புதன், 23 ஆகஸ்ட், 2017

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - 30 வகை கொழுக்கட்டை



விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - 30 வகை கொழுக்கட்டை

'மோதகப் ப்ரியன்’ விநாயகப் பெருமானைப் போற்றி மகிழும் விநாயகர் சதுர்த்தி  திருநாளை, பொன்னாளாக கொண்டாட உதவும் வகையில், '30 வகை
கொழுக்கட்டை’களை வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் சீதா சம்பத்.
''ஆவியில் வேக வைப்பதால், கொழுக் கட்டை எளிதில் ஜீரணமாகும். எனவே, விருப்பப்படும் நாட்களில் எல்லாம் செய்து பரிமாற... பீட்ரூட் கொழுக்கட்டை, சேமியா கொழுக்கட்டை, ட்ரை ஃப்ரூட்ஸ் கொழுக் கட்டை என வெரைட்டியாக கொடுத் துள்ளேன்.
விநாயகர் அருளால் உங்கள் இல்லத்தில் எல்லா வளமும் நிறைந் திருக்கட்டும்'' என்று மனமார வாழ்த்தும் சீதாவின் ரெசிபிகளை, உள்ளத்தை கொள்ளை கொள்ளும் விதத்தில்  அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.



புரோட்டீன் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு  -  ஒரு கப், சோயா பீன்ஸ் - அரை கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை, தண்ணீர் - ஒன்றரை கப்,  எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோயா பீன்ஸை ஊற வைத்து, ரவை போல கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு மூன்றையும் சேர்த்து அரைத்து இதனுடன் கலக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து, பெருங்காயத்தூள் சேர்க்கவும். அத்துடன் அரைத்த சோயா பீன்ஸ் விழுது சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளி போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறவும். வெந்து உதிரியாகும் வரை கிளறி எடுக்கவும். இதுதான் பூரணம்.
கடாயில் தண்ணீர் விட்டு, சிறிதளவு உப்பு, ஒரு டீஸ் பூன் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். இதில் பச்சரிசி மாவு தூவி கட்டி இல்லாது கிளறி எடுக்கவும். ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி மாவில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து அதில் சோயா பூரணம் ஒரு டீஸ்பூன் அளவு வைத்து மூடி, கொழுக்கட்டை வடிவம் கொடுக்கவும். தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுத்தால்... புரோட்டீன் கொழுக்கட்டை தயார்.
குறிப்பு: சத்தான, புதுமையான இந்தக் கொழுகட்டை, எல்லோருக்கும் ஏற்றது. எளிதில் ஜீரணம் ஆகக் கூடியது.


பீட்ரூட் கொழுக்கட்டை

தேவையானவை: பீட்ரூட் துருவல், அரிசி மாவு - தலா ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10.
செய்முறை: அரிசி மாவை வெறும் கடாயில் வறுக்கவும். கடாயில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல்லத்தை கரையவிட்டு வடிகட்டவும். அரிசி மாவுடன் பீட்ரூட் துருவல், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு, நெய் விட்டு கலந்து... வடிகட்டிய வெல்லக் கரைசலை அதில் விட்டு, கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கலவையில் சிறிது சிறிதாக எடுத்து உருட்டி, லேசாக தட்டி, ஆவியில் வேக வைத்து எடுக் கவும். மேலே முந்திரிப்பருப்பை வைத்து அலங்கரிக்கவும்.


ஹெர்பல் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், கொத்தமல்லி இலை - ஒரு கப், புதினா - கால் கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - ஒன்றரை கப், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பச்சை மிளகாயை சுத்தம் செய்து ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் எலுமிச்சைச் சாறு விட்டு கலக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு உப்பு, சிறிதளவு எண்ணெய், அரைத்த விழுது ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும் (ஒரு கொதி போதுமானது). இதில் பச்சரிசி மாவு தூவி கட்டி இல்லாது கெட்டியாக கிளறி எடுத்து ஆறவிடவும். கையில் எண்ணெயை தடவிக் கொண்டு கலவையில் சிறிது எடுத்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்தால்... ஹெர்பல் கொழுக்கட்டை தயார்.
குறிப்பு: இது, நல்ல வாசனை யாகவும் ருசியாகவும் இருக்கும். பித்தத்தை தணிக்கும். பசியைத் தூண்டக்கூடியது.


பஞ்சரத்ன கொழுக்கட்டை

தேவையானவை: இட்லி அரிசி, துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 6, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லி - கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம் -  ஒரு சிட்டிகை, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பருப்புகளை சுத்தம் செய்து ஒன்றாக சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீர் வடித்து காய்ந்த மிளகாய், உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு கலக்கவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி விட்டு, அரைத்து எடுத்த கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி வைக்கவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, பெருங்காயம் தாளித்து, வேக வைத்த உருண்டைகளைப் போட்டு கலந்து எடுக்கவும்.


காரடையான் நோன்பு கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், காராமணி - கால் கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், தேங்காய் துண்டுகள் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - அரை டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: காராமணியை வெறும் கடாயில் வறுத்து வேகவிட்டு எடுக்கவும். அரிசி மாவை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து, மீண்டும் கொதிக்கவிடவும். இத்துடன் வேக வைத்த காராமணி, தேங்காய் துண்டுகள், உப்பு, ஏலக்காய்த் தூள், நெய் கலந்து... கொதிக்கும்போது அரிசி மாவை தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும் ஈர கையினால் கலவையை நன்கு பிசைந்து கலக்கவும். சிறிதளவு கலவை எடுத்து உருட்டி உள்ளங்கையில் வைத்து லேசாக தட்டி நடுவில் ஓட்டை போட்டு தயார் செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பு: இதற்கு தொட்டுக் கொள்ள ஃப்ரெஷ் வெண்ணெய் ஒரு டீஸ்பூன் வைத்து பரிமாறவும்.


ஏகாதசி கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி ரவை, தேங்காய் துருவல் - தலா ஒரு கப், வெல்லத்தூள் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: கடாயில் தண்ணீர், உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும். உடனே அரிசி ரவையைப் போட்டு கெட்டியாக கிளறி எடுத்து ஆறவிடவும். தேங்காய் துருவல், வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி ரவை கலவையில் இருந்து சிறிய கமலா ஆரஞ்சு அளவு எடுத்து உருட்டி, நடுவில் குழி செய்து 2 டீஸ்பூன் அளவு தேங்காய் கலவை வைத்து மூடி, வட்டமாக உருட்டவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பு: நம் முன்னோர்கள் ஏகாதசிக்கு இதை மட்டுமே ஒரு வேளை உணவாக எடுத்துக் கொண்டு விரதம் இருந்தனர். அதனால்தான் இந்தப் பெயர்!


சேமியா கொழுக்கட்டை

தேவையானவை: சேமியா - 200 கிராம், தேங்காய் - ஒன்று (துருவிக் கொள்ளவும்), காய்ச்சிய பால் - 2 கப், அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது), கடுகு, சீரகம், எள் - தலா அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேமியாவை வறுத்து, பாலில் 30 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், நறுக்கிய பச்சை மிள காய் ஆகியவற்றை வதக்கவும். தேங்காய் துருவல் சேர்த்து, தீயை நிறுத்திவிட்டு கலக்கவும். பாலில் ஊறிய சேமியா, உப்பு, அரிசி மாவு, எள்ளு, சீரகம் ஆகிய வற்றையும் அதில் கலக்கவும். கையினால் நன்கு  மசித்து கலந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.


பாஸ்தா மசாலா கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், தக்காளி - 2, வெங்காயம், குடமிளகாய், கேரட் - தலா ஒன்று, பாஸ்தா (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - அரை டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாஸ்தாவில் கொதிநீர் விட்டு 10 நிமிடம் ஊற வைத்து எடுக்கவும். அரிசி மாவை வெறும் கடாயில் வறுத்து... உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். அரிசி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய், கேரட் துண்டுகள், உப்பு, இஞ்சி -  பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, தண்ணீர் தெளித்து வேக வைக்கவும். வெந்து சேர்ந்தாற்போல் வந்ததும், பாஸ்தாவை அதில் சேர்த்து கலந்துவிடவும். ஆவியில் வேக வைத்த அரிசி மாவு உருண்டைகளை சேர்த்து, லேசாக கலக்கவும். நிறைவாக, தக்காளி சாஸ், புதினா, கொத்தமல்லி தூவி கலக்கினால்... பாஸ்தா மசாலா கொழுக்கட்டை தயார்.


சேவரி கொழுக்கட்டை

தேவையானவை: மிச்சமாகிப் போன சேவரி (ஓமப்பொடி, தேன்குழல், காராசேவு, காராபூந்தி போன்றவை) - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - ஒன்றரை கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: மிச்சமாகிப் போன ஓமப்பொடி, தேன்குழல், காராசேவு, காராபூந்தி எதுவாகிலும் ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் கொரகொரப்பாக தூள் செய்யவும். இதனுடன் மிளகுத் தூள் சேர்த்துக் கலந்தால்... பூரணம் தயார். கடாயில் தண் ணீர், உப்பு, எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். கொதி வந்ததும் அரிசி மாவு தூவி, கட்டி இல்லாது கிளறி எடுத்து ஆறவிடவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டி குழி செய்து,  பூரணம் ஒரு டீஸ்பூன் அளவு வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். இதை நினைத்த நேரத்தில் செய்து அசத்தலாம்.


டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், பேரீச்சம்பழம் (விதை நீக்கியது) - 10, முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 10, திராட்சை, வெல்லம் - தலா 50 கிராம், பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: கடாயில் தண்ணீர்,  உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு... அதில் அரிசி மாவு தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். இதுதான் மேல் மாவு. முந்திரி, பாதாம், பிஸ்தா, பொட்டுக்கடலையை மிக்ஸி யில் கொரகொரப்பாக தூள் செய்து எடுக்கவும். பேரீச்சம்பழம், திராட்சை, வெல்லம் சேர்த்து அரைத்து, பருப்பு தூள்களை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்தால்... பூரணம் தயார். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மேல் மாவில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து, ஒரு டீஸ்பூன் பூரணத்தை அதில்  வைத்து மூடி, வேண்டிய வடிவம் கொடுக்கவும், அப்படியே ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
குறிப்பு: திராட்சை, பேரீச்சம்பழத்தை வெந்நீரில் ஊற வைத்தும் அரைத்து எடுக்கலாம்.


ராகி கொழுக்கட்டை

தேவையானவை: ராகி (கேழ்வரகு) மாவு - 2 கப், அரிசி மாவு - ஒரு கப், பச்சை மிளகாய் - 4, வெங்காயம் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ராகி மாவு, அரிசி மாவை சேர்த்து வெறும் கடாயில் சூடுபட வறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும். வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு புரட்டவும். உப்பு சேர்த்துக் கிளறவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொதி வந்தவுடன் மாவு தூவி கிளறவும். கெட்டியானதும் இறக்கி ஆறவிடவும். ஈரக் கையினால் கலவையில் சிறிதளவு எடுத்து உருட்டி லேசாக தட்டி வைக்கவும். தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பு: இது எல்லோருக்கும் ஏற்றது. சுகர் பிராப்ளம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.



மின்ட் கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, புதினா - தலா அரை கப், பச்சை மிளகாய் - 4, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பொட்டுக்கடலை, புதினா, தேங்காய் துருவல், பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் 2 கப் தண்ணீர் விட்டு... உப்பு, எண்ணெய் சேர்த்துக் கலந்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் அரைத்து வைத்த விழுதை போட்டு கலக்கவும். உடன் அரிசி மாவை தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவை சிறுசிறு உருண்டைகளாக செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.


சோயா சங்ஸ் ஸ்வீட் கொழுக்கட்டை

தேவையானவை: சோயா சங்ஸ் (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - 20 அல்லது 25, பொடித்த வெல்லம் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், பச்சரிசி மாவு - ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை: சோயா சங்ஸை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து உதிர்த்து துளாக்கவும். கடாயில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல் லத்தை கரையவிட்டு வடிகட்டி, பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். தூளாக்கிய சோயா சங்ஸை இதில் போட்டு, ஏலக்காய்த்தூள் கலந்து, சிறிதளவு எண்ணெய் சேர்த்து, அடிபிடிக்காமல் கிளறி எடுக்கவும். இதுதான் பூரணம்.
கடாயில் தண்ணீர் விட்டு, உப்பு, கொஞ்சம் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். இதில் பச்சரிசி மாவைத் தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும் கட்டி இல்லாது பிசைந்து கொள்ளவும். மாவில் சிறிது எடுத்து உருட்டி கிண்ணம் போல் செய்து, தேவையான அளவு சோயா சங்ஸ் பூரணம் வைத்து மூடவும். தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.


கம்பு இனிப்பு கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு - 2 டீஸ்பூன், கம்பு  மாவு - ஒரு கப்,  தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - முக்கால் கப்.
செய்முறை: அரிசி மாவு, கம்பு மாவை வெறும் கடாயில் சேர்த்து சூடுபட வறுத்து, கலந்து எடுத்து வைக்கவும். வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். மாவுக் கலவையில் ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். இதில் வெல்லக் கரைசலை விட்டுக் கலந்து, சப்பாத்தி மாவு போல பிசையவும். கலவையில் சிறிது எடுத்து நீளவாட்டில் உருட்டவும். தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுக் கவும்.


கேபேஜ் கொழுக்கட்டை

தேவையானவை: முட்டைகோஸ் துருவல் - 2 கப், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு  - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4,  பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 2 கப், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு வறுத்து எடுக்கவும். அதே கடாயில் முட்டைகோஸ் துருவலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். ஆறியதும் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, புளி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். தண்ணீரை கொதிக்க வைத்து... உப்பு சேர்த்து, எண்ணெய் விட்டு, இதில் அரிசி மாவை தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவில் சிறிது எடுத்து உருட்டி தட்டையாக செய்து, அதில் 2 டீஸ்பூன் அளவு முட்டைகோஸ் பூரணம் வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.


உசிலி கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவை வெறும் கடாயில் வறுக்கவும். உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலக்கவும். சுடுநீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து சிறு உருண்டைகளாக செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். உளுத்தம் பருப்பை ஊற வைத்து, தண்ணீர் வடித்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, சிறிதளவு உளுத்தம்பருப்பு, பெருங்காயத் தூள் தாளிக்கவும். இஞ்சித் துண்டுகள், பச்சை மிளகாய் துண்டுகள், கறிவேப்பிலை போட்டு கிளறவும். அதனுடன் அரைத்த உளுத்தம்பருப்பு விழுதை சேர்த்துக் கிளறவும். வெந்து உதிரியாக வந்ததும், வேக வைத்த கொழுக்கடைகளை சேர்க்கவும். லேசாக கலந்து இறக்கவும்.


ஸ்பிரவுட் கொழுக்கட்டை

தேவையானவை: முளைகட்டிய பயறு - ஒரு கப், பச்சை மிளகாய்  - 3 (நறுக்கவும்), தேங்காய் துருவல் - கால் கப், அரிசி மாவு - ஒரு கப், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து... முளைகட்டிய பயறு, உப்பு, பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவிடவும். பயறு வெந்ததும் தேங்காய் துருவலை கலந்து எடுக்கவும்.  கடாயில் தண்ணீர் விட்டு சூடாக்கி... உப்பு, எண்ணெய் சேர்த்து, கொதித்து வரும்போது அரிசி மாவை சேர்த்து கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும் நன்கு பிசைந்து கொள்ளவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மாவில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, சின்ன கிண்ணம் போல் செய்து, பயறு கலவையை உள்ளே வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுத்தால்... ஸ்பிரவுட் கொழுக்கட்டை தயார்.


மணி பேக் கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், பட்டாணி, வெல்லம் - தலா அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன், எண் ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: பட்டாணியை முதல் நாளே ஊற வைத்து, அடுத்த நாள் வேக வைத்து மசித்துக் கொள்ளவும். கடாயில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு... உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும். அதில் அரிசி மாவு தூவி, கட்டி இல்லாமல் கெட்டியாக கிளறி எடுக்கவும். கடாயில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல்லத்தை கரையவிட்டு வடிகட்டி எடுக்கவும். அதில் பட்டாணி விழுது, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அடிபிடிக்காமல் கிளறி எடுக்கவும். இதுதான் பூரணம். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி மாவு கலவையில் இருந்து சிறிது எடுத்து உருட்டி கிண்ணம் போல் செய்து, அதனுள் பூரணத்தை கொஞ்சம் வைத்து, பை போல் சுருக்கி ஒட்டிவிடவும். அப்படியே ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
சுருக்குப் பை வடிவத்தில், பார்க்க அழகாக இருக்கும் இது, சுவையிலும் சூப்பர்தான்!


முத்து கொழுக்கட்டை

தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், மைதா - 2 டீஸ்பூன், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,  எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை தேவையான அளவு சுடுநீர் விட்டு 2 மணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறியதும் அழுத்தி பிசையவும். அத்துடன் மைதா, உப்பு, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது சேர்த்து... கறிவேப்பிலை, கொத்தமல்லி  கிள்ளி போட்டு, மிளகாய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து, எண்ணெய் விட்டுக் கலந்து பிசைந்து, சிறு உருண்டைகளாக தயார் செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுத்தால்.... முத்து கொழுக்கட்டை தயார்.



பூந்தி கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், இனிப்பு பூந்தி - ஒரு கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: கடாயில் ஒன்றரை கப் தண்ணீர், ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். கொதி வந்ததும் அரிசி மாவைக் கொட்டி, கட்டியில்லாமல் கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும், கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, பெரிய நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து உருட்டி கிண்ணம் போல செய்து, அதனுள் 2 டீஸ்பூன் அளவு பூந்தி வைத்து மூடி, கொழுக்கட்டை வடிவம் கொடுக்கவும். தயாரித்த வற்றை ஆவியில் வேக வைத்து  எடுக்கவும்.


கருப்பட்டி கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், கருப்பட்டி - அரை கப், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை மாவு - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ் பூன், தண்ணீர் - ஒன்றே கால் கப், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: கடாயில் தண்ணீர் விட்டு... உப்பு சேர்த்து, சிறிதளவு எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். கொதித்து வரும்போது அரிசி மாவு தூவி, கட்டி இல்லாது கெட்டியாகும் வரை கிளறி எடுத்து ஆறவிடவும். கடாயில் கருப்பட்டியுடன் தண்ணீர் சேர்த்து சூடாக்கி, கருப்பட்டியை கரையவிட்டு வடிகட்டி, இத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பொட்டுக்கடலை மாவு சேர்த்து பூரணமாக கிளறி எடுக்கவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம்போல் செய்து, பூரணம் கொஞ்சம் வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.


வெஜிடபிள் கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு -  ஒரு கப், முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல் - தலா கால் கப்,  கொத்தமல்லி இலை - கால் கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் தேவையான அளவு தண்ணீர் விட்டு.. சிறிதளவு உப்பு சேர்த்து, கொஞ்சம் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும்.  அதில் அரிசி மாவு தூவி கட்டி இல்லாது கெட்டியாக கிளறி எடுத்து வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு, சூடானதும் முட்டைகோஸ், கேரட் துருவல், கொத்தமல்லி இலை, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சுருள கிளறவும். மிளகுத்தூள் கலந்து இறக்கவும். இதுதான் பூரணம். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு  அரிசி மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து அதில் பூரணம் வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.


தினை மாவு  பனைவெல்ல கொழுக்கட்டை

தேவையானவை: தினை மாவு (சூப்பர் மார்க்கெட், காதி கடைகளில் கிடைக்கும்), பனைவெல்லம் - தலா ஒரு கப், தேங்காய் துண்டுகள் - அரை கப், ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தினை மாவை வெறும் கடாயில் வறுத்து... உப்பு, சிறிதளவு எண்ணெய் விட்டு கலந்து, கொதி நீர் தெளித்து பிசிறி மூடி வைக்கவும். இதை 10 நிமிடம் ஊறவிடவும். பனைவெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி எடுக்கவும். இத்துடன் சுக்குப் பொடி, ஏலக்காய்த்தூள், தேங்காய் துண்டுகள் சேர்த்து சுடவைத்து, கொதித்து வரும்போது பிசிறி வைத்த மாவை கொட்டி கலக்கவும். கெட்டியாக வந்ததும் இறக்கவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.


கார கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப்,  கறிவேப்பிலை - சிறிதளவு, இட்லி மிளகாய்ப் பொடி, தேங்காய் துருவல் - தலா 4 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் தண்ணீர் விட்டு, சிறிதளவு எண்ணெய், உப்பு சேர்த்து, அடுப்பில் வைக்கவும். கொதி வந்ததும் கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும். தேங்காய் துருவல், இட்லி மிளகாய்ப் பொடி, அரிசி மாவு தூவி கெட்டியாக கிளறவும். தீயை நிறுத்திவிட்டு, ஆறவிடவும். கையில் எண்ணெயை தடவிக் கொண்டு, பெரிய நெல்லிக்காய் அளவு அரிசி மாவு கலவை எடுத்து உருட்டி தயார் செய்யவும். அவற்றை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.


இஞ்சி இனிப்பு கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப்,  நறுக்கிய இஞ்சி, பொடித்த வெல்லம் -தலா அரை கப், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், எண்ணெய், நெய்  - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் தண்ணீர், உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து சுடவைத்து, கொதித்து வரும்போது அரிசி மாவு தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். கடாயில் நீர் விட்டு சூடாக்கி வெல்லத்தை கரையவிட்டு வடிகட்டி எடுக்கவும். இஞ்சித் துண்டுகள், பொட்டுக்கடலையை சேர்த்து அரைத்து, வெல்லக் கரைசலில் சேர்த்து, நெய் விட்டு பூரணமாக கிளறி எடுக்கவும். அரிசி மாவு கலவையில் கொஞ்சம் எடுத்து உருட்டி, குழி செய்து, சிறிது இஞ்சி பூரணம் வைத்து மூடி உருட்டி, லேசாக அழுத்தவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
இது ஜீரணத்துக்கு மிகவும் நல்லது.


கம்பு மசாலா கொழுக்கட்டை

தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப்,  வேக வைத்த உருளைக்கிழங்கு - ஒன்று, வெங்காயம் -  ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), இஞ்சி - பூண்டு விழுது -அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால்  டீஸ்பூன், தண்ணீர் - ஒன்றே கால் கப், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் தண்ணீர், உப்பு, ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து சுட வைத்து,  கொதித்து வரும்போது கம்பு மாவை சேர்த்து, கட்டி இல்லாமல் கிளறி எடுத்து வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும். இத்துடன் வெங்காய துண்டுகள், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு கலந்து பிசைந்து சிறு உருண்டைகள் செய்து கொள்ளவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, கம்பு மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டி குழித்து, மசாலா கலவை உருண்டையை  அதில் வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.


கோதுமை மாவு கொழுக்கட்டை

தேவையானவை: கோதுமை மாவு - அரை கப்,  தேங்காய் துருவல் - 2 கப், வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு சேர்த்துக் கலக்கி, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல கெட்டியாக பிசையவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு... தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து பூரணமாக கிளறி எடுக்கவும். பிசைந்து வைத்த கோதுமை மாவில் சிறிது எடுத்து உருட்டி கிண்ணம் போல் செய்து, பூரணம் கொஞ்சம் வைத்து மூடி, கொழுக்கட்டை வடிவம் கொடுக்கவும். சூடான எண்ணெயில் 4, 5 கொழுக்கட்டைகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: ஹோமம் செய்யும் நாளில் இதனை தயாரிப்பது வழக்கம்.


கோசுமல்லி கொழுக்கட்டை

தேவையானவை: மைதா - ஒரு கப், பாசிப்பருப்பு, கேரட் துருவல், தேங்காய் துருவல், கொத்தமல்லி இலை - தலா 4 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவில் உப்பு, எண்ணெய் விட்டு கலந்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை ஊற வைத்து தண்ணீர் வடித்து எடுக்கவும். இத்துடன் கேரட் துருவல், தேங்காய் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். மைதா மாவில் பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து, சப்பாத்தி போல இட்டு, அதனுள் ஒரு டீஸ்பூன் அளவு பருப்பு - காய் கலவை வைத்து மூடி ஒட்டிவிடவும். அப்படியே ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.


உண்டிலி பாயச கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப்,  வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், சாரைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், பால் - 500 மில்லி, உப்பு -  ஒரு சிட்டிகை.
செய்முறை: அரிசி மாவில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, சிட்டிகை உப்பு போட்டு கலக்கவும். அதில்  கொதி நீர் விட்டு, சப்பாத்தி மாவு போல் பிசைந்து, மணி மணியாக உருட்டவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து, பாலில் கலந்து கொதிக்கவிடவும். பால் கலவை பாதியாக குறுகியதும், ஒரு டீஸ்பூன் நெய்யில் சாரைப்பருப்பை வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். உருட்டி, வேக வைத்த கொழுக்கட்டைகளை, பால் கலவை சேர்த்து, கொதி வந்ததும் இறக்கவும்.


டேட்ஸ் அண்ட் ஓட்ஸ் கொழுக்கட்டை

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பேரீச்சம்பழம் - 10 (விதை நீக்கவும்), பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், வெல்லம் - பெரிய எலுமிச்சம் பழ அளவு, அரிசி மாவு - ஒரு கப், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: ஓட்ஸ், பொட்டுக்கடலையை மிக்ஸியில் தூளாக்கவும்.. கடாயில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடாக்கி... வெல்லத்தை கரைய விட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து, ஓட்ஸ் - பொட்டுக்கடலை பொடி சேர்த்து கெட்டியாக கிளறி எடுத்தால்... பூரணம் தயார். பேரீச்சம்பழத்தை நடுவில் நீள வாட்டில் பிளந்து பூரணத்தை ஸ்டப் செய்து கொள்ளவும். கடாயில் தண்ணீர், உப்பு சேர்த்து சுட வைத்து, கொதித்து வரும்போது அரிசி மாவை தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். பெரிய நெல்லிக்காய் அளவு மாவுக் கலவை எடுத்து, உருட்டி குழி செய்து, அதில் டேட்ஸ் - ஓட்ஸ்  பூரணத்தை வைத்து மூடவும் அப்படியே ஆவியில் வேக வைத்து எடுத்தால்... புதுமையான, சத்தான டேட்ஸ் அண்ட் ஓட்ஸ் கொழுக்கட்டை தயார்.
நன்றி விகடன்.பத்மினி.உசேன்.

30 வகை கொழுக்கட்டை


30 வகை கொழுக்கட்டை
பனை ஓலை கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி – முக்கால் கிலோ, கருப்பட்டி – அரை கிலோ, ஏலக்காய் – 10, தேங்காய் – ஒரு
மூடி, பனை (அ) தென்னை ஓலை – 1.
செய்முறை: பச்சரிசியை ஊற வைத்து, களைந்து நிழலில் உலர்த்தி, மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். கடாயை காய வைத்து, துருவிய தேங்காயை ஈரம் போக வறுத்துக் கொள்ளவும்.
அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவலைப் போடவும். கருப்பட்டியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து இளம்பாகு பதத்தில் காய்ச்சவும். இறக்கி வடிகட்டி, மாவுடன் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
ஓலையை அரை அடி நீளத்துக்கு நறுக்கி, பிசைந்த மாவை அதன் நடுவில் வைத்து, இட்லி தட்டில் வேக விட்டு எடுக்கவும்.
————————————————————————–
——
பால் கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, பால் – அரை லிட்டர், சர்க்கரை – ஒன்றரை கப், ஏலக்காய் – 6,
முந்திரி பருப்பு – 10, நெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை: பச்சரிசியை ஒன்றரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி நிழலில் உலர்த்தி, மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாவைக் கொட்டி தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொழுக்கட்டை பிடிக்கும் பதத்தில் பிசைந்து, அதை சீடை அளவில் சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் உருட்டிய கொழுக்கட்டைகளைப் போடவும். வெந்ததும் வடித்துக் கொள்ளவும். வடித்த தண்ணீரில் பாலை சேர்த்துக் காய்ச்சி, சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்தவுடன் வேக வைத்த கொழுக்கட்டை, பொடித்த ஏலக்காயை சேர்க்கவும்.
முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
————————————————————————–
——
பச்சரிசி சர்க்கரை கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, தேங்காய் – ஒரு மூடி, சர்க்கரை – ஒன்றரை கப், ஏலக்காய் – 3,
பச்சை கற்பூரம் – சிறிதளவு.
செய்முறை: பச்சரிசியை ஒன்றரை மணி நேரம் ஊறவைத்து, வடிகட்டி நிழலில் உலர்த்தி, மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி லேசாக வறுத்துக் கொள்ளவும். ஏலக்காய், பச்சை கற்பூரத்தைப் பொடித்துக் கொள்ளவும்.
பச்சரிசி மாவில் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலம், பச்சை கற்பூரத்தை சேர்த்து, தண்ணீர் தெளித்து பதமாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டுகளில் பரப்பி வேக வைக்கவும்.
வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
————————————————————————–
——
பச்சரிசி கருப்பட்டி கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, தேங்காய் – ஒரு மூடி, கருப்பட்டி – ஒன்றரை கப், ஏலக்காய் – 6,
எள் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பச்சரிசியை நன்றாக ஊறவைத்து களைந்து, நிழலில் உலர்த்தி மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். கருப்பட்டியை இளம்பாகு பதத்தில் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி லேசாக
வறுத்துக் கொள்ளவும். மாவுடன் பொடித்த ஏலக்காய், எள், கருப்பட்டிப் பாகு, தேங்காய் துருவலை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் பரப்பி வேக வைக்கவும்.
வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
————————————————————————–
——
புழுங்கலரிசி தேங்காய் கொழுக்கட்டை
தேவையானவை: புழுங்கலரிசி – அரை கிலோ, தேங்காய் – ஒரு மூடி, சர்க்கரை – ஒன்றரை கப், ஏலக்காய் – 6.
செய்முறை: புழுங்கலரிசியை கல், தூசு நீக்கி மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வறுத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன், ஏலக்காய், தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து தண்ணீர் விட்டு பிசையவும். கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வேக
வைத்து எடுக்கவும்.
————————————————————————–
——
கோதுமை சர்க்கரை கொழுக்கட்டை
தேவையானவை: கோதுமை – அரை கிலோ, தேங்காய் – ஒரு மூடி, சர்க்கரை – ஒன்றரை கப், ஏலக்காய் – 6.
செய்முறை: கோதுமையை லேசாக வறுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி, வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன் வறுத்த தேங்காய், சர்க்கரை, பொடித்த ஏலக்காய், தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் அடுக்கி வேக வைக்கவும். வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
————————————————————————–
——
தேங்காய் ரவை கொழுக்கட்டை
தேவையானவை: ரவை, சர்க்கரை – தலா ஒன்றரை கப், அரிசி மாவு – ஒரு கப், தேங்காய் – ஒரு மூடி, ஏலக்காய் – 6, வெனிலா எசன்ஸ் – 2 துளி.
செய்முறை: தேங்காயை துருவி வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். ரவையுடன் அரிசி மாவு, சர்க்கரை, பொடித்த ஏலக்காய், தேங்காய் துருவல், வெனிலா எசன்ஸ் சேர்த்து வெந்நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்.
————————————————————————–
——
தேங்காய் பூந்தி கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, இனிப்பு பூந்தி – ஒரு கப், சர்க்கரை – அரை கப், தேங்காய் – ஒரு மூடி, ஏலக்காய் – 6.
செய்முறை: பச்சரிசியை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வறுக்கவும்.
ஏலக்காயைப் பொடிக்கவும். இவற்றை பூந்தி, சர்க்கரையுடன் சேர்த்து, லேசாக மசித்துக் கொள்ளவும்.
அரைத்த மாவில் தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை மாவு பக்குவத்தில் பிசைந்து மெல்லிய கிண்ணம்போல் செய்து கொள்ளவும். அதில் மசித்து வைத்துள்ள பூந்திக் கலவையில் சிறிது போட்டு மூடவும். பிறகு இட்லி தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்
————————————————————————–
——
வெல்ல மோதக கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, வெல்லம் – ஒன்றரை கப், ஏலக்காய் – 6, தேங்காய் – 1.
செய்முறை: பச்சரியை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வறுத்துக் கொள்ளவும்.
ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். வெல்லத்தை இளம் பாகாய்க் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன், ஏலக்காய் பொடி, வெல்லப்பாகு சேர்த்து உருண்டை உருட்டும் பதத்தில் கலந்து கொள்ளவும்.
மாவுடன் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, மெல்லியதாக தட்டிக் கொள்ளவும். செய்து வைத்துள்ள தேங்காய் பூரணத்தில் சிறிது எடுத்து மாவினுள் வைத்து ஓரங்களை மூடி இட்லி தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.
————————————————————————–
——
பழ கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி மாவு – ஒன்றரை கப், உப்பு – ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் – அரை கப், துருவிய தேங்காய் – அரை மூடி, பலாச்சுளை – 15, ஆப்பிள், மாம்பழம், பச்சை
வாழைப்பழம் – தலா 1, டால்டா – 2 டீஸ்பூன்.
செய்முறை: பலாச்சுளையின் கொட்டையை நீக்கி பொடியாக நறுக்கவும். வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழத்தின் தோலை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பழங்களை வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். ஒரு கொதி வந்ததும், துருவிய தேங்காயையும், பொடி செய்த வெல்லத்தையும் போட்டு தண்ணீர் வற்றும் வரை மிதமான தீயில் கிளறிக் கொண்டேயிருக்கவும். பிறகு டால்டாவை விட்டு சுருளக் கிளறி, இறக்கி ஆற விடவும். இதை சிறிய கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஒரு
தட்டில் வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீரை அளவாக வைத்து கொதிக்க விட்டு அதில் எண்ணெய், உப்பு, சேர்க்கவும். பிறகு அரிசி மாவை இதில் கொட்டி கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும். சற்று ஆறியதும் கிண்ணம் போல் செய்து, அதன் நடுவில் பழக்கலவையை வைத்து மூடவும். இப்படி எல்லாவற்றையும் செய்த பிறகு இட்லி தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.
————————————————————————–
——
பேரீச்சம்பழ கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி மாவு – அரை கிலோ, கொட்டை நீக்கி பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழ துண்டுகள் – ஒரு கப், முந்திரி துண்டுகள் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு கப், நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு,
செய்முறை: கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு, சூடானதும் முந்திரி, பேரீச்சம்பழத்தைப் போட்டு வதக்கவும். ஒரு நிமிடம் கழித்து வெல்லத்தூள் சேர்த்து கிளறி, பூரணம் பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி வைக்கவும்.
கொதிக்கும் தண்ணீரில் அரிசிமாவு, உப்பு சேர்த்துக் கிளறி வேகவிட்டு இறக்கவும். வெந்த மாவில் சிறிது எடுத்து கிண்ணம் போல் செய்து பேரீச்சம் பழ பூரணத்தை வைத்து மூடி, இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்.
இரும்பு சத்து நிறைந்த சத்தான கொழுக்கட்டை இது.
————————————————————————–
——
கம்பரிசி இனிப்பு கொழுக்கட்டை
தேவையானவை: கம்பரிசி – அரை கிலோ, தேங்காய் – ஒரு மூடி, கருப்பட்டி – அரை கிலோ, ஏலக்காய் – 6.
செய்முறை: கம்பரிசியை லேசாக வறுத்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வறுத்துக் கொள்ளவும். கருப்பட்டியை இளம்பாகு பதத்தில் காய்ச்சி வடிகட்டவும். பொடித்த ஏலக்காய், தேங்காய் துருவல், கருப்பட்டி பாகை மாவுடன் சேர்த்து (வறுத்த மாவு
என்பதால், தண்ணீர் அதிகம் தேவைப்படும். பாகுடன் சிறிது வெந்நீர் சேர்த்துக் கொள்ளலாம்) கொழுக்கட்டை பதத்தில் பிசையவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
————————————————————————–
——
ரவை கொழுக்கட்டை
தேவையானவை: ரவை – ஒன்றரை கப், அரிசி மாவு – ஒரு கப், கடலைப் பருப்பு – கால் கப், கேரட் – 2 (துருவிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் – 4 (மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்), உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடலைப் பருப்பை முக்கால் பதத்தில் வேக வைத்துக் கொள்ளவும். ரவையுடன் அரிசிமாவு, வேக வைத்த கடலைப் பருப்பு, துருவிய கேரட், அரைத்த மிளகாய், உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு நன்றாகப் பிசையவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.
————————————————————————–
——
உப்பில்லா கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி மாவு – அரை கிலோ, நெய் – 25 கிராம், தேங்காய் – அரை மூடி.
செய்முறை: பச்சரிசி மாவில் தண்ணீர் விட்டு, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். ஈரத் துணியில் வைத்து சிறு தட்டைகளாக தட்டிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். தட்டி
வைத்துள்ள கொழுக்கட்டைகளை ஒவ்வொன்றாக கொதி நீரில் போடவும். வெந்ததும் தண்ணீரை வடிகட்டி கொழுக்கட்டைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு நெய், தேங்காய் துருவல் கலந்துபிசறி சாப்பிடவும்.
————————————————————————–
——
பருப்பு கொழுக்கட்டை கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, கடலைப் பருப்பு – 100 கிராம், வெல்லம் – 300 கிராம், தேங்காய் – ஒரு மூடி, ஏலக்காய் – 6.
செய்முறை: பச்சரிசியை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி வறுத்துக் கொள்ளவும், ஏலக்காயை மிக்ஸியில் ஓன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும். வெல்லத்தை இளம்பாகாகக்
காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பிறகு இதில் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி, கடலைப் பருப்பு சேர்த்து உருட்டும் பதத்தில் செய்து கொள்ளவும்.
பச்சரிசி மாவைப் பிசைந்து மெல்லியதாக கிண்ணம் போல் செய்து, அதில் பூரணத்தை வைத்து ஓரங்களை மூடி, இட்லித் தட்டில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
————————————————————————–
——
அவல் கார கொழுக்கட்டை
தேவையானவை: அவல் – கால் கிலோ, பச்சரிசி மாவு – அரை கிலோ, உப்பு – தேவையான அளவு, பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் – 3, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி (பொடியாக
நறுக்கிக் கொள்ளவும்) – சிறிதளவு, துருவிய கேரட் – ஒரு கப், கடுகு, உளுத்தம் பருப்பு, நல்லெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: அவலை தண்ணீரில் நன்றாகக் களைந்து பிழிந்து வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அவல், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, கேரட், உப்பு சேர்த்து வதக்கவும். கார பூரணம் ரெடி!
கொதிக்கும் தண்ணீரில் பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து கட்டியில்லாமல் மரக் கரண்டியால் கிளறவும். வெந்ததும் இறக்கி, மாவை கிண்ணம் போல் செய்து, அதில் அவல் பூரணத்தை வைத்து மூடி, இட்லித் தட்டில் வேக வைத்து இறக்கிப் பரிமாறவும்.
நீர் கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், கெட்டியான தேங்காய்ப் பால் – அரை கப், இரண்டாவது தேங்காய்ப் பால் – 2 கப், உப்பு – தேவையான அளவு, சீரகம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை: 2 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதித்த தண்ணீரை சிறிது சிறிதாக மாவில் விட்டு, சிறிது உப்பு சேர்த்து, கெட்டியாகக் கிளறவும்.
கிளறிய மாவை நீளவாக்கில் உருட்டிக் கொள்ளவும். இரண்டாவது தேங்காய்ப் பாலை அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். கொதிக்கும் பாலில் சீரகம், உருண்டைகளைப் போட்டு மிதமான தீயில் 8 நிமிடம் வேகவிடவும். நன்கு வெந்ததும் முதல் பாலை விட்டு கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
————————————————————————–
——
புதினா கொழுக்கட்டை
தேவையானவை: புதினா – ஒரு கட்டு, பச்சை மிளகாய், தக்காளி – தலா 1, பச்சரிசி மாவு – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 3, சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: புதினாவை ஆய்ந்து, கழுவி சுத்தம் செய்து, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தண்ணீரை நன்றாகக்
கொதிக்க வைத்து அதில் உப்பு, அரைத்த புதினா விழுது, வெங்காயம், சீரகம் சேர்த்து, மாவை சிறிது சிறிதாகப் போட்டுக் கட்டியில்லாமல் கிளறி, வெந்ததும் இறக்கவும்.
இந்த மாவை சிறிது எடுத்து உள்ளங்கையில் வைத்து 4 விரல்களும் பதியும் படி மூடி திறக்கவும். எல்லா மாவையும் இதுபோலவே பிடி கொழுக்கட்டைகளாக செய்து இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.
————————————————————————–
——
கோவா கொழுக்கட்டை
தேவையானவை: மைதா மாவு – ஒரு கப், சர்க்கரை – அரை கப், பால்கோவா – கால் கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, குங்குமப்பூ – சிறிது, பால் – அரை லிட்டர்.
செய்முறை: மைதாவை சலித்து உப்பு, தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பாலில் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சி, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பிசைந்த மாவில் சிறிது எடுத்து கிண்ணம்
போல் செய்து, அதில் சிறிது பால்கோவாவை வைத்து சமோசா வடிவில் மடித்து ஓரங்களை ஒட்டவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கொழுக்கட்டைகளைப் போட்டு பொரித்தெடுக்கவும்.
இந்த கொழுக்கட்டைகளை காய்ச்சிய பாலில் போட்டுப் பரிமாறவும்.
————————————————————————–
——
இனிப்பு அவல் கொழுக்கட்டை
தேவையானவை: அவல் – கால் கிலோ, தேங்காய் துருவல் – ஒரு கப், அரிசி மாவு – அரை கிலோ, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு, சர்க்கரை – தேவையான அளவு.
செய்முறை: அவலை சுத்தம் செய்து தண்ணீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து வடித்து, தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் கலந்து வைத்துக் கொள்ளவும்.
தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, அரிசிமாவைப் போட்டு கட்டியில்லாமல் கிளறவும். இந்த மாவில் கிண்ணம் போல் செய்து, அதனுள் அவல் பூரணத்தை வைத்து மூடி,
இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.
————————————————————————–
——
வெஜிடபிள் கொழுக்கட்டை
தேவையானவை: உருளைக்கிழங்கு – 4, கேரட், பீட்ரூட், நூல்கோல் – தலா 1, முட்டைகோஸ், பீன்ஸ் – தலா 50 கிராம், காலிஃபிளவர் – சில துண்டுகள், இஞ்சி – ஒரு துண்டு, பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் –
8, எலுமிச்சம்பழம் – 1, நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு.
செய்முறை: எல்லா காய்களையும் நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி தண்ணீர் விடாமல் ஆவியில் வேக வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு
தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் காய்கறி கலவை, சிறிது உப்பு சேர்க்கவும். கடலை மாவை சிறிதளவு தண்ணீரில்
கரைத்து இதில் விடவும். கொதித்து கெட்டியாக உருட்டும் பதத்தில் வந்ததும் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து விடவும். காய்கறி பூரணம் ரெடி!
கொதிக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய், அரிசி மாவு, உப்பு சேர்த்து, கட்டியில்லாமல் நன்றாகக் கிளறவும். இந்த மாவில் சிறிது எடுத்து கிண்ணம் போல் செய்து, இதில் பூரணத்தை வைத்து மூடி, இட்லித்
தட்டில் வேக வைத்து எடுக்கவும்.
————————————————————————–
——
மிளகு கொழுக்கட்டை
தேவையானவை: புழுங்கலரிசி – அரை கிலோ, சிறிய தேங்காய் – 1, உப்பு – தேவையான அளவு, மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – கால் கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: புழுங்கலரிசியை 2 மணி நேரம் களைந்து ஊறவிடவும். ஊறியதும், தேங்காயை கீறிப் போட்டு உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். வெறும் கடாயில் மிளகை வறுத்து நைசாகப்
பொடித்துக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த மாவைப் போட்டு சுருளக் கிளறி, கையில் ஒட்டாத பதத்தில் இறக்கி ஆற விடவும். இந்த மாவில் நெல்லிக்காய் அளவு எடுத்து உருட்டி, இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும். கொழுக்கட்டையில் மிளகுத்தூள், நெய் சேர்த்து நன்கு பிரட்டி எடுத்துப் பரிமாறவும்.
————————————————————————–
——
பாசிப்பருப்பு மடக்கு கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு – அரை கிலோ, பாசிப்பருப்பு – கால் கிலோ, ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 கப், நாட்டுச் சர்க்கரை, உப்பு – தேவையான அளவு, முந்திரி பருப்பு – 10 கிராம்.
செய்முறை: பாசிப்பருப்பை வறுத்து முக்கால் பதத்தில் வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீரை வடித்து விட்டு நாட்டுச் சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரி துண்டுகளை சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
பூரணம் ரெடி!
அரிசி மாவில் வெந்நீர், உப்பு, ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துப் பிசையவும். மாவு கையில் ஒட்டாத பதம் வந்ததும் கிண்ணம் போல் செய்து, அதில் பூரணத்தை வைத்து ஓரங்களை மடித்து விட்டு, இட்லித் தட்டில் வேக
வைத்து எடுக்கவும்.
————————————————————————–
——
உருளைக்கிழங்கு கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு – ஒன்றரை கப், உருளைக்கிழங்கு – 200 கிராம், சீரகத்தூள் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 6 (மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்), உப்பு – தேவையான அளவு, பொடியாக
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும். அரிசி மாவுடன் பச்சை மிளகாய், வெந்த உருளைக்கிழங்கு, சீரகத்தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பிசையவும். இதில் சிறிது எடுத்து
கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.
————————————————————————–
——
சென்னா கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.
பூரணத்துக்கு: ஊற வைத்து வேக வைத்த சென்னா – அரை கப், பொடியாக நறுக்கிய தேங்காய், பொடியாகநறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மாங்காய் – அரை டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து, நிழலில் உலர்த்தி மிக்ஸியில் நைசாக அரைத்து சலித்துக் கொள்ளவும். ஒரு கப் (ஒரு கப் மாவுக்கு ஒரு கப் தண்ணீர் விகிதம்) தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். கொதிக்கும்போது ஒரு சிட்டிகை உப்பு, எண்ணெய் சேர்த்து, கொதித்ததும் மாவைத் தூவி, கட்டியில்லாமல் கிளறவும். பிறகு ஆற வைத்துப் பிசைந்து, ஈரத் துணியால் மூடி வைக்கவும்.
சென்னாவை ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்து, அதனுடன் மற்ற பொருட்களையும் கலந்து, பூரணமாக செய்து கொள்ளவும்.
பிசைந்த மாவில் சிறிது எடுத்து சிறிய கிண்ணம் போல் செய்து சென்னா பூரணத்தை நிரப்பி மூடி, இட்லித் தட்டில் வேகவிட்டு எடுக்கவும்.
————————————————————————–
——
மக்காச்சோள கொழுக்கட்டை
தேவையானவை: மக்காச்சோளம் – அரை கிலோ, சர்க்கரை – ஒன்றரை கப், தேங்காய் – ஒரு மூடி, ஏலக்காய் – 6.
செய்முறை: மக்காச்சோளத்தை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். கடாயை காய வைத்து மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வறுத்துக்கொள்ளவும். தேங்காய், சர்க்கரை, பொடித்த ஏலக்காயை மாவுடன் சேர்த்துப் பிசையவும். இந்த மாவில் சிறிது எடுத்து கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.
————————————————————————–
——
கலர்ஃபுல் கொழுக்கட்டை
தேவையானவை: ஊற வைத்து நிழலில் உலர்த்தி, அரைத்து வறுத்த பச்சரிசி மாவு – 2 கப், 5 முதல் 6 மணி நேரம் ஊறிய ஜவ்வரிசி – ஒன்றரை டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – அரை கப், குழையாமல் வேகவைத்த பாசிப்பருப்பு, நெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, சீரகம் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, விருப்பப்பட்ட ஃபுட் கலரிங் – 2 (அ) 3 துளிகள்.
செய்முறை: கலர் நீங்கலாக.. மாவுடன் மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து, வெந்நீரை ஊற்றி கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவை வைத்துள்ள கலர்களுக்கேற்ப பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளவும். ஒவ்வொரு வண்ணத்தையும் ஒவ்வொரு பகுதியுடன் சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வேக வைத்துப் பரிமாறவும்.
————————————————————————–
——
ராகி கொழுக்கட்டை
தேவையானவை: ராகி மாவு – ஒரு கப், பொடித்த வெல்லம் (அ) கருப்பட்டி – அரை கப், தேங்காய் துருவல் – கால் கப், மிகவும் பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்த முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை: ராகி மாவை அரை டேபிள்ஸ்பூன் நெய்யில் வறுத்து ஆறவிட்டு, அதனுடன் வெல்லம் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும். வெல்லத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைய விடவும். கரைந்ததும் வடிகட்டி மாவில் விட்டு நன்கு பிசையவும். பாகு போதவில்லையெனில் சிறிது வெந்நீரை சேர்த்துக் கொள்ளலாம். இந்த மாவில் சிறிது எடுத்து உள்ளங்கையில் வைத்து மடித்து, இட்லித் தட்டில் வேக விட்டு எடுக்கவும்.
————————————————————————–
——
டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், உப்பு – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய காய்ந்த அத்திப்பழம், பேரீச்சம்பழம், பாதாம், முந்திரி, வெள்ளரி விதை, துருவிய கொப்பரை எல்லாம் சேர்ந்தது -
அரை கப், தேன் – 2 டேபிள்ஸ்பூன், சுக்குப்பொடி – ஒரு சிட்டிகை.
செய்முறை: அத்திப்பழம், பேரீச்சம்பழம், முந்திரி, பாதாம், வெள்ளரி விதை, கொப்பரை எல்லாவற்றையும் தேனுடன் சேர்த்துப் பிசைந்து, பூரணமாகக் கலந்து வைக்கவும்.
பச்சரிசியை ஊற வைத்து, களைந்து, நிழலில் உலர்த்தி, மிஷினில் அரைத்துக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரை
கொதிக்க வைத்து அதில் உப்பு, எண்ணெய் சேர்த்து, அரைத்த மாவைத் தூவி கட்டியில்லாமல் கிளறவும். இறக்கி ஆற வைத்து ஈரத் துணியால் மூடி வைக்கவும்.
இந்த மாவிலிருந்து சிறிது எடுத்து கிண்ணம் போல் செய்து, சிறிது பூரணத்தை வைத்து மூடி இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.
————————————————————————–
——
தாளித்த கொழுக்கட்டை
தேவையானவை: புழுங்கல் அரிசி – ஒரு கப், வேக வைத்த கடலைப் பருப்பு, சர்க்கரை – ஒரு டீஸ்பூன், வேக வைத்த பாசிப்பருப்பு – அரை டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு –
தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய் (அ) நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, ஆட்டுக்கல்லில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவை தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய வைத்து கடுகு,
உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, கரைத்த மாவு, வேக வைத்த பருப்புகள், சர்க்கரை, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, கையில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவும். பிறகு ஆற விட்டு, சிறு
உருண்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

30 வகையான ‘இஞ்சி – பூண்டு’ உணவுகள்..



30 வகையான ‘இஞ்சி – பூண்டு’ உணவுகள்..

சுவைமட்டுமல்லாது கூடவே ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் இஞ்சி பூண்டு உணவு வகைகளைத்

தெரிந்துகொண்டு சமைத்து உண்டு வளமோடும் மகிழ் வோடும் வாழ்வோம். வாருங்கள்

1) ஜிஞ்சர் சிரப்!


தேவையானவை:

துருவிய இஞ்சி, சர்க்கரை – தலா ஒரு கப்,
தண்ணீர் – 3 கப்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
சோடா – ஒரு கப்.

செய்முறை:

துருவிய இஞ்சியுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். அதில் சர்க்கரைசேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் 5 நிமிடம் அடுப்பை ‘சிம்’மி ல் வைத்து, இறக்கி ஆற விடவும். அதனை அரை மணி நேரம் கழித்து வடிகட்டி, சுத்தமான பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்க… ஜிஞ்சர் சிரப் ரெடி!

தேவைப்படும்போது 2 டேபிள்ஸ்பூன் சிரப், அரை டம்ள ர் சோடா, அரை டம்ளர் தண்ணீர், ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.

2) பூண்டு சாதம்

தேவையானவை:

வடித்த சாதம் – ஒரு கப்,
பூண்டுப் பல் – 10,
வெங்காயம் – 1 (நறுக்கிக் கொள்ளவும்),
பச்சை மிளகாய் – 2 அல்லது 3 (நீளவாக்கில் கீறியது),
சீரகம் – கால் டீஸ்பூன்.
கறிவேப்பிலை – சிறிதளவு,
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

சாதத்தை உதிராக வடித்துக் கொள்ளவும். பூண்டை விழுதாக அரைக்கவும். கடாயில் நெய் விட்டு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், அரைத்த பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கிளறவும். வதங்கியவுடன், சாதத்தை போட்டுக் கிளறவும். ஒரு நிமிடம் கழித்து இறக்கி, தயிர்ப் பச்சடி அல்லது அப்பளத்துடன் பரிமாறவும்.

3) ஜிஞ்சர் சூப்


தேவையானவை:

துருவிய இஞ்சி – கால் கப்,
துருவிய கேரட், முட்டைகோஸ் (கலந்தது) – அரை கப்,
சோள மாவு – ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை:

குக்கரில் எண்ணெய் விட்டு, இஞ்சி, துருவிய கேரட், முட்டைகோஸ் சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, ஆற விடவும். சோள மாவை தண்ணீரில் கரைத்து அதில் கலக்கவும். பிறகு, மிளகு த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி, ஒரு கொதி விட்டு இறக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

4) பூண்டு ரொட்டி


தேவையானவை:

கோதுமை மாவு – ஒரு கப்,
அரைத்த பூண்டு விழுது – 5 டேபிள்ஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்,
வெண்ணெய் – அரை டீஸ்பூன்,
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கோதுமை மாவுடன் உப்பு, வெண்ணெய் சேர்த்துப் பிசறி, தேவையான தண்ணீர்விட்டு, சப்பாத்திமாவு பத த்தில் பிசையவும். கடாயில் நெய்விட்டு, பூண்டுவிழுது , மிளகுத்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து சுருள வதக்கினால், பூரணம் ரெடி! மாவை சப்பாத்தியாக தேய்த்து, அதன் மீது பூரணத்தைப் பரப்பி, மேலே இன் னொரு சப்பாத்தியை வைத்துத் தேய்க்கவும். இந்த சப்பாத்தியை சூடான தவாவில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

5) ஜிஞ்சர் ரைஸ்

தேவையானவை:

சாதம் – ஒரு கப்,
வெங்காயம் – 1,
இஞ்சி – 4 அங்குலத்துண்டு ஒன்று,
தக்காளி சாஸ், சோயா சாஸ் – தலா 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

சாதம் வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் உப்பு, தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்துக் கிளறவு ம். வடித்த சாதத்தைப் போட்டு நன்கு கலக்கி, கொத்த மல்லி தூவி பரிமாறவும்.

6) பூண்டு- தேங்காய் சட்னி


தேவையானவை:

உரித்த பூண்டு, தேங்காய் துருவல் – தலா கால் கப்,
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, உரித்த பூண்டு, தேங்காய் துருவலை நன்கு வறுக்கவும். இதனுடன் உப்பு, மிளகா ய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பூண்டு – தேங்காய் சட்னி ரெடி! இது மும்பை ஸ்பெஷல் வடா பாவ் சட்னி.

7) ஜிஞ்சர் யோகர்ட் வித் ஃப்ரூட்


தேவையானவை:

தயிர் – ஒரு கப்,

வாழைப்பழம் – 1 (சிறு துண்டுகளாக்கவும்),
நறுக்கிய பப்பாளி – 10 துண்டுகள்,
திராட்சை – 20,
இஞ்சித் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்,
பாதாம்பருப்பு – 10,
சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

தயிருடன் வாழைப்பழம், பப்பாளி, திராட்சை, இஞ்சித் துருவல், சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கிக் கொள் ளவும். ஒரு மணி நேரம் முன்பு ஊற வைத்த பாதாம் பருப்பைத்தோல்நீக்கி, துருவி அதில்சேர்க்கவும். பிறகு குளிர வைத்துப் பரிமாறவும்.

8) பூண்டு சட்னி


தேவையானவை:

உரித்த பூண்டு – கால் கப்,
காய்ந்த மிளகாய் – 7,
புளி – ஒரு சிறு நெல்லிக்காய் அளவு,
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு – தாலா கால் டீஸ்பூன்,
பெருங்காயம், உப்பு, நல்லண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்புசேர்த்து வதக்கி, மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இன்னொரு கடாயி ல் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெ ருங்காயம் தாளித்து, சட்னியில் சேர்த்துக் கலக் கவும்.

9) இஞ்சிப் பச்சடி


தேவையானவை:

இஞ்சி – 50 கிராம்,
தேங்காய் துருவல் – ஒரு கப்,
பச்சை மிளகாய் – 2,
சீரகம் – அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
தயிர் – ஒரு கப்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

சுத்தம்செய்த இஞ்சி, தேங்காய்துருவல், பச்சை மிளகா யை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும், அதில் உப்பு சேர்த்து தயிருடன் கலக்கவும். கடாயில் எண் ணெய் விட்டு சீரகம் தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து, தயிர் கலவையுடன் கலக்கிப் பரிமாறவும்.


10) பூண்டு வெஜ் ரைஸ்


தேவையானவை:

சாதம் – ஒரு கப்,
பச்சை மிளகாய் – 6,
பூண்டுப் பல் – 6,
நறுக்கிய கேரட்,பீன்ஸ், பட்டாணி (கலந்தது)-ஒரு கப் ,
வெங்காயம் – 1 (நறுக்கிக் கொள்ளவும்),
பட்டை, கிராம்பு, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

சாதத்தை உதிராக வடித்துக் கொள்ளவும். பச்சை மிள காய், பூண்டு இரண்டையும் விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்க ய்த்தூள் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதனுடன் காய்கறிகளைச் சேர்த்து, உப்பு போட்டு வேக விடவும். வெந்தவுடன், அதில் சாதத்தை சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

11) இஞ்சித் தீயல்

தேவையானவை:

பொடியாக நறுக்கிய இஞ்சி, தேங்காய் துருவல் – தலா ஒரு கப்,
சின்ன வெங்காயம் – 10,
பச்சை மிளகாய் – 2,
மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், வெந்தய த்தூள் – தலா கால் டீஸ்பூன்,
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,
வெல்லம் – சிறிய துண்டு,
நல்லெண்ணெய் – அரை கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி, தேங் காய் துருவலை வதக்கி. கரகரப்பாக அரைத்துக் கொள் ளவும். புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் மீதி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப் பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, வட்ட மாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், வெந்தயத்தூள் சேர்க்கவும். அதில் புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.

பின் அரைத்தஇஞ்சி-தேங்காய்விழுதை சேர்த்து, நன்கு சுருள கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும்போது பொ டித்த வெல்லம் சேர்த்து, கிளறி இறக்கவும். ஒரு மாதம் வரை கெடாமல் வைத்து உபயோகிக்கலாம். சாதத்தில் போட்டுச் சாப்பிட சுவையாக இருக்கும்.

12) பூண்டு ஊறுகாய்


தேவையானவை:

உரித்த பூண்டு – ஒரு கப்,
எலுமிச்சைச் சாறு – கால் கப்,
தனியா, வெந்தயம் – தலா 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 3
டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – அரை கப்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெறும் கடாயில் வெந்தயம், தனியா, சீரகத்தை வறு த்துப் பொடிக்கவும். கடாயில் கால் கப் எண்ணெய் விட் டு, உரித்த பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும். பூண்டு வதங்கியவுடன், மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, பொடித்த தூளை சேர்க்கவும். மீதமுள்ள கால் கப் எண் ணெயைச் சேர்த்து, சுருள வதக்கி, ஆறியவுடன் சுத்த மான பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

13) இஞ்சி சட்னி


தேவையானவை:

இஞ்சி – 10 கிராம்,
காய்ந்த மிளகாய் – 8,
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு,
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாயை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். கடாயில் நல்லெண் ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கறி வேப்பிலை சேர்த்து சட்னியுடன் கலக்கவும். விருப்ப ப்பட்டால் சிறிது வெல்லம் சேர்க்கலாம். இது இட்லி, தோசை, வடை, பஜ்ஜிக்கு சுவையான ஜோடி!

14) இஞ்சி ரசம்


தேவையானவை:

இஞ்சி – 3 அங்குலத் துண்டு,
பச்சை மிளகாய் – 2,
எலுமிச்சம்பழம் – 1,
வேக வைத்த துவரம்பருப்பு – கால் கப்,
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை,
மிளகுத்தூள், சீரகத்தூள் – கால் டீஸ்பூன்,
கடுகு-கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, கீறிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், நசுக் கிய இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும். ஒரு டம்ளர் அளவுக்கு வற்றியவுடன், அதில் வேக வைத்த துவரம் பருப்பை நீர்க்க கரைத்து சேர்த்து, உப்பு போட்டுக் கொ திக்க விடவும். பொங்கி வரும்போது மிளகுத்தூள், சீர கத்தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும். மீண் டும் பொங்கியதும், இறக்கி எலுமிச்சம்பழம் பிழியவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும். சளி, இருமல், அஜீரணம், பசியின்மை போன்ற குறை பாடுகளை போக்கும் இந்த ரசம்.

15) பூண்டு-இஞ்சி சூப்


தேவையானவை:

பூண்டுப் பல் – 10,
இஞ்சி – ஒரு அங்குலம் நீளமுள்ள துண்டு,
வெங்காயம் – 1,
நெய், சோள மாவு – தலா ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் நெய் விட்டு, பூண்டு, நறுக்கிய இஞ்சி, வெங் காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் 2 கப் தண் ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 10 நிமிடம் கழித்து அதனை இறக்கி, ஆற வைத்து. வடிகட்டவும். பூண்டு, இஞ்சி, வெங்காயத்தை மிக்ஸியில் அரைக்கவும். வடி கட்டிய தண்ணீருடன் மேலும் 2 கப் தண்ணீர் ஊற்றி, அரைத்த விழுதுடன் சேர்க்கவும். சோள மாவைக் கரை த்து அதில் சேர்த்துக் கொதிக்க விடவும். மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து மேலும் கொதி க்க விடவும். பிறகு இறக்கி, நறுக்கிய வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

16) பூண்டு ரசம்


தேவையானவை:

பூண்டுப் பல் – 6,
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
ரசப்பொடி- கால் டீஸ்பூன்,
மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்த மல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

புளியைக் கரைத்து வடிகட்டவும். கடாயில் புளிக் கரை சல், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், ரசப்பொடி, உப்பு சேர்த்து சூடாக்கவும். பூண்டைத் தட்டி, அதில் சேர்க் கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் மிளகுத்தூள், சீரகத் தூள் சேர்த்து அடுப்பை ‘சிம்’மில் வைத்து கொதிக்க விடவும். ரசம் நுரைத்து வரும்போது கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவவும். இன் னொரு கடாயில் எண் ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்புதாளித்து, ரசத்தி ல் கொட்டி இறக்கவும்

17) இஞ்சிக் குழம்பு


தேவையானவை:

இஞ்சி – 3 அங்குலத் துண்டு,
சின்ன வெங்காயம் – 20,
புளி – ஒரு எலுமிச்சம்பழம் அளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் – தலா கால் டீஸ்பூன்,
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை,
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்,
தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

புளியைக் கரைத்துக் கொள்ளவும். இஞ்சியைக் கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயத் தை இரண்டிரண்டாக நறுக்கவும். கடாயில் நல்லெண் ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளித்து இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் மஞ்சள்தூள், மிள காய்த்தூள், தனியாத்தூள், பெருங்காயத்தூள் சேர்க்க வும். அதில் புளிக்கரைசல், உப்புசேர்த்து கொதிக்க விட வும். கெட்டியாக வரும்போது ஒரு டீஸ்பூன் நல்லெ ண்ணெய் விட்டு இறக்கவும். இந்தக் குழம்பு, சூடான சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

18) பூண்டுக் குழம்பு


தேவையானவை:

உரித்த பூண்டு – கால் கப்,
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,
மிளகாய்த்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
தனியாத்தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை,
கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் – 5,
கறிவேப்பிலை – சிறிதளவு,
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, பூண்டை சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்க்கவும். புளி யைக் கரைத்து அதில் ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்து, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி விடவும். விருப்பப்பட்டால் சிறிதளவு வெல்லம் சேர்க்கலாம்.

19) இஞ்சி டீ


தேவையானவை:

இஞ்சி – சிறிய துண்டு,
டீத்தூள் – 2 டீஸ்பூன்,
தேன் – 2 டீஸ்பூன்,
தண்ணீர் – 2 கப்.

செய்முறை:

2 கப் தண்ணீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு கொதிக்க விடவும். கொஞ்சம் வற்றியவுடன், டீத்தூள் சேர்த்து கொதித்து வரும்போது அடுப்பை அணைத்து, பாத்திரத் தை மூடவும். 3 நிமிடம் கழித்து, வடிகட்டி, தேன் சேர்த் து கலக்கிக் குடிக்கவும். இதற்கு பால் தேவையில்லை. புத்துணர்ச்சி தரும் சுவையான டீ இது!

20) திடீர் பூண்டு மிளகாய்ப்பொடி


தேவையானவை:

பூண்டுப் பல் – 5,
மிளகாய்த்தூள் – 3 டேபிள்ஸ்பூன்,
நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பூண்டை தோலுடன்நசுக்கி, மிளகாய்த்தூளுடன்சேர்த் துக்கலக்கவும். இதனுடன் உப்புசேர்த்தால், திடீர்பூண்டு மிளகாய்பொடி ரெடி! நல்லெண்ணெய் விட்டுக் கலந்து சூடான இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

21) இஞ்சித் தொக்கு


தேவையானவை:

இஞ்சி – கால் கிலோ,
பூண்டுப் பல் – 20,
காய்ந்த மிளகாய் (வறுத்து அரைக்க) – 15,
புளி – எலுமிச்சம்பழம் அளவு,
வெல்லம் – சிறு துண்டு,
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்,
வெந்தயத்தூள் – ஒரு டீஸ்பூன்,
கடுகு – கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் (தாளிக்க) – 2,
கறிவேப்பிலை. நல்லெண்ணெய் – கால் கப்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

இஞ்சியைசுத்தம்செய்துபொடியாநறுக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு இஞ்சி, பூண்டு, காய்ந்தமிளகாயை நன்கு வறுக்கவும். அதனுடன் புளி, உப்பு சேர்த்து மிக் ஸியில் நன்கு அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட் டு கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறவும். இத்துடன் பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், வெல்லம் சேர்க்க வும். எண்ணெய் மிதந்து வரும்வரை அடுப்பை ‘சிம்’ மில் வைத்து நன்கு வதக்கவும். ஆறியவுடன், எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். இது, ஈரம் படாமல் இருக்கும் வரை கெட்டுப் போகாது! தயிர் சாத த்துக்கு சிறந்த காம்பினேஷன்

22) பூண்டு பால் கஞ்சி


தேவையானவை:

புழுங்கல் அரிசி – ஒரு கப்,
பூண்டுப் பல் – 12,
வெந்தயம், சீரகம் – தலா கால் டீஸ்பூன்,
சுக்கு, சித்தரத்தை – ஒரு சிறிய துண்டு,
திப்பிலி – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,

செய்முறை:

அரிசியை நன்கு கழுவி குக்கரில் போடவும். ஒரு கப் அரிசிக்கு மூன்றரை கப் தண்ணீர் ஊற்றவும். இதனுடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம், உப்பு சேர்க்கவும். சுக்கு, சித்தரத்தை, திப்பிலியை ஒரு துணியில் கட்டி, குக்கரில் போடவும். கஞ்சி வெந்த பின்பு துணியை வெ ளியே எடுத்து விடவும். வெந்த கஞ்சியில் தேவைக் கேற்ப பால் சேர்த்துப் பரிமாறலாம். மழைக்காலத்துக் கேற்ற ஆரோக்கியமான கஞ்சி இது. சளி, இருமலைக் கட்டுப்படுத்தும்.

23) இஞ்சி முரப்பா


தேவையானவை:

இஞ்சி – கால் கிலோ,
வெல்லம் – கால் கிலோ.

செய்முறை:

இஞ்சியை நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறெடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடி கட்டி, கொதிக்க விடவும். இதனுடன் தெளிந்த இஞ்சிச் சாற்றை சேர்த்து, தொடர்ந்து கிளறவும். ஒட்டாமல், அல்வா பதத்துக்கு வரும்போது இறக்கித் தட்டில் கொ ட்டி, ஆற விட்டு வில்லைகளாகப் போடவும். வெல் லத்துக்குப் பதில் சர்க்கரையிலும் செய்யலாம்.



24) பூண்டு-உளுந்து சாதம்


தேவையானவை:

புழுங்கல் அரிசி – ஒரு கப்,
கறுப்பு முழு உளுந்து – அரை கப்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
பூண்டுப் பல் – 10,
தேங்காய் துருவல் – கால் கப்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெறும் கடாயில் கறுப்பு உளுந்தை வாசனை வரும் வரை வறுக்கவும். உளுந்தை தோல் நீங்கிக் கழுவி, அரிசியுடன் சேர்த்து குக்கரில் போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றவும். இதனுடன் உப்பு, சீரகம், பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். முதல் விசில் வந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் வேக வைத்தால், உளுந்து சாதம் ரெடி! இதற்குத் தொட்டுக் கொள்ள எள்ளுத் துவையல் நல்ல காம்பினேஷன். இது இடுப்பு எலும்பை பலப்படுத்தும். வளரும் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

25) தேன் இஞ்சி

தேவையானவை:

இஞ்சித் துண்டுகள் – ஒரு கப்,
தேன் – கால் கப்.

செய்முறை:

இஞ்சியை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக்கி ஆவியி ல் வேக வைக்கவும். பிறகு ஈரம் போகும் வரை இஞ்சி யை ஆற விட்டு, தேனில் போட்டு வைக்கவும். குழந் தைகளுக்கு இதனை தினமும் ஒரு துண்டு கொடுத்து வர… பசியின்மை, அஜீரணம் ஏற்படாது. ஈரத்துடன் இஞ்சி யை தேனில் போடக்கூடாது.

26) பூண்டு-மஷ்ரூம் கிரேவி

தேவையானவை:

பட்டன் காளான் – 100 கிராம்,
வெங்காயம், தக்காளி – தலா 1,
பூண்டுப் பல் – 10,
சோம்பு – கால் டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்,
தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு தாளித்து, நறுக் கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். மஞ்ச ள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து மீண் டும் வதக்கவும். இதனுடன் சுத்தம் செய்த காளானை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். சிறிது வெந்தவுடன், நசுக்கிய பூண்டைச் சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்க்கவும். கிரேவி பதத்துக்கு வந்ததும், நறுக் கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். இது, சப்பாத்தி, பூரி, வெஜிடபிள் ரைஸுக்கு சிறந்த சைட் டிஷ்.

27) ஜிஞ்சர் ஃப்ரூட் பஞ்ச்


தேவையானவை:

இஞ்சி – 8 அங்குலத் துண்டு,
சர்க்கரை, எலுமிச்சைச் சாறு – தலா ஒரு கப்,
ஆரஞ்சு சாறு – 2 கப்,
இஞ்சி துருவல் – சிறிதளவு,
குளிர்ந்த நீர் – 3 கப்.

செய்முறை:

இஞ்சியைத் தட்டி, சர்க்கரை சேர்த்து ஒரு டம்ளர் தண் ணீரில்கொதிக்கவிடவும். கொதிவந்தவுடன், அடுப்பை ‘சிம்’மில் வைத்து, மூடாமல் மேலும் 15 நிமிடம் கொ திக்க விடவும். பிறகு இறக்கி வடிகட்டி, ஆறவிடவும். அதில் எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சு சாறு கலந்து குளிர் ந்த நீர் சேர்த்துக் கலக்கி டம்ளரில் ஊற்றி, மேலாக இஞ்சி துருவல் போட்டுக் கொடுக்கவும்.

28) பூண்டு-கடலைப்பருப்பு துவையல்


தேவையானவை:

கடலைப்பருப்பு – கால் கப்,
காய்ந்த மிளகாய் – 6,
பூண்டுப் பல் – 5,
புளி – ஒரு சிறு நெல்லிகாய் அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெறும் கடாயில் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை வறுக்கவும். இதனை ஆற வைத் து மிக்ஸியில் போட்டு புளி, உப்பு சேர்த்து அரைக்க வும். தயிர் சாதம், ரசம் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஏற்ற துவையல் இது.

29) ஜிஞ்சர் வெஜ் ஃப்ரை


தேவையானவை:

துருவிய இஞ்சி – 2 டேபிள்ஸ்பூன்,
பட்டாணி – கால் கப்,
கேரட் – 1 (பொடியாக நறுக்கவும்),
வெங்காயம் – 1,
புருக்கோலி பூ – 1,
சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,

செய்முறை:

சோள மாவுடன் உப்பு, துருவிய இஞ்சி, ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையில் கேரட், பட்டாணி, உதிர்த்த புருக் கோலி பூ சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவு ம். இதனுடன் காய்கறிக் கலவையைச் சேர்த்துக் கிளற வும். மிதமான தீயில் மூடி வைத்து வேக விடவும். வாசனை வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

30) பூண்டு-காய்கறி சூப்


தேவையானவை:

பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு (கலந்தது) – ஒரு கப்,
பூண்டுப் பல் – 6,
மிளகு, சீரகத்தூள், வெண்ணெய் – தலா கால் டீஸ்பூன்.
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை 2 கப் தண்ணீ ரில் வேக விடவும். வெந்தவுடன் நசுக்கிய பூண்டு, மிளகு, சீரகத்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். 3-4 நிமிட ங்கள் கழித்து, அடுப்பிலிருந்து இறக்கி வெண் ணெய் சேர்த்துப் பரிமாறவும்.


திங்கள், 21 ஆகஸ்ட், 2017

உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட்



உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட்

தேவையான பொருட்கள் :

முட்டை – 3
உருளைகிழங்கு – 2
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சைமிளகாய், கொத்தமல்லிதழை – சிறிதளவு
மிளகு பொடி – ஒரு ஸ்பூன்
மிளகாய்த்தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* உருளைக்கிழங்கை வேகவைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். அல்லம் ஒன்றும் பாதியாக மசித்து கொள்ளவும்.

* தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முட்டையை உப்பு, மிளகாய்தூள் சேர்த்து நன்றாக நுரை வரும்படி அடித்துக்கொள்ளவும்.

* ஒரு நான்ஸ்டிக் பானில் சிறிது எண்ணெய் தடவி முட்டையை ஒரு லேயர் ஊற்றவும்.

அதன் மேல் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை, சிறிது மிளகுதூள் தூவி அதன் மேல் இன்னொரு லேயர் முட்டையை ஊற்றவும். மிதமான தீயில் மூடி போட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும். மறுபடியும் திருப்பி போட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும்.

* இப்பொழுது பொன்னிற உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட் நல்ல வாசனையோடு ரெடி.

குறிப்பு :

* உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி மசாலா சேர்த்து எண்ணெயில் பொரித்தும் சேர்க்கலாம்.

பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ்



பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ்

மாலையில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு ஏதேனும் சமைத்துக் கொடுக்க நினைத்தால், பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ் செய்து கொடுங்கள். இது நிச்சயம் குழந்தைகளுக்கு ஓர் ஆரோக்கியமான ரெசிபியாக இருக்கும். மேலும் இது அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் – 1 பாக்கெட்
பேபி கார்ன் – 1/2 கப் (ஓரளவு நீளமாக வெட்டியது)
கேரட் மற்றும் முட்டைக்கோஸ் – 1 கப் (நறுக்கியது)
குடைமிளகாய் – 1/4 கப் (நறுக்கியது)
பூண்டு – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
வெள்ளை வினிகர் – 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன் – சிறிது
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் நூடுல்ஸ் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் நூடுல்ஸைப் போட்டு வேக வைக்க வேண்டும். நூடுல்ஸ் வெந்ததும், அதனை இறக்கி, நீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததும், அதில் பேபி கார்ன் சேர்த்து 2 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்கி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து தீயை அதிகரித்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்,

பின் அதில் குடைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அத்துடன் பேபி கார்ன் சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுத்து அதில் வினிகர் மற்றும் சோயா சாஸ் சேர்த்து கிளறி, மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் வேக வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து மீதமுள்ள எண்ணெய் சேர்த்து காய்கறிகளுடன் நூடுல்ஸ் சேருமாறு நன்கு பிரட்டி விட்டு இறக்கினால், பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ் ரெடி!!!

ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல்


ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல்

தேவையான பொருட்கள்:

ஸ்வீட் கார்ன் – ஒன்றரை கப்
ரவை – ஒரு கப்
துருவிய சீஸ் – அரை கப்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
கரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
சாட் மசாலா – ஒரு தேக்கரண்டி
பால் – 2 கப்
மைதா – 2 தேக்கரண்டி
ப்ரெட் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

* ரவையை வறுத்தெடுத்து பால் ஊற்றி நன்கு கெட்டியாகும் வரை வேகவிடவும்.

* அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கார்ன், சீஸ், கரம் மசாலா தூள், சாட் மசாலா, சில்லி தூள், உப்பு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் மைதாவை சப்பாத்தி மாவு போல பிசைந்து, பிறகு சிறியதாக எடுத்து உருட்டி அதனுள் ரெடி செய்து வைத்துல்ள கலவையை ரோல் போல செய்து கொள்ளவும்.

* பிறகு ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுக்கவும். இதேபோல் மீதமுள்ள கலவையிலும் ரோல்ஸைத் தயார் செய்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ரோல்ஸைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

டேஸ்டியான ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல் தயார்.

கார்ன் சீஸ் டோஸ்ட்



கார்ன் சீஸ் டோஸ்ட்

குழந்தைகளுக்கு கார்ன் மிகவும் பிடிக்கும். அதே சமயம் அது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. எனவே மாலையில் பசியுடன் வரும் குழந்தைகளுக்கு சீஸ் மற்றும் கார்னைக் கொண்டு அற்புதமான சுவையில் டோஸ்ட் செய்து கொடுங்கள். இதனால் அவர்களது பசி அடங்குவதோடு, அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

பிரட் – 6 துண்டுகள் வெங்காயம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது) குடைமிளகாய் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது) வேக வைத்த ஸ்வீட் கார்ன் – 1/2 கப் துருவிய சீஸ் – 1/2 கப் காய்ச்சிய பால் – 3/4 கப் மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன் வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் மைதா – 1 டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் குடைமிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர் அதில் வேக வைத்த ஸ்வீட் கார்ன் சேர்த்து நன்கு கிளறி இறக்கிக் கொள்ள வேண்டும். பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், மைதா சேர்த்து சில நொடிகள் கிளறி, பின் பால் ஊற்றி நன்கு சாஸ் போன்று ஓரளவு கெட்டியான பதத்தில் வரும் வரை கிளறி, பின் அதில் காய்கறிகளை சேர்க்க வேண்டும். பிறகு அதனை நன்கு கிளறி, சீஸ் சேர்த்து உருக வைக்கவும். சீஸ் உருகியதும், அடுப்பை அணைத்து விட வேண்டும். அடுத்து பிரட் துண்டுகளை நெய் தடவி தோசைக்கல்லில் டோஸ்ட் செய்து கொள்ளவும். இறுதியில் ஒவ்வொரு பிரட் பிரட் துண்டுகளின் ஒரு பக்கத்திலும், கார்ன் கலவையைப் பரப்பி பரிமாறினால், கார்ன் சீஸ் டோஸ்ட் ரெடி!!!

மாலை நேர ஸ்நாக்ஸ் சீஸ் – கார்ன் கச்சோரி



மாலை நேர ஸ்நாக்ஸ் சீஸ் – கார்ன் கச்சோரி

தேவையான பொருட்கள் :

மைதா – இரண்டு கப்
சீஸ் – 2௦௦ கிராம்
ஸ்வீட் கார்ன் – இரண்டு கப்
இஞ்சி, பூண்டு விழுது – இரண்டு டீஸ்பூன்
கரம் மசாலா – இரண்டு டீஸ்பூன்
எலுமிச்சை பழம் சாறு – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* ஸ்வீட் கார்னை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* சீஸை துருவிக் கொள்ளவும்.

* மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அடித்து பிசைந்து, (சப்பாத்தி மாவு பதத்தில்) அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா, அரைத்த கார்ன், உப்பு சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கி ஆறவிடவும்.

* மசாலா நன்றாக ஆறியதும் அதில் துருவிய சீஸை சேர்த்து கிளறவும்.

* பிசைந்து வைத்துள்ள மாவை பூரியாக திரட்டி, கார்ன் கலவையை நடுவில் வைத்து மூடி, அதிக அழுத்தம் தராமல் தட்டி வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்த கச்சோரிகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

* சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் சீஸ் கார்ன் கச்சோரி ரெடி.

பேக்ட் சிக்கன்



பேக்ட் சிக்கன்

தேவையான பொருட்கள்:

சிக்கனுக்கு தேவையானவை:
பெரிய சிக்கன் துண்டுகள் – 7
உள்ளி – ஒன்று
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
தந்தூரி மசாலாத்தூள் – ஒரு மேசைக்கரண்டி
கறி மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மயோனைஸ் – ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
கறி சரக்குத் தூள் – ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
மரக்கறிக்கு தேவையானவை:
காரட் – 2
கத்தரிக்காய் – ஒன்று
வெங்காயம் – ஒன்று (பெரியது)
உருளைக்கிழங்கு – 2
பீன்ஸ் – சிறிது
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை :
சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்து எடுத்து கத்தியால் சிறு கீறல்கள் போட்டுக் கொள்ளவும்.

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

இஞ்சி மற்றும் பூண்டுடன் எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளை போட்டு அதனுடன் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் சிக்கனுக்கு தேவையானவை அனைத்தையும் சேர்த்து நன்றாக பிரட்டி வைத்துக் கொள்ளவும்.

மசாலா தூள்கள் சேர்த்து பிரட்டி வைத்திருக்கும் சிக்கனை ஃப்ரிட்ஜில் வைத்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

காய்கறிகளை தோல் சீவி விட்டு கழுவிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வட்டமாகவோ அல்லது நீள துண்டுகளாகவோ நறுக்கவும். பீன்ஸை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

கத்திரிக்காய் மற்றும் காரட்டை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கவும். விருப்பட்டால் ஏதேனும் வேறு காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

2 மணி நேரம் கழித்து சிக்கன் நன்கு ஊறியதும் பேக்கிங் தட்டில் அடுக்கி அவனில் வைத்து பேக் செய்யவும்.

சிக்கன் துண்டுகளை வைத்திருந்த பாத்திரத்தில் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை போட்டு தேவையான அளவு உப்பு, கறி மசாலா தூள், எண்ணெய் சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ளவும்.

சிக்கனை அவனில் வைத்து 10 – 15 நிமிடம் கழித்து காய்கறிகளையும் அதனுடன் சேர்த்து சிக்கன் மற்றும் காய்கறிகள் நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

மட்டன் பிரியாணி



மட்டன் பிரியாணி

*☆தேவையான பொருட்கள்;-☆*

அரிசி – 1 கிலோ
மட்டன் – 1 கிலோ
இஞ்சி – 100 கிராம்
பூண்டு – 100 கிராம்
தக்காளி – 1/4 கிலோ
வொங்காயம் – 1/4 கிலோ
பச்சைமிளகாய் – 10
பட்டை – 10
லவங்கம் – 10
ஏலக்காய் – 10
மிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் – 2 ஸ்பூன்
தயிர் – 250 கிராம்
எலும்மிச்சை – 1
புதினா – 1/2 கட்டு
கொத்தமல்லி – 1/2 கட்டு
எண்ணெய் – 50 கிராம் (தேவைக்கு)
நெய் – 50 கிராம் (தேவைக்கு)
உப்பு – தேவைக்கு
கேசரிப்பவுடர் – தேவைக்கு

*☆அரைக்க வேண்டியவை;-☆*

இஞ்சி, பூண்டு இரண்டையும் நன்கு அரைக்கவும்.

பட்டை- 5,
லவங்கம்- 5,
ஏலக்காய்- 5,
மிளகாய்த்தூள்,
மல்லித்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்

*☆செய்முறை;-☆*

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை-5, லவங்கம்-5, ஏலக்காய்-5 போட்டு அத்துடன் இஞ்சி,பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

அதனுடன் கறி சேர்த்து நன்கு கிளறி அத்துடன் கறிக்கு தேவையான உப்பையும் போட்டு கிளறவும். 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்த மசாலாப்பவுடரையும் சேர்த்து கிளறி, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

அத்துடன் தக்காளி, புதினா, கொத்தமல்லி, சேர்த்து கிளறி. பிறகு தயிரையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.

முக்கால் பாகம் வெந்ததும் சாதத்திற்கு தேவையான தண்ணீர் ஊற்றி அத்துடன் உப்பு, கேசரி பவுடர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு கிளறி விடவும்.

5 நிமிடம் கழித்து நன்கு கிளறி அரை வேக்காடு வெந்து தண்ணிர் வற்றியதும் ஒரு மூடி போட்டு அதன் மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். (தம் விடவும்) இப்படி செய்யும் போது அடுப்பை குறைத்து வைக்க வேண்டும்.

கால் மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான மட்டன் பிரியாணி தயார்

ரசப்பொடி



ரசப்பொடி

*☆தேவையான பொருட்கள்☆*

1. மிளகாய் வற்றல் – 200 கிராம்
2. தனியா – 500 கிராம்
3. மிளகு – 200 கிராம்
4. சீரகம் -200 கிராம்
5. துவரம் பருப்பு -250 கிராம்
6. விரளி மஞ்சள் -100கிராம்
7. காய்ந்த  கறிவேப்பிலை தேவையான அளவு
8. கடுகு-2 டேபிள் ஸ்பூன்.

*☆செய்முறை:☆*

எல்லா சாமான்களையும் சுத்தம் செய்து நல்ல  வெய்யிலில் காயவைக்கவும். அல்லது மிதமான சூட்டில் வாணலியில் லேசாக வறுக்கவும்.

மெஷினில் கொடுத்து சற்று கரகரப்பாக அறைத்து சூட்டை ஆற்றி காற்று புகாத பாட்டில்களில் அடைத்து உபயோகிக்கவும்.

வீட்டிலேயே  குறைந்த அளவில் தயாரிப்பதானால் சற்று நன்றாகவே பருப்பை வறுக்கவேண்டும்.

மஞ்சளையும் உடைத்து லேசாக வறுத்து, மற்ற சாமான்களையும் வறுத்து சீரகத்தை வறுக்காமல் சேர்த்து அரைக்கவும்.

இந்த மாதிரி மிக்ஸியில் பொடித்த பொடி போட்டு செய்தால், ரசம், தெளிவாகவும், வாஸனையாகவும் இருக்கும்.

நண்டு குருமா



நண்டு குருமா

தே.பொருட்கள்:

நண்டு – 3/4 கிலோ
வெங்காயம் – 1 பெரியது
தக்காளி – 1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
கத்திரிக்காய் – 4
தனியாதூள் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – 1 சிறிய டின்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
சோம்பு – 1டீஸ்பூன்

தாளிக்க:
வடகம் – 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை – சிறிது.

செய்முறை:

*நண்டை சுத்தம் செய்து ஒரு கட்டையால் லேசாக தட்டவும்.பின் நன்கு நீரில் அலசி வைக்கவும்.அப்போழுது தான் மசாலா நண்டில் கலந்து நல்லாயிருக்கும்.

*வெங்காயம்+தக்காளி+கத்திரிக்காய் நீளவாக்கில் நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சோம்பு போடவும்,பொரிந்ததும் வெங்கயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு மசிக்க வதக்கவும்.

*வதங்கியதும் அனைத்து தூள்வகைகளை போட்டு வதக்கவும்.

*பச்சை வாசனை போனதும் கத்திரிக்காயை போட்டு வதக்கி தேங்காய்ப்பாலை ஊற்றவும்.தேவையானளவு உப்பு சேர்க்கவும்.

*கொதித்தபின் நண்டை போடவும்.

*கிரேவி நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.

*வேறொரு கடாயில் தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து நண்டு குருமாவில் கொட்டவும்.

தந்தூரி மீன்




தந்தூரி மீன்

இஞ்சி கலவையில் ஊறவைத்து, தீயில் நன்கு சுடப்பட்ட தந்தூரி மீன்.
தயாரிப்பு நேரம்: 10 நிமிடங்கள்
சமையல் நேரம்: 15 நிமிடங்கள்
4 பேர் சாப்பிடலாம்

தேவையான பொருட்கள்:

500 கிராம் மீன் (வெள்ளை மீன் அல்லது சால்மன் எதாவது ஒன்றை உபயோகிக்கலாம்), 4 செமீ சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
ஊறவைக்க:
8 பல் பூண்டு
50 கிராம் கொத்தமல்லி தழை
4 செமீ இஞ்சி
2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு,
1 டீஸ்பூன் துருவிய‌ எலுமிச்சை
1 டீஸ்பூன் காஷ்மீர் சிவப்பு மிளகாய் தூள்
½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
1/2 டீஸ்பூன் கரம் மசாலா
1 ½ தேக்கரண்டி உப்பு
50 மிலி சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய்
1 டீஸ்பூன் கடலை மாவு
100 கிராம் வடிகட்டிய‌ தயிர்
சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
100 கிராம் கொத்தமல்லி இலைகள்
2 பச்சை மிளகாய்
4 பல் பூண்டு
2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
½ தேக்கரண்டி உப்பு
1 டீஸ்பூன் வடிகட்டிய‌ தயிர்
பரிமாற‌:
வெங்காய ஸ்லைஸ்

செய்முறை:

பாதி அளவு எண்ணெய், பூண்டு, கொத்தமல்லி, இஞ்சி, எலுமிச்சை சாறு மற்றும் எலுமிச்சை துருவல், காஷ்மீர் சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு இவற்றை எல்லாம் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல செய்து கொள்ள‌வும்.

ஒரு கடாயில் மீதமுள்ள எண்ணெயை சூடாக்கிக் கொண்டு கடலை மாவு சேர்த்து பேஸ்ட் போல‌ கிளறி, வாசனை போகும் வரை சுமார் 1 நிமிடம் நிறம் மாறும் வரை கிளறவும்.
இப்பொழுது மசாலா விழுது கலவையை தயிர் சேர்த்து மீனை ஊறவைக்கும் அளவுக்கு நன்கு கலக்கவும்.
இதை மெதுவாக மீன் துண்டுகள் மீது முழுவதுமாக தேய்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
நுண்ணலை அடுப்பை 200C ல் வைத்துக் கொள்ளவும். பேக்கிங் தட்டில் ஊற வைத்த மீனை பரப்பி வைக்கவும். மீன் துண்டுகளை 10 முதல் 15 நிமிடங்களுக்கு திருப்பி வைத்து வேக வைக்கவும். சமைக்கும் போது ஒருமுறை அல்லது இருமுறை திருப்பி, கருகாமல் இருக்க உருக்கிய வெண்ணெய்யை அதன் மீது ஊற்றவும்.
சட்னி:
தேவையான அனைத்து பொருட்களையும் மிக்சியில் நன்றாக பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.
சட்னி மற்றும் வெங்காய ஸ்லைஸ் உடன் சூடாக மீனை பரிமாறவும்.

தலபாக்கட்டி மட்டன் பிரியாணி



தலபாக்கட்டி மட்டன் பிரியாணி

என்னென்ன தேவை?

மட்டன் – 1/2 கிலோ,
சீரக சம்பா அரிசி – 3 கப்,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
நெய் – 2 டேபிள் ஸ்பூன்,
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய் – 3 (நீளமாக கீறியது),
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது),
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்,
மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
கொத்தமல்லி – 1/4 கப் (நறுக்கியது),
புதினா – 1/4 கப் (நறுக்கியது),
தண்ணீர் – 4 1/2 கப்.

பிரியாணி மசாலாப் பொடிக்கு…

பட்டை – 4,
சோம்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்,
கல்பாசி – 5,
சீரகம் – 2 டீஸ்பூன்,
கிராம்பு – 5,
ஏலக்காய் – 5,
அன்னாசிப்பூ – 1.

எப்படிச் செய்வது?

முதலில் சீரக சம்பா அரிசியை நீரில் நன்கு அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் பிரியாணி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி, அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும். பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து சிறிது நேரம் பிரட்டி, பின் அரைத்து வைத்துள்ள பிரியாணி மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் மட்டனை சேர்த்து நன்கு பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 7-8 விசில் விட்டு, தீயை குறைத்து 15 நிமிடம் வேக வைத்து இறக்கி விட வேண்டும். விசில் போனதும், குக்கரை திறந்து, அதில் தண்ணீர் இருந்தால், மீண்டும் அடுப்பில் வைத்து, நீரை வற்ற வைக்க வேண்டும். இறுதியில் அதில் அரிசியை போட்டு நன்கு கிளறி, பின் 4 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதித்ததும், குக்கரை மூடி 1 விசில் விட்டு, தீயை குறைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி ரெடி!!!

முட்டை சப்பாத்தி



முட்டை சப்பாத்தி

தேவையான பொருட்கள்
முட்டை – 3
கோதுமைமா – 250g
உப்பு, சீரகத்தூள் , மிளகாய்த்தூள் , பட்டர் , எண்ணெய் – தேவைக்கேற்ப
வெங்காயம் -50g
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை
கோதுமைமாவில் உப்பு சேர்த்து நன்கு கலந்து பட்டர் சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு இளஞ்சூடான நீர் சேர்த்து குழைக்கவும்.
வெங்காயத்தை சிறிதாக வெட்டவும்.
முட்டையில் உப்பு , மிளகாய்த்தூள் ,வெட்டிய வெங்காயம் , கறிவேப்பிலை , சீரகத்தூள் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
மாவை சப்பாத்திகளாக தட்டி வைக்கவும்.
சட்டியில் எண்ணெய் பூசி சப்பாத்தி பாதி வெந்ததும் முட்டைக்கலவையை ஊற்றவும்.
அதன்மேல் எண்ணெயை ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.
வெந்ததும் மறுபக்கம் திருப்பி மீண்டும் முட்டைக்கலவையை ஊற்றி எண்ணெய் விட்டு வேக வைக்கவும்.
முட்டைச் சப்பாத்தி ரெடி.

நெத்திலி மீன் ப்ரை



நெத்திலி மீன் ப்ரை

தேவையான பொருட்கள்

நெத்திலி மீன் – 1/4 கிலோ
மிளகாய்த்தூள் – 2 டீ ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீ ஸ்பூன்
எலுமிச்சை – 1
கார்ன்ப்ளவர் – 2 டீ ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
உப்பு – சுவைக்கு

செய்முறை
*மீனை தலையை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். நன்றாக தண்ணீரில் அலசி நீரை வடித்து மீனை உலர்வாக வைக்கவும்.

*பின்னர் மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி, பூண்டு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பிசிறிவிடவும்,

*கார்ன்ப்ளவர் சேர்த்து கலக்கவும். ஒருமணி நேரம் ஊறவிடவும்.

*அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் ஊற்றவும். காய்ந்த உடன் மீனை வரிசையாக வைத்து ஸ்டவ்வை மிதமாக எரிய விடவும்.

*மீனை திருப்பி போட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். காரசாரமான நெத்திலி மீன் ப்ரை ரெடி. கொத்தமல்லி அலங்கரித்து பரிமாறவும்.

சிக்கன் மலாய் டிக்கா


சிக்கன் மலாய் டிக்கா

இதுவரை சிக்கன் மலாய் டிக்காவை ஹோட்டல்களில் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த டிக்காவை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். குறிப்பாக இதனை வீட்டில் செய்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.  எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதால், இது மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் – 1 கிலோ வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் மலாய் க்ரீம் – 1 டேபிள் ஸ்பூன் தயிர் – 2 டேபிள் ஸ்பூன் பச்சை ஏலக்காய் – 4 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் சீரகப் பொடி – 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது) எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு துருவிய சீஸ் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி நீரை வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிக்கனில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பின்பு பிளெண்டரில்/மிக்ஸியில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், பாதி வெண்ணெய், க்ரீம், சீரகப் பொடி, ஏலக்காய், பச்சை மிளகாய், சீஸ் ஆகியவற்றை போட்டு நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை சிக்கனுடன் சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, க்ரில் கம்பியில் சிக்கன் துண்டுகளை சொருகி, நெருப்பில் காட்டி சுட்டு எடுக்க வேண்டும். அப்படி சுடும் போது வெண்ணெயை அவ்வப்போது தடவி சுட வேண்டும். இப்படி அனைத்து சிக்கன் துண்டுகளையும் சுட்டு எடுத்தால், சிக்கன் மலாய் டிக்கா ரெடி!!!