செட்டிநாடு காடை பிரியாணி!!! செய்முறை!
சுவையான காடை பிரியாணி!!!
செய்முறை :
- தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி மற்றும் பச்சைை மிளகாய் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பிறகு காடையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
- சீரகச் சம்பா அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
- பிரியாணி மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து ஆறியதும், தண்ணீர் ஊற்றி அதனை பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.
- பிறகு வாயகன்ற ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சிவக்க வறுக்கவும்.
- அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து அது கரையும் வரை வதக்கவும்.
- பிறகு அதில் சுத்தம் செய்த காடையை இத்துடன் சேர்த்து வதக்கவும்.
- அதில் உப்பு, [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், அரைத்த பிரியாணி மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- இத்துடன் தயிர், தேங்காய்ப்பால் தேவையான அளவு தண்ணீர், கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்.
- பின்பு தீயை மிதமாக்கி நெய் ஊற்றி கிளறி, புதினா இலை, கொத்தமல்லித்தழை தூவி மூடி போட்டு 20 நிமிடம் தம் போடவும்.பின்னர் அனைவரும் சாப்பிடலாம.
- இப்பொழுது சூடான காடை பிரியாணி ரெடி.
மேலும்
- இதனை பற்றிய உங்களது கருத்துக்ககளை கீழே தெரிவிக்கவும் மற்றும் இது உங்களுக்கு பயனுள்ள வகையில் இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக