செவ்வாய், 29 மே, 2018

தந்தூரி சிக்கன் செய்ய தெரியுமா? தெரியலான இதை பாருங்கள்

தந்தூரி சிக்கன் செய்ய தெரியுமா? தெரியலான இதை பாருங்கள்

தந்தூரி சிக்கன் நமது இந்தியாவில் அதிகமாக விரும்பப்படும் உணவுகளில் ஒன்று. இதை செய்வது மிக சுலபம், நாம் வீட்டிலேயே செய்துவிடலாம். ஆனால் நாம் அதை செய்யாமல் வெளியே கடையில் வாங்கி சாப்பிடுகிறோம். தந்தூரி சிக்கன் செய்ய வெறும் 30 நிமிடங்களே போதும்.
தேவையான பொருட்கள்:
  • 4 கோழி மார்பு பகுதி (தோல் உரிக்கப்பட்டு, எலும்புகள் நீக்கப்பட்டு இருக்க வேண்டும்)
  • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  • 1/2 கப் தயிர்
  • 1 தேக்கரண்டி அரைத்த பூண்டு
  • 1 தேக்கரண்டி வெங்காயம் தூள்
  • 1 தேக்கரண்டி கொத்தமல்லி இலைகள்
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா
  • 1 தேக்கரண்டி மிளகுத்தூள்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 தேக்கரண்டி கொத்தமல்லி
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி
  • 1/4 தேக்கரண்டி காய்ந்த மிளகு
செய்முறை:
  • மேலே உள்ள பொருட்களை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்கவும், நல்ல சுவை வேண்டும் என்றல் ஒரு இரவு முழுவதும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்போது தான் மசாலா நன்றாக இறைச்சியுடன் சேரும்.
  • பிறகு இறைச்சியை தனியாக எடுத்து அதை ஒரு கிரில் கம்பி அல்லது சமைக்க ஏற்றது போன்ற ஒரு கம்பியை எடுத்து அதில் சொருகி மிதமான நெருப்பில் இறைச்சி வேகும் வரை காத்திருக்கும். கம்பியில் தான் வேகவைக்க வேண்டுமா என்றல் அது உங்கள் விருப்பம், ஆனால் தந்தூரி சிக்கனை பாத்திரத்தில் போட்டு வேகவைக்க மாட்டார்கள், நெருப்பின் மீது அப்படியே வைப்பார்கள்.


  • அவ்வளவுதான் இறைச்சி வெந்தவுடன் எடுத்து தாராளமாக உண்ணலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு லைக், கமெண்ட், ஷேர் செய்யவும். நன்றி...!

பன்னீர் புலாவ் வித் ஆலு



 பன்னீர் புலாவ் வித் ஆலு


*🔻தேவையான பொருட்கள்🔻*

பாஸ்மதி அரிசி - 1 கப்,
உருளைக்கிழங்கு - 200 கிராம்
பன்னீர் - 15 துண்டுகள்,
தக்காளி - 2,
பெரிய வெங்காயம் - 2,
பச்சைமிளகாய் - 2,
முந்திரி பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
சாட் மசாலா  - 1/2 டீஸ்பூன்,
பட்டை - சிறிது, கிராம்பு - 2,
சோம்பு - 1 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 1,
நெய் - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

➖ பாஸ்மதி அரிசியை கழுவி 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

➖ தண்ணீரை வடிகட்டி, வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும்.

➖ உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கவும். பன்னீரை துண்டுகளாக  நறுக்கிக் கொள்ளவும்.

➖ லேசாக வறுத்த பாஸ்மதி அரிசியை தேவையான அளவு நீர் விட்டு உதிரியாக வடித்து கொள்ளவும்.

➖ வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பன்னீர், நறுக்கிய உருளைக்கிழங்கைப் போட்டு பொரிக்கவும்.

➖ வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை சிறிதும் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

➖ வாணலியில் எண்ணெய் சிறிதளவு மற்றும் நெய்யை விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சு இலை, சோம்பு போட்டு தாளிக்கவும்.

➖ இந்தக் கலவையில் அரைத்த வெங்காயம், தக்காளி விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.

➖ இவை நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி மிதமான தணலில் வைக்கவும்.

➖ ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது பொரித்த பன்னீர், உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு கிளறி இறக்கவும்.

➖ கடைசியாக இதில் உதிரியாக வடித்த சாதத்தை போட்டு கிளறி இறக்கவும்.

*சுவையான பன்னீர் புலாவ் வித் ஆலு ரெடி.*

வியாழன், 17 மே, 2018

செட்டிநாடு குழி பாணியாரைப் பற்றிய ரெசிபி


செட்டிநாடு குழி பாணியாரைப் பற்றிய ரெசிபி

அரிசி / இட்லி அரிசி - 1/2 கப்ரா
ரைஸ்  - 1/2 கப்
பால் - 1/4 கப்
கொத்த மல்லி - 1/2 தேக்கரண்டி
உப்பு - ருசிக்க
வெங்காயம் - 2 அல்லது 5
பச்சை மிளகாய் - 4 
கர்ரி இலைகள் -1 சரம் (வெட்டப்பட்டது)
வெங்காயம் - 2 டீஸ்பூன்
உராத் தல் -1 டீஸ்பூன்
சேனா தல் -1 டீஸ்பூன்
கடுகு விதைகள் -1
தேக்கரண்டிஎண்ணெய் - 1 டீஸ்பூன்
4 மணி நேரம் ஒரு தனி கிண்ணத்தில் அரிசியை உறிஞ்சி, உளுத்தம்பருவை உளுத்தம்பருப்புடன் ஊறவைக்கவும்.ஒரு மென்மையான பேஸ்ட் அதை பிழி. உப்பு கலந்து.10 மணி நேரம் (அல்லது இரவில்) இடி இலை வரை இரட்டையர் வரை உறிஞ்சும். இப்போது பேட்டி பாணிகாரங்களை தயாரிக்க தயாராக உள்ளது. நீங்கள் அதை குளிர்சாதன பெட்டியில் சேமித்து பின்னர் அதை செய்யலாம்



கடலை எண்ணெய் சேர்க்கவும், கடுகு விதைகள், சானா தால் மற்றும் சிறுகுடல் பருப்பு ஆகியவற்றைக் குடிக்கவும்.நறுக்கப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறி இலைகளை சேர்க்கவும். அது சிறிது நிமிடங்களுக்கு சிறிது சிறிதாக வெளிப்படையானதாக இருக்கும். பேனியாகிராமிற்கு வெட்டப்பட்ட காய்கறிகளை சேர்ப்பதன் மூலம் நீங்கள் அதை ஆரோக்கியமானதாக்கலாம். நீங்கள் சேர்க்க முடிவு செய்தால், அதனுடன் இதைச் சாதிக்கலாம்.சதைப்பகுதியுடன் கலந்த கலவை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக கலக்கவும்.குஷை பேனியாகாரம் பான் (பஃபெட் பன்றி இறைச்சி துண்டு) ஹீட். துளசி சில துளிகள் (சுமார் 1/2 தேக்கரண்டி) எண்ணெய் ஒவ்வொரு அச்சு.இடி ஒரு ஸ்பூன்ஃபுல்லை கொட்டி விடு, ஒரு நிமிடம் சமைக்கட்டும். ஒரு மரக் குச்சியைப் பயன்படுத்தி அல்லது ஒரு முட்கரண்டி கொண்டு, மற்றொரு பக்கத்தை சமைப்பதற்காக மெதுவாக ஒவ்வொரு பேனையாரையும் புரட்டுங்கள். இது தானாக ஒரு பந்து வடிவத்தை உருவாக்குகிறது. நீங்கள் வேகமாக சமையல் செய்ய ஒரு மூடி கொண்டு மறைக்க முடியாது.இரண்டு பக்கங்களிலும் சமைக்கப்படும் வரை குக்கீ மற்றும் சிறிய பழுப்பு புள்ளிகள் தோன்றும். நடுத்தர குறைந்த சுடர் சமையல் சிறந்த முடிவுகளை கொடுக்கிறது. டேஸ்டி குழி  பாணியாரம் சேவை செய்ய தயாராக உள்ளது.

புதன், 9 மே, 2018

செட்டிநாடு காடை பிரியாணி!!!

செட்டிநாடு காடை பிரியாணி!!! செய்முறை!

சுவையான காடை பிரியாணி!!! 
செய்முறை :
  • தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி மற்றும்  பச்சைை மிளகாய்  பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பிறகு  காடையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
  • சீரகச் சம்பா அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
  • பிரியாணி மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து ஆறியதும், தண்ணீர் ஊற்றி அதனை பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு  வாயகன்ற ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை  சிவக்க வறுக்கவும்.
  • அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து அது கரையும் வரை வதக்கவும்.
  • பிறகு  அதில்  சுத்தம் செய்த காடையை இத்துடன் சேர்த்து வதக்கவும்.
  • அதில் உப்பு, [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், அரைத்த பிரியாணி மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  • இத்துடன் தயிர், தேங்காய்ப்பால் தேவையான அளவு தண்ணீர், கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்.
  • பின்பு  தீயை மிதமாக்கி நெய் ஊற்றி கிளறி, புதினா இலை, கொத்தமல்லித்தழை தூவி மூடி போட்டு 20 நிமிடம் தம் போடவும்.பின்னர் அனைவரும் சாப்பிடலாம. 
  • இப்பொழுது சூடான காடை பிரியாணி ரெடி. 
மேலும்
  • இதனை பற்றிய உங்களது கருத்துக்ககளை கீழே தெரிவிக்கவும் மற்றும் இது உங்களுக்கு பயனுள்ள வகையில் இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்.

அதிக வெயில் காலங்களில் அசைவம் சாப்பிடுவதை தவிருங்கள்...

அதிக வெயில் காலங்களில் அசைவம் சாப்பிடுவதை தவிருங்கள்...

பருவநிலைக்கு ஏற்ற உணவுகளைச் சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. ஆனால், நம்மில் யாருமே அதைப் பின்பற்றுவதில்லை.
பருவநிலைக்குத் தகுந்த உணவுகளை உண்ண வேண்டும். எந்தெந்தக் காலச்சூழலில் என்னென்ன உணவைச் சாப்பிடலாம் என்று வகைப்படுத்தியிருந்தார்கள் நம் முன்னோர்கள்.
ஆனால், இன்றைக்கு நாம் நம் பாரம்பர்யத்தை மறந்துவிட்டோம். புதிது புதிதாக ஏதேதோ உணவுகளைச் சமைத்து, உண்டு மகிழ்கிறோம். அதன் விளைவாகத்தான் புதுப் புது நோய்களும் வரிசைகட்டி நிற்கின்றன.

வியாழக்கிழமைகளில் பயறுக்குழம்பு, வெள்ளிக்கிழமைகளில் சாம்பார் வைக்க வேண்டும் என்று சொல்லி வைத்திருந்தார்கள். அதைக் காலங்காலமாக பின்பற்றி வருபவர்களும் உண்டு.
செரிமான சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே தேங்காய்ப்பாலில் செய்யப்பட்ட சொதியும், இஞ்சித் துவையலும் செய்து சாப்பிடுவதும் வழக்கத்திலிருந்தது.
ஆனால், அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, மரபார்ந்த பழக்கங்களைப் புறந்தள்ளிவிட்டு ஞாயிற்றுக்கிழமை என்றால் அசைவம் என்பதை மட்டும் கட்டாயமாக்கிவிட்டோம்.
அசைவமும் நல்ல உணவுதான். என்றாலும், கோடைகாலத்தில் அசைவம் சாப்பிடலாமா?’ என்று கேட்டால், வேண்டாம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.
அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் டிரைகிளைசரைடுகளும் (Triglycerides) ‘எல்.டி.எல்’ எனப்படும் கெட்டக் கொழுப்பின் அளவும் அதிகரித்து இதயநோய் வருவதற்கான சூழலை ஏற்படுத்தும்.
கொழுப்பு நிறைந்த உணவுகள், குடல் இயக்கத்தை மந்தப்படுத்தும் வாய்ப்பும் உண்டு.
அசைவம் என்றாலே நம்மில் பலரும் முன்னிறுத்துவது பிராய்லர் கோழிகளைத்தான். ஹார்மோன் ஊசி மற்றும் தீவனங்களைப்போட்டு குறுகியகாலத்தில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளை கோடைகாலத்தில் மட்டுமல்ல, எந்தக் காலத்திலும் சாப்பிடக் கூடாது.
நாட்டுக்கோழி சாப்பிடலாம். ஆனால், அதையும் கோடையில் தவிர்ப்பதே சிறந்தது.
கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கும். வெப்பத்தில் நம் உடல் தகித்துக்கொண்டிருக்க, அந்த நேரத்தில் சூடு நிறைந்த கோழிக்கறியைச் சாப்பிட்டால் செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படும்.
இதனால் வயிற்றுவலி, கழிச்சல், மூலம், வேறு சில வயிற்று உபாதைகளும் ஏற்படும்.
‘கோழிக்கறி உடலில் சூட்டை உண்டாக்கும் குணமுடையது. அதற்கு பதிலாக குளிர்ச்சித் தன்மையுள்ள ஆட்டுக்கறியைச் சாப்பிடலாம்’ என்று சொன்னால் அதுவும் தவறானதே.
ஏனென்றால் வெயில் காலத்தில் ஏற்படும் செரிமானக் கோளாறால் மலச்சிக்கலும் வயிற்று உபாதைகளும் ஏற்படும்.
அசைவம் சாப்பிட்டுத்தானாக வேண்டும், அது இல்லாமல் முடியாது என்பவர்கள் மீன் குழம்புவைத்து, குறைந்த அளவில் சாப்பிடலாம்.
அதற்காக மீன் மசாலா, பொரித்த மீனெல்லாம் சாப்பிடக் கூடாது.
கோடை காலத்தில் மறந்தும்கூட சேர்க்கக் கூடாதது நண்டு. அது உடலில் எரிச்சலை ஏற்படுத்தும். அலர்ஜி உண்டாகவும் அதிக வாய்ப்புண்டு.
ஃபாஸ்ட்ஃபுட் என்று கூறப்படும் பீட்சா, பர்கர், சிப்ஸ், சிக்கன் ஃப்ரை, கொழுப்பு அதிகமுள்ள உணவுகளையும் வெயில் காலத்தில் தவிர்ப்பது நல்லது.
‘கோடை காலத்தில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும். ஆகவே நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதுடன் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
கோடையில் மசாலா உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிக புரதம், கொழுப்புச் சத்து நிறைந்த மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, சிக்கன் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
மட்டன், சிக்கன் போன்றவை செரிமானக்கோளாறை ஏற்படுத்தும்; சரும நோய்களை உண்டாக்கும்.
கை கால் மற்றும் முகத்தில் வியர்க்குரு, தேமல், கட்டிகள், அம்மை போன்ற நோய்கள் வரவும் அசைவ உணவுகள் காரணமாக வாய்ப்புண்டு.
நண்டு, இறால் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இவை வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி, நீர்ச்சத்துக் குறைபாட்டை உண்டாக்கலாம். இதேபோல் தந்தூரி வகை உணவுகள், வறுத்த, பொரித்த உணவுகளும் வேண்டாம்.
அசைவ உணவுகள் சாப்பிட வேண்டும் என்றால், நெத்திலி போன்ற மீன்களைச் சாப்பிடலாம். முட்டை சாப்பிடலாம், அதுவும் அளவாக…

இட்லி மிருதுவாக வரவேண்டுமா?

இட்லி மிருதுவாக வரவேண்டுமா?

காலை உணவுக்கு ஏற்றது இட்லி. எல்லோர் வீட்டிலும் இட்லி சாஃப்டாக இருப்பதில்லை. நமக்கே கூட ஒரு சில நாட்கள் மிருதுவாகவாகவும், சில நாட்கள் கல் போன்றும் இருக்கும். எப்போதும் ஒரே மாதிரியான மிருதுவாக இட்லி வர என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்..
தேவையான பொருட்கள்:
  • புழுங்கல் அரிசி – 4 தம்ளர்
  • உளுந்து – 1 டம்ளர்
  • வெந்தயம் – 1/2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் தரமான அரிசி மற்றும் உளுந்தை பயன்படுத்த வேண்டும். அதன் பின் உளுந்து, அரிசி இவற்றை மூன்று மணி முதல் 5 மணி நேரமாவது ஊற வைக்கவும். பிறகு உளுந்தை கழுவி, வெந்தயத்துடன் சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும். மிக்ஸியில் அரைப்பதை விட கிரைண்டரில் அரைத்தால் தான் இட்லி மிருதுவாக கிடைக்கும். அவ்வப்போது தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும்.
பிறகு அரிசியை அரைத்து அதனுடன், கல் உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும். அரிசி ரவை பதத்தை விட சற்று மைய அரைப்பட வேண்டும். அரிசி அரைக்கும் போது அன்று வடித்த சாதத்தை கால் கப் சேர்த்து அரைத்தால் மிக மிருதுவான இட்லி கிடைக்கும். உளுந்து நன்கு மையாக அரைபட வேண்டும். மாவை வழித்தெடுக்கும் போது பஞ்சு போல பந்து பந்தாக வரவேண்டும்.
இப்படி அரைக்கப்பட்ட அரிசி மற்றும் உளுந்தை ஒரு பாத்திரத்தில் வழித்தெடுத்து இரண்டு மாவைவும் கைகளால் நன்கு கலந்து, இரவு முழுவதும் புளிக்க விடவும். காலையில் புளிக்க வைத்துள்ள மாவை அப்படியே எடுத்து, இட்லித் தட்டுக்களில் மென்மையான வெள்ளைத் துணி போட்டு அதன் மீது ஊற்றவேண்டும்.
இவ்வாறு செய்வதால் மிகவும் வெண்மையான மற்றும் மிருதுவான இட்லியை பெறலாம்.

வெள்ளி, 4 மே, 2018

வெயில் கால உணவுகள்

வெயில் கால உணவுகள்

* வெந்தயப் பணியாரம்
*  கேரட் கீர்
*  எலுமிச்சை - புதினா இஞ்சி ஜூஸ்
*  வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
*  கம்மங்கூழ்
*  வெள்ளரிக்காய்ப் பாயசம்
*  நுங்குப் பால்
*  இளநீர்ப் பாயசம்
*  வெந்தய மசாலா சாதம்
கொளுத்தும் கோடை வெயிலுக்கு உடலைக் குளிர்ச்சியாக்கும் சம்மர் கூல் ரெசிப்பிக்களை நமக்கு வழங்கியிருக்கிறார், சமையல் கலைஞர் சரஸ்வதி அசோகன்.

வெந்தயப் பணியாரம்

தேவையானவை:

 பச்சரிசி - 200 கிராம்
 உளுந்து - 6 டீஸ்பூன்
 வெந்தயம் - ஒன்றரை டீஸ்பூன்
 வெல்லம் - 200 கிராம்
 ஏலக்காய் - 2
 நெய் - 2 டீஸ்பூன்
 தேங்காய்த் துருவல் - 10 டீஸ்பூன்
 சோடா உப்பு - சிறிதளவு
 எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும். அடுப்பில் கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இத்துடன் பொடித்த வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு கரைத்து வடிகட்டவும். ஊறிய அரிசி, உளுந்து, வெந்தயத்துடன் வெல்லம் கரைத்த தண்ணீர் ஊற்றி மையாக கிரைண்டரில் அரைக்கவும். மாவை வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து 8 மணிநேரம் புளிக்கவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி தேங்காய்த் துருவல் சேர்த்து லேசாக வதக்கவும். இதை புளிக்க வைத்துள்ள மாவில் சேர்த்துக் கலக்கவும். இத்துடன்  பொடித்த ஏலக்காய், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து பணியாரம் ஊற்றும் பதத்துக்குக் கரைத்து, பணியாரக் குழியில் ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

கேரட் கீர்

தேவையானவை:

 கேரட் - கால் கிலோ
 பால் - அரை லிட்டர்
 சர்க்கரை - 200 கிராம்
 ரோஸ் எசன்ஸ் - கால் டீஸ்பூன்
 முந்திரி - 15
 நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
பாலைக் காய்ச்சி ஆறவைத்துக்கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்துக்கொள்ளவும். கேரட்டை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வேகவைத்து அதன் தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும். கேரட் ஆறியதும் வடித்த தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். அடுப்பில் கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தை வைத்து அரைத்த கேரட் விழுது சேர்க்கவும். இத்துடன் சர்க்கரை சேர்த்து கரையும் வரை நன்றாகக் கிளறி விடவும். பிறகு காய்ச்சிய பால், ரோஸ் எசன்ஸ் சேர்த்துக் கலக்கி முந்திரி சேர்த்து இறக்கவும். இதை சூடாகவோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்றோ பரிமாறவும்.

எலுமிச்சை - புதினா இஞ்சி ஜூஸ்

தேவையானவை:
 எலுமிச்சை - ஒன்று
 நாட்டுச் சர்க்கரை - 
6 டீஸ்பூன்
 புதினா - 2 டீஸ்பூன்
 இஞ்சி - ஒரு துண்டு 
(2 அங்குல அளவு)
 உப்பு - சிறிதளவு
 தண்ணீர் - 300 மில்லி
செய்முறை:
புதினாவை சுத்தம் செய்து கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும். எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து வைக்கவும். இஞ்சி, புதினாவை தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். இத்துடன் நாட்டுச்சர்க்கரை, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு எலுமிச்சைச்சாற்றையும் ஊற்றிக் கலக்கி வடிகட்டினால் லெமன் மின்ட் ஜூஸ் ரெடி.

வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி

தேவையானவை:
 பச்சரிசி - 200 கிராம்
 பாசிப்பருப்பு - 50 கிராம்
 வெந்தயம் - 2 டீஸ்பூன்
 தேங்காய்  - ஒரு மூடி (சிறியது)
 பொடியாக நறுக்கிய பெரிய 
வெங்காயம் - ஒன்று
 பூண்டு - 7 பல்
 சோம்பு - ஒரு டீஸ்பூன்
 தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
 பட்டை - 2 சிறியது
 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று 
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 புதினா இலை  - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற விடவும். தேங்காயைத் துருவி பால் எடுத்து வைக்கவும். சோம்பு மற்றும் பூண்டுப்பபல்லை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சுடானதும், பட்டை சேர்த்துத் தாளித்து, பூண்டு, சோம்பு சேர்த்து வதக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழை, புதினா இலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு 6 பங்கு தண்ணீர் என்கிற அளவில் அரிசி மற்றும் தண்ணீரை குக்கரில் சேர்க்கவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, பருப்புக் கலவையும் சேர்த்துக் கலக்கி குக்கரை மூடி பத்து விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும். ஆறியதும் வெந்தய கஞ்சியை ஒரு கிண்ணத்தில் ஊற்றி தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கவும். பிறகு கொத்தமல்லித்தழை, புதினா இலைகள் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:
தேங்காய்ப்பால் சேர்ப்பதற்கு முன்பு கஞ்சி கெட்டியாக இருந்தால், தேவைக்கேற்ப வெந்நீர் சேர்க்கவும். விருப்பப்பட்டால், மிளகுத்தூளும் சேர்த்துக்கொள்ளலாம்.

கம்மங் கூழ்
தேவையானவை:

 கம்பு - கால் கிலோ
 மோர் - அரை லிட்டர்
 உப்பு - தேவையான அளவு
 சின்ன வெங்காயம் - 20
 தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கம்பைக் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து அரை மணி நேரம் வெயிலில் காய விடவும். பிறகு மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக மையாக அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு அரைத்த கம்பை தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். கம்பு 10 நிமிடம் கொதித்ததும் உப்பு போட்டு கரண்டியால் கலக்கி இறக்கவும். கூழ் சிறிது கெட்டியாக இருப்பது போல் இருந்தால், தண்ணீர் ஊற்றிக் கலந்து கொள்ளலாம். பரிமாறும் போது மோர் ஊற்றிக் கலக்கி நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பருகுவதற்குக் கொடுக்கவும்.

வெள்ளரிக்காய்ப் பாயசம்

தேவையானவை:
 வெள்ளரிக்காய் - ஒன்று (பெரியது)
 பால் - 250 மில்லி
 சர்க்கரை - தேவையான அளவு
 அரிசி மாவு - 3 டீஸ்பூன்
 பாதாம் மிக்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
 நெய் - 2 டீஸ்பூன்
 ஏலக்காய் (தூளாக்கிக் கொள்ளவும்) - 2
 முந்திரி - தேவையான அளவு
செய்முறை:
வெள்ளரிக்காயைத் துருவி வைத்துக்கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆறவைத்துக்கொள்ளவும். அரிசி மாவு, பாதம் மிக்ஸை சிறிது தண்ணீரில் ஒன்றாகக் கலக்கி வைத்துக்கொள்ளவும். முந்திரியை ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, வெள்ளரிக்காயை மீதமிருக்கும் நெய்யில் வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக விடவும். இத்துடன் அரிசி மாவுக்கலவையைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி ஆறிய பால், முந்திரி சேர்த்துப் பரிமாறவும்.

நுங்குப் பால்

தேவையானவை:
 நுங்கு - 10
 பால் - 200 மில்லி
 மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன்
செய்முறை:
நுங்கை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். காய்ச்சிய பாலில் மில்க் மெய்ட் மற்றும் அரைத்த நுங்குக் கலவையும் சேர்த்தால் சுவையான ‘நுங்குப்பால்’ ரெடி. பிரிட்ஜில் வைத்தும் பருகலாம். இனிப்பு அதிகம் வேண்டும் என்பவர்கள் சிறிது சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.

இளநீர்ப் பாயசம்

தேவையானவை:
 இளநீர் - ஒன்று
 பால் - அரை லிட்டர்
 மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன்
செய்முறை:
இளநீரைத் தனியாகவும், வழுக்கையைத் தனியாகவும் எடுத்து வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து அரை லிட்டர் பாலை 400 மில்லி ஆக குறையும் வரை சுண்ட காய்ச்சவும். மில்க்மெய்டையும் சுண்டிய பாலில் சேர்த்துக் கலக்கவும். இளநீரில் உள்ள வழுக்கையை மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி பால் கலவையில் சேர்த்து இளநீரையும் கலந்து கொள்ளவும். லேசாக சூடானதும் இறக்கிப் பரிமாறவும். இனிப்பு வேண்டுமென்பவர்கள் சிறிது சர்க்கரை சேர்த்துக் கரைத்துக்கொள்ளலாம். பாலை இறக்கிவிட்டு, இளநீரை ஊற்றிக் கலக்கிய பிறகும் கிளாஸில் ஊற்றிப் பரிமாறலாம்.

வெந்தய மசாலா சாதம்

தேவையானவை:
 அரிசி - 300 கிராம்
 வெந்தயம் - 2 டீஸ்பூன்
 கீறிய பச்சை மிளகாய் - 2 
 நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
 மீடியம் சைஸில் நறுக்கிய தக்காளி - 3
 பூண்டு - 10 பல்
 சின்ன வெங்காயம் - 15
 சோம்பு - ஒரு டீஸ்பூன்
 தேங்காய் - ஒரு மூடி
 சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - சிறிதளவு
 மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
 கடுகு - அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு
 நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்
செய்முறை:
அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கி நிறம் மாறியதும், சின்ன வெங்காயம் சேர்த்து சுருள வரும் வரை வதக்கவும். இத்துடன் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீரை சமஅளவில் சேர்த்து ஊற்றவும். பிறகு ஊறவைத்த அரிசியைச் சேர்த்து வெந்ததும் எடுத்துப் பரிமாறவும். 

- நன்றி விகடன்.

வெயில் கால உணவுகள்


வெயில்  கால உணவுகள்

* வெந்தயப் பணியாரம்
* கேரட் கீர்
* எலுமிச்சை - புதினா இஞ்சி ஜூஸ்
* வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
* கம்மங்கூழ்
* வெள்ளரிக்காய்ப் பாயசம்
* நுங்குப் பால்
* இளநீர்ப் பாயசம்
* வெந்தய மசாலா சாதம்.

கொளுத்தும் கோடை வெயிலுக்கு உடலைக் குளிர்ச்சியாக்கும் சம்மர் கூல் ரெசிபி.

*வெந்தயப் பணியாரம்*

தேவையானவை:
பச்சரிசி - 200 கிராம்
உளுந்து - 6 டீஸ்பூன்
வெந்தயம் - ஒன்றரை டீஸ்பூன்
வெல்லம் - 200 கிராம்
ஏலக்காய் - 2
நெய் - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 10 டீஸ்பூன்
சோடா உப்பு - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும். அடுப்பில் கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இத்துடன் பொடித்த வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு கரைத்து வடிகட்டவும். ஊறிய அரிசி, உளுந்து, வெந்தயத்துடன் வெல்லம் கரைத்த தண்ணீர் ஊற்றி மையாக கிரைண்டரில் அரைக்கவும். மாவை வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து 8 மணிநேரம் புளிக்கவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி தேங்காய்த் துருவல் சேர்த்து லேசாக வதக்கவும். இதை புளிக்க வைத்துள்ள மாவில் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் பொடித்த ஏலக்காய், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து பணியாரம் ஊற்றும் பதத்துக்குக் கரைத்து, பணியாரக் குழியில் ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

*கேரட் கீர்*

தேவையானவை:
கேரட் - கால் கிலோ
பால் - அரை லிட்டர்
சர்க்கரை - 200 கிராம்
ரோஸ் எசன்ஸ் - கால் டீஸ்பூன்
முந்திரி - 15
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

பாலைக் காய்ச்சி ஆறவைத்துக்கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்துக்கொள்ளவும். கேரட்டை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வேகவைத்து அதன் தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும். கேரட் ஆறியதும் வடித்த தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். அடுப்பில் கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தை வைத்து அரைத்த கேரட் விழுது சேர்க்கவும். இத்துடன் சர்க்கரை சேர்த்து கரையும் வரை நன்றாகக் கிளறி விடவும். பிறகு காய்ச்சிய பால், ரோஸ் எசன்ஸ் சேர்த்துக் கலக்கி முந்திரி சேர்த்து இறக்கவும். இதை சூடாகவோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்றோ பரிமாறவும்

*எலுமிச்சை - புதினா இஞ்சி ஜூஸ்*

தேவையானவை:
எலுமிச்சை - ஒன்று
நாட்டுச் சர்க்கரை -
6 டீஸ்பூன்
புதினா - 2 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
(2 அங்குல அளவு)
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - 300 மில்லி

செய்முறை:

புதினாவை சுத்தம் செய்து கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும். எலுமிச்சைப்பழத்
தைப் பிழிந்து சாறு எடுத்து வைக்கவும். இஞ்சி, புதினாவை தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். இத்துடன் நாட்டுச்சர்க்கரை, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு எலுமிச்சைச்சாற்றையும் ஊற்றிக் கலக்கி வடிகட்டினால் லெமன் மின்ட் ஜூஸ் ரெடி.

*வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி*

தேவையானவை:
பச்சரிசி - 200 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி (சிறியது)
பொடியாக நறுக்கிய பெரிய
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 7 பல்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
பட்டை - 2 சிறியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
புதினா இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற விடவும். தேங்காயைத் துருவி பால் எடுத்து வைக்கவும். சோம்பு மற்றும் பூண்டுப்பபல்லை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சுடானதும், பட்டை சேர்த்துத் தாளித்து, பூண்டு, சோம்பு சேர்த்து வதக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழை, புதினா இலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு 6 பங்கு தண்ணீர் என்கிற அளவில் அரிசி மற்றும் தண்ணீரை குக்கரில் சேர்க்கவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, பருப்புக் கலவையும் சேர்த்துக் கலக்கி குக்கரை மூடி பத்து விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும். ஆறியதும் வெந்தய கஞ்சியை ஒரு கிண்ணத்தில் ஊற்றி தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கவும். பிறகு கொத்தமல்லித்தழை, புதினா இலைகள் தூவிப் பரிமாறவும்.
குறிப்பு:
தேங்காய்ப்பால் சேர்ப்பதற்கு முன்பு கஞ்சி கெட்டியாக இருந்தால், தேவைக்கேற்ப வெந்நீர் சேர்க்கவும். விருப்பப்பட்டால், மிளகுத்தூளும் சேர்த்துக்கொள்ள
லாம்.

*கம்மங் கூழ்*

தேவையானவை:
கம்பு - கால் கிலோ
மோர் - அரை லிட்டர்
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 20
தண்ணீர் - தேவையான அளவ

செய்முறை

முதலில் கம்பைக் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து அரை மணி நேரம் வெயிலில் காய விடவும். பிறகு மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக மையாக அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு அரைத்த கம்பை தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். கம்பு 10 நிமிடம் கொதித்ததும் உப்பு போட்டு கரண்டியால் கலக்கி இறக்கவும். கூழ் சிறிது கெட்டியாக இருப்பது போல் இருந்தால், தண்ணீர் ஊற்றிக் கலந்து கொள்ளலாம். பரிமாறும் போது மோர் ஊற்றிக் கலக்கி நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பருகுவதற்குக் கொடுக்கவும்.

*வெள்ளரிக்காய்ப் பாயசம்*

தேவையானவை:
வெள்ளரிக்காய் - ஒன்று (பெரியது)
பால் - 250 மில்லி
சர்க்கரை - தேவையான அளவு
அரிசி மாவு - 3 டீஸ்பூன்
பாதாம் மிக்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
ஏலக்காய் (தூளாக்கிக் கொள்ளவும்) - 2
முந்திரி - தேவையான அளவு

செய்முறை:

வெள்ளரிக்காயைத் துருவி வைத்துக்கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆறவைத்துக்கொள்ள
வும். அரிசி மாவு, பாதம் மிக்ஸை சிறிது தண்ணீரில் ஒன்றாகக் கலக்கி வைத்துக்கொள்ளவும். முந்திரியை ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, வெள்ளரிக்காயை மீதமிருக்கும் நெய்யில் வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக விடவும். இத்துடன் அரிசி மாவுக்கலவையைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி ஆறிய பால், முந்திரி சேர்த்துப் பரிமாறவும்.

*நுங்குப் பால்*

தேவையானவை:
நுங்கு - 10
பால் - 200 மில்லி
மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன்

செய்முறை:

நுங்கை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். காய்ச்சிய பாலில் மில்க் மெய்ட் மற்றும் அரைத்த நுங்குக் கலவையும் சேர்த்தால் சுவையான ‘நுங்குப்பால்’ ரெடி. பிரிட்ஜில் வைத்தும் பருகலாம். இனிப்பு அதிகம் வேண்டும் என்பவர்கள் சிறிது சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.

*இளநீர்ப் பாயசம்*

தேவையானவை:
இளநீர் - ஒன்று
பால் - அரை லிட்டர்
மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன

செய்முறை:

இளநீரைத் தனியாகவும், வழுக்கையைத் தனியாகவும் எடுத்து வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து அரை லிட்டர் பாலை 400 மில்லி ஆக குறையும் வரை சுண்ட காய்ச்சவும். மில்க்மெய்டையும் சுண்டிய பாலில் சேர்த்துக் கலக்கவும். இளநீரில் உள்ள வழுக்கையை மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி பால் கலவையில் சேர்த்து இளநீரையும் கலந்து கொள்ளவும். லேசாக சூடானதும் இறக்கிப் பரிமாறவும். இனிப்பு வேண்டுமென்பவர்கள் சிறிது சர்க்கரை சேர்த்துக் கரைத்துக்கொள்ளலாம். பாலை இறக்கிவிட்டு, இளநீரை ஊற்றிக் கலக்கிய பிறகும் கிளாஸில் ஊற்றிப் பரிமாறலாம்.

*வெந்தய மசாலா சாதம்*

தேவையானவை:
அரிசி - 300 கிராம்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
மீடியம் சைஸில் நறுக்கிய தக்காளி - 3
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 15
சோம்பு - ஒரு டீஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி
சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்

செய்முறை:

அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கி நிறம் மாறியதும், சின்ன வெங்காயம் சேர்த்து சுருள வரும் வரை வதக்கவும். இத்துடன் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீரை சமஅளவில் சேர்த்து ஊற்றவும். பிறகு ஊறவைத்த அரிசியைச் சேர்த்து வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

செவ்வாய், 1 மே, 2018

பன்னீர் கேஷ்யூ கிரேவி!!!

பன்னீர் கேஷ்யூ கிரேவி!!!

நீர் கலக்காத கெட்டிப் பாலில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொதிக்க வைத்தால் கெட்டியான பதத்தில் வரும். அதிலிக்கும் நீரை வடிகட்டினால் , திடமான மிருதுவான பன்னீர் ரெடி. ஆனால் அந்த வடிகட்டிய நீரில் அதிக அளவு புரோட்டின் இருப்பதால், அந்த நீரையும் உணவில் உபயோகிப்பது நல்லது.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு பால் பொருட்கள் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இவற்றில் தான் கால்சியம் அதிகம் உள்ளது. அதிலும் குழந்தைகள் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய பன்னீரை இரவில் கிரேவி போன்று செய்து சப்பாத்திக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.



தேவையானவை:

பனீர் – 200 கிராம் (சதுர துண்டுகளாக்கவும்)
வெங்காயம் – ஒன்று 
பச்சை மிளகாய் – 4 
முந்திரி – 50 கிராம்
க்ரீம் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் (மல்லித்தூள்) – 
ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை கலவை – 10 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
நெய் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 50 மில்லி
உப்பு – தேவையான அளவு 
செய்முறை:

பனீர் துண்டுகளை வெந்நீரில் போட்டு நன்கு அலசி எடுக்கவும். முந்திரியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து விழுதாக அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் உப்பு, அரைத்த முந்திரி விழுது சேர்த்து கிரேவி பதத்துக்குக் கொதிக்கவிடவும். பிறகு பனீர் துண்டுகள், க்ரீம், நெய், கொத்தமல்லித்தழைச் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். Thanks TIME PASS NEWS

செட்டிநாடு சிக்கன் பிரியாணி

செட்டிநாடு சிக்கன் பிரியாணி 

இந்திய அளவில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் உணவுப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள உணவு பிரியாணி. பண்டிகை கால உணவாகக் கருதப்பட்ட பிரியாணி இப்போது அன்றாட உணவுகளில் ஒன்றாகி விட்டது. வீட்டில் சமைப்பதைவிட ஹோட்டல் பிரியாணி வகைகளுக்கு எப்போதும் மவுசு அதிகம்.அதிலும், ‘இந்த இடத்தில், இந்தப் பிரியாணியின் சுவையே தனி’ என்கிற வகையில் பிரியாணிக்குத் தனி முத்திரையும் அளிக்கப்பட்டு வருகிறது.

தேவையானவை:

சிக்கன் துண்டுகள் – ஒரு கிலோ
சீரக சம்பா அரிசி –  ஒரு கிலோ
மிளகு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 8
சீரகம் – ஒரு டீஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
ஏலக்காய் – 4
கிராம்பு – 5
முந்திரி – 25 கிராம்
கசகசா – ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – 3 கப்
வெங்காயம், தக்காளி – 
தலா கால் கிலோ (பொடியாக நறுக்கவும்)
எலுமிச்சைப் பழம் – 2 (சாறு பிழியவும்)
நெய் – 100 கிராம்
எண்ணெய் – 100 மில்லி
சோம்பு – அரை டீஸ்பூன்
புதினா - ஒரு கட்டு 
கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 4 (நீளவாக்கில் நறுக்கவும்)
இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு  
தாளிக்க:

பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை – தேவையான அளவு 

செய்முறை:

அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும். சிறிதளவு புதினா, கொத்தமல்லித்தழையைத் தனியாக எடுத்து வைக்கவும். மிளகுடன் காய்ந்த மிளகாய், சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, முந்திரி, கசகசா, சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, அரைத்த விழுது, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் சிக்கன், புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து மசாலா போல வதக்கவும். அதனுடன் 3 கப் தேங்காய்ப்பால், ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பிறகு, அரிசி சேர்த்து முக்கால் வேக்காடு பதத்தில் வேகவிடவும். மேலே நெய், சிறிதளவு கொத்தமல்லித்தழை, புதினா ஆகியவற்றைச் சேர்த்து இறக்கி மூடி போடவும். தவாவைச் சூடாக்கி அதன் மீது பிரியாணி பாத்திரத்தை வைத்து சிறு தீயில் 15 நிமிடங்கள் வரை `தம்’ போடவும். பிறகு மேலே சிறிதளவு கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து சூடாகப் பரிமாறவும். Thanks TIME PASS NEWS

சுவையான பன்னீர் பாயாசம்

சுவையான பன்னீர் பாயாசம் 

 பன்னீர் கொண்டு ஒரு எளிதான மற்றும் சுவையான பாயாசம் என்பது விருந்துகளிலும் திருநாள்களிலும் பரிமாறும் இனிப்பு உணவு ஆகும். தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கிய உணவாகும். இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு. பால் பாயசத்தைப் பால், சவ்வரிசி, சேமியா முதலியவற்றைக் கொண்டு செய்கிறார்கள். 
பொதுவாக இதனுடன் உளுந்து வடையையோ பொடித்த அப்பளத்தையோ சேர்த்து உண்பார்கள். விருந்துகளில் நிறைப்புணவாகப்  பரிமாறுவதற்கு, இலகுவில் செரிமானமடையும் உணவாக அளிப்பதற்கும், மென்றுவிழுங்குவதில் சிரமமுள்ளவர்களுக்கும் உணவாக பாயசம் பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்
பன்னீர் – அரை கப் (க்ரம்புல் செய்தது)
பால் – இரண்டு கப்
கண்டேன்ஸ்டு மில்க் (அ) சர்க்கரை – கால் கப்
குங்குமபூ – சிறிதளவு
சோள மாவு – ஒரு டீஸ்பூன் (தண்ணீரில் கரைத்து கொள்ளவும்)
முந்திரி – ஐந்து துண்டு (நெய்யில் வறுத்தது)
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்

செய்முறை

ஒரு கிண்ணத்தில் பால் ஊற்றி காய்ந்ததும் சிறு தீயில் வைத்து, அதில் பன்னீர் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கைவிடாமல் கிளறவும்.
கரைத்த சோள மாவு ஊற்றி ஒரு நிமிடம் நன்றாக கிளறவும்.
பின், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
ஏலக்காய் தூள், முந்திரி துண்டு சேர்த்து கிளறி ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும்.
பால் காய்ந்தவுடன் ஐந்து நிமிடம் மட்டும் வைத்தால் போதும்.

இனிப்புகளில்  பாயாசம் மிகவும் சிறப்பானது. வீட்டில் ஏதேனும் விஷேசம் என்றாலே முதலில் எல்லோராலும் செய்யப்படுவதும், நியாபகத்திற்கு வருவதும் பாயாசம் தான். Thanks TIME PASS NEWS

காலைல டிபன் சாப்பிட்டீங்களா? சூப்பரு..!

காலைல டிபன் சாப்பிட்டீங்களா? சூப்பரு..!


டாக்டர் திருவருட்செல்வா
மனித இனத்தை வாழ வைப்பது உணவு. மனித இனம் உணவுக்காகவே, அடிப்படையில் உழைக்கிறது. ஆனால் தற்போதைய அவசர உலகில், நம்மில் பலருக்கு உணவு உண்பதுகூட அவசரமாகிவிட்டது அல்லது காலம் தவறிச் சாப்பிடும் பழக்கத்தைப் பெரும்பாலோர் வழக்கமாகவே வைத்திருக்கிறோம். ஒரு வேளை உணவைத் தவிர்ப்பதற்குப் பலரும் கூறும் காரணம், உடல் எடை குறைப்பு. ஆனால், அப்படிச் செய்வதால் எந்த நோக்கத்துக்காக உணவை ஒதுக்குகிறோமோ, அதுவே எடையை அதிகரித்துவிடும் ஆபத்து இருக்கிறது.
எப்படியென்றால் ஒரு பொழுது உணவை ஒதுக்கி வைத்துவிட்டு, மறுபொழுது சாப்பிடும்போது அதிகப் பசி வேட்கையால் நம்மை அறியாமலேயே சற்று அதிகமாகவே சாப்பிடுகிறோம். இதனால் உடல் எடை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. அதேபோல், ஒரு வேளை உணவை ஒதுக்கும் பழக்கத்தை நீண்டகாலம் கடைப்பிடித்துவந்தால், வயிற்றுப்புண் வரும் சாத்தியம் அதிகம். சத்துக் குறைபாடு உண்டாகும் சாத்தியமும் உள்ளது.
பிரச்சினை என்ன?
உடலில் உணவு செரிமானத்துக்கு பெரிதும் துணைபுரியக்கூடிய ‘மெட்டபாலிஸம்' எனப்படும் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படும். காலை உணவை நாட்படத் தவிர்க்கும்போது, உணவிலிருந்து உடலுக்குத் தேவையான குளுக்கோஸை கிரகிக்க உதவும், கணையத்திலிருந்து சுரக்கக்கூடிய இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படும். அறியாமையால் இதைச் சில காலம் தொடர்ந்து செய்தோமானால், நம்முடைய சர்க்கரையைப் பயன்படுத்தக்கூடிய திறன் இன்சுலினுக்கு இல்லாமல் போகும். இதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அதிகரித்து, நீரிழிவு நோய் வர 20 சதவீதம் அதிகச் சாத்தியம் உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
தற்போதைய ஆராய்ச்சிகள் காலை உணவைக் கண்டிப்பாக ஒதுக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகின்றன. பெரும்பாலும் இரவு உணவை உண்ட பிறகு உறங்கி விடுகிறோம். காலை எழுந்து வேலைக்குச் செல்லும் அவசரத்தில் பெரும்பாலோர் காலை உணவைத் தவிர்க்கும் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் இடையே உள்ள இடைவெளிதான், ஒரு நாளில் உடலில் உணவு உண்ணாமலிருப்பதில் மிக அதிகம். அதன் காரணமாகவே ஆங்கிலத்தில் காலை உணவை ‘பிரேக்ஃபாஸ்ட்' என்கிறார்கள். அதாவது ‘பிரேக் தி ஃபாஸ்ட்டிங்' என்பதே இதன் அர்த்தம். விரதத்தை முறிப்பது. எனவே, இந்த நிலையில் உணவைக் கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாது.
உணவுத் திணிப்பு
இன்னும் சிலரோ காலை உணவைக் கட்டாயமாகச் சாப்பிட வேண்டுமே என்கிற கடமைக்காக அவசர அவசரமாக வாயில் திணித்துக்கொண்டு, விழுங்க முடியாத குறைக்குத் தண்ணீரையும் சேர்த்துக் குடித்துச் செல்கின்றனர். இப்படிச் செய்வதும் தவறே… நன்றாக மென்று சாப்பிடும்போதுதான், நம் வாயிலிருந்து சுரக்கும் உமிழ்நீரிலிருந்தே செரிமானம் ஆரம்பிக்கத் தொடங்கும். இதனால் உண்ட உணவு நன்கு செரிமானம் அடைந்து உடலில் சேரும்.
நன்கு மென்று, மெதுவாகச் சாப்பிடும்போது பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் நம் மூளைக்கு ‘போதும்' என்னும் கட்டளையைப் பிறப்பிப்பதாகவும், இதனால் அதிகம் சாப்பிடாமல் இருக்க முடியும் எனவும் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது? (Journal of Clinical Endocrinology & Metabolism, July 2, 2013). உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதைக் கவனிக்க வேண்டும். மேலும் தொப்பையைக் குறைக்க விரும்புபவர்கள் சரியான நேரத்துக்கு, சரியான உணவை - முக்கியமாகக் காலை உணவைத் தவிர்க்காமல் குறிப்பிட்ட அளவில் மட்டும் சாப்பிட்டுவந்தால் தொப்பை மேலும் அதிகரிக்காது, குறையவும் வாய்ப்பு உண்டு.
எப்படிச் சாப்பிட வேண்டும்?
ஆங்கிலத்தில் உணவு உண்பது பற்றி பிரபலப் பழமொழி ஒன்று உண்டு:
“அரசனைப் போலக் காலை உணவை உண்ணுங்கள்,
இளவரசனைப் போல மதிய உணவை உண்ணுங்கள்,
இரவு பரம ஏழையைப்போல உண்ணுங்கள்” என்பதே அது.
அதாவது, காலையில் சரியான நேரத்துக்கு நன்கு உணவு உண்டால், அன்றைய வேலைகளைச் சிறப்பாகச் செய்யக்கூடிய ஆற்றல் நம் உடலுக்குக் கிடைக்கும். மதிய உணவைக் காலை உணவின் அளவைவிடவும் குறைவாக உண்டால் ‘உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு' என்னும் பழமொழியில் சிக்காமல், வேலைகளில் கவனம் செலுத்தலாம்.
இரவு மிதமாக உணவு உட்கொண்ட பின் உறங்கச் செல்லும்போது, எந்தவித செரிமானத் தொந்தரவும் இல்லாமல் நல்ல உறக்கம் வரும்.
ஆனால், இந்தப் பழமொழியை அப்படியே தலைகீழாக நாம் கடைப்பிடிக்கிறோம். பெரும்பாலோர் இரவுதான் அதிக அளவு சாப்பிடுகிறார்கள். இது ‘நைட் ஈட்டிங் சிண்ட்ரோம்' எனப்படுகிறது. விழித்திருப்பதைவிட உறக்கத்தில் உடல் அசைவுகள் குறைவாக இருப்பதால், இரவு அதிகம் உண்டால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். ஆழ்ந்த தூக்கமும் வராது. இதைத் தவிர்க்க உண்ட உடனேயே தூங்கச் செல்லாமல், சிறு நடை போட்ட பிறகு உறங்கலாம்.
சாப்பிடும் முறை: சித்த மருத்துவம் காட்டும் வழி
சித்த மருத்துவத்தில் காலை, மதியம், இரவு எந்த வகையான உணவுப் பண்டங்களைச் சாப்பிட வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது:
காலை: பயறு வகைகள், கடலை, உளுந்து, எள்ளு, மொச்சை உணவு வகைகளை, கடுகு, மிளகு, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றுடன் இணைத்து உட்கொள்ளலாம். மேற்கூறியவை செரிப்பதற்குச் சற்றுக் கடினமாக உள்ள உணவுகள். சுக்கு, மிளகு போன்றவை இந்த உணவுகளில் உள்ள கடினத் தன்மையைக் குறைக்கத் தேவையான செரிமானச் சுரப்புகளைத் தூண்டும் பண்பு கொண்டவை. காலையில் இவற்றைச் சாப்பிட்டுவிட்டு உழைத்தால் உடலில் சத்தும் நிறைந்து தங்கும். உணவு செரிமானம் அடைவதும் எளிதாக இருக்கும்.
மதியம்: கிழங்கு வகைகள், பழ வகைகள், கீரைகள், தயிர், மோர் போன்ற உணவு வகைகளை உட்கொள்ளலாம். இந்த உணவு வகைகள் அனைத்தும் மந்தப் பதார்த்தங்கள். இவற்றிலும் பெருங்காயம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்துச் சமைக்கும்போது, மந்தத் தன்மை மட்டுப்படும். மேலும் சூரிய வெப்பத்தாலும், உடல் உழைப்பாலும் செரிமானம் எளிதில் நடைபெறும்.
இரவு: அவரைப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, வேகவைத்த உணவு வகைகள் போன்ற எளிதில் செரிக்கக்கூடிய உணவை உண்ண வேண்டும்.
தமிழர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எந்த உணவை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என வகுத்துள்ளதை நவீன அறிவியல் ஆராய்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும் சிறப்பாகப் பொருந்தும். நம் நாட்டு உணவை நேரம் தவறாமல் சாப்பிடப் பழகுவோம், நோய்களில் இருந்து விலகி நிற்போம். Thanks Kamadenu