வியாழன், 10 ஆகஸ்ட், 2017

நாஞ்சில் நாட்டு வாழ்க்கையும் நாவூற வைக்கும் உணவுகளும்



நாஞ்சில் நாட்டு வாழ்க்கையும் நாவூற வைக்கும் உணவுகளும்

இன்றைய குமரி, அக்காலத்தில் ஆய்நாடு, நெங்கநாடு, படப்பநாடு, வள்ளுவநாடு, குறுநாடு, புறத்தாநாடு, நாஞ்சில்நாடு எனப் பல குறுநாடுகளாகப் பிரிந்து கிடந்தது. கிழக்கே ஆரல்வாய்மொழி, மேற்கே ஆளூர் பன்றி வாய்க்கால், வடக்கே கடுக்கரை மலை, தெற்கே மணக்குடி காயல்.. இதுதான் நாஞ்சில் நாட்டின் எல்லைகள். நாஞ்சில் குறவன், நாஞ்சில் பொருநன், நாஞ்சில் வள்ளுவன், பெரிய வீட்டு முதலியார் உள்ளிட்டோர் ஆண்ட இப்பகுதி, பிற்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் பிடிக்குள் சென்றது. வடக்கிலும் கிழக்கிலும் மலைவளமும், மேற்கே நிலவளமும், தெற்கே கடல்வளமும் அமையப்பெற்ற  இந்நிலத்துண்டில்தான் தமிழரின் பண்பாடு துளிர்த்தது என்கிறார்கள் மானுடவியல் அறிஞர்கள்.


 1956ல் நாஞ்சில்நாடு உள்ளடங்கிய குமரிமாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்பட்டாலும், மொழி, உணவு, பண்பாடு, கலை, பண்டிகைகள், சடங்குகள் என அனைத்திலும் திருவிதாங்கூரின் பண்புகளே ஒட்டியிருக்கிறது. தீபாவளி அளவுக்கு ஓணம் பண்டிகையும், விஷூ பண்டிகையும் களைகட்டுகின்றன. விருந்தோம்பல் மற்றும் உணவுப்பண்பாட்டிலும் பெரிய வேறுபாடுகள் இல்லை.
வடக்கு மலையில் உற்பத்தியாகி எல்லைவரை தவழ்ந்தோடும் பழையாறு நதியின் புண்ணியத்தில் எக்காலமும் பசுமைபூத்துக் கிடக்கிறது நாஞ்சில்நாடு. பிரிவினைக்கு முன்பு நாஞ்சில்நாடுதான் திருவிதாங்கூரின் நெற்களஞ்சியம். இங்குமட்டுமே விளையும் குண்டுச்சம்பா அரிசிக்கு கேரளமாநிலமே மயங்கிக் கிடக்கிறது. தென்னை, வாழை, பரந்து விரிந்த நெல்வயல்கள்.. கிழக்குப்புறத்தில் அடர்ந்த பனைமரங்கள். கட்டிச்சம்பா, பூவன்சம்பா, கிச்சடி சம்பா, வாசரமுண்டா, பூம்பாலை என 60க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல்ரகங்கள் விளைகின்றன. வாழையில் மட்டும் நேந்திரன், பேயன், பாளையங்கொட்டன், மொந்தன், சிங்கன், துளுவன், செந்துளுவன், நெய்த்துளுவன், ரசகதலி, மட்டி, பச்சைப்பழம் என 15க்கும் மேற்பட்ட வகைகள்.. நாஞ்சில் நாட்டு மக்களின் வாழ்க்கையில் இருந்து நேந்திரம் பழத்தைப் பிரிக்கமுடியாது. நேந்திரங்காய் வற்றல், நேந்திரம்பழப் பாயாசம், பழம்பொறி, சர்க்கரை வரட்டி, புளிச்சேரி என அதன்மூலம் ஏகப்பட்ட பதார்த்தங்கள் செய்கிறார்கள். வீட்டுக்குவீடு நேந்திரம்பழத் தார் உண்டு. திடீர் விருந்தினர்கள் வந்தால் நேந்திரம்பழ கவனிப்புதான். இதை ஏத்தங்காய் என்கிறார்கள்.

நாஞ்சில் நாட்டு உணவுகள்


புளிச்சேரி, எரிச்சேரி, ஓலன், தோரன், இஞ்சிக்கறி, அவியல், தீயல், கிச்சடி என வேறெங்கும் கிடைக்காத பல சிறப்புணவுகள் இங்குண்டு. உபசரிப்பு, விருந்தோம்பல் பண்பில் உணவு இயல்பை விட அதிகம் ருசிக்கின்றது.


நாஞ்சில் நாட்டின் முக்கிய பொருளாதாரப் புலம் பனைமரங்கள்தாம். வீட்டுக்குவீடு பதநீர் இருப்பு வைத்திருப்பார்கள். சீனி, வெல்லத்துக்கெல்லாம் வேலையில்லை. இனிப்பென்றால் பதநீரில் தயாராகும் கருப்பட்டிதான்.
பதநீரில் கூழ்பதநீர், பயத்தம்கூழ் பதநீர், அண்டிப்பருப்புப் பதநீர், புளிப்பதநீர் என  10க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. பானையில் பதநீரைக் கொட்டி வேடுகட்டி வைத்திருப்பார்கள்.  கூழ்பதநீர் ஜெல்லி மாதிரி இருக்கும். நெடுநாட்கள் கெட்டுப்போகாது. அதேபோல கருப்பட்டியிலும் பலவகை உண்டு. எல்லா வீடுகளிலும் அடுப்புக்கு மேல் கருப்பட்டிப் பிறை என்று ஓர் அறை இருக்கும். அதற்குள் கருப்பட்டியை வைத்துவிடுவார்கள். அடுப்பு வெப்பத்தில் நன்றாக வெந்து மேல்பகுதி கருத்துப்போயிருக்கும். உடைத்தால் உள்ளே மஞ்சள் நிறத்தில்  மகுந்து விழும். சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். அதற்குப் பெயர் வெட்டக்கருப்பட்டி. வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு கூழ்பதநீரும், வெட்டக்கருப்பட்டியும் தந்து உபசரிப்பார்கள்.  இந்தப்பகுதியில் கிடைக்கக்கூடிய தேன் ரொம்பவே அபூர்வமானது. நிறைய மருத்துவ குணங்கள். எல்லோரின் வீட்டிலும் தேன்குடுவை இருக்கும். அதேபோல் வீட்டுக்கு வீடு சக்கைப்பழம் (பலாப்பழம்), மாம்பழம் விளையும். அந்தப்பழங்களை வெட்டி தேன்விட்டுக் கொடுப்பார்கள்.

நாஞ்சில் நாடு

நாஞ்சில் நாட்டு உணவில் சுவைக்கு இணையாக சத்தும் நிறைந்திருக்கும். மேல்தோல் நீக்கப்படாத சம்பா அரிசியில்தான் சாதம் வடிப்பார்கள். சாதம் வேகும்போது ஊரே மணக்கும். கன்னிப்பூ, கும்பப்பூ என இரண்டு சாகுபடி. இடைப்பட்ட காலங்களில் உளுந்து, சிறுபயிறு என தானியங்களை விதைத்து  அறுவடை செய்து இருப்பு வைத்துக்கொள்வார்கள்.  சிறு தானியங்களும் பெருமளவு பயன்படுத்துகிறார்கள். உளுந்தங்கஞ்சியும் சிறுபயறு கஞ்சியும் நாஞ்சில்நாட்டின் முக்கிய உணவுகள். இந்தக் கஞ்சிகளுக்கு தொடுகறி கானா சம்மந்தி, பொறிகடலை சம்மந்தி. சம்மந்தி என்றால்  துவையல். சிலபேர் கருப்பட்டியையே தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்.
 நாஞ்சில்நாடு முக்கியமான தேங்காய் உற்பத்தி மண்டலம். எல்லா உணவுகளிலும் தேங்காய்ப் பயன்பாடு இருக்கும். ஆனால், எண்ணெய்ப் பயன்பாடு குறைவு. மிளகாயும் குறைவாகவே பயன்படுத்துவார்கள். நல்லமிளகு, குறுமிளகுதான். அதேபோல இனிப்புகளுக்குக் கருப்பட்டி. அதேபோல அப்பமும் மிக முக்கிய உணவு. தோசைபோலவே இருக்கும் இதில் தேங்காய்ப்பால் அல்லது கடலைக்கறி, கிழங்குக்கறி சேர்த்து சாப்பிடுவார்கள். அவியல் இல்லாமல் ஒரு சாப்பாடும் கிடையாது. சேனை, வழுதலங்காய், புடலை, வாழைக்காய், பூசணிக்காய், முருங்கைக்காய் என்று அத்தனை காய்கறிகளையும் போட்டு தேங்காய் அரைத்து ஊற்றி அவிப்பார்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். அச்சுமுறுக்கு, முந்திரிக்கொத்து, மனோகலம், உப்பேரி, கருப்பட்டி அதிரசம், சுத்துமுறுக்கு, அரிசி சீடை.. இவையெல்லாம் இந்த மண்ணுக்குரிய பதார்த்தங்கள். அதேபோல ரசவடையும் முக்கியமானது.

நாஞ்சில் நாட்டு உணவுகள்


இன்னுமொரு முக்கிய உணவு மீன். மீனை வறுக்கமாட்டார்கள்.  குழம்புதான். அதிலும் `புளிமுளம்'  என ஒரு குழம்பு உண்டு. அயிரை, சாலை, நெய்மேனி, குதிப்பு, பண்ணா, கொழுவுச்சாலை மீன்களில் மட்டும்தான் செய்யமுடியும். அதேபோல, கட்டா, விலைமீன், பாறை, சீலா மீன்களை வைத்து `அவித்த கறி' என்று ஒன்று செய்வார்கள். நான்கு நாள் சுடவைத்து சுட வைத்துச் சாப்பிடலாம்.
அருகில் உள்ள கேரள உணவையும், நாஞ்சில் நாட்டு உணவையும் தனித்து அடையாளம் காண்பது சிரமம். பல ஐட்டங்கள் இரண்டு பகுதிக்கும் பொதுவானவை. கேரளமக்கள் விருந்து நிகழ்வுகளுக்கு நாஞ்சில் நாட்டுச் சமையல்காரர்களைத்தான் விரும்பி அழைக்கிறார்கள்.


`இனிப்பு, காரம், புளிப்பு என்று அருஞ்சுவைகளும் அடங்கியது நாஞ்சில் நாட்டு உணவு. பதார்த்தங்களை இலையில் வைத்தால் வண்ணங்களால் கோலம் போட்டது போல இருக்கும். தும்பு இலை விருந்து என்று ஒன்றுண்டு.  சுபகாரியங்களில் தும்பு இலையில் பரிமாறினால்தான் பெருமை. கிழிசல், வாடல், கசங்கல், இலசல், முற்றல், கோணல் இல்லாத நடுத்தர வாழையிலைதான் தும்பு இலை . ஏத்தங்காய் வற்றல், உப்பேறி, இஞ்சிப்புளி, நார்த்தங்காய்க் கறி, மாங்காய்க்கறி,  வெள்ளரிக்காய் கிச்சடி, பீட்ரூட் கிச்சடி, பாகற்காய் கிச்சடி, பைனாப்பிள் கிச்சடி, அவியல்,  துவரன். ஓலன், எரிசேரி,  பப்படம், ரசகதலிப் பழம், சாதம், பருப்பு, நெய், சாம்பார், புளிச்சேரி,   ரசம், சம்பாரம். உள்ளித்தீயல், பாயசம் என நாஞ்சில் நாட்டு விருந்து மலைக்க வைத்துவிடும். உணவு வகைகளைப் பார்த்தாலே பசியடங்கிப் போகும்.


நாஞ்சில் நாட்டில் 30க்கும் மேற்பட்ட பாயச வகைகள் உண்டு. நேந்திரம் பாயசம், சக்கைப் பாயசம், அடைப் பாயசம், பால்பாயசம், சிறுபருப்புப் பாயசம், கடலைப்பருப்புப் பாயசம், சேனைப்பாயசம், தடியங்காய்ப் பாயசம், சேமியாப் பாயசம், கோதுமைப் பாயசம்.. அடைப் பாயாசத்தில் மட்டி வாழைப்பழம் பிசைந்து  சாப்பிடுவார்கள்.  பால் பாயாசத்தில் போளி, பூந்தி சேத்துச் சாப்பிடுவார்கள்.
நேந்திரம் பழத்தை மாவில் தோய்த்து எண்ணெயில் பொறித்தெடுக்கும் பழம்பொறி, புட்டுப்பயிறு, அரிசிக்களி, உளுந்தங்காடி, நெய்யப்பம், பலாப்பழக் களி, உன்னியப்பம், சுக்குப்பால், மெழுகுபுரட்டி, கருப்பட்டி அதிரசம் என நாஞ்சில் நாட்டுக்கே உரித்தான பதார்த்தங்கள் நிறைய உண்டு.

தொல் மானுடம் உதித்த பூர்வீக பூமியான நாஞ்சில் மண்ணில் வாழ்வதே சுகம். அம்மண்ணின் உணவுகள்  அந்த வாழ்க்கையை இன்னும் உன்னதமாக்குகின்றன. "செவிக்கு இசையும், கண்ணுக்குச் சிற்பமும், ஓவியமும், மனதுக்குக் காமமும் போல் நாவிற்கும் மூக்கிற்கும் சமையல்.." என்பார் நாஞ்சில்நாடன். அப்படியானதுதான் நாஞ்சில் நாட்டு உணவு ..!

புதன், 9 ஆகஸ்ட், 2017

Kitchen Tips - ஐம்பது வகையான வீட்டுக்குறிப்புகள்



 Kitchen Tips - ஐம்பது வகையான வீட்டுக்குறிப்புகள்*


1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்


2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.


3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.


4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.


5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.


6. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.


7. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.


8. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.


9. அடைக்க அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.


10. இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''d'' யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.


11. பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.


12. மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.


13. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.


14. பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.


15. உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.

16. ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.


17. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.


18. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.


19. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.


20. ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.


21. நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.


22. மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.


23. பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.


24. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.


25. தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.


26. மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.


27. பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.


28. மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.


29. நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.


30. குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.

31. நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.


32. தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.


33. எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.


34. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.


35. அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.


36. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.


37. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.


38. வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.


39. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.


40. அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.


41. இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.


42. பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி - தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.


43. மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.


44. எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.


45. ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.

46. பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.


47. கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.


48. காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.


49. மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.


50. அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்.

ரோஜாப்பூ கீர்: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிபி..



ரோஜாப்பூ கீர்: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிபி..

கிருஷ்ண ஜெயந்தி அன்று நிச்சயம் அனைத்து வீடுகளிலும் பால், தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றைப் பயன்படுத்தி பல பலகாரங்கள் செய்வார்கள். அப்படி செய்யும் போது, இந்த வருடம் கிருஷ்ணனை கவரும் வண்ணம் ஒரு அருமையான படையல் செய்ய நினைத்தால், ரோஜாப்பூ கீர் செய்து படையுங்கள். இது மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, வீட்டில் உள்ள குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.


தேவையான பொருட்கள்:

பால் - 4 கப்
அரிசி - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 கப்
பிஸ்தா - 10
உலர் திராட்சை - 10
ரோஸ் வாட்டர் - 1 டேபிள் ஸ்பூன்
குல்கந்த் - 10 கிராம்
ரோஜாப்பூ இதழ்கள் - 10-15

செய்முறை:


முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி, அரிசி மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, பின் ஏலக்காய் பொடி தூவி, தீயை குறைவில் வைத்து அரிசி நன்கு வேகும் வரை 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

அரிசியானது நன்கு வெந்ததும், அதில் பிஸ்தா, உலர்
திராட்சை சேர்த்து 3-4 நிமிடம் மிதமான தீயில் கிளறி விட வேண்டும்.

பின்பு அதனை இறக்கி குளிர வைக்க வேண்டும். கலவையானது குளிர்ந்ததும், அதில் ரோஸ் வாட்டர், குல்கந்த் மற்றும் ரோஜாப்பூ இதழ்களை சேர்த்து நன்கு கிளறி
பரிமாறினால், ரோஜாப்பூ கீர் ரெடி!!!

குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள்



குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள்

சில குழந்தைகள் மிகவும் குறைவான உடல் எடையைக் கொண்டிருப்பார்கள். அத்தகைய குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பல்வேறு உணவுப்பொருட்களைக் கொடுப்பார்கள். குறிப்பாக கொழுப்புச்சத்து அதிகம் நிறைந்த பொருட்களை கொடுப்பார்கள். ஆனால் குழந்தைகளின் எடையை அதிகரிப்பதற்கு, அப்படி கொழுப்புக்கள் நிறைந்த கண்ட கண்ட பொருட்களை கொடுத்தால், பிற்காலத்தில் குழந்தைகள் உடல் பருமனால் அவஸ்தைப்படுவார்கள்.

ஆகவே குழந்தைகளின் எடையை அதிகரிக்க முயலும் பெற்றோர்கள் அவர்களுக்கு சரியான உணவை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். மேலும் அப்படி கொடுக்கும் உணவுகளில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் நிறைந்திருக்கும் படியான உணவுகளைக் கொடுக்க வேண்டும்.

இப்போது குழந்தைகளின் வளர்ச்சிக்கும், அவர்களின் எடையை அதிகரிக்கவும் உதவும் சில உணவுகளைப் பார்ப்போம்

அவகேடோவில் கலோரிகள்அதிகம் இருப்பதோடு, அதில் நல்ல கொழுப்புக்களும் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இதனை குழந்தைகளுக்கு மில்க் ஷேக் போன்று செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி குடிப்பார்கள். இதனால் அவர்களின் உடல் எடையும் அதிகரிக்கும்.

பால் பொருட்களில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. அதிலும் எலும்பை வலுவாக வைத்துக் கொள்ளும் கால்சியம் மற்றும் உடல் எடை அதிகரிப்பதற்கு தேவையான கலோரிகள் அதிகம் நிறைந்துள்ளது. இருப்பினும் இவற்றை குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக கொடுக்க வேண்டாம். அளவாக கொடுப்பதே சிறந்தது.

முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இது குழந்தைகளின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகளில் ஒன்றாகும். அதிலும் ஒரு முட்டையில் 6 கிராம் புரோட்டீன் உள்ளது. ஆகவே இதனை தினமும் வேக வைத்து குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது.

வேர்க்கடலை வெண்ணெயிலும் புரோட்டீன் மற்றம் நல்ல கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளதால், இதனை குழந்தைகளுக்கு பிரட்டில் தடவிக் கொடுத்தால், ஆரோக்கியமான முறையில் அவர்களின் எடை அதிகரிக்கும்.

இறைச்சியிலும் புரோட்டீன், கால்சியம் மற்றும் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, வளர்ச்சி மற்றும் எடையை அதிகரிக்க உதவும் கார்போஹைட்ரேட்டும் அதிகம் உள்ளது. ஆகவே இதனையும் குழந்தைகளின் எடையை அதிகரிக்க கொடுக்கலாம்.

இனிப்புகள் என்றதும் சாக்லெட்டை அதிகம் கொடுக்க வேண்டாம். இனிப்புக்களில் சரியான கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள இனிப்புக்களை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். உதாரணமாக, வாழைப்பழ ஸ்மூத்தி, புரூட் ரோல் போன்றவை.

பாஸ்தாவை ஆலிவ் ஆயிலில் சமைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால், அது சுவையாக இருப்பதோடு, குழந்தைகளின் எடையையும் அதிகரிக்கும்.

உலர் பழங்களில் கலோரிகள் அதிகம் இருக்கிறது. இது குழந்தைகளின் எடையை அதிகரிக்க உதவும். ஆகவே உலர் பழங்களான முந்திரி, பாதாம், உலர் திராட்சை போன்றவற்றை ஸ்நாக்ஸாக கொடுக்க வேண்டும். குறிப்பாக தினமும் அளவாக கொடுக்க வேண்டும்.

செரில்களில் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் எடையை அதிகரிக்க உதவும் கார்போஹைட்ரேட், கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் போதிக அளவில் நிறைந்துள்ளன. ஆகவே தினமும் காலையில் செரில்களை பாலில் போட்டு கொடுத்து வாருங்கள்.

குழந்தைகளுக்கு வெள்ளை நிற பிரட் கொடுப்பதற்கு பதிலாக, ஓட்ஸ் மூலம் செய்யப்பட்ட பிரட்டைக் கொடுத்தால், அது அவர்களுக்கு வித்தியாசமான சுவையைக் கொடுப்பதோடு, அவர்களின் எடையையும் அதிகரிக்கும்.

குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய உணவுகள்


குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய உணவுகள்

அன்பான, அக்கறையான மற்றும் வெற்றிகரமான தாயாக இருப்பதென்பது நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல் எளிதானதல்ல. முக்கியமாக, நீங்கள் அண்மையில் குழந்தை பெற்று புதிதாக தாய்மை பருவத்தை எட்டியிருப்பின் இது மிகவும் கடினம். தாய்மையைப் பற்றிய அனுபவமோ அல்லது தெளிவோ உங்களுக்கு அவ்வளவாக இருக்காது. இளம் தாயாக நீங்கள் சந்திக்கக்கூடிய பல பிரச்சனைகளுள் உங்கள் குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய உணவு வகைகளைப் பற்றிய ஞானமும் அடங்கும். மூச்சடைப்பு ஆபத்து மற்றும் அரிப்பு ஏற்படுதல் போன்றவை சில உணவு வகைகளால் உண்டாகக்கூடிய மிகப்பெரும் பாதிப்புகளாகும். குழந்தை பிறந்து 4 முதல் 6 மாதங்கள் ஆகும் வரை திட உணவை தவிர்க்க வேண்டும் என்றே மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

ஆனால் பல சமயங்களில் பெற்றோர்கள் தாங்கள் உண்ணும் உண்வை குழந்தைக்கும் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தை கட்டுப்படுத்த இயலாமல் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். எவ்வகை உணவுகள் ஆரோக்கியமானவை மற்றும் பாதுகாப்பானவை என்று அறிந்து கொள்ளும் வரை நீங்கள் பொறுமை காக்க வேண்டியது அவசியம். பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ள ஆபத்தான குழந்தை உணவு வகைகளை தவிர்ப்பது, காரணம் இன்னதென்று அறிய முடியாத நோய்கள் மற்றும் உடல்நலக் கோளாறுகளிலிருந்து உங்கள் குழந்தையை காத்துக் கொள்ள உங்களுக்கு உதவும்.

பசும்பால்

ஒரு வருடத்திற்கும் குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கவே கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலைப் போன்ற மிகச்சிறந்த சத்தான உணவு வேறொன்றுமில்லை. உங்கள் குழந்தைக்கு ஏன் பசும்பால் தரக்கூடாது என்பதற்கு உறுதியான சில காரணங்கள் உள்ளன. உதாரணமாக, பாலில் இரும்புச்சத்து மிகவும் குறைவாக இருப்பதினால், பசும்பால் அருந்தும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு வருவதற்கான சாத்தியம் அதிகம். மேலும், பசும்பாலில் வைட்டமின் சி, ஈ மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்களும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.

இச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்வது குழந்தைகளின் பிஞ்சு உடலுக்கு மிகக் கடினமான காரியமே. பசும்பால் அருந்துவது சில வகை ஜீரணக் கோளாறுகளையும் உண்டாக்கும் என்பதனால் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பது உசிதமானதல்ல. பெரியவர்களைப் பொறுத்தவரை பசும்பால் சர்வ நிச்சயமாக ஆரோக்கியமானதாக இருந்தாலும், குழந்தைகளை பொறுத்தவரை அது பாதுகாப்பற்ற உணவாகும். மேலும், பசும்பால் குழந்தைகளின் சிறுநீரகங்களை மிக மோசமாக பாதிக்கக்கூடும்.

நட்ஸ்

குழந்தைகளுக்கு 4 வயதாகும் வரை எவ்வகையான நட்ஸ்களையும் அவர்களுக்கு கொடுக்கக்கூடாது என்பது நீங்கள் மிக முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியதொரு விஷயமாகும். இதற்கு முக்கிய காரணம் மூச்சடைப்பு ஆபத்து இதில் ஒளிந்திருப்பதே ஆகும். நட்ஸ் வகைகள் மட்டுமே ஆபத்தானவை அல்ல, அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் மிகவும் கெட்டியாக இருப்பதனால், அதுவும் ஆபத்தானதே. தற்போது ஏராளமான மக்கள் பல்வகையான ஒவ்வாமைகளால் அவதிப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதற்கு உங்கள் குழந்தையும் விதிவிலக்கல்ல.

நட்ஸ் வகைகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களை நீங்கள் ஒவ்வாமை என்ற ஆபத்துக்கு உள்ளாக்கிவிடக்கூடும். உங்கள் குழந்தைகளுக்கு நட்ஸ் வகைகளை கொடுப்பதற்கு முன் குழந்தை நல மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதே எங்களது அறிவுரை.

மீன் வகைகள்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பயப்படும் உணவு ஒன்று உள்ளது. அது மீன் தான். ஏன் இது குழந்தைகளுக்கு பாதுகாப்பானது இல்லை? இக்கேள்விக்கு சில விடைகளை அளிக்க எங்களால் முடியும். உதாரணமாக, மீன்களில் மெர்க்குரி இருப்பதினால், உடல் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் அதற்கு உண்டு. கிங் மார்க்கெல் மற்றும் கொம்பன் சுறா போன்ற மீன் வகைகளில் முக்கியமாக கவனம் தேவை. இவை அதீதமான மெர்க்குரி அளவுகளைக் கொண்டிருக்கும் மீன் வகைகள். வெவ்வேறு வகை மீன்களால் ஒருவித ஒவ்வாமை ஏற்படும் என்பதும் யார்க்கும் தெரியாத பரம ரகசியம் அல்ல. அதனால் உங்கள் குழந்தைகளுக்கு 2 முதல் 3 வயதாகும் வரை நீங்கள் காத்திருக்கத் தான் வேண்டும்.

அதற்குப் பின் நீங்கள் விரும்பும் மீன் வகைகளை உங்கள் குழந்தைகளுக்கு ஆசை தீர சமைத்துக் கொடுங்கள். இவ்வாறு செய்வதனால், ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளிலிருந்து உங்கள் குழந்தைகளை நீங்கள் பாதுகாக்க முடியும். மீன் வகைகள் உங்கள் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு மிகுந்த ஆபத்து விளைவிக்கக்கூடிய உணவுகளுள் ஒன்று என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என்றே நாங்கள் நினைக்கிறோம்.

முட்டைகள்

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு முட்டைகள் பாதுகாப்பற்றவை என்ற செய்தி உங்களுக்கு ஆச்சரியமளித்தாலும், அது தான் உண்மை. குழந்தைகளுக்கு பெரும்பாலும் முட்டைகள் ஒத்துக்கொள்ளாது என்பதை இளம் தாய்மார்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் கவலையை விடுங்கள். குழந்தைகள் வளர வளர இது போன்ற ஒவ்வாமைகள் அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். ஐந்து வயதில் உங்கள் குழந்தைகள் எவ்வித பயமுமின்றி தாராளமாக முட்டைகளை உண்ணலாம்.

முட்டைகளினால் ஏற்படக்கூடிய ஒவ்வாமைக்கென சில பிரத்யேக அறிகுறிகள் உள்ளன என்பதை பொறுப்பான தாய்மார்கள் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும். வேகமான இதயத்துடிப்பு, முகம் சிவத்தல், மூச்சுத்திணறல் போன்றவையே அவ்வறிகுறிகளாகும். எதுவாயினும், உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் மற்றும் உங்கள் உள்ளுணர்வை மட்டுமே நம்பிக் கொண்டிராமல், உடனே மருத்துவரைச் சென்று பார்ப்பதே நல்லது.

பச்சையான உணவுகள்

பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களில், நம் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மையளிக்கக்கூடிய ஏராளமான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இது பெரியவர்களுக்கு மட்டுமே பொருந்தும். பச்சைக் காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுப்பது ஆபத்தை உண்டாக்கும். முதலாவதாக, பழங்கள் மற்றும் காய்கறிகளை மென்று தின்பதென்பது குழந்தைகளுக்கு மிகவும் கடினம். இரண்டாவதாக, குழந்தைகளின் தொண்டையில் சிக்கிக்கொள்ளும் அபாயமும் இதில் உள்ளது. பெரிய அளவுடைய எவ்வகை உணவையும், முக்கியமாக வட்ட வடிவிலான பழங்கள் மற்றும் காய்கறிகளை, சிறு துண்டுகளாக்கி குழந்தைகளுக்கு கொடுப்பதே புத்திசாலித்தனம்.

தேன்

தேனில் ஏராளமான நற்பயன்கள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. தேனை உட்கொண்டால் அபரிமிதமான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கும். தொண்டை புண்ணுக்கு தேன் போன்ற அருமருந்து வேறில்லை என்பதை சிறு குழந்தை கூட அறியும். தேன் போன்ற உணவு வகைகளை உங்கள் குழந்தைக்கான உணவு அட்டவணையிலிருந்து நீக்கி விடுவதே நல்லது என்ற அறிவுரை உங்களுக்கு அதிர்ச்சியளித்தாலும், அதற்கு நீங்கள் செவி மடுப்பதே நல்லது. உங்கள் குழந்தைக்கு ஒரு வயதேனும் நிறைவடைந்திருந்தால் மட்டுமே தேனை, அதுவும் மிகச்சிறிய அளவே கொடுக்கலாம். ஏன் குழந்தைகளுக்கு தேன் மிகவும் ஆபத்தான ஒன்றாகக் கருதப்படுகிறது? இதனை உட்கொள்வதினால் பொட்டுலிஸம் என்ற நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பதே இதனைப் பற்றிய மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாகும்.

தேனில் மட்டுமே இருக்கக்கூடிய பிரத்யேகமான பாக்டீரியாவே இதற்கு காரணம். தேனை உட்கொள்ளும் அனைத்து குழந்தைகளுக்கும் இந்நோய் வரும் என்று அர்த்தமில்லை என்றாலும், வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

காப்ஃபைன் கலந்திருக்கும் பானங்கள்

சில பேர் இவ்வாறு கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட, காப்ஃபைன் நம் உடலுக்கு தேவையில்லாத வஸ்து என்பதே எங்கள் தாழ்மையான கருத்து. உண்மையில், இந்த வஸ்து இல்லாவிடிலும் கூட நம் உடல் நன்றாகவே செயல்படும். காப்ஃபைனை உட்கொள்வதன் மூலம் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவற்றை நம் உடலுக்கு நாம் அளிக்கப்போவதில்லை. இது ஆரோக்கியமான நம் வாழ்க்கை முறைக்கும், முக்கியமாக நம் ஆரோக்கியத்துக்கும் எவ்விதத்திலும் உதவப் போவதுமில்லை. காப்ஃபைன் கலந்திருக்கும் பானங்களை குழந்தைகள் அருந்தினால் பக்கவிளைவுகள் கட்டாயம் உண்டாகும் என்பது உறுதி. இதன் விளைவாக உங்கள் குழந்தைகள் வாந்தி, வீண் ஆர்ப்பாட்டம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவர். ஏன் உறக்கமின்மை நோயும் கூட ஏற்படலாம்.

இறுதியாக, எவ்விதமான திட உணவையும் உங்கள் குழந்தைக்கு கொடுக்கும் முன் குழந்தை நல மருத்துவர் ஒருவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம் என்பதை நான் சொல்லியாக வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு முன்னரே தெரிந்திடாத தகவல்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். எவ்வகை உணவுகள் பயனளிப்பவை, எவ்வகை உணவுகள் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதைப் பற்றி உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். சிறு குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத உணவு வகைகளைப் பற்றி உங்களுக்கு வேறு ஏதேனும் தெரிந்திருந்தால் தாராளமாக எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.





சகல நோய் நிவாரணி வில்வம் !!!



சகல நோய் நிவாரணி வில்வம் !!!

அனைத்து பாகங்களும் மருந்தாக பலன் தரும் தாவரங்களில் வில்வ மரமும் ஒன்று. இதன் இலை, பூ, காய், பழம், வேர், பிசின் பட்டை என அனைத்திலும் நோய் தீர்க்கும் மருத்துவ குணம் அடங்கியுள்ளது.

சிறுவர் முதல் பெரியோர் வரை தாக்கும் சிறு நோய்களானாலும் எளிதில் குணமடையா நோய்களானாலும் சிறந்த மூலிகை மருந்தாக செயல்படுகிறது இந்த வில்வ மரம். வில்வ மரத்தின் இலை காரத்தன்மை கொண்டவை. இதனை இடித்து பிழிந்த சாற்றில் பசும்பால் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் காய்ச்சல், சோகை, வீக்கம் குணமாகும். மூன்று இலைகளை சுத்தம்

செய்து தினமும் மென்று தின்று வந்தால் உட்செல்களிலுள்ள அனைத்து நோய்களும் அகலும். வில்வ இலையின் சாற்றுடன் அதே அளவு கல்யாண முறுங்கை சாற்றையும் சேர்த்து பருகிவர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். மேலும் பச்சை இலைகளாவும் உண்டுவர ஆஸ்துமா நோயையையும் கட்டுப்படுத்துகிறது.

வில்வ மரத்தின் காயை உலர்த்தி பொடி செய்து குழந்தைகளுக்கு சிறிதளவு கொடுத்துவர கழிச்சல், மூலநோய் நீங்கும். இதுபோல் காய்தூளை சிறிது வெள்ளத்துடன் சேர்த்து உண்டால் இரத்தத்தில் உள்ள அதிக கொழுப்பு, செரிமான குறைவால் ஏற்படும் அஜீரண வயிற்று வலி நீங்கும். வில்வ பழத்தின் சதையை உலர்த்தி காய வைத்து பொடி செய்து அதில் ஒரு கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து மூன்று வேளை உட்கொண்டு வந்தால் சீதபேதி, பசியின்மை ஆகியவையும் குணமாகும்.

மேலும் பழத்தை ஓடு நீக்கி பிழிந்து சர்க்கரை பாகில் காய்ச்சி சர்பத் செய்து குடித்துவர உடலின் வெப்பம் தணியும், அதிக வேர்வை ஏற்படுவதும் குறைகிறது. மேலும் மலச்சிக்கல் வராது தடுக்கிறது. இது போல் வில்வமரத்தின் பிசின் உடலுக்கு உரமேற்றும் வீரியத்தன்மை கொண்டது. வில்வ வேர் பட்டையை பச்சையாக ஒருகிராம் சீரகத்துடன் அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதனை 1 கப் பாலில் கலந்து வடிகட்டி காலையில் மட்டும் பருகிவர தாது பலப்படும்.

வில்வமரத்தின் பாகங்கள் சில நோய்களை முற்றாக குணப்படுத்தவல்லது. மேலும் சிறந்த கொலரா தடுப்பு மருந்தாகவும் வில்வமரத்தின் பாகங்கள் செயல்படுகின்றன.

குறிப்பு : மூலிகைச்சாற்றை இரண்டு வேளைகளுக்கு மேல் பருகக்கூடாது.

பல்வேறு நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் மிகச்சிறந்த மூலிகை மரமாக விளங்கும் வில்வமரங்கள் சீதோஷ்ண நிலையில் வளர்வதுடன் தற்போது இம்மரங்கள் அரிதாகவே காணப்படுகிறது. இம்மரங்களின் மருத்துவ குணம் குறித்த விழிப்புணர்வு குறைவால் அழிந்துவரும் நிலையில் உள்ளன. இதிலிருந்து மீட்டு வில்வமரங்களில் விதைகளை நடவு செய்து அனைத்து இடங்களிலும் வளரச் செய்ய வேண்டும்.

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

வேர்க்கடலை பூண்டு சட்னி



வேர்க்கடலை பூண்டு சட்னி

வறுத்த வேர்கடலை - 1 கப்
பூண்டு - 1 கப்
பச்சை மிளகாய் - 10
கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் - தாளிக்க
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, பச்சை மிளகாயை வதக்கவும்.
கடலையை மொறுமொறுப்பாக வறுக்கவும்.
வறுத்த வேர்கடலை, பூண்டு, பச்சை மிளகாயை உப்பு சேர்த்து அரைக்கவும்.
கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து வேர்க்கடலை விழுதில் சேர்க்கவும்.
வேர்க்கடலை சட்னி தயார்

தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (thengai poorna kolukattai)


தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (thengai poorna kolukattai)

தேவையான பொருட்கள் :

மாவு பச்சரிசி - 1 கப்
தேங்காய் -1 மூடி
வெல்லம் - 150 கிராம்
ஏலக்காய் - 5
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :

* மாவை பச்சரிசியை களைந்து நீர் வடித்து பின் ஒரு மணி நேரம் மூடி வைத்திருந்து பின் மிக்ஸியில் நைஸாக மாவாக அரைக்கவும்.

* மாவு எத்தனை கப் உள்ளதோ அந்த அளவு தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, நிதானமான தீயில் மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகளின்றி கிளறி இறக்கி ஆறிய பின் கையினால் அழுத்தி பிசைய வேண்டும். எல்லா வகை பூர்ணம் கொழுக்கட்டைகளுக்கும் மாவு தயாரிக்கும் விதம் இதுதான்.

* கொதி நீரில் கரைத்து வடிகட்டிய வெல்ல நீருடன் தேங்காய் பூ சேர்த்து கிளறி ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் வற்றி வரும் போது இறக்கவும்.

* மாவை வாழையிலையில் தட்டி நடுவில் பூர்ணம் வைத்து கிண்ணம் போல் குவித்து மூட வேண்டும்.

* இட்லித்தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைக்க எடுக்க வேண்டும்.

* தேங்காய் பூர்ண கொழுக்கட்டை ரெடி.

சமைத்த உணவுகளின் சுவையை சரிப்படுத்துவது எப்படி?*



சமைத்த உணவுகளின் சுவையை சரிப்படுத்துவது எப்படி?*

குழம்பு ரசம் செய்யும்போது உப்பு, காரம் கூடிவிடும் அல்லது குறைந்துவிடும். குறைந்தால் அதை சேர்ப்பதன் மூலம் சரி செய்யலாம். ஆனால் கூடுதலாக இருந்தால் வயிற்றுக்குள் செல்வதற்கு பதில் நேராக குப்பைத்தொட்டிக்கு போய்விடுமே.... அதை எப்படி சரி செய்யலாம் என்று ஒரு சில ஐடியாஸ்.

 *உப்பு:*

காரத்தையும் புளிப்பையும் அதிகரித்தால் உப்பு சுவை குறையும். அதனால் குழம்பில் உப்பு கூடினால் இன்னும் கொஞ்சம் புளியைக்கரைத்து கொதிக்க விடலாம்.

அல்லது எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கலாம்.

அல்லது தக்காளியை (கொஞ்சம் பழுத்தது கிடைத்தால் நல்லது) பொடியாக நறுக்கி தனியாக வதக்கிச் சேர்த்து கொதிக்க விடலாம்.

சில வகை குழம்புகளுக்கு பச்சை மிளகாய்களை பாதியாக பிளந்து (slit the chillies) அல்லது சிவப்பு மிளகாய்கள் என்றால் ரெண்டாக கட் செய்து தாளிப்பில் சேர்த்தாலும் உப்பு குறையும்.

மோர்க்குழம்பு போன்றவை செய்யும் போது உப்பு கூடினால் கவலையே வேண்டாம், இன்னும் ஒரு கப் தயிர் சேர்த்துவிடலாம். தயிர் இல்லை என்றாலும் கொஞ்சம் புளியைக் கரைத்து கொதிக்க விட்டு சேர்க்கலாம்.


பருப்பு குழம்பு/சாம்பார் என்றால் முள்ளங்கியை தோல் சீவி வில்லை வில்லையாக நறுக்கி சேர்த்து கொதிக்க விடலாம். இது சில வகை குழம்புக்குதான் ருசிக்கும்.


ஒரு உருண்டை சாதத்தை உருட்டி குழம்பில் போட்டு வைத்தால் உப்பு சரியாகும்.


உருளைக்கிழங்கு சேர்க்கக் கூடிய ஐடெம் என்றால் உருளையை தோல் சீவி நீளநீளமாக வெட்டி சேர்க்கவும். இது உப்பு சுவையை குறைப்பதுடன் உணவின் சுவையையும் அதிகரிக்கும்.

காய்களை வதக்கும்போது உப்பு கூடினால் தேங்காயை துருவி வதக்கலாம். இது கிழங்கு போன்றவைகளுக்கு சரி வராது என்பதால் கடலை மாவு எடுத்து வறட்டு வாணலியில் மணமாக வறுத்து அதிகப்படி உப்புக்குத் தகுந்த காரம் சேர்த்து கூடவே அரை ஸ்பூன் தனியா பொடி, விரும்பினால் மசாலா பொடி, ஆம்சூர் பொடி சேர்த்து மேலே தூவி இன்னும் ரெண்டு நிமிடம் அதிகமாக வதக்கினால் சரியாகும்.

கீரை கூட்டு செய்யும்போது உப்பு கூடிப்போகும். கீரை போன்ற leafy vegetables இயற்கையிலேயே உப்புச் சுவை கொண்டதாக அமையும். அதனால் எப்போதும் கீரை சமைக்கும்போது உப்பு மிக மிகக் குறைவாக போடவும். அதுவும் கீழே இறக்கி வைத்த பின் உப்பு சேர்ப்பதுதான் நல்லது.

 *சட்னியில் உப்பு கூடினால் என்ன பண்ணுவது?*

ஒரு உருளைக்கிழங்கை நறுக்கி சட்னியில் போட்டு வைத்தால் அது அதிகப்படி உப்பை உறிஞ்சிவிடும். குழம்பிலும் இது வொர்க்காகும்.
அல்லது இன்னும் ஒரு மிளகாய், புதினா, கொத்தமல்லி தழை, தக்காளி வெங்காயம் என்று ஏதாவது ஒன்றை சேர்த்து அரைத்தாலும் உப்பு அட்ஜஸ்ட் ஆகிவிடும். (தக்காளி வெங்காயம் சேர்ப்பதானால் லேசாக வதக்கி சேர்ப்பது நல்லது)

 *வடைக்கு மாவு அரைக்கும்போது ஞாபக மறதியால் ரெண்டு முறை உப்பு போட்டுவிட்டால் என்ன செய்யலாம்?*

மறுபடி கொஞ்சம் உளுந்து ஊறவைத்து அரைத்துக் கலக்கலாம். ஆனால் தேவைக்கு அதிகமான மாவை வைத்துக்கொண்டு என்ன பண்ணுவது? அது போல சமயங்களில் நிறைய காய்கறிகள், உதாரணத்துக்கு கீரை, குடைமிளகாய், கோஸ், வெங்காயம், காரட் போன்ற காய்கறிகள் நறுக்கி சேர்த்துவிடலாம். நிறைய காரம் அதாவது பச்சை மிளகாய் சேர்க்கவும் மறக்க வேண்டாம். இது ஒரு வகையில் உப்பைக் குறைத்துக் காட்டும்.

இதையும் விட சுலபமான ஒரு வேலை இருக்கு. நாலு பிரட் ஸ்லைஸ் எடுத்து தண்ணீரில் நனைத்துப் பிழிந்து மாவில் சேர்த்துவிட்டால் உப்பு குறையும்.

 *டிப்ஸ்*

எப்போதும் வடைக்கு அரைக்கும்போது மிளகாய் உப்பு சேர்த்து தனியாக மிக்சியில் அரைத்து வைத்தால் அரைக்கும்போதே மாவில் கலந்துவிடலாம். அரைக்க தெளிக்கும் தண்ணீரை விட இது போல் செய்தால் உப்பு விட்டுக்கொள்ளும் நீரே அரைக்கவும் போதுமானதாய் இருக்கும்.

 *கடைசியாக ஒரு வார்த்தை:*

உப்பு டப்பாவில் எப்போதும் சிறிய அளவு ஸ்பூன்களை போட்டு வைப்பது நல்லது. அசந்து மறந்து கூட உப்பு கூடிப்போனது என்ற தவறு நேராது.

 *கொசுறாக ஒரு டிப்ஸ்:*

குழம்பில் உப்பு போட்டோமா, போடவில்லையா என்று சாப்பிட்டுப் பார்க்காமலேயே கண்டுபிடிக்கலாமாம். உப்பு போடவில்லை என்றால் குழம்பு ஓரங்களில் கொதிக்கும். உப்பு போட்டிருந்தால் நடுவில் கொதிக்குமாம். வலையில் பிடித்த டிப் இது. இதை ஆராய்ச்சி செய்ய நினைத்தால் செய்யுங்கள்.



*காரம்*

 *பதார்த்தங்களில் காரம் அதிகமாகி விட்டால் என்ன செய்யலாம்?*

உப்பு கொஞ்சம் சேர்க்கலாம். புளிப்பு கொஞ்சம் சேர்க்கலாம்.

குழம்பு போன்றவை என்றால் புளி பேஸ்ட் அல்லது லெமன் ஜூஸ் சேர்க்கலாம்.

எதுவுமில்லையா? அரை ஸ்பூன் ஆம்சூர் பொடி சேர்ப்பதும் நல்லது.
ரெண்டு தக்காளிப் பழம் நறுக்கி போடலாம்.

தேங்காய் பால் விட்டால் காரம் குறைந்து சுவையைக் கூட்டும்.

ஒரு சிறு கட்டி வெல்லம் அல்லது ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்ப்பதும் காரத்தைக் குறைக்கும்.

வெண்ணெய், நெய், தயிர், தேங்காய், வெல்லம், உப்பு, பால், தக்காளி, புளி, எலுமிச்சை ஜூஸ், ஆம்சூர் பொடி, அனார்தானா பொடி இவைகளை வைத்து நாம் செய்த டிஷ்ஷுக்கு தகுந்த மாதிரி சேர்ப்பது காரத்தைக் குறைக்கும்.

உதாரணமாக சப்பாத்திக்கு செய்த சைடு டிஷ் என்றால் அதில் பால் (ஏடு படிந்த பால் என்றால் மலாய் என்று பெயர் சூட்டுவதற்கு வசதியாக இருக்கும்) சேர்க்கலாம். வெண்ணை சேர்க்கலாம். ஆம்சூர், அனார்தானா(மாதுளை பொடி) சேர்ப்பது புளிப்பைத் தந்து சமையலையும் ருசியாக்கும்.

காய்களை வதக்கும்போது காரம் குறைய தேங்காய் பூவை போடலாம்.

குழம்பு என்றால் தேங்காய் பால், தேங்காயை அரைத்த விழுது, தேங்காய் பால் பவுடர் என்று எதுவானாலும் சேர்க்கலாம். மேலே சொன்ன ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையைத் தரும்.

 *சட்னியில் காரம் அதிகமானால் என்ன செய்யலாம்?*

சட்னியில் காரம் அதிகம் என்றால் இன்னும் கொஞ்சம் பொட்டுக்கடலை தேங்காய் துருவல் உப்பு சேர்த்து அரைக்கவும். மேலே எலுமிச்சை ஜூஸ் அல்லது புளிக்கரைசலும் வேண்டியிருந்தால் சேர்க்கலாம்.
இன்னும் கொஞ்சம் தேங்காய் வைத்து அரைக்கலாம். அல்லது ஒரு பிடி வறுத்த வேர்க்கடலை வைத்து அரைக்கலாம். அல்லது ஒரு பிடி முந்திரிப் பருப்புகளை அரைத்துக் கலக்கலாம்.


 *தேங்காயே இல்லை, ஆனால் சட்னி சரியாக வேண்டும் என்றால் என்ன பண்ணலாம்?*

அதுக்கும் இதே வழிதான். வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, அல்லது வீட்டில் marie பிஸ்கட் இருந்தால் அதுவும் தேங்காய்க்கு நல்ல ஒரு substitute ஆக இருக்கும்.

 *கடைசியாக ஒரு வார்த்தை:*

சமைக்கும்போது காரத்தை கூடுமானவரை குறைத்து சேர்த்துக்கொள்வது நல்லது. காரம் குறைந்தால் ரெண்டு மிளகாயை தாளித்தோ மிளகுப்பொடி சேர்த்தோ சமாளிக்கலாம். அதிகப்படி காரத்தை குறைக்க வழி தேடுவதற்கு பதில் காரம் குறைவு என்பது பெரிய குறையாகத் தெரியாது.




 *புளிப்பு*

 *குழம்பில் புளிப்பு அதிகம் ஆனால் என்ன செய்வது?*

ஒரு துண்டு வெல்லம் போட்டால் புளிப்பு குறையும்.
அல்லது வெங்காயம் வதக்கி சேர்த்தாலும் புளிப்புச் சுவை குறையும்.

உப்பு, காரத்தை அதிகரித்தால் புளிப்பு சுவை குறையும்.

 *புளிப்பு குறைந்தால்?*

ஆம்சூர் பொடி போடலாம் அல்லது லெமன் ஜூஸ் சேர்க்கலாம்.


புளிப்பு என்ற தலைப்பில் பலருக்கும் ஏற்படக்கூடிய ஒரு அனுபவம், இட்லி தோசை மாவுகள், தயிர் சாதம், தயிர் மோர் போன்றவை எக்கச்சக்கமாக புளித்து விடுகிறதே, அதை எப்படி சமாளிப்பது என்பதுதான். இப்படி சிலருக்கு கவலை என்றால் வெளிநாட்டில், குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கு வேறு வித கவலை. இட்லி தோசை மாவுகள், தயிர் சாதம், தயிர் மோர் போன்றவை புளிக்க மாட்டேன் என்கிறதே, இதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று. இந்த டிப்ஸ் எழுதினால் அது ஒரு தனி thread அளவுக்கு போகும். இருந்தாலும் இங்கே சிலவற்றை எழுதுகிறேன்.

 *முதலில் இட்லி மாவு அதிகம் புளிக்காமளிருக்க டிப்ஸ்:*

மாவு அரைத்ததும் கொஞ்சம் சர்க்கரை தூவி வைத்தால் அதிகம் புளிக்காமல் இருக்கும்.

இட்லி செய்த பின் மீதி மாவில் பால் கலந்து வைத்தால் புளிக்காமல் இருக்கும்.

இட்லி செய்து மிகுந்த மாவில் நீர் ஊற்றி வைத்தால் புளிக்காது. மறுபடி இதை இட்லி செய்ய முடியாது என்றாலும் மேலே உள்ள நீரை இறுத்துக்கொட்டிவிட்டு தோசையாக செய்யலாம்.

 *இட்லி மாவை புளிக்கவைக்க டிப்ஸ்:*

இட்லி மாவு புளிக்கவில்லை என்றால் ஒரு cassaroleல் வேண்டிய மாவை போட்டு மூடி வைக்கலாம். சரியான பதத்தில் புளித்து பூப் போல இட்லியும் கிடைக்கும்.

அரைத்த உடன் பாதி மாவை புளிக்காமலேயே எடுத்து பிரிட்ஜில் வைத்துக்கொண்டால் வேண்டிய போது cassaroleல் வைத்து புளிக்கவிடலாம்.

தோசைக்கு மாவு அரைத்ததும் கிரைண்டரை கழுவி அந்த நீரை கஞ்சி போல் காய்ச்சி மாவில் சூட்டுடன் கலந்தால் மாவு புளித்து விடும்.

 *தயிர் புளிக்காமல் இருக்க:*

cassarole ல் வெதுவெதுப்பான (warm) பாலை ஊற்றி தோய்த்தால் சீக்கிரத்தில் புளிக்காது. தயிரும் பாறை போல் கெட்டியாகத் தோயும்.

மோர் புளிக்காமல் இருக்க, (சில சமயம் பிரிட்ஜ் இருந்தும் பவர் கட் புண்ணியம் கட்டிக்கொள்ளும் சமயங்களில்) மோரில் நிறைய நீர் சேர்த்து வைக்கவும். சாப்பிடும் முன் அந்த தெளிந்த நீரை இறுத்துவிட்டு மோர் சாப்பிட புளிக்காத மோர் கிடைக்கும். இந்த நீரில் பித்தளை (Brass) பாத்திரங்கள், விளக்குகள் இருந்தால் அதை ஊற வைத்து தேய்த்தால் பளிச் பளிச்தான்.

 *தயிர் தோய்க்க/புளிக்க வைக்க டிப்ஸ்:*

தயிர் தோயாமல் அப்படியே இருக்கும் சில ஊர்களில். அல்லது கொஞ்சத்தில் தோயாமல் ஆட்டம் காட்டும். அது போல் சமயங்களில் பாலைக் காய்ச்சி வெதுவெதுப்பான நிலையை விட அதிகம் சூடு இருக்கும்போதே சாதாரணமாக தோய்க்க கலக்கும் தயிரைவிட அதிக அளவு தயிர் சேர்த்து தோய்க்கலாம். அப்படி செய்யும்போது ஒரு சிவப்பு மிளகாயை பாலில் போட்டுவிடுங்கள். சீக்கிரத்தில் தோய்வதுடன் கட்டியாகவும் தோயும். சாப்பிடும் முன் மிளகாயை எடுத்து எறிந்துவிடவும்.

பாலை உறை ஊற்றி மைக்ரோவேவ் அவனிலோ, OTG அவனிலோ (ஆன் செய்யாமல்) வைத்து விட்டால் தோய்ந்துவிடும்.

குளிர் பிரதேசம் என்றால் ஒரு கம்பளியால் பால் உறை ஊற்றிய பாத்திரத்தை கவர் செய்துவிட்டால் தயிர் தோயும்.

 *தயிர் சாதம் புளிக்காமல் இருக்க:*

சாதம் பிசையும்போது சாதத்தை சூடாக இருக்கும்போதே தயிர் சேர்த்தால் புளித்து விடும். அதனால் சாதத்தை நன்றாக மசித்துப் பிசைந்து பின் ஆற விட்டு தயிர் சேர்க்கலாம்.

அல்லது, சாதத்தை பால் விட்டுப் பிசைந்து கடைசியில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் புளிக்கவே புளிக்காது.

ஒரு துண்டு தேங்காயை சாதத்தில் போட்டு வைத்தாலும் தயிர் சாதம் புளிக்காமல் இருக்கும்.

சாதம் பிசையும்போது ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துப் பிசைந்தால் மோர் சாதம் என்றாலும் தயிர் சாதம் போல் ரிச் taste தருவதுடன் புளிக்காது.


*இனிப்பு*

பாயசங்களில் இனிப்பு கூடுதல் குறைச்சல் நீர்த்துப் போதல் என்று எவ்வளவோ தவறுகள் ஏற்படும். அப்போது என்ன செய்யலாம்?
பாயசம் செய்தால் இனிப்பு குறைவு என்றால் தேன் அல்லது ஒரு வாழைப்பழம் கனிந்தது மசித்துக் கலக்கலாம்.

இனிப்பு அதிகம் என்றால் பாயசம் நீர்த்தது போல் ஆகிவிட்டது என்றால் சூடான பச்சரிசி சாதம் பாயசத்துக்கு தகுந்தாற்போல் ஒரு கரண்டி அல்லது ரெண்டு கரண்டி எடுத்து நன்றாக மசித்து (வேண்டுமானால் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கலாம்) கொஞ்சம் பாலுடன் வேக வைத்து கெட்டிப் பட்டதும் பாயசத்தில் கலந்து விடலாம். அதிக இனிப்பு என்றால் மசித்த சாதத்தை நேரடியாக பாயசத்தில் கலந்து இன்னும் கொஞ்சம் பால் சேர்த்தால் போதும்.

நீர்த்துப் போன பாயசம் என்றால் அளவாகப் பால் விட்டு சாதம் பாலில் வெந்து கெட்டிப்பட்டதும் சேர்க்கலாம். இது எந்த வகை பாயசத்துக்கும் சரி வரும்.

மேலே சொன்ன முறைப்படி பாயசம் நீர்த்தால் தேன், வாழைப்பழம் ரெண்டையும் சேர்த்தாலும் பாயசம் கெட்டிப்படுவதுடன் சுவையையும் புதுமையாக்கும்.

கேசரி போன்ற இனிப்புகளில் சர்க்கரை அதிகமானால் ஒரு ஸ்பூன் கடலை மாவை வறட்டு வாணலியில் மணமாகப் பொறித்து சேர்த்தால் இனிப்பும் மட்டுப்படும், சுவையும் கூடும்.

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

முட்டை மஞ்சள் கரு நல்லது... எப்படி?


முட்டை மஞ்சள் கரு நல்லது... எப்படி?

முட்டை... பல காலமாக சர்ச்சைக்குப் பேர் போன ஓர் உணவு. இது சைவமா, அசைவமா... பிளாஸ்டிக் முட்டை... நாட்டுக்கோழி முட்டையில் கலப்படம்... வெள்ளைக்கரு நல்லதுதானா... அழுகிய முட்டையை சாப்பிடலாமா... என முட்டை குறித்து நீண்டுகொண்டே போகிறது சர்ச்சைப் பட்டியல். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் `பிக் பாஸ்’ வீட்டுக்குள் முட்டை காணாமல் போவதும் நிகழ்கிறது. அதிலும் ‘முட்டையின் மஞ்சள் கருவை ஒதுக்குகிறார்கள்’ என்று இது குறித்த ஆரோக்கியப் பேச்சுகள் எழுகின்றன. உண்மையில், இது நமக்கு எந்த அளவுக்கு அவசியம், இதன் மஞ்சள் கரு நல்லதா, இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன, இதனால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்... அனைத்தையும் விரிவாக விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் பத்மினி...

புரதச்சத்து நிறைந்தது, மலிவான விலையில் கிடைப்பது, எல்லோராலும் உண்ணக்கூடியது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும் தாய்ப்பாலுக்கு அடுத்த இடத்தில் இருப்பது முட்டை. இயற்கையாகவே நம் உடலுக்கு வைட்டமின் டி-யை அள்ளித்தரும் முட்டையின் மஞ்சள்கருவைப் பலரும் வேண்டாம் என்று ஒதுக்குவார்கள்.

இப்போது அசைவம் சாப்பிடாதவர்கள்கூட, முட்டையை உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். காரணம், முட்டையில் இறைச்சிக்கு நிகரான கொழுப்பும் புரதமும் நிறைந்துள்ளன. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உடனடியாக புரதம் மற்றும் கொழுப்பு கிடைக்கச் சிறந்த உணவு முட்டை.

ஆனால், எப்போதும் பலர் செய்யும் ஒரே தவறு, முட்டையின் மஞ்சள்கருவை ஒதுக்குவது. முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்தை வைத்துக்கொண்டு பலரும் மஞ்சள் கருவைத் தவிர்த்து, வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுகிறார்கள்.

உண்மையில், முட்டையின் வெள்ளைக் கருவைவிட மஞ்சள்கருவில்தான் அதிக ஊட்டச்சத்துத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஏ, பி, இ, டி மற்றும் கே, அமினோ அமிலங்கள், ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கோலின், செலினியம், துத்தநாகம் போன்றவை நிரம்பியுள்ளன.

மஞ்சள் கரு, சில தகவல்கள்...

* கோழியின் உணவைப் பொறுத்து அதன் மஞ்சள்கருவின் அடர்த்தி இருக்கும்.

* ஆரோக்கியமான உடலமைப்பைப் பெற உதவும்.

* வெள்ளைக் கருவில் புரதம் மட்டுமே நிறைந்துள்ளது. ஆனால், மஞ்சள்கருவில் புரதமும் கொழுப்பும் நிறைந்துள்ளன.

* இதில் உள்ள வைட்டமின் கே, எலும்புகளுக்கு வலுகொடுக்கும். ஆஸ்டியோபோரசிஸ் வராமல் தடுக்கும்.

* மஞ்சள்கருவில் உள்ள செலினியம் மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

* ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். உடலில் ஆக்சிஜன் சீராகப் பரவ உதவும்.

* இதில் நிறைந்துள்ள கோலின் ஊட்டச்சத்து, மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். முதுமையில் வரும் கண்புரையைச் சரிசெய்யும். அல்சைமர் மற்றும் மனஅழுத்தத்துக்கு நிவாரணம் தரும்.

* மஞ்சள்கருவில் உள்ள கோலின் ரத்த நாளங்களைப் பாதிக்கும் ஹோமோசைஸ்டின் அளவை (Homocysteine Level) ஒழுங்குபடுத்தும். மேலும், இது ஆன்டிஇன்ஃப்ளாமேட்டரியாகச் (Anti-inflammatory) செயல்பட்டு இதய நோய்கள் வராமல் தடுக்கும்.


* நாள் ஒன்றுக்கு ஒரு மனிதனுக்குத் தேவையான கொழுப்பின் அளவு 300. இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் 200 கிராம் எடுத்துக்கொள்ளலாம். இந்தக் கொழுப்பின் அளவைச் சரிவிகித உணவின் மூலம் பெறுவது நல்லது.

* உண்மையில், மஞ்சள் கரு கொலஸ்ட்ராலைக் குறைக்கும். மஞ்சள் கருவில் உள்ள , கல்லீரலில் உற்பத்தியாகும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்க உதவும்.

* வாரத்துக்கு நான்கு முதல் ஐந்து மஞ்சள்கருவைச் சாப்பிடலாம். அதை வேகவைத்துச் சாப்பிடுவது சிறந்தது.

* முட்டையின் மஞ்சள்கருவில் கொழுப்பு சற்று அதிகம் இருப்பதால், வயிற்றுப் பகுதியில் மட்டும் சதை அதிகரிக்கும். வயிற்றுப் பகுதொயை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஓடி, ஆடி வேலை செய்யலாம். உடற்பயிற்சி, உடல் உழைப்பு இவையே இப்படி சதை போடுவதைத் தவிர்க்கப் போதுமானது.

கருப்பட்டி காபி / Karuppatti Coffee


கருப்பட்டி காபி / Karuppatti Coffee

தேகத்துக்கு உற்சாகமும், பரவசமும் ஊட்டும் கருப்பட்டி காப்பியின் சுவையோ அலாதி. இதுவரை சுவைத்திராவிட்டால் இன்றே பருகுங்கள் அதன் சுவையும் குணமும் புரியும்.

 நம் முனோர்கள் எதையும் காரணம் இன்றி உட்கொள்ள வில்லை, தினம் எழுந்தவுடன் காப்பி அருந்தினர், காரணம் அன்றைய வேலைகளை சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் செய்து முடிக்க இது நம்மை தயார் படுத்துகிறது.

 கருப்பட்டியில் உள்ள இயற்கையான இனிப்பு வெள்ளை சர்கரையை விட அதிக நன்மை வாய்ந்தது. வெள்ளை சர்க்கரையோடு ஒப்பிடும் போது எந்த இரசாயனமும் கலக்காமல், அல்லது செயற்கை பொருட்கள் இல்லாமல் பதப்படுத்தப்பட்டது எனவே, இது ஒரு ஆரோக்கியமான மற்றும் இயற்கையாக இனிக்கும் தன்மை உடையது.

வெள்ளை சர்க்கரையில் மற்ற சத்துக்கள் அகற்றப்பட்டு, இனிப்பு சுவை மட்டுமே உள்ளது.

கருப்பட்டியில் மருத்துவ
 குணமும் அதிகம்:

1.எந்த காலத்திற்கும் ஏற்றது, குளிர் காலம், வெய்யில் காலம் என எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம்.

2. வரட்டுஇருமல் மற்றும் சளி தொந்தரவுக்கு நல்ல மருந்தாக பயன்படுத்தலாம்.

3.சுவாசக்குழாய் சுத்தம் செய்யும் தன்மையுடையது.
ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகள் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நபர் பனை வெல்லம் எடுக்க அது குணமடையும்.

4.கால்சியம், இரும்பு மற்றும் மற்ற பயனுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது.

5.நீரழிவால் அவதியுறும் மக்கள் போதுமான அளவு பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
அது காபி, டீ, முதலியன தயாரிப்பில் சர்க்கரைக்கு ஒரு மாற்றாக பயன்படுத்தப்படும்

6.மலச்சிக்கல் நிவாரணம் மற்றும் ஒற்றைத்தலைவலியை குறைக்க உதவுகிறது

7.எடை குறைக்க உதவுகிறது, உடலில் பருவகால விளைவுகள், மாற்றங்களை சீர் படுத்த உதவுகிறது.

8.இயற்கை சுத்தப்படுத்தி என்றும் கூறப்படுகிறது.


செய்யத்தேவையான பொருட்கள்:

கருப்பட்டி-1 மேஜைக்கரண்டி

சுக்கு -1/4 தேக்கரண்டி

காப்பித்தூள் -3/4 தேக்கரண்டி அல்லது புதிய காபி டிக்காசன் 1 மேஜைக்கரண்டி

காய்ச்சிய பால் 1/4 கோப்பை,
 தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை:

1 கோப்பை தண்ணீரில் கருப்பட்டி சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி தயாராக வைக்கவும்.

அதில் சுக்குப்பொடி, காப்பி பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.

 தேவைப்பட்டால் காய்ச்சிய பால் சேர்த்துக்கொள்ளலாம்.

வாழைப்பூ குழம்பு



வாழைப்பூ குழம்பு

தேவையானவை: வாழைப்பூ - நான்கு மடல்கள், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை ஆய்ந்து நடுவில் உள்ள நரம்பை எடுத்து பொடியாக நறுக்கிகொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு வாழைப்பூவை வதக்கிக்கொள்ளவும். புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் வதக்கிய வாழைப்பூ, வேகவைத்த பருப்பு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து சேர்த்து இறக்கவும்.

30 வகை குழம்பு


30 வகை குழம்பு

நம் அன்றாட உணவில் கட்டாயம் இடம்பெறுவது குழம்பு. ``தினமும் குழம்பு சாதமா?’’ என்று உதடு பிதுக்குபவர்கள்கூட, அதில் சுவையும் மணமும் தூக்கலாக இருந்தால்... `ஒன்ஸ்மோர்’ கேட்டு `அடுத்த ரவுண்ட்’டுக்கு தயாராகிவிடுவார்கள். கைப்பக்குவத்தில்தான் இருக்கிறது சூட்சுமம்! சமையல்கலையில் நீண்டகால அனுபவமும், அளவற்ற ஆர்வமும் கொண்ட நங்கநல்லூர் பத்மா, இந்த இணைப்பிதழில் உங்களுக்காக சாம்பார், வற்றல் குழம்பு, மோர்க்குழம்பு, மசியல், பிட்லை, மிளகூட்டல் என விதம்விதமாக தயாரித்து, `குழம்பு மேளா’வே நடத்தி அசத்துகிறார்.
உங்கள் டைனிங் அறையில் பாராட்டுக் குரல்கள் ஒலிக்கட்டும்!

மணத்தக்காளி வற்றல் குழம்பு

தேவையானவை: மணத்தக்காளி வற்றல் - 4 டீஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, வெந்தயம், கடலைப்பருப்பு, கடுகு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியை 200 மில்லி தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத் தூள், வெந்தயம் சேர்த்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, சாம்பார் பொடி சேர்த்து வறுக்கவும். பிறகு, மணத்தக்காளி வற்றலையும் போட்டுக் கிளறி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு... கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

அப்பளக் குழம்பு

தேவையானவை: புளி - எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், அப்பளம் - 2, கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, அப்பளத்தை ஒன்று இரண்டாக உடைத்துப்போட்டு, சாம்பார் பொடியை சேர்த்து வறுக்கவும். பிறகு, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
காய்கறிகள் கைவசம் இல்லாத சமயத்தில், இந்தக் குழம்பு கை கொடுக்கும்.

கறிவேப்பிலை குழம்பு
தேவையானவை: கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு, மிளகு - 10, காய்ந்த மிளகாய்  - 2, உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சைப் பழ அளவு, எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை வதக்கிக்கொள்ளவும். அதே வாணலியில் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை வறுத்துக்கொள்ளவும். இவற்றுடன் புளியை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து தேவையான உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கரைத்து வைத்ததை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
சூடான சாதத்துடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். சுட்ட அப்பளம் இதற்கு சிறந்த காம்பினேஷன்.

சுண்டைக்காய் சாம்பார்

தேவையானவை: பச்சை சுண்டைக்காய் - 100 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், புளி -  எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் -  தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பை வேகவைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சுண்டைக்காயை தட்டிப் போட்டு வதக்கவும். புளியைக் கரைத்து இதனுடன் சேர்த்து... உப்பு, சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, வேகவைத்த பருப்பை சேர்க்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பை தாளித்து சேர்த்து, பெருங்காயத்தூளையும் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

கலவைக் காய் சாம்பார்

தேவையானவை: அவரைக்காய் - 4, பறங்கிக்காய் - ஒரு சிறு துண்டு, கத்திரிக்காய், கேரட், பச்சை மிளகாய் - தலா ஒன்று, புளி -  எலுமிச்சைப் பழ அளவு, துவரம்பருப்பு - 100 கிராம், சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பை வேகவைக்கவும். அவரைக்காய், பறங்கிக்காய், கத்திரிக்காய், கேரட் ஆகிய வற்றை நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய காய்கறிகள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி,  புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்கவைக்கவும். காய்கள் வெந்ததும் துவரம்பருப்பை சேர்த்து, நன்கு கொதித்த உடன் இறக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்க்கவும்.

சின்ன வெங்காய சாம்பார்

தேவையானவை: சின்ன வெங்காயம் - 20 (தோல் உரிக்கவும்), புளி - எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பை குழைவாக வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை சிறிது வதக்கி, கொஞ்சம் தண்ணீர் விட்டு, கொதித்ததும் புளியைக் கரைத்து ஊற்றி... உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த பருப்பை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.  எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.

மிளகு மோர்க்குழம்பு

தேவையானவை: கெட்டியான மோர் - 500 மில்லி, மிளகு - 10, காய்ந்த மிளகாய் - 2, வெந்தயம், அரிசி - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப், எண்ணெய் - உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு... மிளகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், அரிசியை  வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைக்கவும். இந்த விழுதை மோருடன் கலந்து, உப்பு சேர்த்து வாணலியில் ஊற்றி ஒரு கொதி விட்டு... சிறிதளவு எண்ணெயில் கடுகை தாளித்து இதனுடன் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: இதை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம். தேவைப்பட் டால், வேகவைத்த சேப்பங் கிழங்கு சேர்த்து செய்யலாம்.

கலவைக் கீரைக்குழம்பு

தேவையானவை: முருங்கைக்கீரை, முளைக்கீரை, தூதுவளைக் கீரை - தலா ஒரு கைப்பிடி அளவு, துவரம்பருப்பு - 100 கிராம், புளி - எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி - இரண்டு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். கீரைகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கீரைகளை வதக்கிக்கொள்ளவும். வாணலியில் புளியைக் கரைத்து ஊற்றி... சாம்பார் பொடி, உப்பு போட்டு கொதிக்கவிடவும். இதனுடன் வதக்கிய கீரையை சேர்த்துக் கிளறி, வேகவைத்த பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: கீரைகளை அடிக்கடி உணவில் சேர்ப்பது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

மொச்சை சாம்பார்

தேவையானவை: உலர் மொச்சை - 100 கிராம், சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், புளி -  எலுமிச்சைப் பழ அளவு, தேங்காய்த் துருவல் - சிறிய கப், கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,  தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மொச்சையை 5 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை குழைவாக வேகவிடவும். தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக் கவும்.
புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு, வேகவைத்த மொச்சை சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த பருப்பு, அரைத்து வைத்த  விழுது சேர்த்துக் கலந்து, மேலும் கொதிக்கவிடவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும். கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.

தேங்காய்ப்பால் சொதிக்குழம்பு

தேவையானவை: பீன்ஸ் - 5, கேரட், குடமிளகாய், பச்சை மிளகாய் - தலா ஒன்று, தேங்காய்ப்பால் - 100 மில்லி, கடுகு, வெந்தயம், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு
செய்முறை: பீன்ஸ், குடமிளகாய், கேரட், பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கவும். காய்களை, சிறிது எண்ணெய் விட்டு தேவையான உப்பு சேர்த்து வதக்கி, தேங்காய்ப்பால் சேர்த்து... கடுகு, வெந்தயம் தாளித்து இறக்கவும்.
குறிப்பு: தேங்காய்ப்பால் சொதிக்குழம்பு, இடியாப்பத்துக்கு சிறந்த காம்பினேஷன்.

கலவைக் காய் சாம்பார்



கலவைக் காய் சாம்பார்

தேவையானவை:

அவரைக்காய் - 4, பறங்கிக்காய் - ஒரு சிறு துண்டு, கத்திரிக்காய், கேரட், பச்சை மிளகாய் - தலா ஒன்று, புளி -  எலுமிச்சைப் பழ அளவு, துவரம்பருப்பு - 100 கிராம், சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

துவரம்பருப்பை வேகவைக்கவும். அவரைக்காய், பறங்கிக்காய், கத்திரிக்காய், கேரட் ஆகிய வற்றை நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய காய்கறிகள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி,  புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்கவைக்கவும். காய்கள் வெந்ததும் துவரம்பருப்பை சேர்த்து, நன்கு கொதித்த உடன் இறக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்க்கவும்

சுண்டைக்காய் சாம்பார்



சுண்டைக்காய் சாம்பார்

தேவையானவை:

 பச்சை சுண்டைக்காய் - 100 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், புளி -  எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் -  தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

துவரம்பருப்பை வேகவைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சுண்டைக்காயை தட்டிப் போட்டு வதக்கவும். புளியைக் கரைத்து இதனுடன் சேர்த்து... உப்பு, சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, வேகவைத்த பருப்பை சேர்க்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பை தாளித்து சேர்த்து, பெருங்காயத்தூளையும் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்

கறிவேப்பிலை குழம்பு


கறிவேப்பிலை குழம்பு

தேவையானவை:

கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு, மிளகு - 10, காய்ந்த மிளகாய்  - 2, உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சைப் பழ அளவு, எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை வதக்கிக்கொள்ளவும். அதே வாணலியில் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை வறுத்துக்கொள்ளவும். இவற்றுடன் புளியை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து தேவையான உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கரைத்து வைத்ததை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
சூடான சாதத்துடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். சுட்ட அப்பளம் இதற்கு சிறந்த காம்பினேஷன்

அப்பளக் குழம்பு


அப்பளக் குழம்பு

தேவையானவை: புளி - எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், அப்பளம் - 2, கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, அப்பளத்தை ஒன்று இரண்டாக உடைத்துப்போட்டு, சாம்பார் பொடியை சேர்த்து வறுக்கவும். பிறகு, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
காய்கறிகள் கைவசம் இல்லாத சமயத்தில், இந்தக் குழம்பு கை கொடுக்கும்.

மணத்தக்காளி வற்றல் குழம்பு


மணத்தக்காளி வற்றல் குழம்பு

தேவையானவை: மணத்தக்காளி வற்றல் - 4 டீஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, வெந்தயம், கடலைப்பருப்பு, கடுகு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புளியை 200 மில்லி தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத் தூள், வெந்தயம் சேர்த்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, சாம்பார் பொடி சேர்த்து வறுக்கவும். பிறகு, மணத்தக்காளி வற்றலையும் போட்டுக் கிளறி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு... கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

அல்சரை குணமாக்கும் முட்டைகோஸ் !



அல்சரை குணமாக்கும் முட்டைகோஸ் !

 உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனம் சந்தோஷமாக இருக்கும். இயற்கை உணவு ஒரு மருந்தாக செயல்படுகிறது. அந்த வகையில், அதிக மருத்துவகுணம் நிறைந்தது முட்டைகோஸ். இதில் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா என்று பல்வேறு வகைகள் உள்ளன. முட்டைகோஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன.

 மேலும் பல்வேறு பைட்டோ நியு ட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்றவை அடங்கியுள்ளன. உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவற்றை தடுக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். முட்டைகோஸை அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக் கூடாது. அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். சொல்லப்போனால், அதனை பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறந்தது.

மருத்துவ பயன்கள் :

👉 புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

👉 இதில் அல்சரை குணப்படுத்தும் குளுட்டமைல் உள்ளதால், அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.

👉 இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.

👉 முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது.

👉 எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சு ப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

👉 முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.

👉 முட்டைகோஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

👉 முட்டைகோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசைகளில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து சிறந்த நிவாரணம் தரும்.

👉 உடலுக்கு நன்மை தரும் முட்டைகோஸை வாரத்தில் ஒருமுறையாவது உணவில் சேர்த்து கொண்டால் அல்சர் மற்றும் பல வித நோய்கள் வராமல் காக்க முடியும்.

பலத்துக்கு வலுசேர்க்கும் பயறு வகைகள்!


பலத்துக்கு வலுசேர்க்கும் பயறு வகைகள்!

உடலை வலுவாக்கும் உணவுகளில் பயறு வகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. புரதச் சத்து மிகுதியாக இருப்பதால், பயறு வகைகள் அசைவ உணவுக்கு இணையாகக் கருதப்படுகின்றன.
பொதுவாகப் பயறு வகைகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முந்தைய நிலையிலும் சாப்பிட ஏற்றவை தான். ஆனாலும், நன்றாக முதிர்ந்தப் பயறு வகைகளில்தான் குறைவான ஈரப்பதமும் அதிகச் சத்துக்களும் இருக்கும். முளைவிட்டப் பயறு வகைகளில் அதிக அளவு நீர்ச் சத்தும், வைட்டமின் சத்துக்களும் இருப்பதால் பூஞ்சைக் காளான் வளர ஆரம்பிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், ரிபோஃபிளேவின் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலுக்கு நல்ல ஊட்டத்தைக் கொடுக்கும்.
குழந்தைகள் முதல் டீன் ஏஜ் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயதானவர்கள் என அனைவருக் கும் பயறு வகைகள் அவசியம் தேவை. அதே சமயம், அதிகமாகச் சாப்பிடுவது நல்லது அல்ல. சைவ உணவு சாப்பிடுபவர்கள், தினமும் ஏதேனும் ஒரு வகை பயறை 50 கிராம் எடுத்துக்கொள்ளலாம். இந்தப் பயறுகளைச் சுண்டலாக சமைத்துச் சாப்பிடுவது நல்லது!'' என்கிறார் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி.

எச்சரிக்கை:

ஜீரண சக்திக் குறைபாடு, வயிறு சம்பந்தப்பட்டப் பிரச்னை, சிறுநீரகப் பாதிப்புக் கொண்டவர்கள் சில பயறு வகைகளை குறைவான அளவில் சாப்பிடுவதே நல்லது.

முளைக்கட்டியப் பயறு வகைகளில் 'யூரிக் ஆசிட்’ அதிகம் இருப்பதால், மூட்டு வலி (Gout Disease) வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். முளைக்கட்டியப் பயறை வெந் நீரில் மிதமாக வேகவைத்துச் சாப்பிட வேண்டும். இதில், நார்ச் சத்து அதிக அளவில் இருப்பதால், சாப்பிட்டதும் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பச்சைப் பயறு

எலும்பு வளர்ச்சிக்கும், ரத்த ஓட்டத்துக்கும், வளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளின் தசைகளை வலுவாக்குவதற்கும் ஏற்றது பச்சைப் பயறு. மலச் சிக்கலைப் போக்கும். இதில், புரதம், கலோரி, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், பொட்டாஷியம், நார்ச் சத்து ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. மாவுச் சத்து, கொழுப்பு, கோலின், பீட்டா கரோட்டின், கால்சியம், இரும்பு, மெக்னீஷியம், தாமிரம், சோடியம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். பொட்டாஷியம், பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

கொண்டைக்கடலை

ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். வயிற்றில் வரும் புற்றுநோயான இன்டெஸ்டினல் கேன்சர் (Intestinal cancer) போன்ற நோய்களைத் தடுக்க வல்லது. இதில் புரதம், மாவுச் சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்ச் சத்து மற்றும் தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. கொழுப்பு ஓரளவும் கோலின், பீட்டா கரோட்டின் ஆகியவை சிறிதளவும் இருக்கின்றன. வெள்ளை நிறக் கொண்டைக் கடலையைக் காட்டிலும் சிறிய அளவிலானக் கறுப்பு நிறக் கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்ச் சத்து இருக்கிறது. முளைக்கட்டிய கொண்டைக் கடலையில் இருக்கும் ஹார்மோன் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் சாப்பிடலாம். சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள், கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

மொச்சைப் பயறு

சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்; மலச்சிக்கலைப் போக்கும்; இதில், புரதம், மாவுச் சத்து, கோலின், பாஸ்பரஸ் ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றன. இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், நார்ச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. சிலருக்கு மொச்சை சாப்பிட்டால், வாயுப் பிரச்னை ஏற்படும். அவர்கள் தவிர்ப்பது நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் மிகக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், வளரும் குழந்தைகள் ஆகியோர் தினமும் சாப்பிடலாம்.

காராமணி

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றக் கூடிய தன்மை இதற்கு உண்டு. வயிற்றில் புற்றுநோய் வராமல் தடுக்கும். தென் மாவட்ட மக்கள் இதைத் தட்டைப் பயறு என்று அழைப்பார்கள். இதில் பொட்டாசியம் மிகவும் அதிகமாக இருக்கிறது. புரதம், கலோரி, மாவுச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், ஃபோலிக் ஆசிட், கோலின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. தாமிரம், மெக்னீஷியம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், பீட்டா கரோட்டின் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன. வாயுப் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.

கொள்ளு

எலும்புக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்; தசைகள் வலுப் பெறும். உடலில் உள்ள கொழுப்பை அகற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில், புரதம், கலோரி, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், பொட்டாஷியம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றன. ஆக்ஸாலிக் ஆசிட் இருப்பதால், அதிகம் சாப்பிடக் கூடாது. அவ்வப்போது, கொள்ளு ரசம் வைத்துச் சாப்பிடலாம். சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் சாப்பிட வேண்டாம். மற்றபடி எல்லோருக்கும் ஏற்றது. புரதச் சத்து அதிகம் இருப்பதால் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

ராஜ்மா

தசைகளை நன்றாக இறுகச்செய்வதோடு, மலச் சிக்கலையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதில் புரதம், கலோரி, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் உண்டு. மெக்னீஷியம், துத்தநாகம், தாமிரம், நார்ச் சத்து ஓரளவு இருக்கின்றன. சோடியம், பொட்டாஷியம் ஆகியவை மிகக் குறைந்த அளவே இருக்கின்றன. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது. உடலை வருத்தி உடற்பயிற்சி செய்பவர்கள், கர்ப்பிணிகள், சர்க்கரை மற்றும் இதய நோயாளிகள் அனைவரும் சாப்பிட ஏற்றது.

பட்டாணி

காய்ந்த பட்டாணியில் புரதம், மாவுச் சத்து, கலோரி மற்றும் தாது உப்புக்களான இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம், கோலின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. நார்ச் சத்து ஓரளவு இருக்கிறது. பீட்டா கரோட்டின், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் ஆசிட் ஆகியவை குறைந்த அளவே இருக்கின்றன. பொட்டாஷியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். பச்சைப் பட்டாணித் தோலில் கால்சியம், இரும்புச் சத்து அதிகமாக உள்ளன. புரதம், மாவுச் சத்து, கலோரி, வைட்டமின் - சி ஆகியவை மிகவும் குறைவாகவே இருக்கின்றன. வாயுப் பிரச்னை இருப்பவர்களும், ஜீரண சக்தி குறைவாக இருப்பவர்களும் இதனைத் தவிர்ப்பது நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் சாப்பிடலாம். குறைந்த அளவில் சாப்பிடுவதே நல்லது.

சோயா

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்; பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளைப் போக்கும்; வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. புற்றுநோயைத் தடுக்கவல்லது; இதில், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஃபோலிக் ஆசிட், ஒமேகா 3 வகை கொழுப்பு ஆகியவை அதிகமாக இருக்கின்றன. மாவுச் சத்து, தைமின், ரிபோஃபோமின், பீட்டா கரோட்டின், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. பால் குடிக்காதவர்களுக்கு சோயா பால் கொடுக்கலாம். சோயா சிலருக்கு ஜீரணப் பிரச்னையை ஏற்படுத்துவதால், நன்றாகச் சமைத்துச் சாப்பிடுவதே நல்லது. வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. நாள் ஒன்றுக்கு 20 கிராம் மட்டுமே சாப்பிட வேண்டும்.

துவரைப் பயறு

உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும், மலச் சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கக்கூடியது. இதில், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. நார்ச் சத்து, கால்சியம் பாஸ்பரஸ், பீட்டா கரோட்டின், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், வைட்டமின் - சி, நார்ச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. புரதம், மாவுச் சத்து, கலோரி, இரும்பு, கோலின், ஆக்சாலிக் ஆசிட் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன. அதிகம் வேக வைக்கவேண்டியது இல்லை. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

பிளாக் டீ-கிரீன் டீ இரண்டில் எது பெஸ்ட்?



பிளாக் டீ-கிரீன் டீ இரண்டில் எது பெஸ்ட்?


🔵 தேநீர் அருந்துவதால் சரும புற்று நோய் வராமல் தடுக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேயிலையில் ஃப்ளோரைடு அதிகம் இருப்பதால் பற்கள் சொத்தையாகாமல் காக்கிறது. கருப்பு தேயிலை மற்றும் பச்சை தேயிலை ஆகிய இரண்டுமே பயிரிடப்படுவதில் ஒற்றுமை இருந்தாலும் அதன் அறுவடையில் வித்தியாசப்படுகிறது.

பிளாக் டீ என்பது கருப்பு தேயிலை இரசாயனக் கலவையில் ஆக்சிஜனுடன இணைக்கப்படும்போது தயாரிக்கப்படுகிறது.. ஆனால் கிரீன் டீயின் பச்சை தேயிலை அவ்வாறு ஆக்ஸிஜனுடன் சேர்க்கப்படுவதில்லை. பிளாக் டீயில் 10% பாலிபீனால்களுள்ளது. கிரீன் டீயில் 40% பாலிபீனால்கள் உள்ளது.

கருப்பு தேநீர் (பிளாக் டீ ) பயன்கள்: கருப்பு தேநீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை சர்க்கரை அல்லது பால் போன்ற எந்தவொரு சேர்க்கையும் இல்லாமல் அருந்துவது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.

1. நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை பிளாக் டீ அருந்துவதால் தடுக்கப்படுகிறது.

2. வாய் வழி புற்று நோய் வராமல் தடுப்பதில் பிளாக் டீயின் பங்கு அதிகமானது.

3. இதில் காஃபின் குறைந்த அளவு இருப்பதால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது சுவாச அமைப்பு, சிறுநீரகம் மற்றும் இதய இயக்கத்தை சீராக்குகிறது.

4. பிளாக் டீயில் உள்ள ஒரு பதன பொருள் வைரஸிலிருந்து உடலை காத்து நோய்யெதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

5. பிளாக் டீயில் அமினோ ஆசிட் இருப்பதால் நமது கவனம் அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை குறைத்து மனதை ரிலாக்ஸ் செய்கிறது.


*💥பிளாக் டீ அருந்துவதில் கவனிக்கப்பட வேண்டியது:*

1. ஒரு நாளைக்கு 4 கப்புகளுக்கு அதிகமாக அருந்துவது உடல் பிரச்சனைகளை தோற்றுவிக்கும்.

2. அதிகமான பிளாக் டீ எடுத்துக் கொள்வதால் உறக்கம் பாதிப்படைகிறது.

3. அதுவும் வெறும் வயிற்றில் பிளாக் டீ எடுத்துக் கொள்வதால் வயிறு எரிச்சலடைந்து இரைப்பை பிரச்சனைகள் உருவாகும்.

*🔵கிரீன் டீ : பயன்கள்:*

1. இது மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

2. தங்கள் எடையை குறைக்க விரும்புவோர் கிரீன் டீயை அருந்துவது எளிதான வழி. இது தேவையற்ற கொழுப்பை எரிக்கிறது. உடல் திறனை அதிகரிக்கிறது.

3. கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமாக இருப்பதால் புற்று நோய் அபாயத்தை இது தடுக்கிறது. குறிப்பாக மார்பக புற்று நோய், பெருங்குடல்புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கிறது.

4. கிரீன் டீயில் பாலிபீனால்கள் உள்ளன.இவை மூலக்கூறுகள்(molecules) மற்றும் செல்களை முறிவதிலிருந்து பாதுகாக்கிறது. நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது.

5. தோல் சுருக்கங்கள், வயதான அறிகுறிகள் போன்றவை கிரீன் டீ அருந்துவதால் குறைகிறது.



*கிரீன் டீ அருந்துவதில் கவனிக்கப்பட வேண்டியது:*

1. கிரீன் டீயை ஒரு நாளைக்கு 5 கப்புகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளும் போது தூக்கம், குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகிவை உண்டாகும் வாய்ப்புள்ளது.

2. கிரீன் டீ நாம் உண்ணும் உணவிலுள்ள இரும்பு சத்தை உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளதால், அதிகமாக கிரீன்டீ எடுத்துக் கொண்டால் இரும்பு சத்து குறைபாடு தோன்றும்.

3. கிரீன் டீயில் காட்சின் (catechin) என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் உடலின் பாதுகாப்பு செல்களை அவை அழிக்கின்றன. உணவை ஆற்றலாக மாற்றுவதை இது தடுக்கிறது. கிரீன் டீயை அதிகமாக பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. நாள் முழுதும் தேநீரை சுவைப்பதை விடுத்து உடல் புத்துணர்ச்சிக்காக மட்டும் இதை அருந்துவதால் எந்த பிரச்னையுமில்லை.

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள்!!!



சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள்!!!

1. இந்த பொடி வகைகளில் தேங்காய் பொடி யும் பருப்பு பொடியும் ரொம்ப பிரசித்தம். முதலில் தேங்காய் பொடியை பார்போம்.

1 Cup தேங்காய் துருவல்
1 Tea spoon உளுத்தம் பருப்பு
1 Tea spoon கடலை பருப்பு
10 குண்டு மிளகாய் வற்றல்
1 Pinch பெருங்காயம்
1/2 Spoon எண்ணை
கோலி குண்டு அளவு புளி
உப்பு

செய்முறை:

தேங்காய் துருவலை நல்ல சிவப்பாக வறட்டு வாணலில் வறுக்கவும்.
கருகாமல் வறுக்கணும்.
புளியை சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து நன்கு வறுக்கவும்.
கரகரப்பாக வறுக்கவும்.
இப்போது எண்ணை விட்டு, மற்றசாமான்களை வறுக்கவும். .
ஆறினதும் மிக்சி இல் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.
பாட்டில் ல போட்டு வைக்கவும்.
தேவையான போது சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.
தொட்டுக்கொள்ள கெட்டித் தயிர் போறும்.

2. பருப்பு பொடி , இது சுலபமாக செய்யக்குடியகூடியது ஆனால் சுவை மிகுந்தது.

தேவையானவை:

1 கப் துவரம் பருப்பு
10 மிளகாய் வற்றல்
1 டீ ஸ்பூன் மிளகு
உப்பு

செய்முறை:

முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும்.
பிறகு மிளகு, பிறகு மிளகாய் வற்றல், பிறகு துவரம் பருப்பு என் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுக்கவும்.
மிஷினில் கொடுத்து நல்ல 'நைசாக' அரைக்கவும்.
வீட்டில் அரைத்தால் நன்கு சலித்துவிட்டு மறுபடி அரைக்கணும் .
இதற்கு தொட்டுக்கொள்ள வத்த குழம்பு சூப்பர் ஆக இருக்கும்., ஆவக்காய் அருமையாக இருக்கும்.
சுடு சாதத்தில் நிறைய நல்லெண்ணெய் விட்டு பருப்பு பொடி போட்டு கலந்து சாப்பிடனும். சாதம் உதிறாய் இருந்தாலும் நல்லா இருக்கும், குழைந்து இருந்தாலும் நல்லா இருக்கும்.

குறிப்பு: வத்தக்குழம்பு சாப்பிடும் போது அதன் மேல் பருப்பு பொடி துவிண்டும் சாப்பிடலாம்

3. மசாலா பருப்பு பொடி/ பூண்டு பருப்பு பொடி
தேவையானவை:

1 கப் துவரம் பருப்பு
10 மிளகாய் வற்றல்
1 டீ ஸ்பூன் மிளகு
10 பல் பூண்டு
உப்பு

செய்முறை:

முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும்.
பிறகு மிளகு, பிறகு மிளகாய் வற்றல், பிறகு துவரம் பருப்பு என் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுக்கவும்.
பூண்டு பற்களை உரித்து அப்படியே போட்டு அரைக்க தரனும்.
மிஷினில் கொடுத்து நல்ல 'நைசாக' அரைக்கவும்.
கொஞ்சம் பூண்டு வாசத்துடன் நன்ன்றாக இருக்கும்.
ஆனால் இதை fridge இல் வைப்பது நல்லது.
(பூண்டில் கொஞ்சம் ஈரப்பசை இருக்கும் அல்லவா அதுதான் "fridge " லவைக்கணும்.)

4. கறிவேப்பிலை பருப்பு பொடி
தேவையானவை:

1 கப் துவரம் பருப்பு
10 மிளகாய் வற்றல்
1 டீ ஸ்பூன் மிளகு
1 கொத்த்து கறிவேப்பிலை ( நன்கு காய்ந்தது )
உப்பு

செய்முறை:

முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும்.
பிறகு மிளகு, பிறகு மிளகாய் வற்றல், பிறகு துவரம் பருப்பு என் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுக்கவும்.
காய்ந்த கறிவேப்பிலை யும் அப்படியே போட்டு அரைக்க தரனும்.
மிஷினில் கொடுத்து நல்ல 'நைசாக' அரைக்கவும்.
கொஞ்சம் கலர் கம்மியாக இருக்கும் ஆனால் வாசனையாக நன்றாக இருக்கும்.

5. வறட்டு தனியா பொடி
தேவையானவை:

1 Cup தனியா
2 Tea spoon உளுத்தம் பருப்பு
2 Tea spoon கடலை பருப்பு
10 - 12 குண்டு மிளகாய் வற்றல்
1 Pinch பெருங்காயம்
1/2 Spoon எண்ணை
கோலி குண்டு அளவு புளி
உப்பு
மிளகு கொஞ்சம் ( தேவையானால் )

செய்முறை:

தனியாவை ஜஸ்ட் எண்ணெய் தடவிய வாணலில் வறுக்கவும்.
கருகாமல் வறுக்கணும்.
புளியை சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து நன்கு வறுக்கவும்.
கரகரப்பாக வறுக்கவும்.
இப்போது எண்ணை விட்டு, மற்றசாமான்களை வறுக்கவும். .
ஆறினதும் மிக்சி இல் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.
பாட்டில் ல போட்டு வைக்கவும்.
தேவையான போது சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.

குறிப்பு: இந்த பொடியை வறுத்த கறிகள் செய்யும் போது தூவலாம். பருப்பு சாம்பாரில் கடைசியில் கொஞ்சம் போட்டு இறக்கலாம். சுவை கூடும்.

6. பூண்டு பொடி
தேவையானவை:

10 பல் பூண்டு
ஒரு டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை
ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்த வேர்கடலை
ஒரு டீ ஸ்பூன் மிளகாய் பொடி
உப்பு

செய்முறை:

எல்லாவற்றையும் மிக்சி இல் பொட்டு பொடிக்கவும்.
வாசனையாக நல்ல இருக்கும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.

குறிப்பு: எந்த காய்க்கும் , குருமாக்கும் இந்த பொடிய போடலாம்.

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

தில் பஹார்



தில் பஹார்

தேவையானவை: பசும்பால் – 2 லிட்டர், பே வாட்டர் – 2 கப், சர்க்கரை -ஒரு கிலோ, தண்ணீர்- 8 டம்ளர், பாதாம், முந்திரி, செர்ரி – சிறிதளவு.

சாஸ் செய்ய:

கோவா, சர்க்கரை – சம அளவு.

செய்முறை: பாலைக்கொதிக்க வைத் து, பே வாட்டர் சேர்த்து பாலை திரித்து, ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி எடுத்து அழுத்திப் பிசைந்து பனீர் தயா ரித்து தனியே வைத்துக் கொள்ளவும். அரை கிலோ சர்க்கரை, 4 டம்ளர் தண் ணீரைக் கலந்து கொதிக்கவிடவும். நன்றாக கொதி வந்தவுடன் பனீ ரை இதய வடிவில் ஷேப் செய்து சர்க்கரைப் பாகில் ஒவ்வொன்றா கப் போட்டு இறக்கி, ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும். இரு மடங் கு பெரியதாக மாறியதும்… மீதமுள்ள சர்க்கரையுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசுக்கு பதத்தில் பாகு தயாரித்து, இதய வடிவ பனீரை மீண்டும் சர்க்கரைப் பாகில் போட்டு 4 மணி நேரம் ஊற வைக்கவும். இதுதான் தில் பஹார்.

பிறகு, சர்க்கரையையும் கோவாவையும் சம அளவில் கலந்து அடுப் பில் 2 நிமிடம் வைத்து, ஆற விடவும். தில்பஹாரை சர்க்கரைப் பாகி லிருந்து எடுத்து ஒரு தட்டில் வைத்து, ரெடியாக உள்ள கோவா சாஸை அதன்மீது பரத்தவும். பாதாம், முந்திரி, செர்ரி கொண்டு அலங்கரிக்கவும்.

சனி, 5 ஆகஸ்ட், 2017

காபி கப் ரகசியங்கள்!




காபி கப் ரகசியங்கள்!

காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிக்காவிட்டால் பலருக்கு அன்றைய பொழுதே தொடங்காது.

தொண்டைக்குள் இறங்கும் மெல்லிய கசப்புடன் கூடிய காபியின் சுவைக்குப் பலரும் அடிமை.

கும்பகோணத்து டிகிரி காபி தொடங்கி 'காபி ஷாப்’ வரை தலைமுறை தாண்டி தமிழர்களின் ரசனையில் இடம்பெற்றிருக்கும் காபியின் நன்மை, தீமைகள் என்ன?

திருச்சியைச் சேர்ந்த டயட்டீஷியன் காயத்ரி விரிவாகச் சொல்கிறார்.

''பொதுவாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் கலந்ததே காபி.

இதில், 'காஃபின்’ என்ற குறிப்பிட்ட வேதிப்பொருள்தான் உடலுக்கு அதிகத் தீங்கை விளைவிக்கக்கூடியது.

அதே சமயம், நம் மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டி, புத்துணர்வு அடையவும் செய்கிறது.

அதிக அளவில் காபி அருந்துபவர்களுக்குத் தூக்கமின்மையும், நெஞ்சு எரிச்சலும் ஏற்படுகிறது.  

காபி சில நோய்களுக்குத் தடுப்பு மருந்தாகவும் இருக்கிறது என்பது உண்மை.

இதில் உள்ள சில வேதிப்பொருட்கள் 'பார்கின்சன்’ நோய் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கின்றன.

இன்சுலின் சுரக்கச் செய்வதால், காபி குடிப்பவர்களுக்கு இரண்டாம் வகை டயாபடீஸ் வராமல் தடுக்கலாம்.

ஆனால், வீட்டில் தயாரிக்கப்படும் காபியில் பாலுடன் அதிகம் சர்க்கரையும் சேர்க்கப்படுவதால், அது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல'' என்கிற காயத்ரி, அதிகம் காபி குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை விவரித்தார்.

''அன்றாடம் வீட்டில் சர்க்கரை மற்றும் பால் சேர்ப்பதால், ஒரு கப் காபியில் கிட்டத்தட்ட 500 கலோரி கிடைக்கிறது.

நாள் ஒன்றுக்கு இரண்டு கப் அளவுக்கு மேல் அருந்துபவர்களுக்கு அதிகப்படியான கலோரி உடலில் சேர்ந்து எடை கூடி பல்வேறு பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும்.



காபியில் உள்ள 'கேஃபஸ்டால்’ (Cafestol), கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது.

இதனால், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

'அல்சர்’ மற்றும் 'இதய நோய்’ உள்ளவர்கள், காபி அருந்துவதை நிறுத்திவிடுவது நல்லது.

காபியில் உள்ள காஃபின் பித்தப்பையில் அதிகம் சேரும்போது, அது கல்லாக மாறுகிறது.

இதனால், பித்தம் அதிகரித்து வாந்தி, தலைவலி ஏற்படும்.

மேலும், அடிக்கடி காபி குடிக்கும்போது, நரம்புகள் பாதிக்கப்படும். நரம்புத்தளர்ச்சி வருவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

காபியில் உள்ள சில பொருட்கள், உடலுக்குத் தேவையான ஜிங்க், கால்சியம், இரும்பு போன்ற தாதுஉப்புக்களை உடலில் சேரவிடாமல் தடுக்கிறது.

இதனால், சத்துக் குறைபாடு ஏற்பட்டு எலும்புகள் வலுவிழந்துபோகலாம்.

பெண்களுக்கு இடுப்பில் வலி ஏற்படுவதற்கு, அதிக காபி அருந்துவதும் ஒரு காரணம்.

நடை, ஓட்டம், அதிக உழைப்பு என எப்போதும் சுழன்றுகொண்டிருப்பவர்களுக்கு, காபி அதிகம் குடித்தாலும் அதன் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும்.

ஆனால், குறைந்த உடல் உழைப்பு உள்ளவர்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் காபி குறைவாகக் குடிப்பது நல்லது'' என்கிறார்.

அப்புறம் என்ன, காபி கப்பைக்  கீழே வைங்க சார்!


‬
காபி டிப்ஸ்!

வெந்நீர் விட்டுத் தயாரித்த டிகாஷனை எந்தக் காரணம்கொண்டும் சூடுபடுத்தவே கூடாது.

டிகாஷனோடு சேர்த்து காபியை அடிக்கடி சூடுபடுத்தி அருந்துவது மிகவும் தவறு.

இன்ஸ்டண்ட் காபியைவிட டிகாஷன் சேர்க்கப்பட்ட காபியை அருந்துவதே பாதுகாப்பானது.

அன்றாடம் 2 கப் காபிக்கு மேல் வேண்டாம்.

மேலை நாடுகளில் அதிக அளவில் 'கோல்டு காபி’ (Cold Coffee) தான் அருந்துகிறார்கள்.

சூடான காபியைவிட, குளிர்ந்த காபி குடிப்பதே நல்லது.

காபி ஸ்ட்ராங்காக, சுவையாக இருக்கவேண்டும் என்பதற்காக, சிக்கரி சேர்க்கப்படுகிறது.

காபியில் 20 சதவீதம் தான் சிக்கரி சேர்க்க வேண்டும். அதிகம் சேர்ப்பது நல்லதல்ல.

காபிக்கு மாற்றாக ஃப்ரெஷ் ஜூஸ் வகைகள், க்ரீன் டீ அருந்தலாம். அதிக அளவு புத்துணர்ச்சி கிடைக்கும்.

காபிக்கு அடிமையானவர்கள், காபியை உடனடியாக நிறுத்திவிடக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாகக் காபியின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், திடீரென நிறுத்தும்போது, குறிப்பிட்ட அந்த காபி அருந்தும் நேரத்தில் நியூரோ டிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டிவிடும் செயல் நின்றுபோவதால், கடுமையான தலைவலி ஏற்படலாம்.