வியாழன், 16 பிப்ரவரி, 2017

உடலுக்கு வலுவைச் சேர்க்கும் கொள்ளு ரசம்.

உடலுக்கு வலுவைச் சேர்க்கும் கொள்ளு ரசம்.

உடலுக்கு ஆரோக்கியத்தையும், எடையை குறைக்கவும், சளி மற்றும் இருமலுக்கு சிறந்ததுமான கொள்ளு ரசம்.

*தேவையான பொருட்கள்:*
கொள்ளு - 1/2 கப்
தக்காளி - 2 (அரைத்தது)
பூண்டு - 3 பல்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
புளி சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 4-5
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

*செய்முறை :*

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளுவை போட்டு, நன்கு வறுக்கவும். பின் அதனை ஆற வைத்துக் கொள்ளவும்.

பிறகு குக்கரை அடுப்பில் வைத்து அதில் வறுத்து வைத்துள்ள கொள்ளு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து, 2-3 விசில் விட்டு இறக்கவும்.

பின்னர் புளி சாற்றில் சர்க்கரையைப் போட்டு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின் மிக்ஸியில் சீரகம், மிளகு மற்றும் பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, வர மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, தாளித்துக் கொள்ளவும்.

பின் அதில் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, சிறிது நேரம் வறுக்கவும். பிறகு அதில் புளி நீரை ஊற்றி, அரைத்து வைத்துள்ள தக்காளியைப் போட்டு, வேக வைத்துள்ள கொள்ளு மற்றும் உப்பு சேர்த்து, நன்கு 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

இப்போது உடலுக்கு வலுவைத் தரும் கொள்ளு ரசம் ரெடி!!!

இதன் மேல் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியைப் போட்டு சிறிது நேரம் மூடி, பின்னர் பரிமாறவும்.

வெண்டைக்காய் சாதம்.


வெண்டைக்காய் சாதம்.

*என்னென்ன தேவை?*

வெண்டைக்காய் - 10,
வடித்த சாதம் - 1 கப்,
கெட்டியான புளிக்கரைசல் - 1 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் -  அரை டீஸ்பூன்,  மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்,
பட்டை - 2, முந்திரி - 10,
கடுகு - 1  டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.

*எப்படிச் செய்வது?*

வெண்டைக்காயை இரண்டாகப் பிளந்து வந்துவிடாமல் லாவகமாக வகிர்ந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து, வெண்டைக்காய்களை 2 நிமிடங்கள் வதக்கவும்.

லேசாக வெந்ததும், அதில் மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.  குறைந்த தணலில் வைத்து, மசாலா வெண்டைக்காய் முழுவதும் படிகிற படி வதக்கித் தனியே எடுத்து வைக்கவும்.

இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, பட்டை, முந்திரி, மஞ்சள் தூள் சேர்த்துப் பொன்னிறத்துக்கு வறுக்கவும்.

இதில் சாதம், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி, வெண்டைக்காய் மசாலாவையும் சேர்த்துக் கிளறவும். குறைந்த தணலில், சாதம், மசாலா எல்லாம் சேர்ந்து வரும்படி 4 நிமிடங்களுக்குக் கலந்து பரிமாறவும்.

மலபார் ஸ்டைல் நெய் சாதம்.*



மலபார்டைல் நெய் சாதம்.


*தேவையான பொருட்கள் :*

பாசுமதி அரிசி - 2 கப்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 1
ஏலக்காய் - 2
பட்டை - 1 இன்ச்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (துருவியது)
முந்திரி - 5
உலர் திராட்சை - 5
பாதாம் - 5
உப்பு - தேவையான அளவு

*செய்முறை :*

முதலில் அரிசியைக் கழுவி, தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, உலர் திராட்சை மற்றும் பாதாம் போட்டு 2 நிமிடம் வறுத்து, அதனை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதே நெய்யில், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை போட்டு வதக்க வேண்டும்.

அடுத்து, நறுக்கிய வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கி, பின்னர் அதில் கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு 2 நிமிடம் வதக்கி, கேரட் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறி, பின் 3 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பிறகு விசில் போனதும் திறந்து, அதன் மேல் வறுத்து வைத்துள்ள பாதாம், முந்திரி மற்றும் உலர் திராட்சை போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

இப்போது மலபார் ஸ்டைல் நெய் சாதம் ரெடி!!!



வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

5 நாட்கள் வரை பழங்களைக் கெட்டுப் போகாமல் வைத்துக் கொள்வது எப்படி?

5 நாட்கள் வரை பழங்களைக் கெட்டுப் போகாமல் வைத்துக் கொள்வது எப்படி?

வாழைப்பழங்கள் கெட்டுப் போகாமல் 5 நாட்கள் வரை நற்பதமாக இருக்க ஓர் எளிய வழி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. பழங்களை நீண்ட நாட்கள் நற்பதமாக வைத்துக் கொள்வது என்பது சற்று கடினமானது தான். குறிப்பாக வாழைப்பழத்தை 2 நாட்களுக்கு மேல் வீட்டில் வைத்திருந்தால், அது அழுக ஆரம்பித்துவிடும்.ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு வாழைப்பழத்தைப் பராமரித்து வந்தால், வாழைப்பழங்கள் கெட்டுப் போகாமல் 5 நாட்களுக்கு மேல் நன்றாக இருக்கும். சரி, இப்போது அது எப்படி என்று காண்போம். ஸ்டெப் #1 முதலில் வாழைப்பழங்களைத் தனித்தனியாக பிரித்துக் கொள்ள வேண்டும். ஸ்டெப் #2 பின்பு பிளாஸ்டிக் கவரை எடுத்துக் கொள்ள வேண்டும். ஸ்டெப் #3 வாழைப்பழங்களை படத்தில் காட்டியவாறு, மேல் பகுதியில் பிளாஸ்டிக் கவரைச் சுற்றிக் கொள்ளுங்கள். இதனால் வாழைப்பழங்கள் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். வாழைப்பழம் விரைவில் பழுக்க...  வேண்டுமானால், அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வையுங்கள். இதனால் அதிலிருந்து எத்திலின் வாயு அதிகம் வெளியேறி, விரைவில் பழுக்கச் செய்யும். ஆப்பிள், அவகேடோ ஆப்பிள், அவகேடோ போன்ற பழங்களை நறுக்கிய பின், அதன் நிறம் மாறாமல் நற்பதமாக இருக்க, அதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றினைத் தெளித்து, பின் பிளாஸ்டிக் கவரால் சுற்றிக் கொள்ளுங்கள். மேலும் சில... தக்காளி இல்லாமல் சமைப்பது என்பது முடியாத ஒன்று. ஆகவே பலரும் தக்காளியை அதிகளவில் வாங்கி வைத்துக் கொள்வோம். நம்மில் பலரும் தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் அது தான் தவறு. தக்காளியை ஒரு அகன்ற பாத்திரத்தில் பேப்பர் விரித்து வைத்து, அதை காற்றோட்டமான மற்றும் ஈரப்பதமில்லாத இடத்தில் வைத்துப் பராமரித்தால், நீண்ட நாட்கள் நற்பதமாக இருக்கும்.

அருகம்புல்காபி

அருகம்புல்காபி

#ஆரோக்கியமானவாழ்க்கை 

இன்றைய கால சூழ்நிலையில் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ அருந்தினால்தான் உடலில் புத்துணர்வும் சுறுசுறுப்பும் ஏற்படும் என்ற பழக்கத்திற்கு அடிமையாகி விட்டோம். இது மேலை நாட்டு கலாச்சார பழக்கமாகும்.
காபி -டீ அருந்துவதால் நிறைய தீமைகள் உண்டு என அறிந்தும் அதன் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் உள்ளவர்களுக்கும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கும் சித்த மருத்துவ முறையில் ஒரு அருமையான மூலிகை காபி செய்முறை :

தேவையான மூலிகை பொருட்கள் :

1 - ஏலரிசி - 25-கிராம்
2 - வால்மிளகு - 50 கிராம்
3 - சீரகம் - 100-கிராம்
4 - மிளகு - 200 -கிராம்

இவைகளை வெயிலில் நன்கு காயவைத்து தனித் தனியே இடித்து தூள் செய்து பிறகு ஒன்று சேர்த்து இடித்து கலந்து கொள்ளவும். இது அருகம் புல் காபிக்கு பயன்படும் பொடி ஆகும்.

நீண்ட கொடி அருகம்புல்லை வேர்,தழை இல்லாமல் தண்டுப் பகுதியாக இரண்டு கைப்பிடி அளவு எடுத்து மிகச்சிறியதாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு 500- மிலி நீர் விட்டு அடுப்பில் வைத்து சூடு ஏறியதும் மேலே கூறிய பொடியில் 2-டீஸ்பூன் போட்டு கலந்து நன்கு கொதிக்க வைத்து 200 -மிலி அளவில் வற்றிய பிறகு வடி கட்டி எடுத்து இதனுடன் 200 -மிலி காய்ச்சிய பால் கலந்து சர்க்கரை சேர்த்து காலையில் தினமும் சாப்பிட்டு வரலாம்.

காபி ருசியும், பூஸ்ட் கலந்த ருசியும் போல் இனிமையாக இருக்கும். இதனால் நோய்கள் என்ற பயமே இல்லாமல் வாழலாம் பல விதமான நோய்கள் கட்டுப்படுகின்றன.

இந்த அருகம் புல் காபியைத் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். நீண்ட நாள் ஆங்கில மருந்துகள் உட்கொண்ட விஷத்தன்மை உடலை விட்டு நீங்குகின்றது. நரம்புத்தளர்ச்சி நீங்கும், அதிக பித்தம், பித்த மயக்கம், நெஞ்செரிச்சல் நீங்கும். குடல் சுத்தமாகும், மூளை வலுவடைந்து நினைவாற்றல் பெருகுகின்றது.

உடலின் உட்சூடு மறையும், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் சீராகும், வெள்ளைப்படுதல், அடி வயிறு கனத்தல், தொடை நரம்பு இழுத்தல் யாவும் குணமாகும்.

குழந்தைகள் சாப்பிட்டு வர சுறுசுறுப்பாக இருப்பார்கள், கணை, மாந்தம் (பிரைமரி காம்ப்ளக்ஸ்)ஏற்படாது.பசி நன்கு எடுக்கும் சாப்பிடும் உணவுகளின் சத்து உடலில் சேரும்.

புண்களைஆற்றும்குப்பைமேனிகீரை

#புண்களைஆற்றும்குப்பைமேனிகீரை !!!

மழைக்காலங்களில் சாலையோரங்களில் எளிதில் வளரக்கூடிய கீரை, ‘குப்பைமேனி’. பூனைக்கு இந்த செடி மீது அதிகம் விருப்பம் என்பதால், இதற்கு ‘பூனை வணங்கி’ என்றும் ஒரு பெயர் இருக்கிறது.

குப்பைமேனிக் கீரை, ஒருவகையான கசப்பும் கார்ப்பும் கலந்த சுவை கொண்டது. பல் நோய், தீப்புண், தாவர வகை நஞ்சு, வயிற்று வலி, வாதநோய்கள், மூலம், நமைச்சல், மூச்சிரைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல் போன்ற பிரச்னைகளுக்கு அருமருந்து.

குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து, ஒன்று முதல் நான்கு தேக்கரண்டி வரை சிறுவர்களுக்கு கொடுத்துவந்தால்,  வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்து மலம் வழியாக வெளியேறும்.

குப்பைமேனிச் சாற்றை, பெரியவர்களுக்கு 15 மி.லி முதல் 30 மி.லி-யும், சிறுவர்களுக்கு ஒரு தேக்கரண்டி வீதமும் குடிநீராகச் செய்துகொடுக்கலாம்.  இதன் மூலம், வாந்தி உண்டாகி, உடல் சூடு தணிந்து, உடலில் உள்ள பித்தம் குறையும்.

#குப்பைமேனி இலையைப் பொடி செய்து, வெள்ளைப்பூண்டு சேர்த்து, ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி வரை குழந்தைகளுக்குக் கொடுத்தால், குழந்தைகள் வயிற்றில் இருக்கும் புழுக்கள், மலம் வழியாக வெளியேறும். இதனுடைய இலைப் பொடியை ஒரு கிராம் அளவுக்கு எடுத்து சாப்பிட்டு வந்தால், இருமல் மற்றும் கபம் நீங்கும்.

#நோய்வாய்ப்பட்டு நீண்ட நாட்களாகப் படுக்கையிலேயே கிடந்து, படுக்கைப்புண் வந்தவர்களுக்கு, குப்பைமேனி இலைப் பொடி நல்ல மருந்து. புண் இருக்கும் இடத்தில் பொடியை வைத்துக் கட்டுப்போட, புண்கள் ஆறும்.

#குப்பைமேனி இலையை தனியாகவோ மஞ்சள் பொடி சேர்த்தோ புண்களின் மேலும், விஷக்கடி ஏற்பட்ட இடத்திலும் தடவிவர, புண்கள் குணமாகும்.

#குப்பைமேனி இலையுடன் உப்பு சேர்த்து, சொறி, சிரங்கு இருக்கும் இடத்தில் நன்றாகத் தேய்த்து குளித்துவர, நல்ல குணம் தெரியும்.
நீரில், இதன் இலையைப் போட்டு,  கொதிக்கவைத்து, கஷாயமாகச் செய்து, அதனுடன் உப்பு சேர்த்துக் குடித்துவந்தால், மலம் இளகும்.

#குப்பைமேனி இலையை, சுண்ணாம்புடன் சேர்த்து அரைத்து, மூட்டு வீக்கங்களுக்குக் கட்டு போடலாம். காது வலி இருப்பவர்கள் இந்த கலவையைக் காதைச் சுற்றி பூச வேண்டும்.

#குப்பைமேனியைச் சாறு எடுத்து, தலைவலி வந்தால் பூசலாம். குழந்தைகளுக்கு நாட்பட்ட இருமல் இருந்தால், இந்த இலைச் சாற்றை சுண்டக்காய்ச்சி, மெழுகுப்பதத்தில் எடுத்து, கால் முதல் அரை தேக்கரண்டி (130 மி.கி முதல் 260 மி.கி) கொடுக்கலாம். இருமல் சட்டென நிற்கும்.

#குப்பைமேனி இலைச் சாறு எடுத்து நல்லெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி,  உடலில் வலி இருக்கும் இடங்களில் தடவிவர, வலி குணமாகும்.

பயனுள்ள இயற்கை வைத்தியம்:-

பயனுள்ள இயற்கை வைத்தியம்:-


சின்ன சின்ன உணவுப் பொருட்கள் மூலம் நாம் சிறப்பான பலன்களை பெறமுடியும். நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்களின் மகத்துவத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். இதனால் ஆயுள் அதிகரிக்கும்.

* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

* சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் நன்றாகத் தேய்த்து வர உடம்பு வலி நீங்கும்.

* துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.

* தொண்டையில் புண், வலி ஏற்பட்டால் கொஞ்சம் சித்தரத்தைப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிடவும். தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.

* அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம்
இயற்க்கை மருத்துவம் :-

அஜிரணம் குணமாக:
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

… வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளை க்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடு த்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணி ந்து ஆறும்.

நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வர வும்.

பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு.,
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காய வைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண் டும்.
உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகு போலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண் ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணிமீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.
தலையில் முடிவளர,முடி உதிர்வதைத் தடுக்க, இளநரை மறைய .– இய‌ற்கை வைத்தியம்:_

1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.

4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.
மாத விலக்கு பிரச்சனைக்கு முலிகை மருத்துவம் —

இய‌ற்கை வைத்தியம்:-

*எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்னை தீரும்.

*கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

*கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் எடுத்து பொடித்து கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் 5 கிராம் பொடியை போட்டு கொதிக்க விட்டு கஷாயமாக்கி குடித்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும். அதிக ரத்தப் போக்கும் நிற்கும்.

*கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.

*கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து காலை, மாலை இரண்டு வேளை யும் சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.

*கல்யாண முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.

*கீழாநெல்லி வேரை இடித்து சாறு பிழிந்து, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.

*கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமடையும்.
இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்

வீட்டு மருத்துவக் குறிப்புகள்- இய‌ற்கை வைத்தியம்:-

1) செருப்புக்கடி புண்ணுக்கு

தென்னை மரக் குருத்தோலையை அல்லது குருத்தோம்பை (தென்னம்பூவு தோன்றிய பின் உருவாகும் சிறு சிறு காய்) நெருப்பில் சுட்டுக் கரியாக்கி தேங்காய் எண்ணெயில் குழப்பி புண்ணில் தடவி வர குணமாகும்.

2) மூட்டுவலி, மூட்டு வீக்கம் குணமாக

கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு. இம்மூன்றையும் சரிபங்கு எடுத்து நீர்விட்டு அரைத்து, சுடவைத்து பொறுக்கும் பக்குவத்தில் சிறிது கற்பூரம் கலந்து வலி உள்ள இடங்களில் தடவ உடன் பலன் கிடைக்கும்.
3) புணகளுக்கும், சிரங்குக்கும் தைலம்

1. ஊமத்தை இலைச்சாறு (300 மிலி), தேங்காய் எண்ணெய் (100 மிலி), நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் மயில் துத்தம் (2 கிராம்) இலைச்சாற்றில் மயில் துத்தத்தைக் கரைத்து எண்ணெய் சேர்த்து அடுப்பிலேற்றி சாறு வற்றும் வரைக் காய்ச்சி வடிகட்டி, ஆறியவுடன் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தடவி வர எப்படிப்பட்ட நாட்பட்ட புண்ணானாலும் விரைவில் குணமாகும். அறுவை சிகிச்சை செய்தப் புண்களுக்குக் கூட இது மிகவும் சிறந்த பலன் தருகிறது. இத்தைலம் அடர் பச்சை நிறத்தில் இருக்கும்.

2. எருக்கிலைச் சாறு (100 மிலி), தேங்காய் எண்ணெய் (100 மிலி), மஞ்சள்பொடி (3 கிராம்). இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து சாறு வற்றும் வரை அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி, வடிகட்டி ஆறியவுடன் கரப்பான் புண், அடிபட்ட புண், சிரங்கு, பொடுகுப் புண் ஆகியவைகளுக்கு வெளியே தடவி வர மிகச் சிறந்த பலனைத் தரும்; விரைவில் குணமாகும்.
4) பித்த தலைச்சுற்று, கண் எரிச்சல்

கொத்தமல்லி விதை (பத்து கிராம்), சீரகம் (பத்து கிராம்), நல்லெண்ணெய் (200 மிலி). அடுப்பில் சீரகம் நன்கு கருஞ்சிவந்த நிறத்தில் வரும் வரை காய்ச்சி (எண்ணெய் சூட்டிலேயே சீரகம் கருஞ்சிவப்பு நிறம் வரும்) பின் வடிகட்டி தலைக்குத் தேய்த்து நன்கு குளித்து வர உடன் தீரும். இரத்த அழுத்த நோயாளிகள் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தல் மிகவும் நல்லது. தினசரி தலையிலும் சிறிது தடவி வர மிகவும் நல்லது.
5) காதில், ஈ, எறும்பு நுழைந்துவிட்டால்

1. வீட்டருகே தானாக முளைத்து கிடக்கும் குப்பைமேனி எனும் செடியின் இலைச் சாற்றினை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட ஈ அல்லது எறும்பு உடனே வெளிவரும் அல்லது இறந்து போகும்.

2. சுத்தமான நீரில் சிறிது உப்பு சேர்த்து உப்பு நீராக்கி அதை மூன்று அல்லது ஐந்து துளி காதில் விட உடன் பலன் கிடைக்கும்.

6) உடன் தீப்பட்ட புண்ணுக்கு…

1. தீப்பட்டவுடன் சோற்றுக்கற்றாழை என்னும் குமரியை அதன் உள்ளிருக்கும் குழகுழப்பான சோற்றினை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்ட எரிச்சல், காந்தல் உடன் தீரும். இதேபோல செம்பருத்தி இலை, பூ எடுத்து அரைத்தும் தடவலாம்.

2. வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அரைத்து பற்று போட உடன் காந்தல், எரிச்சல் தீரும்.

3. ஊமத்தை இலையை வெண்ணெயில் அரைத்துப் போட எரிச்சல் தீருவதுடன் புண்ணும் எளிதில் ஆறும்.

4. கருவேலம் பிசின் (அ) வெண் குங்கிலியம் என்னும் மருந்துச் சரக்கை தேங்காய் எண்ணெயில் சூடுசெய்து, அதில் கரைந்தவுடன் ஆறிய பின்பு தடவ எரிச்சல் தீரும். (இது நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்).

7) கை-கால்களில் ஏற்படும் பித்தவெடிப்பு நீங்க

1. தேங்காய் எண்ணெய் (200 மிலி), விளக்கெண்ணெய் (200 மிலி), கடையில் கிடைக்கும் வெண் குங்கிலியம் (35 கிராம்), சாம்பிராணிப்பொடி (10 கிராம்). தேன்மெழுகு (60 கிராம்). எண்ணெயை சூடு செய்து அதில் குங்கிலியம், சாம்பிராணி ஆகியப் பொடிகளை கலந்து, நன்கு கரைந்தவுடன் தேன்மெழுகு சேர்த்து நன்கு கலக்கி ஆறவைக்க களிம்பாகி இருக்கும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் இரவு படுக்கும் முன் தடவி வர பித்தவெடிப்பு உடன் தீரும்.

2. கிளிஞ்சில் சுண்ணாம்புப் பொடி, விளக்கெண்ணெய் இவை இரண்டும் தேவையான அளவு கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து பசையாக்கி பாதிக்கபட்ட இடத்தில் தடவிவர உடன் தீரும். விளக்கெண்ணெய் அதிகமாக சேர்க்காமல் பசையாகும் அளவு மட்டும் குறைவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை இரு வேளை தடவிவர உடன் தீரும்.
தலைமுடி வளரவும், முடி உதிராமல் இருக்கவும்

1. நெல்லிக்காய்ச் (பெரிது) சாறு கால் லிட்டர், மஞ்சள் சரிசாலைச் சாறு கால் லிட்டர், வெந்தயம் ஐந்து கிராம், வெந்தயத்தை அரைத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி தொடர்ந்து தலைக்குத் தேய்த்து வர தீரும்.

2. தேங்காய்ப் பால் ஒரு லிட்டர், சீரகம் இருபது கிராம், தேங்காய் எண்ணெய் நூறு மி.லி., நன்னாரி வேர்ப்பொடி பத்து கிராம், எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி, பின் வடிகட்டி தொடர்ந்து தலைக்குத் தேய்த்துவர நல்ல பலன் கிடைக்கும்.

9) உள்நாக்கு வளர்ச்சிக்கு

வெள்ளைப் பூண்டை நன்கு அரைத்து, வெள்‍ளைத் துணியில் தடவி சிறிது நேரம் துணியை விளக்கில் வாட்டி பிழியச் சாறு வரும். இச்சாற்றுடன் தேன் சரிபங்கு கலந்து கொண்டு உள்நாக்கில் தடவியும், நான்கு துளி வீதம் தொண்டையில் படும்படி விழுங்கியும் வர குணமாகும்.

10) உஷ்ண நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உடன் தீர

1. நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் வெங்காரம் என்னும் மருந்தை சட்டியில் இட்டு பொரித்து, பொடித்துக் கொண்டு, அரைத் தேக்கரண்டி வீதம் இளநீரில் கலந்து பருகி வர உடன் தீரும்.
2. யானை நெருஞ்சில் (பெரும் நெருஞ்சில்) என்னும் செடியின் இலையைப் பறித்து அதை பாத்திரத்திலிட்டு அது மூழ்குமளவு நீர்விட்டு, 15 நிமிடங்கள் கழித்து வடிகட்ட நீர் ஜெல்லி போலாகும். இதை இரண்டு டம்ளர் வீதம் பருகி வர உடன் குணமாகும்.
3. மண்பாண்ட நீரில் இரண்டு டம்ளரில், தேன் ஒரு தேக்கரண்டி, ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு, அரைத் தேக்கரண்டி உப்பு ஆகியன கலந்து பருக உடன் தீரும்.

11) கக்கூஸ் படை, தேமல், சொறி ஆகியன குணமாக

1. சீமை அகத்தியிலை, கற்பூரம் சிறிதளவு இரண்டையும் எலுமிச்சைப் பழச்சாறு விட்டு அரைத்து தடவி வர குணமாகும்.
2. குப்பைமேனி இலையை உப்பு சேர்த்து நீர்விட்டு அரைத்து பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.
3.அவுரி இலை, அல்லது சென்னா இலையை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து தடவி வர குணமாகும்.
4. மிளகுப் பொடியை வெங்காயச் சாறு விட்டு அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.

12) பேன், பொடுகு, தலை ஊரல் தீர

1. பொரும் வெற்றிலை அல்லது மலையாள வெற்றிலைச் சாறு (300 மிலி). இம்மூன்றையும் ஒன்றாக கலந்து அதில் பேன் கொல்லி விதை, கோஷ்டம், அதிமதுரம், குன்றிமணி விதை எல்லாம் பத்து கிராம் வீதம் எடுத்து, இவை நான்கையும் பொடித்து சாறுவிட்டு அரைத்து மேற்கூறிய எண்ணெயில் கலந்து சாறு வற்றும் வரை நன்கு காய்ச்சி வடிகட்டி தலைக்குத் தேய்த்து வர வருடக்கணக்கிலுள்ள பேன் தொல்லைகளும் உடன் தீரும்.

2. மருதோன்றிச் சாறு (100 மிலி), படிகாரம் (அ) சீனாக்காரம் (5 கிராம்), மருதோன்றிச் சாற்றில் இதைக் கரைத்து தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளித்துவர பேன் தொல்லை தீரும்.

13 ) அரையிடுக்கிலுள்ள அரிப்புத் தேமல், கரும்படை குணமாக

மிளகு, நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வெண்காரம் இரண்டையும் 25 கிராம் அளவில் எடுத்து, பசு நெய் விட்டு நன்கு மையாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து தடவி வர குணமாகும்.