ரவா இட்லி :
செய்முறை:
முதலில் ரவையை வெரும் கடாயில் போட்டு சிவக்க வறுக்கவும் பிறகு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள்,பெருங்காயதூள் போட்டு வதக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வறுத்து வைத்த ரவை, தயிர், உப்பு, சோடா உப்பு, (கேரட் துருவல் தனியாக வைத்துக்கொள்ளவும்) கொத்தமல்லி, சேர்த்து பிறகு தாளித்த வைத்த பொருட்கள் அனைத்தையும் சிரிது தண்ணீர விட்டு் இட்லி மாவு பதத்தில் கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
இட்லிபாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்த உடன் இட்லி தட்டில் இந்த கலவையை ஊற்றி, அதன் மேல் துருவி வைத்துள்ள கேரட் தூவவும். பத்து நிமிடம் கழித்து எடுத்து கொத்தமல்லி கடலைகொட்டை mix தேங்காய் சட்னி, தக்காளி சட்னி உடன் சூடாக பரிமாறலாம்.
செய்து பாருங்கள்
அருமையாக இருக்கும்
(ரவை 1கப், தயிர் முக்கால் கப்,
வேண்டும் என்றால் முந்திரி கூட சேர்க்க)
தினமும் நம் இல்லத்தில ஆரோக்கியமாக செய்து உங்களுக்காக பகிர்கிறேன்.
செமயா சாப்பிடுங்க, சூப்பரா இருங்க
நன்றி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக