தந்தூரி சிக்கன் செய்ய தெரியுமா? தெரியலான இதை பாருங்கள்
தந்தூரி சிக்கன் நமது இந்தியாவில் அதிகமாக விரும்பப்படும் உணவுகளில் ஒன்று. இதை செய்வது மிக சுலபம், நாம் வீட்டிலேயே செய்துவிடலாம். ஆனால் நாம் அதை செய்யாமல் வெளியே கடையில் வாங்கி சாப்பிடுகிறோம். தந்தூரி சிக்கன் செய்ய வெறும் 30 நிமிடங்களே போதும்.
தேவையான பொருட்கள்:
- 4 கோழி மார்பு பகுதி (தோல் உரிக்கப்பட்டு, எலும்புகள் நீக்கப்பட்டு இருக்க வேண்டும்)
- 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
- 1/2 கப் தயிர்
- 1 தேக்கரண்டி அரைத்த பூண்டு
- 1 தேக்கரண்டி வெங்காயம் தூள்
- 1 தேக்கரண்டி கொத்தமல்லி இலைகள்
- 1 தேக்கரண்டி கரம் மசாலா
- 1 தேக்கரண்டி மிளகுத்தூள்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 தேக்கரண்டி கொத்தமல்லி
- 1/2 டீஸ்பூன் இஞ்சி
- 1/4 தேக்கரண்டி காய்ந்த மிளகு
செய்முறை:
- மேலே உள்ள பொருட்களை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்கவும், நல்ல சுவை வேண்டும் என்றல் ஒரு இரவு முழுவதும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்போது தான் மசாலா நன்றாக இறைச்சியுடன் சேரும்.
- பிறகு இறைச்சியை தனியாக எடுத்து அதை ஒரு கிரில் கம்பி அல்லது சமைக்க ஏற்றது போன்ற ஒரு கம்பியை எடுத்து அதில் சொருகி மிதமான நெருப்பில் இறைச்சி வேகும் வரை காத்திருக்கும். கம்பியில் தான் வேகவைக்க வேண்டுமா என்றல் அது உங்கள் விருப்பம், ஆனால் தந்தூரி சிக்கனை பாத்திரத்தில் போட்டு வேகவைக்க மாட்டார்கள், நெருப்பின் மீது அப்படியே வைப்பார்கள்.
- அவ்வளவுதான் இறைச்சி வெந்தவுடன் எடுத்து தாராளமாக உண்ணலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு லைக், கமெண்ட், ஷேர் செய்யவும். நன்றி...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக