மிருதுவான இட்லி
( soft idli)
இட்லி தமிழ் நாட்டின் ஒரு அருமையான அடையாளம்னே சொல்லலாம் .குழந்தைகள்முதல் பெரியவர் வரை எல்லாருக்கும் இட்லி பிடித்த உணவாகவே இருக்கும் ..இதோ அதை எப்படி செய்யலாம் நு பார்க்கலாம்,...
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - 4 டம்ளர் (IR20)
உளுந்து - 1 டம்ளர்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் உளுந்து ,அரிசி இவற்றை 3 மணி நேரம் ஊற வைக்கவும் .
பிறகு உளுந்தை கழுவி,வெந்தயத்துடன் சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும் .
நன்கு உளுந்து மைய வேண்டும் .அவ்வப்போது சிறிது தண்ணீர் சேர்க்கலாம் .(எனக்கு கிட்ட தட்ட 40 நிமிடங்கள் ஆகிறது .உங்கள் கிரைண்டரை பொறுத்து நேரம் மாறுபடலாம் .)
உளுந்து மாவு எடுத்தால் பந்து பந்தாக அழகாக வரும் அதுதான் பதம் .இப்போது மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் .
பிறகு கிரைண்டரில் அரிசியை கழுவி போடவும் .அதனுடன் கல் உப்பு சேர்த்து அரக்கவும்.
அவ்வப்போது தண்ணீர் விடவும் .அதிகம் தண்ணீர் விடவும் கூடாது .குறைவாகவும் தண்ணீர் விட கூடாது .குளிர்ந்த நீரை கூட விடலாம் .இது கிரைண்டர் ஓடும் போது மாவு சூடாகாமல் இருக்க உதவும் .
அரிசி ரவை பதத்தை விட சற்று மைய அரைக்கவும் .
பிறகு உளுந்து மாவு இருக்கும் அதே பாத்திரத்தில் எடுத்து இரண்டு மாவைவும் கைகளால் நன்கு கலக்கவும் .அதை ஒரு பத்திரத்தில் மாற்றி ,8 -10 மணி நேரம் புளிக்க விடவும் .நடுவில் அதை கிளற கூடாது .
மாவு புளித்ததும் பொங்கி வரும் .அப்போது மாவை அதிகம் கிளறாமல் ஒரு பக்கமாகவே மாவை எடுத்து ,இட்லி தட்டில் ஊற்றி 10-15 நிமிடங்கள் வேகவிட்டு ,எடுக்கவும் .
அவ்வளவுதான் சுவையான ,மிருதுவான இட்லி தயார் .
கவனிக்க:
உளுந்து நன்கு மைய வேண்டும். எடுக்கும் போது பஞ்சு போல பந்து பந்தாக வரவேண்டும் .
கிரைண்டரில் அரைத்தால் தான் இட்லி மிருதுவாக கிடைக்கும் .
புளித்த மாவை அதிகம் கிளறி விட்டால் கல் போன்ற இட்லி தான் கிடைக்கும்.
பிரிட்ஜில் இருந்து மாவை எடுத்த உடனே இட்லி ஊற்றக்கூடாது .இட்லி தட்டில் மாவை வைத்துகரண்டியால் தட்ட கூடாது .தட்டாமல் கரண்டி மாவை அப்படியே ஊற்றவும் .
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதித்த பின் இட்லி தட்டை வைத்து மூடி வேக விடவும் .
சில இட்லி தட்டில் மிகவும் குழியான வட்டங்கள் இருக்கும் அதில் ஊற்றும் இட்லி கல் போல தெரியலாம் .இட்லி குழிகள் மிகவும் குழியாக இல்லாமல் ,சிறிது ஏந்தலாக இருந்தால் மிருதுவாக , சாப்பிட எளிதாக இருக்கும் .
அரிசி அரைக்கும் போது கால் கப் சாதமும் (அன்றைய சாதம் தான் சேர்க்க வேண்டும் . முதல் நாள் செய்தது இல்லை )சேர்த்து , அரைத்தால் மிக மிக மிருதுவான இட்லி கிடைக்கும் .எந்த பயமும் இல்லாமல் இதை செய்யலாம்
இவற்றை கவனித்தாலே போதும் ,மிருதுவான இட்லி உங்கள் கையில் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக