வியாழன், 29 டிசம்பர், 2016

ஆனியன் ரவா தோசை. -Onion Rava Dosa

ஆனியன் ரவா தோசை.
-Onion Rava Dosa .

பிரபலமான தென்னிந்திய தோசை வெரைட்டி. சட்னி மற்றும் சாம்பாருடன் சேர்த்து பரிமாறவும்.

*தேவையான பொருட்கள் :*

ரவை – அரை கிலோ
பச்சை மிளகாய் – 5௦ கிராம் (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – தேவையான அளவு
மைதா – 1௦௦ கிராம்
சீரகம் – நான்கு டீஸ்பூன்
வெங்காயம் – 2௦௦ கிராம் (பொடியாக நறுக்கியது)
முந்திரி – சிறிதளவு (உடைத்தது)
இஞ்சி – 5௦ கிராம் (விழுதாக அரைத்து கொள்ளவும்)
உப்பு – தேவைகேற்ப
தோசை மாவு – தேவையான அளவு

*செய்முறை :*

ஒரு கிண்ணத்தில் ரவை, மைதா மாவு, சீரகம், உப்பு, முந்திரி, பச்சை மிளகாய், இஞ்சி, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு, அதில் தோசை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின், தோசை கல்லில் ஊற்றி மேலே வெங்காயம் பரவலாக தூவி, எண்ணெய் சுற்றி ஊற்றி, தோசை திருப்பிப் போடாமல், வெந்ததும் எடுக்கவும்.

பிளாஸ்ட்டிக் கப்பில் டீ குடிப்பவரா நீங்கள்…?

பிளாஸ்ட்டிக் கப்பில் டீ குடிப்பவரா நீங்கள்…அது 12 சிகரெட் பிடித்தற்கு சமம் என்கிறது சுற்றுச் சூழல்துறை… அதிர்ச்சி ரிபோர்ட்….

பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் பொருட்கள் உடலுக்கு தீங்க விளைக்கக்கூடியது என்பது அனைவரும் அறிந்ததே.ஆனாலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாத நிலையே என்பது தற்போதைய நிலை.
இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து சுற்றுச்சூழல் துறை பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

பெண்கள் அன்றாடம் பயன்படுத்தும் நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக் போன்றவற்றால் பெரும் தீங்கு ஏற்படும் என்றும், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று பிளாஸ்டிக் கப்பில் டீ குடித்தால் அது 12 சிகரெட் பிடித்ததற்கு சமம் என்றும் சுற்றுச்சூழல் துறை எச்சரித்துள்ளது.

ஆனியன் ரவா தோசை. -Onion Rava Dosa

ஆனியன் ரவா தோசை.
-Onion Rava Dosa .

பிரபலமான தென்னிந்திய தோசை வெரைட்டி. சட்னி மற்றும் சாம்பாருடன் சேர்த்து பரிமாறவும்.

*தேவையான பொருட்கள் :*

ரவை – அரை கிலோ
பச்சை மிளகாய் – 5௦ கிராம் (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – தேவையான அளவு
மைதா – 1௦௦ கிராம்
சீரகம் – நான்கு டீஸ்பூன்
வெங்காயம் – 2௦௦ கிராம் (பொடியாக நறுக்கியது)
முந்திரி – சிறிதளவு (உடைத்தது)
இஞ்சி – 5௦ கிராம் (விழுதாக அரைத்து கொள்ளவும்)
உப்பு – தேவைகேற்ப
தோசை மாவு – தேவையான அளவு

*செய்முறை :*

ஒரு கிண்ணத்தில் ரவை, மைதா மாவு, சீரகம், உப்பு, முந்திரி, பச்சை மிளகாய், இஞ்சி, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு, அதில் தோசை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின், தோசை கல்லில் ஊற்றி மேலே வெங்காயம் பரவலாக தூவி, எண்ணெய் சுற்றி ஊற்றி, தோசை திருப்பிப் போடாமல், வெந்ததும் எடுக்கவும்.

சுக்கு மருத்துவக் குணங்கள்:-

சுக்கு மருத்துவக் குணங்கள்:-

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு(Dry Ginger) , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

உணவுப் பொருட்கள் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

*1.* ஓர் உணவுப் பொருளை வாங்குவதற்கு முன், அதில் தயாரிப்பின்போது சேர்க்கப்பட்ட பொருட்கள் என்னென்ன என்பதை முதலில் பார்க்க வேண்டும். நிறமூட்டிகள், சர்க்கரை, பதனிடும் பொருட்களின் பயன்பாடு அதிகம் இருந்தால், ஆரோக்கியத்துக்கு எதிரான அந்தப் பொருளை தவிர்த்துவிட வேண்டும். சில பொருட்களை சுவைத்துப் பார்க்க அனுமதி இருந்தால், அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

*2.* கார்போஹைடிரேட் நிறைந்த உணவுகள், கால்சியம் நிறைந்த உணவுகள், புரதச்சத்து நிறைந்த உணவுகள் என அவரவரின் ஊட்டச்சத்து தேவைக்கு ஏற்ப உணவு வாங்க, உணவுப் பொருளின் உறையில் உள்ள சத்து அட்டவணையை கவனித்து வாங்கவும்.

*3.* ஒரு பொருளின் உறையில், உற்பத்தியாளரின் முகவரி, தொடர்பு எண் பற்றிய விவரங்களை கவனித்து வாங்கும்போது, பாக்கெட்டில் 'செட்டிநாடு முறுக்கு' என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது கோயம்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து தயாராகி வருகிறது என்பதை அறிந்துகொள்ள முடியும். அந்தப் பொருள் குறித்து ஏதேனும் புகார் தெரிவிக்க, தொடர்பு எண் பயன்படும். முகவரி, தொடர்பு எண் இல்லாத பொருட்களை வாங்காமல் தவிர்ப்பது நலம்.

*4.* நுகர்வோரை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது, குறிப்பிட்ட பொருளின் உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதியை கவனித்து வாங்க வேண்டும் என்பதை. இவ்விரண்டில் ஏதேனும் குளறுபடி இருந்தால், உடனடியாக கடைக்காரர், அங்காடி நிர்வாகியிடம் அது குறித்து புகார் தெரிவித்து அதை அப்புறப்படுத்தச் சொல்லவும்.

*5.* காலாவதி தேதி குறித்து கடைக்காரரிடம் புகார் சொல்லியும் நடவடிக்கை இல்லை எனில், அந்த உணவுப் பொருளின் உறையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கு தொலைபேசி, ஈமெயிலில் புகார் அளிக்கவும். பதில் நடவடிக்கை இல்லாத பட்சத்தில், நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுகி முறையிடலாம். இதற்கு, குறிப்பிட்ட பொருள் வாங்கிய ரசீது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, உறையில் குறிப்பிடப்பட்டிருந்த காலாவதி தேதியையும் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

*6.* பிரெட், பால், சப்பாத்தி, பரோட்டா போன்ற 'ரெடி டு ஈட்' பொருட்களில் 'பெஸ்ட் பிஃபோர்(Best before)' என்று குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியையும் சரிபார்த்து வாங்கவும்.

*7.* வாங்கும் உணவுப் பொருள் சைவமா, அசைவமா என்பது அதன் உறையிலேயே குறியீடு அல்லது வார்த்தைகளால் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் பார்த்து வாங்கவும்.

*8.* தரச்சான்று முத்திரை பெற்ற உணவுப் பொருட்களையே வாங்கவும். உதாரணமாக நெய் என்றால் அக்மார்க் முத்திரையும், பால், குடிநீர் எனில் ஐ.எஸ்.ஐ.  முத்திரையும் இருக்க வேண்டும்.

*9.* ஒரு பொருளை வாங்கும்போது, அதை எவ்வாறு, எந்த குளிர்/வெப்ப நிலையில் வைக்கவேண்டும் என்பதை தெரிந்துகொண்டு பின்பற்றவும்.

*10.* ஒரு பொருளின் தரம் குறித்து புகார் அளிக்க, முறையான சான்று வேண்டும் என்பதால், எப்போதும் பேக் செய்யப்பட்ட, லேபிள்டு மற்றும் பிராண்டட் பொருட்களையே வாங்கவும்."

நோய்களுக்கு தீர்வு தரும் சித்த மருத்துவம்!

மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

•• தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

•• ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும்.

•• இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் சாப்பிடலாம்.

•• அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

•• எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.

•• உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

சிறுநீரகங்களை பாதுகாக்க நாம் செய்ய வேண்டியவை...

சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களும், உணவுப் பொருட்களும் தான். சிறுநீரகங்கள் உடலில பல்வேறு செயல்களை செய்கிறது. அதில் ஹார்மோன்களை உற்பத்தி செய்வது, இரத்தத்தை சுத்திகரிப்பது, கனிமச்சத்துக்களை உறிஞ்சுவது, சிறுநீரைப் பிரிப்பது, உடலின் அல்கலைன் அமிலத்தை சீராக பராமரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

சோடா அதிகம் குடித்து வந்தால், அது சிறுநீரகங்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி பெரிதும் உதவியாக இருக்கும். உடற்பயிற்சி செய்வதால் சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரகத்தில் கால்சியம் அதிகம் தேங்கி, சிறுநீரக கற்கள் ஏற்படும். ஆகவே இவற்றைத் தவிர்க்க காய்கறிகள், பீன்ஸ், நட்ஸ், அவகேடோ போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வர வேண்டும்.

இரவு நேரத்தில் தான் சிறுநீரக திசுக்கள் புதுப்பிக்கப்படும். அப்போது சரியான தூக்கத்தை மேற்கொள்ளதால் இருந்தால், சிறுநீரகமானது நேரடியாக பாதிக்கப்படும்.

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால், சிறுநீரக இயக்கம் பாதிக்கப்படும். நீங்கள் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடித்து வருகிறீர்கள் என்பதை சிறுநீர் கொண்டு கண்டுபிடிக்கலாம். உங்களின் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளிவந்தால், நீங்கள் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

சிறுநீரை அடக்கி வந்தால், சிறுநீர்ப்பையின் அழுத்தம் அதிகரித்து, அதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதோடு, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுவிடும். ஆகவே சிறுநீர் வந்தால் அதனை அடக்காமல் உடனே வெளியேற்றிவிடுங்கள்.

உடலுக்கு உப்பு மிகவும் இன்றியமையாதது தான். ஆனால் அந்த உப்பு அளவுக்கு அதிகமானால், அது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீரகத்தில் அழுத்தத்தை அதிகமாக்கும்.

வலி நிவாரணி மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டால், அது முதலில் சிறுநீரகத்திற்கு தான் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

புகைப்பிடிப்பதால், இரத்த நாளங்கள் கடினமாகி, அதனை அளவு குறைந்து சிறுநீரகங்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்து, சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்பட்டு, அது மெதுவாக பாதிக்கப்படும். மேலும் ஆய்வு ஒன்றில் ஒரு நாளைக்கு 2 சிகரெட்டிற்கு மேல் புகைத்தால், அது சிறுநீரகத்தை மட்டுமின்றி, நுரையீரலையும் சேர்த்து பாதிப்பை ஏற்படுத்தும்.

புதன், 28 டிசம்பர், 2016

சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி

சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி

பச்சை பட்டாணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

இப்போது பச்சை பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

*தேவையான பொருட்கள் :*

கோதுமை மாவு - 2 கப்,
பச்சைப் பட்டாணி - ஒரு கப்
கொத்தமல்லித் தழை - அரை கட்டு,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி - சிறு துண்டு,
நெய் - எண்ணெய் கலவை,
உப்பு - தேவையான அளவு.

*செய்முறை :*

* பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

* கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, தேவையான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 மணி நேரம் ஊற விடவும்.

* வேகவைத்த பச்சை பட்டாணியுடன் கொத்தமல்லித்தழை, இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து சின்னச் சின்ன உருண்டைகள் தயார் செய்யவும்.

* பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை சிறிதளவு எடுத்து அதை கிண்ணம் போல் செய்து அதனுள் பட்டாணி விழுது உருண்டையை வைத்து மூடி (வெளியே விழுது வராதபடி) சப்பாத்திகளாக தேய்க்கவும்.

* தோசைக்கல் அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேய்த்து வைத்த சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும் நெய் - எண்ணெய் கலவையை ஊற்றி, இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

* சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி.

* சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தியை அப்படியே சுருட்டி லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுத்து அனுப்பலாம்.