் நன்றாக வதங்கியதும் மட்டன் கீமாவை சேர்த்து, உப்பு தூவி நன்கு கிளறி விட்டு, பின் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை கீமாவை நன்கு வேக வைக்க வேண்டும்.

* அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, துருவிய தேங்காய், பிரட் துண்டுகள், கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போக அனைத்து ஒன்று சேர நன்கு வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

* கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கில் சிறிது எடுத்து உருண்டையாக்கி, பின் தட்டையாக தட்டி அதன் நடுவே சிறிது மட்டன் கீமாவை வைத்து மூடி, முட்டையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

* சூப்பரான உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு கீமா கபாப் ரெடி!!!

சிவப்பு பூசணி விதை அல்வா



சிவப்பு பூசணி விதை அல்வா

தேவையானவை:

சிவப்பு பூசணி விதை – 50 கிராம், சர்க்கரை – 100 கிராம், நெய் – 50 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பாதாம் துருவல் – ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ – சிறிதளவு, மஞ்சள் அல்லது ஆரஞ்சு ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை.

செய்முறை:

சுடுநீரில் பூசணி விதைகளை ஒரு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து நைஸாக அரைக்கவும். பாத்திரத்தில் சர்க்கரை, ஃபுட் கலர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். நுரைவரும்போது அரைத்த பூசணி விழுது, நெய் சேர்த்துக் கிளறி சுருண்டு வரும்போது இறக்கவும். பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்து, பாதாம் துருவல், குங்குமப்பூ கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

பாதாம் ரோல்ஸ்



பாதாம் ரோல்ஸ்

தேவையானவை:

பாதாம் பருப்பு – 20, இனிப்பு பால் கோவா – 100 கிராம், நெய் – சிறிதளவு, பாதாம் எசன்ஸ், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, பொட்டுக்கடலை – ஒரு டீஸ்பூன் (பொடிக்கவும்), கலர் கொப்பரைத் தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

பாதாம் பருப்பை சுடுநீரில் அரை மணி நேரம் ஊறவிட்டு, தோல் உரிக்கவும். பிறகு, பாதாம் பருப்புகளைத் துடைத்து மிக்ஸியில் பொடிக்கவும். பாத்திரத்தில் பால் கோவா, பொட்டுக்கடலைப் பொடி, பாதாம் பருப்பு பொடி, ஏலக்காய்த்தூள், பாதாம் எசன்ஸ் சேர்த்து நன்கு உதிர்த்து கட்டியில்லாமல் பிசையவும். கையில் நெய் தடவிக்கொண்டு மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, உருளை (சிலிண்டர்) வடிவில் உருட்டி, கலர் கொப்பரைத் துருவலில் புரட்டி எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு: இதை இரண்டு நாள்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

காஜு – கோகனட் பொடி



காஜு – கோகனட் பொடி

தேவையானவை:

உடைத்த முந்திரி – 50 கிராம், துருவிய கொப்பரை/ தேங்காய்த் துருவல் – கால் கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 8 (அல்லது காரத்துக் கேற்ப), பெருங்காயம் – ஒரு சிறுகட்டி.

செய்முறை:

முந்திரி, துருவிய கொப்பரை/தேங்காய்த் துருவலைத் தனித்தனியே சிவக்க வறுக்கவும் (எண்ணெய் விட வேண்டாம்).

கடாயில் எண்ணெய்விட்டு, வறுக்கக் கொடுத்துள்ளவற்றை சிவக்க வறுத்து ஆறவிட்டு, முந்திரி, துருவிய கொப்பரை/ தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.

காஜு ஸ்வீட் பிரெட்


காஜு ஸ்வீட் பிரெட்

தேவையானவை:

இரண்டாக உடைத்த முந்திரி – 25 கிராம், சர்க்கரைத்தூள் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, இனிப்பு பிரெட் துண்டுகள் – ஒரு கப் (ஓரம் நீக்கி, சிறிய சதுரங்களாக நறுக்கியது), நெய் – 50 கிராம், தேன், உலர் திராட்சை – சிறிதளவு.

செய்முறை:

வாணலியில் நெய்யைச் சூடாக்கி… முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் பிரெட் துண்டுகளைச் சிறிது சிறிதாகப் போட்டு மொறுமொறுப்பாக வறுத்து எடுக்கவும். ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் வறுத்த பிரெட் துண்டுகள், முந்திரி, திராட்சை, சர்க்கரைத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். மேலே ஏலக்காய்த்தூள், தேன் சேர்த்து பிரெட்டின் மொறுமொறுப்புடன் பரிமாறவும்.

இதைக் குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

உடல் எடையை குறைக்கும் கொள்ளு – கம்பு புட்டு


உடல் எடையை குறைக்கும் கொள்ளு – கம்பு புட்டு

தேவையான பொருட்கள் :

கம்பு – ஒரு கப்
கொள்ளு – கால் கப்
சுக்கு – 2

செய்முறை :

* கம்பு மற்றும் கொள்ளுவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்கவும்.

* ஆறியவுடம் மிக்சியில் போட்டு அதனுடன் சுக்கு சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

* பொடித்து வைத்திருக்கும் மாவுடன் உப்பு சேர்த்த தண்ணீர் தெளித்து பிசையவும். பிடித்தால் உருண்டையாகவும், உடைத்தால் உடையும் பதம் வரும் வரை பிசையவும்

* மாவை புட்டு குழலில் வைத்து ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான கம்பு புட்டு தயார்.

* இதில் கொள்ளு சேர்ப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை சாப்பிடலாம். 

JIGIRTHANDA



JIGIRTHANDA

தேவையானவை :

பால் – ஒரு லிட்டர்

சர்க்கரை – 8 தேக்கரண்டி

சைனா கிராஸ் – 4 தேக்கரண்டி

ரோஸ் சிரப் – 1 தேக்கரண்டி

நன்னாரி ஸிரப் – 1 தேக்கரண்டி

ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) – 1

பால் கோவா – 2 தேக்கரண்டி

செய்முறை :

1. ஒரு லிட்டர் பாலை, சர்க்கரை சேர்த்து அடி கனமான வாணலியில் மெல்லிய தீயில் கொதிக்க விட்டு, ரோஸ் கலர் பவுடர் சேர்க்கவும். பாலை அரைலிட்டராக சுண்ட வைத்து ஆறியவுடன் பிரிஜ்ஜில் 6 மணி நேரம் வைக்கவும்.

2. சைனாகிராஸை சூடான நீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி, 2 மணி நேரம் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து ஜெல்லி போல உள்ள `சைனா கிராஸை’ சிறு துண்டுகளாக வெட்டி, பிரிஜ்ஜில் 6 மணி நேரம் குளிர வைக்கவும்.

3. குளிர்ந்த பாலை முதலில் நீளமான ஒரு கண்ணாடித் தம்ளரில் பாதியளவு ஊற்றவும். இப்போது பாலின் மேல் ஜெல்லிகள் போல உள்ள சைனாகிராஸ் துண்டுகளைப் போடவும். பிறகு ரோஸ் ஸிரப், நன்னாரி ஸிரப் ஊற்றவும்.

4. தொடர்ந்து வெனிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து அதன் மேல் பரவலாக பால்கோவாவைத் தூவி ஜில்லென்று கொடுக்கவும்.

அல்சர், அஜீரணக் கோளாறுகளை சரிப்படுத்தும் அற்புத ரைஸ் டீ!!



அல்சர், அஜீரணக் கோளாறுகளை சரிப்படுத்தும் அற்புத ரைஸ் டீ!!

உதாரணமாக நீங்கள் உங்கள் ஃப்ரண்ட் மேரேஜ்க்கு போறீங்க. உங்க கண்ணு முன்னாடி நாக்குக்கு விருந்தளிக்கும் வகையில் நிறைய உணவு வகைகள் இருந்தா என்ன செய்வீங்க. ஒரு புடி புடிச்சிட மாட்டீங்க.
ஆனா காலையில் எழுந்திருக்கும் போது தான் தெரியும் வயிறு பயங்கரமாக வலிக்கிறது. இந்த அஜீரணக் கோளாறால் ரொம்ப அவதிப்பட நேரிடும். இந்த பிரச்சினை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. இதனால் தொடர்ந்து பல வித உடல் பிரச்சினைகள் வருவதோடு கடுமையான தாங்க முடியாத வலி, அசெளகரியத்தையும் ஏற்படுத்துகிறது.
சில உடல் பிரச்சினைகளான சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, அஜீரணம் போன்றவற்றை கண்டு கொள்ளலாமல் விட்டால் தீவிர உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகிறது. எனவே இதை உடனே சரி செய்வது மிகவும் முக்கியம்.
இந்த அஜீரணக் கோளாறுகள் என்பது உணவை சரியாக சீரணிக்க முடியாததால் வருகிறது. சில சமயங்களில் இந்த அஜீரணக் கோளாறுகள் எதனால் ஏற்பட்டது என்ற காரணத்தை கூட அறிய முடிவதில்லை. இது ஏற்படுவதற்கான சில அறிகுறிகள் அசிடிட்டி, எதுக்களித்தல், நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, பேதி, வாந்தி, குமட்டல் போன்றவை ஆகும்.
இந்த அஜீரணக் கோளாறுகள் ஆரோக்கியமற்ற உணவுகளான ஆயில், காரசாரமான உணவுகளை சாப்பிடுவதாலும், அல்சர், மருந்துகளினால் பக்க விளைவுகள், ஹார்மோன் சமநிலையின்மை, மன அழுத்தம் போன்றவற்றால் ஏற்படுகின்றன. நீண்ட காலமாக இருக்கும் அஜீரணக் கோளாறுகள், வயிறு அல்சர் மற்றும் குடல் புற்று நோய்க்கு வழிவகுக்கின்றன.
எனவே இதை உடனே ஆரம்ப நிலையிலேயே சரி செய்ய வேண்டும். இதற்கு இயற்கை முறை மிகவும் சிறந்தது. வீட்டிலேயே தயாரிக்கும் ரைஸ் டீ இந்த பிரச்சினையை எளிதாக சரி செய்கிறது. சரி வாங்க அதை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 1 கப்
தண்ணீர் - 3 கப்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
அரிசியை கொடுத்துள்ள அளவு தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். எப்பொழுது கொதிக்க ஆரம்பிக்கிறதோ அப்பொழுது அந்த அரிசி தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.
இதனுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும்.
உங்கள் ரைஸ் டீ இப்பொழுது ரெடி

எப்போது சாப்பிடலாம்?
உங்கள் இரவு சாப்பாட்டுக்கு பின்னர் இதை தினமும் பருக வேண்டும். இதனால் உங்கள் அஜீரணக் கோளாறுகளிலிருந்து விடுபடலாம்.

நன்மைகள் :
இந்த டீயை தொடர்ந்து பருகி வந்தால் அஜீரணக் கோளாறுகளிலிருந்து எளிதில் விடுபடலாம். இதனுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் நல்ல பயன்கள் கிடைக்கும்.

வாழ்க்கை முறை :
நேரத்திற்கு சாப்பிடுதல், சத்தான சமமான உணவுகள், ஜங்க் ஃபுட் தவிர்த்தல், உடற்பயிற்சி, மன அழுத்தத்தை தவிர்த்தல் போன்றவற்றையும் மேற்கொண்டால் விரைவிலேயே நல்ல பலனை காணலாம். ஆரோக்கியமற்ற உணவு முறைகளை பின்பற்றி கொண்டே இருந்தால் இந்த ரைஸ் டீ உங்களுக்கு சிறந்த பலனை தராது.

அஜீரணக் கோளாறு :
இந்த ரைஸ் டீ யில் அதிகமான ஊட்டச்சத்துக்களான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள் போன்றவை உள்ளன. இந்த சத்துக்கள் உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தன்மையை நடுநிலையாக்கி அஜீரணக் கோளாறுகளை சரி செய்கிறது. மேலும் இந்த டீ உங்கள் நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மையை சரி செய்கிறது.

இதை காலையிலும், மாலையிலும் சாப்பிட்டால், தைராய்டு பிரச்சனை முற்றிலும் குணமாகும்



இதை காலையிலும், மாலையிலும் சாப்பிட்டால், தைராய்டு பிரச்சனை முற்றிலும் குணமாகும்

இங்கு தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால்

தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால், ஏராளமானோருக்கு தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது.

பொதுவாக தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் வரக்கூடும்.

அவை ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகும். இங்கு இந்த தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஹைப்பர் தைராய்டு:
ஹைப்பர் தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியில் அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கும் நிலையாகும்.

அறிகுறிகள்:
* அதிகமாக வியர்ப்பது
* தும்மல்
* எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது
* நினைவாற்றல் பிரச்சனை
* மோசமான குடலியக்கம்
* படபடப்பு
* மன அழுத்தம்
* எடை குறைவு
* மாதவிடாய் பிரச்சனைகள்
* அதிகப்படியான சோர்வு

ஹைப்போ தைராய்டு:
ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியின் மோசமான செயல்பாட்டால், போதிய அளவு தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கப்படாத நிலையாகும்.

அறிகுறிகள்:
* நகங்களில் வெடிப்பு
* மலச்சிக்கல்
* உடல் பருமன்
* தசைப் பிடிப்புகள்
* மோசமான மாதவிடாய் கால இரத்தப் போக்கு
* கழுத்தின் முன் பகுதியில் வீக்கம்
* மிகுதியான களைப்பு
* நினைவாற்றல் பிரச்சனை
* வறட்சியான சருமம் மற்றும் தலைமுடி
* மன இறுக்கம்
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க ஓர் அற்புத நாட்டு மருந்து உள்ளது. அதை ஒருவர் உட்கொண்டு வந்தால், தைராய்டு பிரச்சனையை விரைவில் சரிசெய்யலாம்.

தேவையான பொருட்கள்:
பச்சை வால்நட்ஸ் – 40
தேன் – 1 கிலோ

#செய்முறை:
வால்நட்ஸ் காயை துண்டுகளாக்கி கண்ணாடி பாட்டிலில் போட்டு, அதில் தேன் ஊற்றி, 40 நாட்கள் ஊற வைக்க வேண்டும். முக்கியமாக இந்த பாட்டிலை பகலில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் வைத்து, அவ்வப்போது பாட்டிலைக் குலுக்க வேண்டும். 40 நாட்கள் கழித்து, அதில் உள்ள வால்நட்ஸ் காயை நீக்கிவிட வேண்டும்.

#உட்கொள்ளும் முறை:
இந்த தேனை தினமும் காலை மற்றும் மாலையில் 2 ஸ்பூன் சாப்பிட்டு வர, தைராய்டு பிரச்சனை விரைவில் குணமாகும். இப்போது இதன் இதர நன்மைகளைக் காண்போம்.

#நன்மை #1
இதில் வைட்டமின் சி, அயோடின் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், இரத்த சோகை இருப்பவர்கள் தினமும் உட்கொண்டு வந்தால், சீக்கிரம் இரத்த சோகை நீங்கும்.

#நன்மை #2
பச்சை வால்நட்ஸை தேனில் ஊற வைத்து, அந்த தேனை தினமும் சாப்பிடும் போது கல்லீரல், வயிறு மற்றும் இரத்தம் சுத்தமாகும்.

#நன்மை #3
அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள், இதை சாப்பிட்டால் பலவீனமாக இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.

#நன்மை #4
மாதவிடாய் காலத்தில் அதிக பிரச்சனையை சந்திக்கும் பெண்கள், பச்சை வால்நட்ஸ் ஊற வைத்த தேனை சாப்பிட்டால், பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.

#நன்மை #5
முக்கியமாக இந்த தேன் சுவாச பாதை மற்றும் மூச்சுக் குழாயில் உள்ள பிரச்சனைகளைப் போக்கி, அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்...

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள்!!!



சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள்!!!

1. இந்த பொடி வகைகளில் தேங்காய் பொடி யும் பருப்பு பொடியும் ரொம்ப பிரசித்தம். முதலில் தேங்காய் பொடியை பார்போம்.

1 Cup தேங்காய் துருவல்
1 Tea spoon உளுத்தம் பருப்பு
1 Tea spoon கடலை பருப்பு
10 குண்டு மிளகாய் வற்றல்
1 Pinch பெருங்காயம்
1/2 Spoon எண்ணை
கோலி குண்டு அளவு புளி
உப்பு

செய்முறை:

தேங்காய் துருவலை நல்ல சிவப்பாக வறட்டு வாணலில் வறுக்கவும்.
கருகாமல் வறுக்கணும்.
புளியை சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து நன்கு வறுக்கவும்.
கரகரப்பாக வறுக்கவும்.
இப்போது எண்ணை விட்டு, மற்றசாமான்களை வறுக்கவும். .
ஆறினதும் மிக்சி இல் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.
பாட்டில் ல போட்டு வைக்கவும்.
தேவையான போது சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.
தொட்டுக்கொள்ள கெட்டித் தயிர் போறும்.

2. பருப்பு பொடி , இது சுலபமாக செய்யக்குடியகூடியது ஆனால் சுவை மிகுந்தது.

தேவையானவை:

1 கப் துவரம் பருப்பு
10 மிளகாய் வற்றல்
1 டீ ஸ்பூன் மிளகு
உப்பு

செய்முறை:

முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும்.
பிறகு மிளகு, பிறகு மிளகாய் வற்றல், பிறகு துவரம் பருப்பு என் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுக்கவும்.
மிஷினில் கொடுத்து நல்ல 'நைசாக' அரைக்கவும்.
வீட்டில் அரைத்தால் நன்கு சலித்துவிட்டு மறுபடி அரைக்கணும் .
இதற்கு தொட்டுக்கொள்ள வத்த குழம்பு சூப்பர் ஆக இருக்கும்., ஆவக்காய் அருமையாக இருக்கும்.
சுடு சாதத்தில் நிறைய நல்லெண்ணெய் விட்டு பருப்பு பொடி போட்டு கலந்து சாப்பிடனும். சாதம் உதிறாய் இருந்தாலும் நல்லா இருக்கும், குழைந்து இருந்தாலும் நல்லா இருக்கும்.

குறிப்பு: வத்தக்குழம்பு சாப்பிடும் போது அதன் மேல் பருப்பு பொடி துவிண்டும் சாப்பிடலாம்

3. மசாலா பருப்பு பொடி/ பூண்டு பருப்பு பொடி
தேவையானவை:

1 கப் துவரம் பருப்பு
10 மிளகாய் வற்றல்
1 டீ ஸ்பூன் மிளகு
10 பல் பூண்டு
உப்பு

செய்முறை:

முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும்.
பிறகு மிளகு, பிறகு மிளகாய் வற்றல், பிறகு துவரம் பருப்பு என் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுக்கவும்.
பூண்டு பற்களை உரித்து அப்படியே போட்டு அரைக்க தரனும்.
மிஷினில் கொடுத்து நல்ல 'நைசாக' அரைக்கவும்.
கொஞ்சம் பூண்டு வாசத்துடன் நன்ன்றாக இருக்கும்.
ஆனால் இதை fridge இல் வைப்பது நல்லது.
(பூண்டில் கொஞ்சம் ஈரப்பசை இருக்கும் அல்லவா அதுதான் "fridge " லவைக்கணும்.)

4. கறிவேப்பிலை பருப்பு பொடி
தேவையானவை:

1 கப் துவரம் பருப்பு
10 மிளகாய் வற்றல்
1 டீ ஸ்பூன் மிளகு
1 கொத்த்து கறிவேப்பிலை ( நன்கு காய்ந்தது )
உப்பு

செய்முறை:

முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும்.
பிறகு மிளகு, பிறகு மிளகாய் வற்றல், பிறகு துவரம் பருப்பு என் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுக்கவும்.
காய்ந்த கறிவேப்பிலை யும் அப்படியே போட்டு அரைக்க தரனும்.
மிஷினில் கொடுத்து நல்ல 'நைசாக' அரைக்கவும்.
கொஞ்சம் கலர் கம்மியாக இருக்கும் ஆனால் வாசனையாக நன்றாக இருக்கும்.

5. வறட்டு தனியா பொடி
தேவையானவை:

1 Cup தனியா
2 Tea spoon உளுத்தம் பருப்பு
2 Tea spoon கடலை பருப்பு
10 - 12 குண்டு மிளகாய் வற்றல்
1 Pinch பெருங்காயம்
1/2 Spoon எண்ணை
கோலி குண்டு அளவு புளி
உப்பு
மிளகு கொஞ்சம் ( தேவையானால் )

செய்முறை:

தனியாவை ஜஸ்ட் எண்ணெய் தடவிய வாணலில் வறுக்கவும்.
கருகாமல் வறுக்கணும்.
புளியை சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து நன்கு வறுக்கவும்.
கரகரப்பாக வறுக்கவும்.
இப்போது எண்ணை விட்டு, மற்றசாமான்களை வறுக்கவும். .
ஆறினதும் மிக்சி இல் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.
பாட்டில் ல போட்டு வைக்கவும்.
தேவையான போது சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.

குறிப்பு: இந்த பொடியை வறுத்த கறிகள் செய்யும் போது தூவலாம். பருப்பு சாம்பாரில் கடைசியில் கொஞ்சம் போட்டு இறக்கலாம். சுவை கூடும்.

6. பூண்டு பொடி
தேவையானவை:

10 பல் பூண்டு
ஒரு டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை
ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்த வேர்கடலை
ஒரு டீ ஸ்பூன் மிளகாய் பொடி
உப்பு

செய்முறை:

எல்லாவற்றையும் மிக்சி இல் பொட்டு பொடிக்கவும்.
வாசனையாக நல்ல இருக்கும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.

குறிப்பு: எந்த காய்க்கும் , குருமாக்கும் இந்த பொடிய போடலாம்.

எலும்பு சூப்


எலும்பு சூப்

தேவையான பொருட்கள்

ஆட்டு எலும்புகறி      -    1/2 கிலோ

தக்காளி              -     2

சாம்பார் வெங்காயம்  -- 10              -  

பச்சை மிளகாய்       -    2

வெண்ணெய்             -  சிறிதளவு

அரைக்க:-

இஞ்சி               –     1 சிறுதுண்டு

பூண்டு              -     10 பல்

மிளகு தூள்       -     2 டீஸ்பூன்

சீரகதூள்            -     2 டீஸ்பூன்

கொத்தமல்லி இலை -     1/2 கட்டு

எலுமிச்சம் சாறு            -     1/2 ஸ்பூன்

உப்பு                      -     தேவைக்கேற்ப

செய்முறை :

தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். குக்கரில்  சிறிது வெண்ணெய்  ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

அது பொன்னிறமானதும், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, எலும்பையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின் மிளகு தூள், சீரகதூள்,  கொத்தமல்லி இலை சேர்த்து   4 கப்  தண்ணீரைச் சேர்த்து 6 விசில் வரும் வரை வேக வைக்கவும்..

தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். . பின் அரைத்த தக்காளி விழுதை  சேர்த்து  கொதிக்க வைத்து இறக்கி பறிமாறவும்  .

தேவையானால் லெமன் சாறு சேர்த்து கொள்ளவும்...
இந்ந சூப் செய்வது மிகவும் எளிது செய்து பாருங்கள்  குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மட்டன் கீமா தோசை | Mutton Keema Dosa



மட்டன் கீமா தோசை | Mutton Keema Dosa

தேவையான பொருட்கள் :

மட்டன்  கொத்துகறி  -  150 கிராம்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 2
இஞ்சி  பூண்டு பேஸ்ட் -  2  ஸ்பூன்
மஞ்சள் தூள் -  அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1  ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பட்டை - 1
கிராம்பு - 2
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டன்  கொத்துகறியை   கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து, அதில்  3  ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி  பூண்டு பேஸ்ட் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

பின்பு  கொத்துகறி   மசாலா  துாள்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, அடுப்பை  சிம்மில்  வைத்து, சிறிதளவு  தண்ணீர்   சேர்த்து  மட்டன் நன்கு வேகும் வரை பிரட்ட வேண்டும். மட்டன் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

பின்பு  தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், மாவைக் தோசையாக ஊற்றி அதன் மேல் தூவியது போல் மட்டன் கீமாவை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.   சுவையான மட்டன் கீமா தோசை ரெடி.

நாட்டுக் கோழி குழம்பு (பிரியாணிக்கு ஏற்ற சைடிஸ்)



நாட்டுக் கோழி குழம்பு (பிரியாணிக்கு ஏற்ற சைடிஸ்)- இது முனியாண்டி விலாஸ் ஸ்பெஷல்

தேவையான பொருட்கள்

நாட்டுக்கோழி – 1 கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 3
தேங்காய் பால் – 1 கப்
மஞ்சள் தூள் – கால் டீ ஸ்பூன்
குழம்பு மசாலா தூள் – 3 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்
மல்லி தூள் – 2 டீ ஸ்பூன்
தேக்கரண்டி சோம்பு – 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – 1கொத்து
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – 4 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மசாலா

செய்முறை

சின்ன வெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும். தக் காளியை நறுக்கி வைக்கவும். வாணலியில் சிறிதளவு

எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோ ம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக் கவும்.

இத்துடன் பாதி அளவு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியது ம் இத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து நன்றாக வதக்க வும். ஆறவைத்து மிக்ஸிசியில் மசாலா வாக நைசாக அரைக்கவும். குழம்பு செய்முறை நாட்டுக் கோழியை நன் றாக கழுவிபொடியாக நறுக்கி வை த்துக் கொள்ளவும். குக்கரில் எண் ணெய்விட்டு காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். மஞ்சள் தூள், குழம்பு மசாலா சேர்த்து வதக்கவும். இதில் கோழியை சேர்த்து நன்றாக கிளறவும். அப்போது தேவையா ன அளவு உப்புபோட்டு வதக்க வும்.

சிறிது நேரம் விசில் போடாமல் மூடிவைக்கவும். 5 நிமிடம் கழி த்து குக்கரை திறந்து அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கி ளறவும். இதனுடன் தேங்காய் பால் சேர்த்து குக்கரை மூடி போட்டு விசில் விடவும். நாட்டு கோழி என்பதால் 5 விசில்வரைவிடலாம், அப்பொழுதுதான் நன்றா க வெந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

விசில் இறங்கின உடன் மல்லித்தழை தூவவும். காரசாரமான நாட் டுக்கோழி தயார். சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம். பிரியாணி க்கு ஏற்ற சைடு டிஸ் இது (முனியாண்டி விலாஸ் ஸ்பெஷல்).

எலுமிச்சை, புதினா, சோம்பு, வெட்டிவேர்..! அரிய எண்ணெய்களின் அபார பலன்கள்



எலுமிச்சை, புதினா, சோம்பு, வெட்டிவேர்..! அரிய எண்ணெய்களின் அபார பலன்கள்

எண்ணெய்... இன்றைக்குப் பலர் ஓரங்கட்டும் ஒரு பொருள். கொழுப்பு, அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் காரணமாகவே பலரும் இதை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. இன்னொரு பக்கம், எண்ணெய் இல்லாமல் சிறப்பான உணவுகளைத் தயாரிக்க முடியாது; நம் உடலையும் நன்கு பராமரிக்க முடியாது. எள், கடலை, தேங்காயில் இருந்து மட்டுமல்ல... நாம் தினமும் சேர்த்துக்கொள்ளும் உணவுப் பொருள்களில் இருந்தும், சில மூலிகைப் பொருள்களில் இருந்தும்கூட எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அப்படி அரிதான சில எண்ணெய் வகைகள், அவற்றின் பலன்கள் இங்கே...

எலுமிச்சை எண்ணெய்
எலுமிச்சை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புத்துணர்வே. நிறைந்த மணம் உடையது. உணவு, பானம், டிடர்ஜெண்ட் சோப், சுத்திகரிப்பான்... என எலுமிச்சை எண்ணெய் இல்லாத இடங்களே இல்லை.

* ஒரு கிலோ எலுமிச்சை எண்ணெய் எடுக்க சுமார் 3,000 எலுமிச்சைப் பழங்களின் சாறு தேவைப்படும்.

* எலுமிச்சையில் புளிப்பு, இனிப்பு, உலரச்செய்யும் தன்மை போன்றவை உள்ளன. இது, சருமப் பராமரிப்புக்குக் கிடைத்த வரப்பிரசாதம். எண்ணெய் பிசுக்குள்ள சருமம், செரிமானக் கோளாறு, தொற்றுநோய்கள், ரத்தச்சோகை, உயர் ரத்த அழுத்தம், ஈரல் அல்லது பித்தப்பை சுருங்கிப்போதல் போன்றவற்றைக் குணப்படுத்த உதவும்.

* எலுமிச்சை எண்ணெயை உணவுத் தயாரிப்புகளில் பயன்படுத்தலாம்; நீரில் கலந்து குளிக்கலாம்; மருத்துத் திரவமாகவும், ஷாம்பூவாகவும், மசாஜ் ஆயிலாகவும் உபயோகிக்கலாம்.

* வாசனையைப் பொறுத்தவரை, எலுமிச்சை எண்ணெய் லேசானது; இனிய நறுமணம் கொண்டது.

* லாவண்டர், ஜடமான்ஸி, தவனம் போன்றவற்றுடன் எலுமிச்சை எண்ணெயை எளிதில் கலக்கலாம்.

* பூச்சிக்கடி அல்லது குளவி கொட்டுக்கு சுத்தமான எலுமிச்சை எண்ணெயைத் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

புதினா எண்ணெய்

புதினா எண்ணெயை 'மிட்டாய் புதினா' என்றும் சொல்வார்கள். இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் `மெந்தால்’ (Menthol) எனப்படும். மெந்தாலை மருந்துத் தயாரிப்பில் பயன்படுத்துவார்கள்.

* இலைகளையும் பூக்களையும் பயன்படுத்தி ஆவியாக்கி குளிரச் செய்யும் முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். இந்த எண்ணெய் குளிர்ச்சியானது.

* வாயில் ஊற்றிக் கொப்பளிக்கலாம். சுவாசப் பாதையை சீர்செய்ய உதவும்; பத்து துளிகள் புதினா எண்ணெயை நீரில் கலந்து குளித்தால், உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

* உடல்வலியைக் குறைக்கும் தன்மைகொண்டது; வயிற்றுவலி, வாயுப்பொருமல், கிருமித்தொற்றை சரிசெய்ய உதவும்.

* தடுமன், ஜூரம், தொண்டைப்புண், காதுவலி, குரல்வளை வீக்கம், தலைவலி, மாதவிடாய்க் கோளாறு, ஆஸ்துமா போன்றவற்றைக் குணப்படுத்தும். இதன் பெப்பர்மின்ட் கலந்த பற்பசையை உபயோகித்து, ஈறுகளில் ஏற்படும் தொல்லைகளைப் போக்கலாம்.

* புதினா எண்ணெயை நீரில் கலந்து குளிக்கலாம். மசாஜ் ஆயிலாகப் பயன்படுத்தலாம்.

*இது, யூகலிப்டஸ், ரோஸ்மேரி, லாவண்டர், சிட்ரஸ் எண்ணெய் வகைகளுடன் சேர்த்து பயன்படுத்தலாம். அவற்றின் குணங்களை மேம்படுத்தும்.

* சுத்தமான புதினா எண்ணெயை நெற்றிப் பொட்டில் தடவினால், ஒற்றைத் தலைவலி பறந்துபோகும். தேங்காய் எண்ணெயுடன் கலந்து வயிறு, விலாப்பகுதியில் தேய்த்தால், நெஞ்செரிச்சல் நீங்கும். நீரில் நாலைந்து சொட்டுகள் சேர்த்து கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் அகன்றுவிடும்.

* கர்ப்பிணிப் பெண்கள் மின்ட் ஆயிலை உபயோகிக்கக் கூடாது.

ரோஜா எண்ணெய்

 'ரோஜா' தைலங்களின் ராணி. இனிய மணமுடையது. பல நிறங்களில் கிடைக்கும்.

* ரோஜா இதழ்களைக் காய்ச்சி வடித்து சேகரிப்பது மிகவும் கடினம். சிறிதளவு எண்ணெய் எடுக்கவே அதிகச் செலவாகும்.

* ரோஜாப் பூக்களை இரண்டு மூன்று முறை காய்ச்சி வடிகட்டிய பிறகு பயன்படுத்தலாம். இதன் தயாரிப்பு செலவு காரணமாக கலப்படச் சரக்குகளும் புழக்கத்தில் உள்ளன.

* ரோஜா ஓர் ஆன்மிக உணர்வை, பாதுகாப்புத் தன்மையை வழங்குவது. இது கோபத்தைக் குறைக்கும்; மனச்சோர்வை நீக்கும்; ஈரலை வலுப்படுத்தும்; சருமப் பராமரிப்பில் இதற்கே முதல் இடம்.

* இனிப்பு, கார, கசப்பு, துவர்ப்பு சுவைகளை உடையது; குளுமைத் தன்மை கொண்டது.

* உடல் சோர்வை நீக்கும்; சிறந்த மலமிளக்கி; வயிற்றுவலி, வாயுப் பொருமல் போன்றவற்றைக் குணப்படுத்தும்; செல்களைப் புதுப்பிக்க உதவும்.

* மாதவிலக்கு ஒழுங்கற்றுப்போதல், தலைவலி, மனச்சோர்வு, தொண்டைப்புண், குழப்பம், துயரம், பரு, சருமம் முதுமையுறுதல், ஆண்மைக்குறைவு, மன உபாதை போன்றவற்றை சரிசெய்ய உதவும்.

* வாசனைத் திரவியமாக, மருத்துவத் திரவமாகப் பயன்படும்; குளியலிலும், பர்ஃபியூமாகவும், மசாஜுக்கும் உபயோகிக்கலாம்.

* சந்தன எண்ணெய், மல்லிகை, லாவண்டர், தேவதாரு, கதிர்ப்பச்சை எண்ணெய்களுடன் ரோஜா எண்ணெய் நன்கு கலக்கும்.

வெட்டிவேர் எண்ணெய்

வெட்டிவேர், புல்வகையைச் சார்ந்தது. புத்துணர்வை அளிக்கும். இதன் வேர்ப்பகுதியில் இருந்து தைலம் எடுக்கப்படுகிறது. வெட்டிவேர் நில அரிப்பு (Erosion) உள்ள இடங்களில் செழித்து வளரும்.

* வருத்தம் நீக்கும்; ஆவேசத்தில் இருந்து நம்மை விடுபடச் செய்யும்; மயக்க மருந்தாகவும் செயல்படும்.

* சருமம் முதிர்வடைவதைத் தடுக்கும். சரும எரிச்சலைப் போக்கும்.

* இனிப்பு மற்றும் கசப்பு சுவை உடையது.

* அழுகல் தடுப்பானாக, போஷாக்கு மருந்தாக, வலுவூட்டியாக, மோக ஊக்கியாக, பூச்சி விரட்டியாக, சருமத்துக்கான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாக, ஹார்மோன் பேலன்ஸராகச் செயல்படுகிறது. செல்களை புதுப்பித்தலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

* மூட்டுவலி, பயம், தூக்கமின்மை, மன உளைச்சல், சரும அயர்வு, சரும முதிர்ச்சி, எரிச்சலுடன் மாதவிடாய், பசியின்மை போன்றப் பிரச்னைகளை சரிசெய்ய உதவும்.

* லோஷனாக, மசாஜ் எண்ணெயாக, வாசனைத் திரவியமாகப் பயன்படுத்தலாம். குளியலிலும் உபயோகிக்கலாம்.

* ஜடமான்ஸி, ரோஸ் வுட், கதிர்ப்பச்சை, தவனம், ரோஜா, சந்தனம், லாவண்டர் எண்ணெய் வகைகளுடன் நன்கு கலக்கும்.

* சில சொட்டு தைலத்தை நீரில்விட்டுக் குளித்தால் உடல் சோர்வு, மன உளைச்சல் தீரும். நாம் தினமும் சருமத்துக்குப் பயன்படுத்தும் எண்ணெயுடன் கலந்து தோளிலும், கழுத்திலும் தேய்த்துக்கொள்ளலாம். கழுத்துப் பிடிப்பு குணமாகும்.

சோம்பு எண்ணெய்

'சோம்பு' என்கிற பெருஞ்சீரகம் செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்ய உதவும். இது கீழை நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளின் உணவிலும் முக்கியத்துவம் பெற்றது. ஒரு மணமூட்டியாக மட்டுமின்றி, திரவத் தயாரிப்புகளில் ஒரு துணைப் பொருளாகவும் இடம்பெற்றிருக்கிறது.

* இதை கபம், இருமலை நீக்குவதற்காக இருமல் சிரப்பில் சேர்க்கிறார்கள். இது மோக ஊக்கி என்பதால், இச்சைக் குறைபாட்டை சீர்செய்யவும் பயன்படுத்தலாம். தசைச் சுளுக்குக்கு உள்ளும் புறமுமாக உபயோகிக்கலாம்.

* காரச் சுவை கொண்டது. சூட்டுத் தன்மையும், குளிர்ச்சித் தன்மையும் ஒருங்கே பொருந்தியது.

* வாதம், சுபத்தை மட்டுப்படுத்தும்; பித்தத்தை அதிகரிக்கும்.

* வயிற்றுவலி, வாயுப் பொருமல் போன்றவற்றைச் சரிசெய்யும்; வியர்வை சுரந்து உடம்பின் வெப்பத்தை வெளியேற்ற உதவும்.

* சளி, வறட்டு இருமல், வாயுவை அகற்றும்.

* உணவிலும், பான வகைகளிலும் மண்மூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. பற்றுப் போடவும், மசாஜ் ஆயிலாகவும், இருமல் மருந்தாகவும் பயன்படும்.

* அதிகமாக உபயோகித்தால் தலைச் சுற்றலை ஏற்படுத்தும். வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்.

* ஏலம், கிராம்புத் தைலங்களுடன் நன்கு கலக்கும்.

* சோம்புத் தைலம் பசியை அதிகப்படுத்தும்; தலைப் பேன்களை அழிக்கும்.

திருநீற்றுப்பச்சிலை எண்ணெய்

இதில் பல வகைகள் உள்லன. இது, `இந்திய வகை துளசி’ என்றும் அறியப்படுகிறது. இது மனதை ஒழுங்கு செய்யும் தன்மை உடையது. பயம், கவலை போன்ற உணர்வு பாதிப்புகளின் போது பலமளிக்கும். ஆஸ்துமா, தலைவலிக்கு நிவாரணமாக அமையும்.

* காரச்சுவை உடையது; இனிய நறுமணம் கொண்டது.

* வியர்வையைப் பெருக்கும்; காய்ச்சலைக் குணப்படுத்தும்; அழுகல் தடுப்பானாக, கிருமிக்கொல்லியாக, கப நீக்கியாக, மயக்க மருந்தாகவும் பயன்படும்; மாதவிலக்கை சரிசெய்யும்.

* சளி, இருமல், தலைவலி, மூட்டுவலி, கீல்வாதம், ஜுரம், ஆஸ்துமா, போதிய மனத் தெளிவின்மை போன்ற பிரச்னைகளை குணப்படுத்த உதவும்.

* கற்பூரம், ரோஸ்மேரி, எலுமிச்சை, லாவண்டர் தைலங்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.

* பச்சிலைச் சாற்றை படை நோய்களுக்கும் மற்ற சரும நோய்களுக்கும் பயன்படுத்தலாம். காதுவலிக்கும், காதில் இருந்து வரும் சீழை நிறுத்தவும் பயன்படும். இதன் சாற்றை வெந்நீருடன் கலந்து கொடுத்தால், வாந்தி நிற்கும்.

* விதையும் பூவும் சுறுசுறுப்பைத் தரும்; சிறுநீர்ப் பெருக்கும்; அழற்சியைத் தணிக்கும்; இதன் கஷாயம் சிறுநீரகக் கோளாறுகளைக் குணப்படுத்தும்.

* அதிகப் பித்தம் உள்ளவர்களும் கர்ப்பிணிகளும் உபயோகிக்கக் கூடாது.


மிளகு எண்ணெய்

உடல் பருமன் பிரச்னை உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதாம். மூன்று அவுன்ஸ் கனோலா (Canola) கடுகு, வாதுமை எண்ணெய்க் கலவையில் 10 சொட்டு லாவண்டர் தைலமும், 5 சொட்டு சாம்பிராணித் தைலமும், 5 சொட்டு சந்தனத் தைலமும், 10 சொட்டு மிளகுத்தைலமும் கலந்து உபயோகித்தால், எடை குறைக்கும்.

* வறட்சியை, சூட்டை ஏற்படுத்தும்; கார, கசப்புச்சுவை கொண்டது.

* வாயுப் பொருமல், வயிற்றுவலி நீங்கும்; குடல் புழுக்களை அழிக்கும்; சிறுநீரைப் பெருக்கும்; சிறுநீர்ப்பையை வலுப்படுத்தும்; தொண்டை, நுரையீரல் கபத்தை வெளியேற்றும்; ஜுரத்தை நிறுத்தும்.

* நாள்பட்ட செரிமானக் கோளாறு, குடலில் உள்ள நச்சுத் தன்மை, பருமன், தடுமன் மற்றும் விட்டு விட்டு வருகிற காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்த உதவும்.

* சமையலிலும், மருத்துவத்திலும் உதவும். ஆரஞ்சு, இஞ்சி, சாம்பிராணி, எலுமிச்சை, துளசித் தைலங்களுடன் நன்கு கலக்கும்.

* வால் மிளகுப் பொடியை பாலில் கலந்து குடித்தால், தொண்டைக்கட்டுதல் நீங்கி, குரல் அபிவிருத்தியாகும். வால் மிளகுத் தூளை படிகாரத்துடன் சேர்த்து தினமும் மூன்று வேளை கொடுத்துவர, நாள்பட்ட வெள்ளை போன்றவற்றை சரிசெய்ய உதவும்.

* வால் மிளகு எண்ணெய், வெள்ளை குங்கிலியம், பறங்கிச்சக்கைத் தூள் கூட்டி, நீர்முள்ளிச்சாறுவிட்டு அரைத்து, சுண்டைக்காய் அளவில் மாத்திரை செய்யலாம். வேளைக்கு இரண்டு மாத்திரையாக காலை, மாலை வேளைகளில் உட்கொள்ளலாம். நீர்க்கடுப்பு, நீரடைப்பு, வெள்ளைப்படுதல் நீங்கும். ஆஸ்துமாவைத் தடுக்கும். கபம், வாயு, வாய் நாற்றத்தைப் போக்கும்.

* அதிக பித்தம் உடையவர்களும், குடல் உறுப்புகளில் அழற்சி உடையவர்களும் இதைப் பயன்படுத்தக் கூடாது.

கேரட் எண்ணெய்

கேரட்டில் அடங்கியிருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஏராளம். சருமம் முதல் புற்றுநோய் வரை குணப்படுத்தும் தன்மை கொண்டது. கேரட்டை 'மஞ்சள் முள்ளங்கி' என்றும் சொல்வார்கள். இது சிறுநீரக உறுப்புகளுக்கு வலிமை உண்டாக்கும். கல்லடைப்பை நீக்கும்.

* ஆவியாக்கி குளிரச் செய்யும் முறையில் கேரட்டில் இருந்து எண்ணெய் எடுக்கலாம். சருமப் பராமரிப்புக்கு உதவும்.

* வாத, பித்த, கப தோஷங்களை சமனப்படுத்தும்.

* கார, இனிப்புச் சுவை உடையது. வெப்பமும், ஈரத் தன்மையும் கொண்டது.

* போஷாக்கு மருந்தாக, சருமத்துக்கு இளமை அளிப்பதாக, சக்தியூட்டுவதாக, பெண்ணுக்கு பால் உற்பத்தியை மேம்படுத்துவதாக பயன்படும்.

* கட்டி, கொப்புளம், குடற்புண், சருமக் கோளாறுகள், ஈரல், பித்த நீர்ப்பை குறைபாடுகள், மஞ்சள்காமாலை, வயிற்றில் ஏற்படும் திருகுவலி ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

* கேரட் தைலத்தை சருமத்துக்கான மருந்துத் திரவமாகவும், உணவுப் பண்டங்களை பதப்படுத்தவும் உபயோகிக்கலாம்.

* லாவண்டர், ரோஸ், தவனம், சந்தனம், ஜடமான்ஸி, வெட்டிவேர், எலுமிச்சை எண்ணெய் வகைகளுடன் நன்கு கலக்கும்.

எலுமிச்சை...

குறைந்த விலையில் நிறைவான பலன் தரும் பழங்களில் ஒன்று. சத்துகள் நிறைந்தது; சர்வரோக நிவாரணி. 1784-ம் ஆண்டு கார்ஸ்வில் ஹெம்ஷீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார். மருத்துவர் ப்ளென்னின் (1875) என்பவர் தனது ஆராய்ச்சியில் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்தும் மருந்துகளில் இதைவிட சிறந்தது வேறு எதுவும் இல்லை என்பதைக் கண்டறிந்தார்.  உதாரணமாக, இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மானிய வீரர்களின் காயத்தில் இருந்து ஒழுகும் ரத்தத்தை உடனடியாக நிறுத்த எலுமிச்சை பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியர்களைவிட மேலைநாட்டினர் எலுமிச்சைப் பழத்தையும் அதன் விதை, தோல் என அனைத்தையும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். எலுமிச்சைப் பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளன.

எலுமிச்சைச் சாற்றில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பது பற்றி ஈரோட்டைச்சேர்ந்த உணவியல் நிபுணர் மா.பிரியா பிரபாகரன் விளக்குகிறார்...

பலன்கள்

* எலுமிச்சைப்பழச் சாற்றை இளஞ்சூடான நீரில் கலந்து குடித்தால், செரிமானப் பிரச்னைகள், குமட்டல், வாந்தி போன்றவை சரியாகும்.பிரியா பிரபாகரன்

* ரத்தத்தை சுத்திகரிக்கக்கூடியது என்பதால், அடிக்கடி இதன் சாற்றை அருந்தினால் உடலிலுள்ள தேவையற்ற நச்சுகள் வெளியேறி ரத்தம் தூய்மையாகும்.

* கல்லீரலின் செயல்பாட்டை அதிகப்படுத்த பெரிதும் துணைபுரிவதால்  `லிவர் டானிக்' என்று அழைக்கப்படுகிறது.

* இதில் சிட்ரஸ் அதிக அளவில் உள்ளது. தினமும் இதன் சாற்றை அருந்துவது தோலைப் பளபளப்பாக்கும். உடலுக்கு மெருகூட்டும். தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றும். கரும்புள்ளிகளை மறையச் செய்யும். மொத்தத்தில் மேனி அழகுக்குத் தேவையான ஓர் இயற்கை உணவாகவும் இது செயல்படுகிறது.


*  உடலைக் குளிர்ச்சியாக்கக்கூடியது என்பதால், தோல் எரிச்சல் மற்றும் வெப்ப நோய்களிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

* வாயில் துர்நாற்றம் இருப்பதோடு பற்கள், அதன் இடுக்குகளில், ஈறில் சிக்கல்கள் இருந்தால் இதன் சாற்றால் மசாஜ் செய்யலாம்.

எலுமிச்சைசாறு

* உடல் எடை குறைய தினமும் காலையில் இளம்சூடான தண்ணீருடன் எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து அருந்தி வந்தால் பலன் கிடைக்கும். அதிலும் காலையில் கண் விழித்ததும் அருந்தினால் நல்ல பலன் தரும். வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பிரச்னையை உண்டாக்கும் என்று சொல்வது தவறான புரிதல்.

* உயர் ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு இதன் சாறு மிக நல்ல பயன் தரும். உயர் ரத்த அழுத்தம், தலைசுற்றல் நீங்க இதிலுள்ள பொட்டாசியம் சத்து உதவும். எலுமிச்சைப்பழச் சாறு மன அழுத்தத்தைக்கூட குறைக்கும்.

* காய்ச்சல், ஜலதோஷத்துக்கும் இதன் சாறு நிவாரணம் தரும்.

* மூட்டுவலி, உடல் தசைகளில் வலிக்கு இதன் சாறு மருந்து.

எலுமிச்சை சாறு

* 70 கிலோவுக்கு அதிகமான உடல் எடை கொண்டவர்கள் முழு எலுமிச்சைப்பழத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் பிசைந்து உட்கொள்ளலாம். தினமும் இரண்டு முறை உட்கொள்ள வேண்டும். காலையில் குடிப்பது நல்லது. 70 கிலோவுக்குக் குறைவான எடை கொண்டவர்கள் அரை எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து அருந்தலாம்.

* உடலில் களைப்பைப் போக்கி புத்துணர்வு தரும்.

* உடலில் தேய்த்துக் குளித்தால் வறட்சி நீங்கும்.

* உடல் நமைச்சலைப் போக்கும்.

* மாதவிலக்கின்போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.

* மூலத்துக்கு சிறந்த மருந்து.

நோய்கள் பலவற்றிலிருந்து எலுமிச்சை நிவாரணம் தரக்கூடியது என்றபோதிலும்  `அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு' என்ற பழமொழிக்கு ஏற்பப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும். உதாரணமாக, எலுமிச்சையிலுள்ள அதிகப்படியான அமிலத்தன்மை பற்களிலுள்ள எனாமலை அழித்துவிடும். அதிகப்படியான அமிலம் நெஞ்செரிச்சலை உண்டாக்கும். அளவுக்கு அதிகமாக எலுமிச்சைச் சாறு பருகினால், தொடர்ந்து சிறுநீர் கழிக்க நேர்வதோடு, உடலில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படும். வயிற்றுப்போக்கு, அலர்ஜி, தலைவலி மற்றும் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, ஒரு நாளைக்கு  இரண்டு வேளை மட்டும் உபயோகிப்பது நல்லது. அதிலும் எலுமிச்சைச் சாற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்துவது நல்லது.

மலர்களும் மருந்தாகும்...



மலர்களும் மருந்தாகும்...

*👉🏻இலுப்பைப் பூ*
இலுப்பை பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.

*👉🏻ஆவாரம் பூ*
ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

*👉🏻அகத்திப்பூ*
அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.

*👉🏻நெல்லிப்பூ*
உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.

*👉🏻மகிழம்பூ*
மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலைப்பாரம் போன்ற நோய்கள் நீக்கிவிடும்.

*👉🏻தாழம்பூ*
இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.

*👉🏻செம்பருத்திப்பூ*
இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

*👉🏻ரோஜாப்பூ*
இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.

*👉🏻வேப்பம்பூ*
சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள் ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.

*👉🏻முருங்கைப்பூ*
ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்க கூடியது.

*👉🏻மல்லிகைப்பூ*
கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

*👉🏻கருஞ்செம்பை பூ*
இந்தப் பூவையும், நல்லெண்ணையும் சேர்த்துக் காய்ச்சி தொடர்ந்து குளித்து வந்தால் தலையில் ஏற்பட்ட சீதனத்தை கண்டிக்கும். தலை பாரம், தலை வலி, கழுத்து நரம்புவலி போன்றவையும் நீங்கும்.

*👉🏻குங்குமப்பூ*
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒருவேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.