செவ்வாய், 1 மே, 2018

சுவையான பன்னீர் பாயாசம்

சுவையான பன்னீர் பாயாசம் 

 பன்னீர் கொண்டு ஒரு எளிதான மற்றும் சுவையான பாயாசம் என்பது விருந்துகளிலும் திருநாள்களிலும் பரிமாறும் இனிப்பு உணவு ஆகும். தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கிய உணவாகும். இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு. பால் பாயசத்தைப் பால், சவ்வரிசி, சேமியா முதலியவற்றைக் கொண்டு செய்கிறார்கள். 
பொதுவாக இதனுடன் உளுந்து வடையையோ பொடித்த அப்பளத்தையோ சேர்த்து உண்பார்கள். விருந்துகளில் நிறைப்புணவாகப்  பரிமாறுவதற்கு, இலகுவில் செரிமானமடையும் உணவாக அளிப்பதற்கும், மென்றுவிழுங்குவதில் சிரமமுள்ளவர்களுக்கும் உணவாக பாயசம் பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்
பன்னீர் – அரை கப் (க்ரம்புல் செய்தது)
பால் – இரண்டு கப்
கண்டேன்ஸ்டு மில்க் (அ) சர்க்கரை – கால் கப்
குங்குமபூ – சிறிதளவு
சோள மாவு – ஒரு டீஸ்பூன் (தண்ணீரில் கரைத்து கொள்ளவும்)
முந்திரி – ஐந்து துண்டு (நெய்யில் வறுத்தது)
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்

செய்முறை

ஒரு கிண்ணத்தில் பால் ஊற்றி காய்ந்ததும் சிறு தீயில் வைத்து, அதில் பன்னீர் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கைவிடாமல் கிளறவும்.
கரைத்த சோள மாவு ஊற்றி ஒரு நிமிடம் நன்றாக கிளறவும்.
பின், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
ஏலக்காய் தூள், முந்திரி துண்டு சேர்த்து கிளறி ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும்.
பால் காய்ந்தவுடன் ஐந்து நிமிடம் மட்டும் வைத்தால் போதும்.

இனிப்புகளில்  பாயாசம் மிகவும் சிறப்பானது. வீட்டில் ஏதேனும் விஷேசம் என்றாலே முதலில் எல்லோராலும் செய்யப்படுவதும், நியாபகத்திற்கு வருவதும் பாயாசம் தான். Thanks TIME PASS NEWS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக