இட்லி மிளகாய்ப் பொடி
தேவையான பொருட்கள்;
தோல் நீக்கிய உளுத்தம் பருப்பு - அரை கப்
கடலை பருப்பு - கால் கப்
எள்ளு - 1 டேபிள்ஸ்பூன்( விரும்பினால்)
மிளகாய் வற்றல் -6- 8( காரம் அவரவர் விருப்பம்)
பூண்டு பல் - 4 (தோலுடன்)
கருவேப்பிலை - 2 இணுக்கு
பெருங்காயப் பொடி - அரைடீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கருகாமல் மிளகாய் வற்றலை வறுத்து எடுக்கவும்.பருப்பு வகைகளைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.வறுபட்டவுடன், பூண்டு, கருவேப்பிலை, எள்ளு, தேவைக்கு உப்பு போட்டு வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
மிக்ஸியில் பொடிக்கும் பொழுது பெருங்காயம் சேர்த்து பொடித்து பேப்பரில் தட்டி ஆற விட்டு எவ்ர்சில்வர் டப்பா அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி வைத்து பயன் படுத்தவும்.
தேவைக்கு பொடியுடன் நல்லெண்ணெய் கலந்து இட்லி தோசையுடன் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக