புதன், 4 ஜனவரி, 2017

வீட்டிலேயே செய்யலாம் கோவில் புளியோதரை

வீட்டிலேயே செய்யலாம் கோவில் புளியோதரை..

கோவிலில் கொடுக்கும் புளியோதரை அனைவருக்கும் பிடிக்கும். எப்படி செய்தாலும் கோவிலில் செய்வதுபோல் வரவில்லையே என்று வருத்தப்படுபவர்களுக்கு இந்த செய்முறையை தருகிறோம்.

வீட்டிலேயே செய்யலாம் கோவில் புளியோதரை
தேவையான பொருட்கள் :

நல்லெண்ணை - 5 தேக்கரண்டி
வேர்கடலை - 1/4 கப்
கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
அரிசி - 2 கப்

வறுத்து பொடிக்க :

நல்லெண்ணை - 1 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
தனியா - 1/2 தெக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
எள்ளு - 1 தேக்கரண்டி

செய்முறை :

* வறுத்துப் பொடிக்க வேண்டிய பொருட்களை தனித்தனியாக வறுத்து எடுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அரிசியை உதிரியாக வேகவைத்து கொள்ளவும்.

* புளியை கரைத்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளித்த பின் கடலை பருப்பு, உளுந்து, வேர்கடலை சேர்த்து பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.

* அடுத்து, புளிக்கரைசலுடன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

* இப்போது உப்பு போடக் கூடாது. ஏன்னா, கொதிச்ச பிறகு குழம்பு அளவு கம்மியாகும் போது உப்பு அதிகமாகிடும். அதனால் சாப்பாடு கிளரும் போது உப்பு போட்டுக்கொள்ளலாம்.

* புளிக்கரைசல் நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்ததும் உதிரியாக வடித்த சாதம், தேவையான அளவு உப்பு சோத்து, அதனுடன் அரைத்து வைத்த அந்த பொடியையும் தேவையான அளவுக்கு சேர்த்து கலந்துவிடவும்.

* 20 நிமிடத்திற்கு பிறகு பரிமாறவும்.

* சூப்பரான கோவில் புளியோதரை ரெடி.

மதிய சாப்பாடு: தக்காளி புலாவ

மதிய சாப்பாடு: தக்காளி புலாவ்

தேவையானவை: தக்காளிப்பழம் - 6, கொத்தமல்லி - ஒரு கட்டு, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - ஒரு சின்ன துண்டு, பூண்டு - 6 பல், அரிசி - 2 டம்ளர், பெரிய வெங்காயம் (நறுக்கியது) - ஒரு கைப்பிடி அளவு, பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தலா இரண்டு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி.

செய்முறை: கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளிப்பழத்தை கழுவி மிக்ஸியில் ஒன்றாக சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். அரிசியை நன்கு கழுவி, தண்ணீரை வடியுங்கள். அரைத்த கொத்தமல்லி விழுதை அரிசியுடன் கலந்து, இருபது நிமிடம் ஊற வையுங்கள். அடுப்பில் கடாயை வைத்து சூடாக்கி, ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு... பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். ஊற வைத்த அரிசிக் கலவையை இதில் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். இதில் நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள். கொதித்து குமிழ்கள் கிளம்ப ஆரம்பித்ததும்... அடுப்பை 'சிம்’மில் வைத்து, வெந்ததும் இறக்குங்கள். இதுவே, குக்கரில் வைப்பதாக இருந்தால்... அடுப்பை 'சிம்’மில் வைத்து மூன்று விசில் வந்ததும் இறக்கிவிடுங்கள்.

பொதுவாக தக்காளி புலாவுக்கு தண்ணீர் சேர்க்கும்போது சாதாரண ரக அரிசியாக இருந்தால், ஒரு டம்ளர் அரிசிக்கு, இரண்டு டம்ளர் தண்ணீர்... பிரியாணி அரிசியாக இருந்தால் ஒரு டம்ளர் அரிசிக்கு, ஒன்றரை டம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும்.

இந்த புலாவுக்கு சைட் டிஷ் தேவையில்லை. விருப்பப்பட்டால்... கத்திரிக்காய் வதக்கல் செய்யுங்கள்.

கீரை உப்புமா

கீரை உப்புமா :-
-------------------
தேவையான பொருட்கள்:
-------------------------
கீரை - 1 கட்டு
இட்லி அரிசி - 2 கப்
துவரம் பருப்பு - ¾ கப்
தேங்காய் - ஒரு கைப்பிடி
மிளகாய் வற்றல் - 4
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கடுகு, உளுந்து - 1 ஸ்பூன்
மோர் மிளகாய் - 4
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
-------------
* இட்லி அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* கீரையை (சிறு கீரை, அரை கீரை, தண்டு கீரை, பாலக் கீரை, பொன்னாங்கன்னி கீரை இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம்.) நன்றாக சுத்தம் செய்த பின் பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

* இட்லி அரிசி, துவரம்பருப்பு, தேங்காய், மிளகாய் வற்றல், சீரகம் ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று ரவை பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

* அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய கீரை, உப்பு சேர்த்து கரைத்து, இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

* இட்லி ஆறியவுடன் அதை கையினால் உதிர்த்துக்கொள்ள வேண்டும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, அதில் மோர் மிளகாய் சேர்த்து, பிறகு உதிர்த்த கீரை இட்லியை போட்டு உதிரிவாக வரும் வரை மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும்.

* சத்தான கீரை உப்புமா தயார்.

* இது மிகவும் ஆரோக்கியமான, சத்தான சிற்றுண்டியாகும். இந்த கீரை உப்புமாவை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.

சக்கரை நோய் உள்ளவர்களுக்கு சாப்பிட கூடாதவை...

சக்கரை நோய் உள்ளவர்களுக்கு சாப்பிட கூடாதவை...

*சாப்பிட கூடாதவை*

நுங்கு
சர்க்கரை
சாக்லெட்
கரும்பு
ஜஸ் கிரீம்
பால்கட்டி (பன்னீர்)
மாம்பழம்
சீத்தாபழம்
பலாப்பழம்
சப்போட்டா
வாழைப்பழம்
காம்பளான்
திரட்டுபால்
குளுகோஸ்
சேப்பங்கிழங்கு
உருளைகிழங்கு
சக்கரைவள்ளி கிழங்கு
உலர்ந்த திராட்சை
குளிர் பானங்கள்

*அளவோடு சாப்பிடலாம்*

அரிசி
அவல்
ஓட்ஸ்
சோளம்
கேழ்வரகு
கோதுமை
பார்லி அரிசி
வேர்க்கடலை
பாதாம் பருப்பு
முந்திரிபருப்பு
மக்காச்சோளம்

*அளவில்லாமல் சாப்பிடலாம்*

கீரை
தக்காளி
காராமணி
வாழைத்தண்டு
வாழைப்பூ
பாகற்காய்
சுரைக்காய்
பீர்க்கங்காய்
வெங்காயம்
கத்தரிக்காய்
பூசணிக்காய்
அவரைக்காய்
பப்பாளிக்காய்
கோவைக்காய்
வெள்ளரிக்காய்
வெண்டைக்காய்
முருங்கைக்காய்
கொத்தவரங்காய்
சீமைகத்தரிக்காய்
முட்டைகோஸ்
வெள்ளை முள்ளங்கி

கத்திரிக்காய் வதக்கல்

கத்திரிக்காய் வதக்கல் 

தேவையானவை: கத்திரிக்காய் - கால் கிலோ, எண்ணெய் - அரை குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

அரைக்க: காய்ந்த மிளகாய் - 8, தனியா - 2 கைப்பிடி அளவு, வெந்தயம் - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மிளகு - ஒன்றரை டீஸ்பூன், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கைப்பிடி அளவு.

செய்முறை: அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடாக்கி, அரைக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்து மிக்ஸியில் பொடி செய்யுங்கள்.

கத்திரிக்காயை நன்கு கழுவி, காம்பு நீக்கி, லேசாக நறுக்கி, நான்காக பிளந்து கொள்ளுங்கள். அடுப்பில் வாணலியை வைத்து அரைக்குழிக் கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கத்திரிக்காயை சேர்த்து நன்கு வதக்குங்கள். கூடவே உப்பு சேருங்கள். நன்கு சுருண்டு வரும்போது, அரைத்து வைத்துள்ள பொடியை பரவலாகத் தூவி கிளறி இறக்குங்கள். கத்திரிக்காய் வதக்கல் ரெடி.

சூப்பரான செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி

சூப்பரான செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி

சைவம் சாப்பிடுபவர்களுக்கு இந்த மஷ்ரூம் பிரியாணி மிகவும் பிடிக்கும்.

*இப்போது செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.*

*தேவையான பொருட்கள் :*

பிரியாணி அரிசி - 300 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
புதினா - அரை கைப்பிடி
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
எலுமிச்சை -1
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
நெய் - 50 கிராம்
எண்ணெய் - 50 மில்லி
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
மஷ்ரூம் - 500 கிராம்
சீரகம் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

*செட்டிநாடு மசாலாத்தூள் :*

பட்டை - 4
கிராம்பு - 2
ஏலக்காய் - 3
அன்னாசிப்பூ - 1
கறுப்பு ஏலக்காய் - 1
மிளகு - 1 டீஸ்பூன்
தனியா - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
ஜாதிக்காய் - ஒரு சிட்டிகை

*செய்முறை :*

* செட்டிநாடு மசாலாவுக்குக் கொடுத்தவற்றை எல்லாம் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்த கொள்ளவும்.

*வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.*

* பிரியாணி அரிசியை இரண்டு முறை அலசி, தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் ஊற வைக்கவும்.

*அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.*

* அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும், புதினா, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், எலுமிச்சைச்சாறு, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

*அனைத்து நன்றாக வதங்கியதும் அதில் செட்டிநாடு மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.*

* அடுத்து அதில் 600 மில்லி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

*தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடித்து விட்டு போட்டு அதனுடன், மஷ்ரூம், உப்பு சேர்த்து அரிசி முக்கால் பதம் வேக வரும் வரை வேக விடவும். தண்ணீர் வற்றியிருக்க வேண்டும்.*

* இப்போது அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி, ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைக்கவும். தோசை கல்லின் மேல் சீரகச்சம்பா அரிசி இருக்கும் பாத்திரத்தை வைத்து தீயை சுத்தமாகக் குறைத்து மூடி போட்டு அதன் மேல் கனமான பொருளை வைத்து, இருபது நிமிடம் வேக விடவும்.

*பிறகு மூடியைத் திறந்து நெய் ஊற்றி கிளறிப் பரிமாறவும்.*

* சூப்பரான செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி ரெடி.

களி உருண்டை

களி உருண்டை

தேவையான பொருட்கள்

ராகி மாவு – ஒரு கப்
உப்பு – ஒரு சிட்டிகை
தண்ணீர் – ஒன்றரை கப்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

பிறகு அரை டம்ளர் கொதித்த தண்ணிரை எடுத்துவைத்துகொள்ளவும்.

பின் கொதிக்கும் தண்ணீரில் ராகி மாவு கொட்டி மூன்றுநிமிடம் கழித்து கைவிடாமல் கிளறவும்.

எடுத்துவைத்த தண்ணீர் தேவையானால் பயன்படுத்தி கொள்ளலாம்.

நன்றாக கிளறிய பின் ஐந்து நிமிடம் தட்டு போட்டு முடிவைகவும்.

இறக்கிய பின் தண்ணீர் தொட்டு உருண்டை செய்து கொள்ளவும்.

அதிகம் சுன்னாம்பு சத்து உள்ள களி உருண்டை தயார்.

சூப்பரான செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி

சூப்பரான செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி

சைவம் சாப்பிடுபவர்களுக்கு இந்த மஷ்ரூம் பிரியாணி மிகவும் பிடிக்கும்.

*இப்போது செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.*

*தேவையான பொருட்கள் :*

பிரியாணி அரிசி - 300 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
புதினா - அரை கைப்பிடி
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
எலுமிச்சை -1
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
நெய் - 50 கிராம்
எண்ணெய் - 50 மில்லி
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
மஷ்ரூம் - 500 கிராம்
சீரகம் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

*செட்டிநாடு மசாலாத்தூள் :*

பட்டை - 4
கிராம்பு - 2
ஏலக்காய் - 3
அன்னாசிப்பூ - 1
கறுப்பு ஏலக்காய் - 1
மிளகு - 1 டீஸ்பூன்
தனியா - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
ஜாதிக்காய் - ஒரு சிட்டிகை

*செய்முறை :*

* செட்டிநாடு மசாலாவுக்குக் கொடுத்தவற்றை எல்லாம் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்த கொள்ளவும்.

*வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.*

* பிரியாணி அரிசியை இரண்டு முறை அலசி, தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் ஊற வைக்கவும்.

*அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.*

* அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும், புதினா, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், எலுமிச்சைச்சாறு, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

*அனைத்து நன்றாக வதங்கியதும் அதில் செட்டிநாடு மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.*

* அடுத்து அதில் 600 மில்லி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

*தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடித்து விட்டு போட்டு அதனுடன், மஷ்ரூம், உப்பு சேர்த்து அரிசி முக்கால் பதம் வேக வரும் வரை வேக விடவும். தண்ணீர் வற்றியிருக்க வேண்டும்.*

* இப்போது அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி, ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைக்கவும். தோசை கல்லின் மேல் சீரகச்சம்பா அரிசி இருக்கும் பாத்திரத்தை வைத்து தீயை சுத்தமாகக் குறைத்து மூடி போட்டு அதன் மேல் கனமான பொருளை வைத்து, இருபது நிமிடம் வேக விடவும்.

*பிறகு மூடியைத் திறந்து நெய் ஊற்றி கிளறிப் பரிமாறவும்.*

* சூப்பரான செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி ரெடி.

சூப்பரான செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி

சூப்பரான செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி

சைவம் சாப்பிடுபவர்களுக்கு இந்த மஷ்ரூம் பிரியாணி மிகவும் பிடிக்கும்.

*இப்போது செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.*

*தேவையான பொருட்கள் :*

பிரியாணி அரிசி - 300 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
புதினா - அரை கைப்பிடி
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
எலுமிச்சை -1
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
நெய் - 50 கிராம்
எண்ணெய் - 50 மில்லி
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
மஷ்ரூம் - 500 கிராம்
சீரகம் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

*செட்டிநாடு மசாலாத்தூள் :*

பட்டை - 4
கிராம்பு - 2
ஏலக்காய் - 3
அன்னாசிப்பூ - 1
கறுப்பு ஏலக்காய் - 1
மிளகு - 1 டீஸ்பூன்
தனியா - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
ஜாதிக்காய் - ஒரு சிட்டிகை

*செய்முறை :*

* செட்டிநாடு மசாலாவுக்குக் கொடுத்தவற்றை எல்லாம் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்த கொள்ளவும்.

*வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.*

* பிரியாணி அரிசியை இரண்டு முறை அலசி, தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் ஊற வைக்கவும்.

*அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.*

* அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும், புதினா, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், எலுமிச்சைச்சாறு, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

*அனைத்து நன்றாக வதங்கியதும் அதில் செட்டிநாடு மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.*

* அடுத்து அதில் 600 மில்லி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

*தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடித்து விட்டு போட்டு அதனுடன், மஷ்ரூம், உப்பு சேர்த்து அரிசி முக்கால் பதம் வேக வரும் வரை வேக விடவும். தண்ணீர் வற்றியிருக்க வேண்டும்.*

* இப்போது அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி, ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைக்கவும். தோசை கல்லின் மேல் சீரகச்சம்பா அரிசி இருக்கும் பாத்திரத்தை வைத்து தீயை சுத்தமாகக் குறைத்து மூடி போட்டு அதன் மேல் கனமான பொருளை வைத்து, இருபது நிமிடம் வேக விடவும்.

*பிறகு மூடியைத் திறந்து நெய் ஊற்றி கிளறிப் பரிமாறவும்.*

* சூப்பரான செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி ரெடி.

சத்தான டிரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி

சத்தான டிரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி...

குழந்தைகளுக்கு அடிக்கடி டிரை ஃப்ரூட்ஸ் கொடுப்பது உடலுக்கு நல்லது. உடலுக்கு உகந்த சத்தான டிரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.

சத்தான டிரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
தேவையான பொருட்கள் :

தயிர் - 2 கப்
பாதாம் - 10
முந்திரி - 10
பிஸ்தா - 10
கிஸ்மிஸ் -20
குங்குமப் பூ - சிறிது
பேரீட்சை பழம் - 3
தேன் - தேவையான அளவு
ஏலக்காய்ப்பொடி - 1 சிட்டிகை
ஐஸ் கியூப்ஸ் - சிறிது

செய்முறை :

* பாதாம், முந்திரி, பிஸ்தா, கிஸ்மிஸ், பேரீட்சை பழம் முதலியவற்றை தண்ணீரில் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

* மிக்சி ப்ளண்டரில் தயிர், அரைத்த டிரை ஃப்ரூட்ஸ் விழுது, தேன், ஏலக்காய்ப் பொடி, ஐஸ்கட்டி போட்டு ஒரு அடி அடித்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே குங்குமப் பூவைப் போட்டு பரிமாறவும்.

* சூப்பரான டிரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி ரெடி.

* மிகவும் சத்தானது இந்த டிரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி.

செவ்வாய், 3 ஜனவரி, 2017

வெண் பொங்கல்

வெண் பொங்கல் 
-------------------
என்னென்ன தேவை?
--------------------
பச்சரிசி – 200 கிராம்,
பாசிப்பருப்பு – 100 கிராம்,
மிளகு – 20,
இஞ்சி 1 துண்டு,
சீரகம் – 1 டீஸ்பூன்,
நெய் – அரை கப்,
உப்பு தேவைக்கேற்ப,
முந்திரி பருப்பு – 10 முதல் 12 வரை,
கறிவேப்பிலை சிறிது,
பெருங்காயம் சிறிது.

எப்படிச் செய்வது? 
-----------------
அரிசி, பருப்பு இரண்டையும் களைந்து ஒரு பங்குக்கு 4 பங்கு தண்ணீர் சேர்த்து வேக விடவும். அது வெந்து வரும்போது உப்பு சேர்க்கவும். தனியாக  வேறு ஒரு கடாயில் நெய் சேர்த்து, சூடானதும் சீரகம், பெருங்காயம், முந்திரி, மிளகு உடைத்து பொடித்த இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து  தாளித்து  வேக வைத்த பொங்கலுடன் கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது நெய் சேர்க்கவும். சூரியனுக்குப் படைக்க வெண் பொங்கல் ரெடி.

குறிப்பு:  பாசிப்பருப்பை சிலர் லேசாக வறுத்தும் சேர்க்கிறார்கள். சிலர் கடவுளுக்கு படைக்கும் நிவேதனத்தில் பெருங்காயம் சேர்ப்பது இல்லை.

மோர் குழம்பு

மோர் குழம்பு
---------------
தேவையான பொருட்கள்:
-------------------------
தயிர் – 1 கப்
வெள்ளை பூசணி – 1 கப் (நறுக்கியது)
தேங்காய் – 1/2 கப் (துருவியது)
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப் தாளிப்பதற்கு..
. கடுகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
-----------
முதலில் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தயிரை ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு வெந்தயம், தண்ணீர் மற்றும் அரைத்து வைத்துள்ள கலவையை தயிரில் போட்டு கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தயிரை ஊற்றி, அத்துடன் வெள்ளை பூசணியை சேர்த்த, 5-6 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பின் அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இறுதியில் ஒரு சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதனை இறக்கி வைத்துள்ள மோர் குழம்பில் ஊற்றி, அதன் மேல் கொத்தமல்லியை தூவி இறக்கினால், மோர் குழம்பு ரெடி.

சுரைக்காய் ஊத்தப்பம்

சுரைக்காய் ஊத்தப்பம்

தேவையானவை

சுரைக்காய் துருவல் – 1 கப்
கோதுமை மாவு – ஒன்றரை கப்
உளுந்து – அரை கப்
மிளகாய் தூள் – சிறிது
உப்பு எண்ணெய் – தேவைக்கேற்ப
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிது
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது

செய்முறை

சுரைக்காயை தோல் சீவி கேரட் துருவலில் துருவிக் கொள்ளவும்.  உளுத்தம்பருப்பை ஊற வைத்து அரைக்கவும்.  கோதுமை மாவுடன் உளுத்தம் மாவையும் தேவையான உப்பு தேர்த்து கலந்து வைக்கவும்.  வாணலியில் எண்ணெய் விட்டு துருவிய சுரைக்காய், நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.  ஆறியதும், கோதுமை மாவு கலவையில் போட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும்.  இந்த மாவை ஊத்தப்பமாக ஊற்றி, எண்ணெய் விட்டு நன்கு வெந்ததும் பரிமாறவும்.  காரச் சட்னி அல்லது இட்லிப்பொடியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.