வறுத்த இட்லி!!
இட்லியில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. அதில் வறுத்த இட்லி மிகவும் ருசியானது. இதற்கு எந்த ஒரு சட்னியோ அல்லது சாம்பாரோ தேவையில்லை. அதிலும் இது மாலை வேளையில் குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு உணவு. இப்போது அந்த வறுத்த இட்லியை எப்படி எளிதாக செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
இட்லி மாவு - 3 கப்
இட்லிப் பொடி - 3 டேபிள் ஸ்பு ன்
வெங்காயம் - 3 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித்தழை - சிறிது
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பு ன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
🍝 முதலில் இட்லி மாவைக் கொண்டு, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி, வேக வைத்துக் கொள்ளவும்.
🍝 பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வெங்காயத்தைச் சேர்த்து கறிவேப்பிலையைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
🍝 பிறகு ஊற்றி வைத்துள்ள சிறு சிறு இட்லிகளை, அத்துடன் சேர்த்து, இட்லிப் பொடி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இப்போது அருமையான வறுத்த இட்லி தயார்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக