தக்காளி ஊத்தாப்பம்!!
பொதுவாக தோசையை தான் பலர் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அந்த தோசையை சற்று தடிமனாக ஊற்றினால், அதனையே ஊத்தாப்பம் என்று சொல்வார்கள். பெரும்பாலும் இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு பிடித்த காய்கறிகளை பயன்படுத்தி, ஊத்தாப்பம் செய்து கொடுத்தால், அனைவருமே ஊத்தாப்பத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது அவற்றில் ஒருவகையான தக்காளி ஊத்தாப்பத்தை எப்படி எளிதாக செய்வதென்று பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள் :
இட்லி மாவு - 5 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
கேரட் - 1 கப் (துருவியது)
பட்டாணி - 1 கப் (வேகவைத்தது)
தக்காளி - 1ஃ2 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 6 (நறுக்கியது)
இஞ்சி - 2 டீஸ்பு ன் (துருவியது)
கொத்தமல்லிதழை - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
🍪 முதலில் இட்லி மாவில் இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
🍪 பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, சு டேற்ற வேண்டும். கல்லானது சு டானதும், அதில் எண்ணெய் தடவி, மாவை தடிமனான தோசைகளாக ஊற்றி, அதன் மேல் வெங்காயம், கேரட், பட்டாணி, தக்காளி மற்றும் கொத்தமல்லிதழையை தூவி, எண்ணெய் விட்டு மூடி வைத்து வேக வைக்கவும்.
🍪 பின் 2 - 3 நிமிடம் கழித்து, மறுபக்கம் திருப்பி போட்டு வெந்ததும் எடுத்தால் சுவையான தக்காளி ஊத்தாப்பம் தயார்!!!. இதனை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக