புதன், 1 பிப்ரவரி, 2017

கைக்குத்தல் அரிசி இட்லி!!

கைக்குத்தல் அரிசி இட்லி!!

    நீரிழிவு நோயாளிகள் எந்த ஒரு உணவையும் எளிதில் சாப்பிட முடியாது. எதை சாப்பிட நினைத்தாலும், அதற்கு முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். முக்கியமாக இத்தகையவர்கள், அரிசியை உணவில் அதிகம் சேர்க்கவே கூடாது என்று சொல்வார்கள். ஆனால் கைக்குத்தல் அரிசியால் ஆன இட்லி, மிகவும் சிறந்த ஒரு காலை உணவாகும். கைக்குத்தல் அரிசி இட்லி சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த கைக்குத்தல் அரிசி இட்லியை எப்படி எளிதாக செய்வதென்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் :

கைக்குத்தல் அரிசி - 3 கப்

உளுத்தம் பருப்பு - 1 கப்

அவல் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :

👉 முதலில் கைக்குத்தல் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் அவலை தனித்தனியாக நன்கு கழுவிக் கொள்ளவும். பின் ஒவ்வொன்றையும் 3 கப் தண்ணீர் ஊற்றி, 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

👉 பிறகு அதனை கழுவி தனியாக வைத்து கொள்ளவும். முதலில் அரிசியை கிரைண்டரில் போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் உளுத்தம் பருப்பு மற்றும் அவலை தனியாக நன்கு நைஸாக அரைத்து விட்டு, மூன்றையும் ஒன்றாக மீண்டும் கிரைண்டரில் போட்டு, 10 நிமிடம் நன்கு கலந்து கொள்ளவும்.

👉 பின்பு அதனை 4 மணிநேரம் புளிக்க வைத்து, உப்பு போட்டு கலந்து கொள்ளவும். பிறகு இந்த மாவினை இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி எடுத்தால் சுவையான கைக்குத்தல் அரிசி இட்லி தயார்!!! இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக