புதன், 13 செப்டம்பர், 2017

நண்டு சூப்



நண்டு சூப்

தேவையான பொருட்கள்:


நண்டு - அரை கிலோ

வெங்காயத் தாள் - 3

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 4 பல்

இஞ்சி - ஒரு துண்டு

மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி

கான்ஃப்ளார் - ஒன்றரை தேக்கரண்டி

அஜினோ மோட்டோ - 1 சிட்டிகை

பால் - கால் கப்

வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு



செய்முறை:



* வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை  பொடியாக வெட்டி தனியாக வைக்கவும்.



* பாலில் கான்ஃப்ளாரை கரைத்து வைக்கவும். நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்கவும்.

 பிறகு ஆற விட்டு  ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவும்.



* ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கி வெங்காயத்தாள்,

 பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக  வதக்கிக் கொள்ளவும்.



* வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும்.

கொதிக்கும் பொழுது நண்டு  சதையை போட்டு,

 அஜினோ மோட்டோ, கான்ஃப்ளார் கலந்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்த

 பிறகு ஒரு கப்பில் ஊற்றி மிளகுத்  தூள் தூவி, நறுக்கிய வெங்காயத் தாள் தூவி பரிமாறவும்.

சுவையான நண்டு சூப் தயார்.

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

பாசிப்பருப்பு இட்லி



பாசிப்பருப்பு இட்லி

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 கப்
பச்சரிசி - 1/4 கப்
சர்க்கரை - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
ஏலப்பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
ஆப்பசோடா - 1 சிட்டிகை
நெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* பருப்பு, அரிசி இரண்டையும் தனித்தனியே ஊற வைத்து ஒரு மணி நேரம் கழித்து கரகரப்பாக அரைக்கவும்.

* அதனுடன் தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி, பாதி நெய், ஆப்ப சோடா சேர்த்து நன்றாகக் கலந்து இட்லி மாவு பதத்தில் நீரோ, பாலோ ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.

* நெய் தடவிய இட்லித்தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைக்கவும்.

* வெந்ததற்கு அடையாளமாக ஒரு கத்தியை நுழைத்தால் ஒட்டாமல் வரவேண்டும்.

* துண்டுகள் போட்டு சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

திங்கள், 11 செப்டம்பர், 2017

இனிமேல் வெங்காயத் தோலை தூக்கி போடவே மாட்டீங்க...



இனிமேல் வெங்காயத் தோலை தூக்கி போடவே மாட்டீங்க...

உலகம் முழுவதும் சமையலில் பயன்படுத்தும் ஓர் பொதுவான காய்கறி தான் வெங்காயம். இந்த வெங்காயத்தின் சுவை வித்தியாசமாக இருப்பதோடு மட்டுமின்றி, இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் உள்ளடக்கியது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

பொதுவாக வெங்காயத்தைப் பயன்படுத்தும் போது, அதன் தோலை தூக்கி எறிந்து விட்டு, அதனுள் உள்ளதை தான் பயன்படுத்துவோம். இந்த கட்டுரையைப் படித்த பின், இனிமேல் அந்த வெங்காயத்தை தோலை நீங்கள் தூக்கி எறியமாட்டீர்கள். ஏன் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

*வெங்காய அடுக்குகள் :*

பல அடுக்குகளைக் கொண்டது தான் வெங்காயம். ஆய்வுகளில் வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமான அளவில் இருப்பதாக தெரிவிக்கின்றன. இதனால் இதனை அன்றாட உணவில் சேர்க்கும் போது உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

*ப்ரௌன் நிற வெளி அடுக்கு :*

வெங்காயத்தின் வெளிப்புறத்தில் உள்ள ப்ரௌன் நிற அடுக்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் போன்ற சரும ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் வளமான அளவில் உள்ளன.

*வெங்காய தோல் :*

வெங்காயத்தின் தோலில் உள்ள ஆற்றல்மிக்க நிறமியான க்யூயர்சிடின், தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கும் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், சக்தி வாய்ந்த மயக்க மருந்து பண்புகள் உள்ளன மற்றும் தூக்கமின்மையை சரிசெய்யும்.

*இதர பண்புகள் :*

வெங்காயத் தோலில் ஆற்றல் மிக்க ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை ஏராளமான அளவில் உள்ளன.

*புற்றுநோய் :*

முக்கியமாக வெங்காயத்தின் தோலில் உள்ள சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையை உள்ளடக்கிய க்யூயர்சிடின், புற்றுநோய்க்கு காரணமான செல்களை அழித்து, புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

*குடலியக்கம் :*

ஆய்வுகளில் வெங்காயத்தின் தோலில் இருக்கும் கரையாத நார்ச்சத்து, குடலியக்கத்தின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து, குடல் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுப்பதாக தெரிய வந்துள்ளது.

*நச்சுக்கள் வெளியேறும் :*

அதுமட்டுமல்லாமல், வெங்காயத் தோலில் உள்ள கரையாத நார்ச்சத்து பெருங்குடலில் தேங்கியிருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றும், pH அளவை சீராக பராமரிக்கும்.

*வெங்காயத் தோலின் இதர நன்மைகள் :*

வெங்காயத் தோல் கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கும். அவை:

டைப்-2 நீரிழிவு
இதய நோய்கள்
இரையக குடலிய பிரச்சனைகள்
உடல் பருமன்
குடல் புற்றுநோய்
எப்படி வெங்காயத் தோலை உட்கொள்ளலாம்?

வெங்காயத்தின் தோலை ஸ்டீயூவ் வடிவிலோ, சூப் வடிவிலோ அல்லது தேநீர் வடிவிலோ எடுக்கலாம். இப்போது நாம் வெங்காய தோல் கொண்டு எப்படி டீ தயாரிப்பது என்று பார்ப்போம்.

*வெங்காய தோல் டீ :*

முதலில் வெங்காயத்தின் தோலை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அதில் கொதிக்கும் நீரை ஊற்றி, மூடி வைத்து 15 நிமிடம் கழித்து, அந்நீரை வடிகட்டி, தேன் கலந்து, இரவில் படுக்கும் முன் ஒரு கப் குடிக்க வேண்டும்.

*குறிப்பு :*

வெங்காயத் தோலை கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பயன்படுத்தக்கூடாது.

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

கடலை மிட்டாய் செய்வது எப்படி?



கடலை மிட்டாய் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

வறுத்த நிலக்கடலை : 100 கிராம்

வெல்லம் : ½ கிலோ

செய்முறை

வெல்லத்தை பாகு காய்ச்சவும். பாகு முறுகியதும் வறுத்த கடலை பருப்பை போட்டுக் கிளறவும்.

கலவையை  அரிசி மாவு தடவிய‌ சதுர பலகையில் கொட்டவும்.

சூடு ஆறுமுன் பூரிக்கட்டையால் விரித்து உடனே வில்லைகள் போடவும்.

சுவையான கடலை மிட்டாய் ரெடி.

பலகையில் அரிசி மாவு தடவிக் கொள்ளவதால் கடலை மிட்டாய் பலகையில் இருந்து எளிதாக எடுக்க வரும்.

சனி, 9 செப்டம்பர், 2017

சத்து நிறைந்த சிவப்பு அவல் உப்புமா.



சத்து நிறைந்த சிவப்பு அவல் உப்புமா.


சத்துக்கள் நிறைந்த அவலை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.



*தேவையான பொருட்கள் :*

சிவப்பு அவல் - ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

*செய்முறை :*

🕳 அவலை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

🕳 கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

🕳 கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின், நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதக்கவும்.

🕳 வெங்காயம் நன்றாக வதங்கியதும் அவலை சேர்த்து வதக்கவும்.

🕳 அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி அடுப்பை 'சிம்’மில் வைத்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.

🕳 வெந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.


*சத்தான சிவப்பு அவல் உப்புமா ரெடி.*

சீஸ் ஆம்லெட்



சீஸ் ஆம்லெட்...


*தேவையானவை :*

முட்டை - 2
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
சீஸ் - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொடைமிளகாய், சிவப்பு, மஞ்சள், பச்சை - தலா 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்
பொடித்த மிளகு, உப்பு - சுவைக்கு

*செய்முறை :*

👁‍🗨 முதலில் கொடைமிளகாய், வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி இலையை, பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.

👁‍🗨 ஒரு பவுலில் முட்டை அத்துடன் நறுக்கியவற்றை சேர்க்கவும். சுவைக்கு உப்பு, பொடித்த மிளகு சேர்க்கவும். நன்கு கலந்து  கொள்ளவும்.

👁‍🗨 ஒரு கடாயில் வெண்ணெய் சேர்க்கவும். உருகி வரும் பொழுது முட்டை கலவையை சேர்க்கவும். சிறிது நேரம் மூடி, அடுப்பை மீடியமாக வைக்கவும்.

👁‍🗨 பின்பு திறந்து பிரட்டி விடவும். மேலே சீஸ் தூவவும். பிறகு திறந்து தட்டிற்கு மாற்றி  நறுக்கிய  வெங்காயத்தாள் அலங்கரித்து பரிமாறவும்.

*சுவையான சத்தான சீஸ் ஆம்லட் தயார்.*

முருங்கைப்பூ தேநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?



முருங்கைப்பூ தேநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?


முருங்கையின் இலை, வேர், காய், பிசின், பூ என அனைத்திலும் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

பொதுவாக இந்த முருங்கை இலை மற்றும் பூ கிருத்திகை அன்று முருகனுக்கு படைத்து வழிபடக்கூடிய அளவிற்கு முக்கியத்துவம் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது.

இத்தகைய சிறப்பம்சங்கள் பொருந்திய முருங்கை பூவை தேநீராக பருகினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

👁‍🗨 *முருங்கைப்பூ தேநீர் :*

முருங்கைப்பூவை தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த தேநீர் நன்றாக கொதித்த உடன் இதில் கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனை பாலில் இட்டு கொதிக்க வைத்தும் பயன்படுத்தலாம். இந்த முருங்கைப்பூ தே

👁‍🗨 *நோய் எதிர்ப்பு சக்தி :*

முருங்கைப்பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இது பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது. இதனால் காய்ச்சல், சளி, உடலில் உண்டாகும் பூஞ்சை பாதிப்புகள் தடுக்கப்படுகின்றது.

👁‍🗨 *சிறுநீர் கழித்தல் :*

சிலருக்கு இரவு நேரத்தில் நான்கு, ஐந்து தடவைகள் கூட சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால், இந்த முருங்கைப்பூ தேநீரை பருகலாம்.

👁‍🗨 *வெள்ளைப்போக்கு :*

வெள்ளைப்போக்கு உடலுக்கு தேவையற்ற சுரப்பிகளால் ஏற்படுகிறது. வெள்ளைப்போக்கை கட்டுப்படுத்த இந்த முருங்கைப்பூ தேநீர் பயன்படுகிறது.

👁‍🗨 *சர்க்கரை நோய் :*

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த முருங்கைப்பூ தேநீர் அறுமருந்தாக பயன்படுகிறது. இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.

👁‍🗨 *காய்ச்சல், சளி :*

இந்த முருங்கைப்பூ தேநீரை காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளில் இருந்தும் விடுபட முடிகிறது. உடலுக்கு இது நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

நெத்திலி மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் இவ்வளவு அற்புதமான நன்மைகள்...



நெத்திலி மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் இவ்வளவு அற்புதமான நன்மைகள்...


மீன்களில் மிகவும் மலிவான விலையில் கிடைப்பது தான் நெத்திலி மீன். இந்த மீன் சிறியதாக இருந்தாலும் ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது.

மீன்களில் மிகவும் மலிவான விலையில் கிடைப்பது தான் நெத்திலி மீன். இந்த மீன் சிறியதாக இருந்தாலும் ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது. இதற்கு இந்த மீனை சமைத்த பின், அது மென்மையாகிவிடுவதால், இதனை முட்களோடு சாப்பிடுவதால் தான்.


பொதுவாக மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கும். இந்த மீனில் ஒமேகா-3 அதிகம் இருப்பதோடு, கலோரிகள் குறைவு மற்றும் வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. எனவே விலை மலிவில் கிடைக்கும் இந்த மீனை சாதாரணமாக நினைத்துவிடாமல், வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வாருங்கள்.

இங்கு நெத்திலி மீனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து, இந்த மீனின் அற்புதத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.


நெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

👁‍🗨 *செல்களை பழுதுபார்த்தல் :*

செல்கள்  மற்றும் இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கும், பழுது பார்க்கவும் தேவையான புரோட்டீன் நெத்திலி மீனில் உள்ளது.

👁‍🗨 *சரும ஆரோக்கியம் :*

நெத்திலி மீனில் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்களுடன், வைட்டமின் ஈ, செலினியம், போன்ற சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன. எனவே அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால், சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, சருமம் பொலிவோடு இருக்கும்


👁‍🗨 *வலிமையான பற்கள் மற்றும் எலும்புகள் :*

நெத்திலி மீனில் கால்சியம் வளமாக நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஓர் சத்து. அதுமட்டுமின்றி இதில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

👁‍🗨 *கண் ஆரோக்கியம் :*

நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், கண் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

👁‍🗨 *எடை குறைவு :*

நெத்திலி மீனில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட்டீன் அதிகம் என்பதால், இது உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கும்.



புத்துணர்ச்சி தரும் காய்கறி பழங்கள் மிக்ஸ்டு சாலட்.

புத்துணர்ச்சியுடன்
இருக்க தினமும் காய்கறிகள், பழங்கள் சேர்த்து சாலட் சாப்பிடுவது நல்லது. இன்று பழங்கள், காய்கறிகள் வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

முட்டைகோஸ் - 100 கிராம்,
வெள்ளரிக்காய் - 2,
குடமிளகாய் - 1,
தக்காளி - 3,
ஸ்ட்ராபெர்ரி - 5,
ஆப்பிள் - 1,
திராட்சை - 100 கிராம்,
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்,
உப்பு - சிறிதளவு,
மிளகு தூள் - அரை ஸ்பூன்.


செய்முறை :

ஸ்ட்ராபெர்ரி, தக்காளியை (விதையை எடுத்து விட்டு) நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வெள்ளரிக்காய், குடமிளகாய், ஆப்பிளை பெரிய துண்டுகளாகவும் வெட்டிக்கொள்ளவும்.  

முட்டைகோஸை சற்று பெரிதாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கி காய்கறிகள், பழங்களை சேர்த்து இவற்றுடன் திராட்சையைச் சேர்த்து போட்டு நன்றாகக் கலக்கவும்.

கடைசியாக எலுமிச்சைச் சாறு, உப்பு, தேன், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

சூப்பரான சத்தான காய்கறி பழங்கள் மிக்ஸ்டு சாலட் ரெடி.

செட்டிநாடு ஸ்டைல் பூண்டு புளிக்குழம்பு செய்வது எப்படி?



செட்டிநாடு ஸ்டைல் பூண்டு புளிக்குழம்பு செய்வது எப்படி?

இன்று இந்த குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் - 1/2 கப்
பூண்டு - 10 பல்
புளி - (சிறிய எலுமிச்சை அளவு )
சாம்பார் தூள்(குழம்பு மிளகாய்த்தூள் ) - 3 டீஸ்பூன்
தக்காளி - 2
வெங்காய கறி வடகம் - 1/4கப்

தாளிக்க :

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்.



செய்முறை :

பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி தனியாக வைக்கவும்.

தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி வெந்தயம், சோம்பு சேர்த்து தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நிறம் மாறியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியவுடன் சாம்பார் தூள் அல்லது குழம்பு தூள் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் கரைத்த புளியை சேர்த்து  கொதிக்க விடவும்.

இத்துனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குழம்பு திக்காகும் வரை அடுப்பை மிதமான தீயில் கொதிக்க விடவும்.

மற்றொரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காய கறி வடகத்தை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பொரித்த வடகத்தை குழம்பில் சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் குழம்பை இறக்கவும்.

சூப்பரான செட்டிநாடு புளிக்குழம்பு ரெடி.

செட்டிநாடு புளிக்குழம்பு இட்லி, தோசை, சாதம் அனைத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

சூப்பரான ஸ்நாக்ஸ்: கோதுமை கார மினி தட்டை



சூப்பரான ஸ்நாக்ஸ்: கோதுமை கார மினி தட்டை

கோதுமை மாவில் செய்யும் இந்த கார மினி தட்டை ஸ்நாக்ஸை ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம். இன்று இந்த தட்டையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - ஒரு கப்,
பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு,
மிளகுப்பொடி - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
நெய் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.



செய்முறை :

பாசிப்பருப்பை மலர வேகவைக்கவும் (குழையக் கூடாது).

கோதுமை மாவை லேசாக வறுத்துக்கொண்டு, அதனுடன் வேகவைத்த பாசிப்பருப்பு, மிளகுப்பொடி, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத்தூள், நெய் சேர்த்துப் சீடை மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை சீடை போல் சிறிதாக உருட்டி, கட்டை விரலால் மெலிதாக அழுத்தி தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

கோதுமை கார மினி தட்டை ரெடி.

பூசணி விதை பாதாம் பர்பி



பூசணி விதை பாதாம் பர்பி

பூசணி விதை (Pumpkin seeds) – 1/2 கப்,
பாதாம் – 1/4 கப்,
சர்க்கரை – 3/4 கப்,
நெய் – 3 டேபிள்ஸ்பூன்.
paa
எப்படிச் செய்வது?

உப்பு சேர்க்காத பூசணி விதைகளை வாங்கி வெறும் கடாயில் நன்கு வாசனை வரும் வரை வறுத்து, பொடி செய்து கொள்ளவும். பாதாமை மிதமான சுடுநீரில் 1 மணி நேரம் ஊற வைத்து தோல் எடுத்து நன்கு துடைத்து 1 மணி நேரம் உலர வைக்கவும். ஈரம் போன பிறகு அதையும் பொடித்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான கடாயில் சர்க்கரையை 150 மிலி தண்ணீர் கலந்து வைத்து சூடாக்கவும். சர்க்கரை கரைந்து நன்கு நுரைத்து கொதிக்க வேண்டும்.

பாகுபதத்திற்கு முந்தைய பிசுபிசுப்பு பதம் வரும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்து பாதாம் மற்றும் பூசணி விதை பொடியை போட்டு கைவிடாமல் கிண்டவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து கெட்டியாகி ஓரங்களில் நுரைத்து வரும்பொழுது நெய்யை விட்டு வேகமாக கிளறி நெய் தடவிய தட்டில் பரவலாக ஊற்றி சமப்படுத்தவும். சிறிது ஆறிய பிறகு கத்தியால் கீறி துண்டு போடவும். ஆறிய பிறகு வில்லைகளை பரிமாறவும்.

வெங்காய அடை



வெங்காய அடை


என்னென்ன தேவை?

புழுங்கல் அரிசி - 1 கப்,
பச்சரிசி - 1 கப்,
கடலைப்பருப்பு - 1 கப்,
துவரம்பருப்பு - 1 கப்,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 கப்,
காய்ந்தமிளகாய் - 4,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
கறிவேப்பிலை,
கொத்தமல்லித்தழை - சிறிது.


எப்படிச் செய்வது?

அரிசி வகைகள், பருப்பு வகைகள் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு ஊறவைக்கவும். அரைக்கும் போதே காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள், உப்பு, சோம்பு சேர்த்து அரைக்கவும். பின் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையை சேர்த்து கலக்கவும். தோசைக்கல்லை காயவைத்து அடை மாவை ஊற்றி எண்ணெய் + நெய் சுற்றிலும் ஊற்றி, இருபக்கமும் முறுக விட்டு எடுக்கவும். கதம்ப சாம்பார், தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்.

சூப்பரான ஸ்நாக்ஸ் காலிஃப்ளவர் போண்டா...



சூப்பரான ஸ்நாக்ஸ் காலிஃப்ளவர் போண்டா...

இந்த மழைக்காலத்தில் மாலையில் டீ, காபியுடன் ஏதாவது சூடாக சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று காலிஃப்ளவர் போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கடலை மாவு - 150 கிராம்
அரிசி மாவு - 75 கிராம்
வெள்ளை ரவை - 1 டேபுள் ஸ்பூன்
காலிஃப்ளவர் - 300 கிராம்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - 1/2 கப்
கறிவேப்பிலை - 2 கொத்து
ஓமம் - 1/4 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு - ருசிக்கேற்ப
கடலை எண்ணெய் - பொரிக்க.



செய்முறை :

ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக வெட்டி உப்பு 10 நிமிடம் தண்ணீரில் போட்டு தனியாக எடுத்து வைக்கவும்.

இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், இஞ்சி துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, ஓமம், உப்பு ஆகியவற்றை சேர்த்து அதனுடன் சூடாக காய்ச்சிய கடலை எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து, பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு மாவை கலந்து வைக்கவும்.

கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் சுத்தம் செய்து வைத்த காலிஃப்ளவர் துண்டுகளை மாவில் நன்றாக தோய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

தீயை மிதமான (மீடியம்) தீயில் வைத்து வறுத்து எடுக்கவும். எண்ணெய் சலசலப்பு அடங்கியதும் போண்டாவை எண்ணெயில்லாமல் வடிகட்டி எடுத்து பரிமாறவும்.

சுட சுட காலிஃப்ளவர் போண்டா தயார்.

இஞ்சித் தயிர்..



இஞ்சித் தயிர்..


இஞ்சியில்லாத விருந்து உண்டால் ஏதோ பெரும் விபத்து நேர்ந்துவிட்டதாக நம் மூதாதையர் கருதினார்கள்.

சரித்திரத்திலும் புராணத்திலும் இஞ்சியின் மேன்மை வர்ணிக்கப்படுகிறது.

மலையாள இலக்கியத்தில் புகழ்பெற்ற "பறயி பெற்ற பந்திரு குலங்கள்' என்ற கதையைப் படித்தால் கதை ஆரம்பிக்கும்போதே இஞ்சிக் கறியை ஆயிரம் கறிகளுக்குச் சமமாகப் பாவித்து அதைத் தயாரித்துப் பரிமாறும் பெண்ணை வரருவி என்பவன் தன் மனைவியாக்கிக் கொண்டான் என்கிறது.

சிறுகுடல், பெருங்குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்ய சக்தி வாய்ந்ததுடன் இஞ்சித் தயிர் குடித்தால் மூல வியாதி நீங்கும் எனவும் மருத்துவத் துறை கண்டறிந்துள்ளது.

உணவின் வாயிலாக வயிற்றில் சென்று சேருகின்ற பித்தம், மசாலாக்கள், பழையவை, வேகாதவை முதலியவற்றை ஜீரணிக்கும் சக்தி இஞ்சித் தயிருக்குண்டு.

இஞ்சி, கறிவேப்பிலை, மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து தயிரில் சேர்த்து கலக்கித் தயாரிப்பதே இஞ்சித் தயிராகும்.

குடலைச் சுத்தமாக்கி உடலை வளர்ப்பதில் இஞ்சிக்கு நிகர் இஞ்சியே!

இஞ்சிப் பால்..!



இஞ்சிப் பால்..! இதைச் சாப்பிட்டால்…..

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

வியாழன், 7 செப்டம்பர், 2017

சப்பாத்திக்கு அருமையான பேபிகார்ன் கிரேவி



சப்பாத்திக்கு அருமையான பேபிகார்ன் கிரேவி

 
நாண், புல்கா, சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பேபிகார்ன் கிரேவி. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பேபிகார்ன் - கால் கிலோ,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப,
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒரு டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - ஒன்று,
பெரிய தக்காளி - ஒன்று,
பச்சை மிளகாய் - 2,
மிளகாய்த்தூள், கரம்மசலாத்தூள் - தேவைக்கேற்ப,
தனியாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
சோம்பு - ஒரு டீஸ்பூன்,
செட்டிநாடு பவுடர் (டிபர்ட்மென்ட் கடைகள் கிடைக்கும்) - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, கழுவிய பேபிகார்னை போட்டு 2 நிமிடம் வரை வைத்து பின் தண்ணீரை வடிகட்டி எடுத்து கார்னை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

ஒரு தட்டில் குறிப்பிட்ட அளவு மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது சிறிதளவு சேர்த்து, இதில் நறுக்கிய பேபி கார்னை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசிறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பேபி கார்னை வறுப்பதற்கு முன் கடலை மாவும், அரிசி மாவும் தூவி பிசிறி, நன்கு காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித் தெடுத்து தனியே வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு சேர்த்து பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதம் இருக்கும் இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், செட்டிநாடு பவுடர், நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.

பிறகு இதனுடன் வறுத்த கார்னை சேர்த்து சிறிது நேரம் வதக்கி… இறக்கும்போது கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

இது சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிடுவதற்கு ஏற்ற சைட் டிஷ்.

ரைஸ் கோகனட் புரோட்டா


ரைஸ் கோகனட் புரோட்டா


என்னென்ன தேவை?

கோதுமை மாவு  2 கப்,
துருவிய தேங்காய்   1/2 கப்,
வேகவைத்த சாதம்  1 கப்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  4 (அ) 5,
துருவிய இஞ்சி  1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித் தழை  ஒரு கைப்பிடி,
ஓமம்  1/2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு  1 டீஸ்பூன்,
உப்பு  தேவைக்கு,
எண்ணெய்  1 டேபிள்ஸ்பூன்,
நெய் 2 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கோதுமை மாவை, தண்ணீர் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். இதை பெரிய எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். சாதத்தை மசித்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். இதில் மசித்த சாதத்தை சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். பிறகு தேவையான உப்பு, துருவிய தேங்காய் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைத்து, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி, ஓமம் சேர்த்துக் கலந்து, ஆறியதும் சிறு  உருண்டைகளாக்கவும்.

இதுதான் ஸ்டஃப் செய்ய வேண்டிய பூரணக் கலவை. பிசைந்த கோதுமை மாவை எடுத்து, சிறிய பூரி அளவு இட்டு, நடுவே பூரணக்கலவையை வைத்து மூடி, மாவைத் தொட்டுக் கொண்டு புரோட்டாஇடவும். இதைச் சூடான தோசைக் கல்லில் போட்டு, வெந்ததும் திருப்பி போட்டு, சுற்றிலும் நெய் விட்டு நன்றாக வெந்ததும் எடுத்து, மேலே வெண்ணெய் தடவி சூடாகப் பரிமாறவும். இதற்குத் தொட்டுக் கொள்ள தயிரில் சிறிது சாட் மசாலா தூவி உண்ணலாம்.

ஒவ்வாமையை எதிர்த்து போராடும் சிறந்த உணவுகள் !!



ஒவ்வாமையை எதிர்த்து போராடும் சிறந்த உணவுகள் !!

   
*க்ரீன் டீயில் ஒவ்வாமையை முறிக்கும் சக்தி உள்ளது.
   
*ஒவ்வாமையை கட்டுப்படுத்துவதற்கு வைட்டமின் சியின் உட்கொள்ளல் மிகவும் அவசியம். .
   
*எல்லா விதமான அலர்ஜிக்களுக்கும் மஞ்சள்  ஒரு சிறந்த தீர்வு.

பருவ நிலை மாற்றங்களால் உடலில் பலவித ஒவ்வாமை உருவாகிறது. பலரும் இந்த ஒவ்வாமையினால் பாதிக்கப்படுகின்றனர். நாம் தினசரி எடுத்து கொள்ளும் உணவில் இதனை கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகள் உள்ளன என்பது ஒரு நல்ல செய்தியாகும்.

இந்த வகை உணவுகளில் உள்ள மூலப் பொருட்கள் நோயெதிர்ப்பை அதிகரிக்கவும் ஒவ்வாமையை குறைக்கவும் உதவியாக இருகின்றன.

வீட்டின் சமையலறையில் கிடைக்கும் இந்த பொருட்களை கொண்டு உடல் ஒவ்வாமையை அகற்றி இன்பமாக வாழ்வோம்.

*க்ரீன் டீ :*

ஆன்டிஹிஸ்டமின் என்பது ஒவ்வாமையை முறிக்கும் ஒரு மருந்து ஆகும். இயற்கையாகவே க்ரீன் டீயில் இந்த மருத்துவ குணம் உள்ளது. இந்த தன்மையால் அலர்ஜி உருவாவது தடுக்கப்படுகிறது. இதனை காலையில் ஒரு கப் அருந்துவதால் தும்மல் போன்ற தொல்லைகள் தவிர்க்கப்படும். உடலுக்கு ஒரு சிறந்த அரணாக இந்த க்ரீன் டீ பயன் டுகிறது.

*💧ஆரஞ்சு மற்றும் ஸ்டராபெர்ரி:*

ஒவ்வாமையை கட்டுப்படுத்துவதற்கு வைட்டமின் சியின் உட்கொள்ளல் மிகவும் அவசியம். ஒரு வைட்டமின் மாத்திரையை உட்கொள்வதற்கு ஈடாக 2 ஆரஞ்சு பழம் அல்லது ஸ்ட்ராபெர்ரியை உட்கொள்ளலாம். இது சிறந்த பயனை கொடுக்கும்.இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும், க்யூயர்சிடின் என்ற பிளவனாய்டும் இருக்கின்றது .

*💧பூண்டு:*

அலர்ஜியை ஏற்படுத்தும் ரசாயனத்தை பூண்டு தடுக்கிறது. காலையில் எழுந்ததும் 2 பூண்டு பற்களை சாப்பிடுவது மிகுந்த பலனை கொடுக்கும். குறிப்பாக அலர்ஜி உள்ளவர்கள் இதனை கண்டிப்பாக முயற்சிக்கலாம்.

*💧மஞ்சள்:*

மஞ்சளுக்கான மகத்துவங்கள் பல இருக்கின்றன. இது வீக்கத்தை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டது. எல்லா விதமான அலர்ஜிக்களுக்கும் மஞ்சள் ஒரு சிறந்த தீர்வு.

*💧நட்ஸ்:*

3 அவுன்ஸ் சால்மன் மீன் உட்கொள்ளலும் 1 கையளவு அக்ரூட் பருப்புகள் சாப்பிடுவதும் ஒரே பலனை நல்கும். சைவ உணவை விரும்புகிறவர்கள் அக்ரூட் பருப்புகள் மற்றும் ஆளி விதைகள் உண்பது ஒவ்வாமையை தடுக்க சிறந்த வழியாகும் . ஆளி விதையில் உள்ள செலினியம் என்னும் ஊட்டச்சத்துக்கு ஒவ்வாமையை எதிர்க்கும் ஆற்றல் இருக்கிறது.

*💧காய்கறிகள் :*

க்யூயர்சிடின் என்ற பிளவனாய்டு, அலர்ஜியுடன் இணைந்த வீக்கத்தை குறைக்கும். ஆப்பிள், வெங்காயம், பெர்ரி, மற்றும் காலிப்ளவர் போன்றவற்றிலும் இந்த தன்மை உண்டு.

*💧கொழுப்பு நிறைந்த மீன் :*

இந்த வகை கொழுப்பு மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கின்றன. கானாங்கெளுத்தி , சார்டின் ,சால்மன், டூனா,டிரௌட் பிளூபிஷ் போன்றைவை இந்த வகையில் அடக்கம். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஒவ்வாமைக்கான அறிக்குறிகளை எதிர்த்து போராடுகிறது. பருவ மாற்றத்தால் ஏற்படும் அலர்ஜிகளுக்கு இது சிறந்த தீர்வை தருகிறது.

*💧தேன் :*

மகரந்த ஒவ்வாமை இருப்பவர்களுக்கு தேன் ஒரு மிக சிறந்த நிவாரணி ஆகும். காலையில் ஒரு ஸ்பூன் தேனை சாப்பிடுவதால் உடலுக்கு சகிப்புத்தன்மை கிடைக்கிறது . எல்லாவித ஒவ்வாமையும் தடுக்கப்படுகிறது .

*💧யோகர்ட் :*

யோகர்ட் மாறும் பால் பொருட்களில் ப்ரோபையோடிக் நிறைந்துள்ளன. குடலில் காணப்படும் நல்ல பாக்டீரியாக்களாகிய லக்டோபஸில்லஸ் மற்றும் பிபிடோபாக்டீரியம் ஆகியவை இந்த ப்ரோபையோடிக்களில் அடங்கியுள்ளன. இவை நோயெதிர்ப்பை அதிகரித்து உடல் நலத்தை சீராக்கி, ஒவ்வாமையை எதிர்த்து போராட செய்கிறது.

சத்தான டிபன் சிறு தானிய கொழுக்கட்டை.





சத்தான டிபன் சிறு தானிய கொழுக்கட்டை.


சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கும் மிகவும் நல்லது.


*தேவையானவை :*

சிறு தானிய அரிசிக் குருணை  - ஒரு கப்,
சீரகம் -  ஒரு டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் -  தேவையான அளவு,
கடுகு, கறிவேப்பிலை கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு -  தாளிக்க,
காய்ந்த மிளகாய் -  4.

*செய்முறை :*

💧 வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

💧 இதனுடன் உப்பு, மூன்று கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.

💧 பிறகு சிறுதானி அரிசிக் குருணை சேர்த்து கிளறி வேக விட்டு இறக்கவும்.

💧 ஆறியதும் சிறிய உருண்டைகளாக பிடித்து ஆவியில் 12 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

*சத்தான டிபன் சிறு தானிய கொழுக்கட்டை ரெடி.*