மணத்தக்காளி கீரை தேங்காய் சூப், கீரை கூட்டு, கீரை பொரியல் :
#தேவையான பொருட்கள் ::
சின்ன வெங்காயம் - 1 கப்
மணத்தக்காளி கீரை - 1 கட்டு
தக்காளி - 2
பூண்டு - 5 பல் இடித்தது
மிளகு சீரக தூள் - 2 ஸ்பூன்
தேங்காய் விழுது - 1/2 மூடி
இந்துப்பு - தே. அளவு
#மணத்தக்காளி கீரை தேங்காய் சூப்:
*குக்கரில் வெங்காயம்,தக்காளி, சிறிதாக நறுக்கிய கீரை ,பூண்டு ,தேவையான அளவு நீர் சேர்த்து 1 விசில் விடவும்,பிறகு ஆரியவுடன் நன்றாக கடையவும்.
*வேக வைத்துள்ள கீரையுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது,மிளகு சீரக தூள்,இந்துப்பு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால்
* சுவையான மணத்தக்காளி கீரை தேங்காய் சூப் தயார்.
#மணத்தக்காளி கீரை பொரியல்::
*தேங்காய் எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்து சின்ன வெங்காயம் ,காய்ந்த மிளகாய் ,கீரை சேர்த்து வதக்கி,உப்பு தேங்காய் பூ சேர்த்து வதக்கினால் கீரை பொரியல் தயார்.
#மணத்தக்காளி கீரை கூட்டு::
*தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்து
வெங்காயம் ,கீரை சேர்த்து வதக்கி சிறிது நீர் சேர்த்து கொதிக்க விட்டு நீர் சுண்டியதும்
மத்தில் கடைந்து
*தேங்காயுடன் பச்சை மிளகாய் ,1 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்து கீரையில் ஊற்றி
2 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான
கீரை கூட்டு தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக