புதன், 1 பிப்ரவரி, 2017

பன்னீர் தோசை !!

பன்னீர் தோசை !!

         தோசையில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ருசி உள்ளது. பெரும்பாலும் தோசையில் மசாலா தோசை என்று உருளைக்கிழங்கை மசாலா போன்று செய்து, அதனை தோசையின் நடுவில் வைத்து, சாப்பிடுவோம். ஆனால் அவற்றில் சற்று வித்தியாசமாக, உருளைக்கிழங்கு மசாலாவுடன் பன்னீரை சேர்த்து செய்வது பன்னீர் தோசை ஆகும். இப்போது அந்த பன்னீர் தோசையை அருமையான சுவையில் எப்படி எளிதாக செய்வதென்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் :

அரிசி - 4 கப்

உளுத்தம் பருப்பு - 1 கப்

உருளைக்கிழங்கு - 5 (வேக வைத்தது)

பன்னீர் - 1 கப் (துருவியது)

வெங்காயம் - 3 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)

கடுகு - 1 டீஸ்பு ன்

சீரகம் - 1 டீஸ்பு ன்

வெந்தயம் - 1 டீஸ்பு ன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பு ன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பு ன்

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

வெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

👉 முதலில் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை நீரில் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு அதனை கிரைண்டரில் போட்டு, மென்மையாக தோசை மாவு பதத்திற்கு அரைத்து, அதில் உப்பு சேர்த்து கலந்து, 4 அல்லது 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

👉 பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின், வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

👉 பின்னர் பன்னீர், மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கி, இறக்க வேண்டும். பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் விட்டு உருகியதும், தோசை ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

👉 பின் அந்த தோசை ஒரு தட்டில் வைத்து, அதில் வதக்கி வைத்துள்ள பன்னீர் கலவையை சுற்றி வைத்து, சுருட்டி பரிமாறினால் சுவையான பன்னீர் தோசை தயார்!!! இதனை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக