இந்த இஞ்சி புளியானது சாம்பார் சாதம், தயிர் சாதம், இட்லி மற்றும் தோசை போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும்.
*🍱தேவையான பொருட்கள்:*
இஞ்சி - 3/4 கப் (தோலுரித்து பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 7 (பொடியாக நறுக்கியது) வெந்தயம் - 1/4 டீஸ்பூன் புளி - பெரிய நெல்லிக்காய் அளவு வெல்லப் பாகு - 1 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு
*🥘 தாளிப்பதற்கு*
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் கடுகு - 3/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது வரமிளகாய் - 2
*🍴செய்முறை:*
முதலில் புளியை 3/4 கப் வெதுவெதுப்பான நீரில் போட்டு 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தைப் போட்டு லேசாக வறுத்து இறக்கி குளிர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும். கலவையானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைத்து, கலவை கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும். கலவையானது கெட்டியாகிவிட்டால், அதில வெல்லப் பாகு சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும். இறுதியில் அதில் வெந்தயப் பொடி சேர்த்து, 2 நிமிடம் அடுப்பில் வைத்து கிளறி இறக்கினால், இஞ்சி புளி ரெடி!!!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக