கார தோசை!!
பொதுவாக தோசை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஏனெனில் இதனை செய்து சாப்பிடுவது என்பது மிகவும் எளிதானது அல்லவா? இத்தகைய தோசையில் பல வகைகள் உள்ளன. இப்போது அதில் ஒரு வகையான கார தோசையை எப்படி எளிதாக செய்வதென்று பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள் :
புழுங்கலரிசி - 4 கப்
துவரம் பருப்பு - 1 கப்
வர மிளகாய் - 10
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
பு ண்டு - 12 பல்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - சிறிது
கொத்தமல்லிதழை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
🍪 முதலில் அரிசி மற்றும் துவரம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் அதனை கிரைண்டரில் போட்டு, அத்துடன் வரமிளகாய், புளி, பு ண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு மென்மையாக, தோசை மாவு போல் அரைத்துக் கொள்ளவும்.
🍪 பிறகு அதில் உப்பு மற்றும் கொத்தமல்லிதழை சேர;த்து கலந்து சுமார; நான்கு மணிநேரம் புளிக்க விட வேண்டும்.
🍪 பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல்லானது சு டானதும் மாவை தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான கார தோசை தயார;!!!. இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக