திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1 கிலோ
சீரக சம்பா அரிசி / பாஸ்மதி அரிசி – 1 கிலோ
இஞ்சி பூண்டு விழுது – 4 மே கரண்டி
பச்சை மிளகாய் – 10
காய்ந்த வத்தல் – 10
தனி மிளகாய்தூள் – 1 மே கரண்டி
உப்பு – தேவைக்கு
வெங்காயம் – 3 + 1/2
தக்காளி – 2 பெரியது
தயிர் – ஒரு கப்- (250 மில்லி)
எண்ணெய் – 100 மில்லி
நெய் – 100 மில்லி
தேங்காய் பால் – ஒரு கப்
கொத்தமல்லி – ஒரு கட்டு
புதினா – அரை கட்டு
கரம் மசாலா – ஒரு மே.கரண்டி
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 6
ஏலக்காய் – 6
அன்னாசி பூ – 1
பிரியாணி இலை – 2
அரைக்க வேண்டிய பொருட்கள்:
வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லி தனி தனியாக மிக்சியில் அரைத்து எடுத்து வைக்கவும்.
பச்ச மிளகாய், காய்ந்த வத்தல் சிறுது தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து வைக்கவும்.
செய்முறை:
முதலில் சிக்கனை நன்றாக அலசி அதில் சிறுது இஞ்சி பூண்டு விழுது , மஞ்சள்தூள், உப்பு சேர்த்து விரவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
பிரியாணி சட்டியில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்த பின்பு பட்டை ,கிராம்பு,ஏலக்காய், அன்னாசி பூ , பிரியாணி இலை போட்டு தாளிக்கவும்.
அதில் நீட்டமாக நறுக்கிய பாதி வெங்காயம் போட்டு வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்ச வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு அதில் அரைத்த வெங்காய விழுது சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கிய பின்பு தக்காளி சேர்த்து பச்ச வாசனை போகும் வரை சிம்மில் மூடி போட்டு வதக்கவும்.
பிறகு நன்றாக கிளறிவிடு அரைத்த பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லியினை சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள் , மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு சிறுது நேரம் வதங்கவிடவும்.
அதில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்க்கவும். இதனுடன் தயிர், கரம் மசாலா பவுடர் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு மூடி போட்டு சிம்மில் சிக்கனை வேக வைக்கவும்.
இந்த நேரத்தில் அரிசியினை நன்றாக அலசி பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். அதிக நேரம் ஊற வைக்க வேண்டாம்..
தேங்காய் பாலுடன் தேவைக்கு தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும். (ஒரு கப் அரிசிக்கு 1 1/4 கப் தண்ணீர் சேர்க்கணும்) (தேங்காய் பால் + தண்ணீர் அளவு சேர்த்து எடுக்கவும்)
சிக்கன் பாதி பாகம் வெந்த பின்பு அதில் எடுத்து வைத்த தேங்காய் பால் + தண்ணீரை ஊற்றி தேவைக்கு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
நன்றாக கொதிவரும் பொழுது ஊற வைத்த அரிசியினை சேர்க்கவும்.
நன்றாக பிரட்டிவிட்டு இறுக்கமான மூடி போட்டு அதிக தணலில் 5 நிமிடங்கள் வைத்து பிறகு குறைந்த தணலில் 15 நிமிடங்கள் வேக வைக்கவும். அடுத்த ஒரு பத்து நிமிடங்கள் அடுப்பின் மேல் ஒரு இரும்பு தவா வைத்து அதன் மேல்பிரியாணி சட்டியினை வைத்து தம்மில் போடவும்.
பிரியாணி உடனே எடுக்காமல் பத்து நிமிடங்கள் கழித்து திறந்து கிளறிவிடவும். சுவையான திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி ரெடி..
எண்ணெய் கத்தரிக்காய், ரைதாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்…
பி.கு :
தலப்பாகட்டு பிரியாணி க்கு சிரகசம்பா அரிசி தான் சேர்ப்பார்கள் அது கிடைக்காதவர்கள் பாஸ்மதி அரிசி பயன்படுத்தலாம்.
தண்ணீர் அளவு பாஸ்மதி அரிசி என்றால் ஒன்னுக்கு 11/4 அல்லது ஒன்னுக்கு ஒன்னு கூட வைக்கலாம் (சிக்கன் வேகும் தண்ணீரின் அளவினை வைத்து மாற்றிக்கொள்ளவும்)
சிரகசம்பா அரிசி என்றால் ஒன்னுக்கு 11/2 கப் தண்ணீர் விடவும்..
இந்த பிரியாணி குழைந்தது போல் தான் இருக்கும். அரிசியினை அதிக நேரம் ஊற வைத்தல் பிரியாணி கிளரும்போழுது உடைந்துவிடும்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக