புதன், 1 பிப்ரவரி, 2017

கேரள ஸ்டைல் அப்பம்!!!

கேரள ஸ்டைல் அப்பம்!!!

           கேரள உணவுகள் பொதுவாக அருமையாக இருக்கும். அதிலும் மீன் மற்றும் புட்டு தான் அனைவருக்கும் பிடிக்கும். இதற்கும் நிறைய பிரியர்கள் உள்ளனர். அத்தகைய அப்பத்தை கேரளாவில் போய் சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை வீட்டிலேயே கேரளாவில் சாப்பிடும் சுவைக்கு செய்யலாம். இந்த கேரள ஸ்டைல் அப்பம் எப்படி எளிதாக செய்வது என்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் :

பச்சரிசி - 3 கப்

தேங்காய் - 1 கப் (துருவியது)

இளநீர் - 3

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

🍅 முதலில் பச்சரிசியை 1 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் அதனை கழுவி, கிரைண்டரில் போட்டு, தேங்காய் மற்றும் தேவையான அளவு நீருக்கு பதிலாக இளநீரை ஊற்றி, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

🍅 பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து, அப்ப மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

🍅 பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் விட்டு, பின் ஒரு கரண்டி அப்ப மாவு ஊற்றி, ஒரு துணியால் அந்த வாணலியை எடுத்து, ஒரு முறை வட்டமாக அப்பம் வருவது போல் சுற்றி, பின்பு ஒரு தட்டை வைத்து 2 - 3 நிமிடம் மூடி வேகவைத்து எடுத்தால் சுவையான கேரள ஸ்டைல் அப்பம் தயார்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக