வெள்ளி, 27 ஜனவரி, 2017

பன்னீர் 65.

பன்னீர் 65.

சிக்கன் 65, கோபி 65 பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் பன்னீர் 65 கேள்விப்பட்டதுண்டா? ஆம், இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமான சுவையில் இருக்கும்.

இன்று மாலை நீங்கள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் ஏதேனும் செய்து சுவைக்க நினைத்தால், பன்னீர் 65 செய்து சுவையுங்கள்.

*தேவையான பொருட்கள்:*

பன்னீர் - 200 கிராம்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

*மாவிற்கு...*
மைதா - 1 1/2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

*செய்முறை :*

முதலில் பன்னீரை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் 'மாவிற்கு' கொடுத்துள்ள பொருட்களை அனைத்தையும் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு அந்த மாவில் பன்னீர் துண்டுகளைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

எண்ணெய் சூடானதும், பன்னீர் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பன்னீர் 65 ரெடி!!!

ரவா கேசரி

ரவா கேசரி 

*தேவையான பொருட்கள்:*

ரவை : 200 கிராம்
சர்க்கரை : 200 கிராம்
தண்ணீர் : 400 மி.லி.
நெய் : தேவையான அளவு
முந்திரி பருப்பு :  தேவையான அளவு (தோராயமாக‌ 10)
ஏலக்காய் : தேவையான அளவு (தோராயமாக‌ 4)
கேசரி பவுடர் : சிறிதளவு

*செய்முறை :*

வாணலியில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு ரவையை  வறுக்கவும். முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து வைக்கவும்.

வாணலியில் தண்ணீர் கொதித்ததும் கேசரி பவுடர் சேர்க்கவும். பின் சிறிது சிறிதாக ரவையை சேர்க்கவும். ரவை கட்டிவிழாமல் நன்கு கிளறவும்.

ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை போடவும். சர்க்கரை நன்கு இளகி கெட்டிப்படத் துவங்கும். கேசரி அடிபிடிக்காமல் இருக்க, விடாமல் கிளற வேண்டும்.

கேசரி நன்கு சேர்ந்து வந்ததும், மீதமுள்ள நெய் விட்டு கிளறி இறக்கவும். பின்னர் ஏலப்பொடி, வறுத்த முந்தரி ஆகியவற்றை சேர்க்கவும்.
சுவையான ரவா கேசரி தயார்.

மசாலா டீ.

மசாலா டீ.

*தேவையானவை :*

இஞ்சி - ஒரு துண்டு
மல்லி விதை - ஒரு தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு -1
ஏலக்காய் -1
சுக்கு - கொஞ்சம்
பால் - ஒரு தம்ளர்
சீனி - தேவையான அளவு
டீ தூள் - தேவையான அளவு

*செய்முறை :*

பால்,சீனி ,டீத்தூள் தவிர மற்ற எல்லாவற்றையும் வறுத்து பொடி செய்யவும்.

பாலை காய்ச்சி அதனுடன் டீத்தூள் சேர்த்து ஒருகொதி வர விடவும்.கொதித்த பாலோடு மசாலா பொடியை சேர்க்கவும்

டீ நிறம் மாறியதும் இறக்கி வடித்து வைக்கவும்.இதனுடன் சீனி சேர்த்து சூடாக சாப்பிட மசாலா டீ ரெடி.

டீ தூள் சேர்க்காமல் அப்படியே மசாலா பாலாகவும் அருந்தலாம்..

வியாழன், 26 ஜனவரி, 2017

பாகற்காய் சூப்

பாகற்காய் சூப்

தேவையான பொருள்கள்:
1. பாகற்காய் = 2
2. பால் = அரை டம்ளர்
3. வெங்காயம் = 1
4. தக்காளி = 1
5. பச்சை மிளகாய் = 1
6. மிளகுத்தூள் = 1 ஸ்பூன்
7. மஞ்சள் பொடி = சிறிதளவு
8. பெருஞ்சீரகம் = அரை தேக்கரண்டி
9. உளுத்தம் பருப்பு = அரை தேக்கரண்டி
10. பட்டை = 1
11. கறிவேப்பிலை = சிறிதளவு
12. எலுமிச்சை பழம் = பாதி
13. எண்ணெய் = தேவையான அளவு
14. உப்பு = தேவையான அளவு
15. கொத்தமல்லி இலை = சிறிதளவு

செய்முறை:

• பாகற்காயை நன்கு கழுவி நறுக்கி கொள்ளவும். அதனுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக நறுக்கி கொள்ளவும். பாலை நன்கு காய்ச்சி வைத்து கொள்ளவும்.

• வாணலியில் தேவையான அளவு எண்ணேய் விட்டு பெருஞ்சீரகம், உளுத்தம் பருப்பு, பட்டை போட்டு சிறிது கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

• வதங்கியதும் வேக வைத்த பாகற்காயை போட்டு கிளறி சிறிது தண்ணீர் விட்டு சிறிது நேரம் வேக விட்டு பிறகு தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து எலுமிச்சை பழத்தை பிழிந்து இறக்கவும்.

• இறக்கியவுடன் காய்ச்சிய பாலை ஊற்றி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
சுவையான ஆரோக்கியமான பாகற்காய் சூப் தயார். இதை ரைஸோடும், தனியாகவும் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். மேலும் இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடியது.

மருத்துவ குணங்கள்:

• பாகற்காயில் வைட்டமின் “சி” 88 மி.கி., வைட்டமின் “ஏ” 126 மைக்ரோ கிராம், இரும்புச்சத்து 1.8 மி.கி. பாஸ்பரஸ், கால்ஷியம் ஆகியவை காணப்படுகிறது. குறைவான அளவில் வைட்டமின் “பி” உள்ளது.

• உடலுக்கு குளிர்ச்சி தரும். மலச்சிக்கலைப் போக்கும். பசியை தூண்டும். சர்க்கரை நோயைக்கட்டுப்படுத்த உதவும். இந்த பாகற்காய் சூப் போன்ற ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

பாகற்காய் சூப்

பாகற்காய் சூப்

தேவையான பொருள்கள்:
1. பாகற்காய் = 2
2. பால் = அரை டம்ளர்
3. வெங்காயம் = 1
4. தக்காளி = 1
5. பச்சை மிளகாய் = 1
6. மிளகுத்தூள் = 1 ஸ்பூன்
7. மஞ்சள் பொடி = சிறிதளவு
8. பெருஞ்சீரகம் = அரை தேக்கரண்டி
9. உளுத்தம் பருப்பு = அரை தேக்கரண்டி
10. பட்டை = 1
11. கறிவேப்பிலை = சிறிதளவு
12. எலுமிச்சை பழம் = பாதி
13. எண்ணெய் = தேவையான அளவு
14. உப்பு = தேவையான அளவு
15. கொத்தமல்லி இலை = சிறிதளவு

செய்முறை:

• பாகற்காயை நன்கு கழுவி நறுக்கி கொள்ளவும். அதனுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக நறுக்கி கொள்ளவும். பாலை நன்கு காய்ச்சி வைத்து கொள்ளவும்.

• வாணலியில் தேவையான அளவு எண்ணேய் விட்டு பெருஞ்சீரகம், உளுத்தம் பருப்பு, பட்டை போட்டு சிறிது கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

• வதங்கியதும் வேக வைத்த பாகற்காயை போட்டு கிளறி சிறிது தண்ணீர் விட்டு சிறிது நேரம் வேக விட்டு பிறகு தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து எலுமிச்சை பழத்தை பிழிந்து இறக்கவும்.

• இறக்கியவுடன் காய்ச்சிய பாலை ஊற்றி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
சுவையான ஆரோக்கியமான பாகற்காய் சூப் தயார். இதை ரைஸோடும், தனியாகவும் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். மேலும் இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடியது.

மருத்துவ குணங்கள்:

• பாகற்காயில் வைட்டமின் “சி” 88 மி.கி., வைட்டமின் “ஏ” 126 மைக்ரோ கிராம், இரும்புச்சத்து 1.8 மி.கி. பாஸ்பரஸ், கால்ஷியம் ஆகியவை காணப்படுகிறது. குறைவான அளவில் வைட்டமின் “பி” உள்ளது.

• உடலுக்கு குளிர்ச்சி தரும். மலச்சிக்கலைப் போக்கும். பசியை தூண்டும். சர்க்கரை நோயைக்கட்டுப்படுத்த உதவும். இந்த பாகற்காய் சூப் போன்ற ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

கீரை சாதம்

கீரை சாதம் 

தேவையான பொருள்கள்:
1. முளைக்கீரை = 1 கட்டு
2. அரிசி = 250 கிராம்
3. ஏலக்காய் = 4
4. கிராம்பு = 3
5. பட்டை = சிறிதளவு
6. கொத்தமல்லி = 2 ஸ்பூன்
7. துவரம் பருப்பு = 100 கிராம்
8. உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
9. கடலை பருப்பு = 1 ஸ்பூன்
10. பச்சை மிளகாய் = 3
11. பூண்டு = 5 பல்
12. வற்றல் = 2
13. கடுகு = 1 ஸபூன்
14. நெய் = தேவையான அளவு
15. உப்பு = தேவையான அளவு
16. கொத்தமல்லி இலை = சிறிதளவு

செய்முறை:

• முளைக்கீரையை சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும். அரிசியை நன்கு கழுவி நீரில் ஊற வைக்கவும். துவரம் பருப்பை வேக வைத்து கொள்ளவும். ஏலக்காய், கிராம்பு, பட்டை, கொத்தமல்லி,  கடலை பருப்பு ஆகியவற்றை வாணலியில் போட்டு இளஞ்சிவப்பாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

• குக்கரில் தேவையான அளவு நெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

• பிறகு அதனுடன் பச்சை மிளகாய், பூண்டு, வற்றல் போட்டு கிளறி வறுத்த பொடியை சேர்த்து வதக்கி பொடி வாசனை போனதும் கீரையை சேர்த்து வதக்கி அதனுடன் வேக வைத்த துவரம் பருப்பு, தேவையான அளவு  உப்பு மற்றும் ஊற வைத்த அரிசி சேர்த்து தேவையான அளவு தண்ணீரி விட்டு குக்கரை மூடி வைத்து விசில் வைத்து வேக விட்டு எடுத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

சுவையான  மற்றும் ஆரோக்கியமான உடனடி கீரை சாதம் தயார்.

மருத்துவ குணங்கள்:

• முளைக்கீரையில் 85.7 விழுக்காடு நீரும், 4 விழுக்காடு புரதச்சத்தும், 0.5 விழுக்காடு கொழுப்புச்சத்தும், 2.7 விழுக்காடு தாது உப்பும், ஒரு விழுக்காடு நார்ச்சத்தும், 6.3 விழுக்காடு மாவுச்சத்தும் நிறைந்துள்ளன. இக்கீரை 46 கிலோ சக்தியைக் கொடுக்கக் கூடியது.

• நூறு கிராம் கீரையில் 397 மில்லி கிராம் சுண்ணாம்புச்சத்தும், 247 மில்லி கிராம் மெக்னிசியமும், 772 மில்லி கிராம் ஆக்ஸாலிக் அமிலமும், 83 மில்லி கிராம் மணிச்சத்தும், 25.5 மில்லி கிராம் இரும்புச்சத்தும், 230 மில்லி கிராம் சோடியமும், 341 மில்லி கிராம் பொட்டாசியமும், 0.33 மில்லி கிராம் தாமிரச்சத்தும் 61 மில்லி கிராம் கந்தகச்சத்தும், 88 மில்லி கிராம் குளோரின் சத்தும் அமைந்திருக்கிறது.

• இந்த கீரைகளில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச்சத்துக்கள் இரத்தத்தை சுத்திகரித்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லன. மூளை வளர்ச்சிக்கு இம்முளைக்கீரையில் அமைந்துள்ள மணிச்சத்து பெரிதும் உதவுகின்றது.

• இந்த கீரை சாதம் நாவுக்கு உருசியை கொடுப்பதோடு நல்ல பசியையும் கொடுக்க கூடியது. உட்சூடு, ரத்தக்கொதிப்பு, பித்த எரிச்சல் முதலிய நோய்கள் குணமாகும். அத்துடன் கண்களுக்கு குளிர்ச்சியை தரும். சொறி, சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதினால் குணமடையும்.

கேரளா மெது வடை

கேரளா மெது வடை

*என்னென்ன தேவை? *

உளுந்து - 250 கிராம், 
பச்சை மிளகாய் - 4, 
கறிவேப்பிலை - சிறிதளவு, 
தேங்காய் எண்ணெய் - 250 கிராம், 
உப்பு - தேவைக்கு, 
அரிசி மாவு - 3 மேசைக்கரண்டி.

*எப்படிச் செய்வது? *

உளுந்தை தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு கழுவி சிறிது தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, அரிசிமாவு சேர்த்து நன்கு கலக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், வடையை தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

கேரளா மெது வடை

கேரளா மெது வடை

*என்னென்ன தேவை? *

உளுந்து - 250 கிராம், 
பச்சை மிளகாய் - 4, 
கறிவேப்பிலை - சிறிதளவு, 
தேங்காய் எண்ணெய் - 250 கிராம், 
உப்பு - தேவைக்கு, 
அரிசி மாவு - 3 மேசைக்கரண்டி.

*எப்படிச் செய்வது? *

உளுந்தை தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு கழுவி சிறிது தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, அரிசிமாவு சேர்த்து நன்கு கலக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், வடையை தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

தேனும், தினை மாவும்

தேனும், தினை மாவும்

*என்னென்ன தேவை? *

பதப்படுத்திய தினை மாவு - 1 கப், 
தேன் - தேவைக்கு, 
நெய் - 1 டேபிள்ஸ்பூன், 
முந்திரி, காய்ந்த திராட்சை - தலா 10.

*எப்படிச் செய்வது?*

பதப்படுத்திய தினை மாவை சலிக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு மாவை வறுத்து தனியாக வைக்கவும். பின்பு மீதி நெய்யில் முந்திரி, காய்ந்த திராட்சையை வறுத்து, தினை மாவுடன் கலந்து, தேனையும் சேர்த்து கலந்து, பரிமாறவும். குறிப்பு : சிலர் அனைத்தையும் வறுக்காமல் கலந்து பரிமாறுவார்கள். பதப்படுத்திய மாவு எல்லா கடைகளிலும் கிடைக்கும்.

தேனும், தினை மாவும்

தேனும், தினை மாவும்

*என்னென்ன தேவை? *

பதப்படுத்திய தினை மாவு - 1 கப், 
தேன் - தேவைக்கு, 
நெய் - 1 டேபிள்ஸ்பூன், 
முந்திரி, காய்ந்த திராட்சை - தலா 10.

*எப்படிச் செய்வது?*

பதப்படுத்திய தினை மாவை சலிக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு மாவை வறுத்து தனியாக வைக்கவும். பின்பு மீதி நெய்யில் முந்திரி, காய்ந்த திராட்சையை வறுத்து, தினை மாவுடன் கலந்து, தேனையும் சேர்த்து கலந்து, பரிமாறவும். குறிப்பு : சிலர் அனைத்தையும் வறுக்காமல் கலந்து பரிமாறுவார்கள். பதப்படுத்திய மாவு எல்லா கடைகளிலும் கிடைக்கும்.

பைனாப்பிள் பழப் பச்சடி

பைனாப்பிள் பழப் பச்சடி

*என்னென்ன தேவை? *

பைனாப்பிள் - 1, 
நேந்திரம்பழம் - 3, 
மஞ்சள் தூள் - 1/2 மேசைக்கரண்டி, 
மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி, 
தண்ணீர் - 1 டம்ளர், 
தேங்காய் - அரை மூடி துருவியது, 
கடுகு - 1/4 மேசைக்கரண்டி, 
காய்ந்த மிளகாய் - 3, 
கறிவேப்பிலை, 
தேங்காய் எண்ணெய் - தேவைக்கு ஏற்ப, 
தயிர் - 3 மேசைக்கரண்டி.

*எப்படிச் செய்வது? *

பைனாப்பிள் மற்றும் நேந்திரப்பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். அதன் பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த் தூள் சேர்்க்கவும்.

மிக்சியில் தேங்காய்த் துருவல் மற்றும் கடுகு சேர்த்து நன்கு அரைத்து அதனை வேகவைத்துள்ள பழத்துடன் சேர்த்து ஒரு கொதி விடவும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதை பச்சடியில் சேர்க்கவும். கடைசியில் தயிர் சேர்த்து நன்கு கலந்து செய்து பரிமாறவும். 

பருப்பு போளி

பருப்பு போளி

*என்னென்ன தேவை?*

கடலைப்பருப்பு - 500 கிராம், 
சர்க்கரை - 850 கிராம், 
டால்டா - 300 கிராம், 
மைதா மாவு - 500 கிராம், 
ஜிலேபி ஃபுட் கலர் - 1/4 மேசைக்கரண்டி, 
தேங்காய் எண்ணெய் - 1/4 கப், 
நெய் - 50 கிராம், 
டால்டா - 3 மேசைக்கரண்டி.

*எப்படிச் செய்வது?*

கடலைப் பருப்பை தண்ணீரில் சில மணி நேரம் ஊறவைத்து, வேகவைக்கவும். ஒன்று இரண்டாக வெந்த பிறகு, அதிகப்படியான தண்ணீரை ஈர்த்துவிட்டு அதனுடன் சர்க்கரையை சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் 300 கிராம் டால்டாவை சேர்த்து அதில் அரைத்து வைத்துள்ள பருப்பை சேர்த்து நன்கு வறுக்கவும்.

பருப்புக் கலவை கடாயில் ஒட்டாமல் பந்து போல் வரும் போது அடுப்பை அணைத்து ஆறவிடவும். ஒரு பாத்திரத்தில் மூன்று மேசைக்கரண்டி டால்டா, மைதா மாவு, ஜிலேபி கலரை தண்ணீரில் கரைத்து. 

அதையும் மாவுடன் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். கடைசியாக தேங்காய் எண்ணெய் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பருப்புக் கலவையை ஓர் எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டவும். அதில் பாதி அளவு மாவினை உருட்டி வைக்கவும். மாவை பூரி திரட்டுவது போல் திரட்டி, அதனுள் பருப்புக் கலவையை வைத்து, நன்கு மடித்து, மறுபடியும் மெதுவாக திரட்டி, தோசை கல்லில் நெய் சேர்த்து சுடவும். சூடாக சாப்பிடவும்.

சர்க்கரை பொங்கல்

சர்க்கரை பொங்கல்

இந்த சர்க்கரை பொங்கல் தான் திருப்பத்தூர் ஸ்ரீ சக்தி சாய்பாபா ஆலயத்தில் ( வேலூர் மாவட்டம்) ஒவ்வொரு  வருடம் தைத்திருநாள் அன்று வழங்கப்படும் தெய்வம்சமான பிரசாதம்.

ஒவ்வொருகும் இந்த பிரசாதம் தீபாரதனைக்கு ( காலை ஆரத்தி) பிறகு பரிமாறப்படும். நாம் அனைவரும் சாப்பிடும் சமயத்துல நமது நாவும், மனமும் இந்த பிரசாதம் அடுத்த வருடத்திற்கு தான் கிடைக்கும் என்று ஏங்கி கொண்டே சாப்பிடுவதை நம்மால் அறிய முடியும்.

தேவையான பொருட்கள்
புது பச்சை பொங்கல் அரிசி 1/2 கப்
பாசிப்பருப்பு 4 மேஜைக்கரண்டி
சமையல் நிறுவனம்  கரும்பு சர்க்கரை 1/2 கப்
பசும்பால் 3 1/2 கப்
ஆவின் பால்கோவா 200 கிராம்
பசுநெய் 5 மேஜைக்கரண்டி
வெண்ணிலா எசன்ஸ் 4 துளிகள்
முந்திரி பருப்பு 15
கிஸ்மிஸ் பழம் 10
ஏலக்காய் 1

செய்முறை
1. வடச்சட்டியில் 1 மேஜைக்கரண்டி பசுநெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அதில் கிஸ்மிஸ் பழங்களை சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.

2. ஒரு கெனமான அகன்ற பாத்திரத்தில் 3 1/2 டம்ளர் பாலை நன்றாக பொங்க வைத்து , அதை சிறுதீயில் வைத்து சுண்ட வைக்கவும்.

3. இப்பொழுது அந்த சுடுபாலில் ஆவின் பால்கோவாவை பிச்சு போட்டு நன்றாக கிளறவும். பால்கோவா முழுவதுமாக கரைந்து , பால் கலவை 2 1/2 டம்ளராக  வந்த உடன் அடுப்பை அணைத்து விடவும்.

4. அரிசியை நன்றாக சுத்தமாக கழுவி வைக்க வேண்டும்.

5. இப்பொழுது பிரஷர் குக்கரில் 1/2 தேக்கரண்டி பசுநெய்யை விட்டு காய்ந்ததும் , அதில் பாசிபருப்பை போட்டு நன்றாக மணம் வீசும் வரை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

6. இப்பொழுது பிரஷர் குக்கரில் கழுவிய புதிய பச்சை அரிசியை போட்டு அதில் சுண்ட காய்ச்சி வைக்கப்பட்டுள்ள பால்கோவா பாலை ஊற்றி , குக்கரின் மூடியை மூடி குறைந்தபட்சம் 4 விசில் வரை விட்டுகோங்க.

7. இச்சமயத்துல நன்றாக சமையல் நிறுவன நாட்டு சர்க்கரையை வடச்சட்டியில் போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சிறுதீயில் கொதிக்க வைக்கவும். ஏலக்காயை தூள் செய்து சேர்த்து கொள்ளவும்.

8. சமையல் நிறுவன நாட்டு சர்க்கரை முழுவதுமாக கரைந்த உடன் அதை வடிக்கட்டிய  உடன். பிரஷர் குக்கரின் ஆவி அடங்கியதும் , பிரஷர் குக்கரின் மூடியை திறந்து அந்த நாட்டு சர்க்கரை கரைசலை ஊற்றவும்.

9. பிறகு அடுப்பை சிறுதீயில் வைத்து நன்றாக கிளறவும். இந்த சமயத்துல வெண்ணிலா எசன்ஸ் துளிகளை சேர்த்து நன்றாக கிளறவும்.

10. இப்பொழுது பொன்னிறமாக வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு மற்றும் கிஸ்மிஸ் பழங்களை சேர்த்து , அதனுடன் மீதமுள்ள பசுநெய்யை சேர்த்து நன்றாக சூடு பறக்க கிளறவும்.

11. நன்றாக கலந்தவுடன் சூடு பறக்க பரிமாறவும்.

கேப்ஸிகம் கிரேவி.

கேப்ஸிகம் கிரேவி.

*தேவையான பொருட்கள்:*

உருளைக் கிழங்கு - 3
கேப்ஸிகம் - 5
வெங்காயம் - 2

*அரைக்க தேவையான பொருட்கள்:*

தக்காளி - 1
வெங்காயம் - 1
பூண்டு - 5 பல்
சீரகம் - அரை டீஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
லவங்கம் - 3

*செய்முறை:*

உருளைக்கிழங்கை வேகவைத்து உறித்து துண்டங்களாகச் செய்து கொள்ளவும். அரைக்கக் கொடுத்தவைகளை  மிக்ஸியில்  நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

கேப்ஸிகத்தை சிறிய துண்டங்களாகச் செய்துகொள்ளவும். வெங்காயத்தையும்  நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்  விட்டு காய்ந்ததும் லவங்கம், வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த விழுதைக்கொட்டி சுருள வதக்கவும்.

கேப்ஸிகம் சேர்த்து சிறிது வதக்கி, வேகவைத்த கிழங்கு துண்டுகளை, சேர்த்து பிறகு, உப்பு, காரம், மஞ்சள்பொடி, ஒன்றரை கப்  தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

கிரேவி சற்று கெட்டியாகும் வரை கொதிக்கவைத்து இறக்கவும். இன்னும் காரம் தேவைப்பட்டால் காரத்திற்கு  பச்சை   மிளகாயும் சேர்க்கலாம்.

இதையும் விருப்பமான சப்பாத்தி, பூரி முதலானவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

செவ்வாய், 17 ஜனவரி, 2017

மிளகு பொங்கல்

மிளகு  பொங்கல்

இது வேலூர் மாவட்டம், திருப்பத்தூர்  ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் திருக்கோவில் அரூட்பிரசாதம்.

இந்த பொங்கல் மிகவும் ருசியாக இருக்கும். இந்த பிரசாதம் தை திருநாள் அன்று ஒவ்வொரு வருடமும் காலையில் வழங்கப்படும்.

தேவையான பொருட்கள்
புது பச்சை பொங்கல் அரிசி 1 கப்
பாசிப்பருப்பு 1/4 கப்
தண்ணீர் 3 1/2 கப்
பச்சை மிளகாய்  4 ( பொடியாக நறுக்கியது)
பூண்டு பற்கள் 5 ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி 1 இன்ச் ( பொடியாக நறுக்கியது)
உப்புத்தூள் தேவையான அளவு
பசுநெய் 2 மேஜைக்கரண்டி

தாளிக்க
பசுநெய் 3 மேஜைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி ( அம்மிகல்லில் நசுக்கியது)
மிளகு 3 தேக்கரண்டி ( அம்மிகல்லில் நசுக்கியது)
பெருங்காயம் 1/4 சிட்டிகை
முந்திரி பருப்பு 15

செய்முறை
1. அரிசியை நன்றாக சுத்தமாக அலசி, சுத்தமாக கழுவி எடுத்து 5 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.

2. இப்பொழுது பிரஷர் குக்கரில் ஊற வைத்துள்ள அரிசி, பாசிப்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் , பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்து , அதனுடன் 3 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக குழைய குழைய வேக வைத்து விசில் விட்டுகோங்க.

3. பிரஷர் குக்கரின் மூடியை திறந்த உடன் 2 மேஜைக்கரண்டி பசு நெய்யை விட்டு கிளறு கிளறு என்று கிளறவும்.

4. இப்பொழுது வடச்சட்டியில் 3 மேஜைக்கரண்டி நெய்யை விட்டுகோங்க , அது நன்றாக காய்ந்ததும் அதில் பொடியாக பொடித்து வைத்துள்ள சீரகத்தையும மற்றும் மிளகையும், அதனுள் பெருங்காய தூளையும் நன்றாக வதக்க வேண்டும்.

5. பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதில் முந்திரி பருப்பை நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

6. இந்த வடச்சட்டி கலவையை பிரஷர் குக்கரில் கொட்டி  நன்றாக கிளறு கிளறு என்று கிளறவும்.