கார்ன் ஃபிளவர் ஹல்வா ரெசி
இந்த அல்வா என்ற பெயர் கேட்டாலே நாம் எல்லாருக்கும் நினைவுக்கு வரும் ஒரே ஊர் திருநெல்வலி தான். அதுவும் அங்கே தயாரிக்கப்படும் இருட்டு கடை அல்வாவைசாபிட்டால், அதன் சுவை உங்கள் நாவில் தங்கி விடும் விஷேசங்களின்போது செய்ய ஒரு எளிய மற்றும் சுவையான அல்வா.
இதே மாதிரி பல வகையான அல்வா இருக்கிறது. மற்ற இனிப்பு வகைகளை விட இந்த அல்வா தயாரிக்கும்போது மட்டும் பொறுமை மற்றும் பக்குவம் மிகவும் அதிகமாக வேண்டும். அனால் இப்பொழுது இருக்கும் இந்த அவசர உலகத்தில் பொறுமையும், பக்குவத்தையும் யாரும் கடைப்பிடிபதே இல்லை. அனால் அல்வா சாப்பிடும் ஆசை எல்லாருக்கும் உள்ளது.
தேவையான பொருட்கள்
சோள மாவு – அரை கப்
சர்க்கரை – ஒன்றை கப்
தண்ணீர் – இரண்டு கப்
ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
நெய் – மூன்று டீஸ்பூன்
முந்திரி – பத்து
செய்முறை
ஒரு கிண்ணத்தில் தண்ணீர், சோள மாவு, சர்க்கரை, ஃபுட் கலர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.
பின், கடாயில் ஊற்றி கைவிடாமல் கிளறவும்.
பின், ஜெல்லி பதம்வந்தவுடன் கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் முந்திரி போட்டு இரண்டு நிமிடம் கழித்து அல்வா பதம் வந்தவுடன் ஒரு தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும். Thanks TIME PASS NEWS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக