சனி, 29 ஏப்ரல், 2017

முலாம்பழ சர்பத் / MUSK MELON SARBATH.


முலாம்பழ சர்பத் / MUSK MELON SARBATH.


*தேவையான பொருட்கள் :*

முலாம்பழம்  –  1
சர்பத்  –  தேவைக்கு
எலுமிச்சை சாறு  –  1 மேஜைக்கரண்டி
கோல்டு வாட்டர்  –  தேவைக்கு

*செய்முறை :*

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

முலாம் பழத்தின் விதைகளை நீக்கிக் கொள்ளவும். அதன் சதைப் பகுதியை கரண்டியின் உதவியால் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்

அதனை நன்கு மசித்துக் கொள்ளவும்

அதனுடன் சர்பத் சேர்க்கவும்

எலுமிச்சை சாறு சேர்க்கவும்

கோல்டு வாட்டர் சேர்க்கவும்

நன்கு கலக்கவும் பின்பு பரிமாறவும்.

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

வெள்ளரிக்காய் தயிர் ஜுஸ்.


வெள்ளரிக்காய் தயிர் ஜுஸ்.


வெள்ளரிக்காய் – 50 கிராம் தயிர் – 100 மி.லி

மிக்ஸியில் அடித்து உப்பு, மிகப் பொடிதாக நறுக்கிய புதினா, குடமிளகாய் சேர்த்து ருசிக்கலாம்!

பாதாம் சர்பத்



பாதாம் சர்பத்.


*தேவையானவை :*

பாதாம்   - 150 கிராம்
கசகசா  - 60 கிராம்
சீனி        - 1/2 கிலோ
சிட்ரிக் ஆஸிட்  - 1 டீஸ்பூன்
ஏலக்காய்          - 20
கேவ்ரா எசன்ஸ்   - 5 துளிகள்
k.m.s    - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 11/2 லிட்டர்

*செய்முறை :*

•• ஏலக்காய்களை தோலை உரித்து விதைகளை மட்டும் தனியே எடுத்து பொடி செய்து கொள்ளவும்.

•• கசகசாவை 2 நாட்கள் ஊற வைக்கவும்.
ஒரு நாள் கசகசா ஊறியதும் அந்த தண்ணீரை எடுத்து விட்டு புதிய தண்ணீர் ஊற்றவும்.

•• இரண்டு நாள் நன்கு ஊறியதும் கசகசாவை நன்கு நைசாக அரைக்கவும்.

•• பாதாமை 12 மணி நேரம் ஊற வைத்து அதையும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

•• சீனியையும் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விட்டு அதில் சிட்ரிக் ஆஸிட் சேர்த்து எல்லாம் கரைந்ததும் இறக்கி வடிகட்டவும்.

•• வடிகட்டிய சிரப்பில் கசகசா விழுது, ஏலக்காய்ப்பொடி சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
இந்த சிரப்பை ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டவும். பின் பாதாம் விழுது, எசன்ஸ் சேர்க்கவும்.

•• கடைசியாக k.m.s பவுடரை 1 டீஸ்பூன் வெந்நீரில் கரைத்து சர்பத்தில் ஊற்றி நன்கு கலக்கவும்.

•• கடைசியாக ஸ்டெரிலைஸ் செய்த பாட்டில்களில் ஊற்றி மூடவும்.

தேங்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்



தேங்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்கள், காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ், பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றுகிறது.

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்குகிறது.

தேங்காய் தண்ணீரைக் தொடர்ந்து குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தி, உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.

தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக இருப்பதால், இதை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை மற்றும் வாய்வுத் தொல்லைகள் நீங்குவதை நன்கு உணரலாம்.

தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது. எனவே இதனை தினமும் குடித்தால், பசி கட்டுப்படுவதோடு, உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்கலாம்.

தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

கடுமையான தலைவலியை உணரும் போது, இந்த தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, உடலிற்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.

தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.

கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்


தேங்காய் தண்ணீரை 7 நாட்கள் குடித்தால் இப்படி ஒரு மாற்றம் நிகழுமா?
தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.
தேங்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்கள், காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ், பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றுகிறது.
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்குகிறது.
தேங்காய் தண்ணீரைக் தொடர்ந்து குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தி, உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.
தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக இருப்பதால், இதை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை மற்றும் வாய்வுத் தொல்லைகள் நீங்குவதை நன்கு உணரலாம்.
தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது. எனவே இதனை தினமும் குடித்தால், பசி கட்டுப்படுவதோடு, உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்கலாம்.
தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
கடுமையான தலைவலியை உணரும் போது, இந்த தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, உடலிற்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.
தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.
கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?


முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?

பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும்.

இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.

100 கிராம் முளை கட்டிய பயறில்,
30 கலோரிகள்
3 கிராம் புரதச்சத்து
6 கிராம் கார்போஹைட்ரேட்
2 கிராம் நார்ச்சத்து உள்ளது.

அதிக உடல் உழைப்பும், உடல் பலமும் தேவைப்படுபவர்கள் இந்த முளை கட்டியப் பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு குளுமையைக் கொடுப்பதால் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்.

வியாழன், 20 ஏப்ரல், 2017

பப்பாளி இலை ஜூஸ் குடிச்சிருக்கீங்களா?... இன்னைலேருந்து குடிங்க... என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?



பப்பாளி இலை ஜூஸ் குடிச்சிருக்கீங்களா?... இன்னைலேருந்து குடிங்க... என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?


அன்றாடம் நாம் சாப்பிடும் பழங்களில் இருக்கும் மருத்துவ நன்மைகளை விட அதன் இலை, பூ, பட்டை, வேர் இதுபோன்ற மற்ற பாகங்களிலும் அதிகமாக நிறைந்துள்ளது. அந்தவகையில் பப்பாளி இலையில் ஏராளமான விஷயங்கள் அடங்கியுள்ளன.

அந்த வகையில், பப்பாளி இலை முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்த இலையில் ஃபைட்டோ நியூண்ட்ரியண்டுகள், என்சைம் போன்ற நிறமிகளும், கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமச் சத்துக்களும் அதிகமாக உள்ளது.

எனவே பப்பாளி இலையில் ஜூஸ் செய்துக் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம். நமது உடம்பில் ஓடும் ரத்தத்தில், இரத்தத் தட்டுகள் குறைந்தால், அது பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். இதனால் பப்பாளி இலை ஜூஸ் குடித்து வந்தால், ரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலாம்.

பப்பாளி இலையின் சாறு நமது உடம்பில் உள்ள கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

நமது உடம்பில் உள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களிடம் எதிர்த்து போராடி, மலேரியா, டெங்குக் காய்ச்சல், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

அன்றாடம் நாம் பப்பாளி இலைச் சாற்றினைக் குடித்து வந்தால், அது நமது உடம்பின் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்து, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனை, ஒவ்வாமை, அலர்ஜி போன்ற சருமப் பிரச்சனை, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.

எப்பவுமில்லாம உங்க சருமம் புதுசா ஜொலிக்கனுமா?


எப்பவுமில்லாம உங்க சருமம் புதுசா ஜொலிக்கனுமா?

 இந்த ஒரு ரெசிபி ட்ரை பண்ணுங்க!! உங்கள் சருமம் சுருக்கமில்லாமல், மதழும்புகள், கரும்புள்ளி போன்ற சருமம் பிரச்சனைகள் இல்லாமல் இருக்க, இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயன்படுத்திப் பாருங்கள்.  சருமம் எப்போதும் பளிச்சென்று இருக்காதுதான். பருவ மாற்றம், வயது, உபயோகிக்கும் அழகு பொருட்கள் என ப்லவகைகளில் சருமம் பாதிக்கப்படும்.ஆனால் நீங்கள் உங்கள் இழந்த சருமத்தை மீட்டெடுக்க அற்புதமான இயற்கை வழிகள் உண்டு. அம்மாதிரியான ஒரு குறிப்புதான் இது. உபயோகித்துப் பாருங்கள்.

 *தேவையானவை :*
 எலுமிச்சை சாறு - அரை ஸ்பூன்

 முட்டையின் வெள்ளைக் கரு- 1

 தேங்காய் எண்ணெய் - 1 1/2
ஸ்பூன

தேன் - அரை ஸ்பூன்

*செய்முறை :* முதலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக பிரித்தெடுத்து நன்றாக நுரைக்கும்படி அடித்துக் கொள்ளுங்கள்.
 அதில் தேன், எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை மேலே குறிப்பிட்ட அளவு கலந்து கொண்டால் ஃபேஸ் மாஸ்க் ரெடி. செய்முறை : இந்த கலவையை உபயோகப்படுத்துவதற்கு முன் நீங்கள் முக்கியமாய் செய்ய வேண்டியது, முகத்தை கழுவுவது. முகத்தை கழுவி சுத்தமான துணியில் லேசாக ஒத்தி எடுக்க வேண்டும். செய்முறை : பின்னர் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி அரை மணி நேரம் காய வைக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். முகம் மிகவும் மிருதுவாகும். சுருக்கங்கள் மறையும். முகம் பளபளப்பாக ஜொலிப்பதை கண்கூட உணர்வீர்கள் 

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

சரியான பாத்திரத்தில் தான் சமைக்கிறீர்களா....?



சரியான பாத்திரத்தில் தான் சமைக்கிறீர்களா....?

● தினமும் சாப்பிடும் உணவு, சரிவிகிதத்தில் இருக்கிறதா, சத்தானதா என்று யோசிக்கும் நாம், அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள் சரியானவைதானா என்று யோசிப்பது இல்லை. அவசரகதியில் இதற்கெல்லாம் ஏது நேரம் என்று, சமைக்கவும் சாப்பிடவும் தொடங்குகிறோம். சமையலறையில் *குக்கரில் தொடங்கி, கடாய், தவா, பால் பாத்திரம்* எனச் நான் ஸ்டிக் பொருட்கள் நிறைந்துகிடக்கின்றன. *மண் பானை, இரும்பு, ஈயச்செம்பு, பித்தளை சாமான்களை* இனி அருங்காட்சியகத்தில்தான் பார்க்க முடியும் என்ற நிலை.

● சமையலுக்குப் பயன்படுத்தப்படும் நவீனமான பாத்திரங்களில் ஒளிந்து இருக்கும் ஆபத்துக்கள் என்ன, எந்த வகைப் பாத்திரங்கள் பாதுகாப்பான சமையலுக்குத் தேவை, அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம்?

🍵 *மண் பாத்திரம்:* 🍵
மண்பாத்திரங்களில் சமைக்கும்போது உணவின் மீது வெப்பம் மெதுவாக, ஒரே சீராகப் பரவுகிறது. மேலும், மண்பாத்திரங்களில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவியும், காற்றும் உணவில் ஊடுருவி, சரியான முறையில் சமைக்க உதவுகின்றன. இதனால், அதில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப்போன்ற தன்மையைப் பெறுகிறது. இதனால், சமைத்த உணவு பல மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். மண் பாத்திரத்தில் சமைக்கும்போது அதிக எண்ணெய் பயன்படுத்தத் தேவை இல்லை. உணவில் உள்ள  அமிலத்தன்மையைச் சமப்படுத்தும். உப்பு, புளிப்புச் சுவையுள்ள உணவுகளைச் சமைக்கும் போது, தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது.  மண் பாத்திரங்களை, அவ்வப்போது கழுவி வெயிலில் காயவைத்துப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

🍵 *இரும்புப் பாத்திரம்:* 🍵
பல காலமாக சமையல் பாத்திரங்கள் செய்யப் பயன்படுத்தப்பட்டு வரும் இரும்பு, சமையலுக்கு ஏற்றது. இதில், சமைக்கும்போது வெப்பம் சீராகப் பரவுவதோடு, நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும். கொஞ்சம் இரும்புச் சத்து உணவோடு கலந்து உடலில் சேரும். ரத்தசோகையைக் குணப்படுத்தும்.  ஆனால், துவர்ப்புச் சுவையுடைய பொருட்களை இரும்புக் கடாயில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். இரும்பு, துவர்ப்புச் சுவையுடன் வினை புரிந்து உணவுப்பொருள் கருப்பு நிறமாக மாறுவதுடன், சுவையும் வேறுபடும். விரைவில் கெட்டு விடவும் வாய்ப்புகள் அதிகம்.  இரும்புப் பாத்திரத்தில் சமைக்கலாமே தவிர, அதில் நீண்ட நேரம் உணவை வைக்கக் கூடாது. சமைத்து முடித்தவுடன் அதை வேறு பாத்திரத்துக்கு மாற்றிவிடுவது நல்லது.

🍵 *வெண்கலப் பாத்திரம்:* 🍵
வெண்கலப் பாத்திரத்தில் சமைத்து உண்டால், உடல் சோர்வு நீங்கி, நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருப்பதை உணரலாம். இதில் சமைத்த பொருட்கள் சீக்கிரத்தில் கெட்டுப்போகாது.  ஆனால் வெண்கலப் பாத்திரத்தை சரியாகக் கழுவி, வெயிலில் காய வைத்துதான் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் நாம் அடுத்த முறை சமைக்கும்போது களிம்புப் படலம் உண்டாகி உணவின் தன்மையே நச்சாக மாறிவிடும். இதனால்தான் வெண்கலப் பானையில் வைத்த பொங்கல், சில சமயங்களில் நிறம் மாறிவிடுவதைக் காணலாம்.

🍵 *செம்புப் பாத்திரம்:* 🍵
செம்புப் பாத்திரத்தில் சமைத்த உணவுக்குப் பித்த நோய், கண் நோய், சூதக நோய், சுவாசக் கோளாறுகள் போன்ற அனைத்தையும் குணமாக்கும் ஆற்றல் உண்டு. செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை வைத்திருந்தால் அதில் உள்ள நுண்ணுயிரிகள் எல்லாம் நீங்கிவிடும்.

🍵 *ஈயப் பாத்திரம்:* 🍵
ஈயம், நம் உடலுக்கு உகந்ததல்ல. ஈயப் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவை உட்கொண்டால் வயிறு தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உண்டு. சளி, இருமல் இருப்பவர்கள் ஈயப் பாத்திரத்தில் சமைத்ததைத் தொடர்ந்து சாப்பிட்டால், வயிறு உப்புசம் ஏற்படலாம். ஈயத்துக்குப் பதிலாக வெள்ளீயப் பாத்திரங்கள் பயன்படுத்தலாம். நாம் காலங்காலமாகப் பயன்படுத்தி வந்த‌ ஈயச்சொம்பு என்பது வெள்ளீயத்தினால் செய்யப்பட்டது. இந்தக் கலவைதான், ஈயச்சொம்பில் சமைக்கும் ரசம் நல்ல மணத்துடன் இருப்பதற்குக் காரணம்.

🍵 *பீங்கான் பாத்திரம்:* 🍵
பீங்கானும் காலங்காலமாகப் பயன்பாட்டில் இருப்பதுதான். பீங்கான் சமைப்பதற்கு ஏற்றது என்றாலும், பீங்கான் பாத்திரம் உயர்தரத்தில் ஆனதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காரணம், மலிவு விலை பீங்கான்கள், அவற்றைத் தயாரிக்கத் தேவைப்படும் உயர்ந்தபட்சக் கொதிநிலையில் உருவாக்கப்படுவது இல்லை. இத்தகைய மலிவு விலை பீங்கான்களை, அலங்காரப் பொருட்களாகப் பயன்படுத்தலாம். ஆனால் அதில் சமைத்தால் உணவில் நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் இருக்கிறது.

🍵 *அலுமினியப் பாத்திரம்:* 🍵
ஒவ்வொரு முறையும் அலுமினியப் பாத்திரத்தைக் கழுவும்போது, அதில் கருப்பாக ஒரு கலவை படியும். அலுமினியம்தான் அது.  இந்தக் கலவை உணவில் கலந்து, உடலிலும் சேர்ந்து மூளையில் உள்ள நியூரான்களை அழிக்கும் ஆபத்து ஏற்படலாம். மேலும், தொடர்ந்து பயன்படுத்தும்போது ஆஸ்துமா, காசநோய் போன்ற சுவாசக் கோறுகளும் அல்சர் பாதிப்பும் ஏற்படலாம். அலுமினியம் ஒரு கடின உலோகமாக ((Heavy metal) இருப்பதால்,  அமிலத்தன்மை கொண்ட தக்காளி போன்ற உணவுப் பொருட்களுடன் வினைபுரிந்து, உடலுக்குள் எளிதாகச் சென்று, தசை மற்றும் சிறுநீரகங்களில் படிய ஆரம்பிக்கும். அலுமினியத்தைத் தவிர்க்க முடியாதவர்கள் சமையல் வேலை முடிந்தவுடன் உணவை வேறு பாத்திரத்துக்கு மாற்றி விடுவது நல்லது.

🍵 *நான் ஸ்டிக் பாத்திரம்:* 🍵
சமைக்க எளிமையானதாக இருந்தாலும், இதைச் சூடுபடுத்தும்போது வெளிவரும் 'பர்ஃப்ளூரினேட்டட் காம்பவுண்ட்’ (Perfluorinated compounds) என்னும் நச்சுப் பொருள் பல்வேறு விதமான உடல் நலக் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பதைத் தவிர்க்க
முடியாது என்பவர்கள், அதனை மிதமான சூட்டில் சமைப்பது நல்லது.

உங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய 15 விஷயங்கள்

உங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய 15 விஷயங்கள்

உப்பு
உப்பு அல்லது சோடியம், இதய நோய்கள் மற்றும் வாதம் ஏற்படும் இடர்பாட்டை அதிகரிக்கும் என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றே. உலகத்தில் உள்ள மற்ற பகுதிகளை விட இந்தியாவில் சராசாரிக்கும் அதிகமான அளவில் உப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி நாம் கூடுதலாக பயன்படுத்தும் உப்பினால், அந்த உணவே நமக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக மாறி வருகிறது.
கைப்பேசிகள்
கைப்பேசியின் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய கால கட்டத்தில், ரேடியோ அதிர்வெண்களில் கதிரியக்க மாசுக்கள் உள்ளதாக ஆய்வுகள் கூறியுள்ளன. இது சில வகையான புற்றுநோய்களை உண்டாக்கும். அதனால் கைப்பேசிகளை எப்போதும் பேண்ட் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்கவும். வேண்டுமானால் கைப்பேசிக்கு கதிர்வீச்சு தடுப்பை வாங்கவும். இருப்பினும் இதன் திறனைப் பற்றி விவாதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
உருளைக்கிழங்கு சிப்ஸ்
பொறித்த உருளைக்கிழங்கு சிப்ஸ் குடல், மார்பகம், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களை உண்டாக்கலாம். இதுப்போக சருமத்தில் பாதிப்பு மற்றும் தமனிகளில் அடைப்புகளும் ஏற்படும்.
வெள்ளை பிரட்
பாஸ்தாவுடன் சேர்த்த வெள்ளை பிரட் மற்றும் செறிவூட்டப்பட்ட கோதுமை மாவால் செய்யப்பட்ட எந்த ஒரு உணவானாலும் சரி, இரத்தக் கொதிப்பை அவைகள் அதிகரிக்கும். காலப்போக்கில் டைப் 2 சர்க்கரை நோய், இதய குழலிய நோய்கள் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். நல்லது என நினைக்கும் விஷயமெல்லாம் கெட்டதாக உள்ளதல்லவா?
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் உள்ள கசப்புத் தன்மைக்கு காரணம் அதிலுள்ள குகுர்பிடசின்ஸ் எனப்படும் நச்சுப் பொருளாகும். வெள்ளரிக்காயின் இரு பக்க நுனிகளை வெட்டுவதால், வெள்ளரிக்காயின் மற்ற பகுதி குகுர்பிடசின்ஸால் விஷமாக்கப்படுவது குறையும். அதை அப்படியே சாப்பிடுவதால் அனைத்து வகையான வயிற்று புழுக்கள் மற்றும் சுகவீனங்களும் ஏற்படும்.
உட்கார்வது
ஆய்வுகளின் படி, ஒரு நாளில் தொடர்ச்சியாக 3 மணிநேரத்திற்கு மேல் அமர்ந்திருந்தால், பெரிய அளவிலான ஆரோக்கிய இடர்பாடுகள் ஏற்படும். உறுப்புகளின் பாதிப்பு, தாமதமாகும் எதிர்வினைகள், தசை சீரழிவு, ஏன் மரணம் ஏற்படக்கூடிய அளவில் பாதிப்புகள் ஏற்படலாம்.
தூக்கம்
அதிகமாக தூங்கினால் உடல் எடை அதிகரிக்கும். தினமும் இரவில் 7-8 மணிநேரம் தூங்குபவர்களை விட, 9 மணிநேரத்திற்கு மேல் தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் இடர்பாடு 41% அதிகமாக உள்ளது என தூக்கத்தைப் பற்றிய ஆய்வுகள் கூறியுள்ளது.
சமையலறை மேடை
சமையலறை கிரானைட் மேடை சராசரி அளவை விட அதிகளவிலான ரேடானை வெளியிடுகிறது. ரேடான் வெளிப்பாடுக்கும் புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பயந்து விடாதீர்கள். இதனால் ஏற்படும் தாக்கத்தினால் நீங்கள் சாவதற்கு 100 வருடங்கள் ஆகும். அதனால் இது மிகவும் மெதுவாக கொல்லும் விஷயங்களில் ஒன்றாகும்.
சோடா பானங்கள்
குளிர் பானத்தில் அனைத்து விதமான செயற்கை உணவு சாயங்களும், பதப்பொருட்களும் (BVO - ப்ராமினேட்டட் வெஜிடபிள் ஆயில் போன்றவைகள்) உள்ளது. இது உங்கள் எடை, பற்கள், சருமம், இரத்தத்தில் உள்ள சர்க்கரை போன்றவைகளுக்கும் ஆபத்தே.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
உங்கள் மனம் விரும்பும் உணவுகளான ஸ்பைசி சலாமி துண்டுகள், காக்டைல் சாசேஜ்கள், பன்றி இறைச்சி போன்றவைகள் அனைத்திலும் பதப்பொருட்கள் மற்றும் சேர்க்கைப் பொருட்கள் அடங்கியுள்ளது. இதய நோய், புற்றுநோய், குழந்தைகளின் கற்கும் திறனில் பாதிப்பு என பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இது காரணமாக உள்ளது.
டூத் பேஸ்ட்
நாம் பயன்படுத்தும் பல டூத் பேஸ்ட்களில் ட்ரைக்ளோசன் எனப்படும் ரசாயனம் இருப்பது சமீபத்தில் தான் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த ரசாயனத்தைப் பற்றி சரியாக தெரியவில்லை என்றாலும் கூட இது நரம்பியல் மற்றும் இதய பிரச்சனைகள் மற்றும் மார்பக புற்றுநோயை உண்டாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஏர் ஃப்ரெஷ்னர்
ஏர் ஃப்ரெஷ்னர் டப்பாவில் அஸ்பர்டேம், நியோடேம் மற்றும் இதர ஆபத்தான ரசாயனங்கள் உள்ளது. இவைகள் இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் இதய குழலிய நோய்கள் என பல விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பச்சைப் பால்
பச்சைப் பாலில் போவைன் க்ரோத் ஹார்மோன் என்ற ரசாயனம் உள்ளது. இது மாடுகளில் பாலின் வரத்தை அதிகரிக்க உதவும் ஒரு ரசாயனம். அடிப்படையில் புற்றுநோய், கீல்வாதம் மற்றும் தீவிரமான மைக்ரைன்களை ஏற்படுத்தும் BGH.
நாப்த்தலின் உருண்டைகள்
நாப்த்தலின் உருண்டைகளில் நச்சுமிக்க ரசாயனங்கள் உள்ளது. குறைந்த அளவில் இருக்கும் போது, மயக்கம் மற்றும் குமட்டல் போன்றவைகளை இது ஏற்படுத்தும். இவைகள் உங்கள் இரத்தத்தில் கலந்து புற்றுநோயை ஏற்படுத்தும் என கருதப்படுவதால் சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
மைக்ரோவேவ் ஓவன்கள்
இவைகள் சமையலில் வேகமான தீர்வுகளை அளித்து வருகிறது. ஆனால் நாம் பார்க்கப் போவது அதிலிருந்து ஏற்படும் கதிர்வீச்சு கசிவை பற்றி. இதனால் பிறப்பு குறைபாடு, புற்றுநோய் மற்றும் வலுவிழந்த நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மைக்ரோவேவ் செய்யப்பட்ட உணவுகள் உங்கள் இரத்த கொதிப்பை அதிகரிக்கும்.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

புத்துணர்வு தரும் கேரட் தக்காளி ஜூஸ்.



புத்துணர்வு தரும் கேரட் தக்காளி ஜூஸ்.


*தேவையான பொருட்கள் :*

கேரட் - 2
தக்காளி 2,
கருப்பு உப்பு - கொஞ்சம்,
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
புதினா இலைகள் - 10.

*செய்முறை :*

•• கேரட், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

•• கேரட், தக்காளி இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். நன்கு கூழாக அரைத்த பிறகு வேறு பவுலில் ஊற்றி கொள்ளவும்.

•• அரைத்த ஜூஸில் கருப்பு உப்பு, சீரகத்தூள், புதினா இலைகளை கலக்கி பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியான பிறகு எடுத்து அருந்தவும்.

•• உடல் குளிர்ச்சியும், புத்துணர்வும் கோடைகாலத்தில் பெற இந்த ஜூஸ் உதவுகிறது.

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

தர்பூசணி ஜூஸ்



தர்பூசணி ஜூஸ்


தேவையான பொருட்கள்:

தர்பூசணி துண்டுகள் – 4 சர்க்கரை (அ) தேன் – சிறிது மிளகு தூள் – ஒரு சிட்டிகை சுக்கு தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – அரை சிட்டிகை ஐஸ் கியுப்ஸ் – 6

செய்முறை:

நான்கு துண்டு தர்பூசணி எடுத்து கொள்ளவும்.

பழத்தை கழுவி, அதில் உள்ள கொட்டைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக அரியவும்.

மிக்சியில் ஐஸ் கியுப்ஸ், சர்க்கரை, உப்பு, மிளகு தூள், சுக்கு தூள் பழம் அனைத்தையும் போட்டு நன்கு அடித்து பெரிய துளையுள்ள வடிகட்டியில் வடித்து குடிக்கவும்.

அப்படி வடிகட்ட முடியவில்லை என்றால், மிக்சியில் அடித்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றிவைத்தால் அடியில் கொட்டைகள் தங்கிடும், மிகவும் கலக்காமல் அப்படியே தெளிந்த மாதிரி டம்ளரில் ஊற்றி பருகவும்.

ஆஹா! என்ன.. ஒரு புத்துணர்வு. கண்ணெல்லாம் குளிர்ந்து விடும்.

குறிப்பு:

தர்பூசணி நல்ல ஒரு நீராகாரம், தாகத்தை தணிக்கும்.

இனிப்பில்லாத தர்பூசணி பழத்தை சின்னதா கட் செய்து அதில் சர்க்கரை சேர்த்து குளிர வைத்து குடித்தாலும் நல்லா இருக்கும்.

இதில் பால் சேர்த்தும் ஜூஸ் தயாரிக்கலாம் பால் சேர்க்கும் போது வெரும் ஐஸ் கட்டி, சர்க்கரை மட்டும் போதும். மாதுளை சேர்த்தும் செய்து குடிக்கலாம்.

இதன் தோலை வீணாக்காமல் சாம்பார் வைக்கலாம். தர்பூஸ் வெட்டிய முழுவதையும் தோலிலிருந்து வெட்டி எடுக்க முடியாது அதற்கு ஒரு மேஜை கரண்டி கொண்டு வழித்தெடுத்தால் ஈசியாக வந்துவிடும்.

தர்பூசணியை கட் செய்து பிரிட்ஜில் வைத்தால் தண்ணீர் அதிகமாக விடும், அது கெட்டியாக கிரிப்பாக இருக்க அரிந்ததும் பீரிஜரில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் தண்ணீர் விடாமல் கிரிப்பாக இருக்கும்.

உருளைக்கிழங்கு போண்டா.



உருளைக்கிழங்கு போண்டா.


*தேவையானவை :*

உருளைக்கிழங்கு – 1 கிலோ,
பச்சை மிளகாய் – 10, கறிவேப்பிலை,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
கடுகு – சிறிதளவு,
உளுந்து – 1 மேசைக்கரண்டி,
தேங்காய் எண்ணெய்- 3 மேசைக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயப் பவுடர் – 1/2 மேசைக்கரண்டி,
கடலை மாவு – 250 கிராம்,
மிளகாய்த் தூள் – 1 மேசைக்கரண்டி,
மஞ்சள் தூள் – 1/2 மேசைக்கரண்டி,
தேங்காய் எண்ணெய் – 250 கிராம் (வறுக்க).

*செய்முறை :*

•• உருளைக்கிழங்கை பிரஷர் குக்கரில் பத்து நிமிடங்கள் வேகவைத்துக் கொள்ளவும். ஆறியதும், தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

•• கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயப் பவுடர் சேர்த்து தாளிக்கவும்.

•• பிறகு அதில் வேகவைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு வதக்கவும்.

•• ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து பத்து நிமிடங்கள் வைக்கவும்.

•• கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், உருளைக் கிழங்கு கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி மாவில் முக்கி எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும்.

புதன், 12 ஏப்ரல், 2017

எது சுத்தமான நெய்? கண்டுபிடிக்கும் வழிகள்.



எது சுத்தமான நெய்? கண்டுபிடிக்கும் வழிகள்.


நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும், கரையக்கூடிய கொழுப்புகள். ஆகவே தான் இது உடல் எடையை அதிகரிக்காது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் நெய்யானது பல்வேறு விதமான பிராண்டுகளில் கடைகளில் விற்கப்படுகிறது.

ஆனால், அவை அனைத்தும் சுத்தமான நெய்தானா என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கும்.

சுத்தமான நெய்யை கண்டுபிடிப்பதற்கு கீழே கூறப்பட்டுள்ள இந்த 2 வழிகளை பின்பற்றுங்கள்

சுத்தமான நெய் என்பது அறை வெப்பநிலையில் உருகும் தன்மை கொண்டது. எனவே, சிறிது நெய்யை உள்ளங்கையில் வைத்து சிறிது நேரம் வரை பாருங்கள். சிறிது நேரத்திலேயே உள்ளங்கையில் வைக்கப்பட்ட நெய் உருகிவிட்டால் அது சுத்தமான நெய் ஆகும்.

இரண்டாவதாக, நெய்யை ஒரு வாணலியில் வைத்து சூடுபடுத்தும்போது அது உருகி Brown நிறத்தில் வந்தால் அது சுத்தமான நெய்.

அதனை தவிர்த்து, காலதாமதமாக உருகி, மஞ்சள் நிறத்தில் வந்தால் அது கலப்படமான நெய் ஆகும்.

நுங்கு மில்க் ஷேக்.



நுங்கு மில்க் ஷேக்.


இளநுங்கு - 4
பால் - 2 கப்
சர்க்கரை - தேவையான அளவு
ரோஸ் எசன்ஸ் - சிறிது
ஐஸ் க்யூப்ஸ் - சிறிது

நுங்கின் மேல் தோலை உரித்து எடுத்து விட வேண்டும்.

பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.

மிக்சியில் நுங்கு, பால், சர்க்கரை, ரோஸ் எசன்ஸ், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து அரைத்து, ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே சிறிது நுங்கை மிதக்க விட்டு அருந்தலாம்

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

குழந்தைகளுக்கு சத்தான கேரட் முட்டை ஆம்லெட்



குழந்தைகளுக்கு சத்தான கேரட் முட்டை ஆம்லெட்

தேவையான பொருட்கள்:

முட்டை - 3

கேரட் - 1

மிளகு - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

செய்முறை :

* கேரட்டை துருவிக் கொள்ளவும்.

* மிளகை பொடித்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் கேரட் துருவல், உப்பு, பாதி மிளகுதூள் போட்டு நன்கு அடித்துக்கொள்ளவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானவுடன், பாதி எண்ணெய் ஊற்றி அடித்து வைத்த முட்டைக் கலவையை பரவலாக ஊற்றி அதன் மேல் மீதி எண்ணெயை பரவலாக ஊற்றவும். அடுப்பை மிதமாக எரியவிடவும்.

* இருபுறமும் நன்கு வெந்தவுடன் மேலே மீதி மிளகுதூளை தூவி விடவும்..

* சூப்பரான சத்து நிறைந்த கேரட் முட்டை ஆம்லெட் ரெடி.

* விருப்பப்பட்டால் ரொட்டித்துண்டுகளில் வெண்ணைய் தடவி, துண்டுகளாக்கிய ஆம்லெட்டை இடையில் வைத்து உண்ணலாம்.

* டயட்டில் இருப்பவர்கள், வயதானவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சேர்த்து ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

மாதுளை சப்போட்டா சாலட்...



மாதுளை சப்போட்டா சாலட்...

தேவையான பொருட்கள் :

மாதுளை முத்துக்கள் - 2 கப்,

சப்போட்டா - 3,

ஆப்பிள் - 2 துண்டுகள்,

லெமன் சாறு - அரை ஸ்பூன்

தேன் - 1 டீஸ்பூன்.

செய்முறை:

* சப்போட்டாவின் தோலை உரித்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.

* ஆப்பிளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த சப்போட்டா விழுது, பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் மற்றும் மாதுளை முத்துக்களை சேர்த்து நன்றாக கலக்கவும்.

* கடைசியாக தேன், லெமன் சாறு கலந்து பரிமாறவும்.

* மாதுளை சப்போட்டா சாலட் ரெடி.

* வித்தியாசமான இந்த சாலட், வெயில் நேரத்தில் உடலுக்கு மிகவும் நல்லது.

எதிரி வீட்டில் கூட வாழை இலையில் சாப்பிடலாம்...



எதிரி வீட்டில் கூட வாழை இலையில் சாப்பிடலாம்...

வாழை இலையில் உணவைச் சாப்பிடுவது நமது கலாசாரம் மட்டுமின்றி ஆரோக்கியமானது, ருசியானது, ஆயுளை வளர்க்கும் நல்ல பழக்கமும் கூட. மேலும் தோலுக்குப் பளபளப்பைக் கொடுத்து, செரிமானக் குறைபாடு, பலகீனம், உடல்வலி, நாள்பட்ட சளி, ருசியின்மை ஆகியன நீங்கும் என சித்த மருத்துவம் சொல்கிறது.

மேலும், அது வாழை இலையில் சாப்பிடும் முறையையும் சொல்கிறது. சாப்பிடும் முன் தரையில் லேசாக நீர் தெளித்து இலையின் நுனி, உண்பவரின் இடப்பக்கமும், அடிப்பகுதி வலப்பக்கமும் இருக்குமாறு விரிக்க வேண்டும். பின்பு, இலையில் சிறிது நீர் தெளித்து கையால் துடைத்து, ஒரு சொட்டு நெய் இலையில் தடவி அதன்மேல் உணவு பதார்த்தங்களைப் பரிமாற வேண்டும்.

இலை நுனிப்பகுதியில் இருந்து முதலில் உப்பு, ஊறுகாய், பச்சடி, பொரியல், கூட்டு, வடகம், வடை, அப்பளம் போன்றவற்றை வரிசையாகவும், நடுப்பகுதியில் சாதம், பருப்பு அதன் மேல் நெய் விட்டு தொன்னைகளில் தனித்தனியே குழம்பு, ரசம், பாயாசம், மோர் வைக்க வேண்டும் எனவும் சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.

உறவினர்களை மேற்கு திசை நோக்கி அமர்த்தியும், சாதுக்கள், ஞானிகளை வடக்கு நோக்கி அமர்த்தியும் உணவு பரிமாற வேண்டும். கெட்டுப் போன அல்லது விஷம் கலந்த உணவுகளை வாழை இலையில் வைத்தால் இலையின் மேற்புறத்தில் ஒரு புதிய நிற நீர் உற்பத்தியாகி இலையில் ஒட்டாமல் வடிந்துவிடும்.

இதனை வைத்து உணவின் விஷத்தன்மையை அறியலாம். ஆகையால் தான் எதிரி விருந்துக்கு அழைத்தாலும் தலை வாழை இலையில் தைரியமாக சாப்பிடலாம் என முன்னோர்கள் கூறினார்கள்.

அல்சர் நோயினால் பாதிப்படைந்தவர்கள் தொடர்ந்து வாழை இலையில் சாப்பிட்டால் இரைப்பை மற்றும் முன் சிறுகுடலில் உள்ள புண்களைக் கரைத்து புதிய செல்களைத் தோற்றுவிக்கும் தன்மை வாழை இலைக்கு உண்டு.

ஆகையால் தான் தீக்காயம் ஏற்பட்டால், அந்த இடத்தில் வாழை இலையால் சுற்றுவது வழக்கம். உணவு சாப்பிட்ட பின் இலையை நம்மை நோக்கி மடிக்க வேண்டும். இதற்கு உணவு நன்றாக இருந்தது. நம் உறவு நீடிக்க வேண்டும் என்று அர்த்தம்.

சித்த மருத்துவம் சொன்ன நன்மைகளை பார்த்தோம். இனி நமது அறிவியல் சொல்லும் நன்மைகளை பார்ப்போம். நாம் சாப்பிடப் பயன்படுத்தும் வாழை இலையில் உடல் எடை கூடாமல் தடுக்கும் நார்ச்சத்து, உப்புகளை சரியாக வைத்திட பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம் மற்றும் செம்புச் சத்துகள், கண்களைப் பாதுகாத்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் குடற்புண்களை ஆற்றும் பீனால், ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும் வைட்டமின் கே, புற்றுநோய் காரணிகளை அழிக்கும் சாலிசிலிக் அமிலம் ஆகியவை உள்ளன. அதனால் வாழை இலையில் உண்பது ஆரோக்கியம் என்கிறது அறிவியல்.

வாழை இலையில் நீர் தெளித்து, அதன்மேல் நெய் தடவி சூடான உணவுகளை வைக்கும் போது மேற்கண்ட சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து வருவதால் தொண்டையில் தோன்றும் அலர்ஜியைத் தடுத்து நம் ஆயுளைக் கூட்டுகிறது என்றும் கூறுகிறது. அதனால் வாழை இலையில் சாப்பிட்டு ஆரோக்கியத்தைக் கூட்டுவோம்.

அரைத்துவிட்ட மீன் குழம்பு.


அரைத்துவிட்ட மீன் குழம்பு.


*தேவையான பொருட்கள் :*

· சுத்தம் செய்த மீன் – 1/2 கிலோ
· தக்காளி – 1

*கரைத்து கொள்ள :*
· புளி – 1 எலுமிச்சை அளவு
· தண்ணீர் – 5 – 6 கப்

*சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :*
· மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
· மிளகாய் தூள் – 2 மேஜை கரண்டி
· தனியா தூள் – 1 மேஜை கரண்டி
· உப்பு – தேவையான அளவு

*அரைத்து கொள்ள :*
· சின்ன வெங்காயம் – 5
· தேங்காய் – 2 சிறிய துண்டுகள்

*கடைசியில் தாளிக்க :*
· எண்ணெய் – 2 மேஜை கரண்டி
· கடுகு + வெந்தயம்
· கருவேப்பில்லை – 5 இலை

*செய்முறை :*

•• புளியினை தண்ணீரில் கரைத்து கொள்ளவும். அத்துடன் தூள் வகைகள் + தக்காளி சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

•• கடாயில் புளி கரைசலினை ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

•• தேங்காயினை மிக்ஸியில் போட்டு மைய அரைக்கவும். அத்துடன் கடைசியில் வெங்காயத்தினை சேர்த்து ஒன்றுபாதியுமாக அரைக்கவும்.

•• அரைத்த விழுதினை கொதித்து கொண்டு இருக்கும் குழம்பில் ஊற்றி மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

•• பிறகு மீன்கள் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.

•• தாளிக்க கொடுத்து பொருட்களை தாளித்து குழம்பில் கடைசியாக சேர்க்கவும்.

சுவையான மீன் குழம்பு ரெடி.

எக் EGG 65..!!!*


எக் EGG 65..!!!*


*தேவையானவை :*

முட்டை – 4
சோம்பு – 1 ஸ்பூன்
பூண்டு – 5 பல்
சின்ன வெங்காயம் – 5
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
கறிவேப்பில்லை – சிறிது
சோள மாவு – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப

*செய்முறை :*

முட்டையை வேகவைத்து, சமமான துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
(ஒரு முட்டையை இரு பாதிகளாக வெட்டிக்கொள்ளலாம்)

சோம்பு, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகாய் தூள், கறிவேப்பில்லை ஆகியவற்றை மிக்சியில் போட்டு மையாக அரைத்துகொள்ளவும்.

இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேவையான அளவு சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

வேகவைத்த முட்டை துண்டுகளின் மீது இந்த மசாலா கலவையை பூசி 1/2 மணி நேரம் ஊறவைத்து, சூடான எண்ணெய்யில் பொரித்து சூடாக பரிமாறவும்..

உடலுக்கு குளிர்ச்சி தரும் லெமன் - புதினா ஜூஸ்.



உடலுக்கு குளிர்ச்சி தரும் லெமன் - புதினா ஜூஸ்.


வெயில் காலத்தில் உடல் சூடால் அவதிப்படுபவர்கள் லெமன் - புதினா ஜூஸ் குடிக்கலாம்.

*தேவையான பொருட்கள் :*

எலுமிச்சை - ஒன்று
நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் - தேவைக்கு
புதினா - 2 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு (2 அங்குல அளவு)
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - 300 மில்லி

*செய்முறை :*

•• புதினாவை சுத்தம் செய்து கொள்ளவும்.

•• இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும்.

•• எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து வைக்கவும்.

•• இஞ்சி, புதினாவை தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும்.

•• அரைத்த விழுதுடன் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

•• பிறகு எலுமிச்சை சாற்றையும் ஊற்றிக் கலக்கி வடிகட்டவும்.

சூப்பரான லெமன் மின்ட் ஜூஸ் ரெடி.

42 மணி நேரத்தில் புற்றுநோயை அழிக்கும் அற்புத ஜூஸ்!



42 மணி நேரத்தில் புற்றுநோயை அழிக்கும் அற்புத ஜூஸ்!


புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள் இறப்பை சந்தித்து வருகின்றனர். ஏனெனில் இதுவரை புற்றுநோயை குணப்படுத்துவதற்கான சிகிச்சையை இன்னும் கண்டிபிடிக்கவில்லை.

புற்றுநோயை குணப்படுத்த பக்க விளைவுகள் ஏற்படாமல் இயற்கையான முறையில் நமது வீட்டிலே செய்யலாம் ஓர் அற்புத ஜூஸ் உள்ளது.

*தேவையான பொருட்கள்:*

பீட்ரூட் - 55%
செலரி - 20%
கேரட் - 20%
உருளைக்கிழங்கு - 3%
முள்ளங்கி - 2%

*தயாரிக்கும் முறை:*

முதலில் பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி போன்ற காய்கறிகளின் தோலை நீக்கி விட்டு, துண்டுகளாக நறுக்கி, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் செலரியை சுத்தமான தண்ணீரில் கழுவி, அரைத்து வைத்தக் கலவையுடன் சேர்த்தால், புற்றுநோயை தடுக்கும் ஜூஸ் ரெடி!

*பயன்படுத்தும் முறை:*

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இந்த அற்புத ஜூஸை புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் குடிக்க வேண்டும்.

*இதர நன்மைகள்:*

 நாம் தயாரித்த இந்த ஜூஸில் பீட்ரூட் தான் முக்கிய பங்கை வகிக்கிறது. பீட்ரூட்டில் புற்றுநோய் செல்களை அழிக்கும் பீட்டானைன் என்ற அமினோ அமிலம் உள்ளது. மேலும் விட்டமின்கள் B1, B2, B6, C, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.

புற்றுநோய் செல்களை முழுமையாகவும், வேகமாகவும் அழிப்பதோடு, நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

கருப்பட்டி - ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து! ..



கருப்பட்டி - ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து! ..

பாரம்பரியத்தில் வெள்ளை சர்க்கரை என்பது இடையே உட்புகுந்த ஒரு விஷயமாகும். ஆரம்பக் காலத்தில் பனங்கற்கண்டு, கருப்பட்டி / வெல்லம் / கரும்பு சர்க்கரையை தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த காலத்தில் இப்போது போல உடல் பருமனோ, நீரிழிவு நோயோ இருந்ததாக யாரும் கேள்விப்பட்டதே இல்லை.

இப்படி சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த அருமருந்து தான் கருப்பட்டி.சர்க்கரைக்கு மாற்றாக சரியாக கருப்பட்டியை பயன்படுத்தினாலே இன்று உள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமலும் அதற்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருந்துகள் அவசியமில்லாமலே போகும்.

“உணவே மருந்து” என்னும் நியதிப்படி, கால சூழலுக்கு ஏற்றார்போல உடலுக்கு தேவையானதை தேவைப்படும் நேரத்தில் வழங்குகிறது கருப்பட்டி. உடல் இயக்கத்தை சீரான சமநிலைக்கும் கொண்டு வருகிறது.

கருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள்

சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன்.இந்த பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது.அதனை தற்போது பார்ப்போம்.

பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.

கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன.

கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.

சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதி கமாக இருக்கிறது. மேலும் இதை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்…


கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. கருப்பட்டியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்புகின்றனர்.

கருப்பட்டிஇரத்தத்தை சுத்திகரித்துஉடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும்

மேனிபளபளப்பை பெறும்.

கருப்பட்டியில் சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தமடையும்

சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்

ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்.

கரும்புசக்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும்எலும்புகளும் உறுதியாகும்

நீரிழிவு நோயாளிகள் (சக்கரை நோயாளிகள்) கைகுத்தல்அரிசிசாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டுவந்தால் சக்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவது குறையும்.

குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம்உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது

சுக்குகருப்பட்டி பெண்களின் கர்ப்பப பைக்கு மிகவும் ஏற்றது.

சுக்கு,மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாகசுரக்கும்

அந்ததாய் பாலை குடிக்கும் குழந்தைக்கும் நல்ல ஊட்டசத்துக்கள் கிடைக்கபெறும்.

#தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப் பெயர் பெற்றதாகும்



பெண்களுக்கு கருப்பட்டி சிறந்த ஆரோக்கிய தரும் பொருளாகும்.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலிமை அடைவதுடன், கர்ப்பப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
சீரகத்தை வறுத்து சுக்கு, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.
கர்ப்பப்பையை வலிமைபடுத்தும் கருப்பட்டி
ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கீழ்வயிற்று வலி, வாயுத் தொல்லை நீங்கும்.
குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.
காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால், உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.
சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.
சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்


வியாழன், 6 ஏப்ரல், 2017

தவிர்க்க வேண்டிய உணவுகள்:,சாப்பிட வேண்டிய உணவுகள்:




தவிர்க்க வேண்டிய உணவுகள்:,சாப்பிட வேண்டிய உணவுகள்:


தவிர்க்க வேண்டிய உணவுகள்:

* காபியில் உள்ள கெஃபைன், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிப்பதால், வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் காபியைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். கடுமையான வயிற்று வலி ஏற்படுவதோடு, நோயின் தீவிரத்தையும் அதிகமாக்கிவிடும். கெஃபைன் அதிகமாக இருக்கும் டீ, சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* காரமான உணவுகள், மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால், எதுக்களித்தல் பிரச்னை அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது, கடுமையான வயிற்றுவலி ஏற்படும். அதனால், மிளகாய், மிளகு, மிளகாய்ப் பொடி ஆகியவற்றை உங்கள் மெனுவில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.
* பால் குடித்தால் வயிற்றுப் புண் குணமாகும், எரிச்சல் ஏற்படாது என்று சிலர் கூறுவார்கள். இது தவறாகும். பால் வயிற்றிலுள்ள அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. அது மட்டுமல்லாமல் பாலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் புரதம், நோய் குணமடைவதைத் தாமதப்படுத்துகிறது.
* சோடா மற்றும் குளிர்பானங்களுக்கு முற்றிலுமாகத் தடைப்போடுங்கள். அதில் உள்ள சிட்ரிக் அமிலம் வயிற்றின் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. இதனுடன் செரிமானக் கோளாறுகளையும் உண்டாக்குகிறது. குறிப்பாக, மதுப்பழக்கம் உள்ளவர்கள், குடிப்பதை நிறுத்த வேண்டும். இந்தப் பழக்கம் நோயைத் தீவிரமாக்கும். அதுமட்டுமல்ல வயிறு மற்றும் சிறுகுடலில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, வீக்கம்கூட உண்டாகலாம்.
* ரெட் மீட்டை உணவில் சேர்த்துக்கொள்ளாதீர்கள். இதில் அதிக அளவில் புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளதால், உணவு செரிமானமாக நீண்ட நேரம் எடுக்கும். அதனுடன் நோயின் வீரியத்தையும் அதிகப்படுத்தும்.


சாப்பிட வேண்டிய உணவுகள்:

* நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவதால் செரிமான மண்டலம் சீராகச் செயல்படும். உணவுகளும் எளிதாகச் செரிமானமாகும். நாள் ஒன்றுக்கு 2 கப் அளவுக்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் வராமல் பாதுகாக்கலாம்.

* தயிரில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுத்து, நோயைக் குணப்படுத்த உதவுகிறது. தயிரை வாரத்துக்கு மூன்று முறை சாப்பிட்டுவர, சிறந்த பலன்களைப் பெறலாம்.
* முட்டைக்கோஸில் உள்ள குளூட்டமைன் (Glutamine), வயிற்றுப்புண்களை எதிர்க்கும் தன்மையுடையவை. இதனால் வயிற்றுப்புண்கள் வராமல் தடுக்கலாம்.
* ஃபிரெஷ் திராட்சைப் பழங்களை ஜூஸாக செய்து, வாரத்துக்கு மூன்று முறை அருந்தலாம்.
* கல்யாண பூசணிக்காயின் சதைப்பகுதியை எடுத்து, அதனுடன் ஏலக்காய் ஒன்று, தேவையான பனங்கற்கண்டு சேர்த்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வர, நோய் குணமாகும் வாய்ப்புகள் அதிகம்.
* அவ்வப்போது புதினா ஜூஸ், புதினா துவையல், புதினா சாதம் என ஏதாவது ஒரு வகையில், புதினாவைச் சேர்த்துக்கொள்வது நல்லது.
* வாரத்துக்கு மூன்று நாட்கள், ஒரு டம்ளர் அளவுக்கு வெறும் வயிற்றில் தேங்காய்ப்பால் குடித்து வரலாம். ஒரு பெரிய ஸ்லைஸ் தேங்காயை நன்றாக மென்று விழுங்குவது நல்லது.
* மணத்தக்காளி கீரை சூப், மணத்தக்காளி கீரை, மணத்தக்காளி கூட்டு என ஏதாவது ஒருவகையில் கீரையைச் சேர்த்துக்கொள்வது நல்லது.
* பாசிப் பருப்பு சேர்த்து கீரைக் கூட்டு செய்து, ஒரு கப் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வரலாம்.
* முள்ளங்கி, புடலைங்காய், பூசணிக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, இளநீர் ஆகிய நீர்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

கிரீன் மசாலா சப்பாத்தி..



கிரீன் மசாலா சப்பாத்தி..

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கப்

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு - அரை டீஸ்பூன்

நெய் - எண்ணெய் கலவை - தேவையான அளவு

அரைக்க :

புதினா - 1 கைப்பிடி

கொத்தமல்லி - 1 கைப்பிடி

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 2 பல்

பச்சை மிளகாய் - 3

உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :

* புதினா, கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

* அரைக்க எடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துகொள்ளுங்கள்.

* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த விழுது, அதனுடன், நெய், உப்பு தேவையான தண்ணீர் சேர்ந்தது நன்கு மென்மையாக

பிசைந்து அரை மணிநேரம் ஊறவிடவும்.

* பிறகு, இந்த மாவை சிறு உருண்டைகளாக பிரித்து, அதனை சப்பாத்தி கட்டையால் உருட்டி கொள்ளுங்கள்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்த சப்பாத்திகளை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* வாய்க்கு ருசியான கிரீன் மசாலா சப்பாத்தி தயார்.

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

உடல் எடையை குறைக்கும் அவகேடோ பழம்



உடல் எடையை குறைக்கும் அவகேடோ பழம்


தேவையான பொருட்கள்:

அவகேடோ அல்லது வெண்ணெய் பழம் - 3 (கனிந்தது)

தேன் - தேவையான அளவு

குளிர்ந்த பால் - 2 டம்ளர்

ஐஸ் கட்டிகள் - தேவைக்கு

செய்முறை:

* அவகேடோ பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* மிக்ஸியில் அவகேடோ, பால் மற்றும் தேன், ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை மில்க் ஷேக் மிகவும் கடினமாக இருந்தால், இதில் குளிர்ந்த நீர் சேர்த்து அடித்துக் கொள்ளலாம்.

* இப்போது சுவையான அவகேடோ மில்க் ஷேக் ரெடி!!!

உடல் நலனை பேணும் காய்கறிகள்


உடல் நலனை பேணும் காய்கறிகள்


உணவில் காய்கறிகளை சேர்த்து கொள்வது உடலுக்கு பல்வேறு வகைகளில் பலன் தருகிறது. ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது. இதில் பெரும் பாலானவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்களே அதிகம். அதில் சில காய்கறிகளின் பயனை காணலாம்.

*முருங்கைக்காய்:-* ஆண்களின் விந்துவை விருத்தி செய்யும். பெண்களின் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.

*சுரைக்காய்:-* உடல் சோர்வை நீக்கும். வயிற்றில் கொழுப்பை கரைக்கும்.

*உருளைக்கிழங்கு:-* மலச்சிக்கலை போக்கும்.

*வாழைத்தண்டு:-* சிறுநீர் பாதையில் கல் அகற்றும்.

*வாழைப்பூ:-* மலச்சிக்கலை போக்கும்.

*வாழைக்காய்:-* ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.

*குடை மிளகாய்:-* அஜீரணத்தை போக்கும்.

*சவ்சவ்:-* எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.

*வெண்டைக்காய்:-* மூளை வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

*கோவைக்காய்:-* வாய், நாக்கு புண்களை குணப்படுத்தும்.

*சேப்பங்கிழங்கு:-* எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.

எனவேதான், உணவே மருந்து என நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சர்க்கரை நோயாளிகளின் உணவு முறைகள்



சர்க்கரை நோயாளிகளின் உணவு முறைகள்


சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள் உள்ளன. இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

*சாப்பிடக்கூடாத உணவுகள் :*

உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பரங்கிக்காய், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம், சீத்தாப்பழம், சப்போட்டா பழம், தர்பூசணி, பேரிட்சை, எருமைபால், பாலாடை, தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை, முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, பாமாயில், குளிர்பானங்கள், சர்க்கரை, வெல்லம், இனிப்பு பலகாரங்கள், சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், பிரட், பன், கேக், பப்ஸ், ஐஸ்கிரீம், நெய்பிஸ்கட், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், ஊறுகாய், தேங்காய், வேர்கடலை.

*சாப்பிடக்கூடியவை :*

மேற்கண்ட காய்கறிகளை தவிர மற்ற எல்லாக்காய்களையும், கீரைகளையும் சாப்பிடலாம். பீட்ரூட், கேரட் அளவோடு சாப்பிடலாம். ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பேரிக்காய், மாதுளை, சாத்துக்குடி, பப்பாளி, திராட்சை, மோர், பசும்பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால், கோழிக்கறி, மீன்(வறுக்கக்கூடாது), முட்டையின் வெள்ளைக்கரு, சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய், நல்ல எண்ணெய், ஆலிவ் எண்ணெய் (ஒரு நபருக்கு மாதம் ½ லிட்டர் என்ற அளவில்), டீ, காபி (அளவோடு), வெள்ளரி, முளைகட்டி பாசிப்பயிறு, சுண்டல், முந்திரி, பாதாம், வால்நட்.

*நார்ச்சத்து :*

காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பயிர்கள், உலர்ந்த பருப்பு வகைகள் இவற்றில் நார்ச்சத்து உள்ளது. ஆனால், அசைவ உணவு வகைகளில் நார்சத்து இல்லை. நார்ச்சத்தின் அளவு முழு தானியங்களிலும், பழங்களிலுள்ள உட்புறத்தைவிட தோலிலும் அதிகமாக உள்ளது.

நார்ச்சத்துள்ள உணவு மலச்சிக்கல், மூலம் போன்ற நோயை தவிர்த்து உணவின் இயல்பான செரிமானத்தை அளிக்கிறது. நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை, கொலஸ்டிரால் அளவை குறைக்க உதவுகிறது. நார்ச்சத்து உடல் எடையை குறைத்து சீரான எடையை பராமரிக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவு வயிற்றில் போதுமென்ற நிறைவை அளிக்கிறது.

ஒரு நாளைக்கு 30 கிராமிற்கு அதிகமான நார்ச்சத்து தேவைப்படுகிறது.

*நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகள் :*

முழு கோதுமை மாவு(சலித்தல் கூடாது), கேழ்வரகு, ஓட்ஸ், சோளம், துவரம்பருப்பு, பச்சைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பழங்கள், பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர், பாகற்காய், வழைப்பூ, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், முருங்கைக்கீரை, பசலைக்கீரை, பாலக்கீரை, பருப்புக்கீரை, மணத்தக்காளிக்கீரை, பொன்னாங் கண்ணி கீரை, பாதம், பிஸ்தா, முந்திரி போன்றவைகள்.

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

சின்ன சின்ன சமையல் டிப்ஸ்கள்.




சின்ன சின்ன சமையல் டிப்ஸ்கள்.

 🍒 *தயிர் புளிக்காமல் இருக்க...*

தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு 🌴தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் 🙅புளிக்காது.

🍒 *கீரை பசுமையாக ருசியாக இருக்க...*

கீரையை🌿🍃☘ வேகவிடும்போது சிறிது எண்ணெயை🍾 அதனுடன் சேர்த்து வேக வைத்தால் ☘🌿கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

🍒 *முட்டை கெடாமல் இருக்க...*

முட்டைகளை 30-40 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கு, அதன் மேல் ஒரு பிரஷால் சமையல் 🍾எண்ணையை தடவவும்.

🍒 *உருளைக்கிழங்கு கெடாமல் இருக்க...*

உருளைக்கிழங்குகளை🌰 வெங்காயங்களுடன் வைத்தால் அவை சீக்கிரமாக 😦கெட்டுப்போய்விடும். அவ்வாறு அவை கெடாமல் இருப்பதற்கு, அந்த உருளைக்கிழங்குகள் இருக்கும் பைக்குள் ஒரு 🍎ஆப்பிள் பழத்தை வைக்கவும்.

🍒 *ஸ்வீட் செய்த பின்...*

🍩🍰ஸ்வீட் செய்து இரும்பு அல்லது அலுமினியத் தட்டில் தான் கொட்ட வேண்டும். எவர்சில்வர் தட்டு சரிப்படாது.🚫

🍒 *கைகளில் ஏற்படும் வாடையை போக்க*

🌰வெங்காயம் நறுக்கிய🔪 பிறகும், 🌰பூண்டு உரித்த பிறகும் கைகளில் ஏற்படும் 💨வாடையை போக்க கைகளை stainless steel ஸ்பூன்களில் தேயுங்கள்.👍

🍒 *பிரியாணி அடிப்பிடித்து விட்டால்...*

🍲பிரியாணி போன்ற மசாலா கலந்த 🍚அரிசி உணவுகளை செய்யும்போது, உணவு அடிப்பிடித்து விட்டால் அதன்மீது ஒரு 🍞பிரெட் துண்டினை வையுங்கள், தீய்ந்த வாசனை காணாமல் 💁போய்விடும்.

🍒 *பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்க...*

பிஸ்கட்டுகளை டப்பாக்களில் அடைத்து வைக்கும் போது, டப்பாவிற்குள் டிஷ்யூ 🗞பேப்பரை வைத்துவிட்டால், பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்கும்.

🍒  *பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பசையை நீக்க...*

🍽🍴சமைத்த பாத்திரங்களில் இருந்து 🍾எண்ணெய் பசையை எளிதாக சுத்தம் செய்ய அதில் 🍨ஐஸ் க்யூப் ஒன்றை போடுங்கள்.

🍒 *சப்பாத்திகள் மென்மையாக இருக்க...*

🍪சப்பாத்திகள் மென்மையாக இருக்க அதன் மாவை 💧வெந்நீரில் பிசையவும். சிறிது 🍯பாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

🍒 *பூரி நமத்துப் போகாமல் இருக்க...*

🍪பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை🍶 சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக ⏰நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

🍒 *ரசம் மற்றும் சாம்பார் வாசனையுடன் இருக்க...*

🍵ரசம், சாம்பார், கீரை☘🌿 மசியலை இறக்கிய பின், 🌰பெருங்காயத் தூள் போட்டால் மணம் ஊரைத் தூக்கும்.😎

🍒 *கொத்துமல்லி, புதினா துவையல்கள் அரைக்கும் போது,*

💧தண்ணீருக்குப் பதில் சிறிது 🍯தயிர் சேர்த்தால் 😋சுவை தரும்.

🍒 *கத்தரிக்காய் கூட்டு,* *பொரியல் செய்யும்போது*

 கொஞ்சம் கடலை 🍛மாவைத் தூவிப் பாருங்கள். கூட்டு, பொரியல் 😋சுவையாக இருக்கும்.

🍒 *மைக்ரோ வேவ் ஓவனில் உட்புறப் பகுதியைச் சுத்தப்படுத்த*

 ஒரு 🖱கண்ணாடிப் பாத்திரத்தில் அரை மூடி 🍋எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஓவனில் 🕗இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்துத் துடைக்க "பளிச்'சென்று 🔮இருக்கும்.

🍒 *பீட்ரூட் நறுக்கும்போது கைகளில் கறை ஒட்டுவதைத் தடுக்க,*

 பீட்ரூட்டை முழுதாக குக்கரில் வேக வைத்துக் கொள்ளுங்கள். பின்பு தோலை எடுத்துவிட்டு 🔪துண்டுகளாக்கினால் கறை ஒட்டாமல் இருப்பதோடு, காய் நறுக்குவதற்கும் எளிதாக இருக்கும்.👍

🍒 *அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய் அப்பிக் கொண்டிருக்கிறதா?*

கவலை😒 வேண்டாம். டைல்சை சாதாரணத் 👗துணியாலோ அல்லது 🗞டிஷ்யூ பேப்பராலோ துடைத்து எடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு, உலர்ந்த துணியால் 👗துடைத்துப் பாருங்களேன். "பளிச்' 🔮சென்று ஆகிவிடும்.

🍒 *கண்ணாடி பாட்டில் துர்நாற்றம் வீசுகிறதா?*

 கொஞ்சம் 🎋கடுகைப் போட்டு 💧வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்துக் கழுவுங்கள். துர்நாற்றம் போய்விடும்.🙂

 🍒 *கேரட் அல்வா செய்யும்போது*

 கேரட்டைக் கொதிக்கும் 💧தண்ணீரில் போட்டு பின்பு குளிர்ந்த தண்ணீரில் சிறிதுநேரம் வைத்துத் தோலைச் சீவினால் மிகச் சுலபமாகத் தோலை 👍நீக்கிவிடலாம்.

🍒 *வடைக்கு அரைக்கும்போது*

மாவில் 💧தண்ணீர் அதிகமாகிவிட்டால் ஒரு 🍴தேக்கரண்டி நெய் விட்டால் மாவு இறுகிவிடும்.

🍒 *பஞ்சு போன்ற இட்லிக்குக்கு*

 கிரைண்டரில் 🍛உளுந்தம் பருப்பு பாதி மசிந்ததும் ஏழெட்டு 🍨ஐஸ் க்யூப்களைப் போட்டு ⚙அரையுங்கள். மாவும் அதிகம் கிடைக்கும். இட்லியும் பூப்போல🌺 மெத்தென்றிருக்கும்.


நெல்லிக்காயினால் கிடைக்கும் பயன்கள்...



நெல்லிக்காயினால் கிடைக்கும் பயன்கள்...

நெல்லிக்காயின் சுவை பலருக்கு பிடிக்கும். அதே சமயம் அந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும். அதிலும் பெரிய நெல்லிக்காய் தான் மிகவும் நல்லது. ஏனெனில் அந்த நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் நெல்லிக்காய் சாப்பிடுவதால், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளது. அதற்கு அந்த நெல்லிக்காயை சாறாகவோ அல்லது பொடியாகவே பயன்படுத்தலாம்.

இப்படி பயன்படுத்துவதால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைவது, சருமத்தின் பொலிவு அதிகரிப்பது, நரை முடி மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடுவது என்று பல நன்மைகள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, நெல்லிக்காய் சருமத்தில் உள்ள கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரித்து, இளமை தோற்றத்தை தக்க வைக்கும் நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, சரும சுருக்கம் நீங்கி, சருமம் இளமையுடன் காட்சியளிக்கும்.

ஒருசிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு கருமையான திட்டுக்கள் காணப்படும். இது வயதான தோற்றத்தைத் தரும்.
ஆகவே தினமும் நெல்லிக்காய் சாறு பருகி வந்தால், அந்த திட்டுக்கள் மறைந்து, சருமம் பொலிவோடு அழகாக காணப்படும்.அழகைக் கெடுக்கும் வகையில் உடல் எடை அதிகமாக உள்ளதா? அப்படியானால் தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், நெல்லிக்காய் சாற்றினையும் பருகி வர வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும் நாள்தோறும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாற்றினை பருகி வந்தால், அது உடலுக்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் நல்லது. அதிலும் அதில் உள்ள வைட்டமின் சி சத்தினால், முடியின் வலிமை அதிகரித்து, முடி வெடிப்பு, பொலிவிழந்த காணப்படும் கூந்தல் போன்றவற்றை தடுத்து நிறுத்தி, நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம்.

நெல்லிக்காயின் மற்றொரு அழகு நன்மைகளில் ஒன்று தான் நரை முடி பிரச்சனை. அதற்கு தினமும் நெல்லிக்காய் சாற்றினை பருகி வர வேண்டும். இதனால் அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி நரைமுடியை தடுத்து நிறுத்தும். உலகில் இருக்கும் தொல்லையில் பெரிய தொல்லை என்றால் அது பொடுகு தொல்லை என்று தான் சொல்ல வேண்டும். அத்தகைய பொடுகு தொல்லையை நெல்லிக்காய் ஜூஸ் பருகுவதால் தடுத்து நிறுத்தலாம்.நெல்லிக்காய் சாற்றின் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை இரத்தத்தை சுத்தப்படுத்தி, செரிமானத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றி, பிரச்சனை இல்லாத பொலிவான சருமத்தை தரும்.
மென்மையான மற்றும் இளமையான தோற்றத்தைக் கொடுப்பது கொலாஜன் செல்கள் தான்.

ஆனால் வயதாக வயதாக அந்த செல்களின் உற்பத்தி குறைவதால் தான், முதுமைத் தோற்றத்தை அனைவரும் பெறுகிறோம். ஆனால் இந்த கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் நெல்லிக்காய்க்கு உள்ளது. 

கொத்துமல்லி சாதம் செய்முறை



கொத்துமல்லி சாதம் செய்முறை

தேவையானப்பொருட்கள்:

அரிசி - 1 கப்
பச்சை கொத்துமல்லி - 1 கட்டு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
புளி - ஒரு சிறு நெல்லிக்காயளவு
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:

அரிசியைக் கழுவி தேவையான தண்ணீரைச் சேர்த்து உதிர் உதிராக வேக வைத்தெடுக்கவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பருப்பு சிவந்தவுடன் அதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போடவும். இஞ்சியையும் துண்டுகளாக நறுக்கிப் போட்டு வதக்கவும். பின் அதில் புளியைப் போட்டு சற்று வதக்கவும். கடைசியில் கொத்துமல்லியை நறுக்கிப்போட்டு சில வினாடிகள் வதக்கி, இறக்கி வைத்து ஆற விடவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

வாணலியில் மீதி எண்ணையை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், முந்திரிப்பருப்பைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். அத்துடன் சாதம், உப்பு, கொத்துமல்லி விழுது சேர்த்து, அடுப்பை சிறு தீயி,ல் வைத்து, நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

எலுமிச்சம்பழ சாதம்



எலுமிச்சம்பழ சாதம்


தேவையானப்பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
எலுமிச்சம் பழம் - 2
சிவப்பு அல்லது பச்சை மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)
நல்லெண்ணை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:

பச்சரிசியைக் கழுவி, குழைய விடாமல் சாதமாக வேக வைத்தெடுக்கவும். ஒரு தட்டிலோ அல்லது வாயகன்ற பாத்திரத்திலோக் கொட்டி பரப்பி விடவும். அதன் மேல் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் எண்ணையை தெளிக்கவும்.

எலுமிச்சம் பழத்திலிருந்து சாற்றைப் பிழிந்தெடுத்துக் கொள்ளவும். அதில் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பைப் போட்டு இலேசாக சிவக்கும் வரை வறுக்கவும். பின் அத்துடன் முந்திரிப்பருப்பு, மிளகாய் (ஒன்றிரண்டாகக் கிள்ளிப் போடவும்), பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு சற்று வதக்கி, எலுமிச்சை சாற்றில் கொட்டவும். இத்துடன் ஆற வைத்துள்ள சாதத்தைச் சேர்த்து கவனமாகக் கிளறவும்.

குறிப்பு: நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதானால், தாளிப்பிலேயே மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, அதிலேயே சாதத்தையும் கொட்டி சிறு தீயில் வைத்து, ஓரிரு நிமிடங்கள் கிளறி விட்டு, கீழெ இறக்கி வைக்குமுன், எலுமிச்சைச் சாற்றை சேர்த்து கிளறி, இறக்கி வைக்கவும்.

கொத்துமல்லித்தழை மற்றும் சிறிதாக நறுக்கிய காரட் துண்டுகளைத் தூவி அலங்கரிக்கலாம்