செவ்வாய், 17 செப்டம்பர், 2019

30 வகை குளிர் பானங்கள்


#30_வகை_குளிர்_பானங்கள்

கோடையில் வெயில் காரணமாக உஷ்ணம், நாவறட்சி, வியர்வை கசகசப்பு என்று அசௌகரியத்துக்கு ஆளாகும்போது, ஒரு கிளாஸில் குளிர்பானத்தைக் கொண்டுவந்து நீட்டுபவர்கள், எல்லோர் மனதிலும் மிகவும் உயர்ந்து நிற்பார்கள்.

அந்தப் பெருமையை உங்களுக்கு ‘ரிசர்வ்’ செய்துகொடுக்கும் வகையில், வித்தியாசமான 30 வகை குளிர்பானங்கள் இதோ...
 
*"ஒரு கிலோ சர்க்கரையில் ஒரு கிளாஸ் (200 மில்லி) நீர் விட்டு கொதிக்க
வைத்து, வடிகட்டி, சிரப் தயாரித்து வைத்துக்கொண்டால், குளிர்பானம் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் அதை தேவையான அளவுக்கு சேர்த்துக்கொள்ளலாம்’’.

குறிப்பு: இங்கே வழங்கப்படும் ரெசிப்பிக்களின் அளவுகள் ஒரு நபருக்கு பரிமாறுவதற்கேற்ப கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு தயாரிக்க வேண்டுமானால், அதற்கேற்ப பொருள்களின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம்.

  *1.கல்கண்டு பானகம்:*

    தேவையானவை: டைமண்ட் கல்கண்டு - 2 டீஸ்பூன், குளிர்ந்த நீர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்.

செய்முறை: டைமண்ட் கல்கண்டை நன்கு பொடித்து குளிர்ந்த நீரில் கலக்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து, கிளாஸில் ஊற்றி அருந்தக் கொடுக்கவும்.

  *2.புதினா - இஞ்சி டிரிங்க்:*

     தேவையானவை: ஆய்ந்த புதினா இலை - 15, இளம் இஞ்சி - சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன், குளிர்ந்த நீர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: புதினா, இஞ்சி, உப்பு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து விழுதாக்கவும். இதை மீதமுள்ள குளிர்ந்த நீரில் கரைத்து, வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

    *3.ஆப்பிள் மில்க்‌ஷேக்:*

     தேவையானவை: ஆப்பிள் - ஒன்று, காய்ச்சி ஆறவிட்டு, ஃப்ரிட்ஜில் குளிர்வித்த பால் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), சர்க்கரை - 3 டீஸ்பூன்.

செய்முறை: ஆப்பிளை தோல் நீக்கி துருவவும். ஆப்பிள் துருவல், சர்க்கரை, பால் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, நன்கு நுரை பொங்க அரைத்து உடனடியாக பரிமாறவும்.

   *4.ரோஸ் லஸ்ஸி:*

   தேவையானவை: கெட்டித் தயிர் - ஒரு கப், ரோஸ் எசென்ஸ் - 2 சொட்டு, சர்க்கரை - 6 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2.

செய்முறை: கெட்டித்தயிர், ரோஸ் எசென்ஸ், சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, நன்கு நுரை பொங்க அடித்து, கிளாஸில் ஊற்றி, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.

   *5.நன்னாரி சர்பத்:*

   தேவையானவை: நன்னாரி சிரப் (சர்க்கரை கலந்தது... பெரிய மளிகை கடைகளில் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், குளிர்ந்த நீர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), எலுமிச்சைப் பழம் - அரை மூடி (சாறு எடுக்கவும்).

செய்முறை: குளிர்ந்த நீருடன் நன்னாரி சிரப், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு விளாவி பரிமாறவும்.

  *6.எலுமிச்சை - ஏலக்காய் ஜூஸ்:*

   தேவையானவை: குளிர்ந்த நீர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பொடித்த சர்க்கரை - 5 டீஸ்பூன், உப்பு - கால் சிட்டிகை, எலுமிச்சைப் பழம் - அரை மூடி (சாறு எடுக்கவும்).

செய்முறை: குளிர்ந்த நீருடன் பொடித்த சர்க்கரை, உப்பு, ஏலக்காய்த்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி பரிமாறவும். சர்க்கரைக்குப் பதிலாக தேவையான அளவு குளூக்கோஸ் பவுடர்  சேர்த்தும் தயாரிக்கலாம். இது உடனடி சக்தி தரக்கூடிய பானம்.

    *7.வெல்லம் - சுக்கு பானகம்:*

   தேவையானவை: பொடித்த வெல்லம் - 50 கிராம், சுக்குப்பொடி - 2 சிட்டிகை,  ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 3.

செய்முறை: வெல்லத்தில் முக்கால் கப் நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, வடிகட்டி ஆறவிடவும். இதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், எலுமிச்சைச் சாறு, ஐஸ் கட்டிகள் மற்றும் முக்கால் கப் நீர் சேர்த்துக் கலந்து அருந்தவும்.

    *8.மல்டி ஃப்ரூட் ஸ்மூத்தி:*

   தேவையானவை: ஆப்பிள், வாழைப்பழம், பைனாப்பிள், மாதுளம் முத்துக்கள், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை  கலவை - ஒரு கப் (திராட்சை, மாதுளம் பழம் தவிர மற்றவை பொடியாக நறுக்கியது), ஐஸ்க்ரீம் - 50 கிராம், துருவிய சாக்லேட் - 2 டீஸ்பூன்.

செய்முறை: கண்ணாடி கிண்ணத்தில் பழ வகைகளைக் கலந்துகொள்ளவும். மேலே ஐஸ் க்ரீமை ஸ்பூனால் பரவலாக விட்டு, துருவிய சாக்லேட்டைத் தூவி உடனே பரிமாறவும்.

குறிப்பு: ஐஸ்க்ரீமுக்குப் பதிலாக மில்க்மெய்ட் சிறிதளவு சேர்த்தும் செய்யலாம்.

   *9.பனங்கல்கண்டு - துளசி பானகம்:*

   தேவையானவை: பனங்கல்கண்டு - 25 கிராம், நீர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஐஸ்கட்டிகள் - 2, துளசி - 20 இலைகள், மிளகு - 4, ஜாதிக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை: மிளகை துளசியுடன் சேர்த்து, கால் கப் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு விழுதாக்கி வடிகட்டவும். பனங் கல்கண்டை பொடித்து முக்கால் கப் நீருடன் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வடிகட்டிய துளசி ரசம், ஐஸ்கட்டிகள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும். சுவையான இந்த பானம், வெயில் கால ஜலதோஷத்துக்கு சரியான மருந்தும்கூட!

   *10.பிஸ்தா டிரிங்க்:*

   தேவையானவை: பிஸ்தா - 3 டீஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் - முக்கால் கப், பிஸ்தா எசென்ஸ் - சில துளிகள், சர்க்கரை - 4 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2.

செய்முறை: பிஸ்தாவை சிறிதளவு பாலில் அரை மணி நேரம் ஊறவிட்டு, மிக்ஸியில் போட்டு, சர்க்கரை, பிஸ்தா எசென்ஸ், மீதமுள்ள பால் சேர்த்து நன்கு நுரைக்க அடித்து, ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு பரிமாறவும்.

   *11.குகும்பர் லஸ்ஸி:*

   தேவையானவை: தோல், விதை நீக்கி துருவிய வெள்ளரிக்காய் - அரை கப், கெட்டித் தயிர் - அரை கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு சிட்டிகை, ஐஸ் கட்டிகள் - 2.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து (ஐஸ் கட்டிகள் நீங்கலாக) மிக்ஸியில் அடித்து, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.

    *12.பைனாப்பிள் ஜூஸ்:*

   தேவையானவை: தோல் நீக்கி நறுக்கிய பைனாப்பிள் - ஒரு கப், சர்க்கரை - 5 டீஸ்பூன், நீர் - 100 மில்லி (அரை கிளாஸ்), ஐஸ் கட்டிகள் - 3.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ளவை எல்லாவற்றையும் (ஐஸ் கட்டிகள் நீங்கலாக) கலந்து மிக்ஸியில் அடித்து வடிகட்டி, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.

     *13.டொமேட்டோ பட்டர் மில்க்:*

   தேவையானவை: குளிர்ந்த மோர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), உப்பு - ஒரு சிட்டிகை, டெமேட்டா கெச்சப் - 2 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 3, பிளாக் சால்ட் - ஒரு சிட்டிகை.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தையும்  கலந்து நன்கு விளாவி பரிமாறவும்.

கெச்சப் விரும்பாதவர்கள்... அதற்குப் பதிலாக ஒரு தக்காளி, ஒரு சிறிய பச்சை மிளகாயை வேகவிட்டு அரைத்து வடிகட்டி உபயோகிக்கவும்.

      *14.கேசரி மில்க்:*

    தேவையானவை: காய்ச்சி ஆறவைத்து, ஃப்ரிட்ஜில் குளிர்வித்த பால் - 200 மில்லி (ஒரு கிளாஸ்) கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, பச்சைக் கற்பூரம் - கால் சிட்டிகை, சர்க்கரை - 4 டீஸ்பூன்.

செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு நுரை பொங்க அடித்து பரிமாறவும்.

சர்க்கரைக்குப் பதிலாக  தேவையான அளவு தேன் அல்லது வெல்லப்பாகு சேர்த்தும் இதை செய்யலாம்.

    *15.மாம்பழ லஸ்ஸி:*

    தேவையானவை: தோல் நீக்கி, நறுக்கிய கனிந்த மாம்பழத் துண்டுகள் - அரை கப், குளிர்ந்த தயிர் - கால் கப், குளிர்ந்த நீர் - கால் கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், மாம்பழ எசென்ஸ் - 2 துளி.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அடித்து நுரை பொங்க பரிமாறவும்.

குறிப்பு: மாம்பழ கலர் குறைவாக இருப்பின் மஞ்சள் ஃபுட் கலர் சிறிது சேர்க்கலாம்.

      *16.கிரேப் ஜூஸ்:*

        தேவையானவை: திராட்சைப்பழம் - 100 கிராம், திராட்சை எசென்ஸ் - 2 துளிகள், சர்க்கரை - 5 டீஸ்பூன் (பழம் புளிப்பாக இருப்பின் இன்னும் ஒரு டீஸ்பூன் அதிகமாக சேர்க்க லாம்), நீர் - முக்கால் கப், ஐஸ் கட்டிகள் - 2.

செய்முறை: திராட்சைப் பழத்துடன் சர்க்கரையை சேர்த்து சிறிதளவு நீர் விட்டு அரைத்து வடிகட்டவும். இந்த சாற்றுடன் மீதமுள்ள நீர், திராட்சை எசென்ஸ் சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அடித்து, ஐஸ் கட்டிகளைப் சேர்த்து பரிமாறவும்.

      *17.கேஷ்யூ மில்க்:*

     தேவையானவை: முழுமுந்திரி - 10, ஏலக் காய்த்தூள் - கால் டீஸ்பூன், காய்ச்சி, ஆறவைத்த பால் - முக்கால் கப், சர்க்கரை - 5 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2.

செய்முறை: முந்திரியை சுடுநீரில் 10 நிமிடம் ஊற விடவும். முதலில் முந்திரி, சர்க்கரையை மிக்ஸியில் சேர்த்து விழுதாக்கி, பின்னர் ஏலக்காய்த்தூள், பால் சேர்த்து மைய அரைத்து எடுத்து, அதில் ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு பரிமாறவும்.

     *18.மேங்கோ மில்க்‌ஷேக்:*

      தேவையானவை: தோல் நீக்கி நறுக்கிய கனிந்த மாம்பழத் துண்டுகள் - கால் கப், காய்ச்சி ஆறவைத்த பால் - கால் கப், குளிர்ந்த நீர் - கால் கப், சர்க்கரை - 5 டீஸ்பூன், மாங்கோ எசென்ஸ் - சில துளிகள், மஞ்சள் ஃபுட் கலர் - கால் சிட்டிகை.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள  பொருட்கள் அனைத்தையும் கலந்து, மிக்ஸியில் சேர்த்து நன்கு அடித்து, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

        *19.நுங்கு கூலர்:*

      தேவையானவை: தோல் உரித்து நறுக்கிய நுங்குத் துண்டுகள் - ஒரு கப், இளநீர் - அரை கப், பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன், மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன்.

செய்முறை: மில்க்மெய்ட் தவிர பிற பொருட்களைக் கலந்து ஃபிரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து, மேலே மில்க்மெய்ட் ஊற்றி, கண்ணாடி கிளாஸ் (அ) கிண்ணத்தில் போட்டு பரிமாறவும்.

      *20.இளநீர் - மில்க்மெய்ட் பானம்:*

தேவையானவை: இளம் வழுக்கையுடன் கூடிய இளநீர் - ஒன்று, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன்.

செய்முறை: இளநீர்  வழுக்கை, சர்க்கரை, மில்க்மெய்ட் இவற்றை சேர்த்து மையாக அரைத்து, அதனுடன் இளநீர் கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் குளிரவைத்து பரிமாறவும்.

       *21.ஏலக்காய் மில்க்:*

      தேவையானவை: காய்ச்சி ஆறவைத்த பால் - முக்கால் கப், ஏலக்காய் எசென்ஸ் - 3 துளிகள், சர்க்கரை - 2 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2.

செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள பொருட்களை (ஐஸ் கட்டிகள் நீங்கலாக) நன்கு கலந்து மிக்ஸியில் நுரை பொங்க பொங்க அடிக்கவும். இதனை கிளாஸில் ஊற்றி, ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு பரிமாறவும்.

குறிப்பு: ஏலக்காய் எசென் ஸுக்குப் பதிலாக இரண்டு ஏலக் காயை பொடித்தும் சேர்க்கலாம்.

       *22.மாதுளம்பழ கூலர்:*

       தேவையானவை: நன்கு சிவந்த மாதுளை முத்துக்கள் - ஒரு கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், பால், நீர் - தலா கால் கப், ஐஸ் கட்டிகள் - 2.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைக் கலந்து (ஐஸ் கட்டிகள் நீங்கலாக), மிக்ஸியில் நன்கு அடித்து, வடிகட்டி, ஐஸ் கட்டிகளை சேர்த்துப் பரிமாறவும்.
இது மிகவும் சத்துமிக்க பானம்.

      *23.பாதாம் கூல் டிரிங்க்:*

       தேவையானவை:வெந்நீரில் ஊறவிட்டு,  தோல் நீக்கி அரைத்த பாதாம் விழுது - 3 டீஸ்பூன் (10 பாதாம் பருப்பு போதுமானது), காய்ச்சி ஆறவிட்டு, ஃப்ரிட்ஜில் குளிர்வித்த பால் - 200 மில்லி  (ஒரு கிளாஸ்),  சர்க்கரை - 5 டீஸ்பூன், பாதாம் எசென்ஸ் - 2 சொட்டு, மஞ்சள் ஃபுட் கலர் - கால் சிட்டிகை, குங்குமப்பூ - 3 இதழ்கள்.

செய்முறை: பாதாம் விழுது, பால், சர்க்கரை, பாதாம் எசென்ஸ், மஞ்சள் ஃபுட் கலர் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நுரை பொங்க அடித்து, கிளாஸில் ஊற்றி, குங்குமப்பூவை மிதக்கவிட்டு பரிமாறவும்.

       *24.கிர்ணிப்பழ ஜூஸ்:*

     தேவையானவை: கிர்ணிப் பழத் துண்டுகள் (தோல், விதை நீக்கியது) - ஒரு கப், சர்க்கரை - 5 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 3.

செய்முறை: சர்க்கரை, கிர்ணிப்பழத் துண்டுகளை மிக்ஸி யில் சேர்த்து, நன்கு அடித்து எடுத்து, ஐஸ் கட்டிகளை சேர்த்து, ‘ஜில்’ என்று பரிமாறவும்.

       *25.ஃபலூடா:*

     தேவையானவை: மிகவும் பொடியாக நறுக்கிய பழங்கள் (மாம்பழம், ஆப்பிள், பைனாப்பிள், வாழைப்பழம், தர்பூஸ்) எல்லாம் சேர்ந்து - அரை கப், வேகவைத்த சேமியா - 2 டேபிள்ஸ்பூன், ஏதேனும் ஃபுட் கலர் சேர்த்து வேகவிட்ட ஜவ்வரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், சப்ஜா விதை (நாட்டு மருந்துக் கடை, டிபார்ட்மென்ட் கடையில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன் (ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும்), ஐஸ்க்ரீம் - 50 கிராம், டூட்டி ஃப்ரூட்டி - 2 டீஸ்பூன்.

செய்முறை: உயரமான கண்ணாடி டம்ளரில் சிறிது பழக்கலவையை போடவும். பின்னர் சப்ஜா விதையை சேர்க்கவும். பிறகு சேமியா, அதன் மேல் சிறிதளவு பழக்கலவை, பின்னர் ஜவ்வரிசி, அதன் மேல் சிறிதளவு பழக்கலவை என்று நிரப்பி... இறுதியில் ஐஸ்க்ரீம் முழுவதையும் போட்டு, மேலே டூட்டி ஃப்ரூட்டியை தூவிப் பரிமாறவும்.

      *26.மிக்ஸ்டு ஃப்ரூட் பன்ச்:*

      தேவையானவை: நறுக்கிய வாழைப்பழம், பலாப்பழம், பப்பாளி, மாம்பழம் (சேர்த்து) ஒன்றரை கப், ஏதாவது ஒரு ஃப்ரூட் எசென்ஸ் - சில துளிகள், தேன் - 2 டீஸ்பூன், முந்திரி, பாதாம், பிஸ்தா (பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பழக் கலவையை மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று மட்டும் சுற்றி எடுக்கவும். இதனுடன் ஃப்ரூட் எசென்ஸ் மற்றும் வறுத்த முந்திரி - பாதாம் - பிஸ்தாவை சேர்த்துக் கிளறவும். அரை மணிநேரம் ஃப்ரிட்ஜில் குளிரவைத்து எடுத்து... மேலே தேன், ப்ரெஷ் க்ரீமை பரவலாக ஊற்றிப் பரிமாறவும்.

      *27.புதினா மோர்:*

தேவையானவை: மோர் - முக்கால் கப், புதினா - கொத்தமல்லி - இஞ்சி விழுது - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்.

செய்முறை:  மோர், உப்பு, புதினா - கொத்தமல்லி - இஞ்சி விழுதை சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்து, எலுமிச்சைச் சாறு, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.

        *28.கேரட் ஜூஸ்:*

       தேவையானவை: கேரட் (நடுத்தர சைஸ்) - ஒன்று (தோல் நீக்கி துருவவும்), சர்க்கரை - 4 டீஸ்பூன், ஃபுல் ஃக்ரீம் பால் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஐஸ்கட்டிகள் - ஒன்று.

செய்முறை: பாலை காய்ச்சி ஆறவைக்கவும். துருவிய கேரட், சர்க்கரை இவற்றை மிக்ஸியில் விழுதாக்கி... பால் சேர்த்து, அதில் ஐஸ்கட்டியை மிதக்கவிட்டு பரிமாறவும்.

குறிப்பு: கேரட் வாசனையை விரும்பாதவர்கள், ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள் சேர்த்து அருந்தலாம்.

          *29.சப்போட்டா மில்க்‌ஷேக்:*

தேவையானவை: பழுத்த சப்போட்டா - 2 (தோல், கொட்டை நீக்கவும்), பேரீச்சம்பழம் - 2 (பொடியாக நறுக்கவும்), காய்ச்சி ஆறவைத்து, குளிர்வித்த பால் - முக்கால் கப், சர்க்கரை - 3 டீஸ்பூன்.

செய்முறை: சப்போட்டா, சர்க்கரை, பால் ஆகியவற்றை நன்கு மிக்ஸியில் அடிக்கவும். இதனை கிளாஸில் ஊற்றி, பேரீச்சை துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும்.

        *30.பலாப்பழ சம்மர் ஸ்பெஷல்:*

         தேவையானவை: பலாப்பழத் துண்டுகள் (மிகவும் சிறியதாக நறுக்கியது) - அரை கப், காய்ச்சி ஆறவைத்த பால் - அரை கப், தேன் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள எல்லாவற்றையும் நன்கு மிக்ஸியில் அடித்து, ஃப்ரிட்ஜில் குளிரவைத்து பரிமாறவும்.


திங்கள், 16 செப்டம்பர், 2019

30 வகை இனிப்பு கார உருண்டை


#30_வகை_இனிப்பு_கார_உருண்டை

 *பாதாம்  திராட்சை உருண்டை*

தேவையானவை: வறுத்த பாதாம் – 100 கிராம், பாகு வெல்லம் – 75 கிராம், நெய் – அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, உலர் திராட்சை – 10 முதல் 15.

செய்முறை:  அடி கனமான வாணலி (அ) நான்ஸ்டிக் கடாயில் வெல்லம், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு காய்ச்சவும்.  அதனு டன் நெய், ஏலக்காய்த்தூள், திராட்சை, வறுத்த பாதாம் சேர்த்து… கை பொறுக்கும் சூட்டில் உருண்டை கள் பிடிக்கவும்.

குறிப்பு: சிறிதளவு வெல்லப் பாகை எடுத்து தண்ணீரில் போட்டு… கட்டைவிரல் மற் றும் ஆட்காட்டி விரலை பயன்படுத்தி எடுக்கும்போது, கையில் ஒட்டாமல் நன்கு உருட்ட வந்தால்… அதுதான் சரியான உருண்டை பாகு பதம்.

 *ரவா மாலாடு*

தேவையானவை: மெஷினில் அரைத்த ரவை – ஒரு கப், பொடித்த சர்க்கரை – அரை கப், வறுத்த முந்திரி – திராட்சை – சிறிதளவு, ஜாதிக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை, நெய் அல்லது வனஸ் பதி- முக்கால் கப், பச்சைக் கற்பூரம் – மிளகு அளவு.

செய்முறை:  பொடித்த ரவை, சர்க்கரை, வறுத்த முந்திரி – திராட்சை, ஜாதிக் காய்த்தூள், பொடித்த பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை ஒரு பேஸினில் சேர்த்து நன்கு கலக்கி, உருக்கிய நெய்/வனஸ்பதி விட்டு (அதிகம் காய்ச்சக் கூடாது),  விருப்பமான அளவில் உருண்டைகளாக பிடிக்கவும்.

 *முந்திரி உருண்டை*

தேவையானவை: முந்திரி – 100 கிராம், பாகு வெல்லம் – 75 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, நெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:  காடாயில் நெய் விட்டு, முந்திரியை லேசாக சிவக்கும்படி வறுத்து, நன்கு ஆறவிடவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரையவிட்டு, வடிகட்டி, அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு காய்ச்சவும். வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூளை ஒன்றுசேர்த்து அதன் மீது பாகை கொட்டி கலந்து,  கைகளில் நெய் தடவி, உருண்டைகளாக பிடிக்கவும்.

 *பொட்டுக்கடலை மாலாடு*

தேவையானவை: பொட்டுக் கடலை – 200 கிராம் (மாவாக் கவும்), பொடித்த சர்க்கரை – 100 கிராம், வறுத்த முந்திரி, திராட்சை (சேர்த்து) – 25 கிராம், உருக்கிய நெய் அல்லது வனஸ்பதி – 150 கிராம், மில்க் பவுடர் – 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை:  ஒரு பேஸினில் பொட்டுக்கடலை மாவு, மில்க் பவுடர், பொடித்த சர்க்கரை, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். உருக்கிய நெய் (அ) வனஸ்பதியை சூடாகச் சேர்த்து உருண்டைகள் பிடிக்கவும்.

 *கைக்குத்தல் அவல் உருண்டை*

தேவையானவை: சிவப்பு கைக்குத்தல் அவல் – ஒரு கப், பல்லாக நறுக்கிய தேங்காய் – ஒரு டீஸ்பூன் (சிறிதளவு நெய்யில் வதக்கவும்), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பாகு வெல்லம் – முக்கால் கப், வெண்ணெய் – அரை டீஸ்பூன், நெய், எண்ணெய் – தலா 50 கிராம்.

செய்முறை:  நெய், எண்ணெயை ஒன்றுசேர்த்து வாணலியில் ஊற்றி சூடாக்கவும். அதில் சுத்தம் செய்த அவலை சேர்த்து, நன்கு பொரித்து எடுக்கவும். ஏலக்காய்த்தூள், வதக்கிய தேங்காயை பொரித்த அவலுடன் கலந்து, வெண்ணெய் சேர்க்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரையவிட்டு, வடிகட்டி, அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு காய்ச்சவும். பாகை அவல் கலவையில்  சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

 *கடலை மாவு லாடு*

தேவையானவை: தரமான கடலை மாவு – 2 கப், பொடித்த சர்க்கரை – ஒன்றே கால் கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 150 கிராம், வறுத்த முந்திரி – திராட்சை – சிறிதளவு.

செய்முறை:  வாணலியில் நெய்யை சூடாக்கி, கடலை மாவை பச்சை வாசனை போக சிவக்க வறுத்து அடுப்பை அணைக்கவும். இதனுடன் சர்க்கரைப் பொடி, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். சூட்டில் சர்க்கரை இளகி, மாவு கலவை கை பொறுக்கும் சூட்டில் இருக்கும்போது, உருண்டைகள் பிடிக்கவும்.

பின்குறிப்பு: மாவை நன்கு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். இல்லாவிட்டால் உருண்டை ருசிக்காது.

 *டேட்ஸ்  கொப்பரை உருண்டை*

தேவையானவை: கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் – 200 கிராம், நீளவாக்கில் நறுக்கிய (அ) துருவிய உலர்ந்த கொப்பரை – அரை கப், வெனிலா எசன்ஸ் – சில துளிகள், நெய் – அரை டீஸ்பூன்

செய்முறை:  பேரீச்சம்பழத்தில் சரிபாதி எடுத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும் (அரைக்கக் கூடாது). இத்துடன் மீதமுள்ள பேரீச்சை, கொப்பரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து பிசைந்து (ஒட்டாமல் இருக்க அரை டீஸ்பூன் நெய்யை கைகளில் தடவிக்கொள்ள வேண்டும்) உருண்டைகள் பிடித்தால்… கிராண்டான டேட்ஸ் – கொப்பரை உருண்டை அதிக செலவின்றி வீட்டிலேயே தயார்!

 *பாசிப்பருப்பு உருண்டை*

தேவையானவை:– பாசிப்பருப்பு – ஒரு கப், பொடித்த சர்க்கரை – முக்கால் கப், நெய் – 150 கிராம், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை – தேவைக்கேற்ப.

செய்முறை:  பாசிப்பருப்பை சிவக்க வறுத்து, நைஸாக பொடிக்கவும். பொடித்த மாவுடன் சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். நெய்யை சூடாக்கி இதனுடன் கலந்து உருண்டைகள் பிடிக்கவும்.

 *ரவை  தேங்காய் உருண்டை*

தேவையானவை:  ரவை – ஒரு கப், வறுத்த தேங்காய் துருவல் – அரை கப், சர்க்கரை – ஒரு கப், வறுத்த முந்திரி, திராட்சை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 50 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.

செய்முறை:  ரவையை நெய்யில் சிவக்க வறுத்து எடுக்கவும். ரவை, முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரை, சிறிதளவு நீர் சேர்த்து, நுரைக்குபோது சிறிது பால் விட்டு அழுக்கு நீக்கி கொதிக்கவிட்டு, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். இதை ரவை கவலையில் சேர்த்து உருண்டைகள் பிடிக்கவும்.

 *அரிசி மிட்டாய் கலர்ஃபுல் உருண்டை*

தேவையானவை: அரிசி மிட்டாய் (சீரக மிட்டாய்) – 100 கிராம், பாகு வெல்லம் – 75 கிராம், ரோஸ் எசன்ஸ் – சில துளிகள், வெண்ணெய் – அரை டீஸ்பூன்

செய்முறை:  வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, வெண்ணெய் சேர்க்க வும். உருண்டை பிடிக்க ஏற்ற பதம் வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும். பாகு டன் அரிசி மிட்டாய், ரோஸ் எசன்ஸ் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.

குறிப்பு: பாகு சரியான பதம் வரும் முன் மிட்டாய் கொட்டி கலந்தால், மிட்டாய் கலர் கரைந்து களேபரம் ஆகிவிடும். சற்று கவனத்துடன் பாகு தயாரிக்கவும்.

 *அரிசிப் பொரி  கசகசா உருண்டை*

தேவையானவை:அரிசிப் பொரி – 100 கிராம், வறுத்த கசகசா – ஒரு டீஸ்பூன், பாகு வெல்லம் – 75 கிராம், நெய் – கால் டீஸ்பூன்

செய்முறை: அரிசிப் பொரி, வறுத்த கசகசாவை தாம்பளத்தில் கொட்டி, நெய் சேர்த்துக் கலக்கவும். வெல்லத்தில் நீர்விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு தயாரிக் கவும். இதை பொரி கலவையில் கொட்டி, பெரிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.

 *கமர்கட்*

தேவையானவை: துருவிய தேங்காய்  – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், நல்லெண்ணெய் – அரை டீஸ்பூன்

செய்முறை: துருவிய தேங்காயை மிக்ஸியில் சேர்த்து நீர் விடாமல் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கரையவிட்டு, அடுப்பில் ஏற்றி, கொதி வந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி நுரைக்கவிடவும். அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு சுருள வதக்கி எண் ணெய் சேர்க்கவும். கலவை நன்கு முற்றிய நிலையில் இறக்கி, சிறிய நெல்லி அளவு உருண்டைகள் பிடித்தால்… கிராமிய மணத்துடன் கலக் கல் கமர்கட் ரெடி!

 *வெள்ளை எள் உருண்டை*

தேவையானவை: வறுத்த வெள்ளை எள் – 100 கிராம், பாகு வெல்லம் – 75 கிராம், ஏலக்காய்த்தூள், நெய் – சிறிதளவு.

செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, உருண்டைபிடிக்க ஏற்ற பதத்தில் பாகு தயாரிக்கவும். பாகுடன் ஏலக்காய்த்தூள், நெய், வறுத்த எள் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.

 *ஜவ்வரிசி  வெள்ளரி விதை உருண்டை*

தேவையானவை: முழு ஜவ்வரிசி (உடைந்தவற்றை நீக்கிவிடவும்) – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், வறுத்த வெள்ளரி விதை – 10 கிராம், நெய் – அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – இரண்டு சிட்டிகை, நெய் – எண்ணெய் கலவை – 200 கிராம்

செய்முறை:  நெய் – எண்ணெய் கலவையை சூடாக்கி, ஜவ்வரிசியை நிறம் மாறாது வெளுக்க பொரித்து, டிஷ்யூ பேப்பரில் போட்டு அதிகப்படியான எண்ணெயை நீக்கவும். இத்துடன் ஏலக்காய்த்தூள், வறுத்த வெள்ளரி விதை சேர்க்கவும். வெல்லத் துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரையவிட்டு, வடிகட்டி, அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு காய்ச்சவும். பாகுடன் ஜவ்வரிசி கலவையை சேர்த்து, கையில் நெய் தடவி உருண்டைகளாக பிடிக்கவும்.

 *நெய் உருண்டை*

தேவையானவை: வெண்ணெய் காய்ச்சிய வாணலியில் உள்ள கசண்டு – சிறிதளவு, அரிசி (அ) கோதுமை மாவு – சிறிதளவு, சர்க்கரை – சிறிதளவு.

செய்முறை: வெண்ணெய் காய்ச்சிய வாணலி / பாத்திரம் சூடாக இருக்கும்போது நெய்யை வடித்துவிட்டு மீதம் உள்ள கசண்டில், அரிசி (அ) கோதுமை மாவு மற்றும் சர்க்கரை (பொடிக்க வேண்டாம்) சேர்த்து, உருண்டை பிடிக்கவும்.

 *அவல்  டூட்டி ஃப்ரூட்டி உருண்டை*

தேவையானவை: தட்டை அவல் – ஒரு கப், டூட்டி ஃப்ரூட்டி (இரண்டு வகை) – தலா 10 கிராம், பச்சைக் கற்பூரம் – சிறிதளவு, பொடித்த சர்க்கரை – அரை கப், நெய் – 150 கிராம்.

செய்முறை: அவலை வறுத்துப் பொடிக்கவும். நெய்யை சூடாக்கி… அதனுடன் பொடித்த அவல், டூட்டி ஃப்ரூட்டி, பச்சைக் கற்பூரம், பொடித்த சர்க்கரை சேர்த்துக் கலந்து உருண்டை பிடிக்கவும்.

 *உளுந்து மாவு உருண்டை*

தேவையானவை: முழு உளுந்து – 200 கிராம், சுக்குப்பொடி – அரை டீஸ் பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பொடித்த சர்க் கரை – 150 கிராம், நெய் (அ) வனஸ்பதி – தேவைக்கேற்ப, வறுத்த முந்திரி, திராட்சை – சிறிதளவு.

செய்முறை: முழு உளுந்தை வறுத்து, மாவாக்கவும். அதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், பொடித்த சர்க்கரை, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கலக்கவும். நெய் (அ) வனஸ்பதியை உருக்கி, உளுந்து மாவுக் கலவை மீது ஊற்றிக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.

இந்த ஸ்வீட் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணங்களில் தவறாமல் இடம்பெறும்.

 *கேழ்வரகு மாவு உருண்டை*

தேவையானவை: கேழ் வரகை சிவக்க வறுத்து, பொடியாக்கிய மாவு – ஒரு கப், வெல்லம் (அ) பொடித்த சர்க்கரை – அரை கப், ஏலக் காய்த்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் (வறுத்தது) – சிறிதளவு, நெய் – இரண்டு டீஸ்பூன்.

செய்முறை: கேழ்வரகு மாவு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல், நெய் மற்றும் வெல்லம் (அ) சர்க் கரை சேர்த்து நன்கு பிசைந்து (கை சூட்டுக்கே இளகிவிடும்) உருண்டைகள் பிடிக்கவும்.

சத்தான, சுவையான இந்த உருண்டையை கேழ்வரகு பிடிக்காதவர்களும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

 *பொரி விளங்காய் உருண்டை*

தேவையானவை: புழுங்கலரிசி – 100 கிராம், கோதுமை – 50 கிராம், வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை – தலா ஒரு டீஸ்பூன், லவங்கம் – 5, சுக்குப்பொடி – கால் டீஸ்பூன், துருவி (அ) நறுக்கி நெய்யில் வதக்கிய தேங்காய் – சிறிதளவு, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பாகு வெல்லம் – 200 கிராம், நெய் – சிறிதளவு.

செய்முறை: புழுங்கலரிசியை சிவக்க வறுத்து மாவாக்கவும். கோதுமை யையும் வறுத்து மாவாக்கவும். இந்த மாவுகளுடன் சுக்குப்பொடி, ஏலக் காய்த்தூள், வேர்க்கடலை, பொட்டுக் கடலை, வதக்கிய தேங்காய், லவங்கம் ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும். வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, கொதிவந்த வுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, உருண்டை பாகுக்கு விடுவதைக் காட்டிலும் ஒரு கொதி அதிகமாக வர விட்டு, நெய் சேர்க்க வும். பிறகு, மாவுக் கலவையில் கொட்டி, நன்கு புரட்டவும். கையில் அரிசி மாவு தொட்டு, மாவுக் கலவையை உருண்டை களாக பிடிக்கவும்.

குறிப்பு: உருண்டை தளர இருப்பின், அந்த உருண்டை பிடிக்கும் மாவிலே ஒரு முறை புரட்டி எடுத்து செய்ய… உருண்டை சரியாக வரும். மாதக் கணக்கில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம். இதை வெறும் பல்லால் கடித்து சாப்பிடுவது கடினம். உடைத்துதான் சாப்பிட வேண்டும்.

 *பிரெட்  பனீர் உருண்டை*

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 10 (ஓரம் நீக்கவும்), துருவிய பனீர் – 100 கிராம்,  உருளைக்கிழங்கு – ஒன்று (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்), மிளகாய்த்தூள், உப்பு, மல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய் – 200 கிராம்.

செய்முறை: துருவிய பனீர், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். பிரெட் ஸ்லைஸை தண்ணீரில் நனைத்து உடனடியாக உள்ளங்கையில் வைத்து பிழிந்து, பனீர் மசாலா உருண்டையை அதில் வைத்து, நன்கு உருட்டி, சூடான எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும்.

 *வேர்க்கடலை உருண்டை*

தேவையானவை: வறுத்த வேர்க்கடலை – 2 கப், பாகு வெல்லம் – ஒன்றரை கப், நெய் – ஒரு டீஸ்பூன், ஏலக் காய் எசென்ஸ் – சிறிதளவு.

செய்முறை: வெல்லத் தில் நீர் விட்டு கரைத்து, அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு தயாரிக்க வும். இந்தப் பாகுடன் வறுத்த வேர்க்கடலை, நெய், ஏலக் காய் எசென்ஸ் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.

 *மனோகரம் உருண்டை*

தேவையானவை: பச்சரிசி – 2 கப், உளுத்தம்பருப்பு – கால் கப், பாகு வெல்லம் – இரண்டே கால் கப், நெய், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, எண்ணெய் –  கால் கிலோ.

செய்முறை: உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து, களைந்து உலர்த்திய பச்சரிசி யுடன் சேர்த்து மாவாக அரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, இந்த மாவை தேன் குழலாக பிழிந்து எடுத்து, நொறுக்கி… நெய், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். வெல்லத்தில் நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு தயாரிக்கவும். இதை, பொடித்த தேன்குழல் மீது விட்டு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.

 *ரவை  வெஜிடபிள் உருண்டை*

தேவையானவை: ரவை – 200 கிராம் (வறுக்கவும்), துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், குடமிளகாய் – ஒரு கப், நெய் – 2 டீஸ்பூன், புதினா – கால் கட்டு (நறுக்கவும்), பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்), உப்பு – சிறிதளவு.

செய்முறை:  கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து, சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து, உருண்டை களாக உருட்டி, நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

 *அரிசி  கடலைப்பருப்பு உருண்டை*

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப் (வறுத்து ரவையாக உடைக்கவும்), துருவிய இஞ்சி, மாங்காய் – சிறிதளவு, ஊற வைத்த கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – கொத்த மல்லி விழுது – சிறிதளவு, நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:  இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவிட்டு, ஒரு டீஸ்பூன் நெய், ஊற வைத்த கடலைப்பருப்பு, உப்பு, துருவிய இஞ்சி, மாங்காய், பச்சை மிளகாய் –  கொத்தமல்லி விழுது, பச்சரிசி ரவை சேர்த்துக் கிளறி இறக்கி, உருண்டைகளாகப் பிடித்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இதை சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.

 *பொட்டுக்கடலை உருண்டை*

தேவையானவை: பொட் டுக் கடலை – ஒரு கப், பாகு வெல்லம் – முக்கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, நெய் – சிறிதளவு.

செய்முறை:  வெல்லத்தில் நீர் விட்டு கரைத்து, அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு தயாரிக் கவும். பாகுடன் பொட்டுக் கடலை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக் கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.

 *ஸ்வீட் கார்ன்  தேங்காய் உருண்டை*

தேவையானவை: கொர கொரப்பாக அரைத்த ஸ்வீட் கார்ன் விழுது – ஒரு கப், வேக வைத்த பச்சைப் பட்டாணி – கைப்பிடி அளவு, சீரகம் – அரை டீஸ்பூன், மிளகுத்தூள், உப்பு – சிறிதளவு, இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன், துருவிய தேங்காய் – கால் கப், எண்ணெய் – 200 கிராம், சோள மாவு கரைசல் – சிறிதளவு (சோள மாவை சிறிது உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பஜ்ஜி மாவு போல் கரைக்கவும்).

செய்முறை:  ஸ்வீட் கார்ன் விழுது, வேக வைத்த பச்சைப் பட்டாணி, சீரகம், மிளகுத்தூள், உப்பு, இஞ்சி – பூண்டு விழுது, துருவிய தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துக் கலந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.  இந்த உருண்டையை சோள மாவு கரைசலில் தோய்த்து, சூடான எண்ணெயில் சிவக்க பொரித்தெடுக்கவும்.

 *முப்பருப்பு உருண்டை*

தேவையானவை: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு – தலா 100 கிராம், வெங்காயம் – 2 (நறுக்கவும்), கேரட் துருவல் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 8, கொத்தமல்லி – அரை கட்டு (நறுக்கவும்), மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயம், உப்பு  – சிறிதளவு.

செய்முறை:  பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து ஒரு மணி ஊற விட்டு… உப்பு, மிளகாய், பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் கேரட் துருவல், வெங்காயம் கலந்து பிசிறி, உருண்டைகளாக்கி, ஆவியில் 7-ல் இருந்து 10 நிமிடம் வரை வேகவிட்டு எடுக்கவும். மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

 *அத்திப்பழம்  நட்ஸ் உருண்டை*

தேவையானவை: உலர்ந்த அத்திப்பழம் (நறுக்கியது) – கால் கப், உடைத்த முந்திரி, உடைத்த வால்நட், வெள்ளரி விதை – தலா 2 டீஸ்பூன், ரூட்டி ஃப்ரூட்டி – 50 கிராம், நறுக்கிய பேரீச்சம்பழம் – 2 டீஸ்பூன், தேன் – சிறிதளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நன்கு கலந்து கெட்டியாக உருண்டைகள் பிடிக்கவும்.

மிகவும் சத்துமிக்க இந்த உருண்டையை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

 *சர்க்கரைவள்ளிக் கிழங்கு உருண்டை*

தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு – அரை கிலோ, தேங்காய் – அரை மூடி (துருவிக்கொள்ளவும்), பொடித்த வெல்லம் – 150 கிராம், முந்திரிப்பொடி – 2 டீஸ்பூன், மில்க்மெய்ட் – 2 டீஸ்பூன்.

செய்முறை: தேங்காய் துரு வலை சிவக்க வதக்கவும். சக் கரைவள்ளிக் கிழங்கை தோல் சீவி, ஆவியில் வேகவிட்டு துருவிக்கொள்ளவும். இத்துடன் பொடித்த வெல்லம், முந்திரிப்பொடி, மில்க்மெய்ட் சேர்த்துக் கலந்து உருட்டி, வதக்கிய தேங்காய் துருவலில் புரட்டி வைக்கவும். விருப்பப்பட்டால் ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்.

 *பிஸ்கட்  கார்ன்ஃப்ளேக்ஸ் உருண்டை*

தேவையானவை: மாரி பிஸ்கட் – 10, கார்ன்ஃப்ளேக்ஸ் – அரை கப், பிஸ்தா எசென்ஸ் – சில துளிகள், நெய் – 4 டீஸ்பூன், மில்க் மெய்ட் – 5 டீஸ்பூன்.

செய்முறை: நெய்யை உருக்கவும். பொடித்த கார்ன்ஃப்ளேக்ஸ், பொடித்த பிஸ்கட்டோடு… பிஸ்தா எசென்ஸ், மில்க்மெய்ட், உருக்கிய நெய் சேர்த்து உருண்டை பிடிக்கவும்.

குழந்தைகள் இதை  மீண்டும் விரும்பிக் கேட்டு சாப்பிடுவார்கள்.
நன்றி_அவள்_விகடன்...

வியாழன், 12 செப்டம்பர், 2019

ஓணம் பண்டிகையின் பிரத்யேக உணவுகள்!!




ஓணம் பண்டிகையின் பிரத்யேக உணவுகள்!!

ஓணம் பண்டிகையை கேரள மக்கள் மட்டுமின்றி தமிழக மக்களும் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.  அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் பூக்களை கொண்டு கோலங்கள் போடப்பட்டு அறுசுவையும் நிறையும் வண்ணம் பல்வேறு ரெசிபிகளை செய்து அசத்துவதில் கேரள மக்களுக்கு நிகர் அவர்கள்தான்.  கேரளத்தின் பாரம்பரிய உணவுகளும் ஓணம் பண்டிகையின் பிரத்யேக உணவுகள் சிலவற்றையும் பார்ப்போம். 
1. சோறு:  கேரள மக்களின் பிரத்யேக அரிசி சாதம். 
2. காய வறுத்தது:  நேந்திரம்பழத்தில் செய்யக்கூடிய கேரள ஸ்பெஷலான சிப்ஸ்.
3. சர்க்கர வரட்டி: எண்ணெயில் பொரிக்கப்பட்ட வாழைப்பழத்துண்டுகளை வெல்லப்பாகு சேர்க்கப்பட்டது. 
4. சேனை வருத்தது:  சேனைக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி பொரித்து மசாலா சேர்த்திருப்பது.
5. புளிஇஞ்சி: புளி சேர்க்கப்பட்ட சட்னி.
6. கிச்சடி: வெண்டைக்காய் அல்லது வெள்ளரி, சுரக்காய் போன்றவற்றை தயிர் சேர்த்து செய்யப்படுவது.
7. பச்சடி: அன்னாசி அல்லது பாகற்காயை தயிர் சேர்த்து செய்யப்படும் ரெசிபி.
8. புளிசேரி:  காய்கறிகள் மற்றும் தயிர் சேர்த்து செய்யப்படுவது.
9. கூட்டுக்கறி: கருப்பு நிற கொண்டைக்கடலை கொண்டு தயாரிக்கப்படுவது.
10. ஓலன்: சுரைக்காய் மற்றும் பீன்ஸை தேங்காய் பால் சேர்த்து செய்யப்படுவது.
11. பொரியல்:  காய்கறிகளில் தேங்காய் சேர்த்து செய்யப்படுவது.
12. தீயல்: எல்லாவகை காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து செய்வது.
13. எரிசேரி: தேங்காய் கிரேவியில் பீன்ஸ் மற்றும் பூசணிக்காயை மசித்து செய்யப்படுவது.
14. அவியல்: காய்கறிகள், தேங்காய் மற்றும் பால் சேர்த்து செய்யப்படுவது.
15. மோர்: மோரில் மசாலா சேர்த்து செய்யப்படுவது.
16. ஊறுகாய்: இனிப்பு மற்றும் புளிப்பு சேர்த்து சேர்ந்தது.
17. பப்படம்.
18. வாழைப்பழம்.
19. சாம்பார்.
20. ரசம்.
21. பாயாசம்.
ஓணம் பண்டிகை தொடர்ந்து பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.  செப்டம்பர் 10 ஆம் தேதி உத்திராடம், 12 ஆம் தேதி ஆவிட்டம் , 13 ஆம் தேதி சதயம் என்று கடைப்பிடிக்கப்படுகிறது.  மேலும் இந்நாளில் மகாபலி சக்கரவர்த்தி வீடுகளில் பிரவேசம் செய்வார் என்று நம்பப்படுகிறது.  மற்ற நாட்கள் புலி ஆட்டம், படகு போட்டி போன்றவை நடத்தப்பட்டு ஓணம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

ஓணம் ஸ்பெஷல் இஞ்சி புளி


ஓணம் ஸ்பெஷல் இஞ்சி புளி


இந்த இஞ்சி புளியானது சாம்பார் சாதம், தயிர் சாதம், இட்லி மற்றும் தோசை போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும்.


*🍱தேவையான பொருட்கள்:*


இஞ்சி - 3/4 கப் (தோலுரித்து பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 7 (பொடியாக நறுக்கியது) வெந்தயம் - 1/4 டீஸ்பூன் புளி - பெரிய நெல்லிக்காய் அளவு வெல்லப் பாகு - 1 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு


*🥘 தாளிப்பதற்கு*


எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் கடுகு - 3/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது வரமிளகாய் - 2


 *🍴செய்முறை:*

முதலில் புளியை 3/4 கப் வெதுவெதுப்பான நீரில் போட்டு 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தைப் போட்டு லேசாக வறுத்து இறக்கி குளிர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும். கலவையானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைத்து, கலவை கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும். கலவையானது கெட்டியாகிவிட்டால், அதில வெல்லப் பாகு சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும். இறுதியில் அதில் வெந்தயப் பொடி சேர்த்து, 2 நிமிடம் அடுப்பில் வைத்து கிளறி இறக்கினால், இஞ்சி புளி ரெடி!!!


30வகை பக்கோடா


#30வகை_பக்கோடா...
                           
  *✿ட்ரை ஃப்ரூட் பக்கோடா*

தேவையானவை: பாதாம் பருப்பு, முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கடலை மாவு - 150 கிராம், அரிசி மாவு - 50 aகிராம், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: பாதாம் பருப்பு, முந்திரி, பிஸ்தா பருப்பை ஒன்றிரண்டாகப் பொடித்து, அதனுடன் உலர் திராட்சை, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாகக் கலக்கவும். எண்ணெயை காய வைத்து, மாவை அதில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

 *✿ சோள ரவை பக்கோடா*

தேவையானவை: சோள ரவை - அரை கப் (100 கிராம்), கடலை மாவு, அரிசி மாவு - தலா 50 கிராம், பொடியாக நறுக்கிய  இஞ்சி - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: சோள ரவையுடன், கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். எண்ணெயை காய வைத்து, மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

  *✿ராகி பக்கோடா*

தேவையானவை: கேழ்வரகு மாவு - 100 கிராம், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு , பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: கேழ்வரகு மாவுடன், அரிசி மாவு, தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி - இஞ்சி - கறிவேப்பிலை விழுது, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். எண்ணெயை காய வைத்து, மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்துக் கொள்ளவும்.

  *✿பாலக் பக்கோடா*

தேவையானவை: பொடியாக நறுக்கிய பாலக் கீரை - ஒரு கப், பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு - சிறிதளவு, கடலை மாவு - 150 கிராம், அரிசி மாவு - 50 கிராம், பச்சை மிளகாய் - 4, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: நறுக்கிய பாலக் கீரை, உருளைக்கிழங்கு, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றுடன் அரைத்த  பச்சை மிளகாயை சேர்த்து,  நெய் விட்டு பிசிறி, தண்ணீர் விட்டு கெட்டி யாகக் கலந்து கொள்ளவும். எண்ணெயை காய வைத்து, மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

  *✿ வெண்டைக்காய் பக்கோடா*

தேவையானவை: நறுக்கிய வெண்டைக்காய் - ஒரு கப் (சற்று நீள வடிவில் நறுக்கி, குறுவாட்டில் நான்கு துண்டுகளாக மீண்டும் நறுக்கிக் கொள்ளவும்), கடலை மாவு - 150 கிராம், அரிசி மாவு - 50 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு,  மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா  கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: நறுக்கிய வெண்டைக்காயுடன் வெங்காயம், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசிறிக் கொள்ளவும். எண்ணெயை காய வைத்து, மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

  *✿வேர்க்கடலை பக்கோடா*

தேவையானவை: காய்ந்த, வறுக்காத வேர்க்கடலை - 200 கிராம், கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 50 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: வேர்க்கடலையுடன் வெண்ணெய், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாகப் பிசிறி, தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கலக்கவும்.  எண்ணெயை காய வைத்து, அதில் கலவையில் சிறிது எடுத்து உதிர்த்தாற் போல் போட்டு, பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: எண்ணெயில் போட்டு ஒரு நிமிடம் கழித்து கரண்டியால் கிளறினால், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக நன்றாக வரும்.

   *✿எள் பக்கோடா*

தேவையானவை: கறுப்பு எள் - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 5, மைதா மாவு - 150 கிராம், அரிசி மாவு - 50 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: எள்ளை வெறும் கடாயில் வறுத்து அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்துப் பொடிக்கவும். அதில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தண்ணீர்விட்டு கெட்டியாகக் கலக்கவும். எண்ணெயை காய வைத்து, கலந்த மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

  *✿ மெது பக்கோடா*

தேவையானவை: வெங்காயம், கடலை மாவு - தலா 100 கிராம், உருளைக்கிழங்கு - ஒன்று, அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடி யாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவை யான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்து அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகக் கலக்கவும். மாவு கலவையை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

  *✿கரம் பக்கோடா*

தேவையானவை: பெரிய வெங்காயம் - 250 கிராம், கடலை மாவு - 100 கிராம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு,  அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை நீள வடிவில் மெல்லியதாக நறுக்கிக் கொண்டு, அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துப் பிசிறவும். சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகக் கலந்து, காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.

  *✿மிக்ஸ்டு வெஜிடபிள் பக்கோடா*

தேவையானவை:  நீளவடிவில் நறுக்கிய காய்கறிகள் (கேரட், பீன்ஸ், கோஸ், வெங்காயம், குடமிளகாய்) - ஒரு கப், கடலை மாவு, சோள மாவு - தலா 50 கிராம், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: நீளவாக்கில் நறுக்கிய காய்கறிகளுடன் கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசிறி, பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகக் கலக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

  *✿நெல்லிக்காய் பக்கோடா*

தேவையானவை: துருவிய நெல்லிக்காய் - அரை கப், கோதுமை மாவு, கடலை மாவு - தலா கால் கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - சிறிதளவு,  எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: துருவிய நெல்லிக்காயுடன் அரிசி மாவு, கடலை மாவு, கோதுமை மாவு, சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு (சாட் மசாலாத்தூளில் உப்பு இருக்கும்) சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கலக்கவும். மாவை காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

   *✿இஞ்சி பக்கோடா*

தேவையானவை: துருவிய இஞ்சி - அரை கப், கோதுமை மாவு, பயத்தம் மாவு - தலா கால் கப், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: துருவிய இஞ்சியுடன் கறிவேப்பிலை, கோதுமை மாவு, பயத்தம் மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலந்து... காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

   *✿காராமணி பக்கோடா*

தேவையானவை: காய்ந்த காராமணிப்பயறு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: காராமணிப்பயறை 5 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் தண்ணீரை வடித்து... காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதில் கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, அரிசி மாவை சேர்த்து கெட்டியாகக் கலந்து, காயும் எண்ணெயில் சிறு சிறு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

  *✿சேமியா பக்கோடா*

தேவையானவை: சேமியா - 100 கிராம், கடலை மாவு - 50 கிராம், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயத்தாள்,  நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன், உப்பு - ­தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க ­தேவையான அளவு.

செய்முறை: சேமியாவுடன் கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயத்தாள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி - பூண்டு பேஸ்ட், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகக் கலக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு சிறு சிறு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

  *✿?மசாலா பக்கோடா*

தேவையானவை: பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு - 2, கசகசா - ஒரு டீஸ்பூன், மைதா மாவு - அரை கப், அரிசி மாவு - கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு, பூண்டு - 2 பல், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா ஆகியவற்றுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து,  மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். மைதா மாவுடன், அரிசி மாவு, வெங்காயம், பொடித்த மசாலா, உப்பு சேர்த்து பூண்டு, இஞ்சியை தட்டிப்போட்டு தண்ணீர் விட்டு கெட்டியாகக் கலந்து கொள்ளவும். இந்த மாவை காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

  *✿சோயா பக்கோடா*

தேவையானவை: சோயா உருண்டைகள் - 10, பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி - சிறிதளவு, கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,  எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: சோயா உருண்டைகளை சுடுநீரில் போட்டு எடுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். அதனுடன் வெங்காயம், கோதுமை மாவு, கொத்தமல்லி, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

   *✿மஷ்ரூம் பக்கோடா*

தேவையானவை: மஷ்ரூம் - 6, கடலைப்பருப்பு - 100 கிராம், துவரம்பருப்பு - 50 கிராம், அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 4, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: மஷ்ரூமை சுத்தம் செய்து, வெந்நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, அரிசி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை அரை மணி நேரம் ஊற வைத்து, கரகரப்பாக அரைக்கவும். அதில் பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, மஷ்ரூம் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலந்து... காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

  *✿ சன்னா பக்கோடா*

தேவையானவை: சன்னா (வெள்ளை கொண்டைக்கடலை) - 250 கிராம், கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் மூன்றும் சேர்த்து அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், சீரகம் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: வெள்ளை கொண்டைக்கடலையை 4 மணி நேரம் ஊற வைத்து கெட்டியாக அரைக்கவும். பின்னர் அதில் கொத்தமல்லி - புதினா - பச்சை மிளகாய் விழுதை சேர்த்து... சீரகம், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். எண்ணெயை காய வைத்து, அதில் மாவை கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

   *✿ஓட்ஸ் பக்கோடா*

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கேரட், பீட்ரூட், வெங்காயம் எல்லாம் சேர்ந்து - கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: கேரட், பீட்ரூட், வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றுடன் ஓட்ஸ், கடலை மாவு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். மாவை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

   *✿புதினா பக்கோடா*

தேவையானவை: புதினா - ஒரு கப், கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், பச்சை மிளகாய் - 3, ரவை - ஒரு டீஸ்பூன், உப்பு ­- தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: புதினாவுடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, ரவை, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

 *✿ தானிய பக்கோடா*

தேவையானவை: தானியங்கள் (எள், கொள்ளு, பச்சைப் பயறு, கறுப்பு உளுந்து, கோதுமை, அரிசி, கடலை, மொச்சை, துவரை) - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: தானியங்களை ஒன்றாக தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக, கெட்டியாக அரைத்து பெருங்காயத்தூள்  கொத்தமல்லி சேர்த்து... காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்  கவும்.

   *✿சில்லி பக்கோடா*

தேவையானவை: பஜ்ஜி மிளகாய் - 200 கிராம், கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 50 கிராம், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், ஆம்சூர் பவுடர் - ஒரு டீஸ்பூன், உப்பு ­- தேவையான அளவு,  எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: பஜ்ஜி மிளகாயை சிறு நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் பின்னர் அதில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, ஆம்சூர் பவுடர், பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

  *✿ பனீர் பக்கோடா*

தேவையானவை: பனீர் துண்டுகள் - சிறிதளவு, மைதா மாவு - கால் கப், தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், சில்லி சாஸ், சோயா சாஸ், சோள மாவு - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவு, சோள மாவுடன் அனைத்து சாஸ்களையும் சேர்த்து, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்துக் கலந்து, கடைசியாக பனீர் துண்டுகளை சேர்த்துப் பிசிறி எடுக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

   *✿பிரெட் பக்கோடா*

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 3, புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு எல்லாம் சேர்ந்து - அரை கப், கடலை மாவு - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: பிரெட்டை சற்று பெரிய துண்டுகளாக செய்து வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து மைய அரைத்து எடுக்கவும். அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். கலவையை பிரெட்டில் தடவி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

   *✿புளிப்பு பக்கோடா*

தேவையானவை: துருவிய மாங்காய் - 4 கப், பச்சை மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: பச்சை மிளகாய், கறிவேப்பிலை இரண்டையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் துருவிய மாங்காய், உப்பு, பெருங்காயத்தூள், கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கெட்டியாகக் கலந்து... காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

   *✿சைனீஸ் பக்கோடா*

தேவையானவை: வெங்காயத்தாள் (நறுக்கியது) - கால் கப், மைதா மாவு - அரை கப், அஜினமோட்டோ - கால் டீஸ்பூன், சோயா சாஸ், வினிகர் - தலா அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவில் வெங்காயத்தாள், உப்பு, அஜினமோட்டோ, வினிகர், மிளகுத்தூள், சோயா சாஸ், சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கலந்து... காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

  *✿? பழ பக்கோடா*

தேவையானவை: துண்டுகள் செய்த பழங்கள்(ஆப்பிள், பப்பாளி, வாழைப்பழம்) - ஒரு கப் , ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், பால் பவுடர் - கால் கப், மைதா மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: பழங்களுடன் ஏலக்காய்த்தூள், பால் பவுடர், மைதா மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து கெட்டியாக கலந்து... காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

  *✿சீஸ் பக்கோடா*

தேவையானவை: துருவிய சீஸ் - கால் கப், மைதா மாவு - ஒரு கப், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: துருவிய சீஸ் உடன் மைதா மாவு, சோள மாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகக் கலந்து... காயும் எண்ணெயில் சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு பொரித்தெடுக்கவும்.

   *✿வாழைப்பூ பக்கோடா*

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், கடலைப்பருப்பு - அரை கப், அரிசி - 2 டீஸ்பூன், காய்ந்த

மிளகாய் - 6 , சோள மாவு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்புடன் அரிசி, காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைத்து, பின்னர் வாழைப்பூ, உப்பு, கறிவேப்பிலை, சோள மாவு, பெருங்காயத்தூள்சேர்த்து நன்கு கலக்கவும். மாவை காயும் எண்ணெயில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
நன்றி...அவள் விகடன்

வியாழன், 5 செப்டம்பர், 2019

30_வகை_கோதுமை_ரெசிப்பி


30_வகை_கோதுமை_ரெசிப்பி

”கோதுமை மாவு, கோதுமை ரவை, கோதுமை குருணை ஆகியவற்றில் வாய்க்கு ருசியான, வகை வகையான ரெசிபிகளை கொடுத்திருக்கிறேன். இவை உங்கள் டைனிங் அறையில் குதூகலத்தை குடியேற செய்யும் என்று நம்புகிறேன்” என்று கனிவுடன் கூறுகிறார் கல்பகம்.

 *கோதுமை ஃபலூடா*

 *தேவையானவை:*

 கோதுமை மாவு – அரை கப், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் – ஒரு சிறு கரண்டி அளவு, பொடித்த சர்க்கரை – 3 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் – 10, மாம்பழக் கூழ் – 2 டேபிள்ஸ்பூன், மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை, பொடித்த முந்திரி – ஒரு டீஸ்பூன், வேஃபர் பிஸ்கட் – 2

 *செய்முறை:*

 கோதுமை மாவை சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக பிசைந்து வைக்கவும். அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தில் இரண்டு கப் நீர் விட்டு கொதிக்க விடவும். அடுப்பை ‘சிம்’மில் வைத்து, ஓமப்பொடி   நாழியில் பிசைந்த மாவைப் போட்டு, பரவலாக கொதி நீரில் நூடுல்ஸ் போல பிழிந்து, வெண்ணெய் சேர்த்து அடுப்பை அணைக்கவும். நீரில் வெந்த நூடுல்ஸை வடிகட்டி, ஐஸ் கட்டிகளை மேல் போட்டு அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். இதை ஒரு வடிதட்டியில் போட்டு வைக்கவும். ஒரு நீண்ட கண்ணாடி கிளாஸில் முதலில் வடிகட்டிய நூடுல்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்கவும். மேலாக ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். அடுத்து ஃப்ரூட் ஜாம் இரண்டு டீஸ்பூன் போட்டு, மேலாக ஒரு டீஸ்பூன் சர்க்கரை போடவும். அடுத்து மாம்பழக்கூழ் போட்டு, ஒரு டீஸ்பூன் சர்க்கரை போடவும். இதன்மேல் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து, சிட்டிகை பச்சை ஃபுட் கலர் சேர்க்கவும். மேலாக முந்திரிப் பொடியை தூவி, வேஃபர் பிஸ்கட்டுடன் பரிமாறவும்.

 *கோதுமை குருணை புளி உப்புமா*

 *தேவையானவை:*

 கோதுமை குருணை – ஒரு கப், புளிச்சாறு -அரை டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் (சிறியது) – ஒன்று,  காய்ந்த மிளகாய் (சிறியது) – ஒன்று,  இஞ்சி  – சிறிய துண்டு, தேங்காய் துருவல் – கால் கப், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன், ரீஃபைண்ட் ஆயில் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை:*

 கோதுமை குருணையை சிறிதளவு எண்ணெயில் வறுத்து ஆற விட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய வைத்து, கடுகைப் போட்டு வெடிக்கவிடவும். இத்துடன் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து சிவக்க வறுக்கவும். இதனுடன் கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் 3 கப் நீர், புளிச்சாறு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். அடுப்பை ’சிம்’மில் வைத்து, கோதுமை குருணையை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள எண்ணெயையும் ஊற்றி உப்புமா சிறிது தளற ஆனதும், தேங்காய்த் துருவல் சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு கிளறவும். பிறகு அடுப்பை அணைத்து, 10 நிமிடத்துக்குப் பின்னர் பரிமாறவும். இதற்கு, தக்காளி சட்னி உகந்தது.

 *கோதுமை பழக்கஞ்சி*

 *தேவையானவை:*

 கோதுமை மாவு – 2 டீஸ்பூன், பால் – ஒரு கப், பனங்கற்கண்டு – ஒரு டேபிள்ஸ்பூன், பூரா சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன், வாழைப்பழம், ஆப்பிள் – தலா ஒரு துண்டு, கமலா ஆரஞ்சு சுளைகள் – 4.

 *செய்முறை:*

 கால் டம்ளர் வெதுவெதுப்பான பாலில் கோதுமை மாவை சேர்த்து நன்றாக கலக்கவும். பழங்களை விதை நீக்கி மிக்ஸியில் மசிக்கவும். மீதமுள்ள பாலை நன்றாக கொதிக்க விட்டு எடுக்கவும். இத்துடன் கரைத்த மாவு, பழக் கூழ், பனங்கற்கண்டு, பூரா சர்க்கரை சேர்த்துக் கலக்கி பருகக் கொடுக்கவும்.

 *கோதுமை மாவு குழியப்பம்*

 *தேவையானவை:*

கோதுமை மாவு – முக்கால் கப், அரிசி மாவு – கால் கப்,  பொடித்த வெல்லம் – அரை கப், நன்கு பழுத்த பூவன் பழம் – ஒன்று, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், துருவிய தேங்காய் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடித்த சர்க்கரை – 2 டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

 *செய்முறை:*

 ஒரு பேஸினில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு, தேங்காய் துருவல், வாழைப்பழத் துண்டுகளைப் சேர்த்து பிசைந்து கொள்ளவும். வெல்லத்தில் ஒரு கப் நீர் ஊற்றி, நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கோதுமை மாவு கலவையுடன் வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலக்கவும். குழிப் பணியாரக் கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காயவிடவும். பின்பு அடுப்பை தணித்து, சிறு குழிக்கரண்டியால் மாவை எடுத்து ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும். அப்பங்கள் சிவந்ததும் அப்பக் குத்தியால் இதை திருப்பிப் போடவும். அப்பங்கள் நன்கு சிவந்து பொன்னிறமானதும் கரண்டியால் எண்ணெயை வடிகட்டி, வடிதட்டில் போடவும். இதைப் போல் முழு மாவையும் அப்பங்களாக செய்து ஒரு பேஸினில் போடவும். மேலாக நெய், பொடித்த சர்க்கரை போட்டு நன்றாக குலுக்கி பரிமாறவும்.

 *கோதுமை ரவை புட்டு*

 *தேவையானவை:*

கோதுமை ரவை – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,  தேங்காய் துருவல் – அரை கப், முந்திரி துண்டுகள் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – சிறிதளவு.

 *செய்முறை:*

 கோதுமை ரவையை சிறிது நெய்யில் சிவக்க வறுத்து எடுக்கவும். அடுப்பில் ஒரு கப் நீரை கொதிக்கவிட்டு சிறிது ஆறவிடவும். இத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். கோதுமை ரவையை ஒரு பேஸினில் போட்டு, முந்திரி துண்டுகளைச் சேர்க்கவும். இதில் வெதுவெதுப்பான நீரை தெளித்து பிசிறவும் (ரவை உதிர் உதிராய் இருக்க வேண்டும்). புட்டுக் குழாயில் சிறிதளவு தேங்காய் துருவலை சேர்க்கவும். பின்னர் ஒரு டேபிள்ஸ்பூன் கோதுமை ரவை கலவையை சேர்க்கவும். மீண்டும் தேங்காய், ரவை என்று போட்டு குழலை நிரப்பி மூடவும். இதை நீர் விட்டு, மூடிய குக்கரின் வெயிட் போடும் துளையில் செருகவும். புட்டு 15 நிமிடம் ஆவியில் வெந்ததும் எடுத்து, தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்.

 *குறிப்பு*

: புட்டுக் குழாயின் உள் நெய் தடவிய பின் புட்டு மாவை நிரப்பவும்

 *கோதுமை குருணை பாயசம்*

 *தேவையானவை:*

கோதுமை குருணை – 2 டேபிள்ஸ்பூன், பால் – ஒரு லிட்டர், மில்க் மெய்ட் – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – அரை கப், நெய் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், முந்திரி, பாதாம் துண்டுகள், திராட்சை (சேர்த்து) – ஒரு டேபிள்ஸ்பூன், கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை

 *செய்முறை:*

 கோதுமை குருணையுடன் சிறிதளவு நெய் சேர்த்து கடாயில் சிவக்க வறுக்கவும். இத்துடன் அரை லிட்டர் பால் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். மீதமுள்ள நெய்யை கடாயில் விட்டு…  முந்திரி, பாதாம், திராட்சையை சிவக்க வறுத்தெடுக்கவும். மீதமுள்ள அரை லிட்டர் பாலை இதே கடாயில் ஊற்றி, வற்றக் காய்ச்சி, மில்க்மெய்ட் சேர்த்துக் கலக்கவும். வெந்த கோதுமை குருணையை இதனுடன் சேர்த்து… சர்க்கரை, ஏலக்காய்த்துள், முந்திரி, பாதாம், திராட்சை கேசரி பவுடர் கலந்து, சூடாக அருந்தக் கொடுக்கவும்.

 *கோதுமை சிப்ஸ்*

 *தேவையானவை:*

கோதுமை மாவு – 2 கப், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், ஓமம்  – அரை டீஸ்பூன், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை:*

 கோதுமை மாவை ஒரு பேஸினில் போட்டு, உப்பு, வெண்ணெய், ஓமம், சமையல் சோடா சேர்த்துப் பிசிறவும்.  இதில் நீர் தெளித்து, கெட்டியான பூரி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும் அப்பளக்கல்லில் சிறிது எண்ணெய் தடவி சிறிய ஆரஞ்சு சைஸ் அளவில் பிசைந்த மாவை எடுத்து உருட்டி, வெறும் மாவில் புரட்டவும். இதை அப்பளக்கல்லில் சப்பாத்தி போல திரட்டவும். பிறகு, கத்தியால் சின்ன பிஸ்கட் வடிவில் அரை இஞ்ச் துண்டுகளாக ‘கட்’ செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஒரு கைப்பிடி அளவு சிப்ஸை போட்டு, அடுப்பை ‘சிம்’மில் வைத்து, சிறிது சிவந்ததும் திருப்பிப் போடவும். சிப்ஸ் பொன்னிறமாக, முறுகலாக ஆனதும், ஒரு வடிதட்டில் எடுக்கவும்.  இதைப் போல் மீதமுள்ள மாவையும் சிப்ஸ்களாக செய்து, ஆறவிட்டு, எல்லாவற்றையும் காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து பயன்படுத்தவும்.

 *கோதுமை மாவு சூர்மா*

 *தேவையானவை:*

 கோதுமை மாவு – ஒரு கப், கொப்பரைத் துருவல் – அரை கப், வெள்ளரி விதை – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகள், திராட்சை (சேர்த்து)  – 2 டேபிள்ஸ்பூன், பொடித்த சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், நெய் – 4 டேபிள்ஸ்பூன்.

 *செய்முறை:*

 கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி, கோதுமை மாவை சிவக்க வறுத்தெடுக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில், முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரி, திராட்சை ஆகியவற்றை வறுத்து மாவுடன் சேர்க்கவும். சர்க்கரை, ஏலக்காய்த்தூள், கொப்பரைத் துருவலை சேர்த்து நன்றாக கலக்கவும். மீதமுள்ள நெய்யை லேசாக சூடுபடுத்தி, இத்துடன் சேர்த்துக் கலக்கி, சாப்பிட கொடுக்கவும்.

 *விருப்பப்பட்டால்,*

 சிறிதளவு பால் ஊற்றி, இதை உருண்டைகளாக செய்துக் கொடுக்கலாம்.

 *வெந்தயக்கீரை சப்பாத்தி*

 *தேவையானவை:*

 கோதுமை மாவு – 2 கப், வெந்தயக் கீரை இலைகள் – ஒரு கப்,  கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், தனியாத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, ஓமம் – அரை டீஸ்பூன், ரிஃபைண்ட் ஆயில் – கால் கப், உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை:*

 ஒரு பேஸினில் கோதுமை மாவு, உப்பு, ஓமம், சிறிதளவு எண்ணெய், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்க்கவும். வெந்தயக் கீரையை நன்றாகக் கழுவி நீரை வடித்து பொடியாக நறுக்கவும். கொத்தமல்லியையும் நறுக்கவும். இரண்டையும் மாவுக் கலவையுடன் சேர்க்கவும். இதில் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியாக மாவு பிசையவும். மாவை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, எலுமிச்சை சைஸ் உருண்டைகளாகச் செய்யவும். சப்பாத்திக் கல்லில் ஓர் உருண்டையை வைத்து கைகளால் அழுத்தி பிசைந்து, மேல் மாவு தொட்டு சப்பாத்தி போல பரத்தவும். அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்து சூடானதும், ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு பரவவிட்டு சப்பாத்தியை போடவும். சிறிது சிவந்ததும் திருப்பிப் போட்டு எண்ணெய் ஊற்றவும். சப்பாத்தி நன்றாக சிவந்ததும் எடுத்து, சுத்தமான துணியில் மூடி வைக்கவும்.

இந்த சப்பாத்தியை 2 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம். தொட்டுக் கொள்ள ஸ்வீட் ஊறுகாய் அல்லது ஜாம் சிறந்தது.

 *உருளைக்கிழங்கு  கேரட் பரோட்டா*

 *தேவையானவை:*

 கோதுமை மாவு – 2 கப், உருளைக்கிழங்கு – ஒன்று (வேக வைத்து மசிக்கவும்), கேரட் – ஒன்று (துருவிக் கொள்ளவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன்,  சீரகம் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள்- அரை டீஸ்பூன், பிஞ்சு பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும்) – ஒன்று, துருவிய இஞ்சி – அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், சீரகத்தூள், தனியாத்தூள் – தலா கால் டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை:*

 கோதுமை மாவில் சிறிதளவு உப்பு, வெண்ணெய் சேர்த்து, வெதுவெதுப்பான நீர் தெளித்து கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சீரகம் தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு, சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கி ஆறவிடவும் (இதுதான் பூரணம்).

பிசைந்து வைத்த மாவில் எலுமிச்சை சைஸ் உருண்டை எடுத்து, நன்கு உருட்டி பிசைந்து வட்டமாக தட்டவும். இதில் சிறு எலுமிச்சை அளவு பூரணம் வைத்து மூடி,  மாவு தொட்டு, பாலிதீன் பேப்பரில் வைத்து பரோட்டாவாக திரட்டவும். அடுப்பில் குழிவான நான்ஸ்டிக் தவா வைத்து, சூடாக்கி சிறிது எண்ணெய் ஊற்றவும். பரோட்டாவை போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு, சிவந்ததும் திருப்பிப் போட்டு, இருபுறமும் சிவந்ததும் எடுக்கவும்.

 *இதற்கு பூந்தி ராய்தா சிறந்த சைட்டிஷ்.*


 *கோதுமை மாவு தளி வடாம்*

 *தேவையானவை*

: கோதுமை மாவு – 2 கப், பச்சை மிளகாய் – ஒன்று, சீரகம் – ஒரு டீஸ்பூன், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை:*

 கோதுமை மாவில் உப்பு, சமையல் சோடா சேர்த்துக் கலக்கவும். பச்சை மிளகாயை மிக்ஸியின் சின்ன ஜாரில் அரைத்து இத்துடன் சேர்க்கவும். மாவை நீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கட்டியில்லாமல் கரைக்கவும். இதை இரண்டு பாத்திரங்களில் சமமாக எடுத்துக் கொள்ளவும். ஒன்றில் சீரகமும் மற்றதில் எள்ளையும் சேர்த்துக் கலக்கவும். தளி வடாம் செய்யும் தட்டுக்களில் சிறிது எண்ணெயை தடவி ஒரு டேபிள்ஸ்பூன் மாவை வட்டமாகப் பரத்தவும். இதேபோல் எல்லா தட்டுகளிலும் ஊற்றி ஸ்டாண்டில் பொருத்தி குக்கரில் வைத்து 15 நிமிடம் வேக விட்டு, வெளியே எடுக்கவும். பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி, வேக வைத்த வடாம்களை இரண்டு நாள் காயவிடவும். பிறகு, திருப்பிப் போட்டு நன்றாக காய்ந்ததும் எடுத்துப் பொரிக்கவும்.

 *கோதுமை உருண்டை*

 *தேவையானவை:*

 கோதுமை மாவு – 2 கப், பொடித்த வெல்லம் – அரை கப், முந்திரி, பாதாம் துண்டுகள் – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – அரை கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன்.

 *செய்முறை:*

 கோதுமை மாவை ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் சிவக்க வறுத்தெடுக்கவும். முந்திரி, பாதாமை சிறிது நெய்யில் வறுத்து, சூட்டுடன் தேங்காய் துருவலை கலந்து வைக்கவும். வெல்லத்தை கால் கப் நீரில் கரைத்து வடிகட்டி இரண்டு கம்பி பதத்தில் பாகு காய்ச்ச  வும். இத்துடன் கோதுமை மாவு, முந்திரி, பாதாம் துண்டுகள், தேங்காய் துருவல், மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, சிறிது ஆறவிட்டு உருண்டைகள் பிடிக்கவும் (சிறிதளவு பால் சேர்த்தும் பிடிக்கலாம்).

 *கோதுமை ஜிலேபி*

 *தேவையானவை:*

 கோதுமை மாவு – கால் கப், மைதா மாவு – கால் கப், இனிப்பில்லா கோவா – அரை கப், புளித்த தயிர் – 2 டேபிள்ஸ்பூன், கேசரி பவுடர் – 2 சிட்டிகை, சர்க்கரை – 2 கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், ரோஸ் எசன்ஸ் – சிறிதளவு,  சமையல் சோடா – ஒரு சிட்டிகை, ரெடிமேட் தேங்காய் துருவல் – சிறிதளவு, எண்ணெய் பொரிக்க தேவையான அளவு.

 *செய்முறை:*

 கோதுமை மாவு, மைதா மாவு, கோவா, தயிர், சமையல் சோடா சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டி இட்லி மாவு பதத்தில் கரைத்து 2 மணி நேர ஊறவிடவும். பரந்த, குழிவான நான் ஸ்டிக் தவாவில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். சிறு கண்ணுடைய கொட்டாங்குச்சியை சுத்தம் செய்து, ஒரு கண்ணில் துளையிட்டுக் கொள்ளவும். சுட்டு விரலால் கொட்டாங்குச்சி துளையை மூடிக் கொண்டு ஒரு கரண்டி ஜிலேபி மாவை கொட்டாங்குச்சியில் ஊற்றவும். பின்பு எண்ணெயில் இதை வட்டமாக  பிழிந்து சிறிது மொறுமொறுப்பாக வடிதட்டில் எடுத்து வடிகட்டவும். மற்றொரு கடாயில் சர்க்கரை, அரை கப் நீர் விட்டு பிசுக்கு பதத்தில் பாகு காய்ச்சவும். இதில் ஒரு டீஸ்பூன் பாலை விட்டால், அழுக்கு நுரைத்து வரும். அதை வெளியே எடுத்துவிடவும். பாகில் ஏலக்காய்த்தூள், எசன்ஸ், கேசரி பவுடர் கலந்து அடுப்பை அணைக்கவும். ஜிலேபியை இதில் சூட்டுடன் அமுக்கி, ஒரு தட்டில் அடுக்கி, மேலாக ரெடிமேட் தேங்காய் துருவலை தூவவும்.

 *கோதுமை சமோசா*

 *தேவையானவை:*

 கோதுமை மாவு – முக்கால் கப், மைதா மாவு – கால் கப், வெண்ணெய் அல்லது சூடான எண்ணெய் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – சிறு துண்டு, வேக வைத்த உருளைக்கிழங்கு – 2, பச்சைப் பட்டாணி – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள், சாட் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன், அம்சூர் பொடி (மாங்காய் பொடி) – கால் டீஸ்பூன், சோம்பு –  அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை:*

 கோதுமை மாவுடன் மைதா மாவு, சிறிதளவு உப்பு, வெண்ணெய் சேர்த்துக் கலந்து தண்ணீர் தெளித்துக் கெட்டியாக பிசைந்து, 30 நிமிடம் ஊறவிடவும்.  வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். பட்டாணியை சிறிதளவு தண்ணீரில் வேக வைத்து எடுக்கவும். இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காயவிட்டு, சோம்பை சேர்க்கவும். அது சிவந்ததும் இஞ்சி, பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும். இத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள், அம்சூர் பொடி கலந்து… கொத்தமல்லி, மசித்த உருளைக்கிழங்கு சேர்த்துக் கிளறி கீழே இறக்கவும். உருளை கலவையை சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பிசைந்த கோதுமை மாவில் பெரிய எலுமிச்சை சைஸ் உருண்டை எடுத்து, வெறும் மாவு தொட்டு உள்ளங்கை அளவுக்கு வட்டமாக பரத்தவும். இதை 2 அரை வட்ட துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு துண்டை பேப்பர் கோன் (பொட்டலம்) போல செய்து கொள்ளவும். இதில் இதில் உருளைக் கலவை உருண்டையை வைத்து, சிறிது தண்ணீர் தொட்டு விளிம்புகளை ஒட்டிக் கொள்ளவும். இது போல் எல்லா சமோசாக்களையும் செய்து வைக்கவும். எண்ணெயை காய வைத்து சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரிக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள ஸ்வீட் புதினா சட்னி, கார சட்னி ஏற்றது.

 *கோதுமை ரவா தோசை*

 *தேவையானவை:*

 கோதுமை மாவு – முக்கால் கப், அரிசி மாவு – கால் கப், ரவை – அரை கப், புளித்த மோர் – ஒரு கரண்டி, சீரகம் – ஒரு டீஸ்பூன், வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று, இஞ்சி – சிறு துண்டு, கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன்,  கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, ரிஃபைண்ட் ஆயில் – கால் கப், உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை:*

 ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, உப்பு, சீரகம், மோர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, தண்ணீர் விட்டு, தோசை மாவை விட நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் நான்ஸ்டிக் தோசைக்கல்லைப் போட்டு சூடானதும். சிறிது எண்ணெயை தடவி, மாவை விளிம்பிலிருந்து வட்டமாக உள்புறம் ஊற்றவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயை சுற்றிலும் விட்டு, தோசை சிவந்ததும் திருப்பிப் போட்டு, முறுகலாக எடுத்துப் பரிமாறவும்.

 *கோதுமை வெஜிடபிள் கஞ்சி*

 *தேவையானவை:*

 கோதுமை மாவு – 2 டீஸ்பூன், பால் – ஒரு கப், கேரட் – ஒரு துண்டு, பச்சைப் பட்டாணி – ஒரு டேபிள்ஸ்பூன், பிஞ்சு கோஸ் இலை – ஒன்று, சர்க்கரை – கால் டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை

 *செய்முறை:*

 கேரட், கோஸை தோல், நரம்பு நீக்கவும். அரை கப் தண்ணீரில் சிட்டிகை உப்பு சேர்த்து, அதில் கேரட், பட்டாணி, கோஸ் சேர்த்து நன்றாக வேகவிடவும். இதை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கால் டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 2 டீஸ்பூன் கோதுமை மாவை கலக்கவும். மீதமுள்ள பாலைக் கொதிக்கவிட்டு, சர்க்கரை, கோதுமை மாவு கலவை, அரைத்த வெஜிடபிள் கலந்து பருகக் கொடுக்கவும்.

 *கோதுமை அல்வா*

 *தேவையானவை:*

 சம்பா கோதுமை – ஒரு கப், சர்க்கரை – இரண்டரை கப், நெய் – அரை கப், ரிஃபைண்ட் ஆயில் – கால் கப், எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், கேசரி பவுடர் – 2 சிட்டிகை, முந்திரி, பதாம், பிஸ்தா துண்டுகளின் கலவை – ஒரு டேபிள்ஸ்பூன், வெள்ளரி விதை – ஒரு டீஸ்பூன், பாதாம் எசன்ஸ் (விருப்பப்பட்டால்) – சில சொட்டுகள்.

 *செய்முறை:*

 கோதுமையைக் கழுவி முதல் நாள் இரவே நீரில் ஊற வைக்கவும். மறுநாள் நீரை வடித்து, கிரைண்டர் அல்லது மிக்ஸியில் சேர்த்து சிறிது சிறிதாக நீர் விட்டு நன்றாக அரைக்கவும். இதை எடுத்து சிறு கண்ணுள்ள வடிதட்டியில் போட்டு கரண்டியால் அழுத்தி பாலை வடிக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்த்து அரைத்து பாலை வடிகட்டவும். இது போல் மூன்று நான்கு முறை பாலை வடித்து எடுத்து, இரண்டு மணி நேரம் தனியாக வைக்கவும். பாலின் மேலாக நீர் தெளிந்திருக்கும். இதை பால் சிதறாமல் வடிகட்டவும். மீண்டும் அரை மணி நேரம் வைத்திருந்து, மேலே தெளியும் நீரை வடித்துவிடவும். முந்திரி, பதாம், பிஸ்தா துண்டுகளின் கலவையை சிறிதளவு நெய்யில் வறுத்தெடுக்கவும். எண்ணெய் – நெய்யைக் கலந்து கொள்ளவும்.

நான்ஸ்டிக் கடாயில் சர்க்கரை, கோதுமைப்பால், ஒரு கரண்டி எண்ணெய் – நெய் கலவை சேர்த்துக் கிளறவும். கோதுமைப்பால் கெட்டியாக வரும்போது மீண்டும் எண்ணெய் – நெய் கலவை சேர்த்துக் கிளறவும். கோதுமைப் பால் கெட்டியாகி கடாயில் ஒட்டாமல் வரும்போது, சிறிதளவு தண்ணீரில் கரைத்த கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் பிரிந்து வரும் வரை வரை கிளறவும். முந்திரி, பதாம், பிஸ்தா, வெள்ளரி விதை,  எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, அல்வா கையில் ஒட்டாமல் உருண்டு வரும்போது அடுப்பை அணைக்கவும். விருப்பப்பட்டால் பாதாம் எசன்ஸ் கலக்கவும். நெய் தடவிய தட்டில் பரத்தி சுடச்சுடவோ… ஆறிய பிறகு துண்டுகளாக்கியோ பரிமாறவும்.

 *கோதுமை தட்டை*

 *தேவையானவை:*

 கோதுமை மாவு – ஒரு கப், அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், ஊற வைத்த கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,  நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை:*

 ஒரு பேஸினில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்தில் பிசையவும். ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் சிறு எலுமிச்சை அளவு மாவை உருட்டி, உள்ளங்கை அளவு மெல்லிதாக தட்டி, காய வைத்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

 *கலர்ஃபுல் ஸ்வீட் சிப்ஸ்*

 *தேவையானவை:*

 கோதுமை மாவு – 2 கப், ரவை – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை, செர்ரி, கேசரி ஃபுட் கலர்கள் – தலா ஒரு சிட்டிகை, சமையல் சோடா – கால் டீஸ்பூன்,  பொடித்த சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், சிட்ரிக் ஆஸிட் – அரை டீஸ்பூன், நன்றாக பொடித்த முந்திரி – 2 டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

 *செய்முறை:*

  கோதுமை மாவுடன் ரவை, சமையல் சோடா, வெண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு, பொடித்த சர்க்கரை, சிட்ரிக் ஆஸிட், முந்திரிப் பொடி சேர்த்து நீர் தெளித்து கெட்டியாக பிசைந்து நான்கு பகுதிகளாக பிரிக்கவும். ஒன்றில் பச்சை, அடுத்ததில் கேசரி, அடுத்து செர்ரி கலர் சேர்த்து… நான்காவதை வெண்மையாக விட்டு மீண்டும் பிசைந்து கொள்ளவும். அடுப்பில் எண்ணெயை காயவிட்டு ‘சிம்’மில் வைக்கவும். முதலில் வெள்ளை மாவை உருட்டி மேல் மாவு தொட்டு பரத்தி, சதுரமாக ‘கட்’ செய்து, காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறத்தில் வறுத்து எடுக்கவும். பிறகு மீதமுள்ள மூன்று கலர் மாவுகளையும் முக்கோணம், டைமண்ட், செவ்வகம் என்று வெவ்வேறு வடிவங்களில் ‘கட்’ செய்து  பொரிக்கவும். ஆறியதும் எல்லாவற்றையும் காற்றுப்புகாத டப்பாவில் சேர்த்து பயன்படுத்தவும்.

 *கோதுமை ரவை டோக்ளா*

 *தேவையானவை:*

 கோதுமை ரவை – ஒரு கப், பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – சிறிய துண்டு, கொத்தமல்லி (நறுக்கியது) – ஒரு டேபிள்ஸ்பூன், புளித்த தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன், ஈனோ ஃப்ரூட்சால்ட் பிளெயின் – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, பொடித்த சர்க்கரை – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை:*

 கோதுமை ரவையை சிறிது எண்ணெயில் லேசாக வறுத்தெடுக்கவும். இஞ்சியை தோல் சீவி, பச்சை மிளகாயை காம்பு நீக்கி ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கோதுமை ரவையை ஒரு பேஸினில் போட்டு… உப்பு, இஞ்சி – பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி, ஈனோ ஃப்ரூட் சால்ட், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சீரகம் சேர்க்கவும். இதனுடன் தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டி இட்லி மாவு பதத்தில் கரைக்கவும். இதை அரை மணிநேரம் ஊறவிடவும். ஒரு இஞ்ச் குழிவுள்ள வட்ட தட்டில் எண்ணெய் தடவி, கரைத்த மாவை பரப்பவும். இட்லி பாத்திரத்தில் இதை 15 நிமிடம் ஆவியில் வேகவிடவும். பின்பு வெளியே எடுக்கவும். கடுகை எண்ணெயில் வெடிக்க விட்டு இதன் மேலே பரவலாக போடவும். கொத்தமல்லி, தேங்காய் துருவலையும் பரவலாக தூவவும். பொடித்த சர்க்கரையில் சிறிது தண்ணீர், எலுமிச்சைச் சாறு கலந்து மேலாக ஊற்றவும். கோதுமை ரவை டோக்ளா தயார்.

இதை விருப்பப்படி துண்டுகள் செய்து, புதினா ஸ்வீட் சட்னியுடன் பரிமாறலாம்.

 *கோதுமை வெல்ல தோசை*

 *தேவையானவை:*

 கோதுமை மாவு – 2 கப், அரிசி மாவு, வெல்லம் (பொடித்தது) – தலா அரை கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், ரிஃபைண்ட் ஆயில் – கால் கப், உப்பு – ஒரு சிட்டிகை.

 *செய்முறை:*

 வெல்லத்தை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்துக் கலந்து, தோசை மாவை பதத்தில் கரைக்கவும். அடுப்பில் சிறிது குழிவான நான்ஸ்டிக் தவாவைப் போட்டு சூடாக்கவும். இதில் துளி எண்ணெயை தடவி, ஒரு கரண்டி மாவை ஊற்றி (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்) மெல்லிய தோசையாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, சிவந்ததும் தோசையை திருப்பிப் போடவும். இருபுறமும் சிவந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

 *கோதுமை மாவு நேந்திரங்காய் பஜ்ஜி*

 *தேவையானவை:*

 முற்றிய நேந்திரங்காய் – 2, கோதுமை மாவு, மைதா மாவு – தலா அரை கப், சோள மாவு – ஒரு டீஸ்பூன், சமையல் சோடா – ஒரு சிட்டிகை,  மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை, துருவிய வெங்காயம் – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை:*

 நேந்திரங்காய்களின் காம்பை வெட்டி, நீள வாக்கில் கீறி, தோலை உரிக்கவும். இதை இரண்டாக நறுக்கவும். பிறகு நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கோதுமை மாவு, மைதா மாவு, சமையல் சோடா, சோள மாவு, கேசரி பவுடர், உப்பு, துருவிய வெங்காயம், கொத்தமல்லி, மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, நேந்திரங்காய்த் துண்டுகளை மாவில் முக்கி இரண்டு, மூன்றாக போடவும். பஜ்ஜி உப்பி சிவந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

இதற்கு சாஸ், சட்னி சிறந்த சைட் டிஷ்.

 *கோதுமை காக்ரா*

 *தேவையானவை:*

 கோதுமை மாவு – ஒன்றரை கப்,  ரவை – கால் கப், சீரகம் அல்லது ஓமம் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், சமையல் சோடா – கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், வெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை:*

 கோதுமை மாவுடன் ரவை, சீரகம் அல்லது ஓமம், மிளகாய்த்தூள். சமையல் சோடா, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து, வெதுவெதுப்பான நீர் விட்டு கலந்து கெட்டியாக பிசையவும். இதை அரை மணி நேரம் ஊறவிடவும். மீண்டும் பிசைந்து சிறு எலுமிச்சை சைஸ் உருண்டைகளாக செய்யவும். இதை கைகளால் நன்றாக உருட்டி, வெறும் மாவு தொட்டு எண்ணெய் தடவிய சப்பாத்திக் கல்லில் மெல்லிதாக 6 இஞ்ச் விட்டத்துக்கு பரத்தவும். இதை சூடான நான்ஸ்டிக் தவாவில் போட்டு சுழற்றி, திருப்பிப் போடவும். இதில் குமிழ்கள் தோன்றி சிவப்பானதும் எடுத்து வைக்கவும். இது எண்ணெய் சேர்க்காத சுட்ட அப்பளங்களைப் போல் இருக்கும். ஆறவிட்டு பிளாஸ்டிக் ஜிப்லாக் கவரில் போட்டு வைத்தால், ஒரு வாரம் வரை கெடாது. இதை நெய், ஜாம், சாஸ் தொட்டு சாப்பிடலாம்.

 *வெஜிடபிள் சப்பாத்தி ரோல்*

 *தேவையானவை:*

 கோதுமை மாவு – ஒன்றரை கப், கோஸ் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், உருளைக்கிழங்கு – ஒன்று, பச்சைப் பட்டாணி – ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன், கேரட் – ஒன்று (துருவிக் கொள்ளவும்), மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், துருவிய பனீர் – 2 டேபிள்ஸ்பூன்,  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 *செய்முறை:*

 கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, வெது வெதுப்பான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும். பட்டாணியையும் வேக வைத்து மசித்துக் கொள்ளவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சீரகத்தை சிவக்கவிடவும். இதில் துருவிய கோஸ், வெங்காயம், கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும். மசித்த உருளைக்கிழங்கு, பட்டாணி, கொத்தமல்லி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து நன்றாக கிளறி கீழே இறக்கவும். இதுதான் பூரணம்.

பிசைந்த மாவில் பெரிய எலுமிச்சை சைஸ் மாவு எடுத்து பிசைந்து எண்ணெய் தடவிய சப்பாத்திக்கல்லில் வைத்து பரத்தவும். திரட்டிய சப்பாத்தியில் கால் பாகம் தவிர்த்து, நடுவில் 2 டீஸ்பூன் பூரணத்தை வைத்து உருட்டும் வகையில் நீளமாக பரத்தவும். சப்பாத்தியின் நாற்புறமும் தண்ணீர் தொட்டு தடவி, சப்பாத்தியை ரோலாக உருட்டி, விளிம்புகளை ஒட்டிவிடவும். மீதமுள்ள ஒரு ஸ்பூன் நெய்யுடன், சிறிதளவு எண்ணெயை கலக்கவும். குழிவான தவாவை சூடாக்கி, ரோலை வைத்து சுற்றிலும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் – நெய் கலவையை ஊற்றவும். ரோலின் அடிபாகம் சிவந்ததும் திருப்பிப் போடவும். ரோல் நன்றாக சிவந்ததும், மேலாக பனீர் தூவியோ அல்லது பனீரை ரோலின் உள்ளே வைத்தோ சூடாக பரிமாறவும்.


30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி


#30_வகை_காஷ்மீர்_to_கன்னியாகுமரி_ரெசிபி

”உணவில் வெரைட்டி விரும்புபவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.....

 *காஷ்மீரி ரிச் புலாவ்*

தேவையானவை: வடித்த சாதம் – ஒரு கப், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், திராட்சைப் பழம் கலவை – அரை கப், முந்திரி, உலர்ந்த திராட்சை – தலா 10, சர்க்கரை – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – 2, பட்டை, லவங்கம், ஏலக்காய் – தாளிக்கத் தேவையான அளவு, குங்குமப்பூ – சிறிதளவு, பால் – 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவைக்கேற்ப.

செய்முறை:
பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு… பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்து வறுக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, சர்க்கரை, பாலில் ஊற வைத்த குங்குமப்பூ சேர்த்து வதக்கி… வடித்த சாதம், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், திராட்சையை சேர்த்துக் கிளறி இறக்கினால்… காஷ்மீரி ரிச் புலாவ் ரெடி!

  ㋡ *டெல்லி தர்பார்*

தேவையானவை:
மைதா மாவு – ஒரு கப், சர்க்கரை – 50 கிராம், முந்திரி, பாதாம் – தலா 10, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:
 பாதாம், முந்திரியை வெறும் வாணலியில் வறுத்து, ஆறிய பின் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். மைதா மாவை உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல பிசையவும். இந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக செய்து, சிறிய அப்பளங்களாக இட்டு, நடுவே பாதாம் – முந்திரி பொடியை வைத்து மூடி, ஓரத்தை நன்கு ஒட்டவும். இதனை காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  ㋡ *மைசூர் சட்னி பொடி*

தேவையானவை:
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10 (அல்லது விருப்பத்துக்கேற்ப), தேங்காய் துருவல் – ஒரு கப், எள் – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கசகசா – சிறிதளவு,  கறிவேப்பிலை – 10 இலைகள், புளி – கொட்டைப் பாக்கு அளவு, தனியா – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
தேங்காய் துருவலை, வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். கசகசா, எள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தனியா, புளி ஆகியவற்றையும் எண்ணெய் விடாமல் தனித்தனியே கருகாமல் வறுக்கவும். காய்ந்த மிளகாயை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கவும். வறுத்த பொருட்களை ஆற வைத்து… பெருங் காயத்தூள், உப்பு சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.

இது, சூடான சாதத்துடன் சாப்பிட ஏற்றது. இந்தப் பொடியுடன் நீர் சேர்த்துக் கரைத்து, சட்னி போலவும் பயன்படுத்தலாம்.

  ㋡ *பாம்பே காஜா*

தேவையானவை:
மைதா – ஒரு கப், அரிசி மாவு – கால் கப், ஆப்பசோடா – ஒரு சிட்டிகை, சர்க்கரை – ஒரு கப், கேசரி கலர் – ஒரு சிட்டிகை, கொப்பரைத் துருவல் – சிறிதளவு, நெய் – கால் கப், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:
அகலமான பாத்திரத்தில் சிறிதளவு நெய்யுடன் ஆப்பசோடா சேர்த்து தேய்த்து, சலித்த மைதா சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு போல பிசையவும். வேறொரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் நெய் சேர்த்து பேஸ்ட் போல குழைக்கவும். பிசைந்த மைதா மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி அப்பளமாக திரட்டி, ஒவ்வொன்றின் மீதும் அரிசி மாவு பேஸ்ட் தடவி முக்கோணமாக மடிக்கவும். காஜா தயார்.

எண்ணெயைக் காய வைத்து, காஜாக்களை பொரித்தெடுக்கவும். சர்க்கரையுடன் கேசரி கலர் சேர்த்து பாகு செய்து, பொரித்த காஜாக்களை முக்கி எடுத்து, தட்டில் வைத்து, அதன் மீது கொப்பரைத் துருவலை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

  ㋡ *பாம்பே சட்னி*

தேவையானவை:
கடலை மாவு – 4 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 3, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
 வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கடலை மாவுடன், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நீர்க்க கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, கரைத்த கடலை மாவு கலவையை சேர்த்து நன்கு கிளறவும். கெட்டியானதும் இறக்கவும். இதை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சைட் டிஷ்ஷாக பரிமாறலாம்.

  ㋡ *, ஆந்திரா ரைஸ் பால்ஸ்*

தேவையானவை:
அரிசி மாவு – ஒரு கப், எள், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,  இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 4, பெருங்காயம் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
 இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரிசி மாவுடன் சூடான எண்ணெய் நான்கு டீஸ்பூன் விட்டு பிசிறவும். பிறகு, இதனுடன் எள், சீரகம், உப்பு, பெருங்காயம், இஞ்சி – பச்சை மிளகாய் விழுது, தேவையான அளவு வெந்நீர் சேர்த்து, மாவை கெட்டியாக சப்பாத்தி மாவு போல பிசையவும். ஒரு மணி நேரம் ஊறவிட வும். பின்னர், சீடை போல உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: இஞ்சி, பச்சை மிளகாய் விழுதுக்கு பதிலாக, மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம்.

  ㋡ *நெல்லூர் மசாலா ரைஸ்*

தேவையானவை:
அரிசி – கால் கிலோ, சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 2, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, நெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க:
 எள் – 2 டீஸ்பூன், தனியா – 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 8 (அல்லது விருப்பத்துக்கேற்ப), லவங்கம் – ஒன்று.

செய்முறை:
அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு வெங்காயம், தக்காளியை வதக்கி… உப்பு, மஞ்சள்தூள் மற்றும் வறுத்து அரைத்த பொடி சேர்த்து நன்கு சுருள வதக்கவும். இந்த மசாலாவுடன் வடித்த சாதத்தை சேர்த்துக் கிளறி இறக்கினால்… நெல்லூர் மசாலா ரைஸ் ரெடி!

  ㋡ *ராஜஸ்தானி கட்டா கிரேவி*

தேவையானவை:
 கடலை மாவு – ஒரு கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,   பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, புளித்த தயிர் – ஒரு கப், கடுகு, சீரகம், கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு, பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித் தழை – சிறிதளவு, தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
 கடலை மாவுடன் பெருங்காயத் தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு,  தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக்கி பொரித்து எடுக்கவும். இது தான் கட்டா.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, சீரகம் தாளித்து… பொரித்த கட்டா, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, தனியாத்தூள், தயிர், தேவையான உப்பு சேர்த்துக் கலந்து… ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

  ㋡ *மங்களூர் ஸ்வீட் பன்*

தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப், பச்சை வாழைப்பழம் – ஒன்று, தயிர் – 3 டீஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ் பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், ஆப்பசோடா – ஒரு சிட்டிகை, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:
 வாழைப்பழத்தை தோலை உரித்து, துண்டுகளாக்கி மசிக்க வும். இதனுடன் தயிர், உப்பு, சர்க்கரை, சீரகம், ஆப்பசோடா சேர்த்துக் கிளறவும். பிறகு, கோதுமை மாவில் இந்தக் கல வையை சேர்த்து, சிறிதளவு எண்ணெய் தொட்டுக் கொண்டு பிசையவும். இந்த மாவு கலவையை நான்கு மணி நேரம் ஊறவிடவும். பின்பு மாவை சிறிய உருண்டைகளாக்கி… வட்டமாக, சற்று கனமாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  ㋡ *துவாரகா லட்டு*

தேவையானவை:
சப்பாத்தி – 2, வறுத்த வேர்க்கடலை – அரை கப், வெல்லம் – அரை கப், தேங்காய் துருவல் – கால் கப், நெய் – தேவையான அளவு.

செய்முறை:
 தேங்காய் துருவலை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். சப்பாத்தியை சிறிய துண்டுகளாக வெட்டவும். மிக்ஸியில் தேங்காய் துருவல், வறுத்த வேர்க்கடலை, சப்பாத்தி துண்டுகள், வெல்லம் சேர்த்துப் பொடிக்கவும். கையில் சிறிதளவு நெய் தடவிக்கொண்டு, அரைத்த பொடியை லட்டுகளாக பிடிக்கவும்.

  ㋡ *காசி அல்வா*

தேவையானவை:
வெள்ளைப் பூசணி துருவல் – ஒரு கப், சர்க்கரை – அரை கப், முந்திரிப் பருப்பு – 10, நெய் – கால் கப்.

செய்முறை:
  வெள்ளைப் பூசணியை தோல் சீவி, விதைகளை நீக்கி, கேரட் துருவியில் மெல்லிய தாக துருவவும். அடி கனமான வாணலியில் சிறிதளவு நெய் விட்டு இதை வதக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டி யாகும்போது மீதமுள்ள நெய் விட்டு கிளறி, சுருண்டு வரும்போது இறக்க வும். முந்திரிப் பருப்புகளை நெய்யில் வறுத்து மேலே அலங்கரித்து பரிமாற வும்.

  ㋡ *பஞ்சாபி பாலக்*

தேவையானவை:
 பாசிப்பருப்பு – ஒரு கப், தயிர் – 2 டீஸ்பூன், பாலக் கீரை (பசலைக்கீரை) – ஒரு கட்டு, வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிய துண்டு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
 பாசிப்பருப்பை மலர வேகவிடவும். பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கீரை, சுத்தம் செய்து துருவிய இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி… உப்பு, பாசிப்பருப்பு சேர்த்து வேகவிடவும். பின்பு, தயிரைச் சேர்த்துக் கலந்து இறக்கவும். இது சப்பாத்திக்கு சிறந்த சைட் டிஷ்.

  ㋡ *பெங்காலி ஆலு மசாலா*

தேவையானவை:
உருளைக்கிழங்கு – கால் கிலோ, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,  ஏலக்காய், பட்டை – தலா ஒன்று, தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, வெங்காயம், தக்காளி – தலா 2, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தயிர் – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
 உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, பெரிய துண்டுகளாக்கி எண்ணெயில் பொரிக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். சீரகம், மிளகு, ஏலக்காய், பட்டை, தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், தயாராக வைத்திருக்கும் மசாலா பொடி சேர்த்து வதக்கி… உப்பு, பொரித்த உருளை துண்டுகள், தயிர் சேர்த்து சுருள கிளறி இறக்கி, பரிமாறவும்.

 ㋡ *கேரள நேந்திரன் சாக்லேட்*

தேவையானவை:
நேந்திரன் வாழைப்பழம் (மசித்தது) – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – கால் கப், பால் – அரை கப்.

செய்முறை:
 தேங்காய் துருவலை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். சர்க்கரையை கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். இதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால், மசித்த நேந்திரன் பழ விழுது, தேங்காய் துருவல், நெய் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கிளறவும். ஒரு தட்டில் நெய் தடவி, கிளறிய கலவையை கொட்டி பரப்பி, ஆறியவுடன் வில்லைகளாக்கி பரிமாறவும்.

  ㋡ *மணப்பாறை முறுக்கு*

தேவையானவை:
அரிசி மாவு – ஒரு கப், சீரகம், எள் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், வெண்ணெய் (அ) நெய் – ஒரு டீஸ்பூன், ஓமம் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை:
 அரிசி மாவுடன் வெண்ணெய் (அ) நெய், உப்பு, எள், சீரகம், பெருங்காயத்தூள், ஓமம், தேவையான அளவு தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதமாக பிசையவும். பிசைந்த மாவை தேன்குழல் முறுக்கு அச்சு தட்டில் போட்டு, காய்ந்த எண்ணெயில் முறுக்காக பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

  ㋡ *குஜராத்தி கடீ*

தேவையானவை:
 கெட்டித் தயிர் – ஒரு கப், கடலை மாவு – 2 டீஸ்பூன், சர்க்கரை – ஒரு சிட்டிகை, கடுகு, சீரகம் – தாளிக்கத் தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்த மல்லித் தழை – சிறிதளவு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிள காய் – 3, இஞ்சி – சிறிய துண்டு, எண் ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
 இஞ்சி, பச்சை மிள காயை சேர்த்து விழுதாக அரைக்க வும். கெட்டித் தயிருடன் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள், சர்க்கரை, கடலை மாவு சேர்த்து நன்கு கரைக்க வும். வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, கறிவேப்பிலை, சீரகம் தாளித்து, கரைத்த தயிர் கலவை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, சுத்தம் செய்த கொத்தமல்லித் தழையை சேர்க்கவும்.

சப்பாத்தி, பராத்தா வகைகளுக்கு இதை சைட் டிஷ் ஆக பரிமாறலாம்.

  ㋡ *ஒடிசா சுகர் பிஸ்கட்*

தேவையானவை:
 அரிசி – ஒரு கப், சர்க்கரை – அரை கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:
 அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை  வடியவிட்டு நிழலில் உலர்த்தவும். லேசாக ஈரம் இருக்கும்போது இந்த அரிசியை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து நன்கு பிசையவும் (தண்ணீர் விடக்கூடாது).

காற்றுப்புகாத டப்பாவில் பிசைந்த மாவை நன்கு அழுத்தி அழுத்தி போட்டு, எட்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, மாவை எடுத்து ஒரு தட்டில் கொட்டி, மீண்டும் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கி, வடைகள் போல தட்டி… கடாயில் எண்ணெயைக் காய வைத்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  ㋡ *ஹூப்ளி ஹாட் அண்ட் ஸ்வீட் தோசை*

தேவையானவை:
தோசை மாவு – ஒரு கப், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், தனியா, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, வெந்தயம் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல், வெல்லம் – தலா கால் கப், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
 கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைக்கவும்.

வெல்லத்தைப் பொடித்து, நீரில் கரைத்து, கொதிக்கவிட்டு வடிகட்டவும். தோசை மாவுடன் வெல்லக் கரைசல், அரைத்து வைத்த விழுது சேர்த்துக் கலக்கி, தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

  ㋡ *நெல்லை உக்காரை*

தேவையானவை:
கடலைப்பருப்பு – ஒரு கப், துவரம்பருப்பு – 4 டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு கப், நெய் – 5 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, முந்திரி – 10.

செய்முறை:
 பருப்பு வகைகளை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து… ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு, நீரை வடித்து விட்டு நிழலில் உலர்த்தி காயவிட்டு, மிக்ஸியில் போட்டு ரவை போல பொடிக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீருடன் வெல்லத்தை சேர்த்து, கரைய விட்டு வடிகட்டவும். இந்த வெல்லக் கரைசலுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு தக்காளி பதத்தில் பாகு காய்ச்சவும். இதனுடன் பருப்பு ரவையை சேர்த்து கரண்டி காம்பால் கிளறவும்.நெய்யில் வறுத்த முந்திரியை இந்த பருப்பு கலவையுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

நெல்லையில் தீபாவளி சமயத்தில் இதைச் செய்வார்கள்.

  ㋡ *மராட்டி கேப்சிகம் ரைஸ்*

தேவையானவை:
அரிசி – ஒரு கப், பச்சைப் பட்டாணி – அரை கப், குடமிளகாய், தக்காளி – தலா 2,  லவங்கம், ஏலக்காய், சீரகம் – தாளிக்கத் தேவையான அளவு, காய்ந்த மிளகாய்  – 5, நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
அரிசியுடன், பச்சைப் பட்டாணி சேர்த்து வேகவிடவும். குட மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் நெய்யை காய விட்டு… லவங்கம், ஏலக்காய், சீரகம், காய்ந்த மிளகாய் தாளித்து, நறுக்கிய தக்காளி, குடமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு வடித்த சாதக் கலவையை இதனுடன் சேர்த்துக் கிளறி இறக்கினால்… மராட்டி கேப்சிகம் ரைஸ் ரெடி!

  ㋡ *உடுப்பி கொத்சு*

தேவையானவை:
 கேரட், பீன்ஸ், பரங்கி துண்டுகள் சேர்த்து – ஒரு கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), கெட்டியான புளிக் கரைசல் – 2 டீஸ்பூன், வெல்லம் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க:
துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், சீரகம், எள் – தலா ஒரு டீஸ்பூன், வறுத்த தேங்காய் துரு வல் - 5 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4.

செய்முறை:
 துவரம்பருப்பு, சீரகம், எள் மூன்றையும் தனித்தனியாக வறுத்து… நறுக்கிய பச்சை மிளகாய், வறுத்த தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்கறி துண்டுகளை வதக்கி, இதனுடன் தண்ணீர் சேர்த்து வேக வைத்து… புளிக்கரைசல், உப்பு, வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும் காய்கறி கலவையில் அரைத்து வைத்த விழுது, வெங்காயம் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.

  ㋡ *ஹைதராபாத் கத்திரிக்காய் கறி*

தேவையானவை:
 கத்திரிக்காய் – 10, வெந்தயக்கீரை – அரை கட்டு, வெங்காயம் – 2,  கடுகு, சீரகம், கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு, வறுத்த வேர்க்கடலை – கால் கப், காய்ந்த மிளகாய் – 6,  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெந்தயக்கீரையை சுத்தம் செய்யவும். வெங்காயம், கத்திரிக்காயை பொடியாக நறுக்கவும். வேர்க்கடலையுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து… வெங்காயம், கத்திரிக்காய், வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய் – வேர்க்கடலை பொடி,ள் உப்பு சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

  ㋡ *கேரளா புட்டு*

தேவையானவை:
 பச்சரிசி – ஒரு கப், பச்சைப் பயறு, தேங்காய் துருவல் – தலா கால் கப், நேந்திரன் வாழைப்பழம் – ஒன்று, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடிய விட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். நேந்திரன் வாழைப்பழத்தின் தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கவும். பச்சைப் பயறை வெறும் வாணலியில் வறுத்து வேகவிடவும்.

அரைத்த அரிசி மாவுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து சிறிதளவு வெந்நீர் தெளித்துப் பிசிறி, ஆவியில் வேகவிடவும். பிறகு, வெந்த மாவுடன் நேந்திரம்பழத் துண்டுகள், வெந்த பயறு சேர்த்துக்  கலந்து பரிமாறவும்.

மிகவும் ஹெல்தியான புட்டு இது!

  ㋡ *தர்மஸ்தலா ரைஸ் லட்டு*

தேவையானவை:
 புழுங்கல் அரிசி – ஒரு கப், வெல்லம் – கால் கப், தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை:
அரிசியைக் களைந்து வெயிலில் காய வைக்க வும். வெறும் வாணலியில் இந்த அரிசியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, ஆறிய பின் மிக்ஸியில் நைஸாக அரைத்து, சலிக்கவும். தேங் காய் துருவலுடன், வெல்லம் சேர்த்து அரைக்கவும். ஒரு அகலமான பாத்திரத் தில் சலித்த அரிசி மாவு, அரைத்த தேங் காய் – வெல்லம் விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பிசைந்து, லட்டுகளாக பிடிக்க வும்.

  ㋡ *மஹாராஷ்டிரா மல்லி வடி*

தேவையானவை:
 கடலை மாவு, கொத்தமல்லித் தழை – தலா ஒரு கப், கடுகு, சீரகம் – தாளிக்கத் தேவையான அளவு, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலையை பொடித்த தூள் – கால் கப், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
 வாணலியில் 2 டீஸ்பூன், எண்ணெயைக் காயவிட்டு கடுகு, சீரகம் தாளித்து… இஞ்சி – பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கி, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்க்கவும். கடலை மாவை நீரில் கெட்டியாக பேஸ்ட் போல் கரைத்து இதனுடன் சேர்த்து, வேர்க்கடலைத் தூள் போட்டு நன்கு கிளறவும். கடலை மாவு வெந்து பச்சை வாசனை போனதும் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய பின் துண்டுகள் போடவும். இந்த துண்டுகளை சூடான எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  ㋡ *செட்டிநாடு மசாலா பணியாரம்*

தேவையானவை:
  பச்சரிசி – ஒரு கப், உளுந்து – முக்கால் கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), கடுகு, கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு, கொத்தமல்லித் தழை – கால் கப், பச்சை மிளகாய் – 5, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
 அரிசி, உளுந்தை தனித்தனியாக ஒரு மணி ஊற வைக்கவும். வெங்காயம், கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கவும். முதலில் உளுந்துடன் பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் அதிகம் விடாமல்  கெட்டியாக அரைக்கவும். பிறகு, அரிசியை தனியாக கெட்டியாக அரைக்கவும்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவிட்டு கடுகு சேர்த்து, நன்கு வெடித்த பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த அரிசி மாவு, உளுந்து மாவு, வதக்கிய வெங்காய கலவை, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து, சற்று தளர்வாக பிசையவும். மாவை காய்ந்த எண்ணெயில் போண்டா போல கிள்ளி போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: கடுகு நன்கு வெடிக்காவிட்டால், பணியாரம் எண்ணெயில் போடும்போது வெடிக்கும். உளுந்துக்கு தண்ணீர் அதிகம் விட்டு அரைத்தால், எண்ணெயைக் குடிக்கும்.

  ㋡ *கூர்க் பென்னி கடுபு*

தேவையானவை:
அரிசி ரவை – ஒரு கப், வெண்ணெய் – 2 டீஸ்பூன்,  தேங்காய் துருவல் – கால் கப், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் – தாளிக்கத் தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு,

செய்முறை:
அடி கனமான வாணலியில் வெண்ணெயைக் காயவிட்டு… கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, மூன்று கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் அரிசி ரவை, தேங்காய் துருவல், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறவும். ரவை நன்கு வெந்த பின் இறக்கி ஆறவிடவும். இந்தக் கலவையை பந்து போல உருட்டி, ஆவியில் வேகவிட்டு எடுத்து பரிமாறவும். இதற்கு ஏதாவது ஒரு வகை சட்னி தொட்டு சாப்பிடலாம்.

குறிப்பு: பச்சரிசியை மிக்ஸியில் சின்ன ரவையாக உடைத்து பயன்படுத்த வும்.

  ㋡ *சேலம் மாங்காய் சட்னி*

தேவையானவை:
மாங்காய் – ஒன்று, தேங்காய் துருவல் – ஒரு மூடி, உளுத்தம்பருப்பு – 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6 (அல்லது விருப்பத்துக்கேற்ப), பெருங்காயத்தூள், கடுகு – தாளிக்க தேவையான அளவு, எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுக்கவும். மாங்காயைக் கழுவி கொட்டையை நீக்கிவிட்டு துண்டுகளாக்கவும். வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயுடன்… மாங்காய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, நீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.

இதை இட்லி, தோசைக்கு சைட் டிஷ் ஆக பரிமாறலாம்.

  ㋡ *சாத்தூர் சேவ்*

தேவையானவை:
அரிசி மாவு, கடலை மாவு – தலா ஒரு கப், எள், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத் தூள் – சிறிதளவு, மிளகாய்த் தூள் – 3 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:  அரிசி மாவு, கடலை மாவுடன்… எள், சீரகம், உப்பு, பெருங்காயத்தூள், மிள காய்தூள், காய்ச்சிய எண் ணெய் 4 டீஸ்பூன் சேர்த்துப் பிசிறவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசையவும். எண் ணெயைக் காய வைக்கவும். மாவை காராசேவ் கரண்டியில் போட்டு, சூடான எண்ணெயில் விழும்படி அழுத்தி தேய்க்கவும். பொன்னிற மானதும் எடுக்கவும். அல்லது, மாவை காராசேவ் அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்தும் எடுக்கலாம்.

 ㋡ *கன்னியாகுமரி கறுப்பு உளுந்து சாதம்*

தேவையானவை:
அரிசி – ஒரு கப், கறுப்பு உளுந்து, தேங்காய் துருவல் – தலா அரை கப், பூண்டு – 4 பல், சீரகம் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:  அரிசி, உளுந்தை களைந்து தட்டிய பூண்டு, சீரகம் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும்.

இதனுடன் உப்பு, தேங்காய் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறவும். இந்த சாதத்தை சூடாக தேங்காய் (அ) எள் துவையலுடன் பரிமாறவும்.

 நன்றி:- அவள் விகடன்